கள்ளர் வரலாற்றுச் சுருக்கம் ---- 3

                               கள்வர் - பகைவர், பிறர்பொருளை வௌ;வுவோர் என்று பொருள் கூறப்படுகிறது. பகைவர்கள் என்றால் அவர்கள் யாருக்குப் பகைவர்கள் என்று நோக்கும் போது தமிழ்ப் பகைவர்கள் அனைவர்க்கும் பகைவர்களார் பிறர் பொருளை வௌ;வுதல் அல்லது கவருதல் என்றால் எந்த இன மக்கள் மற்றவர் பொருளை கவராமல் இருப்பவர் என்று நோக்கும் போது கள்வர் என்பதற்கு உண்மையான வேறு பொருள் இருத்தல் வேண்டும் அதனையும் ஈண்டு காண்போம்.

                                       சீவக சிந்தாமணி 741ம் செய்யுளில் உள்ள

“ கள்ளராற் புலியை வேறுகாணிய” என்ற

தொடருக்க அரசனைக் கொண்டு சீவகனை போர் காண வேண்டி என்று பொருள் கண்டார் உச்சிமேற் புலவர் நச்சினார்கினியர் இங்கே கள்ளர் என்பதற்கு அரசர் என பொருள் கண்டார். சீவகனைப் புலி என்று கூறியதற்கு ஏற்ப அரசரைக் கள்ளர் என்றார் எனின் இங்கு வீரத்தின் மேம்பட்டார் என்று பொருள் படுகிறது. எனவே வீரம் எனும் பொருள் பற்றியே கள்வர், கள்ளர் என்ற பெயர்கள் தோன்றியதாகத் தெரிகிறது.

                              இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் நாட்டுத்தலைவர்களாகவும், வேளிர்களாகவும், முடிவேந்தர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், பிற்றை நாட்களில் சமீன்தார்களாகவும், பெருநில உடைமையாளராகவும் வாழ்ந்து வந்துள்ளனர். கள்ளர்கள் தொன்று தொட்டு ஆட்சி இனமாக இருந்த காரணத்தால் இன்றும் அவர்கள் வாழும் பகுதிகள் நாடுகாளாக பகுக்கப்பட்டு அதன் தலைமைப் பொறுப்பை கள்ளர் இனத்தவர்களே வகித்து வருகின்றனர் தஞ்சை, மதுரை பகுதிகளில் இன்றும் பல நாடுகளும் நாட்டுக் கூட்டங்களும் நடைபெறுவதைக் காணலாம்.

                குறிப்பாகப் பல இடங்களில் மற்ற சமுதாய மக்கள் பரவலாகவும், கள்ளர் இன மக்கள் சிறுபான்மையாகவும் உள்ள இடங்கிலும் அப்பகுதியி;ன் தலைமையை இவ்வினத்தார் ஏற்று செயல் பட்டு வருவதில் இருந்து அன்னாரது சிறப்பு உணரற்பாலதாகும். பல இடங்களில் மற்ற சமுதாய மக்கள் இவர்களை உரிமையுடன் “எங்கள் கள்ளர் எங்கள் கள்ளர்” என்று அழைப்பதை நோக்கும் போது இவர்கள் அச்சமுதாய மக்களுக்கு பல்லாற்றானும் உறுதுணையாய் இருந்து காத்து வருவது புலப்படும் எனவே இங்கு கள்ளர் என்ற சொல் தலைவர் என்ற பொருளில் வழங்கப்படுவது நோக்கத் தக்கதாகும்.

                    எனவே கள்ளர், கள்வர் சொற்கள் உயரிய பொருளைத் தருவதை நோக்க தலைவர், அரசர், கரியவர், உளம்கவர் பண்பாளர் என்று பொருள் கொள்ளலாம். இவ்வளவு சிறப்புப் பொருள் இருக்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பு பெற்ற ஒரு சமுதாயம் இழிபொருள் தரும் பெயரைத் தங்கள் குலப்பெயராக ஏற்பரா? ஏன்று சிந்தித்தால் அவர்களுக்கும் கள்ளர் என்ற சொல் மேற்கண்ட உயர் பொருளிலேயே வழங்கி இருத்தல் வேண்டும். மேலும் அவர்கள் எந்த தொல்குடியை சேர்ந்தவர்கள் என்பதைக் காண்போம்.

No comments: