முத்தொள்ளாயிரத்தில் மூவேந்தர்களின் சிறப்புப் பெயர்கள்:

முத்தொள்ளாயிரம்:

மூவேந்தரையும் பற்றித் தனித்தனி தொள்ளாயிரமாக முத்தொள்ளாயிரம் (2700) வெண்பாவாற் பாடிய புகழ்ப் பெற்ற பனுவலில் இன்று கிடைப்பன 130 பாக்களே. ஏனைய இறந்துபட்டன. முத்தொள்ளாயிர ஆசிரியரைப் பற்றிய காலம், பெயர் முதலிய விவரங்கள் இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை. முத்தொள்ளாயிரம் பெயர் வரக் காரணம், மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் - அதாவது 2700 பாடல்கள் பாடப்பெற்ற காரணத்தால் முத்தொள்ளாயிரம் என்று பெயர் வந்திருக்கலாம் என்று கருத முடிகிறது. சேரர், சோழர்,பாண்டியர்களைப் பற்றி பாடப் பெற்ற பாடல்கள் தான் இவையனைத்தும். அத்தனையும் முடியுடைய மூவேந்தரின் சிறப்பினைப் பற்றிப் பாடப் பெற்ற பாக்களேயாகும். இப்பாடல்களில் மூவேந்தர் புகழும் வீரமும், மகளிர் காதலும் நயம்பட எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. மன்னனைக் கடவுளின் மறு அவதாரமாக எண்ணி மதித்த விழுமியங்களே இப்பாடல்கள்.

முத்தொள்ளாயிரத்தில் மூவேந்தர்கள் தொன்மை மரபிற்கேற்பவும், சிறப்பிற்கேற்பவும் சிறப்புப் பெயர் கொண்டு சிறப்பிக்கப்பட்டள்ளனர்.

சேரர்கள் ‘கோதை’, ‘மாந்தைக் கோ’ ‘குடநாடன்’; ‘வஞ்சிக் கோ’, ‘பூமியர் கோ’, ‘கொல்லியர் கோ’, ‘வானவன்’, ‘முசிறியார் கோமான்’ என அவர்களுடைய குடிக்குரிய பெயர்களால் பாடல்களுள் குறிக்கப் பெற்றுள்ளனர்.

சோழ மன்னர்கள், ‘உறந்தையர் கோன்’, ‘கோழிக் கோமான்’, ‘வளவன்’, ‘செம்பியன’;, ‘கிள்ளி’ ‘நீர்நாடன், ‘புகாஅர்ப் பெருமான், ‘சென்னி’, ‘காவிரி நீர் நாடன்’ என்றும் தம் குடிப்பெயர்களால் குறிப்படப்படுகின்றனர்.

பாண்டியர்கள், ‘மாக்கடுங்கோன்’, ‘மாறன்’, ‘கூடற்கோமான்’, ‘தென்னன’, ‘செழியன்’ ‘வழுதி’, ‘தமிழ்நர் பெருமான்’, ‘பொதியிற் கோன’, ‘செலேக வண்ணன்’, ‘வையையார் கோமான்’, ‘கொற்கைக் கோமான்”, ‘பஞ்சவர்’ என்றும் தம் குடிப்பெயர்களால் குறிப்படப்படுகின்றனர்.

No comments: