மதுரைச் சுல்தான்

துக்ளக்
மதுரைச் சுல்தான்களின் ஆட்சிபற்றி மதுரைத் தல வரலாறு கூறுவதாவது :
"சாலிவாகன சகாப்தம் 1246ல் கொல்லமாண்டு 500 (கி. பி 1324)
ருத்ரோத் காரி வருஷம் ஆனிமாதம் வடக்கே இருந்து வந்த
ஆதிசுல்தான் மலுக்கு நேமி என்பவனும்
மதுரை வந்து வாளால் விழித்துறங்கும் பாண்டியன் என்ற
பராக்கிரம பாண்டிய தேவரைச் செயித்து
பிடித்துக் கட்டிக் கொண்டு டில்லியில் அனுப்பிப் போட்டு
ராச்சியத்தை கட்டிக் கொண்டான்.
” ‘மலுக்கு’ என்ற பெயரொற்றுமையைக் கண்டு
இவனே மாலிக் காபூர் என்று ஒரு சாரார் கருதுகிருர்கள்.
மாலிக்காபூரின் படை யெடுப்புக் காலத்தை
முஸ்லிம் ஆசிரியர்கள் 13:09, 1321 என்று வரையறுத்துக் கூறுகிருர்கள்.
இதனையே தென்னிந்திய வரலாற்று
ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
அவன் படையெடுப்புக் காலத்தில்
வீரபாண்டியனும், சுந்தர பாண்டியனும்
தாயப் போரில் ஈடுப்பட்டிருந்தனர்.
விக்ரம பாண்டியன் மாலிக்காபூரை முறி யடித்து விரட்டினன்.
ஆனல் மதுரையை முஸ்லீம் சுல்தான்கள் கைப்பற்றிக் கொண்ட காலம்
1321 என்பது தலவரலாற்றுச் செய்தியால் தெரிய வருகிறது.
அது மாலிக்காபூரிள் படை யெடுப்புக்கு
13 ஆண்டுகளுக்குப் பின்னர் என்றே படுகிறது.
மாலிக்காபூரின் படையெடுப்பு அல்லாவுதீன் கில்ஜி
டில்லியை ஆண்ட காலத்தில் நிகழ்ந்தது.
1324ல் கில்ஜி வம்சம் அழிந்து,
துக்ளக் வம்சம் ஆளத் தொடங்கிவிட்டது.
எனவே முகமது பின்துக்ளக் தட்சிண ராஜ்யங்களை அடக்கி
டில்லி ஆட்சியின் கீழ் கொணர்வதற்காக அனுப்பிய
‘மாலிக்ஸ்ாதா” என்ற புகழ் பெற்ற தளகர்த்தனை அனுப்பி வைத்தான்.
இவன்தான் மலுக்கு நேமி என்று
மதுரைத் தல வரலாறு குறுப்பிடும்
ஆதிசுல்தானவான் அவன்தான் மதுரைச் சுல்தானிய ஆட்சியை நிறுவியவன்.
இவ் வாட்சி கி. பி. 1324 முதல் 1372 வரை நிலவி இருந்தது.
ஐவர் ராசாக்கள் கதை நூலிலிருந்து ..

No comments: