இச் சட்டம் 1911 இல் தமிழகத்தில் போடப்பட்டிருந்தாலும் 1914 ல் முதன்முதலாக கீழக்குயில் குடிக் கிராமத்தில் முதலில் கேடிகளைப் பதிவு செய்தார்கள். அதன்படி 11 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் கள்ளர் இனத்து ஆண்கள் அனைவரும் சாயங்காலம் ஆனவுடன் பொலிஸ் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டனர்.
இந்த ரேகைச் சட்டத்திற்கு எதிராகக் கிளம்பிய 17 பேர் திருமங்கலம்- பெருங்காம நல்லூரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராஜாஐயர் என்ற அதிகாரியின் ஆலோசனைக் கிணங்க இந்தக் "கட்டாய ஆரம்பக் கல்வி" நடைமுறைப்படுத்தப்பட்டது. 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகள் பள்ளிக்கு வரவேண்டும். வராத குழந்தைகளின் பெற்றோர் CTA யின் கீழ் தண்டிக்கப்பட்டனர். வரவினைக் கவனிக்காதிருந்தால் பஞ்சாயத்தார் CTA யின் கீழ் தண்டிக்கப்பட்டனர். வராத குழந்தைகளுக்கு தண்டனையாக கழுத்திலும், காலிலும் "கொண்டிக்கட்டை" போட்டார்களாம்.
ஈட்டி, வளரி என்பன எறிவதில் கள்ளர்கள் வல்லவர்கள் என்றும் இந்தப் போர்க்கருவிகள் கள்ளர்களிடத்தில் பெருவழக்கில் இருந்தன என்றும் 18 ஆம் நூற்றாண்டுப் பதிகளில் காணக்கிடைகின்றனவாம். வளரி தடைசெய்யப்பட்டதனால் தானோ இன்றும் அது இவர்களுக்கு மத்தியில் பேசாச் சமாச்சாரமாக இருந்து வருகிறது?
http://ciththan.blogspot.com/2005/07/blog-post_22.html

No comments:
Post a Comment