தொண்டைமான் கட்ட பொம்மனை காட்டிக்கொடுக்கவில்லை - 2

தொண்டைமான் கட்ட பொம்மனை காட்டிக்கொடுக்கவில்லை , பிடித்துக்கொடுத்தான் என்றே வைத்துக்கொண்டாலும், அதை செய்யாமலும் இருந்திருக்கலாம், ஏன் செய்யவில்லை என்று கண்டிப்பாக தண்டித்து இருக்க மாட்டார்கள்.

ஆனால் பிடித்துக்கொடுத்தார், ஏன், வெள்ளையர்களிடம் நல்லப்பெயர் வாங்க வேண்டும் என்று மட்டும் அல்ல , கொஞ்சம் இனப்பற்று, சாதிப்பற்றும் காரணம்.

முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர்கள் தான் புதுக்கோட்டை தொண்டைமான் ,ராமநாதபுரம் சமஸ்தானம், சிவகங்கை சமச்தானம் எல்லாம்.

பூலித்தேவன் வெள்ளையர்களுக்கு எதிராக போர் இட்டக்காலத்தில் , வீரபாண்டியனின் தந்தை வெள்ளையர் பக்கம் இருந்து பூலித்தேவனை தேடுவதில் உதவி புரிந்தார். மேலும் படைகளும் கொடுத்தார். களக்காட்டில் பூலித்தேவன் பதுங்கி இருந்த போது பிடிபட ஒரு காரணமாக இருந்ததும் அவர் தான்.

ஏன் அப்படி செய்தார், அதாவது தெலுங்கு நாயக்கர் பாளையத்திற்கும், தமிழ் முக்குலத்தோர் வழி வந்த பாளையம் , சமஸ்தானங்களும் ஆரம்பத்தில் நட்புறவாக இருந்தன பின்னர் அவர்களுக்குள் பகைமை வந்து,நட்புறவு அவ்வளவாக இல்லை(ராணி மங்கம்மாவுடன் ராமநாதபுரம் சமஸ்தான கிழவன் சேதுபதி பல முறைப்போர் தொடுத்துள்ளார்) அதனை பிரித்தாலும் சூழ்ச்சி மூலம் வெள்ளையர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்.முக்குலத்தோர் வசம் இருக்கும் பாளையம் மீது படை எடுக்க நாயக்கர்களை கூட்டு சேர்த்துக்கொள்வார்கள், நாயக்கர்களை அடக்க அந்த பக்கம் கூட்டு சேர்ந்துக்கொள்வார்கள்.

அப்போது வெள்ளையருக்கு உதவி செய்ததைக்கணக்கில் கொண்டே பின்னர் கட்டப்பொம்மனை பிடிக்கவும் உதவியுள்ளார் தொண்டைமான், மேலும் , பரம்பரையாக நாயக்கர்கள் பாளையத்திற்கும், அவர்களுக்கும் இருக்கும் சிறு பூசல்களும் ஒரு காரணம்.

அவுரங்க சீப் காலத்தில் சிவாஜிக்கு உதவி செய்து அவுரங்க சீப்பை அழிக்கவும் முயன்றது வெள்ளையர்கள், போர்ச்சுகீசியர்கள்.

அவுரங்க சீப் வெற்றிப்பெற்றால் உடனே அவரிடம் போய் சமாதானம் பேசி விடுவார்கள்.

அதே போல பல இடங்களிலும் இந்து மன்னரை வீழ்த்த முகலாய மன்னரை துணைக்கு வைத்துக்கொள்வார்கள், முகலாய மன்னரை வீழ்த்த இந்து மன்னரை வைத்துக்கொள்வார்கள்.

திப்பு சுல்தான், ஹைதர் அலியை எல்லாம் இப்படி செய்து தான் பலவீனப்படுத்தி கடைசியில் வென்றார்கள்.( வவ்வால் said..)
சிரியர் சொல்வது எல்லாம் 'காட்டிக்கொடுத்தான்' என்று சொல்வது சரியல்ல என்பதுதானே!

ஆங்கிலேயர்கள் தோற்று டச்சுக்காரர்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தியிருந்தால் வரலாறு மாற்றிப் பேசிக்கொண்டிருக்குமாயிருக்கும். தொண்டைமானை வரலாற்று வீரனாகவும் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவனாகவும். வலுத்தவன் எழுதுவது வரலாறு ஒப்புக்கொள்கிறேன்.

ஹிட்லர் இரண்டாம் உலகப்போரை வென்றிருந்தால் நீங்கள் தற்பொழுது உலகம் எப்படியிருந்திருக்கும் என்றும் வரலாறு எப்படி எழுதப்பட்டிருக்கும் என்றும் நினைத்துப்பாருங்கள்.
பூலித்தேவனுக்கு எதிராக கட்டபொம்மனின் தந்தை செயல்ப்பட்டது சரித்திரத்தில் அவ்வளவாக பேசப்படவில்லை, காரணம் பூலித்தேவன் சில காலம் போராடி பெரிதாக போராட்டம் இல்லாமல் சீக்கிரம் மாட்டிக்கொண்டு ,பின்னர் தப்பி சென்று மர்மமான முறையில் தலைமறைவாகி விட்டார் என்று சொல்வதோடு சரி அவர் இறந்தாரா , இல்லை இருந்தாரா என்பது குறித்து தெளிவான முடிவே அப்போது எட்டவில்லை.

ஆனால் கட்டபொம்மன் , போராடி கைதாகி, விசாரணைக்குட்படுத்தப்பட்டு , தூக்கை சந்தித்தார். பிரிட்டீஷார் தூக்கில் ஏற்றிய முதல் இந்திய கலகக்காரார் அவர்.இதனால் அவர் மீது அதிக கவனம், மேலும் அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு, நாட்டுப்புற கதைகள் பாடல்கள் அதிகம்!

பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் அப்போதைய போராட்டத்தை ஏனோ விடுதலைபோராகவே எடுத்துக்கொள்வதில்லை, அவர்களைப்பொறுத்த வரை சிப்பாய் கலகம் தான் முதல் போணி!( வவ்வால் said..
பூலித்தேவனைப் பற்றியும் நடுவில் பேசிக் கொண்டிருந்ததால் இதைச் சொல்கிறேன். பூலித்தேவன் போர் அறிவிப்பு செய்த அதே காலகட்டத்தில் சிவகங்கையை ஆண்டவர்கள்தான் முத்து வடுக நாதரும், ராணி வேலு நாச்சியாரும். பின்னாளில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற முதல் பெண்மணி என்று வேலு நாச்சியாரும், வெள்ளையரை எதிர்த்து போராடி வீரமரணம் அடைந்த முதல் பாளையக்காரர் என்ற பெருமையை முத்துவடுக நாதரும் பெற்றாலும், பூலித்தேவனின் வெள்ளையருக்கெதிரான போராட்டத்தில் இவர்கள் ஆதரவளிக்க வில்லை என்பது உண்மை. இதற்கு நிச்சயமாக அப்போதய அரசியல் சூழ்நிலைகள் காரணமாய் இருந்திருக்கலாம். முத்துவடுக நாதர் இறக்காமல், வேலு நாச்சியாரும் ஆங்கிலேயருக்கெதிராய் போராடாமல் இருந்திருந்தால், சரியான சமயத்தில் பக்கத்து பாளையக்காரனை காக்க மறந்திட்ட துரோகிகளாய் இவர்களை வரலாறு உருவகப் படுத்தி இருந்திருக்கலாம். அதை செய்ய இந்த ஒற்றை காரணம் மட்டுமே போதுமானதாய் இருந்திருக்கும்.

நான் சொல்ல வருவது ஆங்கிலேயர் எதிர்ப்பு, ஆதரவு என்ற இந்த ஒற்றைக் காரணத்தைத் தாண்டி, வீரம், ஆட்சிமுறை, வரி வசூல் அமைப்பு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதையே. )
http://blog.mohandoss.com/2008/01/blog-post_25.html

No comments: