அம்பாந்தோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு மாயம்

0 c
அம்பாந்தோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு மாயம்
[ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 09:21.05 AM GMT +05:30 ]

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு மாயமாக மறைந்துள்ளதாக இலங்கை தொல்பொருளியல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் மொழியின் முன்னைய வடிவமான பிராஹ்மி எழுத்து வடிவத்தில் அமைந்திருந்த குறித்த கல்வெட்டை ஜேர்மனியைச் சேர்ந்த நிபுணரொருவர் கண்டுபிடித்து இலங்கையின் தொல்பொருளியல் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தார்.
திஸ்ஸமஹாராமையின் கொடவாய பிரதேசத்தில் அமைந்திருக்கும் பௌத்த விகாரையொன்றினை அண்மித்த கற்பாறையொன்றிலிருந்து பிரஸ்தாப கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
அம்பாந்தோட்டை புராதன துறைமுகத்துடன் தமிழர்கள் தொடர்பு வைத்திருந்தமைக்கான ஆதாரமாக குறித்த கல்வெட்டு திகழ்வதாக தொல்பொருள் துறை நிபுணர்கள் பலரும் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், அது தற்போதைக்கு மாயமாக மறைந்து போயுள்ளது.
thanks to http://www.tamilwin.com/view.php?2e2IPV00bZjoK2edQG174bch98scd4E2F3dc27pi3b430QH3e23nLW20

வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும் : வே.மதிமாறன்

0 c
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கக்கோரும் போது தங்களை பிற்படுத்தப்பட்டவர்களாக உணருகிறார்களா ஆதிக்கசாதியாக உணருகிறார்களா?
எல்லா ஜாதிக்காரர்களுமே தங்களுக்கு மேல் உள்ள ஜாதிக்காரர்களின் ஆதி்க்கத்தை எதிர்ப்பதைவிடவும் தங்களுக்கு கீழ் உள்ள ஜாதி்க்காரர்கள், மேல் நிலைக்கு வராமல் இருப்பதை தடுப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள், விரும்புகிறார்கள். இதுதான் ஜாதி உணர்வு செயல்படும் நிலை.
அநேகமாக, அருந்ததிய சமூகத்தை தவிர எல்லா ஜாதிய உணர்வாளர்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது.
‘ஜாதிய அமைப்பு, உயர்வு x தாழ்வு என்கிற இரண்டே நிலையில் இருந்து இருக்குமானால் அது எப்போதோ தூக்கியெறியப்பட்டிருக்கும். ஆனால், அது ஒருவருக்குமேல் ஒருவர் என்கிற படிநிலை அமைப்பில் இருப்பதால்தான் இத்தனை ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது’ என்று டாக்டர் அம்பேத்கர் சொல்வார்.
பிற்படுத்தப்பட்ட சமூகங்களுககுள்ளே உள்ள நாவிதர், மீனவர், குயவர், வண்ணார், வன்னியர், கள்ளர் போன்ற மிக பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களை;  பிள்ளை, செட்டி, முதலி இன்னும் இவைகளைப் போல் உள்ள ‘பிற்படுத்தப்பட்ட’ அல்லது பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிக்காரர்கள் இழிவானவர்களாக தங்களை விட மட்டமானவர்களாக கருதுகிறார்கள்.
ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களான அருந்ததியர், பறையர், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள், மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த  நாவிதர், மீனவர், குயவர், வண்ணார், வன்னியர், கள்ளர்  போன்ற உழைக்கும் மக்களை இழிவானவர்களாகவோ, தங்களைவிட கீழானவர்களாகவோ நினைப்பதில்லை. அவர்களை மரியாதையாகத்தான் நினைக்கிறார்கள்.
ஆனால், தங்களை மட்டமானவர்களாக நினைக்கும் ஆதிக்க ஜாதி பிற்படுத்தப்பட்டவர்களிடம் சுமூகமாக நடந்துகொள்ளும் மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜாதிய உணர்வாளர்கள்; தங்களை மதிக்கும் தாழ்த்தப்பட்டவர்களைதான் இழிவானவர்களாக கருதுகிறார்கள். அவர்களின் வளர்ச்சியில் வெறுப்புறுகிறார்கள்.
தங்களை இழிவானவர்களாக கருதும் ஆதிக்க ஜாதியர்களோடு சேர்ந்து  தங்களை பிற்படுத்தப்பட்டவர்களாக அடையாளம் படுத்திக்கொள்ளும்  நாவிதர், மீனவர், குயவர், வண்ணார், வன்னியர், கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஜாதிய உணர்வாளர்கள்; தங்களை மதிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களோடு இணைத்து அடையாளப்படுத்திக்கொள்வதில்லை.
இதுதான் ஜாதிய உணர்வுநிலை. இந்த நிலையின் காரணமாகத்தான் பிற்படுத்தப்பட்ட ஜாதிக்காரர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையும் நீக்க கோருகிறார்கள்.
வே.மதிமாறன்
thanks to http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20898&Itemid=163

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு

0 c

மே 28: தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு மே 28,​ 29 ஆகிய இரண்டு நாட்கள் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.​ இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.​ ​இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.​ சம்பத்,தமிழ்நாட்டில் நிலவும் தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்கவில்லை.​ ​தமிழகம் முழுவதும் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்.​ தலித் மக்களுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு புதுக்கோட்டையில் ஜனவரி 28, 29 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகிறது.​ ​மாநாட்டை அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கே.​ வரதராஜன் தொடக்கி வைக்கிறார்.​ இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள் என்றார்.
http://inioru.com/?p=13013

மதுரையை மையமிட்ட திரைப்படங்கள்

0 c

தற்போது சென்னையை மட்டுமே மையம் கொண்டுள்ள தமிழ்த்திரைப்பட உலகம் ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் தனது தயாரிப்பு மையங் களைக் கொண்டிருந்தது. குறிப்பாகக் காரைக்குடியில் ஏ.வி.எம்., சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் போன்ற வற்றை நாம் அறிந்திருக்கிறோம். அதுபோலவே மதுரையிலும் இருந்திருக்கிறது. திருநகரில் இன்றும் தன் அடையாளத்தைக் கொண்டு விளங்கும் சித்ரகலா ஸ்டூடியோ அதற்குச் சான்றாகத் திகழ்கிறது. அதுபோலவே சினிமா தோன்றிய பின் தனக்கென வேறு பொழுது போக்கைக் கொண்டிராத, அல்லது வேறு பொழுது போக்கிடங்கள் இல்லாத நகரமாக மதுரையே திகழ்கிறது. மதுரை இரசிகர்களே இன்றும் திரைப்படங்களின் வெற்றியைக் கணிப்பவர்களாக இருக்கிறார்கள்.
வளர்ந்த நகரமாயும் இல்லாமல், முழுக்கக் கிராமமாகவும் இல்லாமல், பெரு நகர் போல் தோற்றமுள்ள ஒரு பெருங் கிராமமாகவே இன்றும் மதுரை திகழ்கிறது. பெரிய உற்பத்தி சார்ந்த தொழில் நகரமாக மதுரை இன்னும் மாறவில்லை. அதற்கான நிலவியல் சார்ந்த புறச் சூழல்களும் இங்கில்லை. வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்த்தால் அதன் பொருள் மதுரையில் பழமை என்கிற பெயரில் நிலப்பிரபுத்துவப் பண்பாட்டுக் கூறுகள் மிகுதியாகவும், முதலாளித்துவ வளர்ச்சி சார்ந்த பண்பாட்டுக் கூறுகள் குறைவாகவுமே காணப்படுகின்றன. மதுரையை மையமிட்டுத் தற்காலத்தில் உருவாக்கப்படும் பல படங்கள் அதனை மெய்ப்பிப்பதாகவே உள்ளன.
காமிராவை மையமிட்ட திரைப்படக்கலை என்ன தான் விஞ்ஞானத்தின் குழந்தை யென்றாலும், விஞ்ஞானம் மனித குலத்தின் கைகளில் தந்த மகத்தான கலைச் சாதனம் என்றாலும், அந்தச் சாதனத்தின் பயன்படு தளங்களை அதன் உடைமையாளர்களும், அன்றைக்கு நிலவுகிற அரசுகளுமே தீர்மானம் செய்பவையாக உள்ளன. அதன்படி இந்தியச் சமூகத்துக்குள் நுழைந்த சினிமா தன் வழியாக இந்தியாவில் நிலவும் சமூக மதிப்பீடுகளை, சமூக முரண்களை, அதற்கான இருத்தலியல் நியாயங்கள் சார்ந்த கருத்தியல்களை மறு உற்பத்தி செய்கிறது. ஒரு இலாப கரமான முதலாளித்துவச் சந்தையைக் கொண்டுள்ள சினிமாத்துறை முதலாளித்துவம், தன் இலாபத்திற்கான கச்சாப் பொருட்களை நிலவும் சமூகத்தின் யதார்த்தத்தி லிருந்தே உற்பத்தி செய்கிறது. இந்தியச் சமூகமும், அதற்குள்ளான தமிழ்ச் சமூகமும் மார்க்ஸ் குறிப்பிட்டது போல, இருப்பது சிதைந்து, முழு முற்றான புதியதைப் பெறுவதற்கும் வழியில்லாத கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கின்றது. அதன் பொருள், இங்கிலாந்து அரசு முதலாளித்துவத்தால் இங்கே கட்டமைக்கப்பட்ட முதலாளித்துவம் மற்ற ஐரோப்பிய நாடுகளின் முதலாளித்துவ வளர்ச்சியைப் போல நிலப்பிரபுத்துவத்தின் சாம்பல் மேட்டில் வடிவமைக்கப்படாமல் தனக்குத் தேவையான அளவில் மட்டுமே நிலப்பிரபுத்துவ அழிப்பை நிகழ்த்தியது.
அரசியல்தளத்தில் தனக்குக் கட்டுப்படாத மன்னர்களை அழித்தது. கட்டுப்பட்ட நிலப்பிரபுக் களையும், ஜமீன்களையும், நிஜாம்களையும் இன்ன பிற பிரபுத்துவவாதிகளையும் ஊட்டி வளர்த்தது. அவர்கள் மூலமே தனக்கான பொருளியல் பலன்களை அறுவடை செய்தது. தனக்குத் தேவையான அரசியல் அமைப்பு, ராணுவ, காவல், அதிகார அமைப்புகளைத் தோற்றுவித்தது. இரயில்வே துறை, நெடுஞ்சாலைத் துறை, அணைகள் கட்டுமானம், பாலங்கள் கட்டுதல் போன்ற நவீன தொழில் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்தது. அது போலவே, கல்வித் துறையிலும் தனக்குத் தேவையான அளவில் குமாஸ்தாக்களையும், அறிவுஜீவிகளையும் உற்பத்தி செய்யவே நவீன கல்வியை அறிமுகம் செய்து, பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களைக் கட்டியது. அதன் பொருள் என்னவென்றால் தனக்குத் தேவையான அளவிலான முதலாளித்துவ வளர்ச்சி நிலைமைகளை உருவாக்கியது. மறுதலையாக, தனக்குத் தேவையில்லாத, ஓப்பீட்டளவில் முதலாளித்துவ வளர்ச்சிக்கு அதாவது முதலாளித்துவ நவீனத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிற, இன்றளவும் போட்டு வருகிற கட்டமைப்பு, சமூக, அரசியல், பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டுள்ள நிலப்பிரபுத்துவ இருத்தலியலை அப்படியே விட்டு வைத்துள்ளது. அத்தகைய நிலப்பிரபுத்துவமும், முதலாளித்துவமும் கலந்து செய்த கலவையான பண்பாட்டுக் கூறுகளையே இன்றளவும் நாம் மரபின் பெயராலும், புதுமையின் பெயராலும் தனிச்சிறப்புடைய இந்திய, தமிழ்க் கலாசாரம், பண்பாடு என்று அறிவார்ந்த தளங்களிலும், அறிவில்லாத தளங்களிலும், பிதற்றியும் பெருமை பாராட்டியும் வருகிறோம்.
தமிழ்த்திரைப்படங்களில் மதுரையைப் பற்றிய சித்திரிப்புகளை ஒரு பருந்துப் பார்வை பார்த்தோ மென்றாலும் இது தெற்றென விளங்கும். மதுரை தமிழகத்தின் அறியப்பட்ட வரலாற்றுக்காலம் நெடுகிலும் தன் இருப்பைக் காத்திரமான வகையில் உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் நகரமாகும். தமிழ் மொழி, தமிழகத்தின் அரசியல், தமிழ்ப் பண்பாடு, தமிழ் மற்றும் தமிழரின் வரலாறு என்று தமிழ் சார்ந்த எந்தவொரு சொல்லாடலும் மதுரையைத் தவிர்த்துவிட்டு நிகழ்த்தப் படுதல் தமிழ் மற்றும் தமிழர் வரலாற்றில் சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்துள்ளது. தமிழரின் அறியப்பட்ட எழுத்துவகை இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் தொட்டு இன்று வரை மதுரை பற்றிய குறிப்புக்கள், சித்திரிப்புக்கள் கலை இலக்கியப் பிரதிகளில் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணமேயுள்ளன. தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரக் கதையின் மிக முக்கிய பகுதி மதுரையில் நிகழ்வதாகவே உள்ளது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது, தமிழ்ப் புலவர்கள் பலரின் வரலாற்றுக் கதைகள், மதுரை பற்றிய புராணப் புனைவுகள், கூடல் நகர், ஆலவாய், தாய்த் தெய்வக் கடவுள் மீனாட்சி, மீனாட்சியம்மன் கோவில், அழகர் மலை, சித்திரைத் திருவிழா, திருமலை நாயக்கர் மகால், மாரியம்மன் தெப்பக்குளம், மதுரையெங்கும் வெயில் காலங்களில் நடக்கும் மாரியம்மன் வழிபாடு சார்ந்த முளைப்பார் உற்சவம், மல்லிகைப் பூ, காந்தி அருங் காட்சியகம் என்று மதுரையின் அடையாளங்களான நெடுங்காலந் தொட்டு, இன்றளவும் நிலவும் பல்வேறு அடையாளங்கள் மதுரைபற்றிய காட்சிச் சித்திரிப்புகளில் திரைப்படங்களாலும், ஏனைய பிற கலை இலக்கியப் பிரதிகளாலும் சித்திரிக்கப்பட்டே வந்துள்ளன. எல்லா வற்றையும் விட நகைச்சுவை நடிகர் வடிவேலு தன் மதுரைப் பக்கத்துத் தமிழின் உச்சரிப்பு முறையால் தனக்கென ஓப்பாரும் மிக்காரும் இல்லாத தனி இடத்தைப் பிடித்துள்ளார் வடிவேலு. வடிவேலுவின் தமிழ் உச்சரிப்பு, அது அவரது நகைச்சுவையில் வகிக்கும் பங்கு முதலியவை தனித்த ஆய்வுக்குரியவை. அவை இன்று தமிழ்ப் பண்பாட்டு வெளிப்பாடுகளில், சொல்லாடல் வெளிகளில் பிடித்துள்ள இடம் சிறப்பான ஆய்வுக்குரியதாகும்.
தமிழ்த்திரைப்படங்களில் மதுரை பற்றிச் சித்திரிக்கும் படங்களை நாம் வசதி கருதி புராண, இதிகாசக் கதைப் படங்கள், வரலாற்றுக் கதைப் படங்கள், சமகாலக் கதைப் படங்கள் எனப் பிரித்துக் கொள்ளலாம்.
புராண, இதிகாசக் கதைப் படங்களில் மதுரை
புராண, இதிகாசக் கதைப்படங்களில் மதுரையைப் பற்றிச் சித்திரிக்கிற மிக முக்கியமான படமாக, ஜெமினியின் தயாரிப்பான ஒளவையார், சிலப்பதிகாரக் கதையை மையமாகக் கொண்ட பூம்புகார், ஆதிபராசக்தி, திருவிளை யாடல் போன்ற படங்களைக் குறிப்பிடலாம். ஒளவையார் படம் ஒளவையாரின் வாழ்க்கைச் சம்பவங்களில் சில மதுரையில் நடைபெறுவதைச் சித்திரிக்கிறது. அது
போலவே தமிழகத்தை அறிமுகம் செய்கிறபோது, “மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடித்த அழகான தென் மதுரை” என்ற சொலவடைக் கவிதை வரியை நிஜமாகவே யானைகளைக் கட்டி நெற் போரடிக்க வைத்துக் காட்சிப்படுத்தியிருக் கிறார் அமரர் எஸ்.எஸ்.வாசன். அது தவிர, மீனாட்சி யம்மன் கோவிலில் திருவள்ளுவரின் திருக்குறளை அரங்கேற்றும் நிகழ்வும் அந்தப்படத்தில் சித்திரிக்கப் படுகிறது. பூம்புகார் படம் எல்லோருக்கும் தெரிந்தது போல, கண்ணகி மதுரைக்கு வருவது முதல் கோவலன் கொலையுண்ட பின் கோபத்தில் கண்ணகி மதுரையை எரித்த நிகழ்வுவரை சித்திரிக்கிறது. ஆதிபராசக்தி படத்தில் குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் பாடும் நிகழ்வுக்கு மீனாட்சித் தெய்வம் குழந்தையுருவில் வந்து அருள்பாலிப்பது சித்திரிக்கப்பட்டுள்ளது. திருவிளை யாடல் புராணக் கதையும், படக்கதை அனைவருக்கும் தெரியும். கயிலாயத்தில் ஆரம்பித்து, பழனி வந்து, அப்புறம் பார்வதி தேவியின் கூற்றுக்கள் வழியாக மதுரையில் சிவன் நடத்திய திருவிளையாடல்களில் சில சித்திரிக்கப்படு கின்றன. தருமிக்குப் பொற்கிழி கொடுத்தது, பாண பத்திரருக்காகச் சிவன் விறகு வெட்டியாகச் சென்று பிரபல பாடகரை வென்றது போன்ற திருவிளையாடற் புராணச் சித்திரிப்புக்கள் சில ஏ.பி. நாகராஜனின் கைவண்ணத்தில், சிவாஜி, சாவித்திரி, நாகேஷ், கே.பி.சுந்தராம்பாள், டி.எஸ்.பாலையா, டி.ஆர். மகாலிங்கம் போன்ற மாபெரும் நடிகர்களின் நடிப்பாற்றலாலும் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன.
வரலாற்றுக் கதைப் படங்களில் மதுரை
வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட கதைப் படங்களில் மதுரையைச் சித்திரிப்பவனவற்றுள் மதுரை வீரன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய இரண்டு படங்களை முக்கியமாகக் குறிப்பிடலாம். இரண்டுமே தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களாக அமைந்துவிட்டன வாகும். அவற்றுள் கவிஞர் கண்ணதாசன் கதை வசனத்தில் உருவான மதுரை வீரன் படம் குறிப்பிடத் தக்க படமாகும். மதுரையில் சமகாலத்திற்குச் சற்று முந்திய வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்து மறைந்த வீரனான மதுரை வீரன் சக்கிலியர் குலத்தில் பிறந்து, தன் வீரத்தால் திருமலை நாயக்கரின் படைத்தளபதியாக வளர்ந்து, அழகர் மலைக் கள்ளர்களை ஒடுக்கி, பின்னர் அரசு, மற்றும் அரசியல் சார்ந்த சதிகளால், திருமலை நாயக்கரால் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டுக் கொலையுண்டவன். இன்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளிப்புறம் மதுரை வீரன் கோவில் உள்ளது. பெருவாரியான மக்களால் இன்றளவும் வணங்கப்படும் மதுரை வீரன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் குலசாமியாக இல்லாமல், அவன் இறப்புக்கு வரலாற்று நிகழ்வுப் போக்கில் காரணமான நாயக்கர் சமூக மக்களின் ஒரு பகுதியினராலும் குல தெய்வமாக வணங்கப்படும் தெய்வமாக இருப்பது பலத்த ஆய்வுக்குரியதாகும். கொலைப்பட்ட வாழ்வாங்கு வாழ்ந்த வீரன், கொலைப்பட்டவரின் சமூகத்தினருக்கு மட்டுமல்ல, கொலைசெய்த சமூகத்தவருக்கும், வணங்கத்தக்க தெய்வமாவது, மானுடவியல் ஆய்வு முறைகளால் விடைகாணப்பட வேண்டிய விஷயமாகும். அது போலவே இன்று வரை தொடரும் கள்ளர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குமான பகை முரண்களுக்கான வித்துக்களையும் நாம் இந்தக் கதையிலிருந்து தேறலாம்.
அதுபோல, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் குலோத்துங்க சோழனின் ஆளுகையிலிருந்து, அவனுக்கு அடிமை நாடாக இருந்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனின் கதையை எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்து அவரே இயக்கியப் படம் இதுவாகும். எம்.ஜி.ஆரின் அரசியல் வளர்ச்சிப்போக்கோடு ஓப்புநோக்கிக் காணவேண்டிய படம். எம்.ஜி.ஆர். முதன் முதலில் மதுரைப்பக்கமுள்ள ஆண்டிப்பட்டி தொகுதியைத் தேர்ந்தெடுத்து நின்று வென்றதற்கும், தமிழகத்தின் முதல்வராக ஆகியதற்குமான நெருக்கமான அரசியல் செய்திகள் இப்படத்தில் நிறைய உள்ளன. சோழனைக் கருணாநிதியாகவும், மதுரையைத் தமிழகமாகவும், கருணாநிதியின் ஆட்சியிலிருந்து மீட்கும் சுந்தரபாண்டியனாக எம்.ஜி.ஆரையும் உருவகிக்கும் அரசியல் செய்தியை உள்ளடக்கிய படம் அது. குலோத்துங்க சோழனின் மகன் ராஜராஜனை மதுரைப் பிரதிநிதியாக, ஆட்சி செய்ய அனுப்பிய வரலாறு இன்றைக்கும் தொடர் கிறதோ என ஐயுற வேண்டியுள்ளது. அத்தகைய சூழலில் இத்தகைய படங்கள் மறுவாசிப்புக்கு ஏற்றவையாக உள்ளன.
சமகாலக் கதைப் படங்களில் மதுரை
புராண, இதிகாச, வரலாற்றுக்காலங்களை அடிப் படையாகக் கொண்ட கதைப்படங்களில் சித்திரிக்கப்படும் மதுரை சமகாலத்தில் திரைத்துறையினரின் கண்பார்வை பட்ட களமாகத் திகழ்கிறது. அத்தகைய படங்கள் பல உள்ளன. சிவாஜி கணேசன் என்ற நடிகரைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய கலைஞரின் கதை வசனத்தில் வெளிவந்த பராசக்தி படத்தின் கதை மதுரையில் தொடங்குகிறது. பர்மா சென்று சென்னை வந்து தொடர்ந்து மதுரையில் நிகழ்கிறது. படத்தின் முக்கிய பாத்திரமான கல்யாணி தாலியறுத்த பெண்களுக்கெல்லாம் இட்லிக் கடை தானுங்க தாசில் உத்தியோகம் என்று வசனம் பேசப்படும். அதே கல்யாணியைத்தான் மதுரையின் கோயில் பூசாரி பெண்டாள முயல்வார். அதை எதிர்த்துத்தான் கதை நாயகன் குணசேகரன் வசன மழை பொழிவான். எழுபதுகளில் வந்த படங்களில் சிவாஜி கணேசன் நடித்த ராஜபார்ட் ரங்கதுரை படம் திண்டுக்கல்லில் துவங்கி மதுரை வழியாய்த் தூத்துக்குடி செல்லும் ரயிலில் ஆரம்பிக்கிறது. மதுரையில் ஒரு காலத்தில் நிலவிய பாய்ஸ் கம்பெனி நாடகக்குழுவினரை நினைவுபடுத்தும் வகையில் இதன் ஆரம்பக் காட்சிகள் அமைந்தன. அது போலவே சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் உருவாகி இன்றளவும் தமிழ் மக்களால் நினைவு கூரத்தக்க படமாக அமைந்த, புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட தில்லானா மோகனாம்பாள் படம் மதுரை அழகர் கோவிலில் கதை நாயகனும், நாயகியும் சந்திப்பதாக அமைந்தது.
கதையில் காதலர்களுக்கிடையேயான காதலுக்கு முந்திய மோதல் முரணும் இங்கே தான் துவங்குகிறது. பாரதிராஜாவின் பல படங்கள் மதுரை சுத்துக்கட்டுக் கிராமங்களை மையமிட்ட கதையாடல் களை நிகழ்த்துவனவாகவே உள்ளன. பரதன் இயக்கத்தில் உருவான, கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன், கமலஹாசனின் இயக்கத்தில் உருவான விருமாண்டி, சங்கிலி முருகனின் தயாரிப்பில் வெளிவந்த, எங்க ஊருப் பாட்டுக்காரன், பெரிய வீட்டுப் பண்ணைக்காரன் போன்ற பல படங்கள், இராம. நாராயணன் இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கரிமேடு கருவாயன் மற்றும் கும்பக்கரை தங்கையா போன்ற உள்ளூர் நாயகர்களைப் பற்றிய படங்கள், விஜயகாந்த் நடித்த கள்ளழகர், அதுபோலவே அழகர் மலை என்றொரு படம் விஜய் நடித்த கில்லி, பாலாவின் சேது, அஜித் நடித்த ரெட், ராசு மதுரவனின் இயக்கத்தில் வெளிவந்த மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், மாத்தியோசி போன்ற படங்கள், வசந்த பாலனின் வெயில், நட்ராஜ் நாயகனாக நடித்த மிளகா, ஹரிக்குமார் நாயகனாக நடித்த மதுரை சம்பவம், புதியவர்கள் இயக்கிய மதுரை வடி தேனி வழி உசிலம்பட்டி, அமீரின் இயக்கத்தில் வெளிவந்த பருத்தி வீரன், சசிகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த சுப்பிரமணிய புரம், பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த காதல், சீனு ராமசாமி இயக்கிய கூடல் நகர், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்த சண்டைக்கோழி, மேலும் விஷால் நடித்த திமிரு போன்ற பல படங்கள் மதுரை மற்றும் மதுரையின் சுற்றுக் களங்களை மையமிட்டு வந்த வண்ணமுள்ளன.
ஆனால் சமகால மதுரையை மையமிட்ட மேற்கண்ட படங்களின் கதைப் போக்குகளில், சித்திரிப்புக்களில் மிக முக்கியமாகத் தெரிகிற ஒரே ஒரு ஒற்றுமை மேற்குறிப் பிட்ட படங்கள் அனைத்துமே தேவர் சாதியை மைய மிட்ட பாத்திரங்களையே, கதை நிகழ்வுகளையே தம்முடைய தேர்வாகக் கொண்டுள்ளன. மதுரையில் வசிக்கும் மற்றவர்களைப் பற்றிய பதிவுகள் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். தற்காலத் தமிழ்த் திரைப் படங்களில் சண்டை, காதல், இரண்டிலும் கலக்குகிற தன்னேரில்லாத் தலைவன், சண்டையிலும் துவந்த யுத்தம் என்று சொல்லப்படுகிற உடல் வலிவைக் காட்டும் சண்டைகள், நவீனமான துப்பாக்கி போன்ற ஆயுதங்களை விட அரிவாள், கத்தி, கம்பு சுற்றுதல் போன்ற சண்டைகள் போன்றவை மிகுந்த முக்கியத்துவம் பெறுபவை. இத்தகைய கறித்துண்டங்களுக்குள், அந்தந்த ஊர்க் காதல், குடும்பம், கோயில் விழாக்கள், பழக்கவழக்கங்கள், மொழிப் பயன் பாடுகள் போன்றவற்றைத் தூவிவிட்டு அரைக்கப்படும் ஒருவிதமான விநோதக் கலவை மசாலாவாகவே பெரும் பாலான படங்கள் அமைந்துவிடுகின்றன.
சாதிய அடையாளங்கள் வெளிப்பாடுகளிலும் தமிழ்த் திரைப்படத்தின் ஆரம்ப காலங்களில் அம்பி, மாமி கதைகளைக் கொண்ட படங்கள், செட்டியார்வாள், முதலியார்வாள் படங்கள், அப்புறம் கவுண்டர் கதைகள், தொடர்ந்து தேவமார் கதைகள், தவிர தலித் நாயகர்களைக் கொண்ட படங்கள் என்று வகைப்படுத்தி யோசிக்க வைக்கும் வகையில் பல தமிழ்த் திரைப்படங்கள் அமைந்துள்ளன. இவை தவிர, கிறித்தவர், இஸ்லாமியரை மையமிட்ட கதைகளும் உண்டு. இவையெல்லாம் தவிர்த்த தொழிலாளி முதலாளி படங்கள், விவசாயி பண்ணையாள் படங்கள், சாதிய அடையாளங்கள் சிதைந்த நகர் சார் படங்கள், அரசியல்வாதிப் படங்கள், பெண்ணை மையமிட்ட படங்கள், குழந்தைத்தனமில்லாத குழந்தைகள் படங்கள், இவை தவிர பக்தி, பேய் போன்ற பலவித வகைப்பாடுகளும் உள்ளன.
ஆனால் மதுரையை மையமிட்ட தற்காலப் படைப்புக்கள் பலவும் முன்னரே கூறியது போலத் தேவர் சாதிக் கட்டமைப்பை மையப் பொருளாகக் கொண்டுள்ளன. தேவர் சாதியினரே கதை நாயகர்கள், தேவர் சாதியினரே எதிர் நாயகர்கள் அதாவது வில்லன்கள். இவர்கள் போகக் குறிப்பிட்ட இடம் தேவர் சாதிப் பெண்களுக்கு உண்டு. சொல்லப்போனால் இந்தக் கதைகளைத் தேவர் சாதிப் பெண்களை மையமிட்ட படங்கள் என்றே சொல்லலாம்.
தேவர் சாதி நிலவுடைமையாளர்கள், அவர்களிடம் கைகட்டிச் சேவகம் செய்யும் தேவர் மற்றும் சிற்சில பிற சாதியினர், தேவர் சாதிக் கந்துவட்டிக்காரர்கள், தேவர் சாதிப் படித்த இளைஞர்கள், தேவர் சாதி அரசியல் பிரமுகர்கள் தேவர் சாதிப் பழக்க வழக்கங்கள் போன்ற வையே மதுரையை மையமிட்ட சமகாலப் படங்களில் தொண்ணூற்றொன்பது சதமானப் படங்களின் கதைச் சித்திரிப்பாக அமைந்துள்ளன. இவை தவிர்த்துச் சில படங்களில் தலித், இஸ்லாமிய மற்றும் கிறித்தவர்களைப் பற்றிய சித்திரிப்புக்கள் உள்ளன.
முன்னர்க் குறிப்பிட்ட தமிழ்த் திரைப்படத்தின் வடிவமைப்புக் கூறுகளில் மிக முக்கியமாக உள்ள காதல், கல்யாணம், மோதல் போன்றவற்றில் இத்தகைய குறிப் பிட்ட தேவர் சமூகத்தை மையமிட்ட களம் தமிழ்த் திரைப்படக்காரர்களின் மிகுந்த கவனத்துக்குரிய ஒன்றாக உள்ளது. மோதலில் தேவர் சமூகத்தின் மிக முக்கிய ஆயுதமான அரிவாள் நமது திரைக்காரர்களின் கவனத்தை ஈர்க்கிற விஷயமாக உள்ளது. விருமாண்டி படம் வெளிவந்த போது அது அரிவாள் கலாச்சாரத்தை முன்னெடுக்கிறது என்று தேவேந்திரர் தலைவர் கிருஷ்ணசாமி இயக்கம் நடத்தியது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்கடுத்து நிறைய படங்களில் அரிவாள் வீச்சுக்கள் கணக்கின்றி நடத்தப்பட்டுக்கொண்டே உள்ளன. அவர் கண்ணில் அவை படவில்லையோ அல்லது கண்மூடிக் கொண்டாரோ தெரியவில்லை.
தேவர் மகன் படம் தேவர் சமூகத்தின் இரண்டு பெரிய சக்திகளுக்கிடையே நடக்கும் மோதலைச் சித்திரித்தது. ஆனால் அதோடு அது ஒரு முக்கியமான செய்தியைச் சொன்னது. அரிவாளைக் கீழே போட்டுவிட்டுப் படிக்கச் செல்லுங்கள், சட்டத்தின் ஆட்சிக்கு உட்படுங்கள் என்பது தான் அது. ஆனால் அதைத் தொடர்ந்து இன்று வரும் சண்டைக் கோழி முதலான படங்கள் நகரம் சென்று படித்தாலும் உடல் ரீதியாய்ச் சண்டையிடும் குணத்தை இழக்காதே என அறிவுறுத்துகின்றன.
எல்லாவற்றிலும் சாதிய முறைமைகளை அப்படியே பேணுவதில் இத்தகைய படங்கள் தெளிவாக முன்னிற் கின்றன. குறிப்பாக மணமுறை விஷயங்களில், பெண்ணிடம் பிறசாதி இரத்தக் கலப்பு நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் அவை தெளிவாக இருக்கின்றன. சேரனின் பாரதி கண்ணம்மா இது விஷயத்தில் சந்தித்த எதிர்ப்பைத் தமிழகம் அறியும். பெரிய வீட்டுப் பண்ணைக்காரன், கரிமேடு கருவாயன், விருமாண்டி, மதுரை வடி தேனி வழி உசிலம்பட்டி போன்ற படங்களில் தேவர் சாதிக்குள்ளேயே நடக்கும் காதல், கதைப் பொருளாகிறது. அதற்குள் வர்க்க வேறுபாடுகள் காதலுக்கு எதிராக உள்ளன. விரிவாக விவாதிக்க முடியாவிட்டாலும் இந்த விஷயத்தில் நாம் அமீரின் பருத்தி வீரனைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும். அதில் வரும் பருத்தி வீரனின் தாய் தந்தையர் நம் கவனத்துக்குரியவர்கள். அவனது தந்தை தேவர் சமூகத்தவர், தாய் மணிக்குறவர் இனத்தவர். இருவருக்கும் பிறப்பவன் பருத்தி வீரன். அவனது காதலியும் ஒரு வழியில் மாமன் மகளுமான முத்தழகி சுத்தமான தேவர் இனப் பெண். அவளோடு அவனது இரத்தம் கலந்து விடக் கூடாது என்பதில், இயக்குநர் அமீர் மிகுந்த கவனத்துடன் இருந்துள்ளார். அதற்காக மனுதர்மத் தண்டனை போல அவர்களுக்குத் தண்டனையும் தருகிறார்.
பாலாஜி சக்திவேலின் காதல் படமும் அந்தவகையில் நாம் குறிப்பிட்டுப் பேச வேண்டிய ஒன்று. தேவர் சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கும் தலித் இளைஞன் அவளை மணமுடிக்கமுடியாமல் பைத்தியமாக்கப்படு கிறான். பைத்தியமான அவனைத் தேவர் சாதிக் காதலியும் அவளுக்கு அமைக்கப்பட்ட தேவர் சாதிக் கணவனும் தங்கள் பராமரிப்பில் வைத்துக் காப்பாற்றுகின்றனர் என்று தேவர் சாதியினர் மீது அனுதாபம் வரும் வகையிலேயே கதை கட்டமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட கூடல் நகர் படத்திலும் கூட இதே சாயலிலான கதைக் கட்டமைப்பு, இதில் காதலால் தலித் தம்பி சாக, தலித் அண்ணன் பழிவாங்குகிறான். கிட்டத்தட்ட சசிகுமாரின் சுப்பிரமணியபுரம் நாயகனுக்கு நேர்கிற கதியும் இதேபோல எண்ணத்தக்கதே. அது போலவே திமிரு படத்தில் வருகிற வில்லி நாயகிக்கு ஏற்படுகிற மரணமும் இத்தகையதே.
ஆனால் அதே நேரம் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவர் சாதி ஆண்கள் பிறசாதிப் பெண்களை மணப்பது யாதொரு வில்லங்கமும் இல்லாமல் இயல்பாகச் சொல்லப்படுகிறது. பருத்தி வீரனின் தந்தை குறவர் சமூகப் பெண்ணை மணப்பது, சண்டைக் கோழியின் நாயகன் தன் சாதி அடையாளம் ஏதென்று நமக்குத் தெரியாத (நிச்சயம் தேவரல்ல) காதலியைக் கைப்பிடிப்பது போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். வசந்தபாலனின் வெயில் படத்தில் வரும் ஒரு நாயகன் மதுரையில் சவுராஷ்டிரப் பெண்ணைக் காதலித்து மணப்பதையும் இதோடு சேர்த்து எண்ணலாம்.
இவையெல்லாம் மணமுறைகளில் நிலப்பிரபுத்துவ உறவு முறைகளைப் பேணுவதில் சமூகமும், தமிழ்த் திரைப்படமும் எவ்வளவு கவனத்துடன் உள்ளன என்பதையே நமக்கு அறிவுறுத்துகின்றன. ஆனால் இதனை உடைக்கின்ற ஒரு படம் நமது கவனத்துக்குரியதாக இருக்கிறது. அதுதான் விஜய் நடித்த தரணியின் இயக்கத்தில் வெளிவந்த கில்லி. இதில் தேவர் சமூகப் பெண்ணை வில்லன் தாய்மாமனின் கட்டுக் காவலை மீறி அவளைக் காப்பாற்றும் நோக்கத்தோடு தற்செயலாக வேறு வேலையாக மதுரைக்கு வரும் கதாநாயகன் கதாநாயகியைச் சென்னைக்கு அழைத்துச் செல்கிறான். தொடர்ந்து தாய் மாமன் தேடுகிறான். இறுதியில் மோதலில் தாய் மாமன் தோற்க, நாயகன் அதாவது தேவர் சமூக அடையாளமற்ற நாயகன் தேவர் சமூகப் பெண்ணைக் கைப்பிடிக்கிறான். இந்தப் படத்திற்கு (அவ்வளவு எதிர்ப்பு) ஏன் எதிர்ப்பே வரவில்லை. ஒருவேளை அதில் கதாநாயகனாக நடித்த விஜய் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த எதிர்ப்பு இல்லாமல் இருந்திருக்கலாம். இதுவும் கூடத் தனித்த ஆய்வுக்குரியதே.
இது தவிர விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படம். மதுரையில் மதமோதல் களத்தைத் தேர்வு செய்கிறது. வழக்கமான விஜயகாந்த் படத்தில் வரும் ஃபார்முலாக் கதையான இஸ்லாமியத் தீவிரவாதக் கதையை மதுரையில் அழகர் திருவிழாவோடு இணைத்து, இந்து வேடமிட்டு வரும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை, இந்து வேடமிட்ட இஸ்லாமியர், கிறித்தவ அதிகாரியின் துணையோடு முறியடிப்பதே இந்தக் கதை. இதில் வரும் இந்து அனைவருமே அப்பாவிகளிலும் அப்பாவியாக இருப்பது நமது கவனத்துக்குரியது. இதிலும் வழக்கம் போல, இஸ்லாமியக் கதாநாயகனோடு இந்துக் கதாநாயகி இணைவது தவிர்க்கப்பட்டு அவள் இயக்குநரால் சாகடிக்கப்படுகிறாள். இது தவிர மதுரை சம்பவம் படத்தில் வரும் ஆட்டுத் தொட்டி உரிமையாளர், அவர் கோனார் சமூகத்தவரா என்பது தெரியவில்லை. ஆனால் தேவமார் சமூக நிகழ்வுகள் போலவே சகல சம்பவங்களும் சித்திரிக்கப்படுகின்றன.
இது போக, தேவமார் சமூகப் புதிய படிப்பாளிகள் வக்கீல் மற்றும் போலீஸ் துறைகளை நோக்கியே செல்பவர்களாகவும் சித்திரிக்கப்படுகின்றனர். இதுவும் தனித்த ஆய்வுக்குரியது.
இப்படி யோசிக்க யோசிக்க விரிவடைந்து கொண்டே செல்லும் மதுரை பற்றிய படங்களில் நமது கவனத்துக்குரிய, மிகவும் அதிர்ச்சி தரத்தக்கதாக அமைகிற ஒரே விஷயம் மதுரை என்றால் தேவர் சமூகம், அரிவாள் கலாச்சாரம் போன்றவை மட்டும் தானா? வேறெதுவும் இல்லையா? தமிழ்ச் சமூகம் விரிவாக விடைகாண வேண்டிய வினா இது.
ஒரு வேளை, இன்றைய காலத்தின் தமிழ்த் திரை உலகுக்குள், தயாரிப்பு, பண விநியோகம், இயக்கம், நடிப்பு போன்ற பல துறைகளில் மதுரைப் பக்கமிருந்து கிளம்பிச் சென்ற தேவர் இனத்தவரின் ஆதிக்கமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். யோசிக்க வேண்டியிருக்கிறது, நிறைய்ய்ய....

thanks tohttp://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11150:2010-10-27-21-27-14&catid=1192:10&Itemid=466

'ஒச்சாயி'க்கு வந்த சோதனை!

1 c
முக்குலத்தோர் சமூகத்தினரின் குல தெய்வமான ஒச்சாயி என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்று தமிழக அரசு கேட்டிருப்பதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய சமூகங்களில் ஒன்று முக்குலத்தோர் சமுதாயம். இந்த சமுதாயத்தினரின் குல தெய்வங்களில் ஒன்று ஒச்சாயி அம்மன். இந்தப் பெயரைத் தழுவி முக்குலத்தோர் சமுதாயத்தினர் பெயர்களை வைப்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம்.
ஒச்சு, ஒச்சாயி என்ற பெயர்கள் ஒவ்வொரு முக்குலத்தோர் வீடுகளிலும் சாதாரணமாக காணப்படுவதைக் காணலாம். முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தின் தந்தையின் பெயர் ஒச்சாத் தேவர் என்பதாகும்.

இப்படி முக்குலத்தோர் சமுதாயத்தின் குல தெய்வமான ஒச்சாயி என்ற பெயரை தமிழ்ப் பெயரா என்று கேட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது தமிழக அரசு.

உசிலம்பட்டியைச் சேர்ந்த ஓ. ஆசைத்தம்பி என்பவரது இயக்கத்தில்உருவாகியிருக்கும் படம்தான் ஒச்சாயி. புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு தமிழ்ப் பெயர்களில் அமைந்த திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி சலுகையை தர மறுத்து விட்டதாம் தமிழகஅரசு. காரணம், ஒச்சாயி என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்று கேட்டு மறுத்துள்ளது.

இது தென் மாவட்டங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வ குவார்ட்டர் கட்டிங் என்ற பெயரிலேயே ஒரு தமிழ்ப் படம் உருவாகியுள்ளது. இதற்கு கேளிக்கை வரி விலக்கும் அளித்துள்ளனர். அப்படி இருக்கையில் ஒரு தமிழ்ச் சமூகத்தின் குல தெய்வத்தின் பெயரைக் கொண்ட படத்துக்கு தமிழ்ப் பெயரா என்று கேட்டிருப்பது வேதனை தருவதாக முக்குலத்தோர் சமுதாயத்தினர் கூறுகிறார்கள்.

தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர், ஒச்சாயி என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர். இது மொழிப்பற்றால் கேட்கப்படும் கேள்வியாகத் தோன்றவில்லை, ஆதிக்கம் செலுத்துவோர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ஒச்சாயி பட இயக்குநர் ஒ.ஆசைத்தம்பி கூறுகையில், உசிலம்பட்டி பகுதியில் கள்ளர் சமுதாய மக்களின் குலதெய்வமான ஒச்சாயி பெயரை உடைய பெண் சம்பந்தப்பட்ட சமுதாயக் கதையைத்தான் ஒச்சாயி படமாக எடுத்துள்ளேன்.

எனக்கு மட்டுமல்ல, இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோருக்கும் ஒச்சாயி அம்மன் குலதெய்வமாகவும் உள்ளது. இந்த நிலையில் ஒச்சாயி தமிழ்ப் பெயரா? எனக் கேட்பது சரியல்ல. ஆகவே படத்துக்கு வரிவிலக்கு அளிக்கக் கோரியுள்ளோம் என்றார்.

ஒச்சாயி தமிழ்ப் பெயர்தான்-தா.பாண்டியன்

இந்த நிலையில், ஒச்சாயி என்பது தமிழ்ப் பெயர்தான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒச்சாயி என்ற பெயரில் ஒரு தமிழ்ப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் பெயர் சூட்டப்பட்ட திரைப்படங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளபடி, ஒச்சாயி படத்த்துக்கும் தரப்படவேண்டும்.

ஆனால், சம்பந்தப்பட்ட இலாகா அதிகரிகள், ஒச்சாயி - தமிழ் தானா? நிரூபணம் தேவை எனக் கேட்டுள்ளனராம். தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர், ஒச்சாயி என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர்.

'ஒச்சாயி'' என்ற பெயர்ச் சொல், தமிழ் அல்ல என்றால், பல்லாயிரம் தமிழ்மொழி பேசும் தாய்மாரை அவமதிக்கும் செயலாகக் கருதப்படும். எனவே, தவறை திருத்திக் கொண்டு, ஒச்சாயிக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என தா.பாண்டியன் கூறியுள்ளார்.
http://thatstamil.oneindia.in/movies/news/2010/10/tamil-cinema-ochayi-tamil-tha-pandian.html

தமிழகம் ஒச்சாயி தமிழ்ப் பெயர் இல்லையா? சேதுராமன் கண்டனம்

0 c
First Published : 26 Oct 2010 12:00:00 AM IST


சென்னை, அக். 25: தென் மாவட்ட மக்களால் வணங்கப்படும் ஒச்சாயி தமிழ்ப் பெயர் இல்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் ந. சேதுராமன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  தமிழ்ப் பெயர் இல்லை என்று கூறி "ஒச்சாயி' படத்துக்கு வரிவிலக்கு தராமல் இருப்பது வேதனையான செயல். தமிழைக் காக்க வேண்டிய தமிழக அரசே தமிழ்ப் பெயரைப் புறக்கணிக்கலாமா?

                  மதுரை மாவட்டம் கருமாத்தூரில் மூத்த தமிழ்ச்சாதியினர் வணங்கக்கூடிய ஒச்சாண்டம்மன் கோயில் உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் ஒச்சாண்டம்மனை "ஒச்சாயி', "ஆச்சிக்கிழவி' என்ற பெயரில் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர்.  இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களது ஆண் குழந்தைகளுக்கு ஒச்சு, ஒச்சப்பன், ஒச்சுக்காளை என்றும், பெண் குழந்தைகளுக்கு ஒச்சாயி, ஒச்சம்மாள், ஒச்சுப்பிள்ளை என்றும் பெயர் வைக்கும் வழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது. எனவே ஒச்சாயி தமிழ்ப் பெயர் இல்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்று சேதுராமன் கூறியுள்ளார்.

thanks to www.dinamani.com

தேவர் குருபூஜை: தலையில் ரிப்பன் கட்டி வர வேண்டாம்

0 c

ராமநாதபுரம், அக். 21: 
 
தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் தலையிலோ அல்லது கைகளிலோ எவ்வித கலர் துணிகள், ரிப்பன்கள் கட்டி வர வேண்டாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வியாழக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளார். 
 
தேவர் குருபூஜை விழா தொடர்பான அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமை வகித்து மேலும் பேசியதாவது: 
 
                    அஞ்சலி செலுத்த வாகனங்களில் வருவோர் வாகன எண், அதன் ஓட்டுநர் முகவரி, வாகன உரிமையாளர் முகவரி மற்றும் வாகனத்தில் பயணம் செய்வோரின் விவரத்தை வாகனம் புறப்படும் இடத்தின் எல்கைக்குட்பட்ட காவல் நிலையத்தில் முன்கூட்டியே தெரிவித்து, அதற்கான காவல் துறையினரின் அனுமதி சான்றை வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டி வர வேண்டும். சான்று பெறாத வாகனங்களுக்கும் லாரி,டிராக்டர் போன்ற வாகனங்களில் வரவும் அனுமதியில்லை. 
 
                  வாகனங்களின் மேற்கூரையில் வருவதோ, கோஷம் எழுப்புவதோ, ஆயுதங்கள் மற்றும் மதுபானங்கள் எடுத்து வரவோ அனுமதியில்லை. காவல் துறையினர் சோதனை செய்யும் போது ஆயுதங்களோ அல்லது மதுபானங்களோ இருந்தால், அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும். வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், வாகனத்தில் பயணிப்போர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
 
                ஜோதி எடுத்து வருபவர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் செல்ல வேண்டும். ஜோதி, முளைப்பாரி, பால்குடம் போன்ற ஊர்வலங்களுக்கு இம் மாதம் 29 ஆம் தேதி அனுமதிக்கப்படும். 
 
             மறுநாள் 30 ஆம் தேதி இதுபோன்ற ஊர்வலங்களுக்கு அனுமதியில்லை. பசும்பொன்னில் ஊர்வலங்கள் நடத்த அனுமதி கிடையாது.      
                வெளிமாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு வழிக் காவல் பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், காவல் துறை தொலைபேசி எண்-04567-232110, 232111 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்தார். 
 
                   கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கி. பாலசுப்பிரமணியம், எஸ்.பி.பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகவேல், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்கள் உள்பட வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
 
thanks to dinamani news paper
http://www.dinamani.com

hot news

0 c

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்

link
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4312:2008-11-01-06-49-23&catid=104:asuran

சென்னை நகருக்குள் தேவர் சாதி காட்டுமிராண்டிகள்


link
http://vrinternationalists.wordpress.com/http://vrinternationalists.wordpress.com/

தேவர் ஜயந்திக்கான ஜோதி வழித்தடம்: மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தினமணி - ‎22 அக்., 2010‎
22: மண்டலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உசிலம்பட்டியிலிருந்து தேவர் ஜயந்திக்கான ஜோதியை எடுத்துச் செல்லும் வழித்தடத்துக்கு அனுமதி கோரிய மனு மீதான விசாரணையை உயர் ...

தேவர் குருபூஜை: தலையில் ரிப்பன் கட்டி வர வேண்டாம்

தினமணி - ‎21 அக்., 2010‎
21: தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் தலையிலோ அல்லது கைகளிலோ எவ்வித கலர் துணிகள், ரிப்பன்கள் கட்டி வர வேண்டாம் என ராமநாதபுரம் மாவட்ட ...

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு வரும் ஜெ.வுக்குப் ...

தட்ஸ்தமிழ் - ‎21 அக்., 2010‎
சென்னை: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கிறார். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. ...

தேவர் குருபூஜையில் மு.க.ஸ்டானின் பங்கேற்பார்: முதுகுளத்தூர் ...

நியூஇந்தியாநியூஸ் - ‎21 அக்., 2010‎
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா பசும்பொன்னில் இம் மாதம் 30-ம் தேதி நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக முதுகுளத்தூர் எம். ...

பராமரிப்பில்லாமல் அழிந்து வரும் மன்னர் கால மண்டபங்கள்

0 c


வந்தவாசி: வந்தவாசி அருகே பராமரிப்பு இல்லாததால் மன்னர்கள் காலத்து தங்கும் மண்டபங்கள் சேதமடைந்து அழிந்து வருகின்றன.பல நூறு ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பெரும்பாலும் நடந்தும், குதிரை வண்டி, மாட்டு வண்டிகளிலும் பயணம் செய்து வந்தனர். மேலும் புனித ஸ்தலங்களுக்கு யாத்ரீகர்கள் அடிக்கடி யாத்திரை மேற்கொள்வர். இதனால் பொதுமக்கள் மற்றும் யாத்ரீகர்கள் தங்கிச்செல்ல சாலைகளின் ஓரம் ஆங்காங்கே கருங்கற்களால் ஆன தங்கும் மண்டபங்களை அக்கால மன்னர்கள் அமைத்தனர். மேலும் பெரும்பாலான தங்கும் மண்டபங்களின் அருகே குளங்களையும் அமைத்தனர். இதனால் அக்காலத்தில் பொதுமக்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு இந்த மண்டபங்கள் பெரிதும் உதவின.இது போன்ற மண்டபங்கள் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் வீரம்பாக்கம், பெருநகர் புதுகாலனி, பெருநகர், மாமண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. இந்த மண்டபங்களை சரிவர பராமரிக்காததால் சேதமடைந்து வருகின்றன. இந்த மண்டபங்களின் மேற்கூரைகள் மீது செடிகள் முளைத்தும் தரைகள் பெயர்ந்தும் உள்ளன. இதில் சில மண்டபங்கள் மாட்டுத் தொழுவங்களாக மாறி உள்ளன. மேலும் சமூக விரோதிகள் மது அருந்தவும், சூதாடவும் பயன்படுத்தி வருகின்றனர்.ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வந்தவாசி, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் பல குழுக்களாக இச்சாலை வழியாக திருப்பதிக்கு யாத்திரை செல்வர். இவர்கள் இளைப்பாறவும், இரவுகளில் தங்கவும் இந்த மண்டபங்கள் பயன்பட்டு வருகின்றன.எனவே இந்த மன்னர்கள் காலத்து தங்கும் மண்டபங்களை சீரமைக்கவும், சமூக விரோதிகள் பயன்படுத்தாமல் பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

http://www.dinamani.com/edition/story.aspx?artid=320709&SectionID=129

வருஷம், வருஷமாக அழகர் தாமதமாக வருவது ஏன்?

