பெருந்தமிழன் - . ஆழ்வார்

அது ஒரு காலம். தமிழகமெங்கும் பாலி, பிராக்ருதம், சமஸ்க்ருதம் போன்ற பிற மொழிகள் கோலோச்சிய காலம். வட மதங்கள் ஆதிக்கம் செலுத்திய காலம். தனது சொந்த நிலத்திலேயே தமிழானது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது.
.
இந்த சூழலில் சிறைப்பட்டிருந்த தமிழை மீட்டெடுத்தப் பெருமை பக்தி இலக்கியங்களுக்கே உண்டு என்பதை வரலாறு தெரிந்த யாவரும் அறிவார்கள்.
.
சைவத்திருமுறைகளின் பதிகங்களும் வைணவப் பிரபந்தங்களின் பாசுரங்களும் செந்தமிழைச் செம்மையாக மக்களிடம் கொண்டுசேர்த்தன.
.
பாசுரங்களும் பதிகங்களும் அழகுத் தமிழில் அமுதத் தமிழில் பாடப்பட்ட செந்தமிழ் சொற்களஞ்சியமாகும்.
.
தேவார நால்வரும் பன்னிரு ஆழ்வார்களும் பைந்தமிழில் பாடிப்பாடியே சிவனையும் பெருமாளையும் போற்றினார்கள்.
.
ஆழ்வார் பாசுரங்கள் அனைத்தும் தீந்தமிழ் சொற்களால் உருகி உருகி பாடப்பட்டதாகும். தமிழ்மொழியை வளர்த்த பெருமையில் வைணவத்திற்கு பெரும்பங்குண்டு.
.
ஒவ்வொரு ஆழ்வாரும் தனிச் சிறப்புடன் தனித்தமிழை வழக்கில் கொண்டு வந்தனர்.
.
வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதைதமிழ்” என்று ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவையானது போற்றப்படுகிறது.
.
பைந்தமிழின் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலே' எனக் குமரகுருபரரால் போற்றப்பட்டவர் திருமழிசையாழ்வார்.
.
திருமழிசை ஆழ்வார் பாடிய பாசுரம் ஒன்று இவ்வாறு ஆரம்பிக்கும்.

""நற்றமிழை வித்தி, என் உள்ளத்தை நீ விளைத்தாய் கற்ற மொழியாகக் கலந்து''
நல்ல தமிழை எனக்குள் விதைத்து , தான் கற்ற தமிழ் மொழியாகி என்னுள் கலந்த பெருமாளே எனக்கூறி தமிழால் வைணவ முழக்கம் செய்தவர்.

திருமாலின் மொழியான தமிழை என்னுள் விதைத்தவர் எம்பெருமான் என்று உவகை கொள்கிறார்.
.
பூதத்தாழ்வாரின் பாசுரம் ஒன்றில் அற்புதமான ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்.
.
"பெருந்தமிழன் என்பதுதான் அந்த வார்த்தை "
.
இந்த வார்த்தை இடம் பெறும் அந்த அதி அற்புதமான பாசுரம்
"யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
யானே தவமுடையேன் எம்பெருமான்,
யானே இருந்த தமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்
, பெருந்தமிழன் நல்லேன் பெரிது "
.
‘எம்பெருமானே! -
ஏழு பிறப்புகளிலும் எல்லா நிலைகளிலும் தவம் செய்ததற்கான பலனைப் பெற்றேன். எப்போதும் இருக்கும் தமிழ்மொழியால் பாசுரம் பாடி உன் திருவடிகளைப் போற்றும் பெருந்தமிழன் நானே ..
.
தன்னை பெருந்தமிழன் என்கிறார் பூதத்தார்.
.
இவ்வாறா பாசுரங்களின் வழியே செந்தமிழின் சிறப்பையும் செம்மையையும் சொல்லிட்டே இருக்கலாம்.
ஆழ்வார் பாடிய தீந்தமிழ் பாசுரங்கள் தமிழகம் மட்டுமல்லாமல் பாரதமெங்கும் உள்ள பெருமாள் கோவில்களில் இன்றும் பாடப்படுகிறது.
=========================
பின்குறிப்பு -
பைந்தமிழ் பாவலர்களான ஆழ்வார்கள் வழி பெருமாளைப் போற்றுவதாகக் கூறும் இன்றைய வைணவர்களில் ஒரு சிலர்
தமிழ் மொழியை இழித்தும் பழித்தும் பேசுகின்றனர், எழுதுகின்றனர். கேலியும் கிண்டலும் செய்து ஏசுகின்றனர்.
.
இவர்களை ஆழ்வார்களும் மன்னிக்கமாட்டார்கள். பெருமாளும் மன்னிக்கமாட்டார்.
.
ஆழ்வார்கள் வழி பெருமாளைக் காணும் எந்த ஒரு வைணவரும் எந்த சூழலிலும் தமிழ்மொழியை விட்டுத்தரமாட்டார்.

அன்புடன் -
மா.மாரிராஜன்
நினைவிடம் மற்றும் கோவில் படமாக இருக்கக்கூடும்
புள்ளிவிவரங்களையும் விளம்பரங்களையும் காண்க
எல்லா உணர்ச்சிகளும்:
Nepolian Devadoss மற்றும் K S G. HariHaran


No comments: