காதலும் திருமணமும் -சங்கமும் தொல்காப்பியமும்

BREAK UP --ம்-------------- காதலும்
----------------------------------------------------------------------
காதலும் திருமணமும் -சங்கமும் தொல்காப்பியமும்
-------------------------------------------------------------------
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
பாடலைப் பாடியவர்- செம்புலப் பெயல்நீரார்
குறுந்தொகை -40

இந்த பாடல் என்ன கருத்து சொல்கிறது
"என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்?
என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்?
எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்?
செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன.
(அதனால் நெஞ்சம் ஒன்று கலந்த நம் அன்பும் என்றும் பிரியாது. மண்ணோடு கலந்த நீரை எப்படி பிரிக்கமுடியாதோ, அவ்வாறே நம்மையும் பிரிக்க முடியாது.)
-
இது சங்க இலக்கியங்களில்
அகத்திணை பற்றியது
மன உணர்வுகள் பற்றியது
எல்லா காலங்களிலும் விதிமுறைக்கு
அப்பாற்பட்ட உணர்வுகளை சொல்கிறது/
இது மனித உயிர்க்கு மட்டுமல்லாது
ஆடு, மாடு போன்ற விலங்கினம் அனைத்துக்கும் ,
எல்லா உயிர்க்கும்
பொருந்தும் .உணர்வாகும்
.
ஆனால்
தமிழகம்
பண்பாடு மிக்கது
செம்மை செய்யப்பட்ட வாழ்வியலை உடையது
,
மொழிக்கு மட்டுமல்லாது
வாழ்வின் எல்லா பகுதிக்கும்
இலக்கணம் வகுத்தது
தொல்காப்பியம்
என்ன சொல்கிறது
'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,
ஐயர் யாத்தனர் கரணம்' என்ப. 143 -கற்பியல் -தொல்காப்பியமும்
என்று சூத்திரம் அமைத்தது .
.
தலைவன் தலைவியரிடையே
பொய்யும,வழுவும் தோன்றிய பின்னர்
ஆன்றோரும், சான்றோரும்
சடங்கு முறைகளை வகுத்து,
திருமண வரையறைகளை அமைத்தனர்.
இதை சுருக்கமாக பார்த்தோமானால் :
ஆதியில் மனிதகுலத்தில் திருமணம் என்ற சடங்கு இல்லாதிருந்தது ..
அன்பு கொண்டவர்கள் இணைந்து வாழ்ந்தனர்.
சமூக அமைப்பு பெரிதாக இலலை,
காதலோ காம நுகர்வோ குடும்பத்தின் இலட்சியமெனில்
அதை குடும்பம் என்ற அமைப்பே இல்லாமலும் அடைய முடியும்.
ஆனால் நம் ஆன்றோர்களும் சான்றோர்களும்
அவ்வாறு சொல்ல வில்லை.
இல்வாழ்க்கை எனும் அதிகாரத்தில் வள்ளுவர்
குடும்பம் என்பதன்
சமூக தனி மனித தேவை,என்ன.
நோக்கம் என்ன.
கடமைகள் என்ன
என்று ஐயமின்றி எடுத்தியம்பியிருக்கிறார்
இன்றைய சாதி என்பது
நேற்று ஒரே குடும்பமாக இருந்து
பல ஆயிரம் ஆண்டுகளாக கிளைத்து
இன்று கோடிக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட
ஒரு பெருங்குடும்பமே சாதி.
.
சாதியில் திருமணத்திற்க்கு என்று சில வரைமுறைகள் உண்டு.
.திருமணத்துக்கு பின் காதலித்ததால்
ஒருவருக்கு ஒருவர் ..(கணவன் , மனைவி )
திருமணத்துக்கு முன் காதலிக்கும் பொது
அதற்கு முன் எத்தனை பேரோ.....?
BREAKUP ---NEXT--------
BREAKUP ---NEXT--------
BREAKUP ---NEXT--------
BREAKUP ---NEXT--------
BREAKUP ---NEXT--------
BREAKUP ---NEXT-------- ????
இது அறிவியல் பூர்வமான கணக்கியல் முறையே ..(நிகழ்தகவு )
காதல் வெற்றியை விட,வாழ்க்கையில் வெற்றி பெறுவதே முக்கியமானது.
எனவேதான்,நமது முன்னோர்கள்
காதலுக்கு முக்கியத்துவம் தராமல்,
வாழ்க்கையில் வெற்றி தரக் கூடிய வகையில்
திருமணங்களுக்கு ஏற்பாடு செய்தனர்.

சங்க பாடல் கூறும் அன்பு ஒன்றிய "செம்புல பெயல் நீர்" என்பது மணமக்களை குறிப்பதாக இன்றைய கால கட்டத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் .
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,
ஐயர் யாத்தனர் கரணம்' என்ப.
என்ற தொல்காப்பியத்தின் கருத்து இன்றைய நடைமுறையில் உண்மை என்பதை காணலாம்.
முறையற்ற மனிதர்கள், பொய்யர்கள்,தரமற்ற மனிதர்களால் குடும்பங்கள் மற்றும் ஆண் , பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவே பெரியோர் திருமணம் நடைமுறையை கொண்டுவந்ததற்கு முக்கிய காரணம்.
இனக்குழு சமூகம் எனப்படும் பழங்குடி சமூககத்தை சார்ந்த
தொன்மையான குலத்தை சேர்ந்த மக்களும்
உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ வீரமானவரோ தந்து சமூகம் தாண்டி
பெண் கொடுக்கவோ எடுக்கவோ விரும்புவதில்லை.
காதலை இன்றைய தமிழ் சமூக சூழலில்
ஆதரிப்பது பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைத்து
குழந்தைகளை அனாதைகளாக்கும் ஈன செயலாக மாறிவிட்டது .
பண்பாடுமிக்க தமிழகத்தில்
தொட்டில் குழந்தை திட்டம் கொண்டுவரும் அளவுக்கு
பண்பாட்டை சீர்குலைத்து உள்ளது
அந்த ஈன செயலை புத்தியுள்ளோர் ஆதரிக்க
கூடாது. இன்றைய தமிழ் சமூகத்தில் 99 சத காதல்
திருமணங்கள் படு தோல்வியில் தான் முடியும்.
காரணம் என்னவெனில்
முறையற்ற வாழ்வை முறையாக்க
தமிழகம் முயன்று வெற்றிகொண்டது .
கீழ் மக்கள் எல்லா காலத்திலும்
இருந்து வருகின்றனர்.
ஆனால்
இன்று கீழ்மக்களின் வாழ்க்கை சிறப்பானதாக
மக்கள் மனங்களில் செலுத்தப்படுகிறது
கலை , இலக்கியங்கள்
வாழ்வை பண்படுத்த பயன்படவேண்டும்
ஆனால் இன்று
வாழ்வை சீரழிக்க பயன்படுகிறது
..
மன்னவனும் நீயோ ?
வளநாடும் உன்தோ?
என்று கேட்ட தமிழறிஞர்கள்
இன்று
தவறுகளை சுட்டிக்காட்ட
முயல்வதில்லை
-
என்ன காரணம்
என அனைவருக்குக்கும்
தெரியும்
------------------------------------------------------
கட்டுரை எழுத
கருத்துக்களை தந்து
உதவி செய்த
முகநூல் நண்பர்களுக்கு நன்றி

No comments: