இருங்கோவேள்

கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படி மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆயினரே என்கிற சொல் வழக்கைக் கொண்டு அந்தக் குழுவினரே பண்டைத் தமிழர்கள் அப்படியானால் மற்றவர்கள் வந்தேறிகள் என்று பொருள் .பண்டைத் தமிழர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள தொல்பொருள்கள் மற்றும் இலக்கியச் சான்றுகள் இருக்கிறது.

புறநாநூற்றுப் பாடல் (201) இருங்கோவேளை நோக்கி
கபிலர் பாடியது வருமாறு:

"நீயே வடபால் முனிவன் தடவினில் தோன்றிச்
செம்புப் புனைந்தியற்றிய சேனெடும் புரிசை
உவரா ஈகை துவரை ஆண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போர் அண்ணல்
......"
இதன் பொருள் துவாரகையை நாற்பத்தொன்பது தலைமுறைக்கு முன்னர் உங்கள் முன்னோர் ஆண்டு வந்தனர் என்பதாக இருங்கோவேளிடம் கூறுவது எனலாம்.
இப்படியாக வேளிர் எப்போது தமிழகம் வந்தனர் எனத் தெரிகிறது. அவ்வாறு வரும்போது வேளிர், வேந்தர் மற்றும் தொல் அருவாளர் வந்தனர் என்பது உரைகாரர்கள் சொல்லும் செய்தி. மட்டுமின்றி தொல்காப்பியப் பாயிர விளக்கத்திலும் இந்தச் செய்தி இருப்பதை உரைகளில் இருந்து நாம் அறிகிறோம்.
தமிழகத்தில் இரும்பு அறிமுகமானது இவர்களின் வருகையை ஒட்டியே என்பது தொல்பொருள் ஆய்வு முடிவு.
இவர்களுக்கு முன்பே இங்கு சில குழுக்கள் இருந்தனர். அவர்கள் இன்றைக்குப் பழங்குடிகளாக உள்ள வேடர், காடர் போன்றோர்.
மேற்படி வேளிரும் வேந்தரும் அருவாளரைக் கொண்டு காடு கெடுத்து நாடாக்கினர் என்பதும் இலக்கியங்கள் மூலம் தெரிகிறது. இம்மூவரையும் அழைத்து வந்தது அகத்திய முனி என்பதும் சொல்லப்பட்டுள்ளது.

http://www.karuthu.com/forum/forum_posts.asp?TID=2824&PID=30715

No comments: