0 c
படம் பிடிக்கும்போது மாடு முட்டியது!

First Published : 12 Feb 2012 12:00:00 AM IST

ஜல்லிக்கட்டு... மஞ்சுவிரட்டு... என்ற வார்த்தைகளைக் கேட்டாலே உற்சாகமாகிவிடுகிறார்...சிவகங்கை மாவட்டம் குமாரபட்டியைச் சேர்ந்த எம்.ஏ. படித்த இளைஞர் செல்வா. சில ஆண்டுகள் மஸ்கட்டில் இருந்து ஊர் திரும்பி தந்தையின் ஃபோட்டோ ஸ்டுடியோவை நடத்தி வருகிறார். ஜல்லிக்கட்டு நடப்பதை ஊர் ஊராகச் சென்று ஒளிப்பதிவு செய்வதுதான் இவரின் விருப்பம். அவரின் விடியோ அனுபவங்கள் இனி...""உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டை பொழுதுபோக்குக்காக விடியோ எடுக்க 2005-ல் சென்றேன். எடுத்துவந்த விடியோ காட்சிகளை தொகுத்து 5 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவுக்கு சிடிக்களில் பதிவு செய்து தெரிந்தவர்களுக்கு அளித்தேன். அதற்கு அமோக ஆதரவு கிடைத்தது. பலரும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டினர்.இதனால் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு விரட்டு, மாட்டுவண்டி பந்தயம் போன்றவை எங்கு நடந்தாலும் அங்கு சென்று விடியோ படம் எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். இதை அறிந்து பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்னிடமிருந்து ஜல்லிக்கட்டு டிவிடிக்களை வாங்கிச் செல்லத் தொடங்கினர். இது அப்படியே பரவி இப்போது இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளிலிருந்தும் ஜல்லிக்கட்டு டிவிடி கேட்டு எனக்கு ஆர்டர்கள் வருகின்றன. ஜல்லிக்கட்டை விடியோ படம் பிடிக்க சரியான இடத்தை தேர்வு செய்வது முக்கியமானதாகும். ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகர் எனது விடியோ சிடிக்களைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து ஒவ்வோர் ஆண்டும் எனக்கு அவர் சார்பில் விடியோ படம் எடுக்க ஏற்பாடு செய்து தருகிறார். புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஊர்களில் சென்று ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் ஆகியவற்றைப் படம் பிடித்திருக்கிறேன்.ஜல்லிக்கட்டு எந்த ஊரில் நடக்கிறதோ அந்த ஊரின் கோயில்கள் உள்ளிட்ட பெருமை வாய்ந்த பகுதிகளை விடியோ படம் எடுத்து அந்த டிவிடியில் சேர்ப்பதால் அந்த பகுதி மக்கள் விரும்பி பார்க்கின்றனர்.ஜல்லிக்கட்டை விடியோ எடுக்க வேண்டுமென்றால் காலை 6 மணிக்குள்ளாக சென்று இடம் பிடிக்க வேண்டும். போட்டி தொடங்கினால் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை எங்கும் நகர முடியாது. இயற்கை உபாதைகளுக்காக சென்றால்கூட நம் இடம் பறிபோய்விடும், நல்ல கோணத்தில் படம் பிடிக்க முடியாது என்பதால் எங்கும் செல்லாமல் படம் பிடிப்பேன். சில ஊர்களில் சில அவமானங்களையும் தாங்கி படம் பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.பாகனேரி கிராமத்தில் நடந்த மஞ்சுவிரட்டு காட்சிகளை படமாக்கியபோது, எனக்கு பின்னால் வந்த மாடு முட்டியதில் தூக்கி எறியப்பட்டு காயமடைந்தேன். முகம், சட்டை முழுவதும் ரத்தம். நண்பர்கள் எங்கிருந்து ரத்தம் வழிகிறது என்று பார்த்தபோதுதான் மூக்கு எலும்பு உடைந்து ரத்தம் வருவது தெரிந்தது. சிறிது நேரத்தில் ரத்தப்போக்கை நிறுத்திவிட்டு வேறு சட்டையை அணிந்துகொண்டு அரை மணி நேர இடைவெளியில் மீண்டும் வந்து முழு காட்சிகளையும் எடுத்து முடித்தேன்.என்னிடமிருந்து வாங்கிச் செல்லும் டிவிடிக்களை அனுமதியின்றி பிரதி எடுத்து சிலர் விற்பனை செய்கின்றனர். சிங்கப்பூரில் ஒரு டிவிடி விற்பனை நிலையத்தில் ஒரு தமிழ்ப்பெண் தனக்குத் தேவையான தமிழ் சினிமா படங்களின் பெயர்களை எழுதி கொடுத்துள்ளார். அந்த பட்டியலில் அவர் ஜல்லிக்கட்டு என்ற சத்யராஜ் நடித்த சினிமா பெயரையும் எழுதியுள்ளார். அந்த கடைக்காரர் தந்த டிவிடிகளை வீட்டில் சென்று பார்த்தால் ஜல்லிக்கட்டு சினிமாவுக்கு பதிலாக நான் எடுத்த ஜல்லிக்கட்டு விடியோ வந்துள்ளது. அதைப்பார்த்து முதலில் ஏமாற்றம் அடைந்தவர், விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பார்த்து மகிழ்ந்து திரையில் தெரிந்த எனது தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு பாராட்டினார். இன்டர்நெட்டில் நான் எடுத்த ஏராளமான ஜல்லிக்கட்டு விடியோ காட்சிகள் உள்ளன. அவற்றை யார் வெளியிட்டது எனத் தெரியவில்லை.பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என் டிவிடிக்களை பார்த்து பிரமித்துப்போய், ""இந்தப் போட்டிகள் எப்போது எங்கு நடக்கிறது. நடந்தால் எங்களுக்கு தெரிவிக்க முடியுமா?'' என்று போனில் கேட்கிறார்கள். அவர்களுக்கு போட்டிகள் நடைபெறும் இடம், தேதி ஆகியவற்றை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பிவைக்கிறேன்.ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகளில் மாடுகள் துன்புறுத்தப்படுவதில்லை. இந்த ஆண்டு மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் எந்த உயிரிழப்பும் இன்றி சிறப்பாக நடந்து முடிந்துள்ளன. இதுபோல ஜல்லிக்கட்டை நடத்தி இந்த வீர விளையாட்டு அழியாமல் காக்கப்பட வேண்டும்'' என்றார் செல்வா.
thanks to http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Sunday%20Kondattam&artid=551413&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81!
0 c

 சோழர்கள் கடாரம் மீதும் இலங்கை மீதும் படையெடுக்கவில்லையா? 
இலங்கை மீது சோழர்கள் படையெடுத்தது வரலாறு. நமக்கெல்லாம் தெரியும். ஜாவா, சுமத்ரா ஆகிய நாடுகளுக்கும் படையெடுத்தார்கள் சோழர்கள். இலங்கையில் அனுராதபுரத்தை அவர்கள் தாக்கினார்கள். எந்தப் படையெடுப்பையும் போலவே அதுவும் அழிவைக் கொண்டு வந்தது. உதாரணமாக, அனுராதாபுரத்தில் சோழ வீர்ர்கள் அங்கிருந்த பௌத்த ஆலயங்களைத் தாக்கினார்கள். ஆனால் படையெடுப்புக்குப் பின்னர் ராஜராஜ சோழனின் நடத்தை எப்படி இருந்தது எனப் பார்க்க வேண்டும். திரிகோணமலை கல்வெட்டுச் செய்திகள், ராஜராஜ சோழன் ஒரு பௌத்த விகாரத்தையும் / மடாலயத்தையும் சீர் செய்து அதற்கு நிலத்தையும் செல்வத்தையும் அளித்த செய்தியைக் கூறுகின்றன. தாங்கள் கடல்கடந்து வென்ற சுமத்ராவின் சைலேந்திர குல அரசர்கள், நாகப்பட்டினத்தில் பௌத்த சூடாமணி விகாரத்தை நிறுவ நிலமும் ஆதரவும் அளித்தது ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும்தான். மேலும், அவர்களின் கடல்கடந்த சாம்ராஜ்ஜிய உருவாக்கம் வெறும் போர்களால் மட்டுமல்ல; உறுதியான வணிக – கலாசார உறவுகளால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த உறவினை நிலைநிறுத்த கோவில்களையும் பௌத்த விகாரங்களையும் சோழர்கள் கட்டினார்கள்.
அதாவது, சோழர்கள் கடல் கடந்து மதச்சூறையாடல்களைச் செய்யவில்லை. மாறாக, அவர்கள் உருவாக்கிய பண்பாட்டு உறவுகள் இருவழிப்பாதையாக இருந்தன. ராஜராஜ சோழன் தான் பவுத்தர்களைத் தண்டித்து சைவ மதத்தைப் பரப்பியதாக எந்த க் கல்வெட்டு ஆதாரமும் சொல்லவில்லை. ராஜ ராஜ சோழனோ, ராஜேந்திர சோழனோ ஒரு நாட்டின்மீது படையெடுத்தால் அங்குள்ள மக்களைக் கொன்று, தேவாலயங்களை – புத்த விகாரங்களை உடைத்ததாகத் தங்கள் மெய் கீர்த்திகளில் தங்களைப் புகழ்ந்துகொண்டது கிடையாது. தப்பித்தவறி அவர்களுடைய வீரர்கள் இம்மாதிரிச் செயல்களில் ஈடுபட்டால் அது அரசனுக்கு இழுக்காகக் கருதப்பட்டதே ஒழிய, பெருமையாக அல்ல.