பசும்பொன் ---- கம்யூனிஸமும்

Senthilram Palani
·
எனக்கு 
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற தலைவரைப் பிடிக்கும், 
நான் தலைவராக ஏற்றுக்கொள்ளும் சிலரில் 
முதன்மையானவர் தேவர் அவர்கள்.

அதற்காக 
அந்த சாதியினரில் சிலர் 
அவர் பெயரைச் சொல்லி செய்யும் 
அக்கிரமங்களை இரசிக்க முடிவதில்லை, 
உண்மையில் சாதீரீதியான பதிவுதான் இது.


தேவர் சமுதாயம் என்பது 
ஐந்து சாதிகளை உள்ளடக்கியதுதான்,

 இவர்கள் சைவத்தில் முக்கிய பங்கினை பெறுபவர்கள், 
தென்பகுதியில் முக்கிய பங்கினைச் செய்பவர்கள்.
 சொல்லப்போனால் 
நாம் விரும்பியோ விரும்பாமலோ 
இவர்களிடம் ஏற்படும் ஒற்றுமை மட்டுமே 
தமிழக இந்துக்களை ஓரணியில் கொண்டுவரச்செய்யும் வலிமையுடையது.

ஆனால் 
இவர்களோ மூலைக்கொருபவராக பிரிந்து, 
ஆளுக்கொரு தலைவர்களை பின்தொடர்ந்துகொண்டுள்ளார்கள், 
அந்த தலைவர்களோ 
சாதியப் பின்புலத்தில்
 பல பலன்களைப் பெற்றுக்கொண்டு, 
மக்களை கண்டுகொள்வதில்லை,

இதனால் 
இந்த மக்கள் 
நடிகர் கார்த்திக்கையெல்லாம் 
தலைவராக ஏற்றுக்கொள்ளும் நிலையிலுள்ளனர், 
அதனை விடக்கொடுமை 
கருணாஸையெல்லாம் தலைவராக கொண்டாடும் 
சிலரும் இதில் உள்ளனர்.

பசும்பொன் ஐயா இருந்த இடத்தில் 
இது போன்ற நடிகர்களை வைத்துப் பார்ப்பதே அசிங்கமாகத்தான் உள்ளது, 
என்று

 இவர்களில் மீண்டும் ஒரு தலைவன் உருவாகி, 
இவர்களை ஒன்றிணைக்கிறானோ அன்றுதான், 
இந்துத்துவ ஒற்றுமையும் சாத்தியமாகும். 

அன்றுதான் 
திராவிடப்பதர்கள் தமிழகத்தினை விட்டு விரட்டியடிக்கப்படும், 

அதற்காகவே 
இந்த திராவிடப் பதர்கள், 
முக்குலத்தோரை 
ஒரு தலைமையின் கீழ் ஒன்றுசேர விடமாட்டார்கள்.

பத்தாக்குறைக்கு 
கம்யூனிஸமும் 
இவர்களை ஏமாற்ற 
பசும்பொன் ஐயாவை கம்யூனிஸ்ட் என்று ஏமாற்றுவார்கள். 

ஆனால் 
உண்மையில் நேதாஜி 
உலக கம்யூனிஸ்ட்டுகளின் உதவியினை நாடிச்சென்றபொழுது, 
இங்கிருந்த கம்யூனிஸ்ட்டுகள் 
நேதாஜியை ஆதரிக்காதீர்கள் 
என கடிதம் எழுதியவர்கள்தானே?

 பின்னர் எப்படி பசும்பொன் ஐயா கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியும், 
பசும்பொன் ஐயா முன்நிறுத்தியதே 
தேசீயமும் தெய்வீகமும் இரு கண்கள் என்னும் கொள்கையை, 
ஆனால் 
கம்யூனிஸ்ட்டுகளுக்கோ தேசீயம் என்னும் வார்த்தையும், 
தெய்வீகம் என்னும் வார்த்தையும் 
ஆகாத வார்த்தைகளாயிற்றே, 

பின்னர் எப்படி 
பசும்பொன் ஐயாவினை இவர்கள் கொண்டாடுவர்?


இப்படிப்பட்ட கயவர்களை முறியடிக்க, 
முதலில் தேவர் சமுதாயத்திற்கு 
ஒரு நல்ல தலைவன் அமைந்திட வேண்டும், 

அவன் நீதி, நேர்மை, நியாயத்தினையும் 
பின்பற்றுபவனாக இருத்தல் வேண்டும்,
 வெளிப்படையாகக் கூறினால்

 மீண்டும் ஒரு பசும்பொன் ஐயா பிறந்துவரவேண்டும். 
இது நிகழ்ந்தால்தான் 
இந்து ஒற்றுமை என்பதே சாத்தியப்படும்.

ஏற்கனவே 
கடைக்கோடி தென்பகுதியில் 
நாடார்கள் தணுலிங்க நாடார் என்னும் பீஷ்மரால் ஒன்றிணைக்கப்பட்டு 
ஓரணியாக நிற்கக் கற்றுக்கொண்டு, 
இப்பொழுது, நாடார்கள் ஒற்றுமை (இந்துத்துவத்தினை முன்னெடுத்து) மெல்ல ஏற்படத்துவங்கியுள்ளது.
இது தேவர் சமுதயாத்திலும் ஏற்பட்டால்தான், நமது மண்ணின் மான்புகள் காக்கப்படும்

No comments: