கள்ளர் வரலாற்றுச் சுருக்கம் ---- 6

அகநானூற்றில்

வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்

என்ற வரிகளில் இருந்து வேங்கட மலைப்பகுதி தொண்டையருக்குறியது என்பது புலப்பபடா நிற்கும். எனவே கள்வர் தொண்டையர் என்பன ஒருவகுப்பாருக்கு வழங்கும் பெயராகும். தற்போது தொண்டைமான் என்ற பெயர் கள்ளர்களுக்கே வழங்குவதும் புதுக்கோட்டைம ன்னர்கள் தொண்டைமான்களாக இருப்பதாலும், அவர்கள் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பதாலும் கள்வர் தொண்டையர் கள்ளர் குடியைச்சேர்ந்தவர்கள் என்பது உறுதிபடுகிறது.

வேங்கட மலையில் இருந்த ஆதனுங்கன் என்ற வள்ளலும் இவ்வகுப்பினன் ஆவான் அவனை கள்ளில் ஆத்திரையனார் என்ற புலவர் புறநானூற்றில்

“எந்தை வாழி யாதனுங்க
ஏன்னெஞ்சந் திறப்போர் நிற்காண்குவரே
நின்னியான் மறப்பின் மறக்குங் காலை
என்னுயில் யாக்கையிற் பிரியும் பொழுதும்
என்னியான் மறப்பின் மறக்குவென்” என


எல்லோர் உள்ளமும் நெகிழும் வகையில் பாடி சிறப்பித்தார். இவ்வாறாக சிறப்புற்ற ஒரு சிலரைப் பற்றி பாடிய பாடலல்கள் நமக்கு வந்து கிட்டியுள்ளன. இவர்கள் போன்ற இன்னும் பலர் நமக்கு எட்டாத நிலையில் இருந்து இருக்க முடியும் அவர்களைப் பற்றிய செய்திகள் வருங்கால ஆய்வாளர்களுக்குக் கிடைக்கலாம்.

பழந்தமிழகத்தில் தமிழர்களுடன் ஒப்பப் பேசப்படும் மற்றோர் இனம் நாகர் இனமாகும். தென்னாட்டின் கீழ்ப்பகுதியில் ஆண்டனர் அவர்;களைப்பற்றி குறிப்பிடும்போது நாம் ஒன்றினை நினைவு கூர்தல் வேண்டும். தமிழகப் பழங்குடிகளான வில்லவர், மீனவர் என்போர் இந்திய முழுமையும் பரவி வாழ்ந்தனர் அவர்களை மக்கள் பெருக்கமும் நாகரீகமும் மிக்க நாகர்கள் வென்று நாட்டை கைகொண்டனர் என்று வரலாற்றாளர் கருதுகின்றனர். ஆவ்வகையில். ஆவர்கள் இந்திய, இலங்கை பர்மா (மியான்மர்) நாடுகளை ஆண்ட இனமாகும்.


கி.மு 13 ஆம் நூற்றாண்டு அளவில் கங்கைக்கும், யமுனைக்கும் இடைப்பட்ட பகுதியில் நாக அரசுகள் இருந்ததாக மகாபாரதத்தில் இருந்து கேள்விப்படுகிறோம். ஆதன் பின் சி.மு. 6 ஆம் நூற்றாண்டில் நாகர்களை நாம் மீண்டும் காண்கிறோம் மகதத்தை ஆண்ட நாககுடி மன்னன் அசாத சத்துரு காலத்தின்தான் கௌதமபுத்தர் தனது புதிய கோட்பாட்டை போதித்தார் அதற்கு நாகர்கள் பேராதரவு தந்தார்கள்.

No comments: