சேதுபதி செந்தமிழ்த் திரட்டு

 




ஆசிரியர்     : எம்.முத்துச்சாமி
வெளியீடு   : முருகாலயம்
பகுதி             : இலக்கியம்
ISBN எண்:
விலை:  ரூ.150


 முருகாலயம், 29,பரோடா வீதி, சென்னை-33 (பக்கம்:328)

முச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த சேதுபதி மன்னர்களின் பெருமையை விளக்கும் நூல் இது. சேதுபதி மன்னர்களை பற்றி பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய 21 கட்டுரைகளை தொகுத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழை வளர்ப்பதற்காக சேதுபதி மன்னர்கள் ஆற்றிய பணிகள், இசைத் தொண்டு,கலையாற்றால், பாஸ்கர சேதுபதியின் தமிழ்ப்பணி, சுவாமி விவேகானந்தருக்கும், பாஸ்கர சேதுபதிக்கும் இடையேயான நட்பு போன்ற பல்வேறு விஷயங்கள் இந்நூலில் நிறைந்துள்ளன.
விடுதலை போரில் சேதுபதி மன்னர்கள் என்ற தலைப்பில் எஸ்.எம்.கமால் எழுதியுள்ள கட்டுரையில் (பக்:48) "ஆங்கில ஏகாதிபத்தியத்தை நமது நாட்டில் இருந்து அகற்றுவதற்கான ஒருமித்த சக்தியாக உருவெடுத்த இயக்கம் எப்பொழுது ஏற்பட்டது என்ற வினாவிற்கு இதுவரை சொல்லப்பட்டு வந்த விளக்கம் கி.பி.1857ல் நடைபெற்ற சிப்பாய் கலகம் என்பதாகும்.
ஆனால், தமிழகத்தில் சிப்பாய் கலகத்திற்கு 65 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை இயக்கம் தொடங்கி விட்டதை வரலாறு தெரிவிக்கிறது. ராமநாதபுரம் சீமையின் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, கி.பி.1792ல் இந்த புனித போருக்கு வித்திட்டார்'என,தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்க விஷயம்.
  

  http://books.dinamalar.com/BookView.aspx?id=9293

No comments: