பக்தி இலக்கியங்களில் கறுப்பு

பக்தி இலக்கியங்களில்
கறுப்பு
என்பது அழகின் நிறமாக
பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.
திருமாலை ஆண்டாள்
" கண்ணன் என்னும் கருந்தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேன் "
என்கிறார்.
ராமனின் கரிய உடம்பில் இருந்து
ஒளி கிளர்ந்தது என்று சொல்கிறார் கம்பர்.
(இந்து மதத்தின் முக்கிய கடவுளர்களான சிவனும் விஷ்ணுவும் கருநீலம் என்ற கரிய நிறமுடைய அழகர்களே )
கி.பி. 14 ஆம்
நூற்றாண்டின் தொடக்கம் முதலாக
தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை
கையில் வைத்திருந்த
அனைத்து ஆட்சியாளர்களும்
தமிழர்களின் சராசரி நிறத்தில் இருந்து
வேறுபட்ட சிவந்த நிறமுடையவர்கள்.
அவர்களால் ஆதரிக்கப்பட்ட
வட நாட்டில் இருந்து வந்த
இஸ்லாமிய ஞானிகள் ,
ஐரோப்பிய பாதிரியார்கள் ,
பிராமணர்கள்
ஆகியோர் சிவந்த நிறமுடையவர்கள்.
அரசியல் அதிகாரமும்,
ஆன்மீக அதிகாரமும்
சிவந்த நிறமுடையவர்கள் கையில்
இருந்ததால்
இந்த நிறம் மேட்டிமையின் ( கவுரவம் ) சின்னமாக, , அதிகாரம்,
அழகு நிறைந்ததாக கருதப்பட்டது.
- பண்பாட்டு அசைவுகள் ( தொ.பரமசிவன் )
----Thanks To Nagappan Sathappan

No comments: