கள்ளர் வரலாற்றுச் சுருக்கம் ---- 5

                                பாண்டியர்கள் கள்ளர் குலத்தாருடன் எவ்வகையில் தொடர்பு கொண்டு இருந்தனர் என்பதனைப்பார்த்தோம். சுங்க காலங்களில் கள்வர் என்ற சொல் பயின்று வந்துள்ளது கள்வர் குலத்தார் மன்னராய் இருந்தனர் என்பதும் வெளியாகின்றது.

                                வேங்கடமலைப்பகுதியை ஆண்ட “புல்லி” என்ற மன்னர் வீரத்திலும் வள்ளன்னையிலும் மிக மேம்பட்டு வாழ்ந்தான் எனத் தெரிகிறது. அவனை மாமூலனாரும் பாடி இருப்பதில் இருந்து அவனது பெருமை புலப்படா நிற்கும்.

அகநானூறில்

“கழல் புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழப்புலம் வணக்கிய மாவன் புல்லி
விழவுடை விழுசீர் வேங்கடம்

புடையிலங் கழற்காற் புல்லி குன்றத்து”
“புல்லி நன்னாட் டும்பர்”
“பொய்யா நல்லிசை மாவன் புல்லி”
“நெடுமொழி புல்லி”


எனமாமூலனாரும்

புல்லி வயன்தலை நன்னாட்டு வேங்கடம்
மாஅல்யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடம்

எனக் கல்லாடனாரும் பாடியுள்ளனர் நற்றினையில் “கடுமான் புல்லிய காடிறந்தோரே” என மாமூலனர் குறிக்கிறார் பிறிதோர் இடத்தில் அம்பர் கிழான் அருவந்தையை வாழ்த்துமிடத்து

“காவிரி களையுந் தாழ்நீர்ம்படப்பை
நேல்விளை கழனி யம்பர் கிழவோன்
நல்லருந்தை வாழியர் புல்லிய
வேங்கட விறல்வரைப் பட்ட
ஓங்கல் வானத் துறையிலும் பலவே

என கல்லாடனார் புறநானூற்றில் குறிக்கிறார் இதனை நோக்கும் போது அவருக்கு புல்லியிடம் எத்தகைய ஈடுபாடு இருந்துள்ளது என உணரமுடிகிறது. இத்தகைய சிறப்பு மிக்க புல்லி கள்ளர் இனத்தவனாவான்.

No comments: