இனத்திற்கும், மொழிக்கும் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த அந்நிய கலாச்சார படையெடுப்புகளால் ஏற்படவிருக்கும் பெரிதான பாதிப்புகளை எவருமே தொலை நோக்க பார்வையுடன் பார்ப்பதில்லை. ஐரோப்பிய ஆதிக்கத்திற்கு வரவேற்பு அளித்தவர்கள் முதன் முதலில் என்ற கணக்கில் தென்னிந்தியர்கள் தான் அந்த சிறப்பை பெறுகின்றனர்.
வாஸ்கோடகாமா (1498) என்ற போர்த்துகீசியர் முதன் முறையாக ஆப்ரிக்க தென்முனையைச் சுற்றிக்கொண்டு இந்தியாவிற்குள் வந்து புதிய வரலாற்றை உருவாக்கினார். வரவேற்பு அளித்த முதல் இடம் சேரநாட்டு கள்ளிக்கோட்டை. இவரைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக ஒருவர் பின் ஒருவராக உள்ளே வந்தனர். வணிகம், வாணிபம், பண்டமாற்று என்று தொடங்கி மத இன மொழி திணித்தலும் ஒரே சமயத்தில் படிபடியாக நடந்து கொண்டேயிருந்தது.
முதன் முதலில் பைபிள் மொழிபெயர்ப்பு தமிழில். நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கிறது? என்ன செய்வது நம்மவர்களின் தராள மனப்பான்மைக்கு எல்லை ஏதும் இல்லை. ஆமாம் இன்று வரையிலும். பண்பாடு என்ற கோட்டுக்குள் பதவிசாய் வாழும் பதர்கள். அதனால் தான் போர்த்திய பொன்னாடைகளும், வெடித்து சிரித்த புகைப்படமும் நீங்கள் பார்த்த போது எழவு வீட்டில் எவ்வாறு தமிழன் நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு உணர்த்திய காலப்பெட்டகம் அது.
அதனால் தான் எல்லையை கடந்து சென்றவர்கள் அத்தனை பேருமே எல்லையில்லா பேரின்ப வாழ் நிலையை இன்று அடைந்து கொண்டுருந்த போதிலும் நாம் நம்முடைய நிகழ்கால கடமைகளில் மட்டும் கண்ணும் கருத்துமாய் முன்னேறிக்கொண்டுருக்கிறோம்.
கள்ளிக்கோட்டை குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று நம்மவர்கள் அவர்களுக்கு கீழே பணிபுரிவதை மிகப் பெருமையாக கருதினர். மற்ற எவரையும் விட நம்முடைய தமிழர்கள், அவர்களை ரத்தினக்கம்பளம் போட்டு வரவேற்காத குறை தான். சென்னை ஜார்ஜ் கோட்டையை பண்டக சாலையாக பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றம் அடைந்தனர். நம்முடைய முக்கிய புள்ளிகள் அத்தனை பேருமே அவர்களுடன் கலந்து சிறுபுள்ளியாகி சீக்கிரம் கால்புள்ளி கால் இல்லாத புள்ளியாய் மாறிப்போனார்கள்.
ஐரோப்பியர்களின் ஆதிக்கமும் வாணிகத் தொடர்புகளும் ஆதிக்கம் செலுத்திய கால கட்டத்தில் ஒரே ஒரு நாடு மட்டும் உறுதியாய் இருந்தது. ஆமாம் அவர்களை உள்ளே விடக்கூடாது என்று தீர்மானமாய் இருந்தார்கள். அது ஜப்பான். 200 ஆண்டுகளாக அந்நியர் எவரும் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் வந்தவர்களைக்கூட ஓதுக்குப்புற தீவுகளில் தான் வணிகம் செய்ய அனுமதித்தனர். ஆனால் இத்தனையும் மீறி இரண்டு பாதிரிமார்கள் உள்ளே நுழைந்த போது அவர்களை கண்டுபிடித்து உலகறிய நாகசாகியில் கழுவேற்றி கொன்றனர்.
நாகசாகியில் குண்டுமழை பொழிந்த காரணங்களுக்குப்பின்னால் இதுவும் ஒன்று என்று இன்றுவரையிலும் நம்பப்படுகிறது.
கூலியாக பயணப்பட்ட தமிழர்கள் கூட தவறாக தெரியவில்லை. ஆனால் அன்றும் இன்றம் தொலை நோக்கு பார்வையில்லாத காரணத்தால் எத்தனை எத்தனை அவஸ்த்தைகளை பார்த்துக்கொண்டுருக்கிறார்கள்?. படித்துக்கொண்டுருக்கிறோம்?
ஆனால் இன்றும் அன்றும் நம் மக்களைப் போலவே சீனர்களும், யூதர்களும் எல்லா நாடுகளிலும் குடியேறினார்கள். ஆனால் இன்று உலகத்தின் நாட்டமை அமெரிக்காவின் ஆதிக்க வர்க்கம் என்பது மொத்த அங்கு வாழும் யூதர்களின் கையில் தான் உள்ளது. சீனர்களின் சிறப்பை சொல்லத் தேவையில்லை. சிங்கப்பூர், மலேசியா ஆரம்பித்து பல நாடுகள் அவர்களின் கண் அசைவில் தான் உள்ளது. மெஜாரிட்டி மைனாரிட்டு என்று பேச்லெல்லாம் அவர்களின் வாழ்வியலில் எங்குமே இல்லை. இந்தியாவில் தாஜ்மாகால் ஹோட்டலில் தாக்குதலில் டாடாவை விட அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புகளுக்குத் தான் முக்கிய அக்கறை. அது தான் யூதர்கள். அவர்களின் சிறப்பு. அவர்களின் வணிக பலம். மூலதனம். மூளை உள்ளவர்களின் முகவரி அது.

ஆனால் நாம் வேறு ஒரு வகையில் சிறப்பை பெற்றுள்ளோம். பர்மா அகதி, வியட்நாம் அகதி, இலங்கை அகதி. இந்த பட்டியல் எதிர்காலத்தில் இப்போது உள்ள இந்திய அயல்உறவு கொள்கையினால் இன்னமும் நீளும் என்று தோன்றுகிறது?
இதன் விட்டகுறை தொட்ட குறை தான் இன்று வரையிலும் "பாண்டி" (கேரளா), "அரவாடு" (ஆந்திரா), மற்றும் வட இந்திய மார்வாடிகள் நம்மை அழைக்கும் "தீவானாதேசு". ஆனால் நாம் ரொம்ப நல்லவர்கள். பழிப்பவர்களை வளர்ப்பதிலும், ஏமாற்றுபவர்களையும் புகழ்பாடுவதிலும், ஆளுமையில் இருப்பவர்களை உணர்ச்சி வேகத்தில் தேர்ந்து எடுப்பதிலும் நம்மை மிஞ்சுபவர்கள் எந்த உலகில் காணஇயலும்?
வயிற்றுப் பிழைப்புக்காக சென்றவர்களின் கதி தான் இன்று அதோகதி என்றால் பண்டைய தமிழ் வரலாற்றில் வாளெடுத்துச் சென்ற அத்தனை மன்னர்களும் தங்களுடைய வீரத்தை அகில உலகமெங்கும் பறைசாற்றியதோடு அவர்களின் கடமை முடிந்ததாகவே கருதினர். எந்த சீரழிவும் அவர்கள் செய்தவர்கள் இல்லை. நான் தான் சிகாமணி என்று நிரூபிக்கவும் இல்லை.
பொருளாதார சீரழிப்பும் செய்யவில்லை. உலகம் வெறுக்கக்கூடிய கலாச்சார சீழிப்பையும் செய்தவர்களில்லை. ஆனால் இங்கு வந்து இறங்கிய போர்த்துகீசீயரும், பாரசீகரும், பிரெஞ்ச் நாட்டுக்காரரும் முடிந்தவரையிலும் தங்களுடைய தாக்கங்களை எல்லா வகையிலும் எல்லா நிலையிலும் நிலைநாட்ட தவறவில்லை. வாணிகம் முதல் பட்சம். கொள்ளை லாபம் முக்கியம். ஆனால் இதைவிட முக்கியம் மதம் மாற்றுதல். அத்துடன் இருந்தாலும் பராவாயில்லை. இங்கே உள்ள அத்தனை விசயங்களையும் முடக்கவும், முயற்சிகளை தடுக்கவும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகக் கவனமாக செயல்பட்டனர்.

நம்மவர்களின் வரவேற்ற கைகள் இறுதியில் வணங்கியது. ஆமாம் அவர்களைப் பார்த்து? பேசிய மொழியை, வாழ்ந்த வாழ்க்கையை, அடிப்பைட கலாச்சார பெருமைகளை மறந்தனர். ஆமாம் காலம் முழுக்க அவர்களை துதிபாட போதவில்லை என்ற போது எங்கே போய் உள்ளே உள்ள விசயங்களில் கவனம் செலுத்த முடியும்?
உலகத்திற்கே வழிகாட்டியாக இருந்த நம்முடைய சாதனைகள் தான் எத்தனை எத்தனை?
மருத்துவம், கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம், போர்க்கலை, கப்பற்கட்டும் தொழில் நுட்பம் போன்றவற்றை மறைத்தார்களா? மழுங்கிய சிந்தனைகளால் அத்தனையும் மறந்து தொலைத்தார்களா? இல்லை அடுத்தவர் தெரிந்து கொள்ளக்கூடாது என்ற நல் சிந்தனைகளினால் "குரு + மாணவன் " என்ற போர்வைக்குள் ஓளித்து கரையான் அரித்ததைக்கண்டும் காணாமல் இருந்தார்களா?
மொத்தத்தில் காலம் அத்தனையும் விழுங்கி விட்டது.
ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவக சிந்தாமணி தவிர வளையாபதியையும், குண்டலகேசியையும் அழியவிட்டோம். பெரும்பாலான சங்க இலக்கியங்களை தமிழ்த்தாத்தா உ.வெ.சாமிநாதய்யர் கண்டுபிடித்த தரவில்லையென்றால் தமிழ் இலக்கியத்ன் ஒரு பெரிய பரப்பளவுகளையும் இழந்து இருப்போம்.
தமிழ் காவல் தெய்வங்கள், இன காவலர்கள், இன்னும் பல பட்டங்களை சுமந்து வாழ்ந்துகொண்டுருக்கும் நிகழ்கால தலைவர்கள் எவருமே தெளிவான நோக்கில் தமிழை வளர்ப்பதில் கவனம் இல்லாத காரணத்தால் மொரிசீயஸ், யூனியன் பிரதேசங்கள், தென்னாப்ரிக்கா, பீஜீ தீவுகளில் இன்னும் பல நாடுகளில் தமிழர்கள் பரவி வாழும் இடங்களில் தமிழ் மொழி பேச்சு வழக்கில் இருந்து மாறி விட்டது. இன்று கிட்டத்தட்ட வாழ்ந்து கொண்டுருக்கும் நிகழ்கால தலைமுறைகள் வைத்துருக்கும் பெயர் மட்டும் கொண்ட தமிழராக வாழ்ந்து கொண்டுருக்கின்றார்கள்.
தமிழன், தமிழ்மொழி, மொத்த தமிழனத்தில் வாழ்வியல், ஒரு நீண்ட தொடர் ஓட்டம் இது.
மூலத்தில் இருந்து இன்று முகவரி இழந்து முள் கம்பிகளுக்குப் பின்னால் வாழ்ந்து கொண்டுருப்பது வரையிலும் உள்ள நிகழ்வுகள் குறித்து ஒரு சிந்தனையோட்டம்.thanks to http://deviyar-illam.blogspot.com/2009/10/blog-post_26.html
No comments:
Post a Comment