உலகின் மிகப்பெரிய வேலி

0 c
சீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்திருக்கிறது.  மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி.

ராய் மாக்ஸ்ஹாம்
இது உயிர்வேலி.  முள்மரங்கள் வளர்த்து அவற்றை இணைத்துக்கட்டி எவரும் கடந்து போகமுடியாதபடி அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 அடி உயரம் உடையது இது. உலகவரலாற்றின் மிகப்பெரிய வேலி இதுதான். கிட்டத்தட்ட வட இந்தியாவை இரு நேர்பாதிகளாக இது பிளந்தது. 4000 கிமீ மைல் நீளத்துக்கு பெரும் பொட்டல்களை, விளைநிலங்களை, கிராமங்களை, நகரங்களை, பாலைவனங்களை, குன்றுகளைப் பகுத்தபடி ஓடியது இது.  இதன் உச்சகாலகட்டத்தில் 1872ல் கிட்டத்தட்ட 14000  முழுநேர பிரிட்டிஷ் அரசூழியர்கள் இதை காவல்காத்துப் பராமரித்தார்கள். கிட்டத்தட்ட முக்கால்நூற்றாண்டுக்காலம் இது பிரிட்டிஷ் -இந்திய அரசின் அதிகாரத்தின் சின்னமாக நீடித்திருந்தது.
இந்த மாபெரும் அமைப்பைப்பற்றி இந்தியாவின் வரலாற்றாசிரியர்கள் எவருமே எழுதியதில்லை. இந்தியாவைப்பற்றிய எந்த நூலிலும் இது குறிப்பிடப்பட்டதில்லை. இதைப்பற்றி சுதந்திர இந்தியாவின் எந்த ஆவணத்திலும் ஒரு குறிப்பும் இல்லை. இந்தியாவில் உள்ள எந்த சமூக, பொருளாதார அறிஞரும் இதைப்பற்றி கேள்விப்பட்டதுகூட இல்லை. 1995 வரை.
பயணக்கட்டுரையாளரும் லண்டன் நூலக ஆவணப்பராமரிப்பாளருமான ராய் மாக்ஸ்ஹாம் 1995 இறுதியில் லண்டனில் ஒரு பழைய புத்தகக் கடையில் மேஜர் ஜெனரல் டபிள்யூ எச். ஸ்லீமான் என்ற பிரிட்டிஷ் வீரரின் நினைவுக்குறிப்புகளை வாங்கினார். 1893ல் பிரசுரிக்கப்பட்ட நூல் அது. ஸ்லீமான் 1850களில் பிரிட்டிஷ் இந்தியாவில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றி அன்றைய இந்தியா முழுக்க பயணம் செய்திருக்கிறார். அவரது பயணக்குறிப்புகளில் மன்னர்கள், சிற்றரசர்கள், கொள்ளையர்கள், புனித நகரங்கள், கோயில்கள் பற்றிய சித்தரிப்புடன் அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசின் வரிவசூல் முறைகளைப்பற்றிய குறிப்பும் இருந்தது. அதில் ஸ்லீமான் இந்த மாபெரும் உயிர்வேலியைப்பற்றிச் சொல்கிறார்
ராய் மாக்ஸ்ஹாம் ஆச்சரியம் கொள்கிறார். இது கற்பனையா என ஐயம் அடைகிறார். பிரிட்டிஷ் ஆவணங்களை ஆராய்கிறார். பெரும்பாலான குறிப்புகள் 1870களுக்குப் பின்னால் வந்தவை. அவற்றில் வேலியைப்பற்றிய தகவல்களே இல்லை. லண்டனில் முறையாகப் பராமரிக்கப்படும் பிரிட்டிஷ் ஆவணக்காப்பகங்களில் பொறுமையாகத் தேடுகிறார். ராய் மாக்ஸ்ஹாம் தொழில்முறையாக ஒரு அரிய ஆவணக்காப்பாளர் என்பது அவருக்கு உதவுகிறது. கடைசியில் அந்த வேலிபற்றிய சர்வே தகவல்களும் அதை நிறுவிப் பராமரித்ததைப்பற்றிய கணக்குவழக்குகளும் அவருக்குக் கிடைக்கின்றன.
இந்த வேலியை பிரிட்டிஷ்காரர்களின் ஒரு கிறுக்குத்தனம் என முதலில் நினைக்கும் ராம் மாக்ஸ்ஹாம் மெல்லமெல்ல அதன் பின்னால் உள்ள கொடூரமான சுரண்டலைக் கண்டுகொள்கிறார். மிக விரிவான ஆய்வுகள் வழியாக அதை அவரது இந்தியாவின் மாபெரும் வேலி என்ற பயண நூலில் சித்தரித்துக்காட்டுகிறார்.
சுங்கவேலி 1870

இந்த வேலி முழுக்க முழுக்க உள்நாட்டு உப்புவணிகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது. இது சுங்கவேலி [Customs hedge] என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசின் முக்கியமான வருமானமே அவர்கள் உப்புக்கு போட்ட உள்நாட்டுச் சுங்க வரிதான். அதை வசூலிக்கும் பொருட்டு உள்நாட்டு உப்புப்பரிமாற்றத்தை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பிரிட்டிஷார் இந்தியாவில் அவர்கள் வேரூன்றிய 1803  முதல் இதை உருவாக்க ஆரம்பித்தனர். படிப்படியாக இதை நாற்பதாண்டுக்காலத்தில் கட்டி முடித்தார்கள். 1843ல் இந்த வேலி முழுமையடைந்து உள்நாட்டுச் சுங்கத் துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.
இதைப் புரிந்துகொள்ள முதலில் இந்தியாவின் நில அமைப்பையும் அதில் உப்புக்கு உள்ள இடத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவின் வட இந்தியப்பகுதி மிக அகலமானது. கடலை விட்டு மிகவும் தள்ளி இருக்கக்கூடிய பிரம்மாண்டமான நிலப்பகுதிகளைக் கொண்டது.  வடகிழக்கு மாநிலங்கள், இமயமலைப் பகுதிகள், மக்கள் செறிந்த பிகார், உத்தரப்பிரதேசம்,மத்தியப்பிரதேசம் போன்ற பகுதிகள் அனைத்துமே உப்புக்குத் தென்பகுதிக் கடலோரங்களை நம்பி இருந்தன.
உப்பு பெருமளவுக்கு காய்ச்சப்பட்டது குஜராத்தில் கட்ஜ் வளைகுடா பகுதியில். இப்பகுதியில் கடலில் பெரிய ஆறுகள் கலப்பதில்லை. ஆகவே உப்புச்செறிவு அதிகம். வருடத்தில் பெரும்பாலான மாதங்களில் உக்கிரமான வெயிலும் அடிக்கும். சாம்பார் ஏரி போன்ற உப்பு ஏரிகள் கோடைகாலத்தில் தானாகவே வற்றி உப்புவயல்களாக ஆகும். ஆகவே  பாரம்பரியமாக குஜராத்தில் இருந்து உப்பு வட மாநிலங்களுக்குச் சென்றது. அதற்காக நீண்ட உப்புப்பாதைகள் இருந்தன. மகாராஷ்டிரா ஒரிசா கடலோரங்களிலும் உப்பு பெருமளவுக்கு விளைந்தது. அவையும் கரைவழியாக வடமாநிலங்களுக்கும் இமய மலைப்பகுதிகளுக்கும் சென்றன.
சரி அப்படியென்றால் எதற்கு காஷ்மீர் வரை வேலி? இன்று பாகிஸ்தானில் இருக்கும் இமயமலைப்பகுதிகளில் உலகின் மிகப்பெரிய உப்புமலைகள் உள்ளன. மிகச்சுத்தமான இந்த உப்பு மிகமிக மலிவானதும்கூட. திபெத் உட்பட இமயமலைப்பகுதிகளுக்கு நூற்றாண்டுகளாக இந்த உப்புதான் சென்றுகொண்டிருந்தது. அதைத் தடுக்கவே அங்கே வேலி அமைக்கப்பட்டது.
உப்பு அவ்வளவு முக்கியமான வணிகப்பொருளா என்ன? ஆம் என்கிறார் ராய் மாக்ஸ்ஹாம். அன்றைய இந்தியாவில் பெரும்பாலான கிராமங்கள் தன்னிறைவு கொண்டவை. மக்களுக்குத் தேவையான தானியங்கள் காய்கறிகள் நெய் போன்ற நுகர்பொருட்கள் துணிகள் ஆயுதங்கள் எல்லாமே கிராமசமூகங்களுக்குள்ளாகவே உற்பத்திசெய்யப்படும்.  வெளியே இருந்து வந்து சேரக்கூடிய ஒரே உற்பத்திப்பொருள் என்பது உப்புதான். ஆகவே அதுவே அன்றைய இந்தியாவின் மிக முக்கியமான வணிகம்
உப்பு அந்த அளவுக்கு இன்றியமையாததா? இன்று உப்பு ஒரு முக்கியமான தேவையாகக் கருதப்படுவதில்லை. ஏனென்றால் இன்று பதப்படுத்தியும் சேமித்தும் உண்ணப்படும் பல்வேறு உணவுப்பொருட்களில் உப்பு நிறையவே இருக்கிறது. புலாலில் உப்பு உண்டு. ஆனால் அன்றைய இந்தியாவில் விவசாயியின் சாதாரண உணவு தானியமும் காய்கறிகளும் மட்டுமே. அவன் உப்பு சேர்த்துக்கொண்டே ஆகவேண்டும். மேலும் வியர்த்து வழிய வெயிலில் நின்று வேலைசெய்யும் இந்திய விவசாயி பெருமளவு உப்பை இழக்கிறான். அவன் உப்பு இழப்பை அவன் உணவு மூலம் ஈடு கட்டியாகவேண்டும். அத்துடன் வட இந்திய நிலங்களில் உப்பு குறைவு. ஆகவே மிருகங்கள் மண்ணைநக்கி உப்பை எடுத்துக்கொள்ளமுடியாது. அவற்றுக்கும் உப்பு கொடுக்கப்பட்டாகவேண்டும்.
வட இந்தியாவின் மக்கள்தொகையை வைத்துப்பார்த்தால் எந்த அளவுக்கு உப்பு தேவைப்படும் என்று பார்க்கலாம். அந்த அளவுக்கான உப்பு எவ்வளவு பெரிய வணிகம்! அந்த உப்பு குஜராத் அல்லது ஒரிசாவில் இருந்து மாட்டுவண்டிகளிலும் கோவேறு கழுதைகளிலும் தலைச்சுமைகளிலுமாக பல ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி வந்துசேரும்போது அதன் விலை எத்தனை மடங்கு பெருகியிருக்கும் என ஊகிக்கலாம். பிகாரில் ஒரு விவசாயி சராசரியாக ஒரு மாதம் ஈட்டும் வருமானம் ஒரு வருடத்து உப்புச்செலவு என்று பல குறிப்புகளைக் கொண்டு கணித்துச் சொல்கிறார் ராய் மாக்ஸ்ஹாம். மலைப்பகுதி மக்கள் தானியத்துக்குச் செலவழிக்கும் அதே அளவு பணத்தை உப்புக்குச் செலவிட்டிருக்கிறார்கள்!
உப்பு மிகமிக அருமையான பொருளாக இருந்திருக்கிறது. பல இடங்களில் அது நாணயமாகக் கூட புழங்கியது. உப்பு மழைக்காலம் முழுக்க சேமிக்கப்பட்டாகவேண்டும் என்பதனால் உப்பு கைமாற்றாக அளிக்கப்படுவது பெரும் உதவியாக இருந்திருக்கிறது. உப்புமேல் சத்தியம் செய்வது மிக அழுத்தமானதாகக் கருதப்பட்டிருக்கிறது.
உப்பு அத்தனை அவசியப்பொருளா என்ன? ஒருநாளைக்குக் குறைந்தது  1500 முதல் 2500 மில்லிகிராம் சோடியம் மனித உடலுக்குத் தேவை. அதிகமாக உப்பு உடலை விட்டு வெளியேறும் இந்தியா போன்ற கோடைநிலங்களில் வாழும் மனிதனுக்குக் குறைந்தது இரண்டு அவுன்ஸ் உப்பு தேவை என்று ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடுகிறார். அந்த உப்பு அவனால் உண்ணப்படாவிட்டால் Hyponatremia என்ற நோய்க்கு அவன் ஆளாகிறான். குழந்தைகள் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். உப்புக்குறைவு நோயின் அடிப்படையான கோளாறு என்னவென்றால் உப்புக்குறைவால்தான் அந்நோய் உருவாகிறது என்று நோயாளியோ மருத்துவனோ உணர முடிவதில்லை என்பதே
உப்பு உடலின் திரவச்சமநிலையை தக்கவைத்துக்கொள்ள இன்றியமையாதது. உப்பு குறையும்போது ரத்தம் கனமிழக்கிறது. ஆகவே உடல் நீரை வெளியேற்றுகிறது. ஆகவே ரத்த அழுத்தம் குறைகிறது. நோயாளிக்கு தலைச்சுற்றும் வாந்தியும் சமநிலை இழப்பும் ஏற்படுகிறது. மூச்சுத்திணறலும் மயக்கமும் உருவாகிறது.  இந்நிலை தொடர்ந்தால் மரணம் நிகழ்கிறது. பட்டினியால் வாடிய இந்தியாவில் பெரும்பாலும் உப்புகுறைவு நோய் பட்டினியின் விளைவான பலமிழப்பாகவே கருதப்படுகிறது. ஆகவே அது எளிதாக உயிரைக்குடிக்கிறது
இந்த பிரம்மாண்டமான வணிகத்தை முகலாயர்களும் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்களின் வரி மேலோட்டமானது, குறைவானது. ஒட்டுமொத்தமாக உப்புப்பரிமாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர அவர்கள் முயலவில்லை. பிரிட்டிஷார் அதை சுங்கவேலி வழியாக சாதித்தார்கள்
ராய் மாக்ஸ்ஹாம் இது உருவான வரலாற்றை சொல்கிறார்.  ஆரம்பத்தில் பிரிட்டிஷார் வங்காளத்தைத்தான் கைப்பற்றினார்கள். வங்காளத்தில் உப்புக்காய்ச்சுவது மிகக் கடினமானது. கங்கை கொண்டு வந்து கொட்டும் நல்ல நீரின் காரணமாக அங்கே நீரில் உப்பு குறைவு. ஆகவே நீரை வற்றச்செய்து மேலும் விறகால் எரித்து சுண்டச்செய்துதான் உப்பை எடுப்பார்கள். இந்த உப்பு மிக மிகக் கீழான நிலையில் வாழ்ந்த மக்களால் தயாரிக்கப்பட்டது. உப்பின் விலையும் அதிகம்.
இந்த உப்பு காய்ச்சப்பட்டதாகையால் வங்காள பிராமணர்கள் இதை உண்ண மாட்டார்கள். சமைக்கப்பட்ட உணவுக்குச் சமம் அது. ஆகவே சூரிய ஒளியில் சுண்டிய உப்பு ஒரிசாவில் இருந்து வந்தது.  பிளாசி போரில் கிளைவ் வங்காள நவாபை வென்று வங்கத்தைப் பிடித்ததும் வங்காளம் முழுக்க விரிவான வரிவசூல் முறையை நிறுவினார். உப்புக் காய்ச்சும் ஆலைகளுக்கு வரியைப் பலமடங்காக ஆக்கினார். அது முக்கியமான வருமானமாக ஆகியது
இந்த உப்பு வரி உப்பின் விலையை அதிகரித்து  ஒரிசாவில் இருந்து வரும் உப்பின் விலையை விட அதிகமாகியது. ஆகவே ஒரிசாவில் இருந்து வரும் உப்புக்குக் கடும் வரி போடவேண்டியிருந்தது. அவ்வாறுதான் ஒரிசா வங்க எல்லையில் மகாநதி ஓரமாக முதலில் சுங்கச்சாவடிகளை அமைக்க ஆரம்பித்தார்கள் பிரிட்டிஷார்.ஒரிசாவின் சோனாப்பூர் என்ற ஊரில் முதல் சாவடி அமைந்தது. அதில் இருந்து சந்திரபூர் வரை சுங்கத்தடுப்புக்கோடு உருவாக்கப்பட்டது.
மெல்லமெல்ல பிரிட்டிஷாரின் அதிகாரம் பிகாருக்கும் உத்தரபிரதேசத்துக்கும் மத்தியப்பிரதேசத்துக்கும் பரவியது. ஆகவே சுங்கச்சாவடிகளை பர்ஹான்பூர் வரை நீட்டித்தார்கள். உப்புச் சுங்கத்தின் பெரும் லாபத்தை பிரிட்டிஷார் கண்டுகொண்டார்கள். அதற்காகப் பெரும்பணத்தை முதலீடுசெய்ய முன்வந்தார்கள்.  மத்தியப்பிரதேசத்தின் விரிந்த பொட்டல்நிலத்தை சுங்கக் கண்காணிப்புக்குள் வைத்திருப்பது கடினமாக இருந்தது. ஆகவே ஒரு பெரிய வேலியை உருவாக்கும் எண்ணம் வந்தது. இவ்வாறுதான் பர்ஹான்பூர் முதல் சுங்க வேலி தோன்றியது.
இதே காலகட்டத்தில் 1823ல் ஆக்ரா சுங்க ஆணையர் ஜார்ஜ் சாண்டர்ஸ் என்பவர் கங்கை யமுனைக்கரையிலூடாக மிர்சாப்பூர் முதல் அலஹாபாத் வரை ஒரு பெரிய வேலியை அமைத்தார். அலஹாபாதில் இருந்து நேப்பாளம் வரையில் அங்கிருந்து சிந்து வரையில் 1834ல் ஜி.எச்.ஸ்மித் ஒரு வேலியை அமைத்தார். தொடந்து சாலைகளில் சுங்கச்சாவடிகளை அமைத்து அந்தச்சாவடிகளை வேலியால் இணைத்துக்கொண்டே சென்றார்கள். இவ்வ்வாறுதான் சுங்கவேலி படிப்படியாக உருவாகிவந்தது.

ஆரம்பத்தில் காய்ந்தமரத்தாலும் மூங்கிலாலும் ஆன வேலியைத்தான் கட்டினார்கள். வேலிக்கு இருபக்கமும் ஆழமான கிடங்கு வெட்டப்பட்டது. ஆனால் அந்த வேலியைப் பாதுகாப்பது கடினமாக இருந்தது. வருடம்தோறும் அது சிதல்பிடித்தும் தீப்பிடித்தும் அழிந்தது. அதற்காக நிறைய பணம்செலவிட வேண்டியிருந்தது.  அப்போதுதான் 1867ல் சுங்க ஆணையராகப் பதவிக்கு வந்தார் ஹ்யூம்.மூன்றாண்டுகள் அப்பதவியில் இருந்த அவர்  இந்தவேலியைப் பராமரிப்பதற்கான செலவைக் கணக்கிட்டு ஆராய்ந்தார்.   ஹ்யூம் சுங்கவேலியை உயிர்வேலியாக அமைப்பது ஆரம்பத்தில் செலவேறியதென்றாலும் சில வருடங்களில் பராமரிப்பே தேவையற்ற ஒன்றாக அது ஆகிவிடுமெனக் கண்டுபிடித்தார். மிக எளிதில் உயரமாக வளரும் முள்மரங்களைக் கண்டுபிடித்து அவற்றை நட்டு அந்த உயிர்வேலியை அவர்தான் உருவாக்கினார்.
ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்
ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்  இந்தியாவின் முதல் சுதந்திர எழுச்சியான சிப்பாய்க் கலகத்தை ஒடுக்குவதில் பெரும்பங்காற்றி முக்கியமானவராக ஆனவர். அவரே இந்தியா மீதான பிரிட்டிஷாரின் பிரம்மாண்டமான முதல் சுரண்டலமைப்பைக் கட்டி எழுப்பினார் என்பது மிக ஆச்சரியமான விஷயம். ஏனென்றால் அவர் பின்னாளில் இந்திய தத்துவ ஞானத்திலும் ஆன்மீகத்திலும் ஈடுபாடுகொண்டவராக ஆனார். இந்தியர்களுக்கு அதிகமான தன்னுரிமை தேவை என வலியுறுத்தினார். நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு அதிக இடம் அளிக்கவேண்டுமென வாதாடி அதற்காக ஓர் அமைப்பை உருவாக்க முன்கை எடுத்தார். காந்தியின் தலைமையில் பின்னாளில் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரஸ் 1885ல் அவ்வாறுதான் உருவானது.
ராய் மாக்ஸ்ஹாம் அளிக்கும் தகவல்கள் நம்மை ஆழமான மனச்சோர்வில் கொண்டுசென்று தள்ளுபவை. முதல் விஷயம் இந்தியாவில் உருவாகிவந்த பிரிட்டிஷ் ஆட்சி அதன் ஆரம்பகட்டம் முதல் உச்சகட்ட ஊழலையே நிர்வாகத்தின் இயல்பான வழிமுறையாகக் கொண்டிருந்தது என்பதை சித்தரித்துக் காட்டுகிறார் ராய் மாக்ஸ்ஹாம். கிளைவ் இந்தியாவை வென்றதே ஊழல் மூலம். சாதாரண அலுவலக குமாஸ்தாவாக இந்தியா வந்த அவர் அந்த ஊழலில் சம்பாதித்த பணத்தால் பிரிட்டனின் முதல் பத்துப் பணக்காரர்களில் ஒருவராக ஆனார். அன்றைய ஒவ்வொரு பிரிட்டிஷ் அதிகாரியும் மிகக்குறுகிய காலகட்டத்தில் உச்சகட்டமாக ஊழல் செய்து பணக்காரர்களாக ஆனார்கள்
அத்துடன் கீழ்மட்டத்தில் ஊழியர்களுக்கு மிகமிகக் குறைந்த ஊதியத்தை  அளித்தோ அல்லது ஊதியமே இல்லாமலோ வேலைசெய்ய வைத்தது கம்பெனி. அவர்கள் ஊழல்மூலம் சம்பாதிக்க ஊக்குவித்தது.அதன் மூலம்தான் பல்லாயிரம் இந்தியர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பணிபுரிய ஆர்வத்துடன் திரண்டு வந்தார்கள். மிகச்சில வருடங்களிலேயே பிரிட்டிஷார் தங்களுக்குரிய அதிகார வர்க்கத்தை இவ்வாறுதான் உருவாக்கிக்கொண்டார்கள். அதாவது இன்றும் நீடிக்கும் நம் அதிகார வர்க்கமானது ஊழலால் ஊழலுக்காகவே உருவாக்கப்பட்ட ஒன்று
இவ்வாறு ஊழலில் அதிகாரிகள் ஈடுபடும்போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதுமே அடிமட்ட மக்கள்தான். பிரிட்டிஷாரை ஆதரித்த நிலப்பிரபுக்களுக்கு அதிக இழப்பு ஏற்படாமல் எந்த விதமான ஒருங்கிணைப்பு பலமும் இல்லாமல் இருந்த ஏழைகளுக்கே அதிக பாதிப்புவரும் வகையில் வரிகள் போடப்பட்டன. ஆகவேதான் உப்புவரிக்கு இத்தகைய முக்கியத்துவம் வந்தது. சிலர் இன்று எழுதுவதுபோல பிரிட்டிஷ் ஆட்சி அடித்தள, தலித் மக்களுக்கான விடிவாக இருக்கவில்லை. அவர்களை மிகக்கொடுமையாக ஒடுக்கிப் பேரழிவை நோக்கித் தள்ளக்கூடியதாகவே இருந்தது
பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாக இந்தியாவில் உருவான மாபெரும் பஞ்சங்களில் இரண்டாவது பெரும் பஞ்சத்தில் 11876–78 ல்  கிட்டத்தட்ட  ஆறரைக்கோடிப் பேர் இந்தியாவெங்கும் பட்டினிகிடந்து செத்தார்கள். அதாவது அன்றைய இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால்வாசி. அதில் 30 லட்சம்பேர் அன்றைய ஒருங்கிணைந்த வங்க மாநிலத்தில் செத்தார்கள்.உலகவரலாற்றின் மாபெரும் பஞ்சம் இதுவே .இது பஞ்சம் என்பதைவிடப் பொருளியல் சுரண்டல் வழியாக நிகழ்ந்த ஒரு மாபெரும் படுகொலை என்பதை இந்நூல் மிக துல்லியமாகச் சித்தரிக்கிறது. வெள்ளையர்களின்தாசர்களான நம் ஆய்வாளர்கள் மழுப்பிச்செல்லும் இந்த இடத்தில் ஒரு ஆங்கிலேய ஆய்வாளர், பிரிட்டிஷ் இந்தியாவில் அதிகாரியாக இருந்த ஒருவரின் பேரன், இந்த அளவுக்குத் திட்டவட்டமாக எழுதியிருப்பதை ஆச்சரியமென்றே கொள்ளவேண்டும்.
பஞ்சத்தை உருவாக்கிய கூறுகள் என்ன? மாபெரும் வங்கப்பஞ்சம் தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு 1874, 1875களில் வடஇந்தியா முழுக்க மிகச்சிறந்த விளைச்சல் இருந்தது என பிரிட்டிஷ் ஆவணங்கள் சொல்கின்றன என்கிறார் ஆசிரியர். பொதுவாக இந்தியாவில் ஒரு நல்ல விளைச்சல் ஐந்தாண்டுவரை பஞ்சம்தாங்கும் தன்மை கொண்டது, காரணம் சராசரி இந்தியர்களின் நுகர்வு  இன்றுபோலவே அன்றும் மிகமிகக் குறைவு. அப்படியானால் எப்படி பஞ்சம் வந்தது?
இந்தியாவில் போடப்பட்ட ரயில்பாதைகளினால்தான். அந்த ரயில்கள் அனைத்துமே மைய நிலங்களைத் துறைமுகங்களுடன் இணைப்பதற்காகப் போடப்பட்டவை. அவற்றின் வழியாக இந்தியாவின் விளைச்சல் முழுக்கத் திரட்டப்பட்டுக் கப்பல்களில் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. உலகமெங்கும் விரிவாக்கப்போர்களில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முடிவிலாத உணவுத்தேவைக்காக அவை சென்றன.  அதற்கு முன்னர் விளைச்சல்கள் அந்தந்த இடங்களிலேயே சேமிக்கப்படும், பஞ்சங்களில் பயன்படுத்தப்படும். ஆனால் ரயில்பாதை காரணமாக உபரியே இல்லாத நிலை வந்தது.
இரண்டாவதாக, பிரிட்டிஷாரின் இந்த மாபெரும் சுங்கவேலி. அந்த வருடங்களில் பஞ்சாபில் மிகச்சிறந்த விளைச்சல் இருந்தது. ஆந்திரம் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில்  ஓரளவுக்கு நல்ல விளைச்சல் இருந்தது. அந்த நிலப்பகுதிகளில் இருந்து இந்த வேலி வங்கத்தை முழுமையாகவே துண்டித்துவிட்டது. வங்கத்தில் மக்கள் லட்சகணக்கில் செத்துக்கொண்டிருந்தபோது பம்பாயிலிருந்தும் சென்னையில் இருந்தும் கப்பல்கப்பலாக தானியம் வெளியேறிக்கொண்டிருந்தது
கடைசியாக, ராய் மாக்ஸ்ஹாம் உப்புவரியைச் சொல்கிறார்.  இந்த பெரும்பஞ்சங்களின்போதுகூட பிரிட்டிஷார் உப்புவரியை நீக்கவில்லை. ஒருங்கிணைந்த வங்கத்திலும் வடகிழக்கிலும் உப்பின் விலை அதிகமாகவே இருந்தது. ஆகவே தானியமே வாங்கமுடியாத மக்கள் உப்பை முழுக்கவே தவிர்த்தார்கள். உப்புக்குறைபாட்டால் கால்நடைகளும் குழந்தைகளும் ஏராளமாக இறந்தார்கள். பின்னாளில் அன்று இறந்தவர்களைப்பற்றிய அறிக்கைகளில் இருந்து பல லட்சம்பேர் உப்புக்குறைபாடு நோயால்தான் இறந்திருக்கிறார்கள் என மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்தார்கள்.
இவ்வாறு இந்த மாபெரும்வேலி இந்தியாவை ஒரு பிரம்மாண்டமான விலங்கால் கட்டிப்போட்டது. இந்தியாமீதான பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கான பொருண்மையான ஆதாரமாக இருந்தது. ஒரு புற்றுநோய்க்கட்டிபோல இந்தியாவின் உயிரைக்குடித்துக்கொண்டிருந்தது இது.
துறைமுகங்களும் ரயில்பாதைகளும் உருவாகி பிரிட்டிஷாருக்கு இந்தியாவின் மீது முழு பொருளியல் கட்டுப்பாடு வந்தபோது எல்லாப் பொருட்களிலும் வரிவிதிக்கமுடிந்தது. ஆகவே உப்புவரி முக்கியத்துவம் இழந்தது. மேலும் தென்னாட்டில் உப்பளங்களின் மீது போடப்பட்ட நேரடி வரிமூலம் சுங்கவேலி அளித்த வருமானத்தை விட அதிகமான வருமானம் வர ஆரம்பித்தது. ஆகவே வைஸ்ராய் லார்ட் லிட்டன் 1879ல் உள்நாட்டு சுங்கவரியை ரத்துசெய்தார். உப்பு மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டது. உப்புக்காக உருவாக்கப்பட்ட சுங்கவேலி கைவிடப்பட்டு அழிந்தது.
காந்தியின் உப்புசத்தியாக்கிரகத்தைப்பற்றி நான் நினைவுதெரிந்த நாள் முதலாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். பலகோணங்களில் அது எழுதப்பட்டிருக்கிறது. இந்தியாவில் எரியும் பிரச்சினைகள் பல இருக்க, ஒடுக்குமுறைச் சட்டங்களே பல இருக்க,  உப்புக்காய்ச்சுவதற்கு எதிரான சட்டத்தை மீறும் முடிவை எதற்காக காந்தி எடுத்தார்?
அதற்கான விளக்கமாக இன்றுவரை கொடுக்கப்பட்டுவந்ததுது இதுதான். ஆங்கிலேயர் கப்பல்களில் இந்தியாவிற்குத் துணிகளை இறக்குமதி செய்தபோது கப்பல்களின் அடித்தளத்தில் எடைக்காக உப்பு நிரப்பிக் கொண்டு வந்தார்கள்.  அந்த உப்பு விலை அதிகமானது. அதை விற்பதற்கு உள்ளூர் உப்புக்கு வரிபோட்டு விலையை ஏற்ற வேண்டியிருந்தது. காந்தி ஏன் உப்புசத்தியாக்கிரகத்தை முன்னெடுத்தாரென்றால் இந்தியாவின் எல்லா அடித்தள மக்களுக்கும் பாதிப்பை உருவாக்கக்கூடியதாக உப்புவரி இருந்தது.
அது ஓரளவே உண்மை, அதாவது வங்க அளவுக்கு. வங்காளத்தில் உப்பு ஏற்கனவே விலை அதிகம். தீயில் காய்ச்சப்படாத உப்பை வங்க பிராமணர் விரும்பினார்கள். அந்த இடத்தில் இந்த கப்பல் உப்பை பிரிட்டிஷார் விற்றார்கள். அதனுடன் நிகராக இருப்பதற்காக உள்ளூரில் காய்ச்சப்படும் உப்புக்கு அதிக வரி போட்டார்கள். ஆனால் இந்திய அளவில் இது உண்மை அல்ல.
ஒட்டுமொத்தமாக உப்புசத்தியாக்கிரகத்தின் சமூகவியல் உள்ளடக்கம் என்ன என்பதை சரேலெனத் திறந்து காட்டுகின்றன இந்த நூல் அளிக்கும் தகவல்கள். இந்தத் தகவல்கள் எவையும் இன்றுவரை இந்தியச்சூழலில் பேசப்பட்டதில்லை. உப்புசத்தியாக்கிரகம் காந்தியின் ஒரு காரியக்கிறுக்கு என்றே இங்கே சொல்லப்பட்டுவந்தது. மார்க்ஸிய சோஷலிச அறிஞர்கள் உப்புசத்தியாக்கிரகத்தை காந்தி வாழ்ந்த காலம் முதல் இன்றுவரை கிண்டல் செய்து ஏராளமாக எழுதியிருக்கிறார்கள்.
காந்தி தண்டி யாத்திரை

தன் சமகால அரசியல்வாதிகளில் இருந்தும், நம் சமகால ‘அறிஞர்களில்’ இருந்தும் காந்தி எப்படி உண்மையான வரலாற்றறிவால், விரிவான சமூகப்புரிதலால் அவர்கள் எட்டவே முடியாத அளவுக்கு மேலே நின்றார் என்பதைக் காட்டுகிறது இந்தத் தகவல்புலம். அவர்கள் எவருக்கும் அன்றும் இன்றும் இந்திய வரலாற்றில் உப்பு என்றால் என்ன என்று தெரிந்திருக்கவில்லை. பண்பாட்டிலும் சமூக உளவியலிலும் உப்பு வகிக்கும் இடம் புரிபட்டிருக்கவில்லை.
காரணம், அவர்கள் எவருமே அடித்தள மக்களை அறிந்தவர்கள் இல்லை. அடித்தள மக்களுக்காகப் போராடும்போதுகூட அவர்களின் தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் தங்களை நினைத்துக்கொண்டார்களே ஒழிய அவர்களில் ஒருவராக எண்ணிக்கொள்ளவில்லை. உதாரணமாக மார்க்ஸிய முன்னோடி எம்.என்.ராய்  உப்பு சத்தியாக்கிரகம் பற்றி எழுதிய நக்கலும் கிண்டலும் நிறைந்த கட்டுரைகளைச் சுட்டிக்காட்டலாம். எம்.என்.ராய் இந்தியாவில் பயணம்செய்து ஏழை இந்தியர்களை அறிந்தவர் அல்ல. காந்தி என்றும் அவர்களில் ஒருவராக இருந்தார். ஆகவே எம்.என்.ராய்க்குத் தென்படாத உண்மையான மக்கள் வரலாறு காந்திக்கு தெரிந்தது.
மிக நுட்பமான ஒரு விஷயத்தை ராய் மாக்ஸ்ஹாம் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவில் எப்போதுமே நிலவரி x உப்புவரி என்ற இருமை இருந்திருக்கிறது. நிலவரி நில உடைமையாளர்களை பாதிப்பது, உப்புவரி அடித்தள மக்களைப் பாதிப்பது. பிரிட்டிஷ் அரசு எப்போதுமே உப்புவரியை அதிகரிக்க இந்திய உயர்குடிகளால் கட்டாயப்படுத்தப்பட்டது.
1930 மார்ச் 12ல் உப்புசத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டபோது அடுத்த தலைமுறை கிராமவாசிகளின் நினைவுகளில்கூட முந்தைய உப்பு ஒடுக்குமுறை இல்லாமலாகியது. அப்போது உப்புமீது இருந்த வரி ஒப்புநோக்க மிகச்சிறியதாக இருந்தது. தென் மாநிலங்களில் அது ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை
ஆனால் மொழியிலும் பண்பாட்டிலும் உப்பு ஆழமாக வேரோடியிருந்தது. உப்பு என்ற சொல்லே ஆழமான உணர்வெழுச்சியை உருவாக்கக்கூடியதாக இருந்தது. அதை காந்தி அம்மக்களிடையே மூன்றாம்வகுப்பு ரயில்பெட்டிகளில் பயணம் செய்து வாழ்ந்து அறிந்திருந்தார். அதை கோகலேயோ, திலகரோ, நேருவோ, சுபாஷ்சந்திரபோஸோ, அம்பேத்காரோ அறிந்திருக்கவில்லை. ஆகவே அவர்களால் உப்புசத்தியாக்கிரகத்தை ஒரு தவிர்க்கமுடியாத கிழவரின் கிறுக்குத்தனம் என்று மட்டுமே புரிந்துகொள்ள முடிந்தது. அது நம்பமுடியாத அளவுக்கு விளைவுகளை உருவாக்கியபோது அதற்கு விளக்கமளிக்கவும் முடியவில்லை
காந்தி உப்புசத்தியாக்கிரகத்தை அறிவித்தபோது அவரைச்சுற்றி இருந்த காங்கிரஸ் தலைவர்கள் நிலவரி அல்லது சுங்கவரிக்கு எதிராக போராடலாம் என்று ஆலோசனை சொல்லி வற்புறுத்தியதை ராய் மாக்ஸ்ஹாம் குறிப்பிடுகிறார்.  காந்தி அதை நிராகரித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், உப்புசத்தியாக்கிரகத்தை ஆரம்பிக்கும்படி அவரிடம் சொன்னது அவரது அந்தராத்மா என்பதுதான். நிலம் உயர்சாதி உயர்குடியின் பிரச்சினை. உப்பு அடித்தள மக்களின், தலித் மக்களின் பிரச்சினை என காந்தி அறிந்திருந்தார்.  அவரது அந்தராத்மாவை அன்றும் இன்றும் கிண்டல்செய்யும் எந்த அறிஞனை விடவும் அந்த அந்தராத்மாவுக்கு வரலாறு தெரிந்திருந்தது.
இந்தியாவின் கடந்த அறுபதாண்டுக்கால அறிவுலகச் செயல்பாடுகளில் பல்லாயிரம் நூல்களை எழுதித்தள்ளிய நம் சமூகவியல் பேராசிரியர்களின் ஆய்வுகளின் அடித்தளமின்மையை அதிர்ச்சியளிக்கும்படி அம்பலப்படுத்துகிறது இந்நூல். 1996ல், இந்தியா சுதந்திரம் பெற்று கிட்டத்த அரைநூற்றாண்டு கழித்து, உப்புசத்தியாக்கிரகம் நிகழ்ந்து முக்கால்நூற்றாண்டு கழித்து, இந்தியா வரும் ராய் மாக்ஸ்ஹாம் இங்குள்ள வரலாற்று அறிஞர்களை ,சமூக ஆய்வாளர்களை, அரசியல் விமர்சகர்களை சந்தித்து இந்த வேலிபற்றிக் கேட்கிறார். எவருக்கும் எந்த அறிதலும் இல்லை என்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறார்.
எப்படி இருந்திருக்கும்? இங்கே நம் கல்விப்புலம் சார்ந்து ஆராய்ச்சி செய்பவர்களுக்கு மட்டுமே பயணங்கள்செய்யவும் ஆவணங்களை ஆராயவும் வசதி உள்ளது. அவர்களுக்கு மேலைநாட்டு ஆய்வுகளை மேற்கோள் காட்டுவது மட்டுமே உண்மையான நவீன ஆய்வு என்ற ஆழமான நம்பிக்கை இருக்கிறது. ஓரளவு முறைமையுடன் ஆராய்பவர்கள் மேலைநாட்டுப் பல்கலைகளில் ஆய்வுப்பட்டம் பெற்றவர்கள். அவர்கள் அனேகமாக அனைவருமே இந்தியா என்ற பிற்பட்ட நிலப்பரப்பை நவீன தேசமாகக் கட்டியவர்கள் ஆங்கிலேயர் என்ற கொள்கையைக் கிட்டதட்ட மதநம்பிக்கை போலப் பெற்றுக்கொண்டுதான் இங்கே வருகிறார்கள்.
ராய் மாக்ஸ்ஹாமின் நூல் மிகசுவாரசியமான வாசிப்புத்தன்மை கொண்டது. உண்மையில் இது ஒரு பயணநூல். சுங்கவேலியைத் தேடி இந்தியாவுக்கு வரும் ராய் மாக்ஸ்ஹாம் அதன் எச்சங்களைத் தேடி இந்தியாவுக்குள் பயணம்செய்கிறார். எருமையின் மூச்சு பிடரியில் பட யமுனைக்கரை கிராமத்தின் கயிற்றுக்கட்டிலில் படுத்துத் தூங்குகிறார். முன்பதிவில்லா ரயில் பெட்டிகளில் பிதுங்கி வழிந்து பயணம் செய்கிறார். ஓம்காரேஸ்வரிலும் காசியிலும் வேலியைக் காட்டித்தரும்படி சிவபெருமானிடம் வேண்டிக்கொள்கிறார். அது கொஞ்சம் அதிகமோ என எண்ணித் தன் குடும்பத்தைக் காக்கும்படி வேண்டிக்கொள்கிறார்.
பல விஷயங்கள் புன்னகை வரவழைக்கின்றன. ராய் மாக்ஸ்ஹாம் இந்தியாவில் முதல்வகுப்பு கூபேயில் பயணம்செய்பவர்களே நாகரீகமற்ற அகங்காரம்கொண்ட மக்கள் என நினைக்கிறார். செல்பேசியில் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். வெளியே வேடிக்கை பார்க்கவும் முடிவதில்லை. இரண்டாம் வகுப்பில் நட்பான சுமுகமான சூழல் உள்ளது, என் அனுபவமும் அதுவே. அவரது பயணப்பதிவுகளில் உள்ள மெல்லிய வேடிக்கை இந்நூலை சுவாரசியமான அனுபவமாக ஆக்குகிறது.
ராய் மாக்ஸ்ஹாம் கடைசியில் சம்பலில் அந்த வேலியின் எஞ்சிய பகுதியயைக் கண்டுகொள்கிறார். முன்னாள் கொள்ளையரும் இந்நாள் அனுமார்கோயில் பூசாரியுமான ஒருவரின் உதவியால். பிற எல்லா இடங்களிலும் நவீனமயமாக்கல் வேலியை அழித்துவிட்டது. அதற்குக் காரணம் மிக எளிது. இந்த வேலியை ஒட்டியே பெரும்பாலும் சாலைகள் உருவாகி வந்தன. சாலைகள் விரிந்து வேலியை விழுங்கிவிட்டன.
நம்மை நாமே ஆராயத்தூண்டும் முக்கியமான நூல் இது. சுங்கவேலி நம் முதுகின் ஒரு சாட்டைத்தழும்பு. அது மறைந்தாலும் நம் மொழியில் கனவில் மிஞ்சியிருக்கிறது.

விக்கிபீடியா பக்கம்
ராய் மாக்ஸ்ஹாம் இணையப்பக்கம்
மூதாதையர் குரல்
பசியாகி வரும் ஞானம்
ஹிட்லரும் காந்தியும்
அள்ளிப்பதுக்கும் பண்பாடு,கடிதங்கள்
பன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’
வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’
மார்க்ஸ் கண்ட இந்தியா
இந்தியாவில் பஞ்சங்கள் இருந்தனவா?

தமிழ் படித்த புத்தர்

0 c
ஒரு பொருள் இன்னொரு பொருளோடு நெருக்கமாக இயையும் போதில் - கல்லோடு கல் உரசுதல் -வெப்பக் கருத்தும் ஒளிக் கருத்தும் தோன்றுகின்றன என்றும் - ‘இலங்குதல்’ என்னும் ஒளி குறித்த தமிழ்ச் சொல் இப்படித்தான் தோன்றிற்று என்றும் மொழி இயலாளர்கள் சொல்கிறார்கள்.

இலங்குதல் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதே ‘இலங்கை’ என்னும் சொல்லாகும்.இச் சொல்லையே சிங்களர்கள் ‘லங்கா’ ஆக்கினார்கள்.

விலைவாசி உயர்வு

0 c
இந்தியாவில் உணவுப் பொருள் விலை ஏற்றத்துக்கு இரண்டு, மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதலாவது,       பணவீக்கம். அதாவது, இன்ஃப்ளேஷன். 

இரண்டாவது,  பற்றாக்குறை. 

மூன்றாவது  .   போக்குவரத்துச் செலவு.

பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்

0 c

ருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

கடல்வளமும், நிலவளமும் கார்பரேட் கைகளில்? 100 சதுர கிலோமீட்டர்,75 கிராமங்கள்

0 c

கடந்த திமுக அட்சியின் போது கடலூர் மாவட்டம் துவங்கி நாகை மாவட்ட எல்லைவரை உள்ள கடற்கரை பகுதிகளை மொத்தமாக இந்திய பெரு முதலாளிகளிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும் விற்பனை செய்த அவலம் நடந்தது. இந்த பகுதிகளில் பல்வேறு நிறுவனங்களை தங்களது கடுமான பணிகளை துவங்கி உள்ளனர். விவசாய நிலங்களும், கடற்கரையும் இந்த நிறுவனங்களால் ஆக்ரமிக்கபட்டன. குறிப்பாக கடலூரில் இந்த ஆக்ரமிப்பு அதிகம் நடத்தது. கிட்டதட்ட 7000 ஏக்கர்& (100 சதுர கிலோமீட்டர்,75 கிராமங்கள்)மேல் நிலங்கள் பல நிறுவனங்களால் வாங்கப்பட்டது. அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட இந்த நிலங்கள் ஏதோ எதற்கும் பயன்படாத நிலங்கள் அல்ல. சவுக்கை, முந்திரி, மணிலா, நெல் என பல வகை சாகுபடிகள் நடந்த இடங்களாகும்

ஜல்லிக்கட்டு கள்ளர், மறவரிடையே பெண் கொடுப்பதற்கான தேர்வு களனாக உள்ளது

0 c

தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகள்-5

ஜல்லிக்கட்டு 
ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக்
குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும்
வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.

ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை
அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத்
தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக்
கூறப்படுகிறது.

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? - சில முக்கிய தரவுகள்

0 c
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

உலகம் முழுக்க நாம் ஒன்றை கவனிக்கலாம், எந்த மன்னன் ஒற்றை அதிகாரத்தை உருவாக்கி நீடித்த அமைதியைக் கொடுக்கிறானோ அவனே அந்த சமூகத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றவனாக இருந்தான். அவ்வாறு எங்கெல்லாம் மேம்பட்ட நிலவுடைமைச்சமூகம் உருவாகி உற்பத்திஉபரி திரட்டப்பட்டு நாகரீகமும் பண்பாடும் வளர்ந்தது என்று அறிகிறோமோ அங்கெல்லாம் மிகக்கொடுமையான வன்முறை மூலமே அது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். பத்தாம் நூற்றாண்டு சீனா அல்லது ஜப்பான் அல்லது ஐரோப்பா அல்லது அரேபியாவின் வரலாறு என்பது குருதியில் தோய்ந்த கதை. சும்மா விக்கியை தட்டிப்பாருங்கள் தெரியும்.

அங்குதான் இந்திய மன்னர்கள் வேறுபடுகிறார்கள். இந்திய மன்னர்களின் அடைமொழிகளீல் குலசேகரன் என்ற பெயர் பெரும்பாலும் காணப்படும்.

தமிழில் சாதி நூல்கள் (19, 20 ஆம் நூற்றாண்டு)

0 c
சாதியம் என்பது இந்தியச் சமூக அமைப்பில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வருகின்ற வாழ்க்கை முறையாகும். இந்தியச் சமூக அமைப்பில் சாதிகள் தோன்றிய காலம் எது என்று வரையறுப்பது ஆய்வாளர்களிடம் விவாதப் பொருளாகவே உள்ளது. தொழில் பிரிவினையே சாதிகளாக மாறி வந்தன என்றும், நான்கு வர்ணங்களே சிதைந்து சாதிகளாயின என்றும், நிலவுடை மைக் காலகட்டமே சாதிகளின் தோற்றத்திற்கு காரணம் என்றும் பல்வேறு கருத்துகள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன.

கொடும்பாளுர்ராயர்---- என்ற கள்ளர் அரச குலத்தினர்

0 c
கொடும்பாளுர் மன்னர்களான  வேளிர் மரபினர்   கள்ளர் குலத்தின்
பட்டங்களுக்கு உரியவர்கள்ஆவர்கள்
THANKS TO.(http://kallarperavai.weebly.com/296529953021299529923021-296530092994-298629753021297529693021296529953021.html)

புதுக்கோட்டையிலிருந்து 35கிலோ மீட்டர் தொலைவில் குடுமியான்மலை  மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது கொடும்பாளுர்.

கள்ளர் ---- SOME HINTS

0 c
கள்ளர்  சாதியினர் மீது இச் சட்டம் 1911 இல் தமிழகத்தில் போடப்பட்டிருந்தாலும் 1914 ல் முதன்முதலாக கீழக்குயில் குடிக் கிராமத்தில் முதலில் கேடிகளைப் பதிவு செய்தார்கள்.

அதன்படி 11 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் கள்ளர் இனத்து ஆண்கள் அனைவரும் சாயங்காலம் ஆனவுடன் பொலிஸ் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டனர்.

குழந்தைகள் கல்விக்காக அதிகம் செலவிடும் இந்தியர்கள்!

0 c
இந்தியக் குடும்பங்கள் தங்களது குழந்தைகளின் கல்வி மற்றும் உடல் நலத்திற்காக அதிக அளவில் செலவிடுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இது தொடர்பாக NSSO எனப்படும் "தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம்" மேற்கொண்ட ஆய்வில், இந்தியக் குடும்பங்கள் தங்களது வருவாயில் உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளோடு, குழந்தைகளின் கல்விக்காக அதிக அளவில் செலவிடுவதாகவும், அதேப்போன்று அவர்களது சுகாதாரத்திற்காகவும் கணிசமாக கூடுதலாக செலவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

கழுகுமலை

0 c
கழுகுமலை …. இது எங்கே உள்ளது - தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம். அங்கே அப்படி என்ன விநோதம். … இப்போது வெட்டுவான்கோவில் படங்களை பாருங்கள்…
vettuvankoil1.jpg


அனந்தபத்மநாபனின் களஞ்சியம்,

0 c
திருவிதாங்கூர் மட்டுமல்ல இந்தியாவின் எல்லா அரசுகளும் வளமான அரசுகளாகவே இருந்திருக்கின்றன என்பதே வரலாற்று உண்மை. அதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.  பருவமழையை நம்பி இருக்கும் இந்தியாவில் அரசுகளும் மக்களும்கூட சேமிப்பை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்கள். தங்கம் அந்த சேமிப்புக்கான நாணயமாக இருந்தது. ஆலயங்கள் சேமிப்பு மையங்கள். அவை மாபெரும் பஞ்சம்தாங்கும் அமைப்புகள். அந்த ஒட்டுமொத்த அமைப்பே 1750களுக்கு பின் பிரிட்டிஷாரால் இருநூறாண்டுக்காலம் கொள்ளையிடப்பட்டது. அதன் விளைவே இந்தியாவை சூறையாடிய மாபெரும் பஞ்சங்கள்.

பதினெட்டுபட்டி---சுதந்திர விவசாயிகளினாலான கிராம சமூகங்களின் கூட்டமைப்பு

0 c
பழைய இந்திய பொருளியல் அமைப்பு பற்றியும் , நிதி நிர்வாகம் பற்றியும் நீங்கள் வாசிகக் ஆரம்பித்தால் மலைமலையாக இருக்கின்றன நூல்கள்.

இங்கிருந்த கிராமப்பொருளியல் அமைப்பு பல்வேறு படையெடுப்புகளைச் சந்தித்தும்கூட சிதையாமல் இருந்தது என்பது வரலாறு.

அவற்றில் பஞ்சம்தாங்கும் சமூகஅமைப்புகள் இருந்தன. பிரிட்டிஷாரின் ஒருங்கிணைந்த தொடர்ச்சியான சுரண்டல் மூலமே கிராமப்பொருளியல் அழிந்தது.

கண்டுகொள்ளாத இந்திய தூதரகமும் அவதிப்படும் தமிழர்களும்!

0 c
JULY 30, சென்னை:  நல்ல வேலை கிடைக்கும், கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்று மலேசியா சென்றவர்கள் ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டு, முறையான ஆவணங்கள் இல்லாததால் மலேசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மழை நீர் சேகரிப்பு - காலத்தின் கட்டாயம்

0 c

தமிழகத்தில் விவசாயம் பருவமழையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நமது பாசனத் தேவையில் 45 சதவீதம் நதிகள், சிற்றாறுகள் மூலம் கிடைக்கிறது.

இதுதவிர ஏரிப்பாசனம், கண்மாய்ப் பாசனம், நீர்த்தேக்கங்கள், நேரடிப் பாசன முறைகளும் நடைமுறையில் உள்ளன. வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் உரிய காலத்தில் பெய்தால் நாமே உணவு உற்பத்தியில் முன்னிலை பெறுவோம்.

ஸ்ரீராஜராஜீஸ்வரம்” எ னும் தஞ்சை பெரிய கோயில்

0 c
தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்
தஞ்சை வெ.கோபாலன்
25 Sep 2010 அச்சிட
தஞ்சாவூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோழர்களின் தலைநகரம். இங்குதான் கடைச்சோழர்கள் எனப்படும் விஜயாலயனின் வம்சத்தினர் சோழ நாட்டை ஆண்டு வந்தார்கள். இங்குதான் விஜயாலயன் தங்கள் குலதெய்வமான நிசும்பசூதனிக்கு ஓர் ஆலயம் எடுத்து வழிபட்டான். அவனது வழித்தோன்றல்கள் பற்பல போர்களில் வெற்றி பெற்று தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றினர்.

தஞ்சாவூர் பெரியகோவிலில் ஒரு அற்புத சிற்பம்

0 c

தஞ்சாவூர் பெரியகோவிலில் ஒரு அற்புத சிற்பம்



தஞ்சாவூர் பெரிய கோவிலின் முகமண்டபத்து வாயிலில் உள்ள துவார பாலகர் சிலை காட்டும் தத்துவம் அற்புதமானது.துவாரபாலகரின் காலடியில் கிடக்கும் பாம்பு ஒன்று யானையை விழுங்குவதாக சிலை வடிக்கப்பட்டுள்ளது. யானையை விழுங்கும் பாம்பின் உருவத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
பாம்பு சுற்றியிருக்கும் துவாரபாலகரின் கதாயுதத்தின் அளவை கற்பனை செய்துகொள்ளுங்கள்.

கடத்தப்படும் பெண்களும், குழந்தைகளும் அதிர்ச்சி ரிப்போர்ட்!

0 c

JUNE 30, உலகில், 127 நாடுகளிலிருந்து, ஆண்டு ஒன்றுக்கு, பெண்கள், குழந்தைகள் என, 25 லட்சம் பேர் கடத்தப்படுவதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 52 சதவீதம் பேர் கிராமவாசிகள்-மொத்த மக்கள் தொகை 7,21,38,958

0 c
சென்னை: தமிழக மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள்.

இராணுவ தொழிலில் நான்---கேணல் ஹரிகரன்

0 c
இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையின் புலனாய்வுப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றியவர் கேணல் ஹரிகரன். ட்ரான்ஸ்கரண்ஸ் இணையத்தளத்தில் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு கேணல் ஹரிகரன் பதிலளித்துள்ளார்.

அவற்றிலிருது சில கருத்துகள் 

கொங்கிவயல் ஸ்ரீமுத்துகருப்பைய்யா ஆண்டவர்

0 c


ஒரு நாள் இந்த சாயபு, முத்துகருப்பைய்யா வீட்டு வாசல் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அன்றைய தினம் முத்துகருப்பைய்யா வீட்டில் உள்ள அனைவரும் படு சோகமாக இருந்தனர். காரணம்- அவர்கள் வீட்டில் வளர்ந்து வந்த ஆட்டுக்குட்டி ஒன்று திடீரென இறந்து விட்டது. வீட்டில் சோகமாக அமர்ந்திருந்த முத்துகருப்பைய்யாவைத் தன் அருகே அழைத்த சாயபு, சோகத்துக்கான காரணம் கேட்டார். அதற்கு முத்துகருப்பைய்யா, “எங்க வீட்டுல ஆசையா வளர்த்த ஆட்டுக்குட்டி திடீர்னு செத்துப் போச்சு. அதான் வீட்டுல இருக்கிற எல்லாரும் சோகமாக இருக்காங்க” என்றார்.

Rate This

ஸ்ரீமுத்துகருப்பய்யா ஆண்டவர்
ஸ்ரீமுத்துகருப்பய்யா ஆண்டவர்

இந்திய கிராமங்களும் இடம்பெயரும் மக்களும்

0 c



First Published : 18 Jul 2011 01:24:04 AM IST





பரம்பரைகளின் பின் பரம்பரைகள் வேருடன் சாய்கின்றன. புரட்சிகளின் பின் புரட்சிகள் உருவாகின்றன. ஆனால், கிராம சமுதாயங்கள் மாற்றம் காண்பதே இல்லை. இக்கருத்து இன்றைக்கு, நேற்றைக்கு கூறப்பட்டதல்ல. 1832-ம் ஆண்டு இந்திய கிராமங்களைப் பற்றி சார்லஸ் மெட்காஃப் என்பவர் கூறியவை தாம் இவை.மேலும் கிராமங்கள் சின்னஞ்சிறு குடியரசுகள் எனவும் மக்களுக்குத் தேவைப்படும் அனைத்தையும் உள்ளடக்கியவை என்பதோடு அநேகமாக அந்நியர்களின் உதவியின்றியே செயல்படும் தன்மை கொண்டவை என்றும் இந்தியாவின் ஊரகங்களைப் பற்றி இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற "ஹவுஸ் ஆப் காமன்ஸ்' எனும் கீழ்சபைக்கு 1832-ல் சார்லஸ் மெட்காஃப் சமர்ப்பித்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ஏறக்குறைய இந்திய கிராமங்களைப் பற்றிய காந்தியடிகளின் கனவும் இதுதான். கிராமங்களின் தன்னிறைவு மற்றும் பொருளாதார விடுதலை குறித்த காந்தியத் தத்துவமும், சார்லஸ் மெட்காஃபின் கருத்துகளும் மிக நெருங்கிய தொடர்புடையவையே.
180 ஆண்டுகள் நிறைவடையப் போகும் தருவாயில் சார்லஸ் மெட்காஃபின் கூற்றின் இன்றையநிலை என்ன என்று கேட்டால், இந்திய கிராமங்களின் முகம் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டு தானாக வேண்டும்.இந்திய கிராமங்களில் நல்ல பலமாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. ஆளில்லாத லெவல் கிராஸிங், வாகனம்

அரிசி சோறு... ஆட்டுக்கறி குழம்பு... அமர்க்களப்படும் ஆடி மொய் விருந்து!!

0 c
ஆடிமாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழா களை கட்டும். பொங்கல் வைக்கவும், பால் குடம் எடுக்கவும், கூழ் ஊத்தவும் கூட்டம் கூட்டமாய் மக்கள் படை எடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.

பத்து வாழ்க்கைத் திறன்கள்

0 c
பத்து  வாழ்க்கைத்  திறன்கள் நம்  ஒவ்வொருவருக்கும்  தேவை  என்று உலக  சுகாதாரநிறுவனம்  வரையறுத்திருக்கிறது.

 தன்னை அறிதல்,
தன்னைப் போல்  பிறரைஉணர்தல்,
இன்னொருவருடன்  சரியாக உறவாடக்  கற்றல்,
உரையாடக்  கற்றல்,
எதையும்  கேள்வி  கேட்கப்  பழகுதல்,
எதற்கும்  நாமே  பதில்  தேடப்  பழகுதல்,
தெளிவாக  முடிவெடுத்தல்,
சிக்கல்களை  அவிழ்த்தல்,
உணர்ச்சிகளை உணர்ந்து கொள்ளுதல்,
அழுத்தங்களை  லேசாக்குதல்

ராஜராஜ சோழன் மெய்கீர்த்தி

0 c

Rajaraja Cholan Meikeerthi

Narration by Thirumalai Vinjamoor Venkatesh, Thanks Venkatesh

ஸ்வஸ்தி ஸ்ரீ
திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்

போருக்கு பின் - 1 - மக்கள் மனநிலை

0 c
 ஐரோப்பாவுக்கும் , வன்னிக்கும் இடைவெளிகள் மேலும் அதிகரிக்கின்றது...


   சிறிலிங்கம் 

புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் தொடர்பாகப் பேச்சு வந்தபோது ஒரு நண்பர் சொன்ன தகவல் கவனத்திற்குரியதாக இருந்தது. புலிகளின் காலத்தில் போராட்டத்துக்கெனப் புலம்பெயர் தமிழர்கள் தாராளமாக உதவினார்கள். இவர்கள் அனைவரும்

உடையாண்டியம்மா சங்கரக்குட்டி தேவர்

0 c

கோவில்பட்டியிலிருந்து ஏழாயிரம்பண்ணை செல்லும் வழியில் அமைந்துள்ள ஊர் வெம்பக்கோட்டை என்னும் கிராமம். இங்கு தேவர் சாதியினரால் வழிபடப்படும் உடையாண்டியம்மா, சங்கரக்குட்டித்தேவர் கோவில், ஊரின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் தமிழ்ப்புலமை

0 c
தமிழ்நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அறியாதார் யாருமிருக்க முடியாது. 50, 60 வயதைக் கடந்தவர்களுக்கு அவரது தேசீயமும் தெய்வீகமும் நன்றாகவே தெரிந்திருக்கும். இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு ஜாதித் தலைவராகவே தெரியும் (உபயம் -- ஓட்டு வங்கியை மட்டுமே முதல் நோக்கமாகக் கொண்ட குறுகிய புத்தி அரசியல் கட்சிகள்

கலப்பு திருமணம் - சில பார்வைகள்

0 c
கள்ளபிரான்November 6, 2009 at 2:19 pm
4
ஒன்றும் புதுமையில்லை. I am not shocked. இது வெறும் சாதிப்பிரச்னையில்லை.ஆணாதிக்கமும் சேர்ந்த ஒன்று. கள்ளர் ஜாதியினரோ, மற்றும் பலஜாதியனர், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும், கருதுவது என்னவென்றால், தங்கள் ஜாதி தங்களுக்கு எப்படி வந்ததோ அப்படியே வரும் தலைமுறைகளுக்கும் போய் சேரவேண்டும என்பதுதான். எப்படி சேர்ப்பது? அதற்குத்தான் இருக்கிறது கருப்பை. அது யாருக்கும் சொந்தம்? ஜாதிக்குத்தான் சொந்தம். அவளுக்கு அல்ல. கருக்கலைப்பு

சாதி Caste - உண்மையில் இருக்கிறது.

0 c

இந்தியாவில் இதற்குப் பெயர் ---------------  சாதி.

ஆப்பிரிக்காவில் - இதற்குப் பெயர் ---------- Tribe.

வளைகுடாப் பகுதியில் இதற்குப் பெயர்---- Family.

அமெரிக்காவில் இதற்குப் பெயர் --------------இனம் (கருப்பு - வெள்ளை).

http://hayyram.blogspot.com/2010/06/blog-post.html

வரலாறு வேண்டுவது சார்பற்ற தன்மையையே

0 c
எதிர்வினை

மு. பழனி இராகுலதாசன், தேவகோட்டை


மதிப்புரைப் பகுதியில் பழ. அதியமான் முன்னுரைச் செய்தியாகத் தந்துள்ள தகவல்கள் பொருத்தமானவை அல்ல. 1957 செப்டம்பர், 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் கூட்டிய கூட்டத்தில் தேவர் “மறவர்” சார்பாகக் கலந்துகொள்ளவில்லை. இது ஒரு சாதிக் கலவரம் என்று காட்டுவதற்காக, காங்கிரசும் காங்கிரஸ் தலைவர்களும் பெருந்தலைவர் காமராசரின் அரசாங்கமும் செய்த சூட்சுமமான உபாயங்களைப் புரிந்துகொண்ட தேவர் “நான் இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்தான் கலந்துகொள்கிறேன்”

மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும்

0 c
Thinnai
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=206021710&format=html&edition_id=20060217

மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும்

(முனைவர்) நீதியரசர் பி.வேணுகோபால் (ஓய்வு)

எனது தலைமையிலான மண்டைகாடு கலவரங்கள் குறித்த விசாரணை குழு மதமாற்றங்களை தடைசெய்யும் ஒரு சட்டத்தினை 1983 இலேயே பரிந்துரை செய்தது. அண்மையில் தமிழ்நாடு அரசு பிறப்பித்து (பின்னர் அரசியல் நிர்பந்தங்களால் நீக்கிவிட்ட) கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தினை சரியான கோணத்தில் அறிந்துகொள்ள (அன்றைய) விசாரணைக்குழு மதமாற்றத் தடைச்சட்டத்தினை பரிந்துரை செய்யுமாறு தூண்டிய பின்புலத்தையும் சூழலையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

மானியத்தை எரிக்கும் பெட்ரோல்

0 c


மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
உலகமயம் தன் கொடூரக் கதிர்வீச்சை இந்தியா மீது 1992 இல் பாய்ச்சியது. அன்று முதல் மக்கள் நல அரசின் அங்கங்கள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருகின்றன. உலகமயத்தின் கடும் விதிமுறைகளுடன் வந்த ஒன்றுதான் அரசு மானியங்களைப் படிப்படியாக நிறுத்த வேண்டும் என்பது. பல துறைகள் அதைக் கச்சிதமாக செய்ய, அந்தந்த துறைகளில் தனியார் முதலீடு உள்ளே நுழைகிறது. இதைத்தான் "தகுந்த இசைவான முதலீட்டுச் சூழல்' என உள்நாட்டு - வெளிநாட்டு முதலாளிகள் அழைக்கின்றனர்.
கல்வி, சுகாதாரம், உடல்நலம், தொலைத்தொடர்பு, போக்குவரத்து என எங்கும் தனியார், எதிலும் தனியார் என அவர்களின் பரிமாணம்தான்! ஒரே மூச்சில் ஒரு துறையிலிருந்து அரசாங்கம் வெளியேற முடியாது என்பதால், கடந்த 20 ஆண்டுகளில் அதனை படிப்படியாக செய்து வருகிறார்கள். அவர்கள் நுழைய முடியாத துறைகள் இன்னும் உள்ளன. தனியார் ரயில்கள், தனியார் ராணுவம், தனியாரிடம் அரசு நிர்வாகம் என எது நடந்தாலும் இனி வியப்பில்லை. அப்படித்தான் எண்ணெய் விலை உயர்வு சார்ந்த பிரச்சனையும்! 2002 இல் மானியங்கள் குறைப்பு அறிவிக்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வழங்கப்படும் மானிய அளவு குறைக்கப்பட்டது; மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மட்டும் மானிய விலையில் தொடரும் என அறிவிக்கப்பட்டது. எண்ணெய் விலையை நிர்ணயிக்க ஒரு புதிய ஏற்பாடு வகுக்கப்பட்டது - Administrative Pricing Mechanism.
petrol_370ரங்கராஜன் குழு 2005 இல் அமைக்கப்பட்டு, பெட்ரோலிய பொருட்களின் விலை - வரி நிர்ணயம் குறித்து ஆய்வு நிகழ்த்தப்பட்டது. பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து வெளியேறும் பொழுது உள்ள விலைக்கு, ஒரு வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என அக்குழு பரிந்துரைத்தது. 2009 இல் அமைக்கப்பட்ட கிரித் பாரிக் குழு,

கிழக்கிந்திய கம்பெனி--- திட்டமிடல் கொஞ்சம்... திருட்டுத்தனம்

0 c
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்தது நாடு பிடிக்க அல்ல. அவர்கள் வணிக நோக்கத்திற்காகவே மட்டுமே உள்ளே வந்தனர்.  ஆனால் அவர்களின் எண்ணத்தை மாற்றியதும் நம்மவரே. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சாதகமான சூழ்நிலை உருவானது.ஆங்கிலேயர்கள் தங்களை ஆட்சியாளர்களாக மாற்றிக் கொண்டனர்.. 

புகையை மறக்க ஒரு இணையதளம்

0 c
மனம் இருந்தால் மார்க்கம் உண்டென்பது புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு பொருந்த வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. காரணம், புகை பிடிப்பவர்கள் பலருக்கும் அந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் அல்லது விருப்பம் இருந்தாலும் அதிலிருந்து விடுபட வழி தெரியாமலேயே தவித்திருக்கின்றனர். சிகரெட் பிடிப்பவர்களை பொறுத்தவரை விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் போதாது. கூடுதலாக ஏதாவது தேவை.
.

பாலியல் தொழிலுக்கு பெண்களை விநியோகிக்கிறது இலங்கை - அமெரிக்க அறிக்கை

0 c
இலங்கையில் ஆண்கள், பெண்கள், சிறார்கள் ஆகியோர் மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றிலும் கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், பாலியல் தொழிலுக்காகப் பெண்களைக் கடத்துவதில் இலங்கையும் ஒரு மூலமாக இருப்பதாக

கச்சத் தீவு ... மூழ்காத உண்மைகள்!

0 c
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்ற இளைய தலைமுறையினரும் இனி வரப்போகின்ற தலைமுறைகளும் போற்றி பாராட்டும் வகையில், என்றும் நினைவு கூறும் விதமாக... முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க, வரலாற்றுத் தேவை மிக்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்.

“கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்த இந்தியாவின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும். கச்சத் தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில், தமிழக வருவாய் துறையையும் செர்த்துக் கொள்ளவேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.

தீவு என்றாலே நீரில் மூழ்கியும் மூழ்காமலும் இருக்கும் நிலப்பகுதிதான். கச்சத் தீவு பற்றிய பல உண்மைகளையும் மூழ்கடித்து வந்தன. இந்நிலையில் கச்சத் தீவு பற்றிய வரலாற்று நிகழ்வுகளை அலசுவதற்கும் ஆராய்வதற்கும் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானம் ஒரு வாசலாக இருக்கிறது.

கச்சத் தீவு பற்றி இந்தத் தலைமுறைக்கே தெரியாத உண்மைகள் இதோ...

தாரை ஒப்பந்தம்

28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு. அந்த சமயத்தில் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான அரசு அமைந்திருந்தது.

இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா; ஸ்வரன்சிங், “ 1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவா;களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.

ஆனால் கச்சத் தீவு எவ்வாறெல்லாம் இந்தியாவோடு இணைந்த பகுதி என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை அவர் மறைத்துவிட்டார்.

கச்சத் தீவின் வரலாறு...

கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும். கச்சத் தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரலுக்கும், தாம்பரத்துக்கும் உள்ள தூரத்தை விட குறைவானது. கடலோர எல்லை, நாட்டிக்கல் மைல் (NAUTICAL MILES) அளவு கொண்டு சர்வதேச அரங்கில் கணக்கிடப்படுகிறது. அதன்படி கச்சத் தீவு ராமேஸ்வரத்திலிருந்து 12 நாட்டிக்கல் மைல் அளவுக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது. முந்தைய காலத்தில் ராமநாதபுரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 8 தீவுகளில் கச்சத் தீவும் ஒன்றாகும். ராமநாதபுரம் மன்னா; சேதுபதி அவா;களிடம் 1882-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி (THE EAST INDIA COMPANY) லீஸ் ஒப்பந்தத்தில் கச்சத் தீவை எடுத்துள்ளது. அதன் பின்னர் கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், மணலி தீவு, குத்துக்கல் தீவு மற்றும் கச்சத் தீவு மூன்றினையும் அப்போதைய, மெட்ராஸ் பிரசிடென்ஸி (MADRAS PRESIDENCY OF INDIA) யின் ராமநாதபுரம் கலக்டரிடம் லீஸ் ஒப்பந்தம் மூலம் பெற்றுள்ளாh;.

1913-ல், மீண்டும் ஒரு லீஸ் ஒப்பந்தத்தை மெட்ராஸ் பிரசிடென்ஸி ஏற்படுத்தியது. அதன்படி, மெட்ராஸ் பிரசிடென்ஸியின் மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை கச்சத் தீவின் மீது கொடுக்கப்பட்டுள்ளது. 1939-ல்; புனித அந்தோணியாh; ஆலயம் கச்சத் தீவில் கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முகம்மது என்பவர் 1947-ல் கச்சத் தீவை ஒரு லீஸ் ஒப்பந்தம் மூலம் எடுத்துள்ளார். அந்த ஆவணம் எண் 278/1948 ஆக இராமேஸ்வரம் பதிவாளார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தாலுகாவில்... ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு,       “கச்சத்தீவு இராமேஸ்வரத்தின் எல்லைக்குட்பட்ட வருவாய் கிராமம், கச்சத்தீவின் சர்வே எண் 1250” என ஒரு அரசாணை G.O. No. 2009: 11.08.1949-ல் வெளியிடப்பட்டுள்ளது.

இது எல்லாவற்றிற்கும் மேலாக 1531-ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு செப்பு பட்டயத்தில், ‘கச்சத் தீவு சேதுபதி மன்னர்களின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பகுதி” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய தொல்பொருள் துறையின் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. சேதுபதி மன்னர் நினைவாகத்தான், பல நூறு ஆண்டுகளாக இன்று வரை அந்தக் கடல் பகுதியை அனைவரும் ‘சேது சமுத்திரம்’ என்று உலகளவில் அழைக்கின்றனா;. அதனால்தான் இந்திய அரசே ‘சேது சமுத்திர திட்டம்’ என பெயரிடப்பட்டு ஒரு திட்டத்தை தொடங்கியது.

வாலி தீவு

கோடிக்கணக்கான இந்து மதத்தினர் நம்பும் ராமாயண இதிகாசத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட தீவுதான் கச்சத் தீவு என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. 23.07.1974-ல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், அப்போதைய குவாலியரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிற்கால பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கச்சத் தீவை, ‘வாலி தீவு’ என கூறியுள்ளார். எவ்வளவு பெரிய இந்து மத நம்பிக்கையை நாம் இழந்துள்ளோம்!

காரணங்கள்...

இவ்வளவு வரலாற்று உண்மைகள் மற்றும் நம்பிக்கைகளை மறைத்தும் மறுத்தும் கச்சத் தீவு ஏன் இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்டது? முதன்மையானது 1974-ல் இலங்கை இந்தியாவிற்கு செய்த உதவிக்கான பிரதி உபகாரம். அந்தக் கால கட்டத்தில் இந்தியா அணுகுண்டு வெடித்து சோதனை நடத்தி, உலக நாடுகளின் கண்டனக் கணைகளை எதிர் கொண்டது. ஜ.நா. சபையில் பாகிஸ்தான், மேற்படி இந்தியாவின் அணு சோதனைக்குக் கண்டனத் தீர்மானம் கொண்டு வர முயன்றது.

இலங்கை அப்போது இந்தியாவுக்கு அளித்த ஆதரவால், பாகிஸ்தானின் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இலங்கையின் பண்டார நாயகா பதவிக்கு வரும் வரையில் கச்சத் தீவு தொட்ர்பாக எந்த உரிமையையும் இலங்கை கோரவில்லை. ஆனால், பண்டார நாயகா பதவிக்கு வந்த பிறகே கச்சத் தீவின் மீது இலங்கை பல உரிமைகள் கோரியது. கோரிக்கைகளை சாக்காக வைத்து 1974-ல் இலங்கை இந்தியாவிடமிருந்து கச்சத்தீவை கேட்டு பெற்றது. 23.03.1976-ல் இந்தியாவின் வெளியுறவு செயலர் கிளிவல். சின்சிலும் இலங்கையின் வெளியுறவு மற்றும் ராணுவ செயலர் ஜெயசிங்கேயும் ஒரு சீராய்வு ஒப்பந்தத்தை இரு நாடுகள் சார்பாக ஏற்படுத்தினர். அதன்படி கச்சத்தீவின் அருகில் மீன்பிடிக்கும் உரிமை இந்தியாவிற்கு இல்லை என அறுதியிடப்பட்டுள்ளது.
கருணாநிதி செய்தது என்ன?

அப்போது தமிழ்நாட்டில் எமர்ஜென்ஸி அமலாக்கப்பட்டிருந்ததால், எங்களுக்கு இது பற்றி தெரிந்திருக்கவில்லை. கச்சத் தீவு மீட்கப் பட வேண்டும்’ என இன்று கூறுகிறாh; கருணாநிதி. ‘பல முறை சொன்னால் பொய்யும் உண்மையாகும்’ என்பதை மனதில் கொண்டுதான்   அவா; இதை தொடர்ந்து சொல்கிறார். 1969 - லிருந்து 1971 வரை என்ற முதல் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து... 2006 முதல் 2011 வரையிலான ஐந்தாவது ஆட்சிக் காலம் வரை மேற்படி காலகட்டத்தில் கச்சத்தீவு விவகாரத்தில் உருப்படியாக ஒன்றுமே அவா; செய்யவில்லை.

‘தமிழர்களே, தமிழர்களே, என்னை கடலில் தூக்கிப் போட்டாலும், நான் கட்டுமரமாகத் தான் மிதப்பேன். என் மீது ஏறி பயணம் செய்யலாம்’ என்றெல்லாம் வாய் ஜாலம் காட்டுவதில் வல்லவர் கருணாநிதி. அதற்கு ஒரு உதாரணம் 09.12.2009 அன்று ‘கச்சத் தீவை மீட்கும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வரத் தயார்’ என அறிவித்தார் கருணாநிதி. அதன் பிறகு, 09.12.2009 முதல் 28.02.2011 வரை கச்சத் தீவு பற்றி மூச்சு கூட விடவில்லை அவர். ஆனால், ‘கச்சத் தீவை மீட்போம்’ என 2011 தேர்தலிலும் வாக்குறுதி அளித்தார். இதுவும் வெறும் காகிதம் தான் என்று மக்கள் புரிந்துவைத்திருந்ததை தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன.

ஜெயலலிதா செய்தது என்ன?

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தில் மட்டுமல்ல... 1991-ல் முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்று ஆட்சி செய்தபோது, 1994-ல் கச்சத் தீவை நீண்ட கால லீஸ் மூலம் திரும்ப பெறவேண்டும் என மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்தார். பிறகு 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போதும் கச்சத் தீவு தொடர்பாக உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று 2004-ல் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
பிறகு ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூட, ஆகஸ்ட் 2008-ல் இந்திய உச்ச நீதீமன்றத்தில் ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்தார். அந்த வழக்கில், ‘கச்சத் தீவு தொடா;பாக 1974 மற்றும் 1976-ல் ஏற்படுத்தப்பட்ட இரு ஒப்பந்தங்கள் ரத்து செய்து உத்தரவிடப்பட வேண்டும். கச்சத்தீவு மீண்டும் இந்தியாவின் அங்கமாக்கப்பட வேண்டும். ஏனெனில், மேற்படி கச்சத் தீவு தாரை வார்ப்புக்கு இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளைக் கூட்டி ஒப்புதல் பெறப்படவில்லை’ என்று வழக்கு தொடுத்தார். இதில் 1960-ல் மேற்கு வங்காளத்தின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கொடுக்க முயன்றபோது அதைத் தடுத்து உத்தரவிட்ட உச்ச நீதீமன்றத் தீர்ப்பை மேற்கோளும் காட்டியுள்ளார் ஜெயலலிதா. மேலும் CONVENTION OF LAW OF THE SEA ன் படி ஐ.நா. சபையின் முடிவுகளை தனது வழக்கில் சாதகமாக எடுத்து வைத்துள்ளாh;.
ஏன் மீட்கவேண்டும் கச்சத் தீவை?

13.08.1983-ல் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் முதல் தாக்குதல் நடைபெற்றது. 10.12.1984-ல் ராமேஸ்வரம் மீனவர் முனியசாமி எனும் அப்பாவி, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்து, முதல் கணக்கை ஆரம்பித்தார். கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 3000-த்திற்கும் மேலான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தமிழக மீனவர்கள் சந்தித்துள்ளனர். தமிழக அரசின் அறிக்கைப்படி சுமார் 400 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை கணக்கு கூடுதலாகத்தான் இருக்க முடியும். மூவாயிரத்துக்கும் மேலான தமிழக மீனவர்களின் படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எல்லாம் ஒரே தீர்வு, கச்சத்தீவை இந்திய அரசு திரும்பப் பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்
போருக்கு வித்திடும் கச்சத் தீவு

கச்சத்தீவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களை ரத்து செய்யும் பட்சத்தில், ஜக்கிய நாடுகளின் சபையில் இந்தியா சரியாக முயற்சிக்கும் சூழலில், கச்சத் தீவு எப்போதும் இந்தியாவின் அங்கம் எனும் பொதுமக்களின் கனவு நனவாகும். இல்லையென்றால், 1974-ல் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்வார்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த P.K.M. தேவர் நாடாளுமன்றத்தில் பேசியது நடந்து விடும்.

“இலங்கை தனது ராணுவத்தை கச்சத் தீவிற்கு திருப்பியுள்ளது. ஆயிரக்கணக்கான இந்திய மீனவா;களின் மோட்டார் படகுகள் கச்சத் தீவுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விட்டன. தமிழக மீனவர்களின் உயிருக்கு ஆபத்து. தமிழக மீனவர்களைப் பற்றி கவலைப்பட ஆளிள்லை. கச்சத் தீவு விவகாரம் எதிர்காலப் போருக்கு அடித்தளமாக இருக்கப் போகிறது. நமது நாட்டின் உயிர் பிரச்சினைக்குச் சவாலாக இருக்க போகும் ஒரு விஷயத்திற்கு இது அடித்தளமாக இருக்கப் போகிறது. இந்தியாவின் பிரிவினைக்கு மகாத்மா காந்தியை பலி கொடுத்துள்ளோம். கச்சத்தீவை தமிழகத்தின் அங்கமாக பார்க்காதீர்கள். புனித இந்தியாவின் அங்கமாக கருதுங்கள். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுங்கள்” என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசினார் தேவர்.

இன்றும் அந்த நிலைமை தமிழனுக்கு நீடிக்கிறது. சீன ராணுவம் கச்சத் தீவை தனது தளமாக பயன்படுத்த இலங்கை அனுமதித்துள்ளது என செய்திகள் வருகின்றன. அதன்படி பார்த்தால் கச்சத் தீவை நாம் மீட்காவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு - குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கச்சத்தீவு இருக்கப் போகிறது!
THANSK TO http://www.savukku.net/home1/971-2011-06-22-07-52-38.html

காடுவெட்டி

0 c
காடுவெட்டி _ மரம் வெட்டுபவன் : நாகரிகம் இல்லாதவன் : பல்லவர் : கள்ளர் ஆகியவர்களின் பட்டப்பெயர் : சிறு மண் வெட்டி.


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9506

பொன்னியின் செல்வனில் கல்கி எழுதியது

0 c
//"சூரிய வம்சத்திலே பிறந்த
மனுமாந்தாதா. அந்த வம்சத்திலே புறாவுக்காக உடலை அறுத்துக் கொடுத்த சிபிச்
சக்கரவர்த்தி, சிபிச் சக்கரவர்த்திக்குப் பின் தோன்றிய இராஜ கேசரி, அவருடைய
புதல்வர் பரகேசரி, பசுவுக்கு நியாயம் வழங்குவதற்காகப் புதல்வனைப் பலி
கொடுத்த மனுநீதிச் சோழன், இமயமலையில் புலி இலச்சினை பொறித்த கரிகால்
பெருவளத்தான், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி குளமுற்றத்துத்
துஞ்சிய கிள்ளி வளவன், குராப்பள்ளி துஞ்சிய கிள்ளிவளவன், எழுபத்திரண்டு
சிவாலயம் எடுப்பித்த கோப்பெருஞ் சோழர், இவர்கள் வழிவழித் தோன்றிய
தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த பழையாறை விஜயாலயச் சோழர், அவருடைய குமாரர்
ஸஸ்யமலையிலிருந்து புகார் நகரம் வரையில் காவேரி நதி தீரத்தில்
எண்பத்திரண்டு சிவாலயம் எடுப்பித்த ஆதித்த சோழர், அவருடைய குமாரர்
மதுரையும் ஈழமும் கொண்டு தில்லைச் சிதம்பரத்தில் பொன் மண்டபம் கட்டிய
பராந்தகச் சோழ சக்கரவர்த்தி, அவருடைய குமாரர் இரட்டை மண்டலத்துக் கன்னர
தேவன் படைகளை முறியடித்து ஆற்றூர்த் துஞ்சிய வீராதி வீரராகிய அரிஞ்சய
தேவர், அவருடைய குமாரர் ஈழம் முதல் சீட்புலி நாடு வரை ஒரு குடை நிழலில்
ஆளும் பழையாறைப் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்தி, அவருடைய மூத்த குமாரர் -
கோப்பெரு மகனார் - வடதிசை மாதண்ட நாயகர் - யுவராஜ சக்கரவர்த்தி -
வீரபாண்டியன் தலை கொண்ட ஆதித்த கரிகால சோழர் விஜயம் செய்திருக்கிறார்!
பராக்! பராக்!" என்று அக்கட்டியங் கூறுவோன் கூறி முடித்ததும் மழை பெய்து
இடி இடித்து ஓய்ந்தது போலிருந்தது. //
thnks to http://mukkulam.ace.st/t16-topic

வல்லம்பர் சாதி

1 c
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரைச் சேர்ந்தவர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள வல்லம் என்ற இடத்தில் தொடக்க காலத்தில் இருந்தவர்கள், பின்னாளில் இடம் பெயர்ந்து சிவகங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வசிக்கத் தொடங்கினர். இவர்கள் தங்களை நாட்டார் என்று அழைத்துக் கொள்கின்றனர். 18ம் நூற்றாண்டில், மருது சகோதரர்களோடு சேர்ந்து போர் புரிகிறார்கள் வல்லம்பர்கள். இதனால், சிவகங்கை மன்னர், காரைக்குடி நகரத்தை ஆளும் பொறுப்பை வல்லம்பர்களுக்குத் தருகிறார். அதன் பின், வல்லம்பர்களுக்கு அம்பலம் என்ற பட்டம் வருகிறது.



கள்ளர், மறவர், தேவர் ஆகிய முக்குலத்தோர் சாதியோடு, பெண் கொடுத்து, பெண் எடுக்கும் பழக்கம் இச்சமூகத்தில் ஏற்பட்டதால், வல்லம்பர்கள் ஏறக்குறைய முக்குலத்தோர் என்றே அழைக்கப் படுகிறார்கள்.

thanks to savukku

கள்ளர் சீரமைப்புத் துறை - பள்ளிகள்

0 c
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத் துறை சார்பில் 260 பள்ளிகள் உள்ளன.

இதில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 45. இப்பள்ளிகளின் வளர்ச்சியில் கல்வித்துறை போதிய அக்கறை காட்டவில்லை என கள்ளர் பள்ளிகளின் ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

இதற்கு உதாரணமாக பல புகார்களையும் தெரிவிக்கின்றனர். பள்ளிகளில் சிறப்பு கட்டணம், கல்வி கட்டணம் வசூலிக்க தடைவிதித்து அரசு உத்தரவிட்டது. அதற்கு பதிலாக பள்ளிகளுக்கு அரசே கட்டணத்தை வழங்கி உதவியது. இவை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுவிட்டது.

இரண்டு ஆண்டுகளாக கள்ளர் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. நிலுவைத் தொகை ரூ. 17 லட்சத்து 98 ஆயிரத்து 701. ஆண்டுதோறும் நூறு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளர் பள்ளிகள் ஒன்று கூட தரம் உயர்த்தப்படவில்லை. கள்ளர் பள்ளிகளில் 110 பட்டதாரி ஆசிரியர், 52 முதுகலை ஆசிரியர், 40 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2 ஆண்டுகளாக இப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. காமராஜர் பிறந்த நாளான ஜூலை 14ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறோம்.

இதற் காக மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 300ம், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ. 200ம் வழங்கப்பட்டது. இது மற்ற பள்ளிகளுக்கு வழங்கப்பட்டும் கள்ளர் பள்ளிகளுக்கு இதுவரை வழங்கவில்லை. ஆண்டு துவக்கத்தில் அரசு இலவச பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல ரூ.ஆயிரத்து 200 வழங்கப்படும். இதுவும் தராமல் கள்ளர் பள்ளிகள் வஞ்சிக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரப்படி விளையாட்டு ஆசிரியர், அலுவலர் பணியிடம் எந்த கள்ளர் பள்ளியிலும் நியமிக்கப்படவில்லை.

நபார்டு வங்கி மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் கட்டடம், தளவாடங்கள் வாங்குகின்றனர். கள்ளர் பள்ளிகளுக்கு எதுவும் வழங்கப்படுவதில்லை. ரூ. 27 கோடி அளவுக்கு கருத்துரு அனுப்பியும் நீண்ட நாட்களாக பலனில்லை. இதுபோன்ற பல குறைபாடுகள் உள்ளன.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர் எம்.சின்னப் பாண்டி கூறுகையில், கள்ளர் சீரமைப்புத் துறையில் பலகுறைபாடுகள் இருந் தாலும் கடந்த ஆண்டு 10ம் வகுப்பில் 83, பிளஸ் 2ல் 73 சதவீதம் தேர்ச்சி இருந்தது. பெண்களுக்கென உயர் நிலை,மேல்நிலை பள்ளிகள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. கள்ளர் பள்ளிகள் புறக்கணிக்கப்படும் நிலையில் உள்ளன. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
thanks to http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?cat=1&id=5052

விடுமுறையில் கிராமத்துக்குச் செல்வோம்!

0 c


First Published : 07 May 2011 02:37:45 AM IST


தாத்தா, பாட்டி, சித்தி, ஒன்றுவிட்ட சித்தப்பா, தாய்மாமா, பெரியப்பா, அண்ணன், அத்தான்.. இப்படி நீண்டுகொண்டே சென்ற உறவுகளின் பட்டியல் இன்று வெறும் அங்கிள்.., ஆன்டி. கசின்.. என சுருங்கிய வடிவத்தில் புதுப் பரிமாணம் எடுத்துள்ளன. இன்னும் சொல்லப்போனால் அப்பாவுடன் கூடப்பிறந்த தம்பிகூட இன்று தூரத்துச் சொந்தமாகி விட்டார்கள் என்றே சொல்லலாம்.கால ஓட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்கவும், பொருளாதார வசதியில் முன்னேறிக் காட்ட வேண்டும் என்ற வேகத்திலும் கிராமத்தைவிட்டு வெளியேறி நகரை நோக்கி ஓடியவர்களில் பெரும்பாலானோர், அந்த வேக ஓட்டத்துக்குப் பழகி, அதை விரும்பி ஏற்று மீண்டும் அங்கேயே தங்களின் வாழ்க்கையைத் தொடர நினைக்கிறார்கள் என்பதும் உண்மை. உங்களின் குடும்பம் வசதியாக வாழ வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவதும் சரிதான். அதற்கு நீங்கள் நகரத்தில் இருந்துகொண்டு பகல், இரவு பார்க்காமல் உழைப்பதும் சரி. ஆனால், அந்த வேகத்தை இப்பொழுதே உங்களின் செல்ல மகன் அல்லது மகள் மீதும் செலுத்துவது சரியா என்று கேட்டால் பதில் சொல்ல ஆளில்லை.மெட்ரோபாலிட்டன் சிட்டிகளிலுள்ள, பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் பலர், தங்களின் ரத்த உறவுகளையும், தூரத்து உறவுகளையும் பற்றித் தெரியாமலேயே வளர்ந்து வருகிறார்கள் அல்லது வளர்க்கப்பட்டு வருகிறார்கள். கிராமத்தில் சொந்தக்காரங்க இருக்காங்கன்னு எங்க அப்பா சொல்லியிருக்காங்க என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த விஷயம். முன்பெல்லாம் நகர வாழ்க்கை சூழலில் சிக்கியிருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கோடை விடுமுறை எப்பொழுது விடும் என்று ஆவலுடன் காத்திருந்து, விடுமுறை விட்டவுடன் உடனே குடும்பத்துடன் கிராமத்துக்குச் சென்று தங்கள் மூத்த குடும்ப அங்கத்தினரின் வீடுகளில் தங்கியிருந்து மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்து வந்தார்கள். தங்கள் வேலை காரணமாகப் பெற்றோர்கள், மீண்டும் நகரத்துக்குச் சென்றுவிட்டாலும்கூட அவர்களின் பிள்ளைகளை விடுமுறை முடியும்வரை கிராமத்திலேயே விட்டுவிட்டுச் சென்றனர். இதனால் வளரும் தலைமுறைக்கு தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை எனப் பலதரப்பட்ட உறவுகள் குறித்தும், உறவுகளிலுள்ள அன்னியோன்மும், உறவுகளின் பாசமும் முழுமையாகத் தெரிய வாய்ப்பிருந்தது. இதனால் நல்ல பழக்கவழக்கங்களும் இளம் தலைமுறையினருக்குத் தாமாகவே உருவாகி வந்தன.ஆனால், இன்றோ கிராமம் என்றாலே அதைப் படத்தில்தான் பார்த்திருக்கிறோம். கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் சில பிள்ளைகளுக்கும் இன்றைய போட்டி நிறைந்த உலகம் அதற்கான வாய்ப்பை அளிக்க மறுத்து வருகிறது. எதிர்த்த வீட்டு கோமு சம்மர் லீவில் டான்ஸ் கிளாஸ் போறான். அடுத்த வீட்டு சோமு கோடை விடுமுறையில் புது சாப்ட்வேர் படிக்கப் போறான். அந்தப் பொண்ணு பரதநாட்டியம் கத்துக்கப் போகுது, அப்ப நம்ம பிள்ளையையும் சம்மர் ஸ்பெஷல் கோர்ஸýக்கு அனுப்புவோம் என்பதே இன்றைய பெற்றோர்களின் எண்ணம். அக்கம்பக்கத்தாரின் இந்தப் போட்டியால் விடுமுறையில் கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்ற நினைக்கும் ஒரு சிலருக்கும்கூட அந்த வாய்ப்பு, பெற்றோர்களால் பறிக்கப்பட்டே வருகிறது.இதற்கிடையே நகரத்திலுள்ள பல பள்ளிகளில் கோடை விடுமுறையிலும்கூட சிறப்பு வகுப்புகள் அரங்கேறி வருகின்றன. 
 
ஓராண்டு தொடர்ந்து படித்த மாணவ, மாணவிகள் ஓய்வெடுப்பதற்காக அரசு அளித்துள்ள இந்த விடுமுறையிலும்கூட மாணவர்களுக்கு ஓய்வளிக்காமல் படிக்கச் சொன்னால் அவர்களின் ஆர்வம் குறைந்து போகாதா? ஆனால், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஜெயராமன், கோடை விடுமுறையில் பள்ளிகள் செயல்படக் கூடாது எனவும், அப்படிச் செயல்பட்டால் இழுத்து மூடப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்லலாம். இதுபோன்று அனைத்து மாவட்டங்களிலும் அறிவிக்கப்பட்டுவிட்டால், விடுமுறையைக் கிராமத்தில் கழிக்க மாணவர்களும் முன்வரலாம்.எங்கோ ஒரு கிராமத்தின் மூலையில், அதுவும் வாழ்க்கையின் விளிம்பில் இருந்துகொண்டு, தங்களின் பேரன், பேத்தி, மகன், மருமகன் என எல்லோருடைய நலனுக்காகவும், இன்றும் வேண்டிக் கொண்டிருக்கும் தாத்தா, பாட்டியின் மனதைப் புரிந்தாவது, கிராமத்துக்கு வர நகரத்து சொந்தங்கள் முயல வேண்டும். இந்திய கலாசாரத்தின் பெரிய அடிப்படையான விஷயமே இந்த உறவுகள்தான் என்பதை வரும் தலைமுறையினருக்கும் உணர்த்த வேண்டும். செய்வார்களா?
thanks to http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=414892&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!

கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278)

0 c

நட்சத்திரம் - வரலாற்றில் மறைக்கப்பட்ட பேரரசன்

முன்குறிப்பு:

சில ஆண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் கோப்பெருஞ்சிங்கன் என்கிற அரசனை பற்றிய ஒரு ஆராய்ச்சி நூலை படித்தேன், கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்களுடன் எழுதப்பட்ட அந்த நூலின் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பகத்தின் பெயர் எதுவும் நினைவில்லை ச்ச்எனினும் சில நாட்களுக்கு முன் அதை நூலகத்தில் தேடியபோது கிடைக்கவில்லை, எனவே அந்த நூலில் கூறப்பட்டிருந்தவற்றை என் நினைவிலிருந்தும் மற்றவற்றை வரலாற்று நூல் ஆதாரங்களுடனும் எழுதுகின்றேன்.

கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278)
தற்போதைய ஆரணியின் அருகிலுள்ள படவேடு என்கிற ஊர் அந்த நாட்களில் படைவீடு என்று அழைக்கப்பட்டது அங்கே நிலை கொண்டிருந்தது கோப்பெருஞ்சிங்கனின் படை.

கருத்த மேனியுடன் ஆஜானுபகவான தோற்றத்துடன் இருந்த அரசன் கோப்பெருஞ்சிங்கன் தன் படை நிலைகொண்டு இருந்த இடத்திற்கு சென்று அணிவகுத்து நிற்கும் தன் படையை பார்வையிடுகின்றான்.தீர்க்கமான அவன் கண்கள் செக்கச்செவேல் என சிவந்திருந்தது, உள்ளம் எங்கும் சுதந்திர வேட்கை சுடர் விட்டெறிந்து கொண்டிருந்தது.

வெற்றி வேல், வீர வேல் என்ற முழக்கங்களுக்கிடையில் படையினை பார்வையிடுகின்றான், படையின் ஒவ்வொரு வீரனும் சுதந்திர தாகத்துடன் தன் நாட்டு சுதந்திரத்திற்காக எதையும் எதிர்கொள்ள தயாராக கட்டுக்கோப்பாக நின்ற படையை பார்த்த நிமிடத்தில் சுதந்திரத்திற்காக தாங்கள் மோதப்போகும் சோழப்படையின் எண்ணிக்கையை விட சிறியதாக இருந்தாலும் நிச்சயம் சுதந்திர தாகம் தீரும் என்ற நம்பிக்கையில் தன் கூடாரத்திற்கு சென்றான்.

அன்றிரவு முழுதும் தூங்காமல் ஏதேதோ சிந்தனைகள், தன் தளபதிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள், ச்ச்தம் மூத்தோர்கள் மகேந்திரவர்மனும் நரசிம்ம வர்மனும் கட்டிக் காத்த பல்லவ பேரரசு சோழர்களின் அரசியல் சதுரங்க விளையாட்டால் சிதைக்கப்பட்டு சிதறிய கதைகள் கேட்டு வளர்ந்த போதே சோழப்பேரரசை வென்று அதன் அடிமையாக இருக்கும் இந்த அரசை மீட்டு மீண்டும் பல்லவ பேரரசை நிறுவ வேண்டுமென உறுதி பூண்டான், சத்திரியனாக மட்டும் இருந்தால் போதாது, இதற்கு சாணக்கியத் தனமும் வேண்டுமென்ற கொள்கையில் உறுதியாக இருந்தான். தான் எழுதப்போகும் சோழப்பேரரசின் முடிவுரையை நாளைய வரலாறு பேசும், பல்லவ குலத்தின் மாவீரனொருவன் சோழப்பேரரசை முடித்து மீண்டும் பல்லவ பேரரசை நிலைநிறுத்தியதை வரலாறு பாராட்டும் என்று எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான், சோழப்பேரரசுக்கும் சேந்தமங்கலப் போரில் முடிவுரை எழுதினான், ஆனால் அன்று கோப்பெருஞ்சிங்கன் எண்ணியிருக்க மாட்டான் சோழ மாயை இருபதாம் நூற்றாண்டிலும் கூட வரலாற்று ஆசிரியர்கள் கண்களை மறைத்திருக்குமென்று.

கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1229 முதல் 1278 வரை தென்னாற்காடு மாவட்டம் சேந்தமங்கலத்திலிருந்து அரசாண்டான்(ர்)(வரலாற்று நூல்களில் அவன்,இவன் என்று பேசினாலும் நாம் இனி அவர் என்றே அழைப்போம்) சில வரலாற்று ஆசிரியர்கள் ஆரணி அருகிலிருக்கும் படைவீடு(படவேடு) தான் இவரின் தலை நகரம் என்கிறார்கள். வெகு சில ஆண்டுகள் மட்டுமே தமிழகத்தை ஆண்ட பல அரசர்களின் பெயர்கள் தெரிந்த அளவிற்கு கூட கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகாலம் அரசாண்ட இவரின் பெயர் வெளியில் தெரியவில்லை.

ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவ ஆட்சி சோழர்களின் அரசியல் சித்து விளையாட்டால் சிதறுண்டபிறகு பல்லவ குலத் தோன்றல்கள் அரையன்,காடுவெட்டி, காடவர் என்ற பெயர்கள் கொண்டு சிற்றரசர்களாக சோழ அரசிற்கு கப்பம் கட்டி அரசாண்டனர், அப்படி வந்தவர் தான் கோப்பெருஞ்சிங்கன், வீரமும் விவேகமும் கொண்ட கோப்பெருஞ்சிங்கன் ஆண்ட காலத்தில் சோழப்பேரரசராக முதலில் மூன்றாம் இராசராசனும், பிறகு மூன்றாம் ராசேந்திரனும் ஆண்டனர், மதுரையில் பாண்டியர்கள் சோழப்பேரரசிலிருந்து விடுபட்டு சுதந்திர பேரரசாக உருவாகின்றனர், மேற்கே போசளர்(ஹொய்சாளர்)கள் பேரரசாக பலத்துடன் ஆட்சியிலிருக்கின்றனர் இதில் போசளர்களுக்கும் சோழர்களுக்கும் திருமண உறவு முறை உள்ளது.

இந்த நிலையில் கோப்பெருஞ்சிங்கன் தன்னை சுதந்திர அரசனாக அறிவித்துக் கொள்கின்றார், சோழப்பேரரசுக்கு முடிவுரை எழுத பாண்டியர்கள் தெற்கேயும் காகதீயர்களும், கோப்பெருஞ்சிங்கனும் வடக்கேயும் முனைந்தனர், போசளர்கள் சோழர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் இந்த அரசியல் சித்து விளையாட்டின் நடுநாயகமாக இருந்தவர் கோப்பெருஞ்சிங்கன்.

பாண்டியர்களிடம் தோற்ற மூன்றாம் இராசராசன் போசளர்களோடு திருமண பந்தம் இருந்ததால் அவர்களின் உதவி கேட்கின்றார், சோழர் படை வடமேற்கு நோக்கி முன்னேற அதே சமயத்தில் போசளர்கள் அதன் மறுபுறத்திலிருந்து கோப்பெருஞ்சிங்கன்னனை தாக்க திட்டமிட்டனர், ஆனால் திட்டத்தில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால் தக்க சமயத்தில் போசளர் படை வந்து சேரவில்லை, அதை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் போசளர் படை வருவதற்கு முன்பே சோழப்பேரரசன் மூன்றாம் இராசராசனை கி.பி.1231ல் தெள்ளாறில் எதிர்கொண்டு போர் புரிந்து வெற்றி பெற்று சோழப்பேரரசனை சேந்தமங்களத்தில் சிறையிலடைத்தார். இதை சில வரலாற்று ஆசிரியர்கள் சோழமன்னன் தப்பியோடியபோது அவரை கைது செய்து சிறையிலடைத்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

வட நாட்டு அரசர்களையும், இசுலாமிய அரசர்களையும் பிற நாட்டு அரசர்களையும் பார்க்கும் போது பொதுவாகவே தமிழக அரசர்கள் மிகுந்த கருணையுடன் இருந்துள்ளனர்.பொதுவாகவே பெரிய அளவில் வாரிசுரிமைப்போர் தமிழகத்தில் நடந்தது என்றால் அது வீரபாண்டியனுக்கும் சுந்தரபாண்டியனுக்கும் கி.பி.1310ல் நடந்த ஒன்றே ஒன்றுதான், மேலும் போரில் தோல்வியுற்ற அரசர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தினர், ஆனால் வட நாட்டு வரலாறிலும், இசுலாமிய அரசர்களும், இலங்கை மகாவம்ச வரலாறும் சீன வரலாறும் சொல்வது அரசுகட்டிலுக்காக சொந்த மகனையும், தாயையும், சகோதரனையும் கொடூரமாக கொன்றழித்தனர், அது மட்டுமின்றி தலைவேறு உடல்வேறாக கிடப்பவன் மட்டுமே பிரச்சினை தராத எதிரி என்று நம்பியதால் தோல்வியுற்ற மன்னர்களை உடனடியாக கொன்றழித்தனர், மேலும் எதிரிகளின் குழந்தைகள் 4 மாத கைக்குழந்தையாக இருந்தாலும் கூட கொல்வர் அல்லது கண்களை தோண்டி எடுப்பர்.

அதன்பின் போசளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையால் சோழமன்னனை விடுவித்தார் கோப்பெருஞ்சிங்கன், மீண்டும் சோழப்பேரரசிற்கு திரைசெலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் போசளர்களால் ஆனது, ஆனாலும் தன் முயற்சியை விடாமல் பெரம்பலூரில் போசளர்களுடன் போர் செய்து போசளர்களை துறத்தியடித்தது மட்டுமின்றி அவர்களின் மகளிரையும் சிறைபிடித்து சென்றார். சோழர், பாண்டியர், போசளர்களை பல போர்களில் தோற்கடித்து மூன்று பேரரசுகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார்

தன் வாழ்நாள் முழுவதும் சுதந்திர போர்களிலேயே கழித்தாலும் நல்லாட்சி நல்கினார், அவர்காலத்தில் கலைகள் சிறந்து விளங்கின, சிதம்பரம் நடராசரின் மேல் அளவுகடந்த அன்பு கொண்டு சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு கோபுரத்தை கட்டி எழுப்பினார், பல கோவில்களை கட்டியும், பல கோவில்களுக்கு கொடையும் வழங்கியதை கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.இவருக்கு இருபத்தியேழுக்கும் மேலானா பட்டப்பெயர்கள் உண்டு அவற்றில் சில பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன், பரதமல்லன். பல கோவில்களை கட்டிய இவர் சில கோவில்களை இடித்தும் உள்ளார், சோழ நாட்டை போர் தொடுத்து வென்றபோது சோழ நாட்டில் சில கோவில்களை இடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொண்டைமண்டலம் முழுவதும், சோழமண்டலத்தின் பெரும் பகுதியும் இவரின் கட்டுப்பாட்டில் இருந்தன,தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வடக்கே கோதாவரி ஆறு வரையான இடங்களில் இவரின் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன.


கி.பி.1255ல் மீண்டும் விதி கோப்பெருஞ்சிங்கனை பார்த்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வடிவில் சிரித்தது, சேந்தமங்கலம் பாண்டியர்களால் முற்றுகையிடப்பட்டு மீண்டும் வேற்றரசுக்கு அடிமையானார் கோப்பெருஞ்சிங்கன், பாண்டிய மன்னர்களின் வடக்கத்திய போர்முனைக்கு தன் படைகளை நல்கி பாண்டிய அரசுடன் ஒரு சமாதான போக்கையே இறுதி வரை கடைபிடித்தார்.

சரி இனி சில வரலாற்று ஆசிரியர்கள் இவர் மீது எழுப்பும் குற்றசாட்டை பார்ப்போம்.

முதல் குற்றசாட்டு சோழனுக்கு அடங்கிய சிற்றரசன் எப்படி சோழப்பேரரசனையே சிறையிலடைப்பான் இது துரோகமல்லவா?

எது துரோகம்? தன்னை நம்பிய தன் மாமனார் எண்பத்திமூன்று வயது ஜாலாலுதின் கில்ஜி தம்மை வரவேற்க தனியாக வந்தவரை வெட்டிக்கொன்றாரே அலாவுதின் கில்ஜி அது வரலாற்றுத்துரோகம், தன்னை தத்தெடுத்து வளர்த்த தாய் மீனாட்சியை எதிர்த்து கலகம் செய்தானே விஜயகுமாரன் அது துரோகம் (சாண்டில்யன் அவர்கள் எழுதிய ராஜபேரிகை நாவலில் இந்த விஜயகுமாரன் தான் கதாநாயகன்)

பல்லவ வழித்தோன்றல் தன் மூத்தோர்களின் பேரரசை நிறுவ முயன்றதா துரோகம்? சோழர்களிடம் அடிமைப்பட்டிருந்த தன் நாட்டை விடுவிக்க போர்புரிந்தது துரோகமென்றால் இந்த துரோக குற்றச்சாட்டு பாய வேண்டியது முதலில் சோழர்களின் மீது தான். பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தவர்கள் பாண்டிய பல்லவப் போரில் நடத்திய அரசியல் சதுரங்கத்தில் முதலில் பாண்டியர்களை பல்லவர்களுக்கு துணையாக நின்று வீழ்த்தி பிறகு பல்லவர்கள் ஒப்பந்தத்தை மீறிவிட்டார்கள் எனக் கூறி போர்தொடுத்து வீழ்த்தினார்களே!! (பல்லவர்களுக்கும் சோழர்களுக்குமிடையேயானது என்ன ஒப்பந்தம்? அதில் பல்லவர்கள் என்ன மீறினார்கள் என நான் படித்தவரையில் கிடைக்கவில்லை, யாரேனும் கிடைத்தால் கூறுங்கள்)

அடுத்ததாக கோப்பெருஞ்சிங்கனை பற்றியும் அவரது அரைநூற்றாண்டு அரசைப்பற்றியும் சில வரிகள் மட்டுமே பல வரலாற்று புத்தகங்களில் காணக்கிடைக்கின்றது, அதில் பாதிக்கும் மேல் அவரின் மீதான எள்ளல்களாகவே இருக்கின்றன.
டாக்டர் கே.கே.பிள்ளை யின் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலிலிருந்து சில வரிகள்

"சோழர்,பாண்டியர் போசளர் ஆகியவர்கள் அனைவரையுமே வென்று வாகைசூடியதாக விருதுகள் பல புனைந்து கொண்டான் பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன் என்பன அவற்றுள் சிலவாம்"(வென்றது உண்மை தானே, வெல்லாமலா தஞ்சையிலிருந்து கோதாவரி வரை இவரின் கல்வெட்டுகள் கிடைக்கப்பெறுகின்றன? தெள்ளாறு, சேந்தமங்கலம், பெரம்பலூர் போர்களின் முடிவு கோப்பெருஞ்சிங்கனுக்கு தானே சாதகமாக இருந்தது.)

"பல்லவர்கள் அல்லது காடுவெட்டி பரம்பரையில் தான் தோன்றியதாக பெருமை பிதற்றினான்"(பிதற்றினானா? பல்லவ குலம் ஒரே நாளில் வேரோடு அழிந்து போய்விட்டதா என்ன? இதைப்பற்றிய ஒரு பெரிய அத்தியாயமே முனைவர் பட்டத்திற்கான அந்த ஆராய்ச்சி நூலில் இருந்தது, மேலும் இவரின் கல்வெட்டுகள் பல்லவர் கல்வெட்டுகள் என்ற பிரிவின் கீழ்தானே வகைப்படுத்தப்பட்டுள்ளது)

இது மட்டுமின்றி பல வரலாற்று நூல்களில் கோப்பெருஞ்சிங்கன் அவருக்கு அவரே பட்டப்பெயர்கள் வைத்துக்கொண்டதாகவும் எள்ளல் தொனிக்கும் படி எழுதியுள்ளனர், இவருக்கு பட்டபெயர் விடயத்தில் எள்ளலாக எழுதினால் இராசராசன் முதல் பல அரசர்கள் பட்டப்பெயர்கள் வைத்திருந்ததை எப்படி எழுதுவது?

அரைநூற்றாண்டுகள் தமிழக அரசியலின் மையமாக இருந்த கோப்பெருஞ்சிங்கன் பற்றிய பதிவுகளும் இடமும் வரலாற்று நூல்களில் மிகச்சிலவே. ஏன் இப்படி? சில வரலாற்று ஆசிரியர்களுக்கும் சோழ மாயையா?

மேற்கோள் நூல்கள்
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - டாக்டர் கே.கே.பிள்ளை
தாய்நிலவரலாறு - பேராசிரியர் கோ.தங்கவேலு
தமிழகவரலாறு - சென்னை பல்கலைகழக இளங்கலை வரலாற்று பாடநூல்
whatisindia.com

thanks to http://kuzhali.blogspot.com/2005/12/blog-post_05.html

நிகழ்காலத்தில்

0 c
இனத்திற்கும், மொழிக்கும் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த அந்நிய கலாச்சார படையெடுப்புகளால் ஏற்படவிருக்கும் பெரிதான பாதிப்புகளை எவருமே தொலை நோக்க பார்வையுடன் பார்ப்பதில்லை.  ஐரோப்பிய ஆதிக்கத்திற்கு வரவேற்பு அளித்தவர்கள்  முதன் முதலில் என்ற கணக்கில் தென்னிந்தியர்கள் தான் அந்த சிறப்பை பெறுகின்றனர்.

வாஸ்கோடகாமா (1498) என்ற போர்த்துகீசியர் முதன் முறையாக ஆப்ரிக்க தென்முனையைச் சுற்றிக்கொண்டு  இந்தியாவிற்குள் வந்து புதிய வரலாற்றை உருவாக்கினார்.  வரவேற்பு அளித்த முதல் இடம் சேரநாட்டு கள்ளிக்கோட்டை.  இவரைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக ஒருவர் பின் ஒருவராக உள்ளே வந்தனர்.  வணிகம், வாணிபம், பண்டமாற்று என்று தொடங்கி மத இன மொழி திணித்தலும் ஒரே சமயத்தில் படிபடியாக நடந்து கொண்டேயிருந்தது.

முதன் முதலில் பைபிள் மொழிபெயர்ப்பு தமிழில்.  நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கிறது?  என்ன செய்வது நம்மவர்களின் தராள மனப்பான்மைக்கு எல்லை ஏதும் இல்லை.  ஆமாம் இன்று வரையிலும்.  பண்பாடு என்ற கோட்டுக்குள் பதவிசாய் வாழும் பதர்கள்.  அதனால் தான் போர்த்திய பொன்னாடைகளும், வெடித்து சிரித்த புகைப்படமும் நீங்கள் பார்த்த போது எழவு வீட்டில் எவ்வாறு தமிழன் நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு உணர்த்திய காலப்பெட்டகம் அது.

அதனால் தான் எல்லையை கடந்து சென்றவர்கள் அத்தனை பேருமே எல்லையில்லா பேரின்ப வாழ் நிலையை இன்று அடைந்து கொண்டுருந்த போதிலும் நாம் நம்முடைய நிகழ்கால கடமைகளில் மட்டும் கண்ணும் கருத்துமாய் முன்னேறிக்கொண்டுருக்கிறோம்.

கள்ளிக்கோட்டை குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று நம்மவர்கள் அவர்களுக்கு கீழே பணிபுரிவதை மிகப் பெருமையாக கருதினர்.  மற்ற எவரையும் விட நம்முடைய தமிழர்கள், அவர்களை ரத்தினக்கம்பளம் போட்டு வரவேற்காத குறை தான்.  சென்னை ஜார்ஜ் கோட்டையை பண்டக சாலையாக பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றம் அடைந்தனர்.  நம்முடைய முக்கிய புள்ளிகள் அத்தனை பேருமே அவர்களுடன் கலந்து சிறுபுள்ளியாகி சீக்கிரம் கால்புள்ளி கால் இல்லாத புள்ளியாய் மாறிப்போனார்கள்.

ஐரோப்பியர்களின் ஆதிக்கமும் வாணிகத் தொடர்புகளும் ஆதிக்கம் செலுத்திய கால கட்டத்தில் ஒரே ஒரு நாடு மட்டும் உறுதியாய் இருந்தது.  ஆமாம் அவர்களை உள்ளே விடக்கூடாது என்று தீர்மானமாய் இருந்தார்கள்.  அது ஜப்பான்.  200 ஆண்டுகளாக அந்நியர் எவரும் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் வந்தவர்களைக்கூட ஓதுக்குப்புற தீவுகளில் தான் வணிகம் செய்ய அனுமதித்தனர்.  ஆனால் இத்தனையும் மீறி இரண்டு பாதிரிமார்கள் உள்ளே நுழைந்த போது அவர்களை கண்டுபிடித்து உலகறிய நாகசாகியில் கழுவேற்றி கொன்றனர்.

நாகசாகியில் குண்டுமழை பொழிந்த காரணங்களுக்குப்பின்னால் இதுவும் ஒன்று என்று இன்றுவரையிலும் நம்பப்படுகிறது.

கூலியாக பயணப்பட்ட தமிழர்கள் கூட தவறாக தெரியவில்லை.  ஆனால் அன்றும் இன்றம் தொலை நோக்கு பார்வையில்லாத காரணத்தால் எத்தனை எத்தனை அவஸ்த்தைகளை பார்த்துக்கொண்டுருக்கிறார்கள்?.  படித்துக்கொண்டுருக்கிறோம்?
ஆனால் இன்றும் அன்றும் நம் மக்களைப் போலவே சீனர்களும், யூதர்களும் எல்லா நாடுகளிலும் குடியேறினார்கள்.  ஆனால் இன்று உலகத்தின் நாட்டமை அமெரிக்காவின் ஆதிக்க வர்க்கம் என்பது மொத்த அங்கு வாழும் யூதர்களின் கையில் தான் உள்ளது.  சீனர்களின் சிறப்பை சொல்லத் தேவையில்லை.  சிங்கப்பூர், மலேசியா ஆரம்பித்து பல நாடுகள் அவர்களின் கண் அசைவில் தான் உள்ளது.  மெஜாரிட்டி மைனாரிட்டு என்று பேச்லெல்லாம் அவர்களின் வாழ்வியலில் எங்குமே இல்லை.  இந்தியாவில் தாஜ்மாகால் ஹோட்டலில் தாக்குதலில் டாடாவை விட அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புகளுக்குத் தான் முக்கிய அக்கறை.  அது தான் யூதர்கள்.  அவர்களின் சிறப்பு.  அவர்களின் வணிக பலம். மூலதனம்.  மூளை உள்ளவர்களின் முகவரி அது.

ஆனால் நாம் வேறு ஒரு வகையில் சிறப்பை பெற்றுள்ளோம்.  பர்மா அகதி, வியட்நாம் அகதி, இலங்கை அகதி.  இந்த பட்டியல் எதிர்காலத்தில் இப்போது உள்ள இந்திய அயல்உறவு கொள்கையினால் இன்னமும் நீளும் என்று தோன்றுகிறது?

இதன் விட்டகுறை தொட்ட குறை தான் இன்று வரையிலும் "பாண்டி" (கேரளா), "அரவாடு" (ஆந்திரா), மற்றும் வட இந்திய மார்வாடிகள் நம்மை அழைக்கும் "தீவானாதேசு".  ஆனால் நாம் ரொம்ப நல்லவர்கள்.  பழிப்பவர்களை வளர்ப்பதிலும், ஏமாற்றுபவர்களையும் புகழ்பாடுவதிலும், ஆளுமையில் இருப்பவர்களை உணர்ச்சி வேகத்தில் தேர்ந்து எடுப்பதிலும் நம்மை மிஞ்சுபவர்கள் எந்த உலகில் காணஇயலும்?

வயிற்றுப் பிழைப்புக்காக சென்றவர்களின் கதி தான் இன்று அதோகதி என்றால் பண்டைய தமிழ் வரலாற்றில் வாளெடுத்துச் சென்ற அத்தனை மன்னர்களும் தங்களுடைய வீரத்தை அகில உலகமெங்கும் பறைசாற்றியதோடு அவர்களின் கடமை முடிந்ததாகவே கருதினர்.  எந்த சீரழிவும் அவர்கள் செய்தவர்கள் இல்லை.  நான் தான் சிகாமணி என்று நிரூபிக்கவும் இல்லை.

பொருளாதார சீரழிப்பும் செய்யவில்லை.  உலகம் வெறுக்கக்கூடிய கலாச்சார சீழிப்பையும் செய்தவர்களில்லை.  ஆனால் இங்கு வந்து இறங்கிய போர்த்துகீசீயரும், பாரசீகரும், பிரெஞ்ச் நாட்டுக்காரரும் முடிந்தவரையிலும் தங்களுடைய தாக்கங்களை எல்லா வகையிலும் எல்லா நிலையிலும் நிலைநாட்ட தவறவில்லை.  வாணிகம் முதல் பட்சம்.  கொள்ளை லாபம் முக்கியம்.  ஆனால் இதைவிட முக்கியம் மதம் மாற்றுதல்.  அத்துடன் இருந்தாலும் பராவாயில்லை.  இங்கே உள்ள அத்தனை விசயங்களையும் முடக்கவும், முயற்சிகளை தடுக்கவும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகக் கவனமாக செயல்பட்டனர்.

நம்மவர்களின் வரவேற்ற கைகள் இறுதியில் வணங்கியது.  ஆமாம் அவர்களைப் பார்த்து?  பேசிய மொழியை, வாழ்ந்த வாழ்க்கையை, அடிப்பைட கலாச்சார பெருமைகளை மறந்தனர்.  ஆமாம் காலம் முழுக்க அவர்களை துதிபாட போதவில்லை என்ற போது எங்கே போய் உள்ளே உள்ள விசயங்களில் கவனம் செலுத்த முடியும்?

உலகத்திற்கே வழிகாட்டியாக இருந்த நம்முடைய சாதனைகள் தான் எத்தனை எத்தனை?

மருத்துவம், கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம், போர்க்கலை, கப்பற்கட்டும் தொழில் நுட்பம் போன்றவற்றை மறைத்தார்களா? மழுங்கிய சிந்தனைகளால் அத்தனையும் மறந்து தொலைத்தார்களா?  இல்லை அடுத்தவர் தெரிந்து கொள்ளக்கூடாது என்ற நல் சிந்தனைகளினால் "குரு + மாணவன் " என்ற போர்வைக்குள் ஓளித்து கரையான் அரித்ததைக்கண்டும் காணாமல் இருந்தார்களா?

மொத்தத்தில் காலம் அத்தனையும் விழுங்கி விட்டது.

ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவக சிந்தாமணி தவிர வளையாபதியையும், குண்டலகேசியையும் அழியவிட்டோம்.  பெரும்பாலான சங்க இலக்கியங்களை தமிழ்த்தாத்தா உ.வெ.சாமிநாதய்யர் கண்டுபிடித்த தரவில்லையென்றால் தமிழ் இலக்கியத்ன் ஒரு பெரிய பரப்பளவுகளையும் இழந்து இருப்போம்.

தமிழ் காவல் தெய்வங்கள், இன காவலர்கள், இன்னும் பல பட்டங்களை சுமந்து வாழ்ந்துகொண்டுருக்கும் நிகழ்கால தலைவர்கள் எவருமே தெளிவான நோக்கில் தமிழை வளர்ப்பதில் கவனம் இல்லாத காரணத்தால் மொரிசீயஸ், யூனியன் பிரதேசங்கள், தென்னாப்ரிக்கா, பீஜீ தீவுகளில் இன்னும் பல நாடுகளில் தமிழர்கள் பரவி வாழும் இடங்களில் தமிழ் மொழி பேச்சு வழக்கில் இருந்து மாறி விட்டது.  இன்று கிட்டத்தட்ட வாழ்ந்து கொண்டுருக்கும் நிகழ்கால தலைமுறைகள் வைத்துருக்கும் பெயர் மட்டும் கொண்ட தமிழராக வாழ்ந்து கொண்டுருக்கின்றார்கள்.


தமிழன், தமிழ்மொழி, மொத்த தமிழனத்தில் வாழ்வியல், ஒரு நீண்ட தொடர் ஓட்டம் இது.
மூலத்தில் இருந்து இன்று முகவரி இழந்து முள் கம்பிகளுக்குப் பின்னால் வாழ்ந்து கொண்டுருப்பது வரையிலும் உள்ள நிகழ்வுகள் குறித்து ஒரு சிந்தனையோட்டம்.
thanks to http://deviyar-illam.blogspot.com/2009/10/blog-post_26.html