பாலியல் தொழிலுக்கு பெண்களை விநியோகிக்கிறது இலங்கை - அமெரிக்க அறிக்கை

இலங்கையில் ஆண்கள், பெண்கள், சிறார்கள் ஆகியோர் மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றிலும் கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், பாலியல் தொழிலுக்காகப் பெண்களைக் கடத்துவதில் இலங்கையும் ஒரு மூலமாக இருப்பதாக அமெரிக்காவின் 2011 ஆம் ஆம் ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது. மனித கடத்தல்கள் குறித்துக் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளில் பட்டியலில் இலங்கையை வைத்திருந்த அமெரிக்கா, இப்போது அதை இரண்டாம் மட்டத்தில் சேர்த்துள்ளது. அதாவது கடத்தல்கள் இலங்கையில் நடக்கின்றன, ஆனால் இதைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்கள் நடமாடுவதற்குக் கட்டுப்பாடு, கடவுச்சீட்டை வாங்கி வைத்திருத்தல், அச்சுறுத்தல், உடல்ரீதியான அல்லது பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் ஆகியவற்றின் மூலம் கட்டாய வேலை வாங்கப்படுகிறார்கள் என்று அவ்வறிக்கை மேலும் கூறியுள்ளது. வீட்டுப் பணியாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு உடல்ரீதியான துன்புறுத்தல்கள் ஏற்படுகின்றன. 11 வீதத்தினர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகின்றனர். 60 வீதமானவர்களுக்கு சம்பளங்கள் வழங்கப்படுவதில்லை, 60 வீதமானவர்கள் கடவுச்சீட்டுகளைக் கொடுத்துவிட்டு இருக்கிறார்கள், 80 வீதமானவர்கள் நடமாடக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளார்கள்.

வேறு நாடுகளில் வீட்டுப் பணியாளர்களாக வேலை செய்ய அனுப்பப்படும் பெண்களில் பலரும் உண்மையில் பாலியல் தொழிலைச் செய்ய வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் வேலை கொடுக்கப்படும் என அழைத்துச் செல்லப்படும் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதையும், இலங்கைக் கடற்கரைகளில் சிறுமிகள் தவிர சிறுவர்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதையும் அவ்வறிக்கை குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.


thaks to athirvu

No comments: