கீரிப்பட்டியில், ஊர் மக்கள் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுப் போடாத 15 தலித் குடும்பத்தினர் மீதுவிதிக்கப்பட்ட தடைகளை பிறமலைக் கள்ளர் சமுதாயத்தினர் வாபஸ் பெற்றுள்ளனர்.
மதுரை மாவட்டம் கீரிப்பட்டி தலித் ஊராட்சித் தலைவர் பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பெரும்பான்மையானபிறமலைக் கள்ளர் சமுதாயத்தினர், ஊர் மக்கள் சார்பில் அழகுமலை என்பவரை நிறுத்தினர். அவரை எதிர்த்து விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் பூங்கொடி என்பவர் போட்டியிட்டார்.
|
15 குடும்பங்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். அவர்களுக்கு அசி, பருப்பு, காய்கறி, பால், தண்ணீர் போன்றவற்றைகொடுக்கக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கீரிப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தடை குறித்து சுப்பன் என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார்.இதையடுத்து மாவட்ட வருவாய் வட்டாட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் டிஎஸ்பி கோவிந்தராஜ் ஆகியோர்கீரிப்பட்டிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
கள்ளர் சமுதாயத் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தினர். தடையுத்தரவை வாபஸ் பெறுமாறு கோரினர். மேலும் கீரிப்பட்டியில்உள்ள கடைக்காரர்கள், டீக்கடை உரிமையாளர்களை சந்தித்து தடை உத்தரவை பின்பற்ற மாட்டோம் என்று எழுதி வாங்கினர்.
அதிகாரிகளின் வலியுறுத்தலைத் தொடர்ந்து தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக கள்ளர் சமுதாயத்தினர் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக அதிகாரிகளிடம் எழுத்துப் பூர்வமாகவும் உறுதிமொழி அளித்துள்ளனர்.
கீரிப்பட்டியில் தலித் சமுதாயத்தினர் மீது விதிக்கப்பட்ட தடைகள் குறித்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சுந்தரