கள்ளர் வரலாற்றுச் சுருக்கம் ---- 7

                   இலங்கை வரலாறு அனைத்தும் நாகர்கள் பற்றிய செய்திகளுடன் தொடங்குகிறது. இவற்றில் இருந்து கி.மு. 6ம் நூற்றாண்டில் நாகர்களின் வலிமை மிக்க அரசுகள் தீவின் மேற்குக்கரையில் நிலவின என்றும் அக்காரணம் பற்றியே இலங்கை “நாகதீவம்” என்றும் அதன் தலைநகர் கல்யாணி எனவும் அழைக்கப்பட்டது. ஆந்த நாக அரசன் தன்மகளை கணத்த மானோ மலையை ஆண்ட நாக அரசனுக்கு மணம் முடித்ததாகத் தெரிகிறது.   
அதுவே கல்யாணிக்கு எதிரே இருந்த ராமேஸ்வரத்தையடுத்த கந்த மாதன குன்று எனத் தெரிகிறது. இலங்கையின் முதல் குடிகள் நாகர் மற்றும் இயக்கர்கள் என்று தலைவர் நெடுமாறன் குறிப்பார். அவர் மேலும் நாகர்கள் மொழி தமிழ், இயக்கர்கள் பேசியது தமிழின் திரிபான எலு என்றும் பிறகுவந்த சிங்கக்குடியினர் குடியேற்றத்தால் எலுமொழி “சிங்கஎலு” சிங்களம் என்று திரிந்ததாக கூறுவார் (சிங்கம் +எலு+அம்) சிங்களம்.

1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மக்கள் நினைவெல்லைக்குள்ளாக நாகர் அரசுகளைவிட பழமை வாய்ந்த அரசுகள் இருந்ததில்லை என்று தோன்றுகிறது இதனையே இளங்கோவடிகள் தமது காப்பியத்தில்

“நாகநீள் நகரோடு நாகநாடு அதனொடு
போகநீள் புகழ்மன்னும் புகார்நகர்” என்றார்.


புகார் நகரமே ஒரு காலகட்டத்தில் நாகர்களின் நகரமாக இருந்ததாக கூறுவர். புகாரை நாகர்களிடம் இருந்து முசுகுந்தசோழன் கைப்பற்றினான் என்று கூறப்படுகிறது. நாகர்களை வென்ற முதல் மன்னன் முசுகுந்னேயாவான். புகார் நகரம் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலுள் மூழ்சியதாக இங்கிலாந்தைச்சேர்ந்த தலை சிறந்த ஆழ்கடல் ஆய்வாளர் கிரகம் ஆண்காக்கு தெரிவிக்கிறார் இதனை இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற தர்காம் பல்கலைக்கழகத்தில நிலவியல் துறைப்பேராசிரியர் சிளன் மில்லோ உறுதி செய்தார். இந்நாகரீக நகரம்தான் உலகின் முதல் நாகரீக நகரம் இதன் சிறப்பு மொகஞ்சாதரோ, ஹரப்பா நாகரீகங்களைவிட பழமையும், சிறப்பும் மிக்கது என்று கூறியுள்ளனர். இவர்கள் ஆய்வும் முசுகுந்தன் நாகர்களை வென்றதும் குறித்து தமிழர்கள் கருத்து ஒத்துவருவதை காணலாம். எனவே புகார் நகரம் தலைச்சங்கம் அழிந்த காலத்தில் மூழ்கி இருக்கலாம் என்று தெரிய வருகிறது. அதன் எஞ்சிய பகுதியே கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை இருந்து மறைந்தாக கருதலாம்.


“நாகர்கள் தமிழராகவே தமிழகத்தில் வாழ்ந்தனர் எங்கும் வேறு இனமொழிக்கு உரியரென்ற பேச்சும் ஏற்படவில்லை தமிழினமாகவே வாழ்ந்தனர். எனவே அவர்கள் கடல் கொண்ட தமிழகத்திலோ தமிழகம் சூழ்ந்த நிலத்திலோ இருந்த தமிழினப்பிரிவினர்கள் என்றும் கடல்கோளின்  பயனாகவோ வேறு காரணங்களாலோ எங்கும் பரந்தவர் என்று கருத இடமுண்டு இது இன்றும் ஆய்விற்குறியது” என அப்பாதுரையார் கூறுவார்.

No comments: