தமிழ் படித்த புத்தர்

ஒரு பொருள் இன்னொரு பொருளோடு நெருக்கமாக இயையும் போதில் - கல்லோடு கல் உரசுதல் -வெப்பக் கருத்தும் ஒளிக் கருத்தும் தோன்றுகின்றன என்றும் - ‘இலங்குதல்’ என்னும் ஒளி குறித்த தமிழ்ச் சொல் இப்படித்தான் தோன்றிற்று என்றும் மொழி இயலாளர்கள் சொல்கிறார்கள்.

இலங்குதல் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதே ‘இலங்கை’ என்னும் சொல்லாகும்.இச் சொல்லையே சிங்களர்கள் ‘லங்கா’ ஆக்கினார்கள்.



சிங்களவன் இன்று சிங்கள நாடு என்று பெருமையோடு மார்தட்டி உடல் சிலிர்க்கும் - அவன் மண்ணின் பெயர் கூட - சிறீலங்கா - சிங்கள மொழி அல்ல - தமிழேயா கும்.


சிங்கள மொழியில் 50 விழுக்காடு தமிழ்ச் சொற்கள் இருப்பதாக சிங்கள மொழி ஆய்வாளர்களே கூறுகிறார்கள்.சிங்களத்துக்குச் சொல் தந்த தமிழையே சிங்களம் அழிக்கிறது.


கி.மு. 3-ம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட சங்க காலத்தில் தமிழீழத்தில் இருந்து ஈழத்துப் பூதன் தேவனார் என்னும் புலவர் தமிழ்நாடு வந்து தமிழ் பாடினார். இக் காலத்தில் சிங்களப் புலவன் எவனும் உலகில் இல்லை. ஏனெனில், சிங்கள மொழியே அன்று இல்லை.


கி.மு. 6-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தர் தமிழ் படித்தார் என்று ‘லலிதா விஸ்தாரம்’ என்னும் வடமொழி நூல் கூறுகிறது. புத்தர் சிங்களம் படித்தார் என்று எந்தச் செய்தியும் இல்லை. ஏனெனில், புத்தர் காலத்தில் சிங்கள மொழி இல்லவே இல்லை.

No comments: