முருகன் குறிஞ்சித் தெய்வம்

0 c


கார்த்திகை நினைவு தீபம் ...
கார்த்திகையில் ஆறு நாட்களும் விளக்கு ஏற்றி வழிபடுவது
தமிழ்நாட்டில் வாழ்வோருக்கான கடமையாகும் ....
வரலாற்றுக்கு முந்தைய செய்திகள்
தொன்மக் கதைகளாக நிலைத்து நிற்கும் 
சடங்குகளாக நீடிக்கும்
சங்க காலத்தில் இருந்து கார்த்திகை தீப வழிபாடு தமிழகத்தில் இருக்கிறது.
தமிழகத்தில் மிகத் தொன்மையான திருவண்ணாமலையில்
மிகப் பழமையான தீப வழிபாடு நடைபெறுகிறது ...
தொன்மை கதைகள் பல இருப்பினும்
இது தமிழகத்தை காக்க இறந்துபட்ட
மன்னர்களுக்கும் வீரர்களுக்குமான பொதுவான நினைவு தீபம் ...
இம்மண்ணில் வாழும் அனைவரும் ஆறு நாட்களும் விளக்கு ஏற்றி வழிபடுவது
தமிழ்நாட்டில் வாழ்வோருக்கான கடமையாகும் ....



குறிஞ்சித் தெய்வம் 

குறிஞ்சி மக்கள் தம் தெய்வத்தை தீயின் கூறாக கொண்டு சேந்தன் (சிவந்தவன் ) என வணங்கினர் .
இலக்கியத்தில் சேய் ,சேயோன் என வழங்குவர்.























முல்லை நிலத் தலைவி கொடிச்சி எனப்பட்டதால் 
அதற்கேற்ப 
முருகனின் தேவி வள்ளி (கொடி) எனப்பட்டாள்












முன்னோர்

0 c
தத்துவம் ஆயிரம் பேசலாம் 
ஆனால் உண்மை இது தான் ...............
உலகில் அனைத்து மத நம்பிக்கைகளும் ஆதியில் முன்னோர் வழிபாட்டில் இருந்தே ஆரம்பித்து உள்ளன ..
அதன் நீட்சி இன்றும் எல்லா மதங்களிலும் காணக்கிடக்கின்றன...


நாத்திக வாதம் எதை பேசினும் பேசுக
தத்துவ வாதம் எதை கொள்ளினும் கொள்ளுக ..
உலகில்
மரணம் என்பது இருக்கும் வரையும் .
மரண பயம் மனித மனங்களில் இருக்கும் வரையும்
கடவுள் நம்பிக்கை இருந்ததே தீரும்
vivekaanandhar

வல்வில் ஓரி -கடையெழு வள்ளல்

0 c
ஓரி oori

வல்வில் ஓரி

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி
 சிறந்த வில்லாளி.
 கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவன் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்படுவான்

ஓரி அம்பு எய்தான். முதலில் அது யானையை வீழ்த்தியது. அடுத்து உழுவைப்புலியைச் சாகடித்தது. அடுத்து மானை உருண்டுவிழச் செய்தது. அடுத்து முள்ளம்பன்றியை வீழ்த்தியது. இறுதியாகப் புற்றிலிருந்த உடும்பின் உடலில் தைத்துக்கொண்டு நின்றது.



இவன் கடையெழு வள்ளல்களுள் மற்றொருவனான காரியோடு போரிட்டு மாண்டான்.[1] நாட்டை வென்ற காரி அதை சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கொடுத்தான். [2] நற்றிணையில் இவன் பரணரால் சிறப்பிக்கப்பட்டுள்ளான். [3]புறநானூற்றில் வன்பரணர்கழைதின் யானையார் என்போர் இவனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் உள்ளன


புறநானூறு 152 வல்வில் ஓரி

வல்வில் ஓரி கொல்லிப் பொருநன் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான். அவன் தனக்கு எங்கே எவ்வாறு பரிசளித்தான் என்பதைப் புலவர் வன்பரணர் நிரல்பட விளக்குகிறார்.
ஓரியின் வல்வில் வேட்டம்
ஓரி அம்பு எய்தான். முதலில் அது யானையை வீழ்த்தியது. அடுத்து உழுவைப்புலியைச் சாகடித்தது. அடுத்து மானை உருண்டுவிழச் செய்தது. அடுத்து முள்ளம்பன்றியை வீழ்த்தியது. இறுதியாகப் புற்றிலிருந்த உடும்பின் உடலில் தைத்துக்கொண்டு நின்றது.
இப்படிக் கொன்றவன் விற்பனைக்காக எய்ததாகத் தோன்றவில்லை. வெறுக்கத்தக்க மிகுதியான செல்வம் உடையவனாகத் தென்படுகிறான். அவன் மார்பில் முத்தாரம் இருக்கிறது. ஓரியாக இருப்பானோ? எப்படியாயினும் ஆகட்டும்.
இசைமுழக்கம்
விறலியரே! நாம் பாடுவோம்.
முழவை முழக்குங்கள்.
யாழை மீட்டுங்கள்.
தூம்புப் பறையைக் களிற்று முழக்கம் போல ஊதுங்கள்.
எல்லரி தட்டுங்கள்.
ஆகுளி என்னும் உடுக்கை அடியுங்கள்.
பதலை என்னும் பானைக்கடம் தட்டுங்கள்.
மதலை என்னும் மாக்கோலை வலத்தோளில் உயர்த்திப் பிடியுங்கள்.
இசையின் 21 துறைகளிலும் முறையாகப் பாடுங்கள். - என்றார்.
அப்படியே அனைவரும் பாடினர்.
இறுதியில் "கோ" எனக் கூட்டிசை முழக்கம் செய்தனர். 'கோ' என்பது அரசனைக் குறிக்கும் சொல் ஆதலின் ஓரி தன்னைக் கண்டுகொண்டதாக எண்ணி நாணித் தலைகுனிந்தான்.

சுரத்தில் கொடை
தான் வேட்டையாடிய மானைச் சுட்டுக் கொடுத்தான். தொட்டுத் தின்ன தேனும் கொடுத்தான். தன்மலையில் பிறந்த பொன், மணி முதலானவற்றைத் திரட்டிக் கொடுத்தான். இவனது ஈகை தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாத 'ஓம்பா ஈகை'

புறநானூறு 153 வல்வில் ஓரி

ஓரியின் தந்தை பெயர் ஊதன். இதனால் இவனைப் புலவர் 'ஆதன் ஓரி' எனக் குறிப்பிடுகிறார். கொல்லிநாட்டை இவன் போரிட்டு வென்றதற்கான குறிப்பும் இதில் உள்ளது. இவன் தன் கையில் பசும்பூண் அணிந்திருந்தான்.இவன் வேட்டுவ குலத்தை சார்ந்தவன்.
இவன் தன்னிடம் இரப்போர்க்கு யானைகளை அணிகலன்கள் பூட்டி நல்குவான். புலவரது சுற்றம் யானைகளோடு நீரில் பூக்காத குவளை மலரையும் (பொற்குவளை) விருதாகப் பெற்றனர். வான்நார் எனப்படும் வெள்ளிநாரில் தொடுத்த கண்ணிகளும், அணிகலன்களும் பெற்றனர்.
இவனிடம் இருக்கும்போது பசி என்பதே இவர்களுக்கு இல்லாமல் போனதால் பசி போக்க ஆடுவதையும் பாடுவதையும் மறந்துபோயினர்.

நள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவர்

0 c
nalli        நள்ளி








நள்ளி 
- துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன். 

நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன்.
(நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன்

நள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவர்.
மலைவளம் செறிந்த கண்டீர நாட்டினர்.
இவரை நளிமலை நாடன் என்றும்,
கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர். 


நள்ளி,
தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும்,
வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.
நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.

உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதும்,
உள்ளத்தில் கருணை இல்லாமல் பிறர்க்கு ஈதலும் (கொடுத்தல்) பயன் தராது
என்ற கொள்கை உடைய இம்மன்னனின் வள்ளல் தன்மையைச் சிறுபாணாற்றுப்படை 103-107 அடிகளில் சுட்டுகிறது.
முட்டாது கொடுப்போன்
தன்னிடம் வந்த இரவலர்கள் மனம் மகிழ்கின்ற வகையில் பரிசுப்பொருள்களை அள்ளிக் கொடுப்பவன் இவன்.
தன்னிடம் வந்தவர்கள் மீண்டும் வறுமையில் வாடாதவாறும் வேறொருவரிடம் சென்று இரவாதவாறும் நிரம்பக் கொடுக்கும் இயல்பு உடையவன் நள்ளி.
 இதனால் இவன்,

முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை
............ ........... ................... ..................
நளிமலை நாடன் நள்ளி...
(சிறுபாணாற்றுப்படை 105-107)

(முட்டாது = தடையில்லாது; முனை = போர்முனை; நளிமலை = குளிர்ந்த மலை)
என்று பாராட்டப்படுகிறான்.

ஆய் கடையெழு வள்ளல்களுள் ஒருவர்.

0 c
ஆய் அண்டிரன்
ஆய்
கடையெழு வள்ளல்களுள் ஒருவர்.
பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னன் .
இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர்.

கொடைத்திறம்
இவர் தன்னை அண்டி வருபவர்களுக்கு,களிறுகளை பரிசாக அளிக்கும் கொடை குணம் கொண்டவர்
ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்.இதனை இடைக்கழிநாட்டுநல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நிழல்திகழ்
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும்

வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் 
புறநானூற்றில் உள்ளன.

புறநானூறு மட்டுமின்றி அகநானூறு,குறுந்தொகை மற்றும் சிறுபாணாற்றுப்படை முதலியவற்றிலும் இவரை பற்றிய மேலும் சில பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.[1].இவர் தன்னை அண்டி வருபவர்களுக்கு,களிறுகளை பரிசாக அளிக்கும் கொடை குணம் கொண்டவர்.இதனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் இவரை பற்றி எழுதிய பாடல்களில் இருந்து அறியலாம்.[2].
1 c