தேவர்

0 c


http://books.dinamalar.com/BookView.aspx?id=20363
http://books.dinamalar.com/BookView.aspx?id=3591
http://books.dinamalar.com/BookView.aspx?id=16580
http://books.dinamalar.com/BookView.aspx?id=4187
http://books.dinamalar.com/BookView.aspx?id=5715
http://books.dinamalar.com/BookView.aspx?id=15653
http://books.dinamalar.com/BookView.aspx?id=4019

http://books.dinamalar.com/BookView.aspx?id=609
தேவர் திருமகன் 
 
 


இதழியல் பார்வையில் பசும்பொன் தேவர்

ஆசிரியர்: சபீதா ஜோஸப்
வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்
பகுதி: வரலாறு
ISBN எண்:
விலை:  ரூ.75


 நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105 ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை -14.போன் : 28482424, பக்கங்கள்: 120  

 

 


பசும்பொன் தேவர் திருமகனார்

Advertisement
ஆசிரியர்: என்.துரைசிங்கம்
வெளியீடு: குமரன் பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
விலை:  ரூ.40


 குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, (பாலாஜி கல்யாண மண்டபம் அருகில்), தியாகராயநகர், சென்னை-17.  
 

பொக்கிஷம் (பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு)


Advertisement
ஆசிரியர்: தி.நா. அங்கமுத்து
வெளியீடு: அழகு பதிப்பகம்
பகுதி: வாழ்க்கை வரலாறு
ISBN எண்:
விலை:  ரூ. 45.00


 அழகு பதிப்பகம், 15/21 டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை - 600 049. தொலைபேசி: 26502086.  
 




ஆசிரியர்: க.பூபதிராஜா
வெளியீடு: பசும்பொன் தேவர் ஆன்மிக மனிதநேய நலச் சங்கம்
பகுதி: வாழ்க்கை வரலாறு
ISBN எண்:
விலை:  ரூ.600


 பசும்பொன் தேவர் ஆன்மிக மனிதநேய நலச் சங்கம், 14, ஆண்டாள் நகர், 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 720+64+16.)

தலைசிறந்த தேச பக்தரும், மிக உயர்ந்த ஆன்மிகவாதியுமான பசும்பொன் தேவரின் அரசியல், சமூக, மொழி, ஆன்மிகம் சார்ந்த தொண்டைப் பற்றி விரிவாக, விளக்கமாக, ஆய்வு நோக்கில், அலசி, ஆராய்ந்து எழுதப்பட்ட ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்று நூல். தென் மாவட்டங்களில் முக்குலத்து மக்களால் போற்றி வணங்கப்படும் பசும்பொன் தேவர் மனிதாபிமானம் மிகுந்த நல்ல மனிதர். தமிழ் மொழியின் ஏற்றம், தமிழகத்தின் ஆன்மிகப் பெருமை, தரமான அரசியல், பலனை எதிர்பார்க்காத தொண்டு எனப் பயனுள்ள பலதரப்பட்ட துறைகளில் வாழ்நாளெல்லாம், சுற்றுப்பத்து கிராமங்களில் வாழ்ந்த ஏழை விவசாயக்கூலிகள். இவர்களில் பெரும்பாலோர் பசும்பொன் தேவரின் சொத்துக்களுக்குப் பதிவு செய்யப்படாத உரிமையாளர்கள்.

பிரம்மச்சார்யத்தைக் கடைப்பிடித்த ஒழுக்க சீலர். சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகத்தைப் பெரிதும் போற்றியவர். மிகச் சிறிய வயதிலேயே மேடை ஏறிச் சொற்பொழிவு நிகழ்த்தும் ஆற்றல் கைவரப் பெற்றவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாகப் பேசக்கூடிய திறமைசாலி. பார்லிமென்டில் அைனைத்து மாநில உறுப்பினர்களின் கவனத்தையும், ஈர்க்கும் வகையில் விவாதங்களில் கலந்து கொண்டு சிறப்பித்தவர். அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்து கட்சியை வளர்த்த பெருமைக்குரியவர். நூலாசிரியர் க.பூபதி ராஜா, பசும்பொன் தேவரின் பேரன் உறவு நிலையுடன் திகழ்பவர். தேவர் திருமகனாரைப் பற்றி நூல் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை செயல்படுத்த பெரு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். தேவர் தொடர்பான அநேகமாக எல்லா தகவல்களையும், அவருடைய ஜாதகம் தொடங்கி, அவருடைய அன்றாடப் பழக்க வழக்கங்கள் ஈறாகச் சேகரித்து சிரத்தையுடன் கோர்வைப்படுத்தித் தயாரித்திருக்கிறார்.மதுரைத் தமிழ்ச் சங்க பொன் விழாவில், அறிஞர் அண்ணாதுரை ஆன்மிக நம்பிக்கைக்கு விரோதமாக ஒரு கருத்தை தெரிவிக்க, பசும்பொன் தேவர் மறுநாள் அதே மேடையில் அதற்கு மறுப்பும் தெரிவித்தது அன்றைய நாட்களில் பேசப்பட்ட சுவையான சமாச்சாரம். அதேபோல, மூதறிஞர் ராஜாஜி எழுதிய `வியாசர் விருந்து' நூல் வெளியீட்டு விழாவில் தானே முன்வந்து கலந்து கொண்டு ராஜாஜியைப் பற்றி புகழ்ந்து பேசிய பேச்சு வரலாற்றுப் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய கருத்துக் குவியல். காமராஜருடன் நட்புடன் இருந்து அவர் கரங்களை வலுப்படுத்திய நாட்களும் தேவரின் வாழ்க்கையில் உள்ளடக்கம். இந்த ஆய்வு நூலை மிகச் சிறப்பாக எழுதித் தயாரித்துள்ள க.பூபதிராஜா பாராட்டுக்குரியவர். உற்சாக மிகுதியில் நூலாசிரியர் அரிய பல தகவல்களை கூறியிருந்தபோதிலும் சிலவற்றைத் தவிர்த்திருக்கலாம். அவை மிகப் பெரும் அறிஞரான தேவரை, அவரது பெருமையை சற்று சுருக்கி விடுகிறது.

தெய்வீக திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தியாக வரலாறு
 


 
 




ஆசிரியர்: முகவை மேத்தா
வெளியீடு: ஆசிரியர்
பகுதி: வாழ்க்கை வரலாறு
ISBN எண்:
மொத்த
விலை:  ரூ.75


 நூற்றாண்டு சிறப்பு வெளியீடு, ஸ்கிரிப்ட் ஆஃப்ஸெட், சென்னை -94. பக்கங்கள்- 272,  

நாயக்க மன்னர்களும் சேதுபதிகளும்

0 c

 

http://books.dinamalar.com/BookView.aspx?id=909
 
 




ஆசிரியர்: ஜெகாதா
வெளியீடு:
அறிவு நிலையம் பதிப்பகம்
பகுதி:
வரலாறு
ISBN எண்:


விலை: 
ரூ.100

 அறிவு நிலையம் பதிப்பகம், 32/107, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014. (பக்கம்: 320) சமயப் பொறை மிக்க இந்து சமயப் பற்றாளர்க ளான நாயக்க மன்னர்கள் - விஜய நகரப் பேரரசர்களின் பிரதிநிதியாகத் தமிழகத்தின் தென் பகுதிக ளை ஆண்டு வரலாற்றின் உன்னதப் பக்கங்களை ஆக்கத் துணை நின்றனர். சுதேச சிந்தனையும், தன்னாட்சி ஆர்வமும் மிக்க சேதுபதி மன்னர்கள் அந்த நாயக்க மன்னர்களுக்குத் துணை நின்றனர். வேற்று முகத் தானை வேரறுக்கும் பண்பு கொண்ட சேது வேந்தர்கள் அதன் பொருட்டே ஆங்கிலேயர்களையும், ஆங்கிலேய அடிவருடிகளையும் அலற அலற எதிர்த்து தாக்கி விடுதலைப் போருக்கு முதல் முழக்கம் இட்டு ஆர்ப்பரித்தனர்.

அவர்களது வீர வரலாற்றைக் கூறும் சுவையான நூல்! சரித்திரப் பொக்கிஷம்!
  

கீர்த்திக்கோர் கிழவன் சேதுபதி

1 c

 


 
 
http://books.dinamalar.com/BookView.aspx?id=11844



ஆசிரியர்: இந்திரா சவுந்தர்ராஜன்
வெளியீடு: கங்கை புத்தக நிலையம்
பகுதி: பொது
ISBN எண்:


விலை:  ரு.10


 வெளியீடு: கங்கை புத்தக நிலையம் , 23 , தீனதயாளு தெரு. தியாகராய நகர் சென்னை-600017.
தொலைபேசி: 24342810, 24310769
 

சேதுபதி செந்தமிழ்த் திரட்டு

0 c
 




ஆசிரியர்     : எம்.முத்துச்சாமி
வெளியீடு   : முருகாலயம்
பகுதி             : இலக்கியம்
ISBN எண்:
விலை:  ரூ.150


 முருகாலயம், 29,பரோடா வீதி, சென்னை-33 (பக்கம்:328)

முச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த சேதுபதி மன்னர்களின் பெருமையை விளக்கும் நூல் இது. சேதுபதி மன்னர்களை பற்றி பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய 21 கட்டுரைகளை தொகுத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழை வளர்ப்பதற்காக சேதுபதி மன்னர்கள் ஆற்றிய பணிகள், இசைத் தொண்டு,கலையாற்றால், பாஸ்கர சேதுபதியின் தமிழ்ப்பணி, சுவாமி விவேகானந்தருக்கும், பாஸ்கர சேதுபதிக்கும் இடையேயான நட்பு போன்ற பல்வேறு விஷயங்கள் இந்நூலில் நிறைந்துள்ளன.
விடுதலை போரில் சேதுபதி மன்னர்கள் என்ற தலைப்பில் எஸ்.எம்.கமால் எழுதியுள்ள கட்டுரையில் (பக்:48) "ஆங்கில ஏகாதிபத்தியத்தை நமது நாட்டில் இருந்து அகற்றுவதற்கான ஒருமித்த சக்தியாக உருவெடுத்த இயக்கம் எப்பொழுது ஏற்பட்டது என்ற வினாவிற்கு இதுவரை சொல்லப்பட்டு வந்த விளக்கம் கி.பி.1857ல் நடைபெற்ற சிப்பாய் கலகம் என்பதாகும்.
ஆனால், தமிழகத்தில் சிப்பாய் கலகத்திற்கு 65 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை இயக்கம் தொடங்கி விட்டதை வரலாறு தெரிவிக்கிறது. ராமநாதபுரம் சீமையின் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, கி.பி.1792ல் இந்த புனித போருக்கு வித்திட்டார்'என,தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்க விஷயம்.
  

  http://books.dinamalar.com/BookView.aspx?id=9293

பாப்பாபட்டி, கீரிப்பட்டி et al

0 c
thanks to 
http://thoughtsintamil.blogspot.com/2006/09/et-al.html

பத்ரி சேஷாத்ரி

Sunday, September 03, 2006

பாப்பாபட்டி, கீரிப்பட்டி et al.

மதுரை மாவட்டத்தில் இருக்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொட்டாகச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துகள் தலித் மக்களுக்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள்.

ஆனால் கடந்த பத்து வருடங்களில் இங்கு தலித்களால் தலைவர் பதவியை ஏற்க முடிந்ததில்லை. (நாட்டார்மங்கலத்தில் முதல் ஐந்து வருடங்கள் 1996-2001 ஒரு தலித் பஞ்சாயத் தலைவர் இருந்தார். அடுத்த ஐந்து வருடங்கள் இங்கும் மற்ற மூன்று இடங்களைப் போலவே நடந்துள்ளது.)

இந்த நான்கு கிராமங்களிலும் தலித் மக்கள் (முக்கியமாக பள்ளர்கள்?) 10%-க்கும் குறைவானவர்கள். பெரும்பான்மை மக்கள் முக்குலத்தோர் சாதியான கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். தலித்கள் அனைவருமே கள்ளர் இனத்தோரின் வயல்களில் வேலை செய்பவர்களாகவும் ஜீவிதத்துக்கு கள்ளர்களை நம்பி இருப்பவர்களாகவும் உள்ளனர்.

1996 முதற்கொண்டு இந்த கிராமங்களில் நடக்கும் தேர்தல், இடைத் தேர்தல்களின்போது

1. போட்டியிட விரும்பும் தலித்கள் மிரட்டப்பட்டுள்ளனர், தடுக்கப்பட்டுள்ளனர்.
2. கள்ளர்களிடம் வேலை செய்யும் தலித்கள் போட்டியில் இறக்கிவிடப்பட்டு ஜெயித்த ஒரு நாளைக்குள்ளாக பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
3. மர்மமான முறையில் போட்டியில் நின்ற ஒரு தலித் இறந்துள்ளார். (நரசிங்கம்)
4. அநியாயத்தை எதிர்க்கக்கூடிய சில தலித் குடும்பங்கள் கிராமத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுபான்மை எண்ணிக்கையில் இருக்கும் தலித்களுக்கு எப்படி பஞ்சாயத்து தலைவர் பதவியை ஒதுக்கிவைக்கலாம் என்று இங்குள்ள கள்ளர்கள் கேள்வி எழுப்புகின்றனராம். மேலும் பஞ்சாயத்து தலைவர்தான் ஊர்க்கோயில் அறங்காவலராகவும் இருக்கவேண்டும் என்ற ஓர் ஐதீகம் இருப்பதால் ஒரு தலித் கோயில் அறங்காவலராக இருப்பது 'தெய்வ குற்றம்' ஆகும் என்ற அபத்தமான கருத்தையும் ஊர் மக்கள் வலியுறுத்துகிறார்களாம்.

அரசியல்ரீதியாக இந்த நான்கு கிராமங்களிலும் இட ஒதுக்கீட்டை மாற்ற அரசு முயற்சி செய்யலாம் என்ற தகவல் கிடைத்ததால் பல அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்குவோம் என்று சொல்ல, இந்த நான்கு கிராமங்களிலும் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு தொடரும் என்று அரசு சென்ற வாரம் அறிவித்தது.

ஆனால் இன்னமும் பல அரசியல் கட்சிகளுக்கு இந்தப் பிரச்னையில் எவ்வாறு ஈடுபடுவது என்று புரியவில்லை. இந்த கிராமங்களில் உள்ள பெரும்பான்மை மக்கள் கள்ளர்கள் என்பதால் இங்கு ஆதரவு பார்வர்ட் பிளாக், அஇஅதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்குத்தான். கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியோருக்கு ஆதரவு மிகக்குறைவு.

பார்வர்ட் பிளாக் தமிழகத்தைப் பொருத்தவரை முக்குலத்தோர் ஜாதிக்கட்சி. எனவே அவர்கள் தலித் ஆதரவு நிலையை எடுக்க மாட்டார்கள். திமுக, அஇஅதிமுக ஆகியவை சென்னையில் ஒருமாதிரியும் மதுரை மாவட்டத்தில் வேறுமாதிரியுமான நிலையைத்தான் எடுக்க முனைவார்கள்.

எனவே சென்ற சில வருடங்களில் நிகழ்ந்த கோமாளிக்கூத்தே வரும் வருடங்களிலும் தொடரும்.

இதனை ஒரேயடியாக மாற்ற முடியாது; இது கள்ளர் சாதியினர் மனம் சம்பந்தப்பட்டது என்றாலும் அரசு சிலவற்றைச் செய்யலாம்.

1. பஞ்சாயத்துக்கு சரியான தேர்தல் நடந்து தலித் ஒருவர் தொடர்ந்து தலைவராக இல்லாவிட்டால் இந்த கிராமங்களில் எந்தவிதமான வசதிகளையும் அரசு செய்து கொடுக்காது. ஏற்கெனவே கொடுத்துவந்த வசதிகளை அரசு நிறுத்திவிடும்.

தண்ணீர் வசதிகள் கொடுக்கப்பட்ட மாட்டாது. ரேஷன் கடைகளில் நியாய விலைப் பொருள்கள் கிடைக்காது. அரசுப் பேருந்துகள் இந்தப் பக்கம் வரமாட்டா. வேளாண்மைக்கு அரசு இலவச மின்சாரம் கொடுக்காது. விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யாது.

மொத்தத்தில்
economic embargo.

இந்தக் கஷ்டங்களிலிருந்து தலித்கள் தப்பிக்க அரசு அவர்களுக்கு மாதாமாதம் வாழ்வுக்குத் தேவையான உதவித்தொகை வழங்கும். அரசு இந்த கிராமங்களில் சிறப்புக் காவல்நிலையங்களை ஏற்படுத்தி, அதற்கு வெளி நகரங்களிலிருந்து காவலர்களை நியமித்து தலித்கள்மீது தாக்குதல் நடைபெறாவண்ணம் காப்பாற்றும்.

2. இந்த நான்கு பஞ்சாயத்துகளில் ஏதாவது ஒன்று தலித் ஒருவரை தலைவராகக் கொண்டு நடக்க ஏற்றுக்கொண்டால், அந்தப் பஞ்சாயத்துக்கு அதிகமான அளவு வசதிகள் செய்துதரப்படும். சாதாரணமாக ஒதுக்கப்படும் நிதி அளவு இரட்டிப்பாக்கப்படும். இங்கு வசிக்கும் அனைத்து சாதியினருக்கும் அரசு வேலைகளில் முன்னுரிமை முதற்கொண்டு பல்வேறு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

இது வலிந்து செய்யப்படும் social re-engineering. ஆனால் இதைச் செய்யாமல் சென்னையில் கொடிபிடித்துப் போராடினால் யாருக்கும் பயன் கிடையாது. 'ஏதோ, எங்களால் முடிந்ததை நாங்கள் செய்துவிட்டோம்' என்று கட்சிகள் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொண்டு விழா எடுக்க மட்டுமே இந்த அடையாளப் போராட்டங்கள் உதவும்.

27 ஆகஸ்ட் 2006: Pappapatti, Keeripatti to stay reserved
29 ஆகஸ்ட் 2006: Parties welcome Government move

 













அரசனை சுட்டும் பட்டங்கள்

0 c
தமிழில் அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள். எடுத்துகாட்டு பல்லவராயன் (பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன் ), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை.. இவை ஓன்று இருந்தாலே அநியாயத்துக்கு தம்பட்டம் அடிக்கும் சாதிகள் இருக்கும் தமிழகத்தில் இணையில்லா தஞ்சை கள்ளர் குலத்தின் பட்டங்களை பாருங்கள்....520 பட்டங்கள் அரசர்களை சுட்டும் 

1பாண்டியராயர்,2 பல்லவதரையர்,3 பல்லவராயர் 4 சேதிராயர் (சோழனின் கிளைக்குடி) 5 பழுவேட்டரையர்(சோழன் பெண் எடுத்த சேரன் குலம்) 6 தஞ்சைராயர் 7  பழையாற்றரையர்(பறையாறு சோழர்களின் தலைநகரம் ) 8 கொடும்பாளுர்ராயர் (மாமன்னன் ராஜராஜன் மனைவியின் குலம், ராஜேந்திர சோழன் தாய் )9 வல்லத்தரையர் 10 முத்தரையர் 11 கொல்லத்தரையர் 12 கலிங்கராயர் 13 கொங்குராயர் 14 செம்பியதரையர் 15 கேரளராயர் 16 ஈழ்த்தரையர் 17 கச்சியராயர் 18 காடவராயர் 19 கடாரத்தரையர் 20  கச்சைராயர் 21 கோழிராயர்(கூழி என்றால் கரிகாலன் தலைநகர் உறையூரை குறிக்கும்) 22 கலிங்கராயதேவர் 23 களப்பாளராயர் 24 குறும்பராயர் 25 சோழகன்னகுச்சிராயர் 26 காலிங்கராயர் 27 செம்பியமுத்தரையர் 28 சம்புராயர் 29 சோழரையர் 30 சேதுராயர் 31 செம்பியரையர் 32 சோழதரையர் 33 சீனத்தரயைர் 34 சோழதிரையர் 35 சிங்களராயர் 36 தஞ்சிராயர் 37 செழியதரையர் 38 சிந்துராபாண்டிராயர்யர் 39 தேவராயர் 40 தமிழுதரையர் 41 தெலிங்கராயர் 42 தென்னதிரையர் 43 தென்னரையர் 44 தென்னறையர் 45 தென்னவராயர்  46 பாண்டுராயர் 47 மூவரையர் 48 மூவேந்த்ரையர் 49 மானமுத்தரையர் 50 மீனவராயர்மலைராயர் 51 மலையராயர்  52 மழவராயர் 53 முனைதரையர் 54 மலையராயர் 55 மலையரையர் 56 வங்கத்தரையர் 57 வங்கராயர் 58 வடுகராயர் 59 நாகராயர் 60 வாணாதிராயர் 61 வல்லவராயர் 62 வில்லவதரையனார் 63 வில்லவராயர் 64 வெங்கிராயர் 65 வாணரையர் 66 வாண்டராயர் 67 வண்டைராயர் 68 வேங்கைராயர் 69 வெங்கிராயர், 70 அங்கராயர். 71 ஆக்காட்டரையர். 72 அன்கராயர். 73 ஆற்காட்டரையர். 74 அனகராயர் 75 அங்கதராயர் 76 ஆச்சராயர் 77 ஆச்சாண்டார் 78 உழுவாண்டார். 79 அச்சிராயர் 80 அச்சுதராயர்  77 உமத்தரையர் 78 அத்திராயர் 79 அத்தியரையர் 80 ஆலத்தரையர். 81 அமராண்டார் 82 அம்பராண்டார் 83 ஆற்க்காடுராயர் 84 அம்மையத்தரையர் 85 இராதராயர் 86 இராமலிங்கராயதேவர் 87 இராலிங்கராயதேவர் 88 ஓந்திரையர் 89 ஓந்தரையர் 90 ஓமாந்தரையர் 91 ஓமாமரையர் 92 இருப்பரையர் 93 அண்ணவசல்ராயர 94 கொங்கரையர் 95 கொங்ககரையர் 96 கொங்குதிரையர் 97 கொடிராயர் 98 காசிராயர் 99 கொடிக்கிராயர், 100 கொடிக்கவிராயர் 101 கஞ்சராயர் 102 கொடும்பராயர், 103 கொடும்பைராயர் 104 கடம்பராயர் 105 கொடும்புராயர் 106 கடம்பைராயர் 107 கொடும்மளுர்ராயர் 108 கொடும்பிராயர்,109 கொடும்பையரையர் 110 கார்யோகராயர் 111 கட்டராயர் 112 கொழுந்தராயர் 113 கொற்றப்பராயர் 114 கொத்தப்பராயர்  
115 கொற்றரையர் 116 கண்டராயர் 117 கண்டவராயர் 118 கோட்டரையர் 119 கோட்டையரையர் 120 கண்ணரையர் 121 கரம்பராயர் 122 கீழரையர் 123 கைலாயராயர் 124 கையராயர் 125 கரும்பராயர் 126 குச்சராயர் 127 குச்சிராயர் 128 குச்சியராயர் 129 குமதராயர் 130 கலிராயர் 131 குருகுலராயர் 132 குழந்தைராயர் 133 கொழந்தைராயர் 134 கொழந்தராயர் 135  கொழுந்தைராயர்,  136 களப்பாள்ராயர்,37 கனகராயர் 138 கூத்தப்பராயர் 139 கன்னகொண்டார் 140 கொத்தப்பராயர் 141 கன்னக்குச்சிராயர் 142 கன்னராயர் 143 கன்னிராயர் 144 கேளராயர் 145 சக்கரையர் 146 சாக்கரையர் 147 சக்கராயர் 148 செம்பரையர் 149 சக்காராயர் 150 சங்கரராயர் 151 சோழுதிரையர் 152 சோதிரையர் 153 செல்லரையர் 154 செனவராயர் 155 சன்னவராயர் 156 சனகராயர் 157 சன்னராயர் 158 சென்னிராயர் 159 சன்னவராயர் 160 சாணரையர் 161 சாத்தரையர் 162 சாமுத்தரையர் 163 சாமுத்திரையர்,  164 சேண்ராயர் 165 செனவராயர் 166  சிங்கராயர் 167  சேந்தராயர் 168 சிந்துராயர் 169 சிறுநாட்டுராயர்170 சிறுராயர் 180 சேறைராயர் 181 சேற்றூரரையர் 182 சுக்கிராயர் 183 சுக்கிரபராயர் 184 சுக்கிரியராயர் 185 சுந்தரராயர்  186 சொரப்பரையர் 187 சோதிரையர் 188 தேசுராயர் 189 தனஞ்சராயர் 190 திருக்காட்டுராயர் 191 தம்பிராயர் 192 தனராயர் 193 தோப்பைராயர் 194 தலைசைராயர்,195 துண்டராயர் 196 தனசைராயர் 197 துண்டுராயர் 198 துண்டீரராயர் 199 தனிராயர் , 200 நண்டல்ராயர்  201 நந்திராயர் 202 நந்தியராயர் 203 நாட்டரையர் 204 நாட்டறையர் 205 நரசிங்கராயர் 206 நெடுந்தரையர்  207 நன்னிராயர்  208 நெல்லிராயர் 209 பகட்டுராயர் 210 பூழிராயர் 211 பூவனையரையர் 212 பங்களராயர் 213 பாச்சிராயர் 214 பேரரையர்,215 பேதரையர் 216 பாண்டராயர் 217 பஞ்சராயர் 218 பஞ்சந்தரையர் 219 பஞ்சநதரையர் 220  பாப்பரையர் 221 பொய்ந்தராயர் 222 போய்ந்தராயர் 223 போய்ந்தரராயர் 224 பட்டுராயர் 225 பொன்னவராயர் 226 பாலைராயர் 227 பால்ராயர் 228 பிச்சராயர் 229 பதுங்கராயர் 230 பதுங்கரார் 231 பிரமராயர் 232 பிலியராயர் 233  பயிற்றுராயர்  234 பரங்கிலிராயர்235 பரங்கிராயர் 236 பருதிராயர் 237 புள்ளராயர் 238 பிள்ளைராயர் 239  போதரையர் 400 பூராயர் 401 பனைராயர் 402 மாதராயர்403 மாதைராயர் 404 மாதுராயர் 405 மாத்துராயர் 406 மங்கலராயர் 407 மாதவராயர் 408 மாந்தராயர் 409 மாந்தையரையர், 410 மாந்தரையர் 411 மட்டைராயர் 412 மேனாட்டரையர் 413 மணிராயர் 414 மண்டலராயர் 415 மண்டராயர் 416 மாவாளியார்417 மண்ணிராயர் 418 மணிக்கராயர் 419 மாளுவராயர் 420 மானத்தரையர் 421 மருங்கராயர் 422 பருங்கைராயர் 423 கைராயர்424 விக்கிரமத்தரையர் 425 அங்கராயர் 426 விசயராயர் 427  வங்கனராயர் 428 விசையராயர் 429 வங்காரமுத்தரையர் 430  விசராயர் 431 விசுவராயர் 432  வங்கானமுத்திரையர் 433 விசுவரார் 434 வஞ்சிராயர் 435 வாஞ்சிராயர் 436 விஞ்சிராயர்  437 விஞ்சைராயர் 438 வடுராயர் 439 விசலராயர் 440 வடுராயர், 441 விசுவராயர் 442 வல்லவரையர் 443 விண்டுராயர் 444 வீண்டுராயர் 445 விருதுளார்விலாடத்தரையர் 446  வில்லவதரையர் 447 வில்வராயர் 448 விழுப்பாதராயர் 449 விற்பன்னராயர் 500 வீணதரையர், 501  வெட்டுவராயர் 502 வணதரையர் 503 வாணதிரையர் 504 வாணாதரையர் 505 வீணாதரையர் 506 வீனைதிரையர்   507 வெங்கிராயர் 508 வாலிராயர் 509 வேம்பராயர் 510 வாளுவராயர் 511 வேள்ராயர் 512 வாள்ராயர் 513 வைகராயர் 514 வையராயர் 515 வைராயர் 516 வயிராயர் 517  பிள்ளைராயர் 518 கழுத்திரையர்  519 செட்டரையர் 520 தழிஞ்சிராயர்


http://kkrn-kallarvanniyar.blogspot.com/2011/01/blog-post.html

முத்துராமலிங்க சேதுபதி---பழனி மாம்பழக்கவிச்சிங்க நாவலர்

0 c
   ஏக சந்த கிராஹி
பழனி
மாம்பழக் கவிச்சிங்க நாவலர்
பாகம் 1

டாக்டர் எஸ்.ஜெயபாரதி
கடாரம்
மலேசியா



                 மாம்பழக்கவிச்சிங்கத்தைப் பற்றி அகத்தியரில் எழுதப்பட்டிருக்கிறது.
                 'ஏகச்சந்தக்கிராஹி' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் இண்டாலஜியில் இருமுறை எழுதியிருக்கிறேன்.
                 (நம்ம ஆட்களைப் பற்றியும் அவர்களின் சிறப்புகளைப் பற்றியும் உலகறியுமாறு ஆங்கிலத்தில் எழுதவேண்டுமென்று முழுமூச்சாக ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். Tamil Chauvinist என்று ஆசாமிகள் நினைத்துவிட்டார்கள்.)

                கண்கள் இல்லாத நிலையில் முதுகின்மேல் தம் தந்தையார்  விரலால் எழுத்தை எழுத எழுத, எழுத்தின் வடிவங்களை அப்படியே  நினைவில் இருத்திக்கொண்டு எழுதக்கற்றுக்கொண்ட விதத்தைப் பற்றியும், எதையுமே படிக்கச்சொல்லி, அதனை உடனேயே  மனதில் இருத்திக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் திருப்பிச்  சொல்லும் ஆற்றலைப்பற்றியும் சொல்லியிருந்தேன்.
                (வியப்புக்குரிய நினைவாற்றல் கொண்ட இன்னொருவர் இருந்தார். வன்றொண்டச் செட்டியார் என்ற பெயர்கொண்டவர்; மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் மாணவர்).
                மெய்யெழுத்துக்களே இல்லாமலும் நெடில்கள் இல்லாமலும் உதடு ஒட்டாத நிரோட்டகமாகவும் அவர் பாடிய பாடல் ஒன்று உண்டு.
                அவருடைய பரம்பரையில் வந்த ஒருவர், அவரைப் பற்றிய சிறுநூலொன்றை எழுதியிருக்கிறார்.

==========================

பழனி மாம்பழக்கவிச்சிங்க நாவலர்

                    அவர் பழனியில1836-இல் பிறந்தவர். இவர்களின் குடிப் பெயராகிய 'மாம்பழம்' என்ற பெயரை இவர் தந்தையாகிய முத்தைய ஆச்சாரியாரும் தாய் அம்மணியம்மாளும் வைத்தனர்.
                    மூன்று வயதில் வைசூரி நோயால் மாம்பழத்தில் கண்பார்வை மறைந்துபோயிற்று.
                    ஆனாலும் அவர்க்கு மற்ற புலன்களின் ஆற்றல் மிக அதிகமாக இருந்தது. நினைவாற்றலும் அவதான ஆற்றலும் கூடுதலாக இருந்தன.

                    முத்தைய ஆசாரி எழுத்துக்களை மாம்பழத்தின் முதுகில் எழுதி அவற்றின் வரி வடிவத்தை அவர் உணர்ந்துகொள்ளுமாறு செய்தார். தன் முதுகின்மீது எழுத்துக்களை விரலால் எழுதச்செய்து, எழுத்துக்களின் வடிவங்களை நன்கு அறிந்து, அதன்பின்னர் ஓலையில் எழுத்தாணியால் எழுதப் பயின்றார். காதால் கேட்கும் எதனையும்அப்படியே நினைவில் இருத்திக்கொள்ளும் ஆற்றலும் அவருக்கிருந்தது.
                    மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றில் கண்ணில் ஆற்றல் இல்லாதிருந்தபோதிலும் மற்ற நான்கு புலன்களும் பன்மடங்கு கூர்மையாவையாக இருந்தன. அத்துடன் ஞாபகசக்தியும் சேர்ந்து கொண்டது.
                    'ஏகச்சந்த கிராஹி' என்று சொல்வார்கள்.
                    ஒருவர் ஒருமுறை சொன்னமாத்திரத்தில் அதை அப்படியே ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் உள்ளவர்களை அவ்வாறு குறிப்பிடுவார்கள்.
                    மாம்பழத்திற்கு இன்னும் அதிகப்படியான ஆற்றல் இருந்தது.
                    ஒரு வரியைச் சொன்னால் அதை அப்படியே நினவில் இருத்திக்கொள்வார். அதன் பின் அடுத்த வரியைச் சொன்னால் முதல் வரியுடன் சேர்த்து இருத்திக்கொள்வார். இப்படியே எத்தனை வரிகளைச் சொன்னாலும் அவற்றை ஞாபகத்தில் ஆழமாகப் பதித்துக்கொள்வார். திருப்பியும் சொல்வார். வரிசைக்கிரமமாகவும் சொல்வார். தனியாகவும் எந்த இடத்தில் இருக்கும் பாடலையோ வரியையோ கருத்தையோ கேட்டாலும்தாமதிக்காமல் யோசிக்காமல் சொல்லிவிடக்கூடிய பேராற்றல் அவருக்கு இருந்தது.
                    இவ்வாறு பல பெரிய நூல்களையும் மனதில் பதியவைத்துக்கொண்டார்.
                    யாப்பிலக்கணத்தையும் பிழையறக் கற்றார்.
                    அத்துடன் வடமொழியையும் இரண்டு ஆசிரியர்களிடம் கற்றார்.
                    ம ுருகனின் பேரருள் அவருக்கு இருந்தது.
                    இவரை முதலில் ஆதரித்தவர் பாப்பம்பட்டி என்னும் ஊரில் இருந்த பெருநிலக்கிழார். அவர் பேரால் பலவகையான பிரபந்தங்களை இயற்றினார். பொன்முடிப்பு, கெண்டை உருமால், சரிகைப் பட்டு வேட்டி, பெட்டிவண்டி சால்வை போன்ற மதிப்பும் கௌரவமும்கொண்ட பொருள்களைப் பெற்றார்.

                    அந்தக் காலத்தில் சேதுநாட்டைப் பொன்னுசாமித் தேவரும் அவர் தம்பியாகிய முத்துராமலிங்க சேதுபதியும் ஆண்டுவந்தனர். அவர்கள் அந்தக் காலத்தில் புலவர்களைப் பெரிதும் ஆதரித்து அவர்களின் தகுதிக்கேற்ற கௌரவத்தையும் சன்மானத்தையும் தந்தார்கள்.
                    பல நண்பர்களின் உதவியால் ராமநாதபுரத்துக்குச் சென்றார்.

                    பல நண்பர்களின் உதவியால் ராமநாதபுரத்துக்குச்சென்றார்.
                    அந்தக்காலங்களில் அங்கவீனர்கள் போன்றோரை மன்னர்கள் பார்க்கமாட்டார்கள்.

                    அந்தகராகிய மாம்பழத்தையும் பாராமலிருந்துவிட்டார்கள்.

                    பொறுமையாக மாம்பழம் காத்திருந்தார்.

                    ஒருநாள் மகாலட்சுமியைப் பற்றிய சமஸ்கிருதப்பாடல் ஒன்றைச் சொல்லி அத¨னாப்படியே பொருள் மாறாமல் தமிழில் யாத்துத் தருமாறு அவைப ்புலவர்களிடம் பொன்னுச்சமித் தேவர் கேட்டுக்கொண்டார்.

                    புலவர்களில் ஒருவர் மாம்பழத்திடம் வந்து உரிய கருத்துத் தோன்றும்படி பாடலை இயற்றித்தர வேண்டினார். மாம்பழமும் பாடிக் கொடுத்தார்:

அம்புயமென்றாது சகியாதுனது தாள்சகிமார்
அம்புநிகர் பார்வைசகியாது மெய்யவ் -வம்புயங்கை
தாங்கலமெய் மால்வலுரஞ் சார்தலரி தென்னிலென்வாய்
வீங்குரையாற்றுங்கொல் திருவே

உனது தாள் அம்புய மென் தாது சகியாது - மலர்ந்த தாமரையின்
மகரந்தத்தூள்களைக்கூட உன் திருவடிகள் தாங்கமாட்டா.
(உனது) மெய் (உனது)சகிமார் அம்புநிகர் பார்வை சகியாது -
உன்னுடைய பாங்கிமார்களுடைய பார்வைகளோ அம்புபோல
கூர்மையானவை; ஆகவே அந்தப் பார்வையையும் உன் மென்னுடல்
தாங்கமாட்டாது.
உன்னுடைய கைகளோ தாமரை மலரையும் தாங்கும் தன்மை
உடையவையல்ல
இவ்வளவு மென்மையானவள் நீ!
ஆகவேதான் திருமாலின் வலிமையான மார்பில் ஸ்ரீவத்ச மருவில்
இருந்துகொண்டு அந்த வலிமையான மார்பைச் சார்ந்திருக்கிறாய்.
இவ்வாறு இத்தனை மென்மையான உன்னுடைய மென்மையான செவி
என்னுடைய வன்மையான உரையைப் பொறுக்குமோ?

                    பாடலைக்கேட்ட பொன்னுசாமித்தேவர் அதன் அருமையை நன்கு உணர்ந்து அனுபவித்தார்.
                    உடனேயே தகுதிபடைத்தவர்களை அனுப்பி மாம்பழத்தைக்  கூட்டிவரச் செய்தார்.
                    பொன்னுச்சாமித் தேவருடன் அவருடைய தம்பியாராகிய மன்னர் சேதுபதியும் அமர்ந்திருப்பதை உணர்ந்தார்.
                    Protocol என்று சொல்லப்படும் மரபை அனுசரித்து மாம்பழம் முதலில் சேதுபதியைக் குறித்து ராஜமரியாதையாக ஒரு பாடலைப் பாடிவிட்டு, அடுத்தபடியாகப் பொன்னுச்சாமித் தேவரைப் பாடினார்.
                    தக்க பரிசில்களைக் கொடுத்து அங்கேயே இருக்கச் செய்துகொண்டனர்.
                    அடிக்கடி அவர்களைச் சென்று பார்த்து வரலானார் புலவர்.

                    மாம்பழக்கவிராயர் ராமநாதபுரத்தில் இருந்த காலத்தில் பல பாடல்களைப் பாடியிருந்திருக்கிறார். அவற்றில் பல, மிகவும் சமயோசிதமாகப் பாடப்பட்டவை.
                    இன்னொன்றும் உண்டு.
                    அவருடைய பெருமையையும் அவருடைய அரிய ஆற்றலையும் மற்றவர்களும் நன்கு உணரவேண்டும் என்று மன்னரும் தமையனாரும் நினைத்தார்கள்.
                    ஆகவே மற்றவர்களால் முடியாது என்று நன்கு தோன்றச்செய்யும் பல பாடல்களையும் அவர்கள் மாம்பழத்தை நொடியில் பாடுமாறு சொல்லி அவ்வாறே ஆசுகவியாகப் பாடச் செய்தனர்..

                    ஒருமுறை  'கிரியில் கிரியுருகுங ்கேட்டு'  என்ற வரியை ஈற்றடியாகக் கொண்டு வேண்பாவொன்றை இயற்றச் சொன்னார்.

"மாலாம் பொன்னுச்சாமி மன்னர்பிரான் தன்னாட்டில்
சேலாங்கண் மங்கையர் வாசிக்கும் நல்யாழ் - நீலாம்
பரியிற் பரியகொடும் பாலை குளிரும் ஆ
கிரியில் கிரியுருகும் கேட்டு"

திருமாலை நிகர்த்த பொன்னுச்சாமி மன்னரின் சேதுநாட்டில்
கயற்கண்கள் கொண்ட பெண்கள் நல்ல யாழை வாசிக்கும்போது,
அவர் வாசிக்கும் நீலாம்பரி ராகத்தைக்கேட்ட மாத்திரத்தில்
அதன் இனிமை ஆற்றலால் கொடிய பாலை நிலமும் குளிர்ந்துபோகும்.
ஆகிரி ராகத்தை கேட்டவுடன் மலையும் உருகிவிடும்.     


                    இன்னொரு சமயம் இன்னொரு கடினமான விஷயத்தைக் கொடுத்தார்.
                    அருணகிரிநாதர் பாடிய முதற்பாட்டு:

'முத்தைத்தரு பத்தித்திருநகை
    அத்திக்கிறை சத்திச்சரவண
     முத்திக்கொரு வித்துக் குருபர     வெனஓது

                    பொன்னுசாமித்தேவர் மாம்பழத்திடம் இந்த அடிகளை அப்படியே வெண்பாவாக அமையுமாறு பாடச்சொன்னார்.
                    மாம்பழம் சிறிதும் யோசிக்கவேயில்லை.
                    "அதற்கென்ன. பாடுவது மிக எளிதாயிற்றே. அந்த அடிகளுக்கு முன்னால் 'வரமுதவிக் காக்கு மனமே வெண்சோதி பரவிய' என்னும் சொற்றொடரைப் போட்டுக்கொண்டு படியுங்கள்; வெண்பாவாக மாறிவிடும்",
என்று சொன்னார்.
    
"வரமுதவிக் காக்கு மனமேவெண் சோதி
பரவியமுத் தைத்தரு பத்தித் - திருநகையத்
திக்கிறை சத்திச் சரவணமுத் திக்கொருவித்
துக்குருப ரன்னெனவோ து"

"ஏ மனமே! உனக்கு வரமும் தந்து உன்னைக் காக்கும்படியாக,
"வெண்மையான சோதி வீசும் முத்துக்களின் வரிசைபோல் விளங்கும்
பல்வரிசையுடன் திருநகை புரியும் தேவயானையின் தலைவனாகிய
சத்திச்சரவணன்; அவனே முத்திக்கு ஒரு வித்தாக விளங்கும் குருபரன்"
என்று ஓதுவாயாக!"

                    வெண்பாவாக மாறிவிட்டது.

போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே

0 c

போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே

போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே
தெக்கு தெசை ஆண்ட மன்னர் இனம் தான் ஓஹோய்

முக்குலத்த சேர்ந்த தேவர்மகன் தான் ஹோய்
போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே

தெக்கு தெசை ஆண்ட மன்னர் இனம் தான் ஓஹோய்
முக்குலத்த சேர்ந்த தேவர்மகன் தான் ஹோய்

என்ன சொல்ல மண்ணு வளம் டிங் டாங் டிங் டாங் ஹோ
மத்தவங்க கண்ணு படும் டிங் டாங் டிங் டாங் ஹோ
என்ன சொல்ல மண்ணு வளம் மத்தவங்க கண்ணு படும்
அந்த கத இப்ப உள்ள சந்ததிக கேட்க வேண்டும்

நம்உயிருக்கு மேலே மானம் மறியாதை
மானம் இழந்தாலே வாழத் தெரியாதே

பெரிசெல்லாம் சொன்னாக்கா சொன்னபடி நிப்பாங்க
குணத்தால் மனத்தால் கலைமான் ஆனாங்க

போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே
தெக்கு தெசை ஆண்ட மன்னர் இனம் தான் ஓஹோய்
முக்குலத்த சேர்ந்த தேவர்மகன் தான் ஹோய்

முன்னோருக்கு முன்னோர் எல்லாம் டிங் டாங் டிங் டாங் ஹோ
இன்னார் என்று கண்டுகொள்ள டிங் டாங் டிங் டாங் ஹோ
முன்னோருக்கு முன்னோர் எல்லாம் இன்னார் என்று கண்டுகொள்ள
எதுத்து எடுத்து சொல்ல ஒன்னு ரெண்டு மூனு இல்லை

முக்குலத்தார் கல்யாணம்தான் முத்து முத்து கம்பளித்தான்
எக்குலமும் வாழ்த்தி சொல்லும் எங்களுக்கு எக்காலம் தான்
அழகான சரி ஜோடி ஆண மேல அம்பாரி
கணக்கா வழக்கா கடல் போல் ஏராளம்

போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே
தெக்கு தெசை ஆண்ட மன்னர் இனம் தான் ஓஹோய்
முக்குலத்த சேர்ந்த தேவர்மகன் தான் ஹோய்

பசும்பொன் தேவர் திருமகன்

0 c
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று, வடலூரில், சமரச சுத்த சன்மார்க்கம் பற்றி பேசுவார் தேவர். அவரது பேச்சைக் கேட்பதற்காகவே, வள்ளலாரின் பக்தர்கள் ஆயிரக்கணக்கான பேர் வருவர்.


தைப்பூசத்தன்று, வடலூரில் தேவர் பேசத் துவங்குவதற்கு முன், முன்னாள் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், தேவரிடம் ஒரு செய்தியைச் சொன்னார்..."வடலூர் ராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவருடைய வீட்டில், ராமலிங்க அடிகளார் பாடிய, இதுவரை அச்சுக்கு வராத ஒன்பது பாடல்கள் அடங்கிய ஏட்டுச் சுவடி இருக்கிறது. அதை மடத்திற்குத் தந்தால், நூல் வடிவாக, எல்லாரும் படிக்கும் வண்ணம் அச்சில் ஏற்றி வெளிக்கொண்டு வரலாம்... ஆனால், அடிகளாரின் உறவினரிடம் பலமுறை கேட்டும் கொடுக்க மறுக்கின்றனர். தாங்கள் தான் இதற்கொரு வழி செய்ய வேண்டும்!' என்றார்.

"அந்தச் சுவடியை வரவழைக்க வேண்டிய விதத்தில் வரவழைப்போம்; நீங்கள் கவலைப்பட வேண்டாம்!' என்று ஓ.பி. ஆரிடம் கூறிவிட்டுப் பேச்சைத் துவங்கினார் தேவர். ராமலிங்க அடிகளாரின் அருட்பாவைப் பற்றி ஒருமணி நேரம் பேசிவிட்டு, இறுதியாக, தேவர் உறுதிபட கூறியதாவது..."ராமலிங்க அடிகளால் பாடப்பட்டு, இதுவரை அச்சுக்கு வராமல் உள்ள ஏட்டுச் சுவடியில் ஒன்பது பாடல்கள் இருப்பதாகவும், அந்தச் சுவடியை, ராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவர் வைத்துகொண்டு, மடத்துக்குக் கொடுக்க மறுப்பதாகவும், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்கள் என்னிடம் சொன்னார்!"அடிகளாரின் உறவினருக்கு, இந்தக் கூட்டத்தின் வாயிலாகச் சொல்கிறேன்... அந்தச் சுவடியை மடத்துக்குத் தந்து, மக்களுக்குப் பயன்படும்படி செய்யுங்கள் அல்லது தாங்களே அந்தச் சுவடியை நூலாக வெளியிடுங்கள். இரண்டையும் செய்யாமல் பிடிவாதமாக இருப்பதால், அடிகளாரின் அந்த ஒன்பது பாடல்களும், இந்த உலகத்திற்கு தெரியாமலே போய்விடும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்! இதுவரை உலகத்துக்குத் தெரியாமல் நீங்கள் வைத்திருந்த அந்த ஒன்பது பாடல்களையும் அடியேன் பாடுகிறேன், கேளுங்கள்...' என்று, அந்த ஒன்பது பாடல்களையும், மடைதிறந்த வெள்ளம் போல, "மட,மட...'வெனத் தன் வெண்கல குரலில் பாடி முடித்தார். ராமலிங்க அடிகளாரின் வெளிவராத அந்த அருட்பாவை, தேவர் திருமகன் பாடியதைக் கேட்ட கூட்டம் வியப்பில் ஆழ்ந்தது; மேடையில் இருந்த பிரமுகர்கள் அதிசயித்தனர். அப்போது ராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவர், கையில் அந்த ஏட்டுச் சுவடியோடு மேடை ஏறி, தேவரைக் கும்பிட்டு, காலில் விழுந்து வணங்கினார்.


பிறகு, தேவரைப் பார்த்து, "ஐயா... நீங்கள் தேவர் அல்லர்; நீங்கள் தான் ராமலிங்க அடிகளார்! என்னை மன்னித்து விடுங்கள்... தாங்கள் பாடிய அந்த ஒன்பது பாடல்கள் தான் இந்த ஏட்டுச் சுவடியில் இருக்கின்றன. இதை ஏற்றுக் கொள்ளுங்கள்!' என்று சுவடியைத் தேவரிடம் தந்தார்.அந்தச் சுவடியைப் பெற்று, "எல்லாம் ஈசன் செயல்...' என்று தேவர் சொல்லி முடிப்பதற்குள், எழுந்து வந்து தேவரை கட்டிப்பிடித்து, அவரது கைகளை எடுத்துத் தன் கண்களில் ஒற்றி, "ராமலிங்க சுவாமிகளே நீங்கள் தான்!' என்று உரக்கச் சப்தமிட்டு கூறினார் ஒ.பி.ஆர்., அதைக்கேட்ட கூடியிருந்த கூட்டம் பெருத்த கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தது. 
thanks to
http://www.eegarai.net/t43925-topic
http://yazhinielanthenral.blogspot.com/

கள்ளர் சரித்திரம் - ஒரு அறிமுகம் --வே.சபாநாயகம்

0 c
'கள்ளர்' என்ற சொல் பொதுவாக 'களவுத்தொழில் புரிபவர்' என்ற பொருளிலேயே வழங்கக் காண்கிறோம். ஆனால் அதற்கொரு விரிவான சரித்திரம் இருப்பதை 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதியுள்ள 'கள்ளர் சரித்திரம்' என்ற நூலைப்படித்த பின்னர்தான் தெரிந்தது. வேளாளர்களில் தம்மை மேம்பட்டவராகக் கருதும் 'கார்காத்த வேளாளர்கள்' காலப்போக்கில் இன்று எல்லோருமே தம்மையும் வேளாளர்கள் என்று சொல்லிக் கொள்வதாக, "கள்ளர் மறவர், கனத்த அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாழர் ஆனார்'' என்பதைச் சொல்லிக் குறைப்படுவதுண்டு. ஆனால் கள்ளர் குலத்தவர், நாம் நினைப்பது போல தாழ்ந்தவர்கள் அல்லர், அவர்கள் அரசாண்ட இனத்தவர், அவர்களும் அவர்கள் இனத்தைச் சேர்ந்த மறவர், தேவர், அரையர் ஆகியோரும் தமிழகத்தில் தொன்றுதொட்டு கோலோச்சியவர்கள் என்று இந்நூல் மூலம் தெரியவருகிறது. இந்த இனத்தவர் நாளடைவில் நலிவடைந்து, பெருமை குன்றி பின்னாட்களில் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டதால் நமக்கு அவர்களது பெருமை தெரியவில்லை. இன்று அவ்வினத்தவர் மீண்டெழுந்து சமூகத்தில் பல உயரிய பதவிகளிலும் அரசியலிலும் முன்னணிக்கு வந்துவிட்டாலும் இன்னும் அவர்களில் பலர் ஏழ்மையில் இருப்பதும், குற்றப்பரம்பரையினராகவே எண்ணப்படுவதும் குறித்து வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.




இந்த இனத்தைச் சேர்ந்த தொண்டைமான் பரம்பரையினர், நாம் அறிய புதுக்கோட்டை மன்னர்ர்களாக இருந்ததையும், இராமநாதபுரம் சேதுபதி மன்னர் பரம்பரையினர் மறவர் எனவும், கள்ளர் இனத்தவரான சோழ மன்னர்களில் பலர் ஆண்ட நாடுகள் 'கள்ளர் நாடு' என்றே வழங்கப் பட்டிருப்பதையும், முத்தரையர் இனத்தவர் பல்லவ மன்னர்களாக இருந்ததையும், அரையர் என்பார் சோழ பாண்டிய நாடுகளில் தன்னாட்சி புரிந்திருப்பதையும், நாயன்மார்கள், ஆழ்வார்களிலும் இவ்வகுப்பினர் புகழ் பெற்றிருந்ததையும் - சங்க இலக்கியங்களையும், கல்வெட்டுகளையும், அரசாங்க கெசட்டீர்களையும் சான்று காட்டி நாட்டார் அவர்கள் 'கள்ளர்'களின் பெருமையை நிறுவுகிறார்.

இந்நூல் 1932ல் முதன் முதல் வெளியானது. இதன் முன்னுரையில் ஆசிரியர், கள்ளர் இனத்தவர்களான ஜமீன்தார்களும், பாளையக்காரர்களும் சமீபகாலம் வரை செல்வமும் செல்வாக்கும் உடையவர்களாக வாழ்ந்திருப்பதை 'இவ்வகுப்பினரைக் குறித்து எழுதினோர் யாரும் சிறிதும் ஓர்ந்தவரெனக் காணப்படவில்லை' என்னும் காரணத்தாலேயே இந்நூல் எழுதப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.மேலும், இன்று கள்ளர் வகுப்பினர் சிற்சில இடங்களில் செல்வம், கல்வி முதலியவற்றிலும், பழக்க வழக்கங்களிலும் மிகவும் கீழ்நிலை அடைந்தவர்களாய்க்கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள் என்ற உண்மையால் அத்தகையோர் சிறிதேனும் நன்மையடையத் துணை புரிதலே இதனை எழுதியதன் முதல் நோக்கம் என்றும் குறிப்பிடுகிறார்.




தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமும் காணப்படும் கள்ளர் எனப்படும் பெருங்குழுவினரின் முன்னோர்கள் - பழைய நாளில் எவ்விடத்தில் எந்நிலையில் இருந்தனர், இடைக்காலத்தில் அவரது நிலைமை யாது, இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பன போன்றவை இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது.



முன்னதாக மிகப் பழைய நாளில் இந்தியா முழுதும் பரவி இருந்த நாகர் என்ற ஒரு வகையினர் பற்றிய வரலாறு கூறப்படுகிறது. முதல் அத்தியாயத்தில், அவர்கள் வாழ்ந்த நாகநாடு பற்றியும், அங்கு வாழ்ந்த நாகர்கள், அதன் பின் நிகழ்ந்த - தமிழ்நாட்டுக்கு திராவிடர், ஆரியர் வருகை, நால்வகை வருணப் பாகுபாடு எழுந்த சூழ்நிலை பற்றியெல்லாம் விரிவாக ஆதாரங்களுடன் ஆசிரியர் சொல்லிச் செல்கிறார்.



இரண்டாம் அத்தியாயத்தில், நாக பல்லவ சோழர் மற்றும் கள்ளர் பற்றிய செய்திகளை, சங்ககாலம் முதற்கொண்டு அகநானூறு, புறநானூறு போன்ற பழம்பெரும் நூல்களில் பதிவாகியுள்ளவற்றை எடுத்துக்காட்டி கள்ளர் இனத்தவரின் பல்வேறு பிரிவினரான பல்லவர், சோழர், பாண்டியர் நாடாண்ட பகுதிகள், மற்றும் அவர்களின் இனத்தவரான மறவர், தேவர், அரையர் பற்றிய விவரங்களுடன் ஆசிரியர் கவனப்படுத்துகிறார்.

http://ninaivu.blogspot.com/2010/01/blog-post_31.html