கள்ளர் குடிகள்

சாதிகளில்னைந்த குடிகள் thnks to http://www.treasurehouseofagathiyar.net/04600/4699.htm

தொண்டைமான் என்பது குடிப்பெயர்.
சுமார் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக
அந்தப்பெயரைத் தாங்கிய குடியினர்இருந்துவந்திருக்கின்றனர். நாகநாட்டுஇளவரசிக்கும்
சோழமன்னனுக்கும் பிறந்தவனான தொண்டைமான் இளந்திரையன் என்பவன் பழங்காலத்தில்
இருந்தவன்.
மலையமான், அதியமான், போன்று தொண்டைமான்களும் நாடாள்வார்களாக
இருந்திருக்கின்றனர். நாடாள்வார்குடிகளில் ஒன்றுதான் பல்லவராயர் குடியும். மழவராயர்,
காடவராயர் போன்ற குடியினரும்இருந்திருக்கின்றனர். இப்போதும் பல்லவராயர், மழவராயர்,
காடவராயர் போன்ற குடியினர் இருக்கின்றனர். அந்தக்குடியினர் இப்போது கள்ளர்இனத்தினராகக்
காணப்படுகின்றனர். புதுக்கோட்டை பக்கங்களில் 'காடுவெட்டியார்' என்னும் குடியினர்
இருக்கின்றனர். இவர்கள் தொண்டைமான்களுடன் கொள்வினை கொடுப்பினை உள்ளவர்கள்.
'தொண்டைமான்' என்று தனிப்பட்ட சாதிகிடையாது.
பழுவேட்டரையர் என்போர் தஞ்சை மாவட்டத்திலுள்ள கீழைப்பழுவூர் மேலைப்பழுவூர்
ஆகிய வட்டாரத்தை ஆண்ட நாடாள்வார்குடியினர். இவர்கள் கேரளீயர் என்று கருதப்
படுகின்றனர். இவர்கள் எல்லாருமே சோழ பாண்டியருடன் மணத்தொடர்பு கொண்டிருந்தனர்.
முத்தரையரும் இதே போன்றகுடியினர்தாம். . . பல்லவர்கள்
காலத்தில் தஞ்சையை அவர்தாம் ஆண்டுவந்தார்கள். மார்ப்பிடுகு,பெரும்பிடுகு,
விடேல்விடுகு, என்றெல்லாம் பட்டப்பெயர்கள் தாங்கியிருந்தனர். விடேல்விடுகுஎன்பது
ரிஷப லாஞ்சனை எனப்படும் விடை இலச்சினையைக் குறிக்கும். பல்லவர்களுக்கும்
ரிஷப லாஞ்சனன் என்னும் பட்டம் உண்டு.பல்லவநாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும்
இடையே உள்ள கேந்திர முக்கியத்துவம்பெற்ற பூமி அவர்களுடையது. ஆகவே இரு
பெரும் வல்லரசுகளின் மோதல்களில்முக்கியமான வெற்றிப்பகடைக்காய்களாக
அவர்கள் விளங்கினார்கள். குடுமியான்மலை அவர்களின் ஆட்சியில்தான் இருந்தது.
சோழர்கள் அவர்களிடமிருந்துதான் தஞ்சையைக் கைப்பற்றிக்கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பின்னணியாக வைத்து சாண்டில்யன் ஒரு நாவல்
எழுதியிருக்கிறார். பெயர் மறந்துவிட்டது. இலங்கேஸ்வரன் மனோஹரின் நாடகங்களில்
ஒன்று 'காடக முத்தரையன்' என்பது. பல்லவர்களின் ஆட்சியில் மிக முக்கிய
பங்காற்றியவர் இந்த காடக முத்தரையர்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர்நீங்கள் லோகநாத முத்தரையன்
என்று உங்களின் கட்டுரைகளின் இறுதியில் போட்டிருப்பீர்கள். கொஞ்சம் ராஜரீகமாக
இருக்கட்டுமே என்று அதையே சற்று சுருக்கி, நானும் டாக்டர் என்.வீ. ஜெயராமனும்
முத்தரையன் என்று சொல்வோம்:-)

>
>அத்தோடு பல்லவத் தரையர் பழுவேட்டரையர் என்று பலவகையான அரையர்கள்கூறப்படுகின்றார்கள். என்
>பெயரோடு ஒட்டிக்கொண்டிருக்கும் "முத்தரையர்" என்பதும் ஒன்று. (அடிக்கடி என்னைஅப்படித்தானே நீங்கள்
>அழைக்கிறீர்கள் !)

என்னைப் பொருத்தவரையில் இவை சாதிப்பெயர்கள் அல்ல,ஒருவகையான பட்டப்
>பெயர்கள். பிற்காலத்தில் சாதிப் பிரிவாக ஆக்கப்பட்டது என்றும் நினைக்கின்றேன்.

நீங்கள் நினப்பது சரியே.
குடிகளின்பட்டப்பெயர்கள் என்பது இன்னும்
சாலப்பொருந்தும். ஒரு வகையான polarisationand agglutination process மூலம்
குறிப்பிட்ட சாதிகளில்னைந்த குடிகள்இணைந்திருகின்றன
.

அன்புடன்

ஜெயபாரதி

No comments: