பழைய இந்திய பொருளியல் அமைப்பு பற்றியும் , நிதி நிர்வாகம் பற்றியும் நீங்கள் வாசிகக் ஆரம்பித்தால் மலைமலையாக இருக்கின்றன நூல்கள்.
இங்கிருந்த கிராமப்பொருளியல் அமைப்பு பல்வேறு படையெடுப்புகளைச் சந்தித்தும்கூட சிதையாமல் இருந்தது என்பது வரலாறு.
அவற்றில் பஞ்சம்தாங்கும் சமூகஅமைப்புகள் இருந்தன. பிரிட்டிஷாரின் ஒருங்கிணைந்த தொடர்ச்சியான சுரண்டல் மூலமே கிராமப்பொருளியல் அழிந்தது.
பெரும் பஞ்சங்கள் வந்தன. அந்தப் பஞ்சங்களைப் பயன்படுத்தி இந்திய மக்களை அடிமைகளாக உலகமெங்கும் கொண்டுசென்று தோட்டத்தொழிலை உருவாக்கினர் பிரிட்டிஷார்.
இங்கிருந்தது மேலை நிலப்பிரபுத்துவம் அல்ல. அந்த நிலப்பிரபுத்துவம் என்பது விவசாயிகளை முழுமையாக அடிமைகளாக வைத்திருந்து நிலப்பிரபுக்கள் மொத்த உபரியையும் சுரண்டி கொழுத்த அமைப்பு.
இங்கிருந்தது சுதந்திர விவசாயிகளினாலான கிராம சமூகங்களின் கூட்டமைப்பு. இன்றும்கூட அந்த அமைப்புகள் நீடிக்கின்றன -சினிமாவில்கூட கேட்கிறோமே பதினெட்டுபட்டி என்று.
அது ஐரோப்பிய நிலப்பிரபுத்துவத்தை விட பல மடங்கு பண்பட்டது.
சீரான உபரிசேமிப்பு முறை கொண்டது. ஆகவே மேலான பண்பாட்டை உருவாக்கி நிலைநிறுத்தியது.
நாமே கண்கூடாக பார்க்கக் கூடிய விஷயம், ஒரு சராசரி இந்தியக் கிராமம் என்பது வெறும் அடிமைகளின் தேங்கிப்போன முகாம் அல்ல. அதில் கல்விக்கு, கலைகளுக்கு, மதத்துக்கு, பொதுக்கொண்டாட்டங்களுக்கு எல்லாம் இடமிருந்தது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கிராம அமைப்பு நொறுங்கும் வரை இலக்கியம், கலைகள், மருத்துவம், கைத்தொழில்கள், கோயில்சடங்குகள் அனைத்தையுமே கிராமசமூகம் மிக வெற்றிகரமாகப் பேணி வந்தது. இன்று பல்லாயிரம் ஆவணங்கள் மூலம் இதெல்லாம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
thanks to http://www.jeyamohan.in/?p=8705

No comments:
Post a Comment