தமிழரின் நீர் மேலாண்மை

0 c
உதிரப்பட்டி
போர்க்களத்தில் செயற்கரிய செயல் செய்து உத்திரம் சிந்தி உயிர் நீத்த ஒரு வீரனுக்கோ,
நாடு காக்கும் பணியில் உயிர்நீத்த ஒரு தலைவனுக்கோ
நீர் பாய்ச்சும் பணியில் உயிர் துறந்த ஒருவனுக்கோ
அவனுடைய இறப்பிற்கு பிறகு
அவனுடைய குடும்பத்தினர் வாழ
அளிக்கப்பெறும் நிலமோ அல்லது வேறு வகை வருவாயோ
அரசால் அங்கீகரிக்கப்பட்டு உதிரப்பட்டிகை என்ற பெயரில் சாசனமாக
பதிவு செய்யப்பெறும் .
இதனை உதிரப்பட்டி என்றும் குறிப்பிடுவர்.
இம்மரபு தமிழகத்தில் மிகப்பழங்காலம்தொட்டே இருந்து வந்துள்ளது .


முனைவர் மணி.மாறன் அவர்கள் எழுதிய

தமிழரின் நீர் மேலாண்மை

என்ற நூலிலிருந்து


பெருங்காமநல்லூர் பிரமலைக் கள்ளர்கள்

0 c

#போர்க்குடி "விவசாயம் செய்து பிழைத்து வரும்
நாங்கள்
எப்படி குற்றவாளிகள் ஆவோம்?"
என்று கேள்வி எழுப்பி
வீரமரணம்
எய்தியவர்கள்தான்
.
பெருங்காமநல்லூர் பிரமலைக் கள்ளர்கள்.
--------------------------------------------------------------------
.
"நாங்கள் உங்களுக்கு வரிச் செலுத்த மாட்டோம்"
.
என்று சொன்ன ஒரே காரணத்திற்காக
மேலூர்
வெள்ளளூர் நாட்டில்
.
பெண்கள் குழந்தைகள் என்று பாராமல்
5000 கள்ளர்கள்
வெள்ளையனால்
சுட்டுக் கொள்ளப்பட்டடார்கள்.
-
எங்கே எத்தனை சாதிகள்
இதுபோல இறந்திருக்கிறார்கள்
என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
-
கள்ளர்கள் விட்டுக்கொடுக்காத போர்க்குடிகள்.
ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
-
களப்படையினர் என்பது
களபர் என்றும் பின்னர் கள்ளர் என்று மறுவி நிற்கிறது.
பெருமாள் அம்மாசி தேவன் அவர்கள் பதிவிலிருந்து ஜனவரி 29-2018

கீழத்தூவல்

0 c
1957 செப்டம்பர் 11
இமானுவேல் கொலை.
12-13- ல் அருங்குளம் கலவரம்.
14 காலை
கீழத்தூவல் கிராமம் போலீஸால் முற்றுகை இடப்படுகிறது.
பள்ளியின் ஆசிரியர்கள் கிருஷ்ணசாமி சங்கையாபாண்டியன் அவசர அவசரமாக இடமாற்ற உத்தரவு தந்து ஊரை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.
சுமார் 150 வீடுகள் கொண்ட கீழத்தூவல் போலீஸால் அல்லோலகல்லோப் படுத்தப்படுகிறது.
ஆண்கள் அனைவரும் மந்தைக்குக் கொண்டு வந்து சேர்க்கபட்டனர்.
முதுகுளத்தூர்
சப் இன்ஸ்பெக்டர் நடராஜ அய்யர்
அடையாளம் சொல்ல
முப்பது பேர்களை தனியாகப் பிரித்தனர்
.பிறகு அதில் 5 பேரை பிரித்து மற்றவர்களை பள்ளிக்கூடத்தினுள் அடைக்கின்றனர்.
போலீஸ் அட்டக்காசத்தைக் கண்டு அஞ்சிய சிறுவன் கண்கரையில் இருந்த இலுப்பைமரம் புளியமரங்களில் அடர்த்தியான மரத்தில் ஏறி மறைந்திருந்தான்.
தனிமைப்படுத்தப் பட்ட 5 பேரும் கண்மாய்கரைக்கு கொண்டுவரப்படுகின்றனர். கண்மாய்கரையின் உள்வாய் இறக்கத்தில் வரிசையாக நிறுத்தப்படுகின்றனர் .கைகள் கண்கள் கட்டப்படுகின்றன. கடைசியாக வாத்து என்ற முத்துமணி மணமாகாத இளைஞன் நடககப்போவது என்னவென்று அறியாதநிலை போலீஸிற்கு உத்தரவு தரப்படுகிறது போலீஸ் சுடுகிறது .4 பேர் கண்மாய்கரை சரிவில் சாய்கிறார்கள்.குறிதவறிய துப்பாக்கியில் தோட்டா ஏற்றப்பட்டு மீண்டும் சுட முத்துமணியும் சாய்கிறார்.
ஐந்து பேர் ஆறு தோட்டா. நேரம் காலை 11.30 .முக்கிய அதிகாரிகள் வந்து, போகிறார்கள்
மாலை 5 மணிக்குமேல் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த
முனியசாமி தேவர்
அழைக்கப்பட்டு 5 பாய்கள் கொண்டு வர பணிக்கப்பட்டார் .
ஐந்து பாய்களை எடுத்துச்சென்ற முனியசாமித்தேவர் விறுவிறு என்று கரையில் ஏறிவிடுகிறார்.
ஐந்து பேரும் கால்மாடு தலைமாடாக சரிந்து கிடப்பதைகண்டுஅதிர்ச்சிஅடைந்தார்.
அதற்குள் போலீஸ் ஏய் கீழே இறங்கு என்று அதட்ட பாயைக் கொடுத்து விட்டு திரும்ப பள்ளியில் அடைக்கப்பட்டார்.
சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியைப் பகிர்கிறார்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்
ஐந்து பாய்களில் சுற்றிக் கட்டப்பட்டு
லாரியில் ஏற்றி கொண்டு சென்றது போலீஸ்.
பிணங்களை என்ன செய்தார்கள் .
எரியூட்டினார்களா
புதைத்தார்களா
தெரியாது.
சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை .
முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்படவில்லை.
அதுவரை பார்வர்டுபிளாக் காங்கிரஸ் மோதலாக இருந்த நிலை மாறி
காமராஜ் போலீஸ்
பார்வர்டுபிளாக் மோதலாக மாறியது.
போலீஸுக்கு ஆதரவாக
காங்கிரஸ்
வெளிமாவட்ட கூலியாட்கள் பயன்படுத்தப்பட்டனர்.
இம்மானுவேலை கொன்றவர்களை
கண்டு பிடிக்க
போலீஸ் முதலில் சென்றது
மேலத்தூவலுக்கு.
சுட்டக் கொல்லப்பட்டவர்கள் தான்
குற்றவாளிகள் என்றால்
அதன் பிறகு
தேவரவர்கள் உட்பட
பன்னிரெண்டு பேர் மீது
கொலை வழக்கு ஏன்.
கீழத்தூவல் கொலைவெறியாட்டத்தின்
மதுரை வடமலையான் மருத்துவமனை.
வெள்ளைச்சாமிநாடார் கல்லூரி விழா.
நாடார் மகாஜன சங்க விழாக்களில்
முதல் மந்திரி கு.காமராஜநாடார்
கலந்து கொண்டார் .
Vsnavamani Maran அவர்கள் பதிவிலிருந்து

முதுகுளத்தூர் கலவரம்

0 c
தமிழ்நாட்டு அரசியல், சமூக வரலாற்றில் 1957-ல் நடந்த முதுகுளத்தூர் கலவரம் முக்கியமானதாகும். இம்மானுவேல் சேகரனின் கொலையைத் தொடர்ந்து நடந்த அந்தக் கலவரத்தை அடக்க காங்கிரஸ் அரசு பல வழிகளில் முயன்றது.

இந்நிலையில் 1957 செப்டம்பர் 14 -ம் நாள், அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் மதுரைக்கு வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்தார். மதுரைக்கு வந்த முதல் நாளே, ஐ.ஜீ மற்றும் மாவட்ட காவல் துறையினர் உட்பட பெரிய காவல்துறை அதிகாரிகளைக் கலந்து பேசினார்.தானாக ஏற்படாத கலகத்தை சதி ஆலோசனை செய்ய, அதன் விளைவு, ஈவிரக்கமற்ற கொலை பாதகன், ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் "ரே" என்பவனையும், போலிஸ் பட்டாளத்தையும் கீழ்த்தூவல் கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்.அதன் ஒரு கட்டமாக, 1957 செப்டம்பர் 14ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்தனர் காவல் துறையினர்.
கீழ்த்தூவலுக்குப் போன இன்ஸ்பெக்டர் "ரே" அமைதியாக இருந்த கீழ்த்தூவல் கிராமத்து மக்களை அடித்துத் துன்புறுத்தி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டான். வயது வந்தவர்களைத் துன்புறுத்தி, அவர்களைப் பிடித்து ஒரு பள்ளிக் கூடத்தில் அடைத்து வைத்தான். முதுகுளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் அய்யர், குறிப்பிட்ட தவசியாண்டி தேவர் , சித்திரைவேலு தேவர், ஜெகநாதன் தேவர், முத்துமணி தேவர், சிவமணி தேவர் யென்ற ஐந்து இளைஞர்களை மட்டும் வெளியே இழுத்து வந்தார். அவர்களை ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் "ரே" தன் பரிவாரங்களோடு கிராமத்தை ஒட்டி உள்ள கண்மாய் கரைக்குக் கூட்டிச் சென்றான்.
அங்கே, கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த ஐந்து வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டினார்கள். என்ன நடக்கப்போகிறதோ...? என்று அறியாமல் கைகளும் கால்களும், கண்களையும் கட்டி கருவேல மரத்தில் ஐவரையும் கட்டி வைத்து கட்டிளம் காளையர்கள் ஐவரும் அச்சத்தோடு திகைத்து நின்ற வேளையில் சுட்டுக் கொன்றார்கள்.துப்பாக்கியின் வெடி சத்தம் கேட்டு, பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் பதறித்துடித்துக் கோவெனக் கதறி அழுதனர்.என்ன நடந்த அங்கே...? ரத்த வெறி பிடித்தஇன்ஸ்பெக்டர் "ரே" , அந்த இளைஞர்களின் நெஞ்சில் துப்பாக்கியால் வெறிகொண்டு சுட்டு, அந்த ஐந்து பேருடைய உயிரைப் பலிவாங்கினான்.சுட்டப்பட்ட இந்த வீரத்தியாகிகள் பிணமாக, ரத்த வெள்ளதிதில் விழுந்த பின்னும் வெறி பிடித்த மிருகம் இன்ஸ்பெக்டர் ரே, யின் துப்பாக்கி வெடிச்சத்தம் முழங்கிக் கொண்டு இருந்தது. கீழத்தூவல் கண்மாய் இரத்தத் தடாகமாக மாறியது.
அந்த ஐந்து இளைஞர்கள் செய்த குற்றம் என்ன...? எதற்கு இவ்வளவு கொடிய தண்டனை...? முத்துராமலிங்க தேவரைத் தலைவராக, இதய தெய்வமாக ஏற்றுக் கொண்டு, பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஓட்டு அளித்தது தான் அவர்கள் செய்த குற்றம். இந்த குற்றத்திற்காக தான், அந்த ஐந்து அப்பாவி இளைஞர்களை சுட்டு கொன்றனர்.இறந்த இளைஞர்களின் உடல்களை அவர்களது மனைவிமார்களும் குழந்தைகளும் கூடப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.இறந்த ஐந்து இளைஞர்களின் உடல்களை உடனே பரமக்குடிக்குக் கொண்டு சென்று, பிரேத சோதனை நடத்திய பின் ரகசியமாய் போலிசாரே எரித்து விட்டனர். இதுதான் இன்றுவரைக்கும் அனைவரும், குறிப்பாக தேவர் குல மக்கள் மறக்க முடியாத கீழத்தூவல் படுகொலை சம்பவமாகும்.
கீழத்தூவல் படுகொலைக்கு பின்பும் காங்கிரச அரசின் கொலைவெறி
கீழத்தூவல் படுகொலையோடு நின்று விட்டதா, நிலைமை...? இல்லை. காங்கிரஸ் வெறியாட்டமும் போலிசின் காடடுமிராண்டித்தனமும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. கீரந்தை என்ற கிராமத்திற்குள் போலிஸ் வெறிப்பட்டாளம் நுழைந்தது. அக்கிராம மக்களில் சிலர் ஒரு சடங்கு வீட்டிலே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். திடிரெனப் போலிஸ் பட்டாளம் அந்த வீட்டினுள் நுழைந்தது. விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஏழு பேர்களை விட்டுவிட்டு வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர்.அவர்களின் குழம்பு பிசைந்த கரங்கள், அதில் ஒட்டியிருந்த பருப்பு உலராத நிலையில், அவர்களைச் சுட்டுக் கொன்றனர். அந்தப் பிணங்களை பக்கத்தில் இருந்த வைக்கோல் போரில் தீ வைத்து, அதில் தூக்கிப் போட்டு எரித்தனர். அந்த ஏழு பேரில் ஒருவர் கிழவக் குடும்பன் என்ற அரிஜன். அவர் மறவர்களுக்கு தரவாக இருந்ததால் அவரும் கொல்லப்பட்டார்.
காங்கிரஸ் அரசின் வெறித்தனம்
மேலும் நரிக்குடிப் பக்கம் உள்ள பனைக்குடி, சிறுவார் என்ற கிராமங்களில் இருந்தவர்களை மலஜலம் கூடக் கழிக்க விடாமல், போலிஸ் லாரியிலேயே வைத்திருந்தனர். மறுநாள் அவர்களை உளுத்திமடை என்ற கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போனதும், லாரியில் இருந்தவர்களில் நான்கு பேர்களைக் குறிப்பிட்டு, " உங்களை விடுதலை செய்து விட்டோம்; போகலாம்" என்று அவர்களிடம் போலிசார் கூறினர். அந்த அப்பாவிகள் நான்கு பேரும் போலிசார் சொன்னதை நம்பி, லாரியில் இருந்து இறங்கினர். தங்கள் ஊரை நோக்கி நடை போடத் தொடங்கினர்.போலிஸ் வெறியர்கள் பின்னால் இருந்து அவர்களது முதுகுப்புறமாக அந்த நான்கு பேரையும் சுட்டுக் கொன்றனர். இத்தோடு நின்று விட்டதா, போலிஸ் அட்டூழியம்...? மழவராயனேந்தலில் ஒருவரைச் சுட்டுக் கொன்றனர். கீழத்தூவல், கீரந்தை உளுத்தி மடை, மழவராயனேந்தல் ஆகிய ஊர்கள் மொத்தம் பதினேழு பேர்களைச் சுட்டுக் கொன்றனர். அதில் ஒருவர் அரிஜன், இருவர் அகம்படியர்.
தேவரை கைதுசெய்ய தீவிரம் காட்டிய காங்கிரஸ் :
இப்படியாக பதினேழு பேரைப் பலி வாங்கியதோடு காங்கிரஸ் அரசின் வெறித்தனம் நின்று விட்டதா...? இல்லை. ஐயாயிரம் பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 836 பொய் வழக்குகள் போனர். இத்தனைக்கும் மேலாக, முத்துராமலிங்க தேவர் மீது கொலை வழக்குப் போட்டனர். தேவரின் செல்வாக்கைக் குறைக்கக் காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின. தேவரின் மீது குற்றப்பட்டியல் 1952 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலைத் தொடர்ந்து #தேவரின் வளர்ந்து வந்த செல்வாக்கும் பர்வர்ட் பிளாக் குறித்த வெற்றிகளும் காங்கிரஸ் வட்டாரத்தில் தேவரின் மீது ஒரு பகைமை தோன்றக் காரணமாக அமைந்ன. தேவரின் செல்வாக்கு, அவரது கட்சியின் வளர்ச்சி, வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாத #காங்கிரஸ் #தேவருக்கு எதிராக குறுக்கு வழிகளில் இறங்கத் தொடங்கியது. தேவரின் நடவடிக்கைகள், அவரது மேடைப் பேச்சுக்கள் கண்காணிக்கப் பட்டன.
#இந்நிலையில் 1957 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் நாள் மதுரையில் தமுக்கம் திடலில், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியை, இந்த தேசிய ஜனநாயக காங்கிரஸ் கட்சியாக, அமைப்பு ரீதியாக உருவாக்க, மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டைத் திறந்து வைத்து தேவர் மூன்று மணி நேரம் பேசினார். இந்திய மக்களின் தொன்மை மிக்க பண்பாட்டுப் பாரம்பரியம், வீரம், விவேகம் போன்றவை பற்றியும், வாணிபம் செய்ய வந்த வெள்ளையன் தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியாவை வளைத்துப் போட்டதைப் பற்றியும் விரிவாக தேவர் தனது உரையில் எடுத்துரைத்தார். காங்கிரஸ் ஆட்சியின் அராஜக அலங்கோல ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்தார். அவரது பேச்சு ஒரு சரித்திர நிகழ்ச்சியாக அமைந்தது. மறுநாளும் மாநாடு நடைபெற்றது.

தேவரை கைது செய்து மகிழ்ந்த காங்கிரஸ்:
தேவர் முதல் நாள் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசிவிட்டு அன்று இரவு 10 மணி அளவில் காரில், தனது இருப்பிடமாகிய நேதாஜி ஆபிசிற்குச் சென்று கொண்டிருந்தார். வைகை ஆற்றுப் பாலத்தில் தேவரது கார் வந்த போது போலிசார் காரை நிறுத்தி தேவரை கைது செய்தனர். தேவர் சிறிதும் பதற்றப்படாமல், தான் அணிந்திருந்த ருத்ரதட்ச மாலையை, உடனிருந்த ஜனநாயக காங்கிரஸ் தலைவர் டி.ஜி. கிருஸ்ணமூர்த்தியிடம் கொடுத்து விட்டு #மக்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். அஞ்ச வேண்டாம். சத்தியம் வெல்லும்" என்று கூறிவிட்டு, போலிஸ் வேனில் ஏறிக்கொண்டார். போலிஸ் வேன் பலத்த பாதுகாப்புடன் பறந்தது.

குமிழித்தூம்புகள்

0 c
குமிழித்தூம்புகள்:

தொல்காப்பியம்
பொருளதிகாரத்தில், “பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப்
போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது’
(வரி:725-726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.

இதைப்போல, மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான “அறவணர் தொழுத காதை’ என்னும்
பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,
“”பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்” (1384-87)
என்கிறார். “சுருங்கை’ என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய்.
அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை
வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில்
பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச்
சென்றடையும் என்பதே இதன் பொருள்.
1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து
நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே
“குமிழித்தூம்பு’ என்பதாகும்.

பழங்காலந்தொட்டு நடைபெற்றுவரும் நீர்மேலாண்மைக்கு பயன்பட்ட இவ்வகை குமிழித்தூம்புகள் தற்பொழுதுள்ள சூழலில் முற்றிலுமாய் தவிர்க்கப்பட்டு, வெறும் நினைவுச்சின்னங்களாய் காட்சியளிக்கிறது.

பட.திலிருக்கும் குமிழிக்கல் கொடும்பாளூர் அருகேயுள்ள ஓர் ஊரணியிலிருந்தது. ஐநூற்றுவர் வணிகக்குழுவின் தன்மம் இது...

Kathiervel Kumar‎

கோநகர் கொற்கை

0 c







https://www.vaaa.in/shop/korkkai/

மறைந்து போன தமிழக துறைமுக நகரமான கொற்கை நகரம் பற்றிய இலக்கிய மற்றும் தொல்லியல் செய்திகள்

சாத்தான் குளம் அ இராகவன்

https://www.youtube.com/watch?v=38iDO2h6290&feature=player_embedded
பக்கம் 160

இட்டேரி

0 c
Chandru Shanmugasundaram
கோவையில் நடந்த விவசாய விழிப்புணர்வு கூட்டத்தில்.
ஒரு பெண்மணி கேட்டார்.!
மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே ? வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது ? என்று?
அதற்குப் பதிலளித்தார் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த அனுபவுமுள்ள ஒரு அதிகாரி:
முன்னொரு காலத்தில் , அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன.
இட்டேரி என்பது கொங்கு நாட்டு சொல்.
இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே இட்டேரி என்று இங்கே அழைக்கப்படும். மற்ற ஊர்களில் என்ன பெயர் என்று தெரியவில்லை.
இந்த இட்டேரி என்பது "ஒரு தனி உலகம்." இதை நான் "Itteri eco-system" என்று அழைப்பேன்.
கள்ளி வகைகள், முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்ச கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும்.
இவை உயிர்வேலியாய் விவசாய நிலங்களை காத்து வந்தன. இங்கு எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வந்தன.
கறையான் புற்றுகள் , எலி வங்குகள் நிறைய காணப்படும். நிழலும் ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால் எண்ணற்ற பூச்சியினங்கள் காணப்படும்.
இவற்றை உணவாக கொள்ள வண்டுகள் , நண்டுகள்
பாம்புகள், பாப்பிராண்டிகள்,
உடும்புகள், ஓணான்கள்,
கோழிகள், குருவிகள்
அலுங்குகள், ஆமைகள்
இப்படி பல உயிர்களும்
இவற்றை உணவாக கொள்ள
பாம்புகள் , பருந்துகள், நரிகள் போன்றவையும் இருந்தன.
மனிதர்களுக்கு கோவப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம், போன்ற சுவையான கனிவகைகளும்,
கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக்கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருட்களும்,
மூலிகைகளும் கிடைத்தன. (ஏன் இன்று பணமழை பொழியும் கண்வலிப்பூக்கள் காய்கள் வேலியில்தான் ஆங்காங்கு படர்ந்திருக்கும்)
இங்கே பலருக்கும் பள்ளிப் பருவத்தில் விடுமுறை நாட்களில்
ஓனானைக்கண்டால் ஓட ஓட விரட்டு
பாப்பிராண்டி கண்டால் பாவம்ன்னு விடு என்று ஓனான் வேட்டைக்குப் போன அனுபவம் கண்டிப்பாக இருக்கும்.
இந்த வேலியில் வாழ்ந்த எண்ணற்ற குருவிகள், ஓனான்கள், தவளைகள் பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை அழித்தொழித்தன.
பாம்புகள், ஆந்தைகள் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தின. பறவைகளின் எண்ணிக்கையை பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின.
பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின.
"மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின."
ஆனால்
இன்று .....???
விவசாய நிலங்கள் ப்ளாட்டுகள் ஆன போது இந்த வேலிகளும் அழிந்தன. வண்டித்தடங்கள் தார் சாலைகள் ஆன போது இட்டேரிகள் மறைந்தன.
கொஞ்சம் நஞ்சம் மிஞ்சியிருக்கும் விவசாய நிலங்களுக்கு உயிர் வேலியை அழித்து காக்கா குருவி கூட கூடு கட்டாத கம்பிவேலிகள் அமைக்கப்பட்டன.
இதனால் எண்ணற்ற ஜீவராசிகள் வாழ இடமின்றி போனது.
அதில் முக்கியமானது குள்ளநரிகள்.
இவை மயில்களுக்கு முக்கியமான எதிரிகள். இவை மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் தந்திரமாக கவர்ந்து உணவாக்கிக்கொள்ளும்.
இவற்றை நாம் எங்கும் காண முடியவில்லை. காடுகளில் மட்டும் ஓரிரு ஜோடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகின்றன.
விளைவு ??
மயில்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி விட்டன.
" நாம் விதைத்தது நாம் அறுவடை செய்கிறோம்."
கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொண்டால் புண்ணாகத்தான் செய்யும்.
மயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மீண்டும் உயிர்வேலி முறைக்கு மாறுங்கள்.
இல்லையேல் இழப்புகளை அனுபவிக்கத்தான் வேண்டும்.
#copy paste...

காவல்குடி

0 c

காவல்குடிகளிடமிருந்து என்றைக்கு நாட்டுக்காவல் பறிக்கப்பட்டு சனநாயகம் என்ற பெயரில் காவலுக்கு சம்மந்தமே இல்லாதவரிடமும், கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்திடம் கைமாற்றப்பட்டதோ, சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்ததது மட்டுமில்லாமல், குற்றம் நடப்பதற்க்கு முன் தடுப்பது என்பேதே பெருவாரியாக இல்லை, மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை குறித்த பயமே இல்லாமல் போனது ...
இப்போது இருப்பவர்கள் குற்றவாளியின் பின்னணி தெரிந்து தான் அதற்கான நடவடிக்கையே எடுக்கிறார்கள் ...

சமூகத்தில் ஆபாத்தான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டுமென்றால் காவல்குடிகள் மீண்டும் காவல் பொருப்பை ஏற்கவேண்டும் ...

அரசு ஒருபோதும் நமக்கு அந்த பொருப்பை திரும்ப கொடுக்காது, ஆனால் நாம் வேறு வகையில் தான் அதை ஏற்கவேண்டும் ..

#அகமுடையார்

சோழராஜன் அ
11 மார்ச், பிற்பகல் 11:58