மேற்கு தொடர்ச்சி மலை

வெயிலணன் கந்தசாமி
6 அக்டோபர், AM 10:01 ·
மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம்
இந்த படத்தில் அனைவராலும் உற்று நோக்கப்பட்ட உரக்கடைகாரார் குறித்த பதிவு இது.
பஞ்சம் பிழைக்க வந்தவன், உரத்தை விற்று நிலத்தை கையகபடுத்தும் கதாபாத்திரம்.
"நாளைக்கு பத்திரம் எழுத போகனும் இருக்கதிலேயே நல்ல சேலையா கட்டீட்டு வா." ஒரு காட்சியில், நிலத்தை பத்திர பதிவு செய்வது குறித்து தன் தாயாரிடம் கதாநாயகன் சொல்லுவார்.
தன் திருமணத்துக்கு உடுத்திய ஒரு பட்டுச் சேலையை கட்டி வருவார் என்று எதிர்பார்த்தால் ஒரு சாதாரண சேலையை கட்டி வருவார். நிலம் கிடைக்காமல் போகும்.
***
மீண்டும் வம்பாடு பட்டு வேறொரு நிலத்தை வாங்கி விடுவார். அந்த நிலத்தில் ஈசான மூலையில் குடும்பத்தோடு சாமி கும்பிடுவார்கள்.
அவர்களுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத, அந்த ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்த ஒருவர் வந்து, என்கிட்ட சொல்லாம விட்டுட்டீங்களே என்று சொல்லி சாமி கும்பிடுவார். நிலத்துக்கான உரத்தை என்னிடம் வாங்கிக்கோங்க என்று கூறுவார்.
அதன் பின்னர், எப்படி அந்த நிலமானது கதாநாயகனின் குடும்பத்தை விட்டு உரக்கடை காரனின் கைக்குச் செல்கிறது என்று நன்றாக காட்டியுள்ளார்கள். இதேபோல பலரிடமிருந்து பறித்த நிலங்களை வைத்து ஒரு real estate நபராக உருவாகிறார் என்று ஒரு காட்சியில் காட்டியிருப்பார்கள்.
*************************************************************************************
1) சாமி எல்லாருக்கும் பொது.
அதனால்
யார் கொடுத்தாலும் மகமை / வரியை வாங்கிக்கோங்க என்றும்
இன்ன பிற வழிகளிலும் கட்டாயப்படுத்துபவர்களை துவக்கத்திலேயே வெளியேற்ற வேண்டும்.
2) விவசாயத்துக்கு உரம் விற்பவர்,
கடன் கொடுப்பவர்,
விளை பொருட்களை விற்று தரும் இடைத்தரகர், நகைக்கு அதிக கடன் தருகிறேன் என்று,
எந்த வகையில்
அயலார் வந்தாலும் அவர்களை புறக்கணிக்க வேண்டும்.

No comments: