நாயக்க மன்னர்களும் சேதுபதிகளும்


 

http://books.dinamalar.com/BookView.aspx?id=909
 
 




ஆசிரியர்: ஜெகாதா
வெளியீடு:
அறிவு நிலையம் பதிப்பகம்
பகுதி:
வரலாறு
ISBN எண்:


விலை: 
ரூ.100

 அறிவு நிலையம் பதிப்பகம், 32/107, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014. (பக்கம்: 320) சமயப் பொறை மிக்க இந்து சமயப் பற்றாளர்க ளான நாயக்க மன்னர்கள் - விஜய நகரப் பேரரசர்களின் பிரதிநிதியாகத் தமிழகத்தின் தென் பகுதிக ளை ஆண்டு வரலாற்றின் உன்னதப் பக்கங்களை ஆக்கத் துணை நின்றனர். சுதேச சிந்தனையும், தன்னாட்சி ஆர்வமும் மிக்க சேதுபதி மன்னர்கள் அந்த நாயக்க மன்னர்களுக்குத் துணை நின்றனர். வேற்று முகத் தானை வேரறுக்கும் பண்பு கொண்ட சேது வேந்தர்கள் அதன் பொருட்டே ஆங்கிலேயர்களையும், ஆங்கிலேய அடிவருடிகளையும் அலற அலற எதிர்த்து தாக்கி விடுதலைப் போருக்கு முதல் முழக்கம் இட்டு ஆர்ப்பரித்தனர்.

அவர்களது வீர வரலாற்றைக் கூறும் சுவையான நூல்! சரித்திரப் பொக்கிஷம்!
  

No comments: