காட்டுத்தீ எதனால் ஏற்படுகிறது?

காட்டுத்தீ எதனால் ஏற்படுகிறது?
இப்படியொரு கேள்வியைக் கேட்டால்
இதற்குப் பலவிதமான பதில்களை
மனிதர்கள் வைத்திருப்பார்கள்.
அவைகளில் பல பொய்யான பதில்கள்.
-
வானில் மின்னல் மின்னும்போது ஏற்படும் தீப்பொறியால் காட்டில் காய்ந்த மூங்கில் தீப்பற்றி அதனால் காட்டுத்தீ ஏற்படுகிறது என்று சிலர் கூறுவார்கள்.
காட்டில் மின்னலைத் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கிவிடும். ஆகவே ‘மின்னலால்’ ஏற்படும் காட்டுத்தீ பரவ வாய்ப்பில்லை.
-
அடுத்ததாக
காய்ந்த மூங்கில் குச்சிகள்
ஒன்றுடன் ஒன்று உரசி காட்டுத்தீ ஏற்படும்
என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது.
இதுவும் பொய். காட்டில் மூங்கில் உரசி தீப்பிடிக்க வாய்ப்பில்லை.
-
அடுத்தபடியாக
மான், காட்டுமாடு போன்றவற்றின் கால்குளம்புகள் பாறையில் உரசி தீப்பொறி(?) ஏற்பட்டு காட்டில் தீப்பிடிப்பதாக சிலர் நம்புகிறார்கள்.
இதுவும் தவறு.
இதுபோல தீப்பிடிப்பதற்கு வாய்ப்பே இல்லை.
-
-
காட்டில் தீப்பிடிக்க
முழுக்க முழுக்க மனிதர்களே காரணம்.
தங்களது தவறை மறைக்கத்தான்
மனிதர்கள்
இவைபோன்ற பொய்க்காரணங்களை
இட்டுக்கட்டி பரப்புகிறார்கள்.
-
-
காட்டில் தேன் எடுப்பவர்களால்
காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புண்டு.
மான் கொம்பு தேடுபவர்கள்,
கற்பாசி, மூலிகைகளைச் சேகரிப்பவர்கள்
புதர்கள், இலைதழைகள், புற்கள் இடைஞ்சலாக இருந்து பார்வையை மறைப்பதால்
அவற்றை அழிக்கும் நோக்கில்
காட்டில் தீப்பற்றச் செய்கிறார்கள்.
காட்டில்
உடும்பு,
கூரான் (சருகுமான்)
போன்றவற்றை பிடிப்பவர்கள்
அவை பாறை இடுக்குகளில் ஒளிந்து கொண்டால் அவற்றை வெளியே வரச் செய்யும் நோக்கில் முன்யோசனையின்றி தீவைப்பதும் உண்டு.
-
-
காட்டில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள்
புதிதாக புல் துளிர்க்க வேண்டும் என்பதற்காக காட்டுக்குத் தீ வைப்பதுண்டு.
-
விளையாட்டுக்காக,
வேடிக்கைக்காக,
பழிவாங்கும் நோக்கத்தில்(?) கூட
காட்டுக்குத் தீவைப்பவர்கள் இருக்கிறார்கள்.
-
-
காட்டில் மூங்கில் பூத்து அழியும்போது
காட்டுத்தீ அடிக்கடி ஏற்படும் என்று
சிலர் கூறுவார்கள்.
இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
-
காய்ந்த மூங்கிலால்தான் காட்டுத்தீ ஏற்படுகிறது என்பதற்கு எந்த சான்றும் இல்லை.
-
கோடைகாலம் உச்சத்தில் இருக்கும்போது
காட்டில் காய்ந்த மூங்கில்கள் மட்டுமில்லை,
எது வேண்டுமானாலும் தீப்பற்றிக் கொள்ளும்.
தவிர
மூங்கில் இல்லாத காடுகளில் கூட
காட்டுத்தீ ஏற்படுகிறது.
-
ஆகவே,
காட்டுத்தீ ஏற்படுவதற்கு
மூங்கிலை மட்டுமே
முழு குற்றவாளியாக நாம் கருத முடியாது.
-
காட்டில் காய்ந்த மூங்கில்களை அகற்றினால் காட்டுத்தீயைத் தவிர்க்கலாம் என்பது சிலரது கருத்து. ஆனால் இது தவறான கருத்து.
-
காய்ந்துபோன மூங்கில்கள் காட்டின் செழுமைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயன்படுகின்றன.
யானைகள்,
காட்டுமாடுகளுக்கு
மூங்கில் கழை சத்துள்ள உணவு.
காய்ந்த மூங்கில்கள்
மயில், காட்டுக்கோழி போன்ற
பறவைகளுக்குப்
பாதுகாப்புக் கூண்டுகளாக இருக்கின்றன.
-
-
மூங்கில் புதர்களுக்கு நடுவில்தான்
இந்தப் பறவைகள் முட்டையிட்டு
இனத்தைப் பெருக்குகின்றன.
-
காட்டில் புதிதாக முளைக்கும்
இளம் மூங்கில் குருத்துகளுக்கு,
காய்ந்த மூங்கில்தான் பாதுகாப்பரண்.
-
இல்லாவிட்டால்
மேயும் விலங்குகள்
மூங்கில் குருத்துகளைத் தின்று அழித்துவிடும்.
தவிர,
காய்ந்த மூங்கில்கள்
மண்ணோடு மண்ணாக மக்கி,
இளம்மூங்கில்களுக்கு உரமாக மாறுகின்றன.
-
ஆகவே, அவற்றை அகற்றுவது சரியல்ல.
-
மண்வளத்தைக் காக்கவும்,
மண்சரிவைத் தடுக்கவும்
மூங்கில்கள் பெரிதும் பயன்படுகின்றன.
காய்ந்த மூங்கில்களை அகற்றினால்
காடு திறந்து கொள்ளும்.
-
மரம் வெட்டுபவர்கள்,
வேட்டையாடுபவர்களுக்கு
இது வாய்ப்பாக அமையும்.
-
அட்டை, கொசு போன்றவற்றின் தொல்லை அவர்களுக்குக் குறையும்.
-
“காய்ந்த மூங்கில்களால் காட்டுத்தீ ஏற்படும்”
என்றும்,
“அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்”
என்றும்
அடம்பிடிப்பவர்கள் இவர்கள்தான்.
………
(பதிவில் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்)
Mohan Reuban
13 மணி நேரம்

No comments: