கொடும்பாளுர் மன்னர்களான வேளிர் மரபினர் கள்ளர் குலத்தின்
பட்டங்களுக்கு உரியவர்கள்ஆவர்கள்
THANKS TO.(http://kallarperavai.weebly.com/296529953021299529923021-296530092994-298629753021297529693021296529953021.html)
புதுக்கோட்டையிலிருந்து 35கிலோ மீட்டர் தொலைவில் குடுமியான்மலை மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது கொடும்பாளுர்.
சோழ சரித்திரத்தின் புகழ் பெற்ற ஊர் .கொடும்பாளுரில் நடைபெற்ற யுத்தங்கள் பற்றி கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
சோழ சரித்திரத்தின் புகழ் பெற்ற ஊர் .கொடும்பாளுரில் நடைபெற்ற யுத்தங்கள் பற்றி கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
இங்கே இரண்டு முக்கிய கோவில்கள் உள்ளன. வேளிர் மரபின் மிச்சமாக உள்ள மூவர் கோவில் அதில் ஒன்று. மற்றது முசுகுந்தேஸ்வரர் கோவில். இரண்டுமே அதன் கலை எழிலுக்காக மிகவும் பிரசித்தி பெற்றவை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் தமிழகத்தில் அதிகமான புராதனச் சின்னங்கள் காணப்படுகின்றன.குறிப்பாக திருமயம் கோட்டை ,குடுமியான்மலை. நார்த்தா மலை சமண படுகைகள், சித்தன்னவாசல் குகை ஒவியங்கள், சோழர் கால கோவில்களான திருக்கட்டளை,கலியபட்டி.குன்னாந்தார் கோவில், ஆதனக்கோட்டை. கீழாநிலை, மலையடிபட்டி, திருவரங்குளம், சமணர்களை கழுவேற்றம் செய்த ஒவியங்கள் உள்ள ஆவுடையார் கோவில், என்று காலத்தின் அரிய காட்சிக் கூடமாக கண்முன்னே நிற்கின்றன.
கொடும்பாளுர் பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகிறது.கோவிலன் கண்ணகியோடு மதுரைக்கு நடந்து செல்லும் வழியில் கொடும்பை என்ற இடத்தைக் கடந்து போனதாக பாடல் குறிப்பிடுகிறது.ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதியை வேளிர்மன்னர்கள் ஆட்சி செய்ததாக சான்றுகள் கூறுகின்றன. நாயன்மார்களில் ஒருவரான இடங்கழிநாயனார் கொடும்பாளுரைச் சேர்ந்தவரே.
குறுநில மன்னர்களாக அறியப்பட்ட வேளிர் மரபினரைப் பற்றி அதிகமான சரித்திர குறிப்புகள் இல்லை. சோழர்களுடன் மண உறவு கொண்டிருந்தனர். பாண்டியர்களுடன் சண்டையிட்டுள்ளனர் என்பது போன்ற வெளிப்படையான சரித்திரச் சான்றுகளைத் தவிர அவர்களின் நுண்கலைகள் பற்றியோ, வேளிர் மரபின் தனித்துவம் பற்றியே அதிகம் இன்றும் அறியப்படவில்லை.
பூதிஇருக்குவேளிர் என்ற மன்னரால் கட்டப்பட்ட மூவர் கோவில் தனித்துவமான அழகுடையது.இருக்கு வேளிர் மன்னர்கள் பற்றிய கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன. தன்னுடைய இரண்டு மனைவிகளான வரகுணவதி மற்றும் கற்றலைபிராட்டியார் விருப்பத்திற்கு ஏற்ப இந்தக் கோவில்களை உருவாக்கியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
பூதிஇருக்குவேளிர் மன்னர் சுந்தர சோழனின் காலத்தை சேர்ந்தவர் என்று சில வரலாற்று அறிஞர்கள் கணிக்கிறார்கள். சிலர் முதலாம் ஆதித்ய சோழன் காலத்தை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களின் கட்டிடகலை மரபானது சோழர்களின் ஆரம்ப கால கற்றளிகளின் வடிவத்தையே நெருக்கமாக கொண்டிருக்கிறது.
THANKS TO http://www.sramakrishnan.com/?p=381
No comments:
Post a Comment