வெளிநாட்டு தாவரங்கள்

ஆகாயத்தாமரை,
நெய்வேலி காட்டாமணக்கு
தைலமரம் (யூகலிப்டஸ்)
பைன்
சீமைக்கருவேல

வெளிநாட்டு தாவரமான கார்ஸ் முள் செடி

நீலகிரி மாவட்டத்தில் எரிபொருள் தேவைக்காக கற்பூரம், சீகை, பைன் போன்ற வெளிநாட்டு மர வகைகளையும், உண்ணி, பார்த்தீனியம், லேண் டானா, கார்ஸ் முள் செடி, செஸ்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு தாவரங்களும் நடவு செய்யப்பட்டன.

தற்போது இவை சுமார் 15 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் வளர்ந்துள்ளன. இதனால், நீலகிரிக்கே உரித்தான தாவரங்கள் அழியத் துவங்கின. இவை நிலத்தடி நீர்மட்டத்தையும், மழை பொழிவையும் வெகுவாக பாதித்தன. மேலும் வெளிநாட்டு தாவரங்களான சீகை, கற்பூரம், உண்ணி போன்ற செடிகள் ஆக்கிரமித்ததால் விலங்குகளின் வாழ்விடம் சுருங்கின. புற்கள், செடி கொடிகள் வளர வழியில்லாமல் அழிந்து, விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் வன விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சூழலும் உருவானது.


சீகை மரங்கள், லேண்டானா
செஸ்ட்ரம் போன்ற அயல்நாட்டு தாவரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் புற்கள் வளர வழியின்றி, மான், காட்டெருமை, முயல் போன்ற விலங்குகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. தற்போது வனங்களில் ஆக்கிரமித்துள்ள அயல்நாட்டு தாவரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=417217


ஆகாயத்தாமரை

இத்தாவரம் மிகவும் வேகமாகவும் மற்றும் எத்தகைய மாசடைந்த நீர்நிலைகளிலும் வளரும் தன்மையுடையது. ஓர் ஏரியிலோ அல்லது குளத்திலோ உள்ள ஆகாயத்தாமரை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக வளரும் தன்மையுடையது. மேலும் இத்தாவரத்தின் விதை 30 வருடங்களுக்கு முளைக்கும் தன்மையைத் தக்கவைத்திருக்கும். இத்தகைய பண்புகள் இத்தாவரம் வேகமாக வளர்ந்து பரவுவதற்கும் மற்றும் அழியாமல் இருப்பதற்கும் காரணமாகும். தற்போது இது தாயகமான தென்னமெரிக்காவைத் தவிர மற்ற கண்டங்களிலும் மிக அதிகமாக வளர்ந்து உள்நாட்டு நீர் வளங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது.

தீமைகள்
குடிநீர் மற்றும் பாசனக் குழாய்களுக்குச் செல்லும் நீரின் அளவை இவற்றின் வேர்கள் மட்டுப்படுத்துவதால் நீர் இறைக்கும் நேரமும், செலவும் அதிகரிக்கிறது.
கோடையில் இலைகளின் வழியான நீராவிப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் நீரின் அளவு வெகுவிரைவில் குறையும்.
அடர்ந்த புதர்போலப் பரவியிருக்கும் இச்செடிகள் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால் அந்நீரில் வாழும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இறந்து மட்கும் இத்தாவரத்தால் நீரிலுள்ள ஆக்ஸிசன் போய் நீர் மாசடைவதுடன் தேங்கவும் செய்கிறது.
நீர் மற்றும் நீர்-நிலவாழ் உயிர்களின் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு இச்செடிகள் பெரிய இடையூறுதான்.
இச்செடிகளினூடே நீர் அருந்துவது கால்நடைகளுக்கு பெரிய பிரச்சனை; சிலசமயம் அவை அவற்றில் மாட்டிக்கொண்டு மூழ்கிவிடும் அபாயமும் இருக்கிறது.
கொசுக்கள் உற்பத்தி மற்றும் அதன் இனப்பெருக்கத்திற்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கின்றது.
வெள்ளக் காலங்களில் இவற்றால் சேதம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
பெரும் பரப்பில் வியாபித்திருக்கும் இச்செடிகள் படகுப் போக்குவரத்து, மீன் பிடிப்பு போன்றவற்றைப் பெரிதும் பாதிக்கிறது.
மேலும், நீர்வெளியின் இயற்கையான அழகை மாற்றுவதுடன் அப்பகுதிவாழ் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளை வேற்றிடம் தேடிச்செல்லச் செய்கிறது.


தைலமரம் (யூகலிப்டஸ்)
   குரங்கு, காட்டுப்பன்றி, நரி, பாம்பு, காட்டு ஆடு, மான், முள்ளம்பன்றி, எலி, பூச்சிகள், யானை போன்ற வனவிலங்குகளுக்கு தைல மரக்காடுகள் உகந்தது அல்ல. தைல மரங்களுக்கு இடையே நட்ட ஏலத்திலிருந்து சூரக்கூடி பகுதியில் எக்டருக்கு 400 கிலோ வரை ஏலக்காய் விளைச்சல் கிடைத்துள்ளது. இதற்கு முன் இந்த பகுதி வெறும் புல்தரையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.agriinfomedia.com/profiles/blogs/4679593:BlogPost:26970
 சுற்றுச் சூழலை மாற்றுவதற்கென்றே வெள்ளையர்கள் முதலில் ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வந்து அறிமுகப்படுத்தியது யூக்கலிப்டஸ் என்ற தைலமரம். நீலகிரி மலைப்பகுதியில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியபோது மலைப்பகுதிகளில் பல இடங்கள் சொதசொதப்பாக இருந்தன. இந்த ஈரப்பதத்தை நீக்க, தைல மரங்களை ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வந்து நட்டு தேயிலை தோட்டங்களுக்கு பாதுகாப்பாக மாற்றினர். இதனையடுத்து மிகக்குறுகிய காலத்திற்குள் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை முதலிய பகுதிகளில் இவை வனத்துறையின் உதவியால் பயிரிடப்பட்டது. நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதாலும், மழையளவு குறைவதாலும் விவசாயிகள் மத்தியில் இம்மரங்களுக்கு எதிராகச் கொந்தளிப்பும், எதிர்ப்பும் கிளம்பிதயது. இதனால் தைலமரங்களைப் பயிரிடுவதில்லை என்று அரசு அறிவித்தது. ஆனால் இது வெறும் அறிவிப்பு மட்டும்தான். சுமார் 40 வருடமாக கொடைக்கானல், நீலகிரி, பாபநாசம், மணிமுத்தாறு போன்ற மலைப்பகுதிகளில் தொடர்ந்து இம்மரங்கள் பயிரிடப்படுகிறது. தைலமரத்தின் எந்த பகுதியும் கால்நடைகளுக்கு பயன்படாது. அதன் இலைகள் மக்கி மண்ணுக்கு உரமாவதற்கும் நீண்டகாலமாகும். இத்தைலமரத்தின் அருகில் எந்த வகை செடி கொடிகளும் வளருவதில்லை. இதனால் பலவகை செடி கொடிகளும், பல்வேறு வகை மரங்களும் தைலமரங்களுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அழிந்து போனது. உலக எரிபொருள் தேவை அதிகரிக்கும் என்பதால் ஐக்கிய நாடுகள் சபை சில மரவகைகளை வளர்க்க சிபாரிசு செய்தது, அப்பட்டியலில் தைலமரம் இடம் பெறவில்லை. 1940ம் ஆண்டுகளில் வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய தாவரங்கள் ஆகாயத்தாமரை, நெய்வேலி காட்டாமணக்கு தொடர்ந்து நிலத்தை நாசமாக்கி வருகின்றன. இதேபோல தென்அமெரிக்க சீமைக்கருவேல மரத்தின் ஆக்கிரமிப்பு விவசாயிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இத்தாவரங்கள் நாட்டில் பரவிய வேகத்தைப் போலவே யூக்ளிப்டஸ் மரங்களும் பரவிவருகிறது. இப்படி பல மரங்களை வெளிநாட்டினர் தமிழகத்தில் நட்டு நம்முடைய நீர்ஆதாரத்தை அலித்துவிட்டனர். இதனை தற்போது உள்ள அரசு புரிந்து கொண்டு நீர்ஆதாரத்தை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து இந்திய விவசாய சங்க மாநில செயலாளர் தனபதி கூறியதாவது: தைலமரங்கள் நிலத்தடி நீர், காற்றின் ஈரப்பதங்களை உறிஞ்சி வாழக்கூடியது. இது நீர் ஆதாரம் அதிகம் உள்ள பகுதிகளில் பயிரிடப்படக்கூடி ஒன்று. தைலமரத்தின் தன்மையை அறிந்த சீனா ஒரு தைலமரங்களை கூட தனது நாட்டில் நடவில்லை. வறட்சி மிகுந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் அரசு 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் தைலரமரங்களை வளர்த்து வருகிறது. இது முற்றிலும் விவசாயத்திற்கு எதிரானது. காகிதம் தயாரிக்க தைலமரங்கள் பயன்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர். தற்போது மூங்கில், சவுக்கு போன்ற மரங்களில்கூட காகிதம் தயாரிக்கப்படுகிறது. எனவே தைலமரங்களை ஊக்குவிப்பது நல்லதல்ல. புதுக்கோட்டையில் ஏற்படும் தொடர் வறட்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசு தைலமரங்களை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றார். போராட்ட எச்சரிக்கை இதுகுறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது: தைலமரங்கள் முற்றும் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் எதிரானது. பூமியில் நஞ்சை ஏற்படுத்தும் தைலமரங்கள் தமிழகத்திற்கு தேவையற்ற தாவரம். புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தைலமரங்கள் பயிரிப்பட்டுள்ளது. தைலமரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் சிறியமழை பெய்தாலும் அந்த

நீர்ஆதாரத்தை அழிக்கும் தைலமரம்
ஈரப்பதத்தை தைலமரங்கள் உறிஞ்சிவிடுகிறது. இதனால் நிலத்தடி நீர் வருடாவருடம் குறைந்துகொண்டே உள்ளது. இதனை தடுக்க தைலமர கன்றுகளை உற்பத்தி செய்ய கூடாது என்று மாவட்ட கலெக்டர் வனத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கலெக்டர் உத்தரவு பிறப்பிக்காவிட்டால் எங்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்துவோம். தைலமரங்ளால் அரசுக்கு எந்தவித லாபமும் இல்லை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை தடுக்க தைலமரக் கன்றுகளை உற்பத்தி செய்வதை நிறுத்தி பல ஏக்கரில் உள்ள மரங்களை முற்றிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
http://m.dailyhunt.in/news/india/tamil/dinakaran-epaper-karan/neeraatharathai+azhikkum+tailamaram-newsid-54911535


காடுகளில் சத்தமில்லாமல் ஊடுருவிய பசுமை பாலைவனம்: வனவிலங்குகள் இடம் பெயர்வு மற்றும் மரணத்துக்கு இதுவே காரணம்
தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வனப் பகுதியில் சத்தம் இல்லாமல் வேட்டில், பைன் மற்றும் தைலமரம் உள்ளிட்ட பசுமை பாலைவனம் அதிகரித்து சோலைக்காடுகள் அழிவதால் யானை, காட்டு மாடுகள், புள்ளிமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் இடம் பெயர்வதாகவும், அதிக அளவு இயற்கை மரணம் நிகழ்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த குழு அமைத்து தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி காடுகளில், சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயர்கள், காகித ஆலைகளில் காகிதம் தயாரிக்கவும் வேட்டில், பைன் மற்றும் தைலமரம் உள்ளிட்ட செயற்கைக் காடுகளை வளர்த்து, ஆண்டுக்கு ஒருமுறை இந்த மரங்களை வெட்டி பயன்படுத்தினர். சுதந்திரத்துக்குப் பின்னரும், தமிழக வனத்துறை இந்த மரங்களை 2006-ம் ஆண்டு வரை வெட்டி அப்புறப்படுத்த டெண்டர் விட்டு வந்தது.

அதன்பின், இந்த மரங்கள் வெட்டப்படாமல் விடப்பட்டதால், இயற்கையான சோலைக் காடுகளை அழிக்கும் அளவுக்கு தற்போது இந்த பைன், வேட்டில், தைலமரங்கள் அடர்ந்து வளர்ந்துவிட்டன.

18 ஆயிரம் ஹெக்டேரில் பரவிய பசுமை பாலைவனம்

கொடைக்கானல் பகுதியில் 40 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது. இதில் 18 ஆயிரம் ஹெக்டேர் பைன், வேட்டில் மற்றும் தைலமரங்கள் அடர்ந்து சோலைக்காடுகளை ஆக்கிரமித்துள்ளன.

நிலத்தடி நீர் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும், இந்த வகை மரங்கள் தண்ணீரை உறிஞ்சி விரைவாக வளரக் கூடியவை. அதனால், நிலத்தடி நீர் ஆதாரமும் வறண்டு அப்பகுதியில் மற்ற தாவரங்கள், மரங்கள் வளராத சூழல் ஏற்படும். மழைப்பொழிவும் குறைந்துவிடும். அதனால், புல்வெளிகள் அழிந்து வறட்சி ஏற்பட்டு தண்ணீர், உணவு கிடைக்காமல் வனவிலங்குகள் அதிக அளவு இயற்கை மரணம் அடைகின்றன. அடிக்கடி காடுகளை விட்டு இடம்பெயரவும் செய்தன.

கொடைக்கானலில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 30 காட்டு மாடுகள் இயற்கை மரணம் அடைந்துள்ளன. இந்நிலையில் சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம், தமிழக காடுகளில் உள்ள தைலமரம், பைன் மற்றும் வேட்டில் உள்ளிட்ட செயற்கை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த, சமீபத்தில் தமிழக வனத்துறைக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், வனவிலங்குகள் வெளியேறுவதை உடனே தடுக்க வேண்டும், தைலமரம், பைன், வேட்டில் உள்ளிட்ட செயற்கைக் காடுகளை அழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாதந்தோறும் அறிக்கை தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வனப் பகுதியில் இருந்து வெளியேறி உணவைத் தேடி மலையடிவார கிராமங்களில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்.

கொடைக்கானல் வனப்பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள பைன், வேட்டில், தைல மரங்கள்.

பசுமை பாலைவனத்தை அழிக்க குழு அமைப்பு

மதுரை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கொடைக்கானல், நீலகிரி, தேனி, முண்டந்துறை, களக்காடு மற்றும் ஆனைமலையில் பைன், தைல மரம், வேட்டில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த திண்டுக்கல், கொடைக்கானல், ஊட்டி மாவட்ட வன அலுவலர்கள் திண்டுக்கல் மற்றும் ஊட்டி மண்டல வனப் பாதுகாவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறும்போது, “தைலம், பைன், வேட்டில் மரங்களை பசுமை பாலைவனம் என்றே கூறலாம். இந்த பசுமை பாலவனம் எந்தளவுக்கு காடுகளில் ஊடுருவியுள்ளது, இவற்றால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பிரச்சினை, இம்மரங்களை வெட்டி அப்புறப்படுத்த எவ்வளவு நாள் ஆகும், வெட்டியபின் அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். கொடைக்கானல் வனப் பகுதியில் உள்ள பைன், வேட்டில், தைல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் ஆகும். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
http://m.tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6129229.ece


No comments: