அரிகண்டம்

போர்குடிகளிடம் ஒரு குணம் உண்டு
அஞ்சாமையல்ல அதை தாண்டி
தன் இன்னுயிரை தத்தம் செய்தல்

அரிகண்டம் - என்பது தொண்டையை அரிந்து பலி கொடுத்தல்
தங்கள் கழுத்தை தாங்களே அறுத்து தெய்வத்துக்கு பலி கொடுத்தல்
அரிகண்டம் எனப்படுகிறது.

போர்குடிகளான முக்குலத்தோர் தங்கள்
தாய் தெய்வமான கொற்றவைக்கு இது போல பலியாதல்
வரலாற்று நெடுகிலும் பதியப்பட்டுள்ளது .
அவளுடைய கொப்பு கிளைகள்
அவளிடமே சென்றடைகிறார்கள்

குன்றாண்டார் கோவிலில் இருக்கும் அரிகண்ட சிற்பம் பற்றி சியாம் சுந்தர் சம்பட்டியார் பதிவை படிப்போம்

குண்ணன்டார் கோயில் அரிகண்டம் நடுகல்:-
-+++++++++++++++++++++++++++++++++++++++

புதுக்கோட்டை மாவட்டம்
குண்ணன்டார் கோயில் எனும் ஊரில்
கிபி 8 ஆம் நூற்றாண்டில்
இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்ட குடைவரை கோயில் உள்ளது.

இக்கோயிலின் வலது புறம் உள்ள
நூற்றுக்கால் மண்டபத்தில்
ஒரு அரிகண்டம் நடுகல் உள்ளது.

''வீரர்கள்,
போரில் தன் அரசனுக்கு வெற்றி கிடைக்கவும்,
தன் தலைவன் உடல் நலம் பெறவும்,
ஊரின் நன்மைக்காகவும்
காளி,
கொற்றவை போன்ற தெய்வங்களை வேண்டிக்கொண்டு,

அக்கோயில் முன்பு
வாளால் தங்கள் தலையை
தாங்களே அறுத்து
அத்தெய்வங்களுக்கு காணிக்கையாகக் கொடுப்பர்.

இதனை கல்வெட்டுகள்
'தூங்குதலை குடுத்தல்' என்கின்றன.

இந்தகைய வழிபாடு
தலைப்பலி, அரிகண்டம்
எனவும் அழைக்கப்படுகிறது.

சிற்பத்தில்
ஒரு வீரன் தனது கழுத்தை தானே அறுத்துக்கொள்வதை போன்று செதுக்கப்பட்டுள்ளது. வீரன் இடுப்பில் போர் வாள் உள்ளது.

தற்காலத்தில் வழிபாடுகள் நடைபெறுவதாக தெரியவில்லை..இப்பகுதியில் வாழ்ந்த ஒரு வீரன் தன் தலைவனுக்காக, கடவுளுக்காகவோ தன்னையே பலியிட்டு இன்று நடுகல்லாக உள்ளார்.

குண்ணன்டார் கோயில் வடமலை மற்றும் தென்மலை நாட்டு கள்ளர்கள் வாழும் முக்கிய ஊர் எனவும், இந்த கோயிலில் தான் நாட்டுக்கூட்டங்கள் நடைபெறுவதாகவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு கூறுகிறது.

# சியாம் சுந்தர் சம்பட்டியார் #

No comments: