கலப்பு திருமணம் - சில பார்வைகள்

கள்ளபிரான்November 6, 2009 at 2:19 pm
4
ஒன்றும் புதுமையில்லை. I am not shocked. இது வெறும் சாதிப்பிரச்னையில்லை.ஆணாதிக்கமும் சேர்ந்த ஒன்று. கள்ளர் ஜாதியினரோ, மற்றும் பலஜாதியனர், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும், கருதுவது என்னவென்றால், தங்கள் ஜாதி தங்களுக்கு எப்படி வந்ததோ அப்படியே வரும் தலைமுறைகளுக்கும் போய் சேரவேண்டும என்பதுதான். எப்படி சேர்ப்பது? அதற்குத்தான் இருக்கிறது கருப்பை. அது யாருக்கும் சொந்தம்? ஜாதிக்குத்தான் சொந்தம். அவளுக்கு அல்ல. கருக்கலைப்பு
செய்யலாம். ஆனால் கருவைச் சுமந்தால் அது ஜாதிக்கருவாகத்தான் இருக்கவேண்டும். இல்லையெனில் ஜாதித் தொடர் அறுந்துவிடும். எனவே, இங்கு பெண் கொலைசெய்யப்பட்டாள்: தனக்குச் சொந்தமில்லா ஒன்றை சொந்தம் கொண்டாடுவது தவறு. ஊரார் சொத்துக்கு ஆசைப்படலாமா? எல்லா ஜாதியும் இப்படி நினைப்பது,

மக்களின் குழுமனப்பான்மையே. சிறுசிறு குழுக்களாக இருந்தே பெரிய குழுவில் அடங்கமுடியும். இல்லை…இல்லை…

நம் சிறு குழு மனப்பான்மையை அழித்துவிட்டு பெருங்குழுவில் காணாமல் போவோம் என்றால், நீங்கள் மட்டும் தனித்துவிடப்படுவீர்.

Musical chair மாதிரி இருக்கைகள் மற்றவருக்கு; உமக்கல்ல என்றாகி விடும். பெருங்குழு என்பது ஒரு தற்செயலான இலக்குகளுக்கு மட்டும்தான்.

சிறு குழு என்றும் காலம்காலமான ஆயிரங்காலத்துப் பயிர். தமிழ்ப்பார்ப்பனர்களை எடுத்துக்கொள்வோம். பார்ப்பன எதிர்ப்பு அலையோ அல்லது தங்களின் பேராசையோ தெரியவில்லை: அவர்கள் தங்கள் இனத்தையே அழித்துவருகிறார்கள். யாரையும் அவர்கள் பெண் காதலிக்கலாம். படித்தவனா, பண்பாளனா? தன் பெண் நன்றாக் இருப்பாலா? என்ற கேள்விகளுக்கு ஓரளவு positiveவான விடைகள் கிடைப்பின், அவர்கள் ok சொல்லிவிடுகிறார்கள் – ஒரு சிலர் மட்டும் ‘சாத்திரம், சம்பிரதாயம்’ எனத்த்டுத்தாலும், பெண்ணை விலக்கிவிடுவார்களே ஒழிய, கொலை போன்ற செயல்களில் இறங்கமாட்டார்கள். விளைவென்ன ? தமிழ்ப்பார்பனர் என்ற ஜாதி மெல்லமெல்ல அழிந்து வருகிறது. மற்றவரும் அழிய வேண்டுமா? அதுவா உங்கள் நோக்கமும் ஆசையும்?

2/************
கள்ளபிரான்November 6, 2009 at 5:51 pm

பார்சிக்கள் பம்பாயில் இன்னும் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுள் மொத்தமே 25 குடும்பங்களே பார்சிக்கள் என அழைக்கப்படமுடியும். மற்றவர்களெல்லாம், பிற வகுப்பில் மணம் செய்து மாறிப்போனார்கள்.
இதைப்போலவே, பார்ப்பனரெல்லாம் தங்கள் பெண்களைப் பிறவகுப்பார்களுக்குக் கொடுத்துவிட்டால், யாராப்பார்ப்பனர் என அழைப்பது? வாழ்வார்கள் நீங்கள் சொன்னதுபோல. அழிவதில்லை. ஆனால், பார்ப்பனர் என்ற ஜாதி காணாமல் போய்விடும்.

3/*****************
வினவுNovember 6, 2009 at 2:50 pm
3.1
ராசாத்தி மற்றும் நண்பர்ளுக்கு,
தமிழகத்தின் ஆதிக்கசாதிகளில் முன்னணி வகிக்கும் கள்ளர் சாதியில் உள்ள ஆதிக்க சக்திகள் சசிகலா கும்பல்மூலம் அரசியல் ரீதியாகவும், கொல்லப்பட்ட முட்டைரவி, தி.மு.கவின் கலைவாணன் மூலம் தாதாயிசத்திலும் ஆதிக்கம் செய்கிறது. மற்ற சாதிகளை விட தலித்துக்களை குறிப்பாக காதல் மணம் செய்வோரை படுகொலை செய்யுமளவு இங்கு சாதிவெறி கோலேச்சுகிறது. அதைக் குறிப்பிடத்தான்

//தலித் மக்களை புழு பூச்சிகளாக பார்க்கும் மனோபாவம் இந்த சாதியின் இரத்தித்திலேயே கலந்திருக்கும் என்று கூட சொல்லலாம்//

என்று எழுதியிருந்தோம். ஆனால் அப்படி எழுதியது தவறு என்பதை சுயவிமரிசனம் செய்து கொள்கிறோம். ஏனெனில் அந்த வரியின் பொருள் பிறப்பிலேயே சாதிவெறி என்ற பார்ப்பனியத்தின் பொருளை ஏந்தி வருகிறது. கள்ளர் சாதியிலும் ஏதுமற்ற உழைக்கும் மக்களும் இருக்கிறார்கள். சாதிவெறிக்கு அந்த சமூகம் பலியாகி இருந்தாலும் அதை மேற்கண்ட வரியில் இடித்துரைப்பது தவறு. தவறினைச் சுட்டிக்காட்டியமைக்கு தோழர் ராசாத்திக்கு நன்றி. இனி இத்தவறுகள் நிகழாத வண்ணம் கவனமாக இருப்போம்

THANKS TO http://www.vinavu.com/2009/11/06/caste-killing/

No comments: