கல்கி "பொன்னியின் செல்வனில்" கூறிய தேவர் என்பது எக்குலம்?

thanks to http://kkrn-kallarvanniyar.blogspot.com/2011/01/blog-post_13.html

தமிழ்நாட்டில் இப்போது எல்லாம் போகிறவர், வருகிறவர் எல்லாம் தன்னை சோழன் என்று  சொல்லிகொள்வதால்  ஏற்பட்ட எரிச்சலில்தான் நான் முன்பு பகடியாக "தமிழ்நாடும் பொன்னியின் செல்வனும்" என்ற தலைப்பில் ஒரு இடுகை இட்டு இருந்தேன். உண்மையில் கல்கி உயிரோடு இல்லை என்ற தைரியத்தில் எழுதியது அது. கல்கி என்னை மன்னிப்பாராக...

கல்கி தன் பொன்னியின் செல்வனில் கூறிய தேவர் என்ற சொல் எக்குலத்தை மனதில் வைத்து சொன்னார் என்பதை பார்ப்போம்...

ஒரு முறை கல்கி அவர்கள் சொன்னார்." அரசர்களை தன் இனமாக பார்க்க தொடங்கினால் அதற்கேற்றபடி சரித்திரத்தை தன் இஷ்டத்திற்கு வளைக்க தோன்றும்" என்று. அது எவ்வளவு உண்மை .மூவேந்தர்களை மீனவனாக பார்த்தாலும் அப்படிதான் தோன்றும். தமிழ்நிலத்தில் முதலில் வளர்சியடைந்ததாக் கூறப்படும் மருதநிலம். அது இல்லை என்று கூட நிறுவலாம் , நம்பலாம்.

உதாரணதிற்கு பாண்டிய, சோழ, பல்லவர்களை மீனவர் (பரதவர் ) குலம் என்று நம்பி சரித்திரத்தை பார்த்தோமானால் , பண்டைய சோழனின் தலைநகராக  விளங்கிய பூம்புகார்  கூட நெய்தல் நில நகரந்தான். பாண்டியனுக்கு மீனவன் என்ற பெயரும் உண்டு. பாண்டிய தலைநகர் கொற்கை கூட நெய்தல் நில நகரந்தான் . இவ்வளவு ஏன் பாண்டியன் கொடி மருத நில ஏர்கலப்பை அல்ல நெய்தல் நில மீன் தான் அவன் சின்னம். மதுரை, உறையூர், தஞ்சை போன்ற நகரங்களுக்கு எல்லாம் முந்திய நகரங்கள் தான் நெய்தல் நில "புகார்" நகரும் (இது பண்டைய சோழர்களின் நகரம்), கொற்கையும் (பாண்டிய தலை நகரம் ).
அதைப்போலவே பல்லவனும் "திரையன்" (கடல் அலைக்கு திரை என்று பெயர், முதல் பல்லவ மன்னன்  தொண்டைமான் இளந்திரையன்  ) என்றுதான் அழைக்க படுகிறான். முதலில் ஆளுமையும், ஆட்சியையும், போர்களையும் தொடங்கியவர்கள் நெய்தல் (கடலும் கடல் சார்ந்த இடமும் ) நில மக்கள்தான். இதுபற்றி எல்லாம் விரிவாக ஆய்வு செய்து எழுத மீனவர் யாரும் கல்வி அறிவு பெற்று வரலாற்று துறையில் வளர்ந்து வராமையால் நாம் அது போன்ற ஒரு பிரச்சாரங்களை, கருத்து பரிமாற்றங்களை காண முடிவதில்லை. 
 
இதை எல்லாம் தெளிவாக உணர்ந்தவர் கல்கி அவர்கள் .நடுநிலை தவறாமையே ஒரு அறிஞனுக்கு அழகு. இவர் சார்ந்த பிராமண வகுப்பு   நடுநிலை தவறாமல் நியாயமாக முடிவு எடுக்கும் என்பதை ஆங்கிலேயர்களும் பலமாக நம்பினார்கள். ஆங்கிலேயர்கள்  காலத்தில் ஏற்பட்ட வலங்கை, இடங்கை சாதி பிரச்சினைகளுக்கு எல்லாம் பெரும்பாலும் விசாரித்து உண்மையை விளக்க இவர்கள் தான் ஆங்கிலேயர்களால்  பயன்படுத்தப்பட்டனர் ..

இவை எல்லாம் சாதாரண பிராமனனுக்கு ஒத்து போகிரோதோ இல்லையோ கல்கி போன்ற சான்றோர்களுக்கு சால பொருந்தும். அதனால்தான் இன்று வரை அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இப்போது விசயத்திற்கு வருவோம். கல்கி அவர்கள் "தேவர்" என்றே ராஜராஜரையும்  , வந்தியதேவனையும்(இவர் வானவர் குலம் என்பதால் இவர் முக்குலம்தான் என்று முடிவு செய்து விட்டு விடுகிறார்கள் முக்குல எதிரிகள் )  அழைக்கிறார்..இவர் கூறும் தேவர் என்பது முக்குலத்து மக்களையா ? கல்கியை எதிர்க்க யாரும்  இதுவரை அறிவு முதிர்ச்சி பெறவில்லை  என்பது உண்மை, எனவேதான் தேவர் என்று சொல் எல்லோருக்கும் உண்டு என்று சிலர் வாதத்தை வைக்கின்றனர். உண்மைதான் ..வன்னியரில் தேவர் என்பதும் உண்டு(உதாரணம் : கட்டாகரம் தேவர்), மற்ற ஜாதிகளிலும்  சில உண்டு. ஆனால் பெரும்பான்மையாக இந்த தேவர் பட்டம்  கள்ளர், மறவர் இனத்திலேயே காணபடுகிறது என்பதால்தான் தேவர் என்று தமிழ் மக்களால் இவர்கள் அழைக்கப்படுகின்றனர் (தமிழ்நாடு பொதுவாக சாதி, இனங்கள் பலமாக இருக்கும் நாடு, அவ்வளவு  எளிதாக யாரும் பட்டங்களை போட்டு கொள்ள முடியாது என்பது 900 வருடமாக இருக்கும் வலங்கை -இடங்கை பிரச்சினையை பார்த்தால்  புரியும் )

அதைப்போலவே வன்னியர், நாடார், படையாச்சி, பிள்ளை, சிங்களவர், மீனவர் என்ற பட்டங்கள் எல்லாம் தஞ்சை கள்ளருக்கு உண்டு. ஆனால் முக்குலதோரை யாரும் வன்னியர், நாடார் என்று அழைப்பதில்லை, அதைப்போலவே மற்றவர்களையும் யாரும் தேவர் என்று அழைப்பதில்லை.தேவர் என்றால் முக்குலத்தோர் மட்டுமே.

அது ஒருபுறம் இருக்க கல்கி கூறுவது ஒருவேளை தேவர் ஜாதியாய் இல்லாமலும் இருக்கலாம் அல்லவா ? என்றொரு சந்தேகம் எழக்கூடும். ஆனால் கல்கி அவர்களின் ஆராய்ச்சியின் முடிவில் அவர் "கள்ளர் குலத்தவரே சோழர்" என்று முடிவு கட்டி விட்டதை கீழே காணும் விளக்கத்தை பார்த்தால் புரியும்.   

 தேவர் என்ற பட்டம் மற்றவருக்கு இருந்தாலும் , பெண்களுக்கு "நாச்சியார்" என்ற பட்டம் கிடையாது. நாச்சியார் என்பது தேவர் இனத்து பெண்ணே அன்றி வேறு யாரும் அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. 

திரு .கல்கி அவர்கள் ஊமைச்சி என்ற பெண்மணியை சுந்தர சோழனின் மனைவியாகவும், அவரால் கைவிடபட்டாலும் அவர் உயிரை காக்கும் பெண்மணியாகவும்  காட்டுவார். ராஜராஜ சோழனும் அவரை  தாயாக மதித்து கோயில் கட்டியதாகவும் போகும் அந்த செய்தி .  ஊமைச்சியின் பாத்திரம் ஒருபுறம் இருக்க அதில் சோழன் எடுபித்த கோவிலை மட்டும் நாம் கருத்தில் கொள்வோம். சோழன் அவருக்கு ஒரு கோயிலை எழுப்பி அதற்கு "ஈழத்து  நாச்சியார்" கோவில் என்று பெயர் இட்டதாகவும், அது இன்று வரை தஞ்சை பகுதியில்  "ஈநாச்சியார்" கோயில் என்ற பெயரோடு இருப்பதாகவும்  ஒரு ஆதாரத்தையே எடுத்து வைப்பார்.

கல்கியை போன்ற நூற்றாண்டுகளில் ஒன்றே ஒன்றாக பிறக்கும் அறிஞர்கள் ஏனோ தானோ என்று வரலாற்று செய்திகளை சொல்ல வாய்ப்பில்லை எனபதை நாம் அறிவோம்.   அவர் மனதில் முழுவதும் சோழன் முக்குலத்தோர் பிள்ளையே என்று பலமாக நம்பி இருக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று.

நாச்சியார்:

இப்போது தமிழக முதல்வர் எழுதிய "பண்டார வன்னியன்" என்ற ஈழத்து அரசனை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளகூடாது என்பதற்காக திரு வேங்கடசாமி நாட்டார் அய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரத்தை மேற்கோள் காட்டி "பண்டார வன்னியன்" கள்ளர் நாடு என்று அழைக்கப்படும் தஞ்சை பகுதி ஒரத்தநாடு என்ற இடத்தில் இருந்து சென்றவன் என்றும், அவர் தஞ்சை கள்ளர் குலத்தில் மிக முக்கியமான பட்டமான "வன்னியர் " பட்டத்தை தரித்தவன் என்றும் காட்டுகிறார் (குறிப்பு : இப்போது இருக்கிற தமிழ்நாடு கள்ளர் சங்கத்தின் தலைவரும் வன்னியர் என்ற பட்டம் கொண்டவர், அவர்  டாக்டர் அ. சீனிவாசன் வன்னியர் M.D.D.C.H ).   பண்டார  வன்னியனின்  தங்கையையும் காதலியையும் நாச்சியார் என்று காட்டுகிறார் அவர் கூறுமிடத்தே   "பாயும் புலி பண்டாரக வன்னியன் எனும் எழுச்சி மிக்க காவியத்தில், நான் படைத்துள்ள கதாபாத்திரங்கள் பண்டாரக வன்னியனும், அவன் உள்ளங்கவர்ந்த காதலி, குருவிச்சி நாச்சியாரும், அவன் அருமைத் தங்கையர், நல்ல நாச்சியும், ஊமைச்சி நாச்சியும் இலங்கை மண்ணில் தமிழர்களின் உரிமை காக்கப் போராடியவர்கள் என்று நான் சித்தரித்துள்ளேன்".
கலைஞர் அவர்களை பற்றி நமக்கு தனிப்பட்ட கருத்துக்கள் எதுவாக இருப்பினும் அவர் தமிழ் புலமையை சந்தேகிக்க முடியாது. அதிலும் அவர் ஒரு முதலமைச்சர்..ஆதாரம் இல்லாமல் எழுதிவிட முடியாது...

அதைப்போலவே   edgar thurstan போல தமிழ் போற்குடிகளை கேவலபடுத்தவும் , கிருத்துவ மதம் மாறிய சாதியினருக்கு  சாதகமாகவும் எழுதிவர்கள் கூட கள்ளர்களின் உருவ  அமைப்பை  கூறுமிடத்தே "தலையில் கொண்டையும், தோளை தொட்டுக்கொண்டு தொங்கும் காது அணியையும் உடையவர்கள் என்று கூறுகிறார்கள். இப்போது கண்டுபிடிக்கபட்டிருக்கும் ராஜராஜன் சிலையை பார்த்தோமானால் அது அப்படியே அச்சு அசலாக கள்ளர்கள் மட்டுமே பயன்படுத்தியதாக வெள்ளையர்கள் கூறும் அதே அணிகலன் காதிலிருந்து தோலை தொட்டு கொண்டு நிற்கும்..இதையே தான் திரு பாலகுமாரன் அவர்களும் தன் உடையாரில் சொல்கிறார்(அதைவிட மேல் சென்று கொற்றவை துர்க்கை தான் சோழனின்  குல தெய்வம் என்று ஆதாரத்தோடு விளக்கி இருக்கிறார். பெண் தெய்வத்தை , அதுவும்  துர்கையை குலதெய்வமாக கொண்டது முக்குலத்தோர் இனம் மட்டும்தான் (இதை வைத்து கொண்டுதான் முக்குலத்தோர் பாலை நிலமக்கள் என்று கதையை  அவிழ்த்து விட்டனர், தொல்காப்பியரே பாலை நிலம் என்று ஒன்றை கூறவில்லை, பிற்பாடு உரை எழுதியவர்கள் சேர்த்தது அது என்பது வேறு கதை ) ). 

எனவே கல்கி அவர்கள் கையாண்ட இந்த நாச்சியார் என்ற சொல்லே "சோழதிருமகன், பொன்னியின் செல்வன், ராஜராஜ சோழன்" தஞ்சை கள்ளர் குலத்தில் உதித்த மாணிக்கம் என்று உறுதிபட கண்டு அறிந்தவர், முழுவதும் நம்பியவர்  அவர்  என்பது நிருபணம் ஆகிறது...

இருந்தாலும் முடியாச்சி முடிந்து, மக்களாட்சி நிலவும் இந்த காலத்தில்  விஜயாலய தேவரும், ராஜராஜ தேவரும் , குந்தவை நாச்சியாரும் தமிழ் மக்கள் எல்லோருக்கும் சொந்தம் என்பதில் ஐயமில்லை...அவர் நம் பொது சொத்து என்பதையும்  முக்குலத்தோர் ஏற்று கொள்ள வேண்டும்   ....

3 comments:

Anonymous said...

நீ சாதி வெறில கதை எழுதுற !!! சிவகிரி ஜமீன் முதல் வன்னியர்கள் ஆண்ட அனைத்து நாடுகளும் இன்றளவும் அவர்கள் தான் உள்ளனர் .. உங்க சாதில யாரவது வாரிசுனு சொல்ல ஆள் இருந்தா அனுப்பு .. பிச்சாவரம் ஜமீன் தவர யாரும் தங்களை சோழர்கள்னு சொல்லிக்க கூட ஆள் இல்ல .. வரலாற ஆங்கிலேயன் கூட அறிந்துள்ளான்

Anonymous said...

தஞ்சை இடைகால சோழர் ஆட்சி பகுதி .. பூம்புகார் மற்றும் வன்னியபுரி( கங்கைகொண்ட சோழபைரம் ) முதல் மற்றும் கடைசி சோழர்கள் நாடு இங்க உங்க சாதி வந்த கேட துறக்க முடிநீது .. அப்பன் பேர் மாத்தர

Anonymous said...

வல்லவராயன் வந்தியதேவன் பிறந்த ஊர பாரு இன்றளவும் ஒரு கள்ளன் மறவன் இல்ல அது வன்னியர் பூமி .. கங்கைகொண்ட சோழபுரம் , சிதம்பரம் நடராஜர் கோயில் வன்னியர் கிட்ட தான் இருக்கு இன்னைக்கும்