First Published : 26 Oct 2010 12:00:00 AM IST
மதுரை மாவட்டம் கருமாத்தூரில் மூத்த தமிழ்ச்சாதியினர் வணங்கக்கூடிய ஒச்சாண்டம்மன் கோயில் உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் ஒச்சாண்டம்மனை "ஒச்சாயி', "ஆச்சிக்கிழவி' என்ற பெயரில் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர். இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களது ஆண் குழந்தைகளுக்கு ஒச்சு, ஒச்சப்பன், ஒச்சுக்காளை என்றும், பெண் குழந்தைகளுக்கு ஒச்சாயி, ஒச்சம்மாள், ஒச்சுப்பிள்ளை என்றும் பெயர் வைக்கும் வழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது. எனவே ஒச்சாயி தமிழ்ப் பெயர் இல்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்று சேதுராமன் கூறியுள்ளார்.
thanks to www.dinamani.com
No comments:
Post a Comment