சுவரன் மாறனின் பட்டப்பெயர்கள்

1.கள்வர் கள்வன்
2.சத்ரு மல்லன் 
3.அதிசாகசன்
4.மாறன் 
5.அபிமானதிரன் 
6.சத்ரு கேசரி 
7.தமரலயன்
8.சாத்தன் மாறன் 
9.வேல் மாறன் 
10.தஞ்சைகொன்
11.வல்லக்கோன்
12.வளமாறன்
13.செரு மாறன் 
14.கோளளி
15.பெரும் பிடுகு
16.காடக முத்தரையர்
முத்தரையர் என்பார் கள்ளர் வகுப்பினரென முன்போ காட்டப்பட்டது. முத்தரையர் என்னும் பெயர் முதலில் பல்லவர்க்கு உரியதாய்ப் பின்ப அவர் கீழ் ஆண்ட சிற்றரசர்க்கு வந்ததெனச் சிலர் கருதியுள்ளனர். முதல் மகேந்திரவர்மன், முதற் பரமேச்சுரவர்மன் என்ற பல்லவ வேந்தர்கட்கு முறையே பகாப்பிடுகு. பெரும் பிடுகு (பிடுகு = இடி) என்ற பட்டங்கள்உள்ளன. முத்தரையர்க்கும் இப்பெயர் வழக்குண்டு என்பதனைப் பெரும்பிடுகு முத்தரையன் என்னும் பெயர் காட்டும். புதுக்கோட்டை நாட்டிலுள்ள திருமெய்யத்தில் ‘விடேல்விடுகு’ என்னும் பெயருள்ள முத்தரையன் ஏரிகள் வெட்டு வித்திருக்கின்றனன். நந்திக் கலம்பகத்தில் நந்திவர்ம பல்லவன் ‘விடேல் விடுகு’ என்று கூறப்படுகின்றனன் .இங்ஙனம் பல பெயர்கள் ஒத்திருப்பது முத்தரையரும் பால்லவ வகுப்பினரே யென்று காட்டும். காஞ்சியிலிருந்து ஆண்ட பேரரசர்களாய பல்லவர்கள் தம் இனத்தவரையே தஞ்சை முதலிய இடங்களில் அரசாளும்படி செய்திருந்தனரென்பது பொருத்தமாம். இது காறும் கூறியவற்றிலிருந்து கள்ளர்கள் பல்லவ வகப்பினர் அதாவது பல்லவரின் ஒரு கிளை என்பது பெறப்படும்.

thanks to http://webcache.googleusercontent.com/search?q=cache:IR4r71CmUdcJ:kallarperavai.weebly.com/296529953021299529923021-2970299230072980302129803007299229903021.html+international+kallar+peravai+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81&cd=2&hl=ta&ct=clnk&gl=in&source=www.google.co.in

No comments: