கொங்கு பூமி.

தமிழகத்தில் பாரி, ஓரி, காரி, பேகன், ஆய், அதியன், நள்ளி என்னும் எழுவரை மட்டும் வள்ளல்கள் என வரையறுத்துக் கூறினர் சங்ககாலத்துச் சான்றோர்கள்.

இவ்வெழுவர்க்குப் பின்னர், அவ்வெழுவர் போல ஈதற்கு யான் உளேன் என்ற வள்ளல் குமணனோடு, சங்ககால வள்ளல்கள் எண்மராவர். அவ்வெண்மரில், பேகன், அதியமான், ஓரி, குமணன் ஆகிய நால்வர் கொங்கு நாட்டினர். அதுமட்டுமல்ல, கடிய நெடுவேட்டுவன், நன்னன், பூந்துறை, ஈந்தூர்க்கிழான், கொண்கானங் கிழான், விச்சிக்கோ, தாமான் தோன்றிக்கோன், மோகூர்ப்பழையன் ஆகிய சங்ககாலத் தலைவர்களும்,

பழையக் கோட்டைச் சர்க்கரை,
மும்முடிப் பல்லவராயர்,
காடையூர்க் காங்கேயர்,
 கொற்றை வேணாடுடையார்,
மசக்காளி மன்றாடியார்,
வணங்காமுடி வாணராயன்,
காளிங்கராயன்,
பாரியூரான்,
உலகுடையான்,
அகளங்கன்,
இம் முடிச்சோழியாண்டான்,
கொல்லி மழவன் போன்ற பிற்காலச் சங்கத் தலைவர்களும் கோலோச்சிய பூமி கொங்கு பூமி.
thanks to  http://64.50.168.170/index.php?option=com_content&view=article&id=9936:2010-07-12-19-03-44&catid=1148:10&Itemid=414

No comments: