0 c
மீண்டும் வருமா ? 
அந்த காலம் ?
---------------------------------------------
தமிழகத்தில் ஆடி பேருக்கு அன்று புதுமணத் தம்பதியர் தாலி பெருக்கி கொண்டாடுவார்கள் ....

காவிரி கரையோர சைவ , வைணவ தளங்களில் இருந்து தெய்வங்கள் காவிரியில் மக்களோடு மக்களாக தாங்களும் சேர்ந்து முழுக்காடுவார்கள் 

...
சோழ நாட்டு மக்கள் பெருக்கெடுத்தூடும் காவிரியை மலரிட்டு தூபம் தீபம் காட்டி வழிபடுவார்கள் ..
மீண்டும் வருமா ? அந்த காலம் ?..
---------------------------------------------
மன்னர்கள் காலமே தேவலாம் போல இருக்கு ...


அவனுங்க காலத்துல இதுமாதிரி செய்யும் போது
அணையை உடைச்சு தண்ணி கொண்டு வந்தானுங்க ...
---------------------------------------------------------------------------------------------
.70 வருடமாக வயித்தில அடிக்கிறாங்க ..
இப்ப ...என்ன செய்ய ?
----------------------------------------------------------------------------
காவிரி இல்லையேல் தமிழகத்துக்கு அருளாதாரமும் இல்லை ,பொருளாதாரமும் இல்லை -வாரியார்
--------------------------------------------------------------------------------
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்து
கருங்கயல் கண் விழித்தொல்கி
நடந்தாய் வாழி காவேரி - சிலப்பதிகாரம்
----------------------------------------------------------------------
இரு கரைகளிலும் வண்டுகள் இசை எழுப்புகின்றன.
பூக்களையே ஆடையாக அணிந்து புறப்பட்ட காவிரியே!
உன்னில் துள்ளுகின்ற கெண்டை மீன்கள்தான் உனது கண்களோ?
இடையை வளைத்து, நெளித்து நடைபோடும்
காவிரியே! நீ வாழ்க!


WWW.VAAA.IN

வெளிநாட்டு தாவரங்கள்

0 c
ஆகாயத்தாமரை,
நெய்வேலி காட்டாமணக்கு
தைலமரம் (யூகலிப்டஸ்)
பைன்
சீமைக்கருவேல

வெளிநாட்டு தாவரமான கார்ஸ் முள் செடி

நீலகிரி மாவட்டத்தில் எரிபொருள் தேவைக்காக கற்பூரம், சீகை, பைன் போன்ற வெளிநாட்டு மர வகைகளையும், உண்ணி, பார்த்தீனியம், லேண் டானா, கார்ஸ் முள் செடி, செஸ்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு தாவரங்களும் நடவு செய்யப்பட்டன.

தற்போது இவை சுமார் 15 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் வளர்ந்துள்ளன. இதனால், நீலகிரிக்கே உரித்தான தாவரங்கள் அழியத் துவங்கின. இவை நிலத்தடி நீர்மட்டத்தையும், மழை பொழிவையும் வெகுவாக பாதித்தன. மேலும் வெளிநாட்டு தாவரங்களான சீகை, கற்பூரம், உண்ணி போன்ற செடிகள் ஆக்கிரமித்ததால் விலங்குகளின் வாழ்விடம் சுருங்கின. புற்கள், செடி கொடிகள் வளர வழியில்லாமல் அழிந்து, விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் வன விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சூழலும் உருவானது.


சீகை மரங்கள், லேண்டானா
செஸ்ட்ரம் போன்ற அயல்நாட்டு தாவரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் புற்கள் வளர வழியின்றி, மான், காட்டெருமை, முயல் போன்ற விலங்குகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. தற்போது வனங்களில் ஆக்கிரமித்துள்ள அயல்நாட்டு தாவரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=417217


ஆகாயத்தாமரை

இத்தாவரம் மிகவும் வேகமாகவும் மற்றும் எத்தகைய மாசடைந்த நீர்நிலைகளிலும் வளரும் தன்மையுடையது. ஓர் ஏரியிலோ அல்லது குளத்திலோ உள்ள ஆகாயத்தாமரை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக வளரும் தன்மையுடையது. மேலும் இத்தாவரத்தின் விதை 30 வருடங்களுக்கு முளைக்கும் தன்மையைத் தக்கவைத்திருக்கும். இத்தகைய பண்புகள் இத்தாவரம் வேகமாக வளர்ந்து பரவுவதற்கும் மற்றும் அழியாமல் இருப்பதற்கும் காரணமாகும். தற்போது இது தாயகமான தென்னமெரிக்காவைத் தவிர மற்ற கண்டங்களிலும் மிக அதிகமாக வளர்ந்து உள்நாட்டு நீர் வளங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது.

தீமைகள்
குடிநீர் மற்றும் பாசனக் குழாய்களுக்குச் செல்லும் நீரின் அளவை இவற்றின் வேர்கள் மட்டுப்படுத்துவதால் நீர் இறைக்கும் நேரமும், செலவும் அதிகரிக்கிறது.
கோடையில் இலைகளின் வழியான நீராவிப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் நீரின் அளவு வெகுவிரைவில் குறையும்.
அடர்ந்த புதர்போலப் பரவியிருக்கும் இச்செடிகள் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால் அந்நீரில் வாழும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இறந்து மட்கும் இத்தாவரத்தால் நீரிலுள்ள ஆக்ஸிசன் போய் நீர் மாசடைவதுடன் தேங்கவும் செய்கிறது.
நீர் மற்றும் நீர்-நிலவாழ் உயிர்களின் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு இச்செடிகள் பெரிய இடையூறுதான்.
இச்செடிகளினூடே நீர் அருந்துவது கால்நடைகளுக்கு பெரிய பிரச்சனை; சிலசமயம் அவை அவற்றில் மாட்டிக்கொண்டு மூழ்கிவிடும் அபாயமும் இருக்கிறது.
கொசுக்கள் உற்பத்தி மற்றும் அதன் இனப்பெருக்கத்திற்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கின்றது.
வெள்ளக் காலங்களில் இவற்றால் சேதம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
பெரும் பரப்பில் வியாபித்திருக்கும் இச்செடிகள் படகுப் போக்குவரத்து, மீன் பிடிப்பு போன்றவற்றைப் பெரிதும் பாதிக்கிறது.
மேலும், நீர்வெளியின் இயற்கையான அழகை மாற்றுவதுடன் அப்பகுதிவாழ் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளை வேற்றிடம் தேடிச்செல்லச் செய்கிறது.


தைலமரம் (யூகலிப்டஸ்)
   குரங்கு, காட்டுப்பன்றி, நரி, பாம்பு, காட்டு ஆடு, மான், முள்ளம்பன்றி, எலி, பூச்சிகள், யானை போன்ற வனவிலங்குகளுக்கு தைல மரக்காடுகள் உகந்தது அல்ல. தைல மரங்களுக்கு இடையே நட்ட ஏலத்திலிருந்து சூரக்கூடி பகுதியில் எக்டருக்கு 400 கிலோ வரை ஏலக்காய் விளைச்சல் கிடைத்துள்ளது. இதற்கு முன் இந்த பகுதி வெறும் புல்தரையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.agriinfomedia.com/profiles/blogs/4679593:BlogPost:26970
 சுற்றுச் சூழலை மாற்றுவதற்கென்றே வெள்ளையர்கள் முதலில் ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வந்து அறிமுகப்படுத்தியது யூக்கலிப்டஸ் என்ற தைலமரம். நீலகிரி மலைப்பகுதியில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியபோது மலைப்பகுதிகளில் பல இடங்கள் சொதசொதப்பாக இருந்தன. இந்த ஈரப்பதத்தை நீக்க, தைல மரங்களை ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வந்து நட்டு தேயிலை தோட்டங்களுக்கு பாதுகாப்பாக மாற்றினர். இதனையடுத்து மிகக்குறுகிய காலத்திற்குள் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை முதலிய பகுதிகளில் இவை வனத்துறையின் உதவியால் பயிரிடப்பட்டது. நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதாலும், மழையளவு குறைவதாலும் விவசாயிகள் மத்தியில் இம்மரங்களுக்கு எதிராகச் கொந்தளிப்பும், எதிர்ப்பும் கிளம்பிதயது. இதனால் தைலமரங்களைப் பயிரிடுவதில்லை என்று அரசு அறிவித்தது. ஆனால் இது வெறும் அறிவிப்பு மட்டும்தான். சுமார் 40 வருடமாக கொடைக்கானல், நீலகிரி, பாபநாசம், மணிமுத்தாறு போன்ற மலைப்பகுதிகளில் தொடர்ந்து இம்மரங்கள் பயிரிடப்படுகிறது. தைலமரத்தின் எந்த பகுதியும் கால்நடைகளுக்கு பயன்படாது. அதன் இலைகள் மக்கி மண்ணுக்கு உரமாவதற்கும் நீண்டகாலமாகும். இத்தைலமரத்தின் அருகில் எந்த வகை செடி கொடிகளும் வளருவதில்லை. இதனால் பலவகை செடி கொடிகளும், பல்வேறு வகை மரங்களும் தைலமரங்களுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அழிந்து போனது. உலக எரிபொருள் தேவை அதிகரிக்கும் என்பதால் ஐக்கிய நாடுகள் சபை சில மரவகைகளை வளர்க்க சிபாரிசு செய்தது, அப்பட்டியலில் தைலமரம் இடம் பெறவில்லை. 1940ம் ஆண்டுகளில் வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய தாவரங்கள் ஆகாயத்தாமரை, நெய்வேலி காட்டாமணக்கு தொடர்ந்து நிலத்தை நாசமாக்கி வருகின்றன. இதேபோல தென்அமெரிக்க சீமைக்கருவேல மரத்தின் ஆக்கிரமிப்பு விவசாயிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இத்தாவரங்கள் நாட்டில் பரவிய வேகத்தைப் போலவே யூக்ளிப்டஸ் மரங்களும் பரவிவருகிறது. இப்படி பல மரங்களை வெளிநாட்டினர் தமிழகத்தில் நட்டு நம்முடைய நீர்ஆதாரத்தை அலித்துவிட்டனர். இதனை தற்போது உள்ள அரசு புரிந்து கொண்டு நீர்ஆதாரத்தை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து இந்திய விவசாய சங்க மாநில செயலாளர் தனபதி கூறியதாவது: தைலமரங்கள் நிலத்தடி நீர், காற்றின் ஈரப்பதங்களை உறிஞ்சி வாழக்கூடியது. இது நீர் ஆதாரம் அதிகம் உள்ள பகுதிகளில் பயிரிடப்படக்கூடி ஒன்று. தைலமரத்தின் தன்மையை அறிந்த சீனா ஒரு தைலமரங்களை கூட தனது நாட்டில் நடவில்லை. வறட்சி மிகுந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் அரசு 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் தைலரமரங்களை வளர்த்து வருகிறது. இது முற்றிலும் விவசாயத்திற்கு எதிரானது. காகிதம் தயாரிக்க தைலமரங்கள் பயன்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர். தற்போது மூங்கில், சவுக்கு போன்ற மரங்களில்கூட காகிதம் தயாரிக்கப்படுகிறது. எனவே தைலமரங்களை ஊக்குவிப்பது நல்லதல்ல. புதுக்கோட்டையில் ஏற்படும் தொடர் வறட்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசு தைலமரங்களை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றார். போராட்ட எச்சரிக்கை இதுகுறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது: தைலமரங்கள் முற்றும் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் எதிரானது. பூமியில் நஞ்சை ஏற்படுத்தும் தைலமரங்கள் தமிழகத்திற்கு தேவையற்ற தாவரம். புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தைலமரங்கள் பயிரிப்பட்டுள்ளது. தைலமரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் சிறியமழை பெய்தாலும் அந்த

நீர்ஆதாரத்தை அழிக்கும் தைலமரம்
ஈரப்பதத்தை தைலமரங்கள் உறிஞ்சிவிடுகிறது. இதனால் நிலத்தடி நீர் வருடாவருடம் குறைந்துகொண்டே உள்ளது. இதனை தடுக்க தைலமர கன்றுகளை உற்பத்தி செய்ய கூடாது என்று மாவட்ட கலெக்டர் வனத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கலெக்டர் உத்தரவு பிறப்பிக்காவிட்டால் எங்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்துவோம். தைலமரங்ளால் அரசுக்கு எந்தவித லாபமும் இல்லை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை தடுக்க தைலமரக் கன்றுகளை உற்பத்தி செய்வதை நிறுத்தி பல ஏக்கரில் உள்ள மரங்களை முற்றிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
http://m.dailyhunt.in/news/india/tamil/dinakaran-epaper-karan/neeraatharathai+azhikkum+tailamaram-newsid-54911535


காடுகளில் சத்தமில்லாமல் ஊடுருவிய பசுமை பாலைவனம்: வனவிலங்குகள் இடம் பெயர்வு மற்றும் மரணத்துக்கு இதுவே காரணம்
தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வனப் பகுதியில் சத்தம் இல்லாமல் வேட்டில், பைன் மற்றும் தைலமரம் உள்ளிட்ட பசுமை பாலைவனம் அதிகரித்து சோலைக்காடுகள் அழிவதால் யானை, காட்டு மாடுகள், புள்ளிமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் இடம் பெயர்வதாகவும், அதிக அளவு இயற்கை மரணம் நிகழ்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த குழு அமைத்து தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி காடுகளில், சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயர்கள், காகித ஆலைகளில் காகிதம் தயாரிக்கவும் வேட்டில், பைன் மற்றும் தைலமரம் உள்ளிட்ட செயற்கைக் காடுகளை வளர்த்து, ஆண்டுக்கு ஒருமுறை இந்த மரங்களை வெட்டி பயன்படுத்தினர். சுதந்திரத்துக்குப் பின்னரும், தமிழக வனத்துறை இந்த மரங்களை 2006-ம் ஆண்டு வரை வெட்டி அப்புறப்படுத்த டெண்டர் விட்டு வந்தது.

அதன்பின், இந்த மரங்கள் வெட்டப்படாமல் விடப்பட்டதால், இயற்கையான சோலைக் காடுகளை அழிக்கும் அளவுக்கு தற்போது இந்த பைன், வேட்டில், தைலமரங்கள் அடர்ந்து வளர்ந்துவிட்டன.

18 ஆயிரம் ஹெக்டேரில் பரவிய பசுமை பாலைவனம்

கொடைக்கானல் பகுதியில் 40 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது. இதில் 18 ஆயிரம் ஹெக்டேர் பைன், வேட்டில் மற்றும் தைலமரங்கள் அடர்ந்து சோலைக்காடுகளை ஆக்கிரமித்துள்ளன.

நிலத்தடி நீர் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும், இந்த வகை மரங்கள் தண்ணீரை உறிஞ்சி விரைவாக வளரக் கூடியவை. அதனால், நிலத்தடி நீர் ஆதாரமும் வறண்டு அப்பகுதியில் மற்ற தாவரங்கள், மரங்கள் வளராத சூழல் ஏற்படும். மழைப்பொழிவும் குறைந்துவிடும். அதனால், புல்வெளிகள் அழிந்து வறட்சி ஏற்பட்டு தண்ணீர், உணவு கிடைக்காமல் வனவிலங்குகள் அதிக அளவு இயற்கை மரணம் அடைகின்றன. அடிக்கடி காடுகளை விட்டு இடம்பெயரவும் செய்தன.

கொடைக்கானலில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 30 காட்டு மாடுகள் இயற்கை மரணம் அடைந்துள்ளன. இந்நிலையில் சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம், தமிழக காடுகளில் உள்ள தைலமரம், பைன் மற்றும் வேட்டில் உள்ளிட்ட செயற்கை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த, சமீபத்தில் தமிழக வனத்துறைக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், வனவிலங்குகள் வெளியேறுவதை உடனே தடுக்க வேண்டும், தைலமரம், பைன், வேட்டில் உள்ளிட்ட செயற்கைக் காடுகளை அழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாதந்தோறும் அறிக்கை தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வனப் பகுதியில் இருந்து வெளியேறி உணவைத் தேடி மலையடிவார கிராமங்களில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்.

கொடைக்கானல் வனப்பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள பைன், வேட்டில், தைல மரங்கள்.

பசுமை பாலைவனத்தை அழிக்க குழு அமைப்பு

மதுரை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கொடைக்கானல், நீலகிரி, தேனி, முண்டந்துறை, களக்காடு மற்றும் ஆனைமலையில் பைன், தைல மரம், வேட்டில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த திண்டுக்கல், கொடைக்கானல், ஊட்டி மாவட்ட வன அலுவலர்கள் திண்டுக்கல் மற்றும் ஊட்டி மண்டல வனப் பாதுகாவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறும்போது, “தைலம், பைன், வேட்டில் மரங்களை பசுமை பாலைவனம் என்றே கூறலாம். இந்த பசுமை பாலவனம் எந்தளவுக்கு காடுகளில் ஊடுருவியுள்ளது, இவற்றால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பிரச்சினை, இம்மரங்களை வெட்டி அப்புறப்படுத்த எவ்வளவு நாள் ஆகும், வெட்டியபின் அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். கொடைக்கானல் வனப் பகுதியில் உள்ள பைன், வேட்டில், தைல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் ஆகும். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
http://m.tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6129229.ece


கள்வன் கள்ளன் வேறு வேறா ?

0 c
கள்வன் வேறு என்றும் கள்ளன் வேறு என்றும், கள்ளர் என்ற சொல் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் இல்லை என்றும், இப்பொழுது அழைக்கப்படும் கள்ளன் என்ற சொல் திருடனை மட்டுமே குறிப்பதாகவும் சில தற்குறிகள் பரப்புரை செய்கிறார்கள்.
போர்க்குடியில் பிறந்தவர்களுக்கும், முத்தமிழையும் கற்றுணர்ந்த அறிஞர்களுக்கு மட்டுமே தெரியும் கடந்த நூற்றாண்டு முன்பு வரை களவு என்பது போரின் ஒரு முறை, அது ஒரு திணை.
புறத்திணையை 7 வகையாகத் தொல்காப்பியமும், 12 வகையாகப் புறப்பொருள் வெண்பாமாலையும் தொகுத்துக் காட்டுகின்றன. அவற்றுள் ஒன்று வெட்சித் திணையாகும். ஒரு நாட்டின் வீரர் தன் அரசன் ஆணைப்படி சென்று பகை நாட்டினரின் பசுக்கூட்டங்களை (ஆ நிரைகளை) கவர்ந்து வந்து காத்தல் இத்திணையாகும்
புறத்திணைகளுள் வெட்சிக்கு அடுத்து வைக்கப்படுவது, வெட்சிக்கு எதிரான அல்லது மாறான, கரந்தைத் திணையாகும். பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆ நிரைகளை மீட்டுவருவதே இத்திணையாகும்.
"வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பல் மேவற் றாகும்"
எட்டாம் நூற்றாண்டுக்கு பின் கள்வன் என்ற சொல் கள்ளன், கள்வன் என்று குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துகளும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் தன் வடிவத்திலும் மாற்றம் கொண்டது. (“ஒரு மொழி 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிடத்தக்க மாற்றம் அடைகிறது”)
எட்டாம் நூற்றாண்டுக்கு முன் :
* கள்வர் கோமான் புல்லி
(வேங்கடத்தை ஆட்சி செய்த கள்வர் தலைவன் புல்லி )
* கள்வர் பெருமகன்
(கள்வர் பெருமகன் சங்ககாலப் பாண்டிய நாட்டில் ஒரு நிலப்பகுதியை ஆண்ட ஒரு குறுநில மன்னன். இவன் வெட்சிப் போர் பல புரிந்தவன் எனத் தெரிகிறது)
* ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்
(இதனை இறுதியில் காணலாம்)
எட்டாம் நூற்றாண்டில் இருந்து :
1) கல்வெட்டுகளில் கள்வ, கள்ள என்றும் மேலும் கள்ளதிருமங்கையாழ்வார் மற்றும் ஸ்ரீ கள்ள சோழன், ஸ்ரீ கள்வன் ராஜராஜன் என்றும் உள்ளது (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது)
2) திருமங்கையாழ்வார் பாடலில்
" வள்ளலே உன்றமர்க் கென்றும் நமன்றமர்
கள்ளர்போல் கண்ண புரத்துறை யம்மானே."
(திவ். பெரியதி. 8, 10, 7). திருமங்கையாழ்வார் - 8 ஆம் நூற்றாண்டு
மேலும் சைவ சித்தாந்த அகராதியில் கள்ளர், கள்வர் என்பது இறைவனை குறித்து நிற்கின்றது.
கள்ளர், கள்வன் - இறைவன். எ-டு கள்வன் தான் உள்ளத்திற் காண் (சிபோ பா 55) இறை வனைக் கள்வன் எனக்கூறுவது சமய மரபு. - கள்ளர் புகுந்த இல்லம் - ஆன்மாவின் அறிவு. ( சைவ சித்தாந்த அகராதி)
மேலும் தமிழில் மருவிய சொற்கள்:
* கல்வெட்டுகளில் காணப்படும் “மதிரை” மருதையாகி இன்று “மதுரை”யாக மாறியுள்ளது.
* குறிஞ்சி என்னும் சொல்லே மருவிக் குருச்சிஆயிற்று.
* குசவன் -> குயவன்
குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக் - உரை: மட்கலத்தை வனைகின்ற குயவன் (திருமுறை)
* பழந்தமிழில் 'நேற்று' என்பதைக் குறிக்க 'நெருநல்' மற்றும் அதன் திரிபாகிய 'நென்னல்' ஆகியவைப் பயன்படுத்தப்பட்டுள்ளன. (குறள்: "நெருநல் உளனொருவன் இன்றில்லை.." - நேற்று இருந்தவன் இன்றில்லை).
* மரித்தல் => மரணம்
(அரயன் உடையான் மரித்தமையில்)
* சாதல் -> சாவு
சாதலின் இன்னாத தில்லை இனிததுஉம் ... கலைஞர் உரை: சாவு எனும் துன்பத்தைவிட
பெயர் மருவிய ஊர்கள்:
* தன்செய்யூர் --> தஞ்சாவூர் --> தஞ்சை
(கள்ளர் குல சோழர்கள் தலைநகராக கொண்டு ஆட்சி செய்த பகுதி)
* திருமெய்யம் --> திருமயம்
(கள்ளர் குல தொண்டைமான் தலைநகராக கொண்டு ஆட்சி செய்த பகுதி)
* ஆருக் காடு --> ஆற்காடு
 * ஈரோடை --> ஈரோடு
* உகுநீர்க்கல்--> ஒகேநக்கல்
* மகிசூர் --> மைசூர்
* ஏரிக்காடு --> ஏற்காடு
* ஒத்தை கால் மண்டபம் --> உதகமண்டலம் --> ஊட்டி
* கசத்தியாறு --> கயத்தாறு
* கரவூர் -- கரூர்
 * குடமூக்கு -- கும்பகோணம்
* குன்றூர் - குன்னூர்
* குளிர் தண்டலை - குளித்தலை
* குவளாலபுரம் - கோலார்(தங்க வயல்)
* கோவை - கோயமுத்தூர்
* செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு
* சேரலம் - சேலம்
* சோளிங்கர் - சோழலிங்கபுரம்
* தகடூர் - தருமபுரி
 * தர்மபுரம் - தாம்பரம்
* திண்டீஸ்வரம் - திண்டுக்கல்
 * திருச்சுரம் - திரிசூலம்
* பல்லவன் தாங்கல் - பழவந்தாங்கல்
* ராஜராஜேஸ்வரம் - தாராசுரம்
* வென்க‌ல்லூர் - பெங்களூர்
* வெற்றிலைக்குன்று - வத்தலக்குண்டு
"பெரையூர் நாட்டு பனையூர் அரையன்(அரசன்) கள்வன்"
கள்ளர் குல பட்டங்களில் "வங்காரம்" என்ற பட்டம் பேரையூர் எனும் ஊர்களை உருவாக்கி அரசாண்டவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டமாகும். மேலும் பேரையூர்
சிவ தலத்தை உருவாக்கியதும் கள்ளர் தான். ஆக இதன் மூலம் "கள்வர்" என்பதுதான் பின்னாலில் கள்ளராக திரிந்துள்ளது என உறுதியாகின்றது.
குறிப்புகள் :
காவிரிகிழவன் கிள்ளிவளவன் புறநானூறு பாடலில், "அறவர் அறவன் மறவர் மறவன் மள்ளர் மள்ளன்" என பாடியுள்ளனர். இதற்க்கு பொருள் அந்தனரில் தலைசிறந்தவன் மறவரை போல போரில் சிறந்தவன் மள்ளரை போல உழவில் சிறந்தவன்.
* ஸ்ரீ கள்வர் கள்வன் - களப்பிரரை வென்ற கள்வன் தலைவன் (அ) கள்வர்களில் தலை சிறந்தவன்
* இராஜராஜன் - அரசர்களில் தலைசிறந்தவன்
* மாமன்னன் - மன்னர்களில் தலை சிறந்தவன் என்று தான் பொருள்.
* கள்ளர் (கள்வர்) என்ற இனத்தவர் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழும் ஆதி தமிழ் இனம் மேலும் சென்ற நூற்றாண்டு வரை போர் குடிகளாக இருந்தவர்களும் (முக்குலத்தோர் ) இவர்களே. (இன்றும் சொந்த பெயரில் வரலாறு தேடும் ஒரே இனம் முக்குலத்தோர் மட்டுமே மற்றவர்கள். ......)
* சம்ஸ்கிருத்ததில் "காளா" என்பது கரிய நிறம் என்பதும் "காளி என்பவள் கரிய நிறமுடைய கன்னனின் தங்கை என்பது . காளி தேவிக்கு 'கிருஷ்ன பிங்கலா' என்றொரு பெயர் உண்டு அதற்கு கரிய நிறத்துடையவள் என்று பொருள்.
கண்ணனும் கள்ளனும் கருப்பனும் கிருஷ்னனும் யாதும் ஒரே பொருளையுடைய பல பெயர்களே.
கன்னனை கோவல மைந்தன் என கூறுகின்றது. இதன் அர்த்தம் 'கோவலர்' என்னும் இம்மன்னையுடைய பூர்வ முல்லை நில குடியினை குறிக்கும் வார்த்தையாகும்.
இந்த கோவலர்------>கோளவர்------>களவர்----->கள்ளர்குடி ஆயினர்.
இப்படி தமிழ் நாடெங்கும் கோவில் கொண்ட முல்லை நிலத்து மாதவன் மதுரை அழகர் கோவிலில் "கள்ளழகன்" என்றும் திருவைகுண்டத்தில் "கள்ளர்பிரானாகவும்" கேரள ஆலப்புழாவில் "கள்ளர்பெருமானாகவும்" திருப்பதியில் "கள்ளர் கோமானாகவும் கோவில் கொண்டுள்ளான்
thanks to 

பெருங்காமநல்லூர் வீர கள்ளச்சி "மாயக்காள்" மற்றும் வீர கள்ளர்களும்

0 c
பரதகண்டத்திலேயே ராஜேந்திர சோழன் ஒருவன்தான் தடுத்து போர் செய்யாது, மற்றவரை அடித்து அடித்து போர் செய்தவன். அவன் வழி வந்த பிறமலைக்கள்ளர்கள் கொடிய குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து ஆங்கிலேயனை தடுத்து போர் செய்யாது அடித்து பெருங்காமநல்லூரில் போர் (கலகம்) செய்தனர் (தமிழ்நாட்டில் மட்டும் 90 சாதியினர் மீது இச்சட்டம் பாய்ந்தது ஆனால் இதை எதிர்த்து நின்ற ஒரே இனம் முக்குலத்தோர் மட்டுமே ). கள்ளர் நாட்டு ஊர்ப் பெரியவர்கள் கூடி, ரேகை வைக்கக் கூடாது என்றும், இச்சட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்வதைக் கடுமையாக எதிர்ப்பது என்றும் முடிவு செய்தனர். அதற்காக ரேகை எதிர்ப்புக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.
ரேகைப் பதிவிற்கு யாரும் ஒப்புக்கொள்ளக் கூடாது என்று ஊர் ஊருக்கு ஓலை விட்டார்கள். இந்தச் சட்டத்தை நிறுத்தி வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு மனு எழுதி அனுப்பி வைத்தனர்.
ஆனால் 1920 ஏப்ரல் 2ஆம் நாள் இரவே சிந்துபட்டி காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் படை வந்து குவிந்து விட்டது. ஏப்ரல் 3ஆம் நாள் அதிகாலையில் போலீஸ் படை ஊருக்குள் நுழைந்தது.
வட்டாட்சியரும் நீதிபதியும் போலீஸ் அதிகாரிகளும் வந்திருந்தார்கள். மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. ஏறத்தாழ 3000 க்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம். எங்கும் ஒரே ஆரவாரம். கட்டுக்கடங்காத நிலை.
அதிகாரிகள் கலக்கம் அடைந்தனர். கல், கம்பு, கத்தி, ஈட்டி, வில் அம்பு, வளைதடி போன்ற ஆயுதங்களோடு மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. அதிகாரிகள் ரேகைப் பதிவிற்கு ஒத்துழைப்புக் கேட்டனர். அதனை ஏற்காத மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆத்திரம் அடைந்த அதிகாரிகள் மக்களைத் தாக்க ஆரம்பித்தனர். கூட்டத்திலே விட்டி பெருமாள்தேவன் போலீஸ் அதிகாரிகளை நோக்கி, "அடாத காரியம் செய்து மக்களை அடிமைப்படுத்த வந்த பயல்களே, மரியாதையா ஊரை விட்டு போய் விடுங்கள், இல்லையென்றால் ஒங்களை வெட்டி காத்தாண்டம்மனுக்கு பலி கொடுத்து விடுவோம்” என்று எச்சரித்தார்.
கள்ளர் கூட்டத்திலே “ஓவாயன்” என்பவரும் இருந்தார். அவர் கைகளைப் பின்னால் கட்டியிருந்தார். இரண்டு கைகளில் ஒரு கையில் கேழ்வரகு ரொட்டி இருந்தது. மறுகையிலே கல் இருந்தது.
அதிகாரிகளை நோக்கி, "சமாதானம் என்றால் இதோ இந்த ரொட்டியை உனக்குத் தருவேன், சமாதானம் இல்லையென்றால் இந்தக் கல்லைக் கொண்டு உன்னுடைய மண்டையைப் பிளந்து விடுவேன்” என்று எச்சரித்தார்.
ஓவாயனைப் போல், விட்டி பெருமாத் தேவரைப் போல் மக்களனைவரும் ஓன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட ஆரம்பித்தனர். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போய் விட்டது. உதவி தாசில்தார் ஜான் அன்பு நாடார் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டான்.
சம்பவ இடத்திலேயே 11 பேர் கொல்லப்பட்டனர். சண்டையிட்டவர்களுக்குத் பயம் இல்லாமல் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்த வீர கள்ளச்சி மாயக்காள் என்ற பெண்ணும் சுட்டு வீழ்த்தப்பட்டார். அவரைச் சுட்டதுமில்லாமல் துப்பாக்கியினாலும் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தனர். படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் இறந்தனர். மொத்தம் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பெருங்காமநல்லூர் கிராமம். போர்க்களத்தில் ஆயுதமேந்தி எதிரியுடன் போராடி வீரமரணம் அடைந்த மாவீரர்களின் உயிர்த்தியாகத்தைப் போற்றும்வகையில் அவர்களுக்கு ‘நடுகல்’ நட்டு, ஆண்டுதோறும் வீரவணக்கம் செலுத்துவது பழந்தமிழர் மரபு. அத்தகைய ‘நடுகல்’ ஒன்று பெருங்காமநல்லூரில் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. பெருங்காமநல்லூரில் பலியானவர்கள் தன்மானம் காத்த வீரர்கள். ஒரு கொள்கைக்காக நேருக்கு நேர் இறுதிவரை உறுதியாகப் போராடி வீரமரணத்தைத் தழுவியவர்கள். உச்சியில் தீச்சுடருடன்கூடிய கருந்தூணாய் உயர்ந்தோங்கி நிற்கும் அந்த ‘நடுகல்’லுக்கு அவ்வூர் மக்கள் தவறாமல் ஆண்டுதோறும் ஏப்ரல் 3ஆம் தேதி பொங்கல் வைத்து வீரவணக்கம் செலுத்தி வருகிறார்கள்.
குறிப்புகள் : 1764 ஆம் ஆண்டு ஆங்கிலேய கேப்டன் ரூம்லே வரி கட்ட மறுத்த வெள்ளளூர் நாட்டை சேர்ந்த 5000 கள்ளர்களை இனபடுக்கொலை செய்த வரலாறும் உண்டு.

சூரிய" குலம் "இராசேந்திர" குலமாகி இறுதியில் "இந்திர" குலமாகிய வரலாறு.

21 c
சங்ககால தமிழ்ச் சமூகத்தில் அரச குடியினர் குல முன்னோராக இந்திரன் தலைமைப் பதவியைக் குறித்து நிற்கின்றது.
தமிழரசர்களின் குல வழக்கு சங்ககால இலக்கியங்களில் இல்லை. ஆனால் காப்பியக்காலம் முதல் சூரிய, சந்திர, சந்திராதித்ய, பாரத்வாஜ, கங்கை, இந்திர குலமென்றும் கூறிக் கொண்டனர்.
இதில் சோழ மன்னர்கள் மற்றும் சேதுபதி மன்னர்கள் தங்களை சூரிய குலமென்று கூறியுள்ளனர்.
1) இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராச ராச சோழன் மகனாகிய இராசேந்திர சோழன் காலத்தில் சூரியகுலம் என்ற பெயர் மாற்றம் அடைந்து இராசேந்திர குலம் என்று அழைக்கப்பட்டது.
13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் கீழ் சோழர்கள் சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர் அதன் பிறகு 14 ஆம் நூற்றாண்டில் வடுகர் படையெடுப்பின் போது இராசேந்திர சோழனின் வம்சத்தில் தோன்றிய கோனேரி மேல்கொண்டான் (கோனேரிராசன்) கி.பி 1377 விஜய சாம்ராஜய அதிபதியான ஹரிஹரர்-2 அவர்களின் இரண்டாவது மகனான கருநட தேசத்தரனாகிய விருப்பன்ன உடையார் என்பானுடன் போர் செய்து தோல்வியுற்று நாடும் இழந்தான்.
இவன் தன் பரிவாரங்களுடன் இராசாளிவிடுதி,
பன்னிகொண்டான்விடுதி, உஞ்சிவிடுதி, சென்னிவிடுதி, சிறுவாவிடுதி போன்ற இடங்களில் மறைந்து வாழ்ந்தான். இக்கால கட்டத்தில் இராசேந்திர குலத்தவரென்று சொல்வத்ற்கு அஞ்சி இராசு என்ற பதத்தை மறைத்து இந்திரகுலத்தவரென்று மாற்றிக்கொள்ளுமளவுக்கு கள்ளர்கள் உந்தப்பட்டனர்.
சூரியகுலம் இராசேந்திர குலமாகி முதற்குறை பெற்று இறுதியில் இந்திரகுலமாகிய வராலாறு இதுவாகும். (சூரியகுல கள்ளர் சரித்திரம் பக்கம் 213)
2) சோழர்களில் இந்திரனின் பெயரை கொண்டவர்கள் (இராசேந்திரனும் அவன் மகன்களின் பெயர்களும் இந்திரன் பெயரையே தாங்கி நிற்கின்றன)
* ஆதிராசேந்திரசோழன் (தொன்மச் சோழர்)
* இரண்டாம் ஆதித்த பார்த்திவேந்திர கரிகாலன் (956 - 969)
* முதலாம் இராசேந்திர சோழன் (1012-1044)
* இராஜாதிராஜ சோழன் (பூபேந்திரச் சோழன்)(1012-1044)
* இரண்டாம் இராசேந்திர சோழன் : (1051-1063)
* இராஜ மகேந்திர சோழன் : கி.பி (1052-1064)
* வீர ராசேந்திர சோழன் ( 1063–1070)
* அதி ராசேந்திர சோழன் ( 1070)
* குலோத்துங்க சோழன் ( இயற்பெயர் இராசேந்திரன்) : கி.பி.1070-1120
* குலோத்துங்க சோழனின் முதல் மகனாகிய இளவரசன் ராஜேந்திர சோழன். அவரது படைத் தளபதி சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான்.
* மூன்றாம் ராசேந்திர சோழன் (1246 - 1279)
மேலும் சோழர்கள் போற்றி வழிபட்ட இந்திர தேவர் (தேவர் + வேந்தன் + இந்திரன் = தேவேந்திரன்).
சூரிய குலத்தில் தோன்றிய சோழர்கள் இந்திரனை போற்றி வழிபட்டு, விழா எடுத்து சிறப்பித்தனர்.
3) வேதங்களில் மூன்று இந்திரர்கள் உள்ளனர்.
அவர்களுள் இரண்டு இந்திரர்கள் தமிழர்கள்; ஒருவர் கிருஷ்ணர் எனப்பட்ட கரவேல், மற்றொருவர் திருமால் எனப்பட்ட செம்பியன் கரிகால்சோழன். முதல் இந்திரனே அந்நிய நாட்டவன். இவனுக்கும் ஒரு இந்தியத் தமிழ்ப்பெண்ணுக்கும் பிறந்தவனாலேயே இந்த அந்நிய இந்திரன் அடக்கி ஒடுக்கப்பட்டான். அப்படி அடக்கி ஒடுக்கியவனே செவ்வாய் எனப்பட்ட செங்குட்டுவன்.
4) முசுகுந்தன் என்று பெயரையுடைய சோழ மன்னன் கருவூரில் இருந்து அரசாண்டவன். இவன் காலத்தில் கருவூர் சோணாட்டிற் சேர்ந்திருந்தது போலும்! இவன் இந்திரன் என்னும் பேரரசன் ஒருவற்குப் போரில் உதவி செய்து, அவனது நன் மதிப்பைப் பெற்றான்.
இவன் சிறந்த சிவபக்தன். இவன் இந்திரன் பூசித்து வந்த சிவலிங்கம் உட்பட ஏழு லிங்கங்களை இந்திரன் பால் பெற்று மீண்டான்; அவற்றைத் திருவாரூர், திருநாகைக் காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய ஏழு திருப்பதிகளிலும் எழுந்தருளச் செய்தான். ஆதலின் இந்த ஏழு பதிகளும் ‘சப்த விடங்கத் தலம்’ எனப்படுகின்றன
5) குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற பிற்காலச் சோழ மன்னன் ஒருவனைப் பாடிய மாறோக்கத்து நப்பசலையர் என்ற பெண்பாற் புலவர்,
“....................... சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்தநின் ஊங்கனோர் நினைப்பின்
அடுதல்நின் புகழும் அன்றே”
‘இச்சோழனே அகத்திய முனிவரது கட்டளையால் காவிரிப்பூம் பட்டணத்தில் முதன்முதல் இந்திரனுக்கு விழாச் செய்தான்; அவ்விழாக் காலமாகிய 28 நாள்களிலும் தன் நகரில் வந்து உறையுமாறு இந்திரனை வேண்டினன்; இந்திரன் அதற்கு இசைந்தான்’ என்று மணிமேகலை குறித்துள்ளது.
இவன் துரங்கெயில் எறிந்த செயலைப் புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சிறுபாண் ஆற்றுப்படை, பழமொழி, கலிங்கத்துப்பரணி, மூவர் உலா முதலிய நூல்கள் குறித்துள்ளன.
“தூங்கெயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாட நல்லிகை நற்றேர்ச் செம்பியன்.”
6) தஞ்சைப்பெரிய கோயிலில், ராஜராஜ சோழன் வடதிசையில் இந்திரனுக்கு சன்னதியும் அமைத்துள்ளார்.
"செந்திரு மடந்தை மண் சீராசராசன்
இந்திரசமானன் இராச சாவஞ்ஞன்"
என்று திருக்கோயிலூர்க் கல்வெட்டு அவனைப் புகழ்ந்து பேசுகிறது.
செந்திருமடந்தை - செந்தாமரை பூவில் அமர்ந்த திருமகள் போன்ற மண்ணின் சீர் மிகு ராசராசன், இந்திரனுக்கு சமமானவன், மன்னர்களுக்குரித்த சகல வேள்விகளை அறிந்த அறிஞன். (ராச சாவஞ்ஞன் =ராஜ சர் வக்ஞன்) வக்ஞன் - வேள்விக்கலை அறிந்த நிபுணன்.
7) சோழப் பேரரசன் முதலாம் குலோத்துங்க சோழனின் (1070-1120) பிறப்பு குறித்து ஜெயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில்­ பாடியது
" அவனியார்க்குப் புரந்தரனா மடையாளம் அவயொத்தி னடைவே நோக்கி
இவனெமக்கு மகனாகி யிரவிகுலம் பாரிக்கத் தகுவ வென்றே"
அரசர்களுள் இந்திரனைப் போன்று சோழ மன்னர்கள் வரிசையில் இவனும் அக்குல மேன்மைக்கு காரணமாயிருப்பான்.
அவனிபர் - அரசன்
புரந்தரன் - இந்திரன்
பாரிக்க - வளர்க்க
"சுராதி ராசன் முதலாகவரு சோழன்" எனக் கலிங்கத்துப் பரணி கூறுகின்றது.
8) பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்துமாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழத்தின் மீது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதேசம் வந்தான். ஈழ அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி ஈழ தேசத்து சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.
9) குமரிமாவட்டத்தின் பிரம்மாண்டமான கோயில்களில் ஒன்று சுசீந்திரம். ஸ்ரீ இந்திரன் என்ற பெயரே பழந்தமிழில் சிவிந்திரம் என்று மருவியது என்பது ஆய்வாளர் கருத்து. கிபி 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இந்த ஊரை ‘ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு நாஞ்சில்நாட்டு பிரம்மதேயம் சுசீந்திரமான சுந்தர சதுர்வேதி மங்கலம்‘ என்று சொல்கிறது.
" ஸ்ரீ இந்திரன் பிரம்மதேய கிராமம்" அதாவது மன்னர்களால் வேதம் பயின்ற பிராமணர்களுக்கு நிலமும் கிராமமும் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் இது.
10) திருவருட்பாவில் அரசர் (தேவர்) குலம் என்பது இந்திர குலம் என்ற பாடல்
"கோடா வொற்றி யுடையீர்நுங் குலந்தான் யாதோ கூறமென்றேன் வீடார் பிரம குலந்தேவர் வேந்தர் குலநல் வினைவசியப் பாடார் குலமோர்"
உரை:
ஏடீ, சேடி; வளமை மாறாத திருவொற்றியூரை யுடையவரே, உமது குலம் யாது கூறுமின் என்று கேட்டேனாக, மலர் சூடிய கூந்தலையுடையவளே, வீடடைதற்குரிய அறிவையுடைய எமது குலம், பிரம குலம், தேவர் (வேந்தர்) குலம், நல்வினை வசியர் குலம், உரைக்கின்றார். பிரம குலம் - பிரமன் பூசித்த கோயில், பிராமண சாதி. தேவர் குலம் - தேவர்கள் வழிபட்ட கோயில், தேவர் என்பார் மரபு, வேந்தர் குலம் - வேந்தர்கள் கட்டி வழிபட்ட கோயில், வேந்தரினத்து இந்திரன் வழிபட்டெடுத்த கோயில், அரசர் மரபு. நல்வினை - வாணிகம், பிறவும் தமபோற் செயும் விற்பனை நலம் பெற்றது பற்றி, வாணிகம், “நல்வினை” எனப்பட்டது. வணிகரை வடநூலார் வைசியர் என்பர்;
* தமிழகத்தில் இறுதியாக இருந்த ஒரே ராஜ்யம் புதுக்கோட்டை ராஜ்யம் மட்டுமே. அதனை ஆட்சி செய்த கள்ளர் குல தொண்டைமான் மன்னர்களும் தங்களை இந்திரன் குலத்தார் என்றே கூறியுள்ளனர்.
என்றே கூறியுள்ளனர்.
THANKS TO  கள்ளர் வரலாறு   FACEBOOK.COM