First Published : 11 Jan 2011 05:07:26 AM IST
Last Updated :
thanks to http://dinamani.com/edition/edustory.aspx?&SectionName=Chennai&artid=359774&SectionID=97&MainSectionID=97&SEO=&Title=%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE?
தமிழர் வரலாற்றின், கலைப் பண்பாட்டின், கலாசாரத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் கோயில்கள். கோயில்களோடு கூடிய வாழ்வு நம்முடையது. ஆனால், நம்முடைய கோயில்களைப் பற்றி நமக்கு எந்த அளவுக்குத் தெரியும்? கோயில்கள் தொடர்பாக நமக்கு கிடைக்கும் புத்தகங்கள் எந்த அளவுக்குத் தரமானவை? தமிழகத்தின் மிகச் சிறந்த கலைப் படைப்பான தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் பற்றியும் தமிழகத்தின் மிகத் தொன்மையான - திராவிடக் கட்டடக் கலைக்கு உன்னதமான உதாரணமான - திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் பற்றியும் அற்புதமான இரு புத்தகங்களை எழுதியிருக்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன். இந்தப் புத்தகங்களை வாசிக்கும்போது கோயில்களைக் கட்டுவது மட்டும் இல்லை; கோயில்களை அணுகுவதும்கூட ஒரு பெரிய கலை என்ற உண்மை புலப்படுகிறது. கோயில் நிர்மாணம், அமைப்பு, கட்டுமானச் சிறப்புகள், சிற்பங்கள், ஓவியங்கள், அவை சொல்லும் செய்திகள், தத்துவ விசாரங்கள், வழிபாட்டு முறைகள், வழக்கொழிந்த அம்சங்கள், புனை கதைகள் என ஒரு கோயிலைப் பற்றிப் பேசவும் கேட்கவும் எத்தனை வாய்ப்புகள் இருக்கின்றனவோ அத்தனை வாய்ப்புகளிலும் புகுந்து வருகின்றன இந்த இரு புத்தகங்களும். முக்கியமான புத்தகங்கள் இவை. 1. இராஜராஜேச்சரம் - ரூ. 700 2. திருவாரூர் திருக்கோயில் - ரூ. 600 சென்னைப் புத்தகக் காட்சியில் இந்த இரு புத்தகங்களும் அன்னம் பதிப்பகத்தில் கிடைக்கின்றன. இரண்டையும் வாங்குவோருக்கு ரூ. 1,050 சலுகை விலையில் தருகிறார்கள்.
No comments:
Post a Comment