0 c
ஆற்றில் இறங்குவாரா அழகர்?
(புதனன்று (28.4.2010) மதுரையில் கள்ளழகர் திருவிழா நடைபெறுகிறதாம். இதன் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளவே இந்தக் கட்டுரை).
மதுரை மாநகரிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது அழகர் கோயில். அது அழகர்மலை என்றும் முன்னர் அழைக்கப்பட்டது. அங்கு ஓர் ஆட்சி நடந்ததற்கான ஆதாரங்களாக கோட்டையும், பெரிய மதில் சுவர்களும் இன்றும் உள்ளன!
அழகர் என்பவர் கடவுளோ, கடவுளின் அவதாரமோ கிடையாது. அவன் அப்பகுதியில் வாழ்ந்த கள்ளர் சமுதாய மக்களின் தலைவன் என்பதே உண்மை. பண்டைய பாண்டிய அரசர்களால், தொடர்ந்து கள்ளர் சமூக மக்கள் அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், நகர்ப்புறங்களில் வாழவும், மலைசார்ந்த விளை நிலங்களில் புகவும், அவர்கள் தொடர்ந்து தடுக்கப்பட்டும் வந்தே உள்ளார்கள். கள்ளர்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக அன்றைய அரசு அதிகாரத்துடன் பல்வேறு போர்களை நடத்தி வந்தனர். இதனால், கள்ளர்கள் முதன்முதலாக கொரில்லா முறை தாக்குதல்களை நடத்தி தங்கள் வாழ்வுக்காக கொள்ளையடித்தும்; தானியம், ஆடு, மாடுகளைக் கவர்ந்தும் மலைகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தனர்.
அழகர் மலைக்கு 3 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளந்திரி கிராமம், கள்ளர்கள் அதிகமாக நடமாடும் இடம் என்பதால் அப்பெயர் பெற்றது. இப்போதும், கள்ளழகர் இவ்வூரிலிருந்து கள்ளன் வேடம் தரித்து மதுரை நோக்கிப் புறப்படுகிறார். இது ஆண்டு தோறும் நடக்கிற சித்திரைத் திருவிழாவின் ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.
திப்பு சுல்தான் கூட திண்டுக்கல் கோட்டையிலிருந்து கள்ளர்களுக்கு ஆதரவாக படை அனுப்பியதாக செய்திகள் உள்ளன.
இசுலாமிய மக்களும், கள்ளர்களும் ஒருவருக்கொருவர் இணக்கமாய் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
கள்ளர்களின் திருமண முறை கூட இசுலாமிய முறைப்படிதான் நடந்து வந்தன. திருமணம் இரவு நேரங்களில், இந்து வைதீக முறைப்படியின்றி மணப் பெண்ணுக்கு மணமகனின் அக்கா கருகமணி சூட்டுவார்கள்.
திருமணத்தின் போது, கிடா அடித்து சாப்பாடு! தற்போதும் கூட, இப்பகுதியில் உள்ள கள்ளர் சமூகத் திருமணங்களில், 10, 20, 50 வரை என ஆடுகள் வெட்டப்பட்டு, அவரவர் செல்வாக்கிற்கேற்ப திருமணங்கள் நிகழ்ந்து வருகின்றன. மேலூர் வட்டாரத்தில் சென்னகரம்பட்டி, கள்ளம்பட்டி ஆகிய கிராமங்களில் கள்ளர் பலர் இசுலாமியராக மதம் மாறியுள்ளார்கள். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், இப்போதும் கூட இந்து எனக் கூறிக்கொள்கிற கள்ளர்கள் ரம்ஜான் நோன்பின்போது, முசுலிம்களுக்கு நோன்புக் கஞ்சி காய்ச்சி ஊற்றுகின்ற முறை, இங்கு நிகழ்ந்து வருகின்றது. இந்த நோன்புக் கஞ்சி காய்ச்சி ஊற்றுவதற்காக பரம்பரை, பரம்பரையாக நஞ்சை நிலம் ஒதுக்கப்பட்டு அந்தக் காரணத்திற்காக அதன் வருமானங்கள், பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பிறமலைக் கள்ளர்கள் இசுலாமியார் போன்று சுன்னத் செய்வதும், முசுலிம்கள்போல சிய்யான் (தாத்தா) என்ற பொருள்பட அழைப்பதும் உதாரணங்-களாகும்.
ஜாதி, சமூக வேறுபாடுகளில்லாத இம் மக்களுக்கு, ஆட்சியாளர்களும், பாண்டிய நாட்டு உயர் குடி மக்களும் வைத்த பெயர்தான் கள்ளன் என்பது. இன்று தீவிரவாதிகள், போராளிகள் என்றழைக்கப்படுவது போன்ற ஒரு சொல்லே கள்ளர் ஆகும். அது ஜாதி ஆகாது.
சித்திரைத் திருவிழாவுக்கும், அழகர் ஆற்றில் இறங்குவதற்கும் இன்றுள்ள-படியான மத ரீதியான தொடர்பு ஏதுமில்லை. சொல்லப்போனால் இவ்விரண்டும், வெவ்வேறானவை. முரண்பட்டவை.
சித்திரைத் திருவிழா, மதுரை மீனாட்சி சொக்க நாதர் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. பண்டைய நாள்களில் இந்த விழாவிற்கு பக்கத்து நாட்டு மன்னர்கள், மந்திரிகள், ஜமீன்தார்கள், நிலப் பிரபுக்கள், திவான்கள், சிற்றரசர்கள் என பெருந்தனக்காரர்கள் கூடுவார்கள். இன்று போல அன்று சாலைகள், அவற்றைக் கடக்கும் பாலங்கள், விரைவாகச் செல்ல வாகனங்கள் இல்லாத காலம். பெரும்பாலும் இவர்கள் குதிரை பூட்டிய சாரட்டு வண்டிகளிலும், மாடு பூட்டிய கூண்டு வண்டிகளிலும், ஆட்கள் தூக்கும் பல்லக்குகளிலும் பயணம் செய்வர்.
பழைய மதுரை; அதாவது அன்றைய பாண்டிய நாடு வைகை ஆற்றுக்குத் தெற்காக இருப்பது மட்டும்தான்! ஆற்றின் வடக்கே இருந்த பகுதிகள் மருத மரங்கள் நிறைந்த பெரும் காடுகளாக விளங்கின.
வடபகுதியில் இருந்து வரக்கூடிய பயணிகள் இன்றைய ஆழ்வார்புரத்திற்கு வந்து ஆற்றைக் கடந்துதான் மதுரைக்குச் செல்லவேண்டும். இதைப் பயன்படுத்தி கள்ளர் படை ஆற்றுக்குள் இறங்கி தக்க தருணம் பார்த்து பயணிகளின் வருகையை எதிர் நோக்கி இருப்பர்.
மீனாட்சிசொக்கன் திருக்கல்யாணத்திற்கு வருகின்ற சீமான்களைத் தடுத்து நிறுத்தி கொள்ளையிடுவது கள்ளர்களின் திட்டமும் வழக்கமும் ஆகும்.
கள்ளர் தலைவன் அழகர் குதிரைகளுடன் தம் கூட்டாளிகள் துணையுடன் வைகை ஆற்றில் இறங்கி அங்கிருந்த புதர்களில் மறைந்திருந்து இத் தாக்குதல்களை நடத்தி வந்துள்ளான்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுடன் வண்டியூர் சென்று தனது வைப்பாட்டியான துலுக்க நாச்சியார் வீட்டில் தங்கியிருப்பதும், பின் பாதுகாப்புடன் மலையேறுவதும், அவன் வழக்கமாயின!
அழகர் மலைக் கொள்ளையர்களை, மதுரை வீரன் வரை போராடிப் பார்த்தும் அவர்களை அடக்கவும், ஒடுக்கவும் முடியாமல் இருந்து வந்துள்ளது. சங்கிலிக் கருப்பன் என்பவன் அழகரின் பின் தோன்றல் ஆவான். இந்த கள்ளர் படையின் தொல்லைகள் மதுரைப் பாண்டிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாகக் கருதப்பட்டது. இன்றைக்கு சந்தனக் கடத்தல் வீரப்பனின் பிரச்சினைபோல அது மிகப்பெரிய அளவில் இருந்திருக்கலாம்.
பாண்டிய நாட்டு ஆட்சியை நாயக்கர்கள் கைப்பற்றிக் கொண்டபோது, கள்ளர்களை எதிர்த்து அமைதியான ஓர் ஆட்சியை நடத்த முடியவில்லை.
கள்ளர் வாழ்வில் நல்லதொரு மறுமலர்ச்சியை தோற்றுவித்தவர் திருமலை நாயக்கரே என்றால் அது மிகையாகாது! கள்ளழகர் சமூக மக்களும் மற்ற மக்களைப்போல தம் பகுதியில் வாழ வழிவகை செய்யப்பட்டது. அதன் விளைவாக அதன்பின் கள்ளர்கள் சித்திரைத் திருவிழா வின்போது கொள்ளையடிப்பது தடுக்கப்பட்டது. அரசருக்கும் ஆட்சிக்கும் விசுவாமாக இருப்பது; அதே நேரத்தில் மேலூர் வட்டாரப் பகுதியை 18 கிராமங்களுடன் கூடிய கள்ளர் சீமையை அமைத்து கள்ளர் தாமே சுயமாக ஆள்வது என அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம் கள்ளர்களின் தலைவர் அடக்கமான அழகர் மலையில் கோயில் எழுப்பி மன்னர் அழகரைப் பெருமானாகக் கருதி வணங்கினர். பின் அழகர் கள்ளழகர் ஆனார்.
கள்ளர்கள் எக்காரணம் கொண்டும் மதுரைக்குள் நுழைவது இதன் மூலம் தடுக்கப்பட்டது. என்றாலும், வழக்கம்போல அழகர் நினைவாக ஆற்றில் இறங்கி வண்டியூர் சென்று திரும்ப அழகர் மலை வந்து சேரும் நிகழ்வுகள் அரசு துணையுடன் நடத்தப்பட்டன. அவ்விழாவில் கலந்துகொள்ளும் கள்ளர்களுக்குத் தேவையான தானியங்கள், ஆடு, மாடுகள் இவற்றைத் தானமாக வழங்க அரசரால் ஆங்காங்கே மண்டபப்படிகள் அமைக்கப்பட்டு அரசரால் அவற்றிற்கு மானியங்கள் வழங்கப்பட்டன.
கள்ளர்கள் மலைகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியதால் தம்மோடு பெண்களை அதிகமாக வைத்திருக்கவில்லை.
நாயக்கர் காலத்தில் கள்ளர்கள் மீதிருந்த ஒடுக்கு முறை தளர்த்தப்-பட்டதால்மேலூர் வட்டாரப் பகுதியில் நல்ல கலாச்சாரத்துடன் பெரும்பான்-மையினராக இருந்த கோனார், வெள்ளாளர் சமூக மக்களை எதிர்த்து அவர்களிடமிருந்து ஆடு, மாடு இவற்றுடன் அவர்கள் வீட்டுப் பெண்களையும் சிறை பிடித்து, கள்ளர் சீமை அமைந்தது என்றே சொல்லலாம்.
அதைப் போல பிறமலைக் கள்ளர்கள் உசிலம் பட்டியை மய்யமாக வைத்து அங்கு வாழ்ந்த வடுகர்களை விரட்டிவிட்டு வடுகப் பெண்களுடன் கூடி வாழ்ந்தனர். வடுக மொழி என்பது கொச்சைத் தமிழாகும்! இன்றும் கூட பிறமலைக் கள்ளர்கள் பேசும் தமிழ் கொச்சையாக இருப்பதைக் காண்கிறோம்.
இந்த அடிப்படையில்தான் கள்ளழகர் கள்ளர் வேடம் பூண்டு வைகை ஆற்றில் ஆண்டு தோறும் இறங்கி விட்டு வண்டியூர் சென்று துலுக்க நாச்சியார் வீட்டில் தங்குவதும், தீட்டுப்படுவதும், அழகர் மலை சென்றதும், தீட்டு நீக்கப்பட்டபின் கோயிலுக்குள் அனுமதிப்பதுமான விழாக்கள் நடக்கின்றன.
திருக்கல்யாணத்தைக் காண, பார்ப்பனர்கள், உயர் ஜாதிக்காரர்கள் மற்றும் சற்சூத்திரர்களுடன் மீனாட்சி அம்மன் கோயில் செல்கிறார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களோ, அழகருடன் வந்து, அழகருடன் திரும்ப அழகர் கோயில்வரை செல்வதும், வணங்குதுமான முறைகளை இப்போதும் கூட பார்க்க முடிகிறது.
இந்த வரலாற்று உண்மைகளை மறைத்து சைவ வைணவ ஒற்றுமையை உருவாக்க நினைத்த சிலர் சம்பந்தமில்லாத அழகரை, மீனாட்சி சகோதரர் எனவும், அவர் வருவதற்குள் திருமணம் முடிந்து விட்டதால், அழகர் கோபித்துக் கொண்டு வண்டியூர் சென்று விட்டதாகவும் முடிச்சுப் போட்டுள்ளார்கள். பொய்யான பிரச்சாரம் பக்தியின் பெயரால் உண்டாக்கப்பட்டதை அதிநவீன காலத்திலும் பகுத்தறியாது, பக்திப் பரவசம் காண்கிற முட்டாள்களை என்னவென்பது?
தந்தை பெரியார் சொன்னது போல் அவர்களைக் காட்டு மிராண்டிகள் என்பதில் என்ன சந்தேகம்? நியாயம்தானே!
அக்காலத்தில் வாகன வசதி இல்லை. நல்ல சாலை வசதிகள் இல்லை. ஒப்புக்காக ஏற்றாலும்கூட, அப்போது, அழகரால் தன் தமக்கையின் திருமணத்துக்கு வந்து சேருவதில் தாமதம் உண்டாகியிருக்கலாம். இன்று அவ்வாறில்லை. வாகன வசதிகள் உள்ளன. ஹெலிகாப்டரைக்கூட அவசரத்திற்குப் பயன்படுத்தலாம். சாலை வசதிகளுக்கும், மேம்பாலங்களுக்கும் குறைவு இல்லை. மதுரை நகருக்குள் நுழைய 7,8 பாலங்கள் வரை கட்டப்பட்டுள்ளன.
வருஷம், வருஷமாக இந்த அழகர் தாமதமாக வருவது ஏன்? ஒருத்தருக்கு ஒரு முறைதானே திருமணம். நம்ம மீனாட்சி சொக்கநாதருக்கு ஆண்டுதோறும் திரும்பத் திரும்பத் திருமணமா? நல்ல தமாஷாக உள்ளது. இந்தப் பொம்மைக் கல்யாணத்தை நம் பெரியவர்கள் எப்போது விடப் போகிறார்களோ?
நம்ம மந்திரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை ஆணையாளர் சமூக முன்னேற்றத்தை அழகரிடம் எடுத்துச் சொல்லி, இந்த ஆண்டாவது முதல் நாளே புறப்பட்டு மதுரை வந்துவிடுங்கள். உங்கள் சகோதரியும் சந்தோஷமடைவாள். விரைவான சொகுசான வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இனி மேலாவது தாமதிக்காமல் திருமணத்திற்கு வரவேண்டும் என ஏன் சொல்லவும், செய்யவும் மறுக்கிறார்கள்.
அழகர் ஆற்றில் இறங்க வேண்டியதில்லை. ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் வழியாக மதுரையம்பதி வரலாமே! செய்வார்களா நம் ஆட்சியாளர்கள்? பக்த கே()டிகள் இருக்கிறவரை, அழகர் ஆற்றைக் கடக்கமாட்டார்! அவர் மதுரையைத் திருமலை நாயக்கர் ஆள்வதாகவே நினைத்திருக்கலாம்! அழகரை வைத்து வைதீகக் கூட்டம் வயிறு நிறைப்பது... நிற்பது... எப்போது?
----------------------- “விடுதலை” 27-4-2010

thanks to  http://sd-10807.dedibox.fr/show_items-feed=a84ea0ab377d2734c98a90d897c36e66?page=1

இன அழிப்பும் அலட்சியமும்.

0 c
என்னதான் நாங்கள் நவீனப்பட்டு விட்டதாக காட்டிக்கொண்டாலும்... உலகின் ஒவ்வொரு பாகத்து மக்களின் அடி மனங்களில்... (பொதுவாக) இனம்,இடம் எனும் வெறி... இருக்கின்றது. இன்றும்.. அந்த இன இட வெறிதான் இன்றும்... தீவிரவாதமெனும் பெயரிலும்... அதை தடுக்கிறோம் என்ற பெயரிலும்... உலகத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது.
இந்த செய்கைகளில் பொதுவாக தலமைப்பீடங்களே ஈடுபட்டாலும். ஒவ்வொரு குடிமகனும்... காரணமாக அமைகின்றார்கள். அவர்கள்தானே... இந்த தலைமைப்பீடத்தை தேர்வு செய்த பொறுப்பாளிகள். (ஜன நாயக முறையை சொன்னேன். சர்வதிகார, முடியாட்சி முறைகளில் கூட ஏதோ ஒரு வகையில் மக்களே பொறுப்பாளியாக இருக்கின்றார்கள்... எல்லாம்... அடிமனதில் உறங்கிக்கொண்டிருக்கும்... "இனம்" மற்றும் "இடம்" என்ற இரண்டு விச வித்துக்களும்தான்.)

இது பற்றி... அறிவியல் ரீதியாகவும்... சமூகவியல் ரீதியாகவும் பார்க்க முதல்... இனவெறி எப்படிப்பட்டது என்பதற்கு சில உதாரணங்களை பார்ப்போம். அனைத்துமே ஏதோ ஒரு வகையில் குற்ற உணர்வையும்... ஒரு வித பாரத்தையும் மனதில் ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. அதீத கற்பனை சக்கியுள்ளவர்களுக்கு மன உளைச்சலைக்கூட கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்... சோ... தவிர்ப்பவர்கள் தவிர்க்கவும். :)

------------------------------------------------------------------------------------------

டாஸ்மேனியா...
அவுஸ்ரேலியாவிலிருந்து 320 கி.லோ மீட்டர் தூரத்திலுருந்த அளகிய தீவு. நாய்கள் அற்ற தீவு.... அங்கு 5000 இக்கும் மேற்பட்ட டோஸ்மேனியர்கள் என்ற பழங்குடி மக்கள் தனிக்கலாசாரத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.
1810 ம் ஆண்டு...
பிரித்தானியர்களின்... இடம் பிடிக்கும் ஆசையின் ஒரு அங்கமாக... இந்த தீவை வெள்ளையர்களின் இரண்டு கப்பல்கள் அடைந்தன. இதற்கு முதல் வெளி உலக‌த்தையே அறிந்திராத அந்த கருமையான மக்கள்... இந்த வெள்ளை உருவங்களை பார்த்ததும் இயல்பாகவே பயந்தார்கள். இதை உணர்ந்த வெள்ளையர்களின் பல கப்பல்கள் தீவிற்கு படையெடுத்தன.
பலர் கூட்டம் கூட்டமாக காரணமின்றி ( இடம் பிடிக்க வேண்டும்... வளங்கள் சூறையாடப்பட வேண்டும் என்ற வெள்ளையர்களின் காரணத்துக்காக) சுட்டுக்கொள்ளப்பட்டார்கள். பெண்கள் கூட்டம் கூட்டமாக கற்பை பறி கொடுத்தார்கள். சிறுவர்கள்... அடிமைகளாக்கப்பட்டு... இவர்களின் சூறையாடல்களுக்காக அமர்த்தப்பட்டனர்.
டோஸ்மேனியர்களால் எதிர்ப்பைக்காட்ட முடியவில்லை. வெளியுலக தொடர்பற்ற அவர்களுக்கு இந்த யுத்தம், ஆயுதம் எல்லாமே புதுசாகவும் ஏன் என்றும் விளங்கவில்லை. ஏன் சாகிரோம் என்பது தெரியாமலே பரிதாபமாக உயிர் நீத்தார்கள்.

1828 ஆம்... ஆண்டு வெள்ளையர்களின் அரசு நிறுவப்பட்டு... எதிரே தென்படும் எந்த ஒரு வெள்ளையரல்லாதவரையும் கொள்ளலாம்... ஒரு கறுப்பனை கொண்டால் 3 பவுண்ட்ஸ்... ஒரு குழந்தையை பிடித்து வந்தால் 1 பவுண்ட் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது.
இப்படி சட்டம் வந்ததும்... என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.
5000 பேராக இருந்த சமுதாயம்... 75 ஆக்கப்பட்டது... அதில் 72 ஆண்களும்...3 பெண்களும் மிஞ்சினார்கள். இரும்பு சங்கிளிகளால் சேர்க்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

இந்த காலப்பகுதியில்... ஐரோப்பியாவில் இந்த கொடூர இன அழிப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதனால்... மீதமானவர்களை கொல்ல முடியாமல்... இருள் சிறைக்குகையில் அடைத்துவைத்தார்கள். அங்கும்... நய வஞ்சகமாக... உணவு, மருத்துவம் மறுக்கப்பட்டு... கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளப்படார்கள்.

1869 ம் ஆண்டு... 2 பெண்களும்... 1 ஆணும் எஞ்சினார்கள். இறுதியாக அந்த ஒரு கருப்பு ஆணும் உணவின்றி இறந்து போக... இதைக்கேள்விப்பட்ட... ஐரோப்பிய சமுதாய விஞ்ஞானிகள்... அவர்கள் குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினமாக இருக்கலாம் என்று கூறி... அந்த உடலை கூறுபோட்டு எடுத்துக்கொண்டார்கள். (காரண்ம் ஒன்றும் பெருசில்லை... ஒரு அழிந்துபோன இனத்தின் இறுதி மனிதனின் எச்சங்கள் என்று அதை பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரே நோக்குத்தான்.)

1876 இறுதிப்பெண்... ஏற்கனவே இறந்த இருவடைய உடலையும்... கண் முன்னேயே... துண்டாக்கி எடுத்துப்போனதை பார்த்திருந்தவள். உடல் நிலை மோசமாகி... தனது பாசையில் ஏதோ முனகிக்கொண்டிருந்தாள். அது என்ன என்பதை அவுஸ்திரேலிய பழங்குடி ஒருவர் மூலம்... மொழி பெயர்க்கப்பட்டது.
"எங்கள் சம்பிரதாயப்படி... இறந்த உடலை கடலின் நடுவே சென்று மூழ்கடிக்கப்பட வேண்டும்... தயவு செய்து... என்னுடலை சின்னாபின்னமாக்காதீர்கள்... என் கடைசியாசையை ஆவது நிறைவேற்றுங்கள்...." என்று கதறினால்.

இதை கேட்டு சிரித்த வெறியர்கள்... அப் பெண் இறந்ததும்... அங்கு ஒரு பக்கத்தில் புதைத்தார்கள்.
சிறிது காலத்தில் அதை தோன்டி எடுத்து... டோஸ்மேனியா மியூஸியத்தில்... இறுதி பழங்குடி பெண் என்ற வாசகத்துடன் தொங்கப்போட்டு இருந்தார்கள். இந்த கேவலமான செயலை... பின்னர் வந்த பல வெள்ளையர்கள் எதிர்த்த போதால். 1947 இல் அந்த கூடு ஒரு தனியறையில் போட்டு மூடப்பட்டது.

1976 ம் ஆண்டு... மக்கள் கூட்டமாக நுழைந்து அந்த பெண்ணின் எலும்புக்கூட்டை அவள் விரும்பிய படி கடலில் மூழ்கடித்து அடக்கம் செய்தார்கள்.
( சம்பவ மூலம் : மனிதருள் மிருகம் என்ற மதன் சேரின் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.)

------------------------------------------------------------------------------------------

இந்த சம்பவத்தில்... ஏதோ.. ஒரு இனத்தவர் தானே(கறுப்பர்)... எங்களுக்கு இடம் வேண்டும்... என்ற ஒரே வெறிதான் காரணம். இந்த சம்பவம் நடந்துகொண்டிருப்பது தெரிந்திருந்தும்... பெரிதாக ஐரோப்பியர்களோ... வேற்று நாட்டினரோ... கொந்தளிக்க வில்லை... எல்லாம்... வேறு இனம்... அழிந்தால் நமக்கென்ன?... என்ற மனப்போக்குத்தான். இன்றும் இந்த உணர்வு... விஷம் மனித நெஞ்சை விட்டு அகழவில்லை என்பது தெரிந்த மறுக்கப்படும் உண்மை.

THANKS TO http://valaakam.blogspot.com/2010/10/01.html

தமிழர் புகழ் போற்றும் இராஜ கம்பீரன் (Rajakambeeran)

0 c
வணக்கம்,
தமிழகத்திற்க்கு சற்று தொலைவில் உள்ள ஒரு தீவில் தமிழர்கள் பலர், தமிழர்களை வெறுக்கும் ஒரு கொடூரனால் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். . அவர்களை மீட்க புலி கொடி பறக்கும் கப்பலில் தனது வீரர்களுடன் வருகிறார் தமிழினம் காக்கும் தலைவர். தமிழ்பற்றுள்ள வீரர்கள் அவர்களை மீட்பார்களா இல்லையா?

என்ன நண்பர்களே தமிழர்களை வருத்தும் ஈழ பிரச்சனை பற்றி கூறுவது போல இருக்கிறதா... இல்லை இது ஓவியர் ப.தங்கம் அவர்கள் படைத்துள்ள "இராஜகம்பீரன்" சித்திர கதையின் சாரம் தான்.



தமிழில் உருவாக்கப்படும் சித்திர கதைகள் அறவே நின்று விட்ட இன்றைய காலகட்டதில் வெளியிடப்பட்டு இருக்கும் முழுமையான தமிழ் சித்திர கதை தான் இராஜகம்பீரன். கிரவுன் சைஸ் அளவில் 214 பக்கங்களுடன்ம் அருமையான் சித்திரங்களுடனும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஓவியர் ப. தங்கம் அவர்கள் கதையெழுதி சித்திரம் வரைந்து இந்த இதழை படைத்திருக்கிறார். 70 வயது ஆகி இருந்தாலும் தமிழ் - தமிழர் வரலாறு - சித்திரகதை ஆகியவை மேலுள்ள பற்றால் அருமையான இந்த இதழை வெளியிட்டு இருக்கிறார். இவரிடம் இருந்து இன்னும் பல வரலாறு கூறும் சித்திர கதைகளை எதிர் பார்க்கலாம் என் நினைக்கிறேன். தினதந்தி நாளிதழில் பணியாற்றி இருக்கும் தங்கம் அவர்கள், கருப்பு கண்ணாடி என்ற சித்திர கதையை உருவாக்கி உள்ளார். இந்த கதை 1960களில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. (எனது தந்தை கூட தனது சிறு வயதில் இந்த கதை படித்துள்ளதாக கூறுவார்). கன்னிதீவு கதையின் ஆரம்ப காலங்களில் பங்கேற்றிருக்கிறார். தமிழர் பண்பாட்டின் மீதும் தமிழர் வரலாறின் மீது தீராத பற்று வைத்து இருப்பது அவர் எழுத்தில் நன்றாக தெரிகிறது.



900 ஆண்டுக்கு முன் வாழ்ந்து சரித்திரதில் முக்கிய இடம் பெற்றுள்ள இராஜராஜ சோழன் காலத்தில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக கடல் வாணிபர்கள் கடற்கொள்ளையன் ஒருவனால் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க செல்லும் சோழ நாட்டு வீரர் குழு கடற்கொள்ளையர்களை வீழ்த்துகிறார்களா என்பதே கதை சுருக்கம்.

சோழர் காலத்து வரலாற்று கதையினை சித்திர கதை வடிவில் படிப்பதே மகிழ்ச்சியான அனுபவத்தை தருகிறது. கதையின் பல இடங்களில் தமிழர்களின் பழம்பெருமைகள் நன்றாகவே உணரமுடிகிறது. இராஜராஜ சோழன் தவிர கவிஞர் ஒட்டக்கூத்தர், குலோத்துங்கசோழன் ஆகியோரும் இந்த கதையில் இடம் பெற்றுள்ளனர். கூடவே ஒரு புத்தபிட்சு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார். பண்டைய தமிழகத்தில் புத்த மதத்தினர் தமிழ்ர்களுடன் நல்ல நட்புடன் வாழ்ந்து இருக்கிறார்கள். (ஆனால் இன்று ?? )

பழைய தமிழர்கள் கடற்பயணத்தை எப்படி திட்டமிட்டு மேற்கொண்டார்கள் என்பதை நுணுக்கமாக விவரித்துள்ளார் ஆசிரியர். தீவில் இருக்கும் கைதிகளை மீட்கும் விதமும் ஏனோதானோ என் இல்லாமல் சுவையாகவும் நம்பும்படியாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது. சில காட்சிகளில் ஒரே கருத்துள்ள வசனங்கள் திரும்ப திரும்ப வருவது ஒரு சின்ன குறை. அதே போல் கதை இராஜராஜ சோழன் பற்றியதா அல்லது இரண்டாம் இராஜராஜ சோழன் பற்றியதா என்பதிலும் சிறு குழப்பம் உள்ளது.

ஓவியங்களை பொறுத்த வரை சிறப்பவாகவே இருக்கிறது. குறிப்பாக தமிழர்களின் கலை பன்பாட்டு அடையாளங்கள் நன்றாகவே பிரதிபலிக்கிறது. இராஜராஜ சோழனின் கம்பீர தோற்றம் மனதை கொள்ளை கொள்கிறது. (கதையின் தலைப்பு போலவே)
சித்திர கதை மட்டுமில்லாமல் பல வரலாற்று தகவல்களும், சிற்பங்களின் புகைபடங்களும் இந்த நூலில் அடங்கியிருக்கிறது.

Pic1 - கதாபாத்திரங்கள் அறிமுகம்


Pic2 - குலோத்துங்கசோழன் தனது அன்னையிடம் ஆசி பெறும் காட்சி



Pic3 கப்பல் கட்டும் இடம்

Pic4 - ராஜராஜ சோழனின் கம்பீர தோற்றங்கள்

Pic5 - கடற்பயணம் துவக்கம்

Pic6- கடற்கொள்ளையர்கள் அழிப்பு

தமிழில் இது போன்ற சித்திர கதைகள் வந்ததே இல்லை என கூறுவதை விட இது போன்று இன்னும் நிறைய கதைகள் வரவேண்டும் என்பதே என் விருப்பம். தமிழக நூலக துறை இந்த புத்தகத்தை அங்கிகரித்து நூலகங்களில் இடம்பெற செய்திருப்பது ஆரோக்கியமான செய்தி.
சென்ற பதிவிற்கு கருத்துரை எழுதிய ஓவியர் ப. தங்கம் அவர்களின் மகன் இராஜேந்திரன் தங்கமுத்து அவர்களுக்கு நன்றிகள்

புத்தக விபரங்கள்

பதிப்பகம் தங்கப்பதுமை,
முகவரி - ஞானம் நகர், 6வது தெரு மேற்கு
மாரியம்மன் கோவில் அஞ்சல்
தஞ்சாவூர்

பக்கங்கள் - 214, விலை - 145/-

http://comicstamil.blogspot.com/2009/10/rajakampeeram.html