வெளியீடு: குமரன் பதிப்பகம் பகுதி: வாழ்க்கை வரலாறு ISBN எண்: விலை: ரூ.150 குமரன் பதிப்பகம், 3, முத்துக்கிருஷ்ணன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 408). தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் தன் இரு கண்களாகக் கொண்டு, இல்லற வாழ்வை ஏற்காமல், சமூகத் தொண்டிற்காகவே வாழ்ந்து, என்றென்றும் நினைவில் நின்று வழிகாட்டும் தேவரின் இனிய வாழ்க்கை வரலாற்றைக் காட்டும் நூல். நேதாஜியின் வீரப்போரில் தேவருக்கு இருந்த ஈடுபாடும், காங்கிரஸ் மேல் கொண்ட அன்பும், வீர சாவர்க்கரின் தீவிர தேசத் தொண்டுக்குத் துணை நின்றதும், தொழிலாளர், விவசாயிகளுக்காக போராடியதும் மிகவும் விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர். எவரையும் ஈர்க்கும் மிடுக்கான தோற்றமும், எதற்கும் அஞ்சாத எடுப்பான பேச்சும், எவருக்கும் நியாயம் தேடித் தரும் எழுத்தாற்றலும் இந்த நூலில் சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளன. பாரதம், ராமாயணம் இரண்டையும் மேற்கோள் காட்டி பேசுவதுடன், முருகன் கையில் உள்ள வேல் அணுகுண்டை விட சக்திமிக்கது என்பது போலவும் பேசும் ஆற்றல்களை, இந்நூலில் பல இடங்களில் காண முடிகிறது. கொலை வழக்கில் சிக்கி, நிரபராதியாய் வெளிவந்து, டில்லி பார்லிமென்ட், தமிழக சட்டசபை ஆகியவற்றில் துணிவுடன் பேசியதும், தனது 54 வயது வரை பக்தியுடன் அவர் ஆற்றிய தொண்டும் இந்நூலில் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ஒரு ஜாதியின் தலைவராக அவரை இன்று சிலர் ஆக்க நினைத்தாலும், தமிழ் ஜாதியின் மாபெரும் தலைவர் தான் அவர் என்றும் என்பதை இந்த நூல் நின்று நிலைநாட்டும். |
முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment