-------------------அள்ளுர்கிழான் சாமிகரிகாலன்
தமிழகத்தின் தொல் முதுகுடியைச் சேர்ந்தவர்கள் கள்ளர்கள் ஆவார். இவர்களைப் பற்றி பல அறிஞர்கள் பலவாறான கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
முடியுடை மூவேந்தருள் சோழர்கள் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
மு. சீனுவாச அய்யங்கார் சோழரை சாதியில் கள்ளர் என்றும் பாண்டியரை மறவர் என்றும் குறிப்பார்.
வின்சன் ஸ்மித் எனும் வரலாற்று அறிஞர் கள்ளரையும், பல்லவரையும் இணைத்துக் கூறுவார்.
சர்.வால்டர் எலியட் கள்ளர்கள்களை கலகத் கூட்டத்தார் என்றும் அவர்கள் ஆண்மை, அஞ்சாமை, வீரம் முதலிய பண்பு மிக்கவர்கள் என்பார்.
கள்ளர்கள் நாகர் இனத்தவர் என்று அறிஞர் வி. கனகசபை பிள்ளை அவர்களும் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் கூறுவர்.
கள்ளர்கள் தமிழகத்தின் வீரமிக்க தனித்தமிழ்த் தொல் குடியினர் என்று மொழி ஞாயிறு பாவாணர் கூறுவார்.
"கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடியினர் "
என்று வழக்கறிஞர் சுந்தரராசன் கூறுவார்.
மேலும் கல்லில் தோன்றியதால் கல்லர் என்று குறிப்பதே சிறப்பு என்பார் தமது தரணியாண்ட தமிழ் வள்ளல்கள் என்ற நூலில்.
இவ்வாறாக பலபடி போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் இலக்கான இக்குடியினரைப் பற்றி நாம் சிறிது அறிந்து கொள்வது நலமாகும்.
No comments:
Post a Comment