பல்லவர்

0 c

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010


பல்லவர்  தம்மைப் 'பரத்வாச கோத்திரத்தார்' எனக் கூறுதல் கட்டுக்கதை. இவர்கள் சிறந்த சத்திரியரே. கதம்பமயூர சன்மன் இவர்களைப் 'பல்லவ சத்திரியர்' என்று கூறியதாகத் தாளகுண்டாக் கல்வெட்டு கூறுகிறது. எனவே, பல்லவர் சத்திரியர் ஆவர். அவர்கள் வாகாடகர், சாலங்காயனர் முதலிய பிற அரச மரபினரோடு தொடர்பு கொண்டனர். ஆயின், தமிழ்வேந்தர் ஆர், வேம்பு, பனை இவற்றைத் தம் மரபுக்கு அடையாளமாகக் கொண்டவாறே ஆந்திர நாட்டிலிருந்து வந்த பல்லவரும் தமிழ் முறை பற்றித் தம்மைப் (பல்லவக்கொடி - தொண்டைக்கொடி பற்றிப்) பல்லவர் என அழைத்துக் கொண்டனர் ஆவர். (57)

காடவர் முதலிய பெயர்கள்

காடவன், காடவர்கோன், காடுவெட்டி என்பன பல்லவர்க்குப் பிற்காலத்தில் வந்த பெயர்கள். கி.பி. 8ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே பல்லவர் கல்வெட்டுகளில் இவை பயில்கின்றன; வேற்றரசர் கல்வெட்டுகளிலும் வருகின்றன. எனவே, இப்பட்டங்கள் தமிழ் மக்களால் இடப்பட்டதாகல் வேண்டும். பல்லவர் காடுகளை அழித்து நாடாக்கினமை இதனால் நன்கு புலனாகிறது. (58)

பின்குறிப்புகள்

48. Vide Dr.S.K.Aiyangar's Int to "The Pallavas of Kanchi" by R.Gopalan

49. D.Sircar's Successors of the Satavahanas, pp.97-140

50. Ibid. pp. 73,82,83

51. Ibid pp.163-165

52. Dr.K.Gopalachari's 'Early History of the Andhra country', pp.151-159

53. D.Sircar's Successors of the Satavahanas, pp.56,52

54. Ibid, Iat pp.3-4

55. 'பப்ப' என்பது 'அப்பன்' என்னும் பொருளது. இச்சொல் பல பட்டயங்களில் வருதல் கண்கூடு ஆதலின், இஃது ஒரு மனிதன் பெயரன்று. எனவே, சிவஸ்கந்தவர்மன் தந்தை பெயர் இன்னதென்பது தெரியவில்லை. Vide. D. Sircar's Successors of the Satavahanas, p.183-184, and Dr. G. Minzkshi's "Administration and Social Life under the Pallavas" pp.6-10

56. Vide Dr.S.K.Aiyangar's Valuable Introduction to the "Pallavas of the Kanchi", by R.Gopalan.

57. Dr.C.Minakshi's "Administration and Social Life under the Pallavas", pp 12-13


THE_WAR_THAT_CHANGED_TAMILIAN_HISTORY
பழந்தமிழ்நாடு
1. மதுரை
2 தஞ்சை
3. வஞ்சி
4. திருச்சிராப்பள்ளி
5. காஞ்சி


பழம்பாடல்களில் பழமொழிகள் உவமைகள் முதலியவற்றை எடுத்தாள்வது குறித்து முன்பு ஒரு மடலில் கண்டோம்.

சுந்தமூர்த்தி நாயனார் திருப்புறம்ப்ம் என்னும் தலத்து ஈசனைப் பற்றி பாடிய திருப்பதிகம் ஒன்று உண்டு.

திருப்புறம்பயம் என்னும் ஊர் ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்க ஊர். தமிழகத்தின் வரலாற்றையே மாற்றிவிட்ட போர் ஒன்று அங்கு நடைபெற்றது. மூன்று பேரரசுகளின் விதி அந்தப் போரில் நிர்ணயிக்கப்பட்டு புதிய பேரரசு ஒன்றினுக்கு வித்திடப்பட்டது.

பாடலைப் பார்ப்போம்.

படையெலாம் பகடு ஏற ஆளினும்
பவ்வம் சூழ்ந்தரசு ஆளினும்
கடையெலாம் பிணைதேரைவால்
கவலாதெழு மட நெஞ்சமே
மடையெலாம் கழுநீர் மலர்ந்து
மருங்கெலாம் கரும்பாடத்தேன்
படையெலாம் நாறுசோலைப்
புறம்பயந்தொழப் போதுமே

இதில் நாம் கவனிக்கவேண்டியது இந்த வரியை -

'கடையெலாம் பிணை தேரைவால்'

பாடலின் கருத்து இது:

'படைகளெல்லாம் யானைகளின்மீது வரக்கூடிய அளவுக்கு ஆண்டாலும், ஆளப்படும் அரசு நான்கு கடல்களையும் எல்லையாகக்கொண்டு பரந்துவிரிந்திருக்கூடிய அளவுக்குப் பேரரசாக இருந்து, அதனை ஆண்டாலும், அதெல்லாம் போகும் காலத்தில் தேரையின் வால் போலக் காணாமல் போய்விடும்.
ஆகவே திருப்புறம்பயத்தின் ஈசனை தொழவேண்டும். அதுவே நித்தியம'்.

இதிலுள்ள நயம் அந்த தேரையின் வால். அதுதான் கவனத்தை ஈர்த்தது.
தேரை, தவளை முதலியவை Amphibia என்னும் உயிரின வகுப்பைச் சேர்ந்தவை. பிறவியில் முதல் பாதியை முழுக்க முழுக்கத் தண்ணீருக்குள் இருந்து கழிக்கும். மீனைப் போல செவுளைக ்கொண்டு நீரிலுள்ள பிராணவாயுவை சுவாசித்துக்கொண்டு உயிர்வாழும். அப்போது அதற்கு மீனைப்போலவே வாலும் இருக்கும். அதனை Tadpole என்று குறிப்பிடுவார்கள். பிற்பாதியில் பெரிதாகும்போது நுரையீரல் வளர்ந்துவிடும். ஆகவே நீருக்கு வெளியில் வந்து காற்று மண்டலத்தின் பிராணவாயுவை சுவாசித்து உயிர் வாழும்.
தேரை பெரிதாகப் பெரிதாக அதன் வால் குறைந்துகொண்டே வந்து மறைந்துபோய்விடும்.
அதுபோலவே போகூழ் காலத்தின்போல் தேரையின்வால் மறைவதுபோல் பேரரசும் பெருவாழ்வும் மறைந்துபோய்விடும் என்பது பாடலின் கருத்து.
இதில் உள்ள உவமை: 'கடையெலாம் பிணை தேரைவால்'
திருப்புறம்பயம் அல்லது திருப்புறம்பியம் என்பது கும்பகோணத்துக்கு அருகிலுள்ளதோர் ஊர்.
கிபி 880-ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற போர் திருப்புறம்பியப்போர் என்று குறிப்பிடப்படும்.
கடைச்சங்க காலம் என்பது கிபி 285-உடன் முடிவுக்கு வந்துவிட்டது.
கடற்கோள், புயல்கள், கடலில் நிகழ்ந்த எரிமலைக்குமுறல், கடலுக்குள் நிலச்சரிவு என்ற பலவித காரணங்களாலும் பனிப்படலங்கள் உருகியதால் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வினாலும் தமிழகத்தில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டன. பாண்டிநாட்டின் கணிசமான முக்கியமான பகுதிகள் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டன. மக்கள் தொகை வெகுவாகக்குறைந்தது. மக்களும் கூட்டங்கூட்டமாகக் குடி பெயர்ந்தனர்.
பத்து தலைமுறைகளுக்கு இந்த நிலை நீடித்தது.
சங்க கால சமுதாய வாழ்வியல் அழிந்துபோனது.
அப்போதிருந்த மூவேந்தர்கள் என்னும் முடியுடை வேந்தர்களான சோழர், பாண்டியர், சேரர் ஆகியோர் வலுவிழந்துபோயினர்.

இந்த சமயத்தில் பல குடியினர் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்து அதனைக் கைப்பற்றி, மேலும் மேலும் குடியேறி, புதிய அரசுகளைத் தோற்றுவித்தனர்.
முக்கியமாகக் களப்பிரர் என்னும் குடியினர் தமிழகத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். அவர்களின் காலத்தில் தமிழர்களின் பழைய நாகரிகம் மாறிப் போனது.
பார்த்தியாவிலிருந்து வந்த பல்லவர், பாணர், சகர் முதலிய குடியினர் இந்தியாவில் பரவலாயினர். பல்லவர் என்போர் ஆந்திரப் பேரரசு நிலவிய காலத்தில் அவர்களின் உயர் அதிகாரிகளாகவும் படைத ்தலைவர்களாகவும் கவர்னர்களாகவும் இருந்தனர். பின்னர் அவர்கள் ஆந்திராவில் வடபெண்ணை ஆற்றினருகில் தனிநாடு உருவாக்கிக்கொண்டனர். அங்கிருந்து தெற்கேயுள்ள தமிழ்நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றினர். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவ அரசை ஏற்படுத்தினர். தொண்டை மண்டலத்தின் பெரும் பகுதி காடாக இருந்தது. அதனைத் திருத்தி விவசாய நிலங்களாக்கி நாட்டை வளப்படுத்தினர். இதன் காரணமாக அவர்களுக்குக் 'காடுவெட்டி' என்றும் 'காடவர்' என்றும் பெயர் ஏற்பட்டது. அப்போதிருந்த பல
குடிநாடுகளைக் கைப்பற்றி பல்லவர்கள் தங்களின் மேலாண்மையை நிலை நிறுத்திக்கொண்டனர்.
சிம்ம விஷ்ணு என்னும் பல்லவன் காலத்தில் தமிழகத்தில் பல்லவர்கள் மிக வலுவாக தாபித்துக்கொண்டுவிட்டனர்
தென்கிழக்காசியாவிலும் பல்லவத்தின் செல்வாக்குப் பரவியது.

பொதுவாகவே இந்திய நாட்டில் இருந்த மன்னர்களுக்கும் மக்களுக்கும் போர்க்குணம் மிகுந்திருந்தது. ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் இரண்டு மூன்று நாடுகளிலோ பேரரசுகளிலோ சிதறியிருப்பார்கள்.

கோல்கொண்டாவைச் சேர்ந்த மராத்தியரும் பீஜாப்பூரைச் சேர்ந்த மராத்தியரும் சிவாஜி வகையறா மராத்தியரும் ஒருவருடன் ஒருவர் போரிடுவார்கள். கோல்கொண்டாவைச் சேர்ந்த தெலுங்கர்களும் பீஜாப்பூர் தெலுங்கர்களும் விஜயநகரத் தெலுங்கர்களைப் போட்டு மொத்துவார்கள். அப்போது ராஜமஹேந்திரத்துத் தெலுங்கர்கள் ஏதாவது பக்கத்தில் சேர்வார்கள். அல்லது தமக்கு ஏதும் லாபமிருக்கிறதா என்று பார்ப்பார்கள். கன்னடிகரும் வரலாற்றுக் காலமுழுவதிலும் இரண்டு மூன்று நாடுகளில் சிதறியிருந்தார்கள். பிரிட்டிஷ் இந்தியாவில்கூட அவர்கள் பாம்பே, மெட்ராஸ், மைசூர், ஹைதராபாத், பீடார், மராத்தா சமஸ்தானங்கள் முதலியவற்றில் இருந்தார்கள். இந்திய சுதந்திரத்துக்குப் பின்னரே கர்நாடகாவில் ஒன்று சேர்ந்தார்கள்.

சங்க காலத்தில் சேரர்கள் சோழர்கள், பாண்டியர்கள், அதியமான்கள், தொண்டைமான்கள், பதினெண்குடி வேளிர்கள், தங்களுக்குள் போரிட்டுக்கொண்டேயிருந்தார்கள். 'நான்மொழிக் கோசர்' போன்றோர் ஏதாவது ஒரு பக்கம் இருபபர்கள். சில சமயங்களில் 'வம்ப மோரியர்', 'முனையெதிர் வடுகர்' வந்து மாட்டுவார்கள். அப்போது 'ட்ரமிட தேச சங்காத்தம்' என்ற பெயரில் கூட்டணி அமைத்துப் போரிடுவார்கள்.


இதேதான் பல்லவர் காலத்திலும் நடைபெற்றது.
சாளுக்கியர் vs பல்லவர், பல்லவர் vs பாண்டியர், பல்லவர் vs இலங்கை, பாண்டியர் vs சேரர் என்று போர்கள் நடந்தவண்ணமிருந்தன. சாளுக்கியர்களை ராஷ்ட்ரகூடர்ஒடுக்கியபின்னர் அவர்களும் இதே மாதிரி கட்சி கட்டிக்கொண்டு போரிட்டனர்.
இது ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டும் நடந்தவையல்ல.
கிபி 600-இலிருந்து 900 வரைக்கும் இதே கதைதான்.
http://illamsingam.blogspot.com/2010/08/blog-post_17.html

உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை - முனைவர் குடவாயில்

3 c

புதன், 11 ஆகஸ்ட், 2010



உடையார்குடிக் கல்வெட்டு
ஒரு மீள்பார்வை

முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்

தமிழக வரலாற்றில் குறிப்பாக சோழர் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குவது உடையார்குடி கல்வெட்டாகும். தற்போதைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியின் ஒரு பகுதியாக விளங்கும் உடையார்குடி அனந்தீசுவரம் சிவாலயத்தில் கருவறையின் மேற்குப்புற அதிட்டானத்தில் இச்சாசனம் இடம்பெற்றுத் திகழ்கின்றது. கோஇராஜகேசரிவர்மரின் (முதலாம் இராஜராஜ சோழனின்) இரண்டாம் ஆட்சியாண்டு குறிக்கப் பெற்றுள்ள இச்சாசனத்தினை எபிக்கிராபிகா இண்டிகா தொகுதி 21இல் எண் 27, கட்டுரையாகத் தமிழ் ஒலிபெயர்ப்போடு கூடிய (ஆங்கிலத்தில் அமைந்த) விளக்க உரையுடன் வெளியிட்ட வரலாற்றுப் பேரறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் தம் "சோழர் வரலாறு" (The Cholas) எனும் நூலில் மேற்குறித்த உடையார்குடி சாசனத்தின் அடிப்படையில் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய செய்திகளை விவரித்துள்ளார். அப்பகுதியில் சுந்தரச் சோழனின் தலைமகனும் மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனின் அண்ணனுமாகிய ஆதித்த கரிகாலனின் கொலை நிகழ்வின் பின்புலத்தில் மதுராந்தக உத்தம சோழனின் துரோகம் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இக்கருத்தே மதுராந்தக உத்தமச் சோழன் மீது ஏற்றப்பெற்ற களங்கமாக அமைந்தது.

வரலாற்று அறிஞர்களின் கருத்துக்கள்

பிற்காலச் சோழர் வரலாறு எனும் நூலினை எழுதிய தி.வை.சதாசிவ பண்டாரத்தார் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியாரின் கருத்துக்கு மாறுபட்டு ஆதித்த கரிகாலன் கொலை நிகழ்வில் உத்தமச் சோழன் பங்களிப்பு இருந்திருக்க இயலாதென்பதை வலியுறுத்துகிறார். இருப்பினும் சாஸ்திரியாரின் கருத்துக்களை மறுத்துரைப்பதற்கான தௌ¤வான சான்றுகள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை. 1971ம் ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை விவாகானந்தா கல்லூரி மலரில் இராஜராஜ சோழன் பற்றிய கட்டுரை ஒன்றினை வரைந்த ஆர்.வி.சீனிவாசன் என்பார் ஆதித்த கரிகாலன் கொலையின் பின்புலத்தில் செயல்பட்டவர்கள் அருண்மொழியும் (இராஜராஜனும்) அவனது தமக்கை குந்தவையும்தான் என்பதை வலியுறுத்துவதோடு பல கேள்விக் கணைகளையும் எழுப்பி தன் கருத்துக்களை மறுப்பவர்களுக்கு அறைகூவலும் விடுத்துள்ளார். சீனிவாசன் அவர்களின் கருத்துக்களை வன்மையாக மறுக்கும் டாக்டர் க.த.திருநாவுக்கரசு அவர்கள் அருண்மொழி ஆய்வுத்தொகுதி எனும் கட்டுரைத் தொகுப்பு நூலொன்றில் உத்தம சோழனுக்கு எந்த விதத்திலும் இக்கொலையில் தொடர்பு இல்லை என்றும் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு இராஜராஜனின் இரண்டாம் ஆட்சியாண்டில்தான் கண்டுபிடிக்க இயன்றது என்றும் பிராமணர்களாகிய கொலையாளிகளை மனுதரும சாத்திரத்தின் அடிப்படையில் அரசன் தண்டனை கொடுத்திருப்பானேயன்றி கொலை தண்டனை அளித்திருக்க இயலாது என்றும் தன் கருத்துக்களை பல சான்றுகளின் அடிப்படையில் கூறியுள்ளார். இவ்வறிஞர்களைத் தவிர மேலும் பல வரலாற்று ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் மதுராந்தக உத்தம சோழனைக் குற்றவாளி என்றும் இல்லை என்றும் தங்கள் தங்கள் கோணங்களில் எடுத்துரைத்துள்ளனர். ஆனால் இவர்கள் யாரும் தௌ¤ந்த சான்றுகளோடு தங்கள் கருத்துக்களை மெய்ப்பிக்க இயலவில்லை.


புதின ஆசிரியர்கள் பார்வையில்..

"பொன்னியின் செல்வன்" என்ற வரலாற்றுப் புதினத்தால் தமிழகத்தில் தணியாத ஒரு வரலாற்று தாகத்தை ஏற்படுத்தித அமரரான கல்கி (இரா.கிருஷ்ணமூர்த்தி) அவர்கள் ஆதித்த கரிகாலன் கொலை நிகழ்வை மையமாக அமைத்து புதினத்தைப் படைத்துக் காட்டியதோடு அதில் கொலையின் பின்புலத்தில் செயல்பட்டவர்கள் என ஊகிக்கத் தக்கவர்களாக வரலாற்றுப் பாத்திரங்கள் சிலரையும் கற்பனைப் பாத்திரங்கள் சிலரையும் உலவவிட்டு உண்மையான குற்றவாளி யார் என்பதை வாசகர்களே ஊகித்து அறிவார்களாக என்று தன் முடிவையும் கூறிச் சென்றுள்ளார். எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் ஆதித்த கரிகாலன் கொலையினையே முடிவாகக் கொண்டு கடிகை என்ற பெயரில் புதினமொன்றினைப் படைத்த போதும் கொலையாளிகளான பிராமணர்களுக்கு பின்புலத்தில் செயல்பட்டவன் மதுராந்தக உத்தமச் சோழன்தான் என்பதை தன் எழுத்தின் வன்மையினால் நிறுவியுள்ளார். புதினங்கள் வரலாற்று ஆய்வுக்குத் துணைநிற்கமாட்டாவெனினும் ஆதித்த கரிகாலன் கொலையைப் பொறுத்தவரை பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கண்ட முடிவு புதினப் படைப்பாளர்களுக்கு அடித்தளமாய் அமைந்தது என்பது மட்டுமல்லாமல் மதுராந்தக உத்தமச் சோழனை குற்றவாளியாகவே முன்னிருத்தினர் என்பதுதான் உண்மை.

உடையார்குடிக் கல்வெட்டு

ஆதித்த கரிகாலன் கொலைபற்றிக் குறிப்பிடும் வரலாற்றுச் சாசனமான உடையார்குடி கல்வெட்டின் வாசகத்தினை இனி காண்போம்.

"ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ
வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்............................................... தம்பி
ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ........................ராமத்தம்
பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கொட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம். தாங்களும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவரஇ
ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையனேன் இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி
ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச
தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன்
அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன் இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன"

உடையார்குடி கல்வெட்டு குறிப்பிடும் கோ இராஜகேசரிவர்மர் யார்?

சோழப் பெருமன்னர்கள் மாறிமாறி புனைந்து கொள்ளும் இராஜகேசரி, பரகேசரி எனும் பட்டங்களில் ஒன்றான கோஇராஜகேசரி எனத் தொடங்கும் இக்கல்வெட்டுச் சாசனத்தில் மன்னன் பெயரோ, மெய்க்கீர்த்தியோ இல்லாத காரணத்தால் ஆதித்த கரிகாலன் கொலை நிகழ்வுக்குப் பின்பு இராஜகேசரி எனப் பட்டம் பூண்ட சோழ மன்னர்கள் பலரில் யாருடைய சாசனமாகவும் இது இருக்கலாம் என்ற முடிவினை நாம் கொள்ள முடிந்தாலும், இக்கல்வெட்டில் குறிக்கப்பெறும் குருகாடி கிழான் என்ற சோழப் பெருந்தரத்து அலுவலன் மாமன்னன் இராஜராஜ சோழனின் அலுவலன் என்பதைப் பிற சாசனங்கள் எடுத்துரைப்பதால் இச்சாசனம் முதலாம் இராஜராஜ சோழனின் இரண்டாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பெற்ற சாசனமே என்பது தௌ¤வு. மேலும் இச்சாசனத்தின் 7 ஆம் வரியில் குறிக்கப்பெறும் இவ்வாட்டை மேஷ நாயற்று ஞாயிற்றுக்கிழமை பெற்ற பூரட்டாதி நாள் என்ற வானிலைக் குறிப்பு இராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த குறிப்பு என்பதால், இச்சாசனம் முதலாம் இராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தில் பொறிக்கப்பெற்றது என்பது ஐயம் திரிபுற உறுதியாகின்றது.

சாசனம் குறிப்பிடும் இரண்டு ஆண்டுகள்

மேலே கண்ட இக்கல்வெட்டுச் சாசனத்தில் குறிக்கப்பெறும் 'ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேசரிவர்மனுக்கு யாண்டு 2 ஆவது . . . ' என்ற ஸ்ரீமுகம் அனுப்பப்பெற்ற தொடக்கப்பகுதி குறிப்பிடும் ஆண்டும், ஏழாவது வரியில் உள்ள 'இவ்வாட்டை மேஷ நாயற்று ஞாயிற்றுக்கிழமை பெற்ற பூரட்டாதி ஞான்று' என்ற வியாழ கஜமல்லன் என்பான் அறக்கட்டளை வைத்த நாளைக் குறிப்பிடும் ஆண்டும் ஒரே ஆண்டு அல்ல. பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் இவ்விரு நிகழ்வுகளும் ஒரே ஆண்டில் நிகழ்ந்தவை என்ற கருத்தில் தம் கட்டுரையினை வரைந்துள்ளார்.

கல்வெட்டில் குறிக்கப்பெறும் மேஷ நாயற்று (சித்திரை மாதத்து) பூரட்டாதி விண்மீன் கூடிய ஞாயிற்றுக்கிழமை என்பது ஒப்பீட்டு ஆண்டுக் கணக்கீட்டின்படி (Indian Epimeries) கி.பி 986 ஏப்ரல் 23 ஆம் நாளினைக் குறிப்பதாகும். எனவே முதலாம் இராஜராஜனின் ஸ்ரீமுகம் கி.பி 986 அல்லது 987 இல் உடையார்குடி சபையோருக்கு அனுப்பப்பெற்று, பின்பே கி.பி 988 இல் வியாழ கஜமல்லன் என்ற தனியாரின் இச்சாசனம் பதிவு பெற்றுள்ளது.

இராஜராஜனின் சாசனமன்று

இக்கல்வெட்டுச் சாசனத்தை முதன்முறையாக ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சாஸ்திரியார் அவர்களும், பின்பு இச்சாசனத்தைப் பற்றிப் பேசிய அறிஞர்கள் அனைவரும் இது இராஜராஜ சோழனின் நேரிடையான ஆணையை வெளியிடும் சாசனம் என்றும், இச்சாசனம் பதிவு பெற்றபோதுதான் ஆதித்த கரிகாலன் கொலை கண்டுபிடிக்கப் பெற்று குற்றவாளிகளின் உடைமைகள் கைப்பற்றப் பெற்றன என்றும் கருதி, கொலை பற்றிய தங்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இது தவறாகும். உடையார்குடி கல்வெட்டுச் சாசனத்தில் காணப்பெறும் முதல் நான்கு வரிகள் கி.பி.986 அல்லது 987 இல் (இராஜராஜ சோழனின் இரண்டாம் ஆண்டில்) வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்துச் (உடையார்குடி) சபையோருக்கு மன்னனிடமிருந்து அனுப்பப் பெற்ற ஒரு அனுமதிக் கடிதமே ஆகும். அக்கடிதம் ஒரு நில விற்பனை ஆவணத்தில் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளதேயன்றி, அதுவே குற்றவாளிகள் பற்றி அரசு எடுத்த முடிவு பற்றிய ஆணையன்று. கி.பி 988இல் தனிநபர் ஒருவர் உடையார்குடி கோயிலுக்கு வைத்த அறக்கட்டளையைப் பற்றியும், அதற்காக வாங்கப் பெற்ற நிலங்கள் பற்றியும் விவரிப்பதே இச்சாசனம் என்பதால் இதனை இராஜராஜ சோழனின் நேரிடையான அரசுச் சாசனம் எனக் கொள்ளல் தவறாகும்.

கல்வெட்டைப் பொறித்தவர் யார்?

'வெண்ணையூர் நாட்டு வெண்ணை யூருடையான் நக்கன் அரவனையானான ல்லவ முத்தரையன் மகன் பரதனான வியாழ கஜமல்லப் பல்லவரையனேன் இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்திரு கழஞ்சு பொன்குடுத்து விலை கொண்டு இவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷ நாயற்று ஞாயிற்றுக்கிழமை பெற்ற பூரட்டாதி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் முன்பு மூவாயிரத்து அறுநூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருருவனுக்கு நிசதம் படி நாழி நெல்லும் ஆட்டை வட்டம் ஒரு காசும், நிசதம் மதினைவர் பிராமணர் உண்பதற்கும், ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழ கஜமல்ல பல்லவரையனேன், தர்மம் ரக்ஷ¤க்கின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலைமேலன' என்ற கல்வெட்டுச் சாசனப் பகுதியில், 'வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழ கஜமல்ல பல்லவரை யனேன்', 'தர்மம் ரக்ஷ¤க்கின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலைமேலன' எனக் காணப்பெறும் வரிகள் மிகத் தௌ¤வாக தனிநபர் ஒருவரால் இச்சாசனம் பதிவு செய்யப்பெற்றது என்பதைக் காட்டி நிற்கின்றன.

திருவெண்ணை நல்லூரினைச் சார்ந்த அரவனையான் பல்லவமுத்தரையன் மகன் பரதன் எனும் வியாழ கஜமல்ல பல்லவரையன் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து திருவனந்தீஸ்வரம் எனும் கோயிலில் தண்ணீர் பந்தலுக்காகவும் பதினைந்து பேர் சிவயோகிகள் உட்பட்ட சிவபிராமணர் உண்பதற்காகவும் 2 1/4 வேலி 2 மா நிலத்தையும் ஆறு மனைகளையும் 112 கழஞ்சு பொன் குடுத்து வாங்கி அறக்கொடையாக அளித்தான். அதற்காகத் திருக்கோயிலில் கல்வெட்டாகப் பதிவு செய்யப் பெற்றதே இச்சாசனமாகும். இச்சாசனத்திற்குரிய கர்த்தா திருவெண்ணைநல்லூர் பரதன் எனும் வியாழ கஜமல்ல பல்லவரையனே அன்றி மாமன்னன் இராஜராஜன் அல்ல என்பதை ஈண்டு நோக்குதல் வேண்டும்.

சாசனம் குறிப்பிடும் நிலம்

இச்சாசனம் இரண்டே முக்கால் வேலி 1 மா நிலத்தையும், அகமனை ஆறையும் வாங்கியதாகக் குறிக்கின்றது. வியாழ கஜமல்லனால் இவையனைத்தும் ஸ்ரீபராந்தக வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபையோரிடமிருந்து வாங்கப் பெற்றது என்பதை இச்சாசனத்தின் ஆறாம் வரி 'சபையார் பக்கல்' என்று தௌ¤வாக உரைக்கின்றது. பக்கல் எனும் ஏழாம் வேற்றுமை உருபு பற்றி சோழர் கல்வெட்டொன்று (SII, VI, 356) "யானிவர் பக்கல் விலைக்குக் கொண்டுடையன" என்று கூறுவதை நோக்கும்போது இங்கு நிலத்தை விற்றது பெருங்குறி சபையே என்பது உறுதியாகின்றது. ஸ்ரீவீரநாராயண சதுர்வேதிமங்கலம் பிரமதேயமாகவும், அது பெருங்குறி பெருமக்கள் நிருவாகத்திற்குரிய ஒரு சதுர்வேதிமங்கலமாகவும் திகழ்ந்தது என்பதை இச்சாசனத்தின் முதல்வரி தௌ¢ளத் தௌ¤வாக உரைக்கின்றது.

நிலத்தைத் தனிநபர் ஒருவரின் அறக்கட்டளைக்காக விற்ற பெருங்குறி மகாசபையோர் அந்நிலத்தின் முன்னைய வரலாற்றை மேற்படி விற்பனைச் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆதித்த கரிகாலனைக் கொன்ற இராஜ துரோகிகள், அவர்களின் தாயத்தார்கள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோருடைய நிலங்கள் முழுவதும் முன்பு அரசு ஆணைக்கு ஏற்ப ஸ்ரீபராந்தக வீர நாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபையால் கையகப்படுத்தப் பெற்று, அவர்கள் பொறுப்பில் அந்நிலங்கள் முழுவதும் இருந்துள்ளது. இது எந்த சோழ அரசரின் ஆணையின் பேரில் எப்போது கையகப்படுத்தப் பெற்றது, அந்த நிலங்களின் அளவு எவ்வளவு என்பன போன்ற விவரங்கள் இச்சாசனத்தில் குறிக்கப்படவில்லை. அச்செய்திகள் சபையோர் ஆவணத்திலும், அரசு ஆவணங்களிலும் பதிவு பெற்ற செய்திகளாகும்.

கொலைக் குற்றம் புரிந்தவர்கள், தாயத்தார், உறவினர் எனப் பலரிடமிருந்தும் கையகப்படுத்தப் பெற்று சபையின் மேற்பார்வையில் இருந்த நிலங்களில் ஒரு பகுதியாக இருந்த மலையனூரான் ரேவதாச கிரம வித்தன், அவன் மகன், அவன் தாய் பெரிய நங்கைச் சானி என்ற மூவரின் உடைமையான 2 1/4 வேலி 1 மா நிலம், அகமனை ஆகியவற்றை மட்டுமே 112 கழஞ்சு பொன் விலையாகப் பெற்றுக் கொண்டு வியாழ கஜமல்லனுக்கு விற்றனர். எனவேதான் அந்நிலத்தின் முந்தைய உரிமையாளர் பற்றிய விவரங்களை இக்கல்வெட்டுச் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றவாளிகளின் உடமை என அரசு கையகப்படுத்திய நிலங்களை சபையோர் விற்பனை செய்வதற்காக இரு கண்கானிப்பாளர்களை மாமன்னன் முதலாம் இராஜராஜன் தன் இரண்டாம் ஆட்சியாண்டில் நியமித்தான். கொட்டையூர் பிரம்மஸ்ரீராஜன், புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டன் ஆகிய இருவரும் அப்பணியை மேற்கொள்ளவும், ஸ்ரீவீரநாராயண சதுர்வேதிமங்கலத்து பெருங்குறி மகாசபையோர் அந்நிலங்களை விற்று அவ்வூர் நிதியில் சேர்க்க வேண்டும் (தலத்திடுக) என்றும் ஸ்ரீமுகம் (ஆனைக்கடிதம்) அனுப்பியிருந்ததைத்தான் இச்சாசனம் முற்பகுதியில் முந்தைய அனுமதியாகவும், மேற்கோளாகவும் சுட்டுகின்றது.

இவ்வாறு குறிப்பிடப் பெற்றுள்ள ஸ்ரீமுகத்தினை சாஸ்திரியார் அவர்கள் இராஜராஜனின் இரண்டாம் ஆட்சியாண்டில்தான் குற்றம் கண்டுபிடிக்கப் பெற்றதாகவும், குற்றவாளிகளின் நிலங்கள் கையகப்படுத்தப் பெற்றதாகவும் கருதுவது ஏற்புடையதன்று. இச்சாசனத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் பெற்றது பற்றியோ, அவர்களிடமிருந்து கையகப்படுத்தப் பெற்ற நிலங்களின் முழு விவரங்களோ பதிவு செய்யப் பெறவில்லை என்பதை நோக்குதல் வேண்டும். சுந்தர சோழரின் ஆட்சிக் காலத்திலோ, மதுராந்தக உத்தம சோழரின் ஆட்சிக் காலத்திலோ கையகப் படுத்தப் பெற்ற நிலங்களைப் பின்னாளில் சபையோர் இருவர் கண்காணிப்பில் விற்பதற்குரிய உரிமையை இராஜராஜன் வழங்கியதைத்தான் இச்சாசனம் குறிப்பிடுகின்றது. அவ்வாணையை பெற்ற ஊர் சபையோர் அதன்பின்பு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து விற்பனை செய்த ஒரு சிறு கூறு நிலம் பற்றியே இச்சாசனம் பேசுகின்றது. குற்றவாளிகளின் நிலங்களைக் கையகப்படுத்த இராஜராஜன் வழங்கிய மூல ஆணையாக இந்த ஸ்ரீமுகத்தைக் கருதியதால்தான் பல வரலாற்றுக் குழப்பங்களை ஆய்வாளர்கள் சந்திக்க நேர்ந்தது.

கொலையாளிகளும் சுற்றத்தாரும்

உடையார்குடிக் (ஸ்ரீபராந்தக சதுர்வேதி மங்கலத்து திருவனந்தீஸ்வரத்துக்) கல்வெட்டு ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகிகள் மற்றும் அவர்தம் உறவினர்கள் பற்றி பின்வருமாறு குறிக்கின்றது.

"பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன் . . . . றம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி ராஜனும் இவன் றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழபிரமாதிராஜனும், இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும், இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிலும், இவர் பிரமாணிமார் பெற்றாளும், இ . . . . . ராமத்தம் பேரப்பம் மாரிடும், இவகள் மக்களிடும், தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும், இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் முடைமையும் . . . " என்று கூறும் கல்வெட்டுச் செய்தியினை ஆழ்ந்து நோக்கும்போது சோமன், அவன் தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், அவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழப் பிரமாதிராஜன் ஆகிய மூவர் மட்டுமே ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகிகள் என்பதும், மற்ற அனைவரையும் இக்கல்வெட்டு கூறும்போது இவகள் (இவர்கள்) என்ற சொல்லோடு தொடர்வதால் அவர்கள் குற்றவாளிகளோடு உறவின்முறையில் தொடர்புடையவர்கள் மட்டுமே என்பதும் புலனாகின்றது.

இச்சாசனத்தில் விற்கப்பெற்ற நிலத்திற்குரியவனான மலையனூரானான பாப்பனச்சேரி ரேவதாச கிரம வித்தன் என்பான் கொலையாளிகள் மூவருடைய தம்பி என்பதும், அவன் கொலையில் ஈடுபட்டவன் அல்லன் என்பதும் நன்கு விளங்கும். தாயத்தார் அனைவரும் குற்றமுடையவர்களே என்ற அடிப்படையில்தான் அவனது நிலமும் அவன் குடும்பத்தார் நிலமும் இங்கு விற்பனைக்குள்ளானது, எனவே கொலையில் நேரடித் தொடர்புடையவர்களான சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகிய மூவருடைய நிலம் பற்றியோ அல்லது அகமனைகள் பற்றியோ இக்கல்வெட்டில் விற்பனை நிலமாகப் பேசப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

பிரமாதிராஜன் எனும் விருது அரசனால் உயர்நிலை வகிக்கும் (பெருந்தரத்து அலுவலர்) அந்தணர்களுக்கு மட்டுமே வழங்கப் பெறுவதாகும். இங்குக் கொலைக் குற்றவாளியாகக் கூறப் பெற்றிருக்கும் மூவரில் சோமன் பெற்ற விருதுப் பெயர் கல்வெட்டில் சிதைந்துள்ளது. இரண்டாமவன் ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன்; மூன்றாமவன் பரமேஸ்வரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன். பஞ்சவன் பிரமாதிராஜன் என்ற விருது பஞ்சவர் என அழைக்கப்பெறும் பாண்டிய அரசர்கள் தங்கள் பிராமண அதிகாரிகளுக்கு அளிக்கும் விருதாகும். இருமுடிச் சோழ பிரமாதிராஜன் என்ற விருது சோழப் பேரரசனால் வழங்கப் பெற்றதாகும். இவ்விருவர் விருதுகளை வைத்து நோக்கும்போது முதலாமவனாகிய சோமன் நிச்சயம் பாண்டி நாட்டு பிரமாதிராஜன் விருது பெற்றவனாகவே இருந்திருத்தல் வேண்டும்.

ஆதித்த கரிகாலனின் கொலைக்குரிய திட்டம் பாண்டிய நாட்டிலேயே உருவானது என்பது திண்ணம். கொலையுண்ட ஆதித்த கரிகாலன் தன் கல்வெட்டுக்களில் "வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன்" எனக் கூறிக் கொள்வதை ஆராய்ந்த நீலகண்ட சாஸ்திரியார் கரிகாலன் வீரபாண்டியனின் தலையைத் துண்டித்திருக்க மாட்டான் என்றும். அவனை வெற்றி கொண்டதையே இவ்வாறு குறிப்பிட்டிருப்பான் என்றும் கூறுகிறார் (6). ஆனால் நீலகண்ட சாஸ்திரியார் மறைவிற்குப் பின்பு அண்மையில் எசாலம் (விழுப்புரம் வட்டம்) எனும் ஊரில் புதையுண்டு வெளிப்பட முதலாம் இராஜேந்திர சோழனின் செப்பேட்டுத் தொகுதியில் ஆதித்த கரிகாலன் பாண்டியனின் தலையைக் கொய்து, ஒரு கழியில் சொருகி, தஞ்சாவூர் அரண்மனை வாயிலில் நட்டு வைத்தான் என்று கூறுகிறது (7), போர்த் தர்மத்தையும் மீறி ஆதித்த கரிகாலன் செய்த அடாத செயலுக்குப் பழி தீர்க்கும் வகையில்தான் இக்கொலை நிகழ்ந்துள்ளது.

ஸ்ரீபராந்தக வீரநாராயண சதுர்வேதி மங்கலத்தில் (உடையார்குடியில்) பிறந்து பாண்டிய மன்னர்களிடமும் சோழப் பேரரசர்களிடமும் உயர்நிலை அலுவலர்களாக விளங்கிய உடன்பிறந்தோர் மூவரும் தங்கள் திட்டம் நிறைவுற்ற பிறகு, அவர்கள் நிச்சயம் சோழ நாட்டில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. அதுவும் பாண்டிய அரசுக்காக இச்செயலைச் செய்ய முன்வந்தவர்கள் பாண்டிய நாட்டில் அல்லது அவர்களுக்குச் சார்புடைய கேரள நாட்டிற்குச் சென்று சிறிது காலமாவது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும். அவர்களது தாயத்தாரும், நெருங்கிய உறவினர்களும் புலம் பெயர்ந்து சென்றிருக்க வேண்டும். அதனால்தான் சோழ அரசு அவர்களுடைய நிலத்தையும் அகமனைகளையும் கையகப்படுத்தி இருந்திருக்கிறது. இந்நிகழ்வு சுந்தர சோழரின் இறுதி நாட்களிலோ அல்லது மதுராந்தக உத்தம சோழன் முடிசூடிய சின்னாட்களிலோ நிகழ்ந்த செயலாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.

மதுராந்தக உத்தம சோழனின் ஆட்சிமுறை, அவன்பால் மாமன்னன் இராஜராஜசோழன் கொண்ட பெருமதிப்பு, தன் புதல்வன் இராஜேந்திர சோழனுக்கு மதுராந்தகன் எனப் பெயர் சூட்டி அழைத்தது, செம்பியன் மாதேவியார் இராஜராஜ சோழன்பால் பேரன்பு கொண்டு அவனுடன் வாழ்ந்தது ஆகிய வரலாற்று நிகழ்வுகளின் சான்றாதாரங்களை ஆழ்ந்தும் கூர்ந்தும் நோக்குவோமாயின் அவன்மீது கொலைப்பழி கொள்ளல் எவ்வகையிலும் ஏற்புடையதாகாது.

இராஜராஜ சோழன் குற்றம் செய்த பிராமணர்களை கொல்லாது விடுத்தான் என்பதும் சான்றுகள் இன்றி கூறப்பெறும் கூற்றாகும். அவனது தாணைத் தலைவனான கிருஷ்ணன் இராமனான மும்முடிச் சோழ பிரம்மராயன் போர்க்களத்தில் போரிட்டவனே, இராஜராஜன் மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாச்சரியனுடன் போரிட்டதைக் கூறும் சாளுக்கிய நாட்டு கல்வெட்டுக்கள் அவன் அந்நாட்டில் பிராமணர்களைக் கொன்றவன் என்று குறிப்பிடுகின்றன. எனவே அவன் காலத்தில் பிராமணர்கள் வாளெடுத்துப் போர் செய்வதும், பிராமணர்களைப் போரில் கொல்வதும் இயல்பாக நடைபெற்ற செயல்களாகவே இருந்துள்ளன. அவ்வகையில் நோக்கும்போது இராஜராஜ சோழன் மீது வீண்பழி சுமத்துவது வரலாற்று அடிப்படையில் ஏற்புடையதாகாது.

உடையார்குடி கல்வெட்டுச் சாசனம் என்பது ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர்கள் யாவர் என்பதை ஒரு வரியில் கூறும் ஒரு கல்வெட்டேயன்றி அக்கொலை பற்றிய பிற செய்திகளையோ அல்லது அவர்களுக்கு கொடுக்கப் பெற்ற தண்டனை பற்றியோ விவரிக்கும் சாசனமாகாது. தனி நபர் ஒருவர் (வெண்ணையூருடையார் பரதன் எனும் வியாழ கஜ மல்லன்) தான் வாங்கிய நிலம் பற்றியும், வைத்த அறக்கொடை பற்றியும் பதிவு செய்த சாசனமேயாகும்.

குறிப்புகள்

1. The Colas, K.A.Nilakanta Sastri, University of Madras, 1984, pp. 157-158.

2. பிற்காலச் சோழர் வரலாறு, தி.வை.சதாசிவ பண்டாரத்தார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1974, பக்-76-78.

3. A Note on the Accession of Rajaraja - R.V.Srinivasan, Viveka, Vivekananda College Magazine, Madras, 1971, p.13.

4. ஆதித்ய கரிகாலன்¢ கொலை வழக்கு - ஒரு மறு ஆய்வு, க.த.திருநாவுக்கரசு, அருண்மொழி ஆய்வுத்தொகுதி, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை-28, 1988, பக்.143-153.

5. No.27, The Udayargudi inscription of Rajakesarivarman : K.A.Nilakanta Sastri, Epigraphia Indica, Vol.XXI, pp.165-170.

6. The Colas, K.A.N., p.154.

7. Archaeological Finds in South India, Esalam Bronzes and Copper Plates, by Dr.R.Nagasamy, Bulletin DE 1' Ecole Francaise, D'Extreme Orieyt, Tome LXXVI, Paris, 1987, p.14.
thanks to http://illamsingam.blogspot.com/2010/08/blog-post_3197.html

தமிழின் தலையெழுத்து...!

0 c

தமிழின் தலையெழுத்து...!

>> Sunday, August 17, 2008

அண்மையில் தமிழர்களுக்கும் சிந்துவெளி நாகரீகத்திற்கும் உள்ளத் தொடர்பை மொழி ஆய்வியல் ரீதியாக நிரூபணமாக்கும் சில திடுக்கிடும் தகவல்களைக் கொண்ட கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. இக்கட்டுரையை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ம.இராசேந்திரன் படைத்திருந்தார். இதோ வாசகர்களுக்காக அக்கட்டுரை...

தமிழின் தலையெழுத்து, பெருமையும் வியப்பும் தருகிறது. தலைக்காவிரி என்பதைப்போல தலையெழுத்தைத் தொடக்க கால எழுத்து என்றும் பொருள் கொள்ளலாம். மன அனுபவ வெளிப்பாடு பேச்சு மொழி என்றால், பதிவு எழுத்து மொழியாகும். எழுத்து என்றால் ஒலிஎழுத்து என்றும் வரி எழுத்து என்றும் இரண்டையும் குறிக்கும். எழுப்பப்படுதலாலும் எழுதப்படுதலாலும் இரண்டு வகைக்கும் பொதுச் சொல்லாக இருந்த எழுத்து பிறகு வரி வடிவ எழுத்திற்கு மட்டுமே உரியதாக வழக்கத்திற்கு வந்துவிட்டது.

நெடுங்காலத்திற்கு முன்பே தமிழுக்கு எழுத்து இருந்திருக்கிறது. இப்போதும்கூட எழுத்தில்லா மொழிகள் பல உள்ளன. பாரசீக மன்னன் டரையசு என்பவனுக்கு சிந்தியர்கள் ஒரு தூது அனுப்பியதாக கிரேக்க வரலாற்றாசிரியர் அராடோட்டசு குறிப்பிடுகிறார். அஞ்சி ஓடாவிட்டால் இறந்துவிடுவாய் என்பதே தூதின் செய்தி. தவளை தண்ணீருக்குள் அஞ்சி மறைவதுபோலவும், எலி வளைக்குள் ஒளிவது போலவும் ஓடாவிட்டால் அம்புகளால் நீ கொல்லப்படுவாய் என்பதைச் சொல்வதற்காக, ஒருவரிடம் தவளை, எலி, அம்பு ஆகியவற்றைக் கொடுத்தனுப்பினார்கள். அது எழுத்தில்லாத காலம்.

தொல்காப்பியர் மெய்யெழுத்துகளும் எ,ஒ குறில்களும் புள்ளிபெறும் என்று வரிவடிவ எழுத்துகளைப் பற்றி நூற்பா தந்துள்ளார். சித்திரக் கோடுகள், குறியீடுகள், எழுத்துகள் என்று உலக மொழிகளின் எழுத்து வளர்ச்சியும் வரலாறும் அறியப்பட்டு வருகின்றன.

ஒரு பொருளைக் குறிக்க வரையப்பட்ட சித்திர எழுத்து உரு எழுத்து என்றும்; எண்ணத்தை வெளிப்படுத்துவது கரு எழுத்து என்றும்; ஓசையைக் காட்டுவது ஒலி எழுத்து என்றும்; உணர்வை வெளிப்படுத்துவது உணர்வெழுத்தென்றும் தமிழில் பல்வேறு எழுத்துகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.



சிந்துவெளி எழுத்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்ட தொன்மையான எழுத்துகளாகும். எல்லோரும் ஏற்கத் தக்க வகையில் இதுவரை யாரும் இவற்றைப் படித்தறிய முடியவில்லை. சிந்துவெளிக்குப் பின் கிடைப்பவை குறியீடுகள். குறியீடுகளையும் படித்தறிய முடியவில்லை. ஆனால் சிந்துவெளி எழுத்துகளும் குறியீடுகளும் முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகள், கல்வெட்டுகள் நாணயங்கள் என்று மக்கள் வாழ்க்கையோடு கலந்து இடம்பெற்றுள்ளன.

சிந்துவெளி எழுத்துகள், குறியீடுகளுக்குப் பிறகு வந்தவை பிராமி எழுத்துகள். தமிழுக்கும், சமற்கிருதத்திற்கும், பிராகிருதத்திற்கும், பாலிக்கும் பொதுவாகவும் தமிழ் தவிர மற்ற மொழிகளுக்கு வர்க்க எழுத்துகளைக் கூடுதலாகவும் கொண்டு பிராமி எழுத்துகள் உள்ளன.

அப்படியென்றால் இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உட்பட்ட நாடுகள் அடங்கிய நிலப்பகுதி முழுவதும் மொழிகள் வேறுவேறாக வழங்கப்பட்டு வந்திருப்பினும் பொதுவாக ஒரே எழுத்து முறை (சிற்சில கூடுதல் எழுத்துகளுடன்) இருந்து வந்துள்ளது.

அசோகன் கல்வெட்டுகளால் அறியப்பட்ட பிராமி எழுத்து, அசோகன் ஆட்சிக்கு உட்படாத தமிழ் நாட்டில் தமிழுக்கு உரியதாக இருந்திருக்கிறது. அசோகன் கல்வெட்டுகளில் குசராத்து மாநிலம் கிர்நார் 16ஆம் பாறைக் கல்வெட்டில் சேர சோழ பாண்டியர்களும் சத்தியபுத்திரராகிய அதியமான் மரபினரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில் கிடைத்த எழுத்தாதாரங்கள் அசோகன் காலத்துக்கும் முற்பட்டவை என்று தொல்லியல் அறிஞர்கள் பேராசிரியர் முனைவர் கா.ராசனும் முனைவர் தூ.இராசவேலும் கருதுகின்றனர்.

'அத்திபடாவிலும்' அயோத்தியாவிலும் கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமற்கிருத கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அசோகன் கல்வெட்டுகளில் பிராகிருத மொழிக் கல்வெட்டுகள் உள்ளன. தமிழகத்தின் மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில் தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் ஒரே எழுத்து (பிராமி) முறையில் (வர்க்க எழுத்துகள் தவிர) அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புத்தமத நூலான லலித விசுத்தாரத்திலும் சமண நூலான பன்னவனசுதாவிலும் 'பிராமி' குறிப்பிடப்படுகிறது. பிராமி எழுத்தை உருவாக்கியவர் புத்தர் என்றும் சமண சமய தீர்த்தங்கரர் ரிசபதேவர் மகள் பிராதமி பெயரில் உருவாக்கப்பட்டதென்றும் பிராமி பற்றிய சமயக் கதைகள் பல உள்ளன.

அசோகன் கல்வெட்டில் இடம் பெற்றதால் பிராமி என்று அழைக்கப்படுகிறது. மொழியின் பெயரில் எழுத்து அமைக்கப்படுவதே மரபு. அசோகன் என்பதோ பிராமி என்பதோ மொழிகளின் பெயர்களாக இல்லை.

எந்த ஒரு தனிப்பட்ட மொழிக்கும் பிராமியை உடைமையாக்கிவிடக் கூடாது என்பதால் பயன்படுத்தியவர் பெயரில் அசோகன் பிராமி என்று அழைக்கப்படிருக்கலாம். அதிலும் தமிழ் மொழிக்கான பிராமியைத் தென்பிராமி என்றும் தமிழ் பிராமி என்றும் தமிழில் அழைக்கிறோம். தொல்காப்பியரும் சங்க இலக்கியப் பாடல்களும் 'தமிழியில் தாம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் பேராசிரியர் மதிவாணன் கூறுகிறார்.

இந்தியாவின் தொன்மையான வரிவடிவமாம் சிந்து வெளிக் குறியீடுகள் பூம்புகார், மயிலாடுதுறை, செம்பியம், கண்டியூர் முதுமக்கள் தாழிகளிலும், சூலூர் மண்வட்டிலிலும் இடம் பெற்றுள்ளமையைத் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். சிந்துவெளி எழுத்துகளின் காலம் குறைந்தது கி.மு1500 என்று கருதப்படுகிறது.

சிந்துவெளி எழுத்துகளுக்கும் பிராமி எழுத்துகளுக்கும் இடைப்பட்ட குறியீடுகள் இந்தியாவின் தமிழகத்தில்தான் குறிப்பாக சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள ஊர்களில்தான் அதிக அளவில் கிடைத்துள்ளன. பிராமி இந்திய மொழிகளுக்கான எழுத்துகளின் தாய் என்று ஐராவதம் மகாதேவன் கூறுகிறார்.

புதிய கற்காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் (விந்தியமலைப் பகுதி நீங்கலாக) திராவிட இன மொழிகளே பேசப்பட்டன என்று பேராசிரியர் பி.டிசீனிவாச ஐயங்காரும் (Stone Age in India) பேராசிரியர் டி.ஆர்.சேச ஐயங்காரும் (Dravidian India) திராவிட மொழி தென்னிந்திய மொழி மட்டுமன்று, காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்ட மொழி என்று அறிஞர் அம்பேத்காரும் (The unTouchables) கூறியுள்ளார்.

தமிழ் பிராமி எழுத்துகளோடு கிடைத்துள்ள குறியீடுகளை அதற்கும் முற்பட்ட சிந்துவெளி எழுத்துகளோடு இணைத்துக் கொள்ளத் தேவைப்படும் இணைப்புக் கண்ணிகள் கிடைக்குமாயின் தமிழின் தலையெழுத்து தீர்மானமாகிவிடும்.
0 c

திங்கள், ஏப்ரல் 04, 2005


நாட்டார் ஐயா


அண்மையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதன் பொருட்டு அவரின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் பரிவுத் தொகையாக அளிக்கப்பெற்றது. இதே தருணத்தில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு. ஆகியோரின் படைப்புகளும் நாட்டுடைமை ஆயின.
இவரைப் பற்றி இவரின் மகன் வே. நடராஜன் எழுதிய நாட்டார் ஐயா என்ற நூல், படிக்கக் கிடைத்தது. இதனைத் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (சுருக்கமாக ‘கழகம்’) வெளியிட்டுள்ளது. (முதல் பதிப்பு 1998, பக்- 277, விலை- ரூ.60.00)
ஒரே ஒரு பிரதிதான் உள்ளது. எனவே உடனே திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் எனப் பதிப்பாளர் முத்துக்குமாரசுவாமி கூறியிருந்தார். எனவே, அதைத் திருப்பிக் கொடுக்கும் முன் ஒரு முறை படித்துவிட வேண்டும் என்ற உந்துதல் பிறந்தது.
அக்காலத் தமிழ் நடையில் நூல் உள்ளது. வே. நடராஜன் , இடையிடையே தன் அநுபவங்களையும் கலந்தே எழுதியுள்ளார். எனினும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரங்களை அறிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவும்.
நாட்டார் என்பது, கள்ளர் மரபில் வந்தவர்களின் பட்டப் பெயர். கள்ளர் என்பவர், பல்லவரின் ஒரு கிளை. தொண்டை நாட்டினின்றும் சோழ பாண்டிய நாடுகளில் குடியேறி அரையர் என்னும் பெயருடன் ஆட்சி புரிந்து வந்தனர். பின்னர் சோழர் குடி முதலியனவும் இம்மரபில் கலந்துவிட்டது. (பக்-12)
நாட்டார், கள்ளர் சரித்திரம் என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளமை குறிப்பித்தக்கது. உ.வே.சா., இந்நூலை மிகவும் பாராட்டியிருக்கிறார். இதனைக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கவும் பரிந்துரைத்துள்ளார். மாண்புமிகு மு. கருணாநிதி, தன் தென்பாண்டிச் சிங்கம் நூலுக்குக் கள்ளர் சரித்திரத்தைத் துணையாகக் கொண்டுள்ளார். ‘தமிழ்கூறும் நல்லுலகத்தாரால் நாட்டார் ஐயா என்று அன்புடன் அழைக்கப்பெற்ற திரு. ந.மு.வே, நாட்டார் ஐயா அவர்களின் கள்ளர் சரித்திரத்தின் துணைகொண்டு இந்நூலை எழுதத் தொடங்குகிறேன்’ என்று முன்னுரையில் எழுதியுள்ளார்.
வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி (1915), நக்கீரர் (1919), கபிலர் (1921), கள்ளர் சரித்திரம் (1923), கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் (1926), சோழர் சரித்திரம் (1928), ஆகியன நாட்டாரின் நூல்கள். கட்டுரைத் திரட்டு I என்ற நூலும் வெளிவந்துள்ளது. சில செய்யுள்களும் இயற்றியுள்ளார்.
இவை தவிர, பண்டைய இலக்கியங்கள் பலவற்றுக்கு உரை வரைந்துள்ளார். கீழ்க்கணக்கு நூல்களில் இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது என்பவற்றிற்கும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி என்னும் பிற்கால நீதி நூல்களுக்கும் நாட்டார், திருந்திய முறையில் உரையும் முகவுரையும் எழுதியுள்ளார்.
அ.மு.சரவண முதலியாரைத் துணையாகக் கொண்டு, திருவிளையாடற்புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், அகநானூறு, மணிமேகலை ஆகியவற்றுக்கும் நாட்டார், சிறந்த உரை எழுதியுள்ளார்.
திருவருட் கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்லூரியைத் தொடங்க நாட்டார் முயன்றுள்ளார். பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கும் முயற்சியிலும் இவருக்குப் பங்கு உண்டு. கல்லூரி, பல்கலை இரண்டின் தேவையையும் வலியுறுத்தி, அறிக்கைகளை நாட்டார் உருவாக்கியுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றவேண்டும் என்ற எண்ணத்தை, மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் 1981ஆம் ஆண்டு நிறைவேற்றினார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு வேற்று மொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பலர் இக்காலத்தைப் போன்றே அக்காலத்திலும் கூறியுள்ளனர். இதைக் குறித்து நாட்டார், தம் கருத்தைத் தெளிவாக எடுத்து வைத்துள்ளார்.
*********
''ஒருவனுடைய குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் மிகுந்த பொருட் பற்றாக்குறை ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம். பற்றாக்குறையைப் போக்க உடனே நண்பர்களிடம் கடன் வாங்கிச் சமாளிக்கிறோம். நெருக்கடி நேரத்தில் கடன் வாங்குவதில் தவறில்லை. மதிப்புடனும் மானத்துடனும் வாழவேண்டும் என்று கருதுகிற ஒரு நன்மகன் நெருக்கடி நேரத்தில் கடன் வாங்கியதற்காக நன்றாக உழைத்து அதனால் கிட்டிய பொருளைக் கொண்டு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பான். எதிர்காலத்தில் நெருக்கடி வந்தாலும் கடன் வாங்கத் தேவையில்லாதபடி பொருளாதார வளமுடையவனாகத் தன்னை உயர்த்திக்கொள்வான்.
சான்றோன் ஒருவன் தன் குடும்ப வாழ்க்கையில் மேற்கொள்ளும் இத்தகைய நடைமுறையையே மொழி வளர்ச்சியிலும் பின்பற்ற வேண்டும். அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது அந்நூல்களில் காணப்படும் கலைச் சொற்களுக்கு உரிய பொருளுடைய சொற்கள் தமிழில் உள்ளனவா என்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவை போதாவிடத்து தமிழில் உள்ள வேர்ச் சொற்களிலிருந்து புதிய சொற்களைப் படைத்துக்கொள்ள வேண்டும்.
புதிய சொற்களைக் கண்டுபிடிக்கக் காலதாமதம் ஆகும்போது வேற்றுமொழிச் சொற்களையும் தமிழின் ஒலியியல் இயல்புக்கு ஏற்ப திரித்தே வழங்குதல் வேண்டும். கல்வியிற் பெரியவராகிய கம்பர் இலக்குவன், வீடணன் என்றிவ்வாறாக வடசொல் உருவினைத் தமிழியல்புக்கு ஏற்ப மாற்றியுள்ளமை காண்க. கிறித்துவ வேத புத்தகத்தை மொழிபெயர்த்தோர், இயேசு, யோவான், யாக்கோபு என்றிங்ஙனம் தமிழியல்புக்கு ஏற்ப சொற்களைத் திரித்தமையால் அதன் பயிற்சிக்குக் குறைவுண்டாயிற்றில்லை. ஒவ்வொரு மொழியிலும் இவ்வியல்பு காணப்படும். ஆகவே, பிற மொழிகளில் உள்ளவாறே அச்சொற்களைத் தமிழில் வழங்க வேண்டுமென்பது நேர்மையாகாது.''
***********
நாட்டாரின் கருத்து, இன்றைக்கும் தேவைப்படுவது. தமிழின் தூய்மையைக் காக்கும் வரையே அதன் உயிர் பொலிவுறும். அப்படியே வேற்றுச் சொல் தேவையெனினும் கூடிய விரைவில் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்து, புழக்கத்திற்குக் கொணர்வது நம் அனைவரின் கடமை.
இங்கு, நாட்டாரின் வரலாற்றினைச் சுருக்கமாகக் காண்போம்.
12-4-1884 அன்று நாட்டார், தஞ்சை மாவட்டத்தில் நடுக்காவேரி என்ற ஊரில் பிறந்தார். தந்தை, முத்துச்சாமி நாட்டார். தாயார், தையலம்மாள். நாட்டாருக்கு முதலில் சிவப்பிரகாசம் எனப் பெயரிட்டனர். இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அதனால் ஒரு குறவனைக் கொண்டு சூடு போட்டு ஆற்றி முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை வேண்டிக்கொண்டு பெயரையும் வேங்கடசாமி என மாற்றினர்.
தொடக்கக் கல்வி வரை பள்ளியில் கற்ற இவர், பிறகு வீட்டில் இருந்தவாறு தாமே தமிழ் கற்கத் தொடங்கினார். பின்னர் மதுரைத் தமிழ்ச் சங்கம், மூன்று தேர்வுகளை நடத்தும் விவரம் அறிந்தார். அவற்றை எழுத விழைந்தார்.
1901ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி மதுரைத் தமிழ்ச் சங்கத்தை வள்ளல் பாண்டித்துரைத் தேவர் நிறுவினார். அச்சங்கத்தின் கீழ் பாண்டியன் புத்தகசாலை என்னும் நூல் நிலையமும் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை என்னும் தமிழ்க் கல்லூரியும் செந்தமிழ் என்னும் மாத இதழும் நிறுவப்பெற்றன.
இந்தத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் ஆகிய தனித்தமிழ்த் தேர்வுகளும் நடத்தப் பெற்றுள்ளன. ஒவ்வொரு தேர்விற்கும் இக்கலாசாலையில் இரண்டு ஆண்டுகள் படிக்கவேண்டும் என்ற விதியிருந்தது. இக்கலாசாலையில் படிக்காதோர், வெளியிலிருந்தும் தேர்வு எழுதலாம் என்ற விதிவிலக்கு இருந்தது.அதைப் பயன்படுத்தி நாட்டார் திருச்சியிலிருந்து தேர்வு எழுதினார்.
ஆண்டுக்கு ஒரு தேர்வு எழுதி மூன்றே ஆண்டுகளில் மூன்று தேர்வுகளிலும் முதல் மதிப்பெண்ணில் தேர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு இவர், ‘பண்டித’ ந.மு.வேங்கடசாமி நாட்டார் என அழைக்கப்பெற்றுள்ளார்.
திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் கோவையில் பணியாற்றிவிட்டு, மீண்டும் எஸ்.பி.ஜி. கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். திருச்சியில் பணியாற்றிய பின், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல்வராகவும பணிபுரிந்துள்ளார்.
1912இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாட்டாரின் வீட்டுக்கு வந்துள்ளார். சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் பொருள் விளங்கவில்லை என்று கேட்டு விளங்கிக்கொண்டார். தொல்காப்பியத்திலும் சில ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார்.
அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின் தந்தையார் அ.மு.சரவண முதலியார், நாட்டாரின் நண்பர். இருவரும் இணைந்து கழகத்தின் வேண்டுகோளின் பேரில் திருவிளையாடற்புராணத்திற்கு உரை எழுதியுள்ளனர். (இந்நூலாசிரியர் வே. நடராஜனும் அ.ச.ஞானசம்பந்தனும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தார், 1940ஆம் ஆண்டு நாட்டாருக்கு நாவலர் என்னும் பட்டம் அளித்துள்ளனர்.
இவருக்கு 60 ஆண்டு நிறைவதை ஒட்டி இவருக்கு மணிவிழா ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதற்கென மணிவிழாக் குழு ஒன்றும் அமைத்துள்ளனர். அதைக் கேள்வியுற்ற நாட்டார், ‘மணிவிழாக் குழு அமைத்திருக்கிறார்கள். கா.நமச்சிவாய முதலியார் போல எப்படி ஆகப் போகிறதோ’ எனக் கூறியிருக்கிறார். பெரும்புலவர் கா.நமச்சிவாய முதலியார், தம் மணிவிழா முடிவதற்கு முன்னரே மறைந்துவிட்டார்.
நாட்டாரின் மணிவிழாவை 8-5-1944 அன்று நடத்துவதாக மணிவிழாக் குழு முடிவு செய்திருந்தது. ஆனால், 28-3-1944 அன்றே நாட்டார் மறைந்தார். அவர் மணிவிழாவுக்காக வசூலித்த 1712-4-0(ரூ-அணா-பைசா) தொகையை அவருடைய நினைவு விழாவுக்குப் பயன்படுத்தினர்.
அவர் சமாதி வைத்த இடத்தில் ஒரு கோயில் எழுப்பியுள்ளனர். ( 1944ஆம் ஆண்டு ஒரு மூட்டை சிமெண்டு விலை 3 ரூபாய் 12 அணா. 1000 செங்கற்கள் விலை ரூ.18. கொத்தனார் கூலி ரூ.5.)
1984இல் நாட்டாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பெற்றது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ரூ.25ஆயிரம் செலவு செய்து 21-4-84 அன்றும் 22-4-84 அன்றும் கரந்தைத் தமிழ்ச்சங்க வளாகத்தில் தமிழவேள் உமாமகேசுவரனார் நூற்றாண்டையும் (ஓர் ஆண்டுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது) நாவலர் வேங்கடசாமி நாட்டார் நூற்றாண்டையும் நடத்தியது.
நாட்டாரின் கனவுகளில் ஒன்றான திருவருள் கல்லூரியை 1992ஆம் ஆண்டு பி.விருத்தாசலம் தொடங்கினார். இதற்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இசைவு வழங்கியுள்ளது. இதில் தேர்ச்சியடைந்தோர், இளமுனைவர், முனைவர் பட்டங்களுக்குத் தகுதியுடையவர் என்று இப்பல்கலை தெரிவித்துள்ளது.
தமிழில் பெரும்புலமை பெற்றவர்கள் இக்காலத்தில் மிகவும் அருகிவிட்டார்கள். பண்டைய நூல்கள் பலவற்றைப் பெயரளவில் அறிந்திருப்பதே இப்பொழுது வியப்பைத் தருவதாய் உள்ளது. ஆயினும் நாட்டார் அவர்கள், தமிழின் பழைய நூல்களை மிகவும் ஆழ்ந்து கற்றுள்ளார். சிக்கலான பாடல்களுக்கும் பொருளுணர்த்தியுள்ளார். முக்கியமாகத் தனி ஆசிரியரிடம் கல்வி பயிலாமல் தாமே முயன்று தமிழ் பயின்றுள்ளார். கடும் உழைப்பாளியான இவர், எளிய வாழ்க்கை நடத்தியுள்ளார். நாள்தோறும் நாட்குறிப்பும் எழுதியுள்ளார். அதில் பல முக்கிய நிகழ்வுகளைக் குறித்துள்ளார். மாணவர்களிடம் அன்புடன் பழகி, கற்றலின் மேல் ஆர்வம் மிகச் செய்துள்ளார்.
நமக்கு முந்தைய தலைமுறைகளின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன.
நாட்டாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியதன் மூலம், தமிழக அரசு ஒரு நற்பணியைச் செய்துள்ளது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு பதிப்பக வல்லோர், நாட்டாரின் படைப்புகளை மக்கள் அறியச் செய்திடல் வேண்டும். நாட்டாரின் உழைப்பையும் உயர் கருத்துகளையும் தமிழ்ச் சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

தொண்டைமான் செப்பேடுகள்

0 c
தொண்டைமான் செப்பேடுகள்
எழுத்தாளர் / தொகுப்பாளர் : இராசு.செ
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
விலை : 70 .00  In Rs
பிரிவு : தொல்லியல் ஆய்வு
பக்கங்கள் : 232
ISBN :
பதிப்பகம் : தமிழ்ப் பல்கலைக்கழகம்
முகவரி : திருச்சி சாலை


தஞ்சாவூர்   613005

இந்தியா
புதுக்கோட்டை, அறந்தாங்கி தொண்டைமான்கள் செப்பேடுகள் 48 ( 24 + 24 )அடங்கியுள்ளது. மாணிக்கவாசகர் அருள் பெற்ற திருப்பெருந்துறை பற்றிய 10 செப்பேடுகள் உள்ளன. மாணிக்கவாசகரை எழுந்தருளச்செய்து, பின்னே திருவாசகம் ஓதிச் சென்றதை ஒரு செப்பேடு கூறுகிறது. முதல் முறையாக அறந்தாங்குத் தொண்டைமான் அரச மரபு விளக்கம் பெறுகிறது.

ராஜராஜசோழன்...

0 c
ராஜராஜசோழன்...! இந்தத் திருப்பெயரைக் கேட்டாலே தமிழர்களின் நெஞ்சம், பெருமித உணர்வால் நிறையும். "செயற்கு அரிய செய்வார் பெரியர்' என்று பெருஞ் சாதனையாளர்களுக்கான இலக்கணத்தை வகுத்தார் திருவள்ளுவர். அவ்வகையில் பல அரிய சாதனைகளை நிகழ்த்திய பெரியோன், ராஜராஜசோழன் ஆவார்.
தனது ஆட்சிக் காலத்தில் சோழ சாம்ராஜ்ய எல்லைகளை விரிவுப்படுத்திப் பெரியதாக்கினார். பெரும் வீரனாக விளங்கினார்! இன்றளவும் உலகமே வியக்கும் அளவு மிகப் பெரிய சிவாலயத்தை தஞ்சையில் உருவாக்கினார். வடமொழி, தென் மொழி வல்லுநர்களை ஆதரித்த பெரிய மனம் படைத்தவராக விளங்கினார். பெருவுடையார் கோயிலில் மிகப் பெரும் கருவறை விமானத்தை அமைத்தார். பிரம்மாண்டமான பெரிய லிங்கத்தை கருவறையில் பிரதிஷ்டை செய்தார். தனது குருநாதராகிய கருவூர் தேவரிடம் பெரும் பக்தி உடையவராகத் திகழ்ந்தார்.
முடியாட்சியிலும் "குடவோலை' முறையில் தக்கோரைத் தேர்வு செய்த சீர்திருத்தப் பெரியவராய்த் திகழ்ந்தார். சைவத் திருமுறைகளில் பெரும்பற்று கொண்டிருந்தார். தில்லையில் இருந்த தேவாரப் பதிகங்களை ராஜராஜ சோழ மாமன்னர் மீட்டெடுத்தார் என்றொரு கர்ண பரம்பரைக் கதையுண்டு. ஆனால் இதைச் சில அறிஞர்கள் மறுத்துரைக்கின்றனர். எது எவ்வாறாயினும், தான் கட்டிய சிவாலயத்தில் தேவாரப் பதிகங்கள் பாட நாற்பத்தெட்டு ஓதுவார்களை இம்மாமன்னர் நியமித்ததாகக் கல்வெட்டொன்று தெரிவிக்கின்றது. இதனால் இவர் பெரும் சிவ பக்தர் என்பதும் நிரூபணமாகிறது.
அரசியல், ஆன்மீகம் தாண்டி கலைகளை வளர்ப்பதிலும் பேரார்வம் காட்டியவர் ராஜராஜ சோழன். முத்தமிழில் மூன்றாம் தமிழான நாடகக் கலையையும் வளர்ப்பதில் பெரு விருப்பம் காட்டினார் இப்பேரரசர்.
பெருவுடையார் ஆலயத்தின் சுற்றுப்புறத்தில் நானூறு வீடுகளைக் கட்டி, "தளிச்சேரி பெண்கள்' எனப்பட்ட நாட்டிய நங்கைகளைக் குடியமர்த்தினார். இந்தப் பகுதிகளுக்கு "தளிச்சேரிகள்' எனப் பெயரிட்டு, பரத நாட்டியக் கலையை ஊக்குவித்தார்.
இவ்வாறு பற்பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போக ஆதாரங்கள் நிறையவே உள்ளன. மொத்தத்தில் செயற்கரிய பெரும் சாதனைகளைப் படைத்த பேரரசர் ராஜராஜ சோழன் என்பதில் ஐயமே இல்லை.

மக்கள் தலைவர்!
பராந்தக சுந்தர சோழரின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் ராஜராஜன். இவரது இயற்பெயர், "அருள்மொழி வர்மன்' என்பதாகும். அன்றைய அரசியல் முறைப்படி இவரது அண்ணனாகிய, "இரண்டாம் ஆதித்தன்' என்பவரே பட்டத்து இளவரசராக இருந்தார். ஆதித்தனும் வீரத்தில் சளைத்தவரல்லர்! அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட வீரபாண்டிய மன்னரின் தலையைப் போர்க் களத்தில் ஆதித்த சோழர் கொய்ததாக வரலாறு கூறுகின்றது. பின்னர் இவர் வீரபாண்டியனின் மெய்க்காப்பாளர்களால் கி.பி. 969ல் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் என்கின்றனர். அதன் பின்னர் தனது மகளான குந்தவை பிராட்டியாரிடமும், மூன்றாவது மகனான அருள்மொழி வர்மனிடமும் பெரும் நம்பிக்கை வைத்து வாழ்ந்தார் சுந்தர சோழர். "சோழ சாம்ராஜ்யத்தின் எதிர்காலமே அருள்மொழியால் வளப்படும்' என்றவர் உறுதியாக நம்பியதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக கண்டராதித்த சோழரின் மகனான உத்தமசோழர் என்பவர் வசம் சோழ நாட்டை ஒப்படைக்கும் சூழ்நிலை உருவானது. "ராஜராஜனை அரசாளும் மோகம் ஆட்டிப் படைக்கவில்லை' என்றே அவரது வரலாற்றினை நுட்பமாக ஆராய்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் காலம், அவரை தலைமை ஏற்க வைத்தது.
இங்கே ஒரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். சுந்தர சோழரின் மூத்த மகனான ஆதித்த சோழரும் - கண்டராதித்த சோழரின் வாரிசான உத்தம சோழரும் வாழ்ந்த காலத்திலேயே அருள்மொழி வர்மருக்கு, மக்கள் செல்வாக்கு மகோன்னதமாக இருந்தது. அருள்மொழி வர்மரை "திருமாலின் அவதாரம்' என்றே அன்று சோழ அரசின் குடிமக்களில் பெரும்பாலானோர் கருதினர். திருவதிகையில் கிடைத்த கல்வெட்டொன்று, ""அருள்மொழியின் அங்கத்தில் காணப்படும் "சாமுத்ரிகா லட்சணங்கள்' அவரை மூவுலகும் ஆளும் திருமாலின் அம்சம் என்பதைத் தெளிவுப்படுத்துவதாய் உள்ளன'' என்றும் கருத்துபடப் பேசுகின்றது.
மக்களின் மகத்தான ஆதரவினால் சோழ சாம்ராஜ்யத்தின் அரசராக முடி சூட்டிக் கொண்டார், அருள்மொழி வர்மர் என்னும் முதலாம் ராஜராஜ சோழன். மக்கள், தன் மீது காட்டிய பேரன்பை மனதில் கொண்டே "குடவோலைத் தேர்தல்' முறையைத் தனது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தினார் போலும் இந்தப் பேரரசர்!

மும்முடிச் சோழர் :
பதவிக்கு வந்ததும், சோழ வம்சத்தின் பழம் புகழை மீண்டும் நிலைநாட்டி, அதை மேலும் வளர்த்திட வேண்டும் என்று உறுதி பூண்டார் ராஜராஜ சோழன். தங்களது அரச பரம்பரைக்கு எதிரிகளாக இருந்த சேர, பாண்டிய, சிங்கள மன்னர்களை வென்றொழிக்க முடிவு கட்டினார். இவர் நடத்திய "காந்தளூர் சாலைப் போர்' வரலாற்று பிரசித்தி பெற்றது. இப்போரில்தான் பாஸ்கர ரவி வர்ம சேரனின் கோட்டையைத் தகர்த்தெறிந்து, அந்நாட்டை தனது அரசாட்சியின் கீழ் கொணர்ந்தார். அன்றைய பாண்டிய மன்னன் அமரபுஜங்கனையும் வென்று புகழ் பெற்றார். சேர-பாண்டிய-சோழ மணிமுடிகளின் ஒரே உரிமையாளனாக மாறி, "மும்முடிச் சோழர்' எனப் போற்றப்பட்டார்.
தெற்கே இலங்கை, வடக்கே கங்க நாடு என்று தெற்கு பாரதத்தின் முக்கால்வாசி பிரதேசங்களையும் வென்றெடுத்து - குமரி முனை முதல் கலிங்க தேசம் வரை சோழ சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தினார். கடற்படையமைப்பதில் இம்மன்னருக்கிருந்த திறமை அளவிடற்கரியது. இத்தகைய பேரரசரே பக்தி நெறியிலும் தலை சிறந்தவராகத் திகழ்ந்தார். அதன் தலையாய வெளிப்பாடே தஞ்சைப் பெருவுடையார் கோயில்.

கேரளாந்தகன்:
தென்னிந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் விரும்பித் தேடி வரும் இடங்களில் ஒன்றாக தஞ்சைப் பெருவுடையார் கோயில் உள்ளது. வீரத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் ராஜராஜன் விளங்கியதை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். தான், கேரள அரசன் ரவிவர்மனை போரில் வென்றதை மனதில் கொண்டு, பெருவுடையார் கோயிலின் முகப்புக் கோபுரத்துக்கு, "கேரளாந்தன் வாயில்' என்றே பெயரிட்டார் ராஜராஜன்.
"அந்தகன்' என்ற சொல்லுக்கு, "பார்வையற்றவன்' என்பது பொருள். உயிர்களைப் பறிப்பதில் பாரபட்சம் காட்டாததால் யமதர்மனுக்கும் "அந்தகன்' என்ற பெயர் உண்டு. பார்வையற்றோர் எங்கும் இருளையே காண முடிவது, இயற்கை செய்த சதி! அப்படி இருள் மயமாயிருந்த "அந்தகாசுரன்' என்பவனையும், அந்தகனாகிய யமனையும் சம்ஹாரம் செய்தவர் சிவபெருமான் என்று புராணங்கள் கூறும். அதனால் முறையே "அந்தகாசுர மூர்த்தி' என்றும், "கால சம்ஹார மூர்த்தி' என்றும் பரமசிவத்துக்கு திருநாமங்கள் உள்ளன.
சிறந்த சிவபக்தராகிய ராஜராஜ சோழனும் தனது இஷ்ட தெய்வத்தின் திருப்பெயர்களின் சாயலிலே, "கேரளாந்தகன்' எனப் போற்றப்படுவதை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். "சிவபாத சேகரன்' என்பதும் இவருடைய பக்தியையும், அடக்கவுணர்வையும் பறை சாற்றும் புகழ்ப் பெயர்களில் ஒன்று! ஆயினும் தனது வீரத்தை உறுதிப்படுத்தும் விதத்தில், பெருவுடையார் கோயிலின் முகப்புக் கோபுரத்துக்கு "கேரளாந்தகன் வாயில்' என்று பெயரிட்டார்.

பெருவுடையார் கோயில்:
கி.பி. 985-ல் பெருவுடையார் கோயிலைக் கட்ட ஆரம்பித்து, கி.பி. 1010-ல் நிறைவு செய்தார் ராஜராஜ சோழன். "கேரளாந்தகன் கோபுரம்' தாண்டி உள்ளே சென்றால், "ராஜராஜன் வாயில்' என்ற பெயரில் மற்றொரு ராஜ கோபுரத்தைக் காணலாம். அதனுள்ளே நுழைந்தால் பிரம்மாண்ட நந்தியெம்பெருமான் மண்டபமும், வலது புறத்தில் ஸ்ரீபிருஹன் நாயகி சந்நிதியும், நேரே 216 அடி உயரமுள்ள விண் முட்டும் கருவறை விமானத்துடன் கூடிய ஸ்ரீபிரகதீஸ்வரர் சந்நிதியும் காட்சியளித்து, நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.
கருவறை விமானத்துக்கு, "தட்சிண மேரு' என்று பெயரிட்டுள்ளார் ராஜராஜ சோழன். வடக்கே மேருமலை உள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதனால் இக்கருவறை விமானத்தை, "தெற்கில் உள்ள மேரு' என்றழைத்துள்ளார் பேரரசர். தட்சிண மேரு முழுவதற்கும் பொன் பூசிய தகடுகளை ராஜராஜ சோழன் வேய்ந்திருந்ததாகச் சொல்கின்றனர். இதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பூரிக்கின்றது. ஆனால் பிற்காலப் படையெடுப்புகளில் இத்தகடுகள் களவாடப்பட்டிருக்கலாம்.
கருவறையில் பதிமூன்றடி உயரமும், அதற்கேற்ற ஆவுடையாரும் உடைய பிரம்மாண்டமான சிவலிங்கத்தை தரிசிக்கின்றோம். கருவறையின் பக்கவாட்டில் உள்ள புறச்சுவர்களும் பிரமிப்பூட்டும் வண்ணம் அமைந்துள்ளன. அவற்றில் அமைந்துள்ள பெரும் சிற்பங்களும், கீழ்ச்சுற்று அறையின் சுவரில் காணப்படும் சோழர் கால ஓவியங்களும், "தட்சிண மேரு'வில் உச்சியில் காணப்படும் 12 அடி உயர கலசமும், ஏன் ஆலயத்தின் அனைத்து அம்சங்களுமே ராஜராஜ சோழனின் பெரும் புகழை உள்ளத்தில் பதியும்படி உணர்த்துகின்றன.
இக்கோயிலில் தற்போது காணப்படும் சில கோட்டங்கள், நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டவை என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து. ஆனால், "எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்பது போல், பொதுமக்கள், அனைத்தையும் ராஜராஜ சோழனின் அரும்பணியாகவே மதித்து ஆராதிக்கின்றனர்.

ஆயிரமாண்டு நிறைவு விழா:

தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா, இன்றிலிருந்து துவங்கி, நாளது 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சிறப்புக் கண்காட்சி, ஆய்வரங்கம், நாட்டியாஞ்சலி, ராஜராஜ சோழன் வரலாற்று நாடகம், ஓதுவார்களின் திருமுறை நிகழ்ச்சி என அற்புதமான அம்சங்களோடு இப்பெருவிழா கொண்டாடப்படவுள்ளது.
தமிழர்களின் பெருமையை தரணி அறியச் செய்த ராஜராஜ சோழனின் திருப்புகழ், மேலும் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. வாழிய செந்தமிழ்! வாழிய மும்முடிச் சோழர்!

(படங்கள் - நன்றி : டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியன்)
© Copyright 2008 Dinamani
thanks to dinamani

காங்கேயர்---- என்ற கள்ளர் அரச குலத்தினர்

0 c
கள்ளர் குல பட்டங்கள். 
 கா எழுத்தில் பட்டப்பெயர்கள்
0285. காங்கயார், காங்கயர், காங்கெயர், காங்கேயர், காங்கியர்
thanks to http://internationalkallarperavai.blogspot.com/2009/12/kallar-ena-patta-peyargal.html


 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொப்பண்ணக்கோட்டை

முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் புதன், 27 ஜனவரி 2010 18:22 
thanks to  http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=2538&Itemid=139
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத் தமிழகத்தில் பல நகரங்கள் கோட்டை, கொத்தளங்கள், அகழிகள் சூழத் திகழ்ந்ததை பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்கள் விளக்கமுற எடுத்துரைக்கின்றன.

உறையூர், நான்மாடக்கூடல் எனும் மதுரை, கரூவூர் வஞ்சி ஆகிய மூவேந்த~களின் தலை நகரங்களும், பல குறுநில மன்னர்களின் தலைமை ஊர்களும் அகழிகள் சூழப் பெற்ற கோட்டைகளுடன் திகழ்ந்தன என்பதை இலக்கியம் பகரும் எண்ணற்ற சான்றுகள் வழி அறியலாம். பிற்கால வரலாற்றிலும், தமிழகத்தில் அகழிகள் சூழ்ந்த பெரு நகரங்களாக காஞ்சி, தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம், மதுரை ஆகிய நகரங்கள் விளங்கின. ஆனால் அங்கு திகழ்ந்த அரண்மனைகளும், அவற்றைச் சூழ்ந்து அமைந்த கோட்டை, அகழி ஆகியவைகளும் கால வௌ;ளத்தில் கரைந்து அவை இருந்த சுவடுகள் கூட இல்லாமல் மறைந்து விட்டன.

வல்லம் கோட்டை(தஞ்சை)

சங்க காலத்தில் திகழ்ந்த வல்லம் கோட்டை(தஞ்சை) கி.பி. 1850க்குப் பிறகு தான் சுவடு அழிந்தது. இருப்பினும் அதனைச் சூழ்ந்து திகழ்ந்த அகழியின் ஒரு பகுதி மட்டும் இன்றும் காட்சி தருகின்றது. ஆனால் சங்க காலத்துக் கோட்டை ஒன்று முழு தடயத்தோடு புதுக்கோட்டைக்கு அருகில் இருப்பது பலரும் அறியாத செய்தியாகும்.
புதுக்கோட்டையும் பழைய கோட்டையும்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த பகுதிகளின் சான்றுகளை மிகுதியாகப் பெற்றுள்ள மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டமே என்பது குறிப்பிடத்தக்கதாகும். திருமயம் வட்டம் குருவிக் கொண்டான்பட்டி எனும் ஊரில் கிடைத்த பழைய கற்கால ஆயுதமொன்று சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென வல்லுநர்கள் உறுதி செளிணிதுள்ளனர். புதுக்கோட்டையை ஒட்டி அமைந்துள்ள சித்தன்னவாசல், அன்னவாசல், ஒலியமங்கலம் போன்ற இடங்களில் பெருங்கற்சின்னங்கள் எனப் பெறும் இறந்தோரின் நினைவுச் சின்னங்கள் அதிக அளவில் இன்றும் காணப்பெறுகின்றன. சங்கத் தமிழ் நூல்களில் குறிப்பிடப் பெறும் கோனாடு, ஒல்லையூர் கூற்றம் என்பவை தற்போதைய புதுக்கோட்டை நகரம் சார்ந்த பகுதிகளேயாகும்.

பாண்டியர்களின் கல்வெட்டுகளில் ‘புதுக்கோட்டை அரையர்கள்’ என்ற குறிப்பு காணப் பெறுகின்றது. பிற்காலத்தில் தொண்டைமான் மன்னர்களின் நாடாக விளங்கிய புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தலைநகராக கி.பி.1686லிருந்து இந்நகரம் விளங்கிற்று. ஏறத்தாழ கி.பி.1650க்குப் பிறகே புதுக்கோட்டை திட்டமிட்டு விரிவு பெற்ற ஒரு நகரமாக உருவாக்கம் பெற்றது. இந்நகரத்தின் கிழக்கில் அமைந்த கலசமங்கலம் (திருக்கட்டளை) மேற்கில் திகழும் திருவேட்பூர், திருக்கோகர்ணம் ஆகிய ஊர்கள் பழமைச் சிறப்பு வாய்ந்தவையாகும்.

பொப்பண்ண கோட்டை

தற்போதைய புதுக்கோட்டை நகரத்தின் அரண்மனை கோட்டை, அவை சார்ந்த குடியிருப்புக்கள் ஆகியவை கட்டுமானங்களாக உருப்பெறுவதற்கு அடிப்படையாய் விளங்கியது, இந்நகரத்திற்கு கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான கோட்டையின் மதிற்சுவர்களும் மற்ற செங்கற்கட்டுமானங்களுமே ஆகும். அப்பழைய கோட்டையின் பெயர் பொப்பண்ண கோட்டை என்பதாகும்.

மக்கள் வழக்கில் தற்போது அக்கோட்டை பொற்பனைக் கோட்டை என்று அழைக்கப் பெறுகின்றது. இக்கோட்டையின் மேற்குத் திசையில் அமைந்துள்ள பொப்பண்ண முனீஸ்வரர் என்ற காவல் தெய்வமே தற்போதைய புதுக்கோட்டை நகரத்தவர்க்கு கண்கண்ட காவல் தெய்வமாகும். பொற்பனை ஈஸ்வரன் கோயிலின் பனை மரங்கள் பொன்னால் ஆன காய்களை காய்த்ததாக ஒரு புராணக் கதையைக் கூறி அந்தத் தெய்வத்திற்கு பொற்பனை முனீஸ்வரன் என்றும், அங்குள்ள கோட்டையை பொற்பனைக் கோட்டை என்றும் மக்கள் அழைக்கலாயினர். ஆனால் அந்தக் கோட்டைதான் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார்க்கு சோறிட்டு ஆக்கம் தந்தவர் வாழ்ந்த கோட்டை என்ற செய்தி தமிழ் கூறு நல்லுலகம் அறியாத செய்தியாகும்.

சங்க காலக் கோட்டை
பல நூறு ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியதாய் அமைந்த வட்ட வடிவ மண் கோட்டை, சுற்றிலும் அமைந்த அகழி ஆகியவற்றோடு தற்போது காணப்பெறும் பொப்பண்ண கோட்டை ஏறத்தாழ 50 அடி உயரமும், 50 அடி அகலமும் உடைய மண்மேடுடைய கோட்டையாக விளங்குகிறது. அகலமான இம்மண் கோட்டை மீது செங்கல்லால் அமைந்த நெடுமதில் முன்பு இருந்து காலப் போக்கில் இயற்கையின் சீற்றங்களாலும், மனிதர்களின் தேவையாலும் அழிந்துவிட்டது.

புதுக்கோட்டை நகர நிர்மாணத்திற்கு இக்கோட்டை செங்கற்களையே முழுதும் பயன்படுத்தியுள்ளனர். தற்போது அம்மதிலின் அடித்தளமும், உடைந்த செங்கற் குவியல்களுமே மண்கோட்டை மீது காணப் பெறுகின்றன. இக்கோட்டையின் உள்ளும், புறமும் மண்கோட்டையின் பல இடங்களிலும் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு, சிகப்பு பானை ஓடுகள் மணிகள் போன்ற தொல்லியல் சான்றுகள் மிகுந்து காணப் பெறுகின்றன. அக்காலம் தொடங்கி சுமார் 500 ஆண்டு காலத்திற்கு முன்பு வரை அக்கோட்டையில் தொடர்ந்து குடியிருப்புகள் இருந்துள்ளதற்கான பல்வேறு தொல்லியல் சான்றுகள் இக்கோட்டைப் பகுதி முழுவதும் கிடைக்கின்றன. கோட்டை மீது காணப்பெறும் செங்கற்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற்கள் என்பதோடு அவை பூம்புகார், உறையூர் ஆகிய பகுதிகளில் அகழ்வாய்வில் கிடைத்த செங்கற்களையே முழுதும் ஒத்து காணப் பெறுகின்றன.
பொப்பண்ண கோட்டையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கலசக்காடு எனும் ஊர் முற்காலத்தில் கலசமங்கலம் என அழைக்கப் பெற்றது. அங்கு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூற்றுக் கணக்கான ஈமச் சின்னங்கள் காணப் பெறுகின்றன. கற்பதுக்கை எனப் பெறும் கற்குவியலாக அமைந்த ஈமச் சின்னங்கள், சுற்றிலும் இரு வட்டங்களாக கற்பாறைகள் திகழ நடுவே அமைந்த ஈமப் பேழைகள் என கலசக்காடு முழுவதும் பெருங்கற்கால சான்றுகள் நிறைந்துள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து நோக்கும் போது தமிழகத்தில் இன்று முழுமையாக (முழுவட்ட வடிவில்) காணப்பெறும் ஒரே சங்ககால கோட்டை இதுவேயாகும்.

தமிழ் வளர்த்த காங்கேயர்கள்

சோழர் வரலாற்றில் விக்கிரம சோழன் காலந்தொட்டு காங்கேயர் என்ற பட்டம் புனைந்த குறுநில அரச மரபினரின் செல்வாக்கு தொடர்ந்து நிலைபெற்றது. பின்னர் மாறவர்மன் முதலாம் சுந்தர பாண்டியன் (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) காலந்தொட்டு பாண்டியர்களின் பிரதிநிதிகளாக திருமயம், குடுமியான்மலை, ஆலங்குடி உள்ளிட்ட புதுக்கோட்டை பகுதியின் ஆட்சியாளர்களாக விளங்கியவர்கள் காங்கேயர்கள் ஆவர். மூன்று பெரும் சோழப் பேரரசர்களுக்கு அவைக்களப் புலவராய் இருந்த கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தருக்கு காங்கேயன் ஒருவன் புரவலனாக விளங்கியதால் கூத்தர் அக்காங்கேயனைப் புகழ்ந்து “நாலாயிரக் கோவை” எனும் நூலில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இராஜேந்திர சோழ காங்கேயராயன் என்பான் விக்கிரம சோழனின் ஆட்சியாளனாய் திருக்காளத்திப் பகுதியை ஆட்சி செய்தவனாவான். குடுமியான்மலை சிவாலயத்தில் “காங்கேயராயன் திருமண்டபம்” என்ற பெயரால் அழகிய மண்டபம் ஒன்று திகழ்ந்ததைச் சுந்தர பாண்டியனின் பதிமூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு கூறுகின்றது. பிள்ளையார்பட்டி சிவாலயத்தில் காங்கேயராயன் சந்தி என்ற பெயரில் சிறப்பு பு+சை நிகழ்த்தப் பெற்றதை சுந்தர பாண்டியனின் மற்றொரு கல்வெட்டு கூறுகின்றது.

கண்டன் உதையஞ்செய்தான் காங்கேயன், 
ஆற்றூருடையான் பொன்னன் காங்கேயன், 
கண்டன் அக்கணி பெருமாள் காங்கேயன், 
காங்கேயராயன், 
கண்டன் அழகுகண்ட பெருமாள் காங்கேயன், 
உடையார் காங்கேயராயர் 

எனப் பல காங்கேயர்கள் புதுக்கோட்டைப் பகுதியின் ஆட்சியாளர்களாய் விளங்கியதைக் கல்வெட்டுச் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன. கி.பி. 13-14 ஆம் நூற்றாண்டுகளில் புதுக்கோட்டைப் பகுதியில் இவர்களது செல்வாக்கு சிறந்து திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பொப்பண்ண காங்கேயன்
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார்க்கு ஆக்கமளித்து தமிழ் செய்ய உதவியவன் பொப்பண்ண காங்கேயன் என்பான் என்பதை, அந்நூலின் பாயிரத்தில் ,

“காற்றைப் பிடித்துக் கடத்திலடைத்த கடிய பெருங்
காற்றைக் குரம்பை செய்வார் செய்கை போலு மற்காலமெனும்
கூற்றைத் தவிர்த்தருள் பொப்பண்ண காங்கேயர் கோனளித்த
சோற்றுச் செருக்கல்லவோ தமிழ் மூன்றுரை செய்வித்ததே”
எனக் காணப் பெறும் இப்பாடல் எடுத்துக் கூறுகின்றது.

எனவே அடியார்க்கு நல்லார் எனும் அருந்தமிழ்ப்புலவனுக்கு சோறிட்டு தமிழ் செய்த பொப்பண்ண காங்கேயன் வாழ்ந்த கோட்டைதான் புதுக்கோட்டைக் கருகிலுள்ள “பொப்பண்ண கோட்டை” என்பதில் ஐயமில்லை. கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளில் சிலப்பதிகாரத்தைக் காத்தவன் வாழ்ந்த பொப்பண்ண கோட்டை இரண்டாயிரம் ஆண்டு பழைமையுடைய கோட்டை என்பதும் தனிச்சிறப்பாகும்.
வானூர்தியிலிருந்து கீழ்நோக்கிப் பார்க்கும்போது இக்கோட்டையின் மாட்சிமை நமக்குப் புரியும். அங்குள்ள செங்கற்களும், பானை ஓடுகளும், மணிகளும், ஈமச்சின்னங்களும், 2300 ஆண்டு கால தொடர் வரலாற்றை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. புரிசை, கோட்டை, மதிலரண், இஞ்சி எனப் பல பெயர்களால் குறிக்கப் பெறும் இரண்டாயிரம் ஆண்டு வயதுடைய இக்கோட்டையைக் காப்பது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.

- முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம்

நிலமளந்த இராசராசன்

0 c
முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் செவ்வாய், 16 நவம்பர் 2010 19:43 
thanks to http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11461:2010-11-16-14-16-22&catid=25:tamilnadu&Itemid=137

தமிழக வரலாற்றில் சோழராட்சிக் காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது. இதற்கு அடிப்படைக் காரணமாய்த் திகழ்ந்தவன் மாமன்னன் இராசராச சோழனாவான். அப்பெருமகனின் மகத்தான சாதனைகளில் குறிப்பிடத்தக்கவை நிலமளந்து நாட்டுப் பகுப்பு செய்தமையும், ஊர்ச் சபைகளும் மக்களும் பயன் பெற திருக்கோயில்களில் பொதுவுடைமை வங்கிகளைச் செயல்படுத்தியமையும் ஆகும்.  இராசராசனின் ஆட்சிக் காலத்திற்கு முன்பு சோழநாடு, நாடு அல்லது கூற்றம் என்ற பிரிவுகளைக் கொண்டு திகழ்ந்தது. 
சோழ மண்டலம்
      தொன்மைக் காலத்திலிருந்தே சோழ நாடு என்றழைக்கப்பட்ட பெயர் முதன்முதலில் இராசராசன் காலத்தில்தான் ‘சோழமண்டலம்’ என்றழைக்கப் பட்டது. இதனை இம் மன்னனது 23ஆம் ஆட்சி யாண்டின் 35ஆம் நாளில் வரையப்பட்ட கல்வெட்டொன்று எடுத்தியம்புகிறது.  எனவே ‘சோழ மண்டலம்’ என்ற சொல்லாட்சி கி.பி. 1009 இலிருந்து தான் காணப் படுகிறது. இக்கல்வெட்டு தென் ஆர்க்காடு மாவட்டம், விழுப்புரம் வட்டம், திருவாமாத்தூர் அபிராமேசுர சுவாமி திருக்கோயிலில் உள்ளது.  இச்சாசனத்தில் ‘சோழ மண்டலத்து அருமொழித் தேவ வளநாட்டு மங்கள நாட்டுப் புதுக்குடி’ எனும் ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது.  
      சோழ நாடு பல உட்பிரிவுகள் கொண்ட நாடுகள் அல்லது கூற்றங்களாகப் பிரிக்கப்பட்டிருந்ததை இப்பெரு மன்னன் மாற்றி அமைத்து, சோழ நாட்டை மிகப் பரவலாக விரிவடையச் செய்து அதற்குச் சோழ மண்டலம் எனும் பெயரைச் சூட்டி, பின்பு இம் மண்டலத்தைப் பல வளநாடுகளாகப் பிரித்து, ஒவ்வொரு வளநாட்டையும் நாடு அல்லது கூற்றங் களாகவும், அவற்றை ஊர்ச் சபைகளாகவும் பிரிக்கச் செய்தனன். 
      இம்மன்னனது மற்றுமொரு சாதனை, இவன் தன் ஆட்சியின் 16ஆம் ஆண்டாகிய கி.பி.1001 இல் சோழ மண்டலம் முழுவதையும் அளக்குமாறு செய்தான். 
      மேலும், இம்மன்னனது காலத்தில் சோழநாடு, சோழ மண்டலம் ஆனது போல், தொண்டை நாடு - செயங்கொண்ட சோழ மண்டலமென்றும், பாண்டி நாடு - இராச ராச மண்டலமென்றும், நுளம்பபாடி - நிகரிலி சோழ பாடியாகவும், ஈழம் - மும்முடிச் சோழ மண்டலமாகவும் பெயர் மாற்றம் பெற்றன. இவனது மைந்தன் இராசேந்திரன் காலத்தில் கங்கபாடி - முடி கொண்ட சோழ மண்டலமென்றும், தடிகை பாடி - விக்கிரம சோழ மண்டலமென்றும், நுளம்பபாடி நிகரிலி சோழ மண்டலமென்றும் பெயர் மாற்றங்கள் பெற்றமை யோடு இம்மன்னர்களின் அதிகாரிகளான ‘மண்டல முதலிகளால்’ அரசு நிருவாகம் மேற்கொள்ளப்பட்டது. 
சோழ மண்டல எல்லை
“கடல்கிழக்கு தெற்குக் கரைபுரள  வெள்ளாறு 
குடதிசையில் கோட்டைக் கரையாம் வடதிசையில் 
ஏணாட்டு வெள்ளாறு இருபத்து நாற்காதம் 
சோணாட்டுக்கு எல்லையெனச் சொல்”
       என்று சோழ மண்டலச் சதகம் குறிப்பிடுகிறது. 
      இப்பாடல் மற்றும் சோழப் பெருமன்னர்களின் கல்வெட்டுக் குறிப்புகள் ஆகியவற்றைத் தொகுத்து நோக்கும்போது சோழ மண்டலத்து எல்லையாகக் கிழக்கே வங்கக் கடலும், மேற்கு எல்லையாகக் கொல்லி மலையிலிருந்து புறப் பட்டுத் தெற்கு நோக்கிப் பாய்ந்து காவிரியில் கலக்கும் கரைப் போத்தனாறும், (இது திருச்சி நாமக்கல் பெருவழியில் முசிறிக்கு மேற்கே 12 கல் தொலைவில் உள்ளது) காவிரிக்குத் தென்கரையில் குளித்தலைக்கு மேற்கே திருக்காம் புலியூரை ஒட்டிய கோட்டைக் கரையும், வட எல்லையாகத் தென் ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள ஏணாட்டு வெள்ளாறும், தென் எல்லையாகப் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்குத் தெற் காகச் செல்லும் வெள்ளாறும் ஆகும். 
      பழைய சோழ நாடு விரிவடைந்து சோழ மண்டலமாக அழைக்கப்பட்டபோது இதனுடன் வடதிசையில் இணைந்த ஒரு பகுதி ‘நடுவில் நாடு’ என அழைக்கப் பட்டது. இப்பகுதி கொள்ளிடத்தின் வட கரைக்கும் பெண்ணையாற்றின் தென் கரைக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இது இராசேந்திர சோழ வளநாடு. கங்கை கொண்ட சோழ வளநாடு, இராசராச வளநாடு என்ற மூன்று வளநாட்டுப் பகுதி களைத் தன்னுள் கொண்டு திகழ்ந்தது. திருவண்ணாமலை, செஞ்சி, திண்டிவனம் என அழைக்கப்படும் வட்டங்கள் அக்காலத்தில் முறையே வாண கோப்பாடி, சிங்கபுர நாடு, ஓய்மா நாடு என்ற பெயர்களில் சோழ மண்டலத்தின் வட பகுதிகளாகத் திகழ்ந்தன. சோழ மண்டலத்து நடுவில் நாடு கி.பி.13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி யிலிருந்து ‘நடுவில் மண்டலம்’ என்ற பெயர் மாற்றம் பெற்றுச் சோழ மண்டலத்திலிருந்து பிரிந்து தனி மண்டல மாயிற்று. 
      இராசராசன் (கி.பி. 985-1014) காலத்திலிருந்துதான் சோழ மண் டலம் வளநாடுகளாகப் பிரிக்கப் பட்டு, அவை நாடு அல்லது கூற்றங் களாகவும் பிரிக்கப்பட்டதைக் கண் டோம். ஒவ்வொரு நாட்டுப் பகுதி யிலும் (கூற்றத்திலும்) பல ஊர்ச் சபைகள் அடங்கியிருந்தன.  வள நாடு என்ற அமைப்பு மாவட்டத் திற்கும் நாடு அல்லது கூற்ற மென்பது வட்டம் அல்லது தாலுக்கா என்ற தற்போதைய நாட்டுப் பிரிவு களுக்கும் ஒப்பானவை யாகும்.  சோழ மன்னர்கள் தாங்கள் பெற்ற சிறப்பு விருதுப் பெயர்களையே வளநாடுகளுக்குப் பெயர்களாக இட்டனர். 
      எடுத்துக் காட்டாக இராச ராசனின் விருதுப் பெயர்களாக கேரளாந்தகன், பாண்டிய குலாசனி, சத்திரியசிகாமணி, அருண்மொழித் தேவன் முதலான பெயர்கள் வள நாடுகளுக்குச் சூட்டப் பெற்றுள்ளன.  இதே போன்று சோழ அரசியர்களான தரணிமுழுதுடையாள், உலமுழுது டையாள், உலகுடை முக்கோக் கிழானடி, முதலான பல பெயர்களும் வளநாடுகளுக்குச் சூட்டப் பெற் றுள்ளன.  ஒரு மன்னன் காலத் திலிருந்த வளநாட்டுப் பெயர் மற்றொரு மன்னனால் மாற்றப் பட்டது. எடுத்துக்காட்டாக சத்திரிய சிகாமணி வளநாடு என்ற முதல் இராசராசன் காலத்து வளநாடு முதற் குலோத்துங்கன் காலத்தில் குலோத் துங்க சோழ வளநாடு எனப் பெயர் மாற்றம் பெற்றது. அனைத்துச் சோழ மன்னர்களின் கல்வெட்டு களையும் தொகுத்து நோக்கும் போது 48இற்கும் மேற்பட்ட வளநாட்டுப் பெயர்கள் நமக்குக் கிடைக்கின்றன. 
திருக்கோபுரத்தில் உலகளந்த கோல்
      நாகை மாவட்டம் திருவாவ டுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான திருவாலங்காடு வடவாரன்யேஸ் வரர் திருக்கோயிலின் இரண்டாம் கோபுர வாயில் உட்புற அதிஷ் டானத்தில் முதலாம் இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டொன்று காணப் பெறுகின்றது. அதில், “ஸ்வஸ்திஸ்ரீ திருவுலகளந்த கோலுக்கு தஞ்சாவூர் உடையார் ராஜ ராஜீஸ்வரமுடையார் கோயில் கல்வெட்டுப் படி ஒப்பிட்டு வந்த கோல்படி” என்ற சொற்றொடர் ஒரே நீண்ட வரியில் எழுதப் பெற்றி ருப்பதோடு, அவ்வரிக்கு நேர் எதிராகச் சற்றுத் தள்ளி ஒரு நட்சத்திரக் குறியீடும் காணப் பெறுகின்றது. 
      1926 ஆம் ஆண்டில் இந்தியக் கல்வெட்டுத் துறையினர் இக்கல்வெட்டைப் (எண் 97/1926) பதிவு செய்திருந்த போதும் இது வரை அதன் வாசகமோ அல்லது கோலின் அளவோ வெளியிடப் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.  இக்கல்வெட்டைப் படி எடுத்து, அதில் குறிக்கப் பெற்றுள்ள அளவீடு தஞ்சைப் பெரிய கோவி லான இராஜராஜேச்சரத்தில் கல் வெட்டாகக் காணப் பெறுகின்றதா என ஆராய முனைந்த போது அக்கோயிலின் இரண்டாம் கோபுர மான இராஜராஜன் திருவாயிலின் உட்புற அதிஷ்டானப் பகுதியில் மூன்று குறியீடுகளுடன் அளவுகோல் குறிக்கப் பெற்றிருப்பது கண்டறியப் பட்டது. 
      மாமன்னன் முதலாம் இராசராச சோழனின் சாதனைகளுள் தலையாயதாகப் போற்றப் பெறுவது சோழ மண்டலம் முழுவதையும் அளந்தமையாகும். 
      தன் ஆட்சிக்குட்பட்ட நிலப் பரப்பை உள்ளவாறு அளந்து பதிவு செய்தாலன்றி, நில நிர்வாக அமைப்புச் செம்மையாகச் செயல்பட முடியாது என்பதை உணர்ந்த அப்பேரரசன் தன் ஆட்சியின் 16 ஆம் ஆண்டாகிய கி.பி.1001 இல் சோழ மண்டலம் முழுவதையும் அளக்கு மாறு ஆணையிட்டான். அப்பணி குரவன், உலகளந்தான், இராஜராஜ மாராயன் தலைமையில் தொடங்கப் பெற்று இரண்டாண்டுகளில் நிறை வேறியது.  அப்பணிக்குப் பயன் படுத்தப் பெற்ற நில அளவைக் கோல் பதினாறு சாண் நீளமுடையது எனப் பிற்காலச் சோழர் வரலாறு எழுதிய வை.சதாசிவ பண்டாரத்தார் தம் நூலில் (பக். 129) குறிப்பிட்டுள்ளார். அதற்கான சான்றுகள் ஏதும் அவரால் குறிப்பிடப் பெறவில்லை. 
      இராசராசசோழனுக்குப் பின்பு முதலாம் குலோத்துங்கச் சோழன் மீண்டும் ஒரு முறை சோழநாடு முழுவதையும் அளந்து நில அளவை முறையை ஒழுங்குப் படுத்தினான்.  அப்பணி கி.பி.1086 ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்று இரண்டாண்டுகளில் முடிவெய்தியது என்பதைக் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன.  அவற்றில், “நம் உடையார் சுங்கந்தவிர்ந்தருளின குலோத்துங்க சோழ தேவர்க்கு 16ஆவது திருவுலகளந்த கணக்குப் படி நீக்கல் நீங்கி” - என்றும் “சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழ தேவர்க்குப் பதினாறாவது அளக்கக் குறைந்த நிலம்” என்றும் அந் நிகழ்வுகள் குறிக்கப் பெற்றுள்ளன. 
      திருவாலங்காட்டுக் கல் வெட்டின்படி உலகளந்த கோலின் அளவு 128.5 அங்குலம் உள்ளது என்பதும், தஞ்சையில் காணப் பெறும் குறியீடுகளின் முதல் இரண்டு குறியீடுகளுக்கிடையே உள்ள தூரம் 128.5 அங்குல மாகவும், இரண்டாம் குறியீட் டிற்கும் மூன்றாம் குறியீட் டிற்கும் இடையே உள்ள அளவு 29 அங்குலமாக இருப்பதும் அறியப் பட்டது. 
      இவ்வேந்தன் ஆணையின் படி அப்பணியை நிறைவேற்றி யவர்கள் திருவேகம்பமுடை யானான உலகளந்த சோழப் பல்லவராயன், குளத்தூருடையான் உலகளந்தானான திருவரங்க தேவன் என்போராவர் என்றும், அப்பெரு வேந்தனது கல் வெட்டுகள் வழி அறிய முடிகிறது.  இச்சான்றுகளால் சோழப் பெரு வேந்தர்களின் ஆட்சிக் காலத்தில் இருமுறை சோழ மண்டலம் துல்லியமாக அளக்கப் பெற்றது என்பதறிய முடிகிறது. 
தஞ்சைக் கல்வெட்டுக்களில் கீழ்க்கணக்கு 
      தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் மா மன்னன் இராசராசன் அளந்த பல ஊர்களின் பட்டியல் காணப் பெறுகின்றது.  அக்கல்வெட்டுக்கள் வரிசையில் ஒரு கல்வெட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாலையூர் என்ற ஊரின் மொத்த பரப்பளவைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. 
      “தெக்கடுவாயான அரு மொழி தேவவளநாட்டு இங் கணாட்டு பாலையூர் பள்ளியுங் கணி முற் றூட்டும் உட்பட அளந்த படி நிலம் நூற்றுமுப்பது நான்கேய் எட்டுமா வின் கீழ் முக்காலே மும்மா வரையரைக் காணி முந்திரிகைக் கீழ்நான்குமா” என்பது கல்வெட்டு வாசகமாகும். 
      இது 130 வேலியும் சொச்ச முமாகும். ஒரு வேலிக்குக் கீழ் அளவாக - ‘மா’வும், பிற சிறு அளவுகளும் குறிப்பிடப் பெற் றுள்ளன. சிறு அளவுகளை அக் காலத்தில் ‘கீழ்க்கணக்கு’ எனக் குறிப்பிட்டனர். அந்த அளவுகளின் பட்டியலை இனிக் காண்போம். 
கீழ்க்கணக்கு 
1 மா        - 1/20 வேலி 
அரைமா     - 1/40 
முக்காணி   - 3/80 
காணி -- 1/80 
அரைக்காணி - 1/160 
முந்திரி     - 1/320 
கீழ் முக்கால் - 3/1280 
கீழ் அரை    - 1/640 
கீழ் கால்    - 1/1250 
கீழ் நாலுமா - 1/1600 
கீழ் மூன்று வீசம்   -3/5120 
கீழ் மும்மா        -3/6400 
கீழ் அரைக்கால்    - 1/2560 
கீழ் இருமா        - 1/3200 
கீழ் வீசம்          - 1/5120 
கீழ் ஒருமா        - 1/6400 
கீழ் முக்காணி      - 3/25600 
கீழ் அரைமா       - 1/12800 
கீழ்க்காணி         - 1/25600 
கீழ் அரைக்காணி   - 1/51200 
கீழ் முந்திரி        - 1/1,02,400 
      ஒரு வேலி நிலத்தில் கீழ் முந்திரி என்னும் சிறு அளவான ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து நானூறு என்ற அளவில் கூட நிலத்தை அளந்து பதிவு செய்துள்ளனர் என்பதை இராசஇராச சோழனின் தஞ்சைக் கோயிலிலுள்ள பல கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன.  
      சோழ மண்டலம் முழு வதையும் அளந்த அப்பெருமகன் முறையான பதிவேடுகளில் அவற்றைப் பதிவு செய்ததோடு அதற்கென தனித் துறையையும் கொண்டு நாட்டு மக்களுக்கு நல்லதொரு குடியாட்சியும் நல்கினான்.  அப்பெருமகனின்  சாதனைகள் முழுவதும் தஞ்சைப் பெரிய கோயிலில் கல்லெழுத்துச் சாசனங்களாகக் காட்சி நல்குகின்றன.
(தமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் 2010 இதழில் வெளியானது)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் பாசன முறை

0 c
முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் திங்கள், 12 அக்டோபர் 2009 03:30 
thanks to http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=770&Itemid=139
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பாசன நீர் நிர்வாகத்தில் சிறந்து விளங்கினர். குமிழித் தூம்புகள் இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன என்று வரலாற்று ஆளிணிவாளர்  குடவாயில் பாலசுப்ரமணியன் பேசினார்

சோழப் பேரரசர்கள் 
நொளிணியல் பாயும் பகுதியில் சேரர்கள், கங்கர்கள் ஆட்சி செய்திருந்தாலும் அங்கு பாசன நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தியவர்கள் சோழப் பேரரசர்கள்தான். நொய்யல் நதியை அந்தப்பகுதி மக்களுக்குப் பயன்படச் செய்தது சோழ அரசர்கள்தான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தடுப்பணைகள் அமைத்து நீரின் பயனை அந்தப்பகுதிமக்களுக்கு  அளித்தனர். சங்கிலித் தொடராகக் குளங்களை அமைத்தனர். பெரிய குளங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து அவற்றிற்கு ஆற்றில் இருந்து தண்ணீர் அளித்து, உபரி நீர் மீண்டும் ஆற்றிற்கே வந்து சேரும் வழி அமைத்தனர். 

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் பெரிய ஏரிகளில் குமிழித் தூம்பு என்ற நீர்ஒழுங்கு அமைப்பை நிறுவித் திறம்படப் பாசன நீர் மேலாண்மை செய்து வந்தவர்கள் தமிழர்கள். இந்த குமிழித் தூம்பு அமைப்பு மூலம் பாசனத்திற்குத் தண்ணீர் அளித்தது மட்டுமின்றி, ஏரிகள் வண்டல் படிந்து தூர்ந்து போகாமலும் தடுத்தனர். இந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாசன நீர் நிர்வாகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியது தெரியவருகிறது. 

காவிரியில், மாயனூரில் இருந்து உய்யக்கொண்டான் கால்வாயை வெட்டி, வழியில் ஆயிரம் ஏரிகளுக்குத் தண்ணீர் கிடைக்கச் செய்தான் ராஜராஜசோழன். காவிரி நீர் வீணாகாமல் சேமிக்கப்பட வீராணம் ஏரியை வெட்டியவன் பராந்தகச்சோழன். தஞ்சை நகரின் நீர்த்தேவையை சேவப்பநாயக்கன்  ஏரியில் வந்துவிழும் தண்ணீரைக் கொண்டு பூர்த்தி செய்யும் அமைப்பு இருந்தது. இந்தத் தண்ணீரை சிவகங்கைக் குளத்திற்கு அனுப்பி அங்கிருந்து நகரின் முக்கிய குளங்கள், கிணறுகளுக்குக் கொண்டு செல்லும் அமைப்பு இருந்தது. 


சுடுமண் குழாய்களைக் கொண்ட இந்த அமைப்பில் பாதி தற்போது உடைக்கப்பட்டுவிட்டது. நீர் நிர்வாகம் குறித்து நமக்கு விழிப்புணர்வு தேவை. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில தோழர்கள் பெ. பூங்குன்றன், இராமதாசு ஆகியோர் திறனாய்வு உரை நிகழ்த்தினர். முன்னதாக க.காமராசு வரவேற்றார். அ. தனபால் நன்றி கூறினார். முன்னதாக தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தர் வ.அய். சுப்ரமணியன் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

ராஜராஜ சோழனின் பாட்டி வீடு திருக்கோவிலூர் :கல்வெட்டு ஆதாரம் கண்டுபிடிப்பு

0 c
ராஜராஜ சோழனின் பாட்டி ஊரான, திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் கருவறையில், ராஜராஜன் இக்கோவிலுக்கு தானமாக வழங்கிய பொருட்கள், அவரது தாயின் வீரம் குறித்த அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவில் இக்கல்வெட்டு இடம்பெற உள்ளது. ஆன்மிகம், கலை, இலக்கியம், வீரம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியவன் ராஜராஜ சோழன். இவனது புகழை தஞ்சை பெரிய கோவில் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

ராஜராஜ சோழன் பிறந்து வளர்ந்து, விளையாடிய ஊர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர். இந்த அரிய தகவல்கள் திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் கருவறையில் உள்ள கல்வெட்டில் தெளிவாக வரையப்பட்டுள்ளன.

ராஜராஜனின் தாய் வானமாதேவி திருக்கோவிலூரை ஆண்ட மலையமான் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர சோழனுக்கு வானமாதேவியை மணமுடித்து கொடுத்தனர். ராஜராஜ சோழன் பிறந்து இரண்டு வயது வரை இங்குதான் தங்கியிருந்தார் என்பது வரலாறு.
இதுகுறித்த அரிய தகவல்கள், ராஜராஜ சோழன் இக்கோவிலுக்கு தானமாக வழங்கிய பொருட்கள் பற்றிய தகவல்கள் கருவறை சுவற்றில் உள்ள கல்வெட்டில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவனது தாயின் பெருமைகள் அடங்கிய கல்வெட்டு தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் கணவர் சுந்தரசோழன் இறந்தார் என்ற தகவல் அறிந்த வானமாதேவி கணவனுடன் சேர்ந்து உடன்கட்டை ஏறி உயிர் நீத்தார் என்ற தகவல் அடங்கிய கல்வெட்டு தான் அது.
thanks to http://www.thevarthalam.com/thevar/?p=1611#more-1611

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் வரலாறு

0 c

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் வரலாறு

திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்
வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்
பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.
இத்திருமுறையில் ஐந்தாவது பிரபந்தமாகிய சேத்திரத் திருவெண்பாவை அருளியவர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார். இவர் திருத்தொண்டத் தொகையில் சுந்தரரால் `ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்` எனப் போற்றப் பெறுபவராவார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இந்நாயனாரின் வரலாற்றை விளங்க விரித்துரைத்துள்ளார்.

பெயர் விளக்கம்

காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூஉ வாகும்.ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும்.

ஆட்சிச் சிறப்பு

ஐயடிகள் உலகில் புகழ் நிலவ அரசு புரிந்த பல்லவர் குலத்தில் தோன்றினார். நாட்டில் வறுமையும் பகையும் குடிகளை வருத்தா வண்ணம் நீதிநெறியோடு ஆட்சி புரிந்தார். சிவநெறியைப் போற்றி வளர்த்தார்.

திருமலியும் புகழ்விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும் பெருமையுடன் இனிதமரப் பிறபுலங்கள் அடிப்படுத்துத்
தருமநெறி தழைத்தோங்கத் தாரணிமேல் சைவமுடன்
அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில்
என இம்மன்னரது பெருவீரத்தையும் சிவநெறிப் பற்றையும் சேக்கிழார் விளக்கியுள்ளார்.

துறவுள்ளம்

மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம் மாமன்னர் அரசுரிமை தன் சிவனடித் தொண்டுக்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துத் தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவ தலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப் பெறுகிறது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் விளங்கக் காணலாம்.

இவ்வாறு ஐயடிகள் செந்தமிழால் சிவ நெறி போற்றியும் தமக்கு இயைந்த ஆலயத் திருப்பணிகள் ஆற்றியும் வாழ்ந்து முடிவில் சிவலோகம் எய்திச் சிவபிரான் திருவடிகளை அடைந்தார் என்பது பெரிய புராணம் உணர்த்தும் இந்நாயனார் வரலாறாகும்.

ஐயடிகள் யார்?

இந்நாயனார் பல்லவ மன்னர்களில் யாவர் என்பதையும் இவரது காலத்தையும் பேராசிரியர் திகு. க. வெள்ளை வாரணனார் விரிவாக ஆராய்ந்து தெளிவு செய்துள்ளார்.

சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் `கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்` எனக் குறிப்பிடப்பெறும் மன்னன் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டிய இராஜசிம்மப் பல்வனாவான் என்றும் அம்மன்னனது தந்தையாகிய முதலாம் பரமேசுவரவர்மனே ஐயடிகள் காடவர்கோன் ஆவார் எனவும் அவர் தெளிவு செய்துள்ளார்.

முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தில் பெரும் போர் ஒன்று நிகழ்ந்தது. சாளுக்கிய வேந்தனாகிய இரண்டாம் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் என்பான் தமிழ் மாநிலத்தைக் கைப்பற்றக் கருதி தமிழகம் வந்து இம் மன்னனோடு பெரும் போர் புரிந்து வென்று பாண்டி நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது பாண்டியன் நெடுமாறன் மகனாகிய கோச்சடையன் என்பானிடம் தோல்வியுற்றுத் திரும்ப நேர்ந்தது. இவ்வேளையில் அவனிடம் தோற்ற பல்லவனாகிய முதலாம் பரமேசுவரவர்மன் தன் படைகளுடன் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள பெருவளநல்லூரில் விக்கிரமாதித்தனோடு போரிட்டு வெற்றி கொண்டான். தோற்ற விக்ரமாதித்தன் ஒரு கந்தையைப் போர்த்திக்கொண்டு தன் நாடு திரும்பினான்.

விக்கிரமாதித்தனைப் பரமேசுவரவர்மன் வெற்றி கொண்டதைக் கைலாசநாதர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. சேக்கிழார் ஐயடிகள் காடவர்கோனின் பெருவீரத்தைக் குறிப்பிடும் பாடல் இப்போரைக் குறித்ததாகலாம். ஆதலின் அம்மன்னனே ஐயடிகள் என்பதையும் அறியலாம்.

பரமேசுவரவர்மன் கூரம் என்ற ஊருக்குப் பரமேசுவர மங்கலம் எனப் பெயர் சூட்டி அவ்வூரில் விச்சாவிநீத பல்லவ மன்ன பரமேசுவரக்கிருகம் என்ற சிவாலயத்தை முதன் முதல் கற்றளியாகக் கட்டிய பெருமைக்கு உரியவன். மாமல்லபுரத்தில் இவன் பாட்ட னாகிய நரசிம்மவர்மன் காலத்தில் தொடங்கி இம்மன்னனால் முற்று விக்கப்பட்ட ஆலயத்தில் காணும் கல்வெட்டால் இவன் வடமொழி தென்மொழிகளில் வல்லவன் என்பதை உணரலாம்.

இவ்வாறு பெருவீரனாகவும், சிவநெறியாளனாகவும் புலமையாள னாகவும் விளங்கிய பரமேசுவரவர்மன் தன் ஆட்சியைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துவிட்டு, தலங்கள் தோறும் சென்று வழிபட்டு வெண்பா மாலைகளால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்ததால் அவன் மகனாலும் குடிமக்களாலும் இம்மன்னன் `ஐயடிகள்` எனப் போற்றப் பெற்றான் என்று கொள்ளலாம். இவர் காலம் கி.பி. 670 முதல் 685 வரையாகும்.

thanks to http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=17

காடவராயர் -- என்ற கள்ளர் அரச குலத்தினர்

21 c
காடவராயர் ----  காடவர் + அரையர் === காடவ அரசர்கள் என பொருள்படும் காடவரயர்கள் காடவர் என்ற அரசகுலத்தை சேர்ந்தவர்கள் ...
இவர்கள் கள்ளர் குலத்தினர் .
thanks to http://kallarperavai.webs.com/kallarkulapattangal.htm 
காடவர்கள் எனப்படுவோர் கிபி 13, 14-ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவின்பல்லவர்களோடுகடலூர் பகுதியில் சில பகுதிகளை ஆண்ட அரசக் குலத்தவர் ஆவர்.


இவர்கள் முதலாம் கோப்பெருஞ்சிம்மன், இரண்டாம் கோப்பெருஞ்சிம்மன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் வல்லமை தழைத்தோங்கி விளங்கியது. இவர்கள், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் ஆகியோரின் தலைமையில் பெருமை மங்கத் துவங்கியிருந்த சோழப் பேரரசையே எதிர்க்கும் வல்லமைப் பெற்றிருந்தார்கள். வட ஆற்காட்டிலும், தென் ஆற்காட்டிலும், செங்கற்பட்டிலும் இவ்விரு மன்னர்கள் பலக் கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளனர்.

தோற்றம்

மகேந்திரவர்மன் I, நரசிம்மவர்மன் I, நரசிம்மவர்மன் II ஆகியோரின் பட்டப் பெயர்களுள் ஒன்றாகக் காடவன் என்பதுக் காணப்படுகிறது. எழுத்தாசிரியர்கள், பல்லவர்களைக் காடவர், தொண்டையார், காடுவெட்டி என்ற பெயர்களால் குறிப்பிடுவதைப் பல்வேறு நூல்களில் காணலாம். காடவர்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள உறவு குறித்து காஞ்சிபுரத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சிம்மவிஷ்ணுவின்நந்திவர்மன் II 'காடவர்களின் குலப்பெருமையை உயர்த்தப் பிறந்தவன்' என்றுப் போற்றப்பட்டான். சகோதரன் பீமவர்மன் வழி வந்த மன்னர்களே இந்தக் காடவர்கள்.

காடவராயர் ----  காடவர் + அரையர் === காடவ அரசர்கள் என பொருள்படும் காடவரயர்கள் காடவர் என்ற அரசகுலத்தை சேர்ந்தவர்கள் ...
இவர்கள் கள்ளர் குலத்தினர் .கள்ளர் குலத்தில் இன்றும் காடவராயர் வம்சத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்துவருகிறார்கள் .இவர்கள் பல்லவர்களின் கிளை குலத்தினர்.இவர்களை போன்று தொண்டைமான் அரசர்களும் பல்லவர் குலத்தினர் .பல்லவர்களுக்கு பல பெயர்கள் உண்டு அவற்றில் 
 பல்லவதரையர்
பல்லவநாடர்
பல்லவர்.
காடவராயர்
காடுவெட்டி,
காடுவெட்டியார்.
தொண்டையர்
தொண்டைப்பிரியர்,
தொண்டாப்பிரியர்
தொண்டைமான்,
தொண்டைமார்
தொண்டைமான்கிளையார்
தொண்டையர்
பல்லவராயர் 

போன்றவை இன்றும் கள்ளர் குலத்தில் கிளை குடும்பங்களுடைய பெயர்களாக பட்ட பெயர்களாக உள்ளன.எடுத்துகாட்டாக புதுகோட்டைதொண்டைமான் அரசகுடும்பத்தை கூறலாம் ..இவர்களும் பல்லவர்களின் கிளை குலத்தவர்கள் தான் .இவர்களும் கள்ளர்கள் என்பதை உலகம் அறியும் .

வளர்ச்சி

சோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்த காடவர்களின் ஆதிக்கம் குலோத்துங்க சோழன் III காலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. காடவக் குறுநில மன்னர்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள் அதிகம் கிடைக்கவில்லை. முதலாம் கோப்பெருஞ்சிம்மன், 1186-ம் ஆண்டுக் காலத்தில் கூடலூரை ஆண்ட வீரசேகரனின் வழிவந்த மணவாளப்பெருமாளின் மகனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
சோழநாட்டுப் பெண்ணை மணம் புரிந்திருந்த முதலாம் கோப்பெருஞ்சிம்மன், மூன்றாம் குலோத்துங்கனின் அவையில் அதிகாரியாக இருந்தான். 1216-ல் பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்தபோது முதலாம் கோப்பெருஞ்சிம்மன் சேந்தமங்கலத்தில் ஒளிந்துக்கொண்டு தன் வலிமையைப் பெருக்கிக் கொண்டான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுக் காடவர்கள் தங்கள் ஆதிக்கத்தை சிறிது சிறிதாக அதிகரித்து வந்தனர். இறுதியில், இலங்கை மன்னன் இரண்டாம் பராக்கிரம பாகூவின் உதவியுடன் மூன்றாம் இராசராச சோழனைத் தோற்கடித்துச் சிறைப்படுத்தினான். முதலாம் கோப்பெருஞ்சிம்மனின் மகன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் அரசு மேலும் விரிவடைந்தது. கடைசி சோழ மன்னனான மூன்றாம் இராசேந்திரன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் உதவியுடந்தான் அறியணை ஏறினான். அவர்களுடைய உறவு பகையும் நட்பும் கலந்த ஓர் உறவாக விளங்கியது.

சமயப் பணி

காடவ மன்னர்கள் கோயில்களுக்குக் கொடைகளை வாரி வழங்கினர். பல புதியக் கோயில்கள், சிற்றூர்கள், சத்திரங்கள், சாலைகள் ஆகியவற்றைத் தோற்றுவித்தனர். ஆளப்பிறந்தீசுவரம் உடையார், அழகியப் பல்லவந்தோப்பு, அழகிய பல்லவன் சந்தி, கோப்பெருஞ்சிங்கன் தெரு போன்ற இடங்கள் அவற்றுக்குச் சான்றாக இன்றும் விளங்குகின்றன. சேந்தமங்கலத்தில் காணப்படும் கோட்டைச் சிதிலங்கள் சிறிதுக் காலமேத் தழைத்தோங்கியக் காடவர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.

முதலாம் கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன். காடவர் குலத்தைச் சேர்ந்தவன். இவன் கிட்டத்தட்ட கிபி 1216 முதல் 1242 வரை அரசாண்டவன்.
ஹொய்சாள தண்டநாதர்களின் படையெடுப்பை பற்றி விவரமாகத் தெரிவிக்கும் திருவேந்திபுரம் கல்வெட்டு இராஜராஜனைத் தாக்கி சிறைப்பிடித்து பிறகு விடுதலை செய்த காடவச் சிற்றரசன், புகழ் பெற்ற கோப்பெருஞ்சிங்கனே என்று தெரிவிக்கிறது. (சமஸ்கிருதத்தில் இவன் பெயர் மஹராஸ சிம்ம எனப்படும்.) இந்த காலப்பகுதியின் வரலாற்றில் கோப்பெருஞ்சிங்கனுக்கு நிறைந்த இடம் உண்டு, தமிழ்நாட்டிலும் கன்னநாட்டிலும் கிடைக்கும் ஏனைய கல்வெட்டுக்களும் இந்தச் செய்திகளை உறுதிபடுத்துகின்றன.
இராஜராஜனின் 14-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி 1230) விருத்தாசலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து காடவச் சிற்றரசர்கள் இன்னும் சோழரின் மேலாதிக்கத்தை ஏற்று வந்தனர் என்றும் இவர்களுள் கோப்பெருஞ்சிங்கன், தக்க வயது அடைந்ததோடு, முக்கியமானவனாக விளங்கினான் என்றும் தெரிவிக்கிறது. கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை சேந்தமங்கலத்தில் சிறைப்படுத்தியதோடு விஷ்ணு கோயில்கள் உட்பட எல்லாக் கோயில்களையும் கொள்ளையடிக்கும் படியும் ஏற்பாடு செய்தான். ஹொய்சாளர்கள் வைணவத்தில் அழுத்தமான தீவிரமான பற்றுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மன்னன் நரசிம்மன் தன் தலைநகரான துவார சமுத்திரத்திலிருந்து புறப்பட்டதாயும் சோழர்களை மீண்டும் நிலைநாட்டியவன் என்று பெயர் தனக்கு ஏற்படும் வரை போர் முழக்கம் செய்ததாயும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவனுடன் ஏற்பட்ட போரினால் கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை விடுதலை செய்து அவனுடைய சிம்மாதனத்தில் அமரச் செய்வதாக நரசிம்மனின் தளபதிகளுக்கு அறிவித்தான்.
தஞ்சை மாவட்டம் நீடுரைச் சுற்றிய பகுதி கோப்பெருஞ்சிங்கன் என்ற அழகிய சீயனால் ஆளப்பெற்றதாய் குறிப்பிடுகிறது. கோப்பெருஞ்சிங்கனின் வீரம் வெவ்வேறுவகையான ஜந்து செய்யுட்களில் பாராட்டப்படுகிறது. கோப்பெருஞ்சிங்கனுக்கு அவனி நாராயண நிருபதுங்கன், தொண்டைக்கும் மல்லைக்கும் மன்னன் என்றெல்லாம் பட்டங்கள் இருந்திருக்கிறது. கோப்பெருஞ்சிங்கனும் ஹொய்சாளர்களும் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்தனர் என்பது கி.பி. 1236ல் துன்முகி ஆண்டில் காடவனுக்கு விரோதமான ஒரு படையெடுப்பில் வீர சோமேசுவரன் மங்கலத்தில் தங்கினான் என்று அறியப்படும் ஒரு குறிப்பால் தெளிவாகத் தெரிகிறது.

உசாத்துணை

  • Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).
  • South Indian Inscriptions - http://www.whatisindia.com/inscriptions/
  • http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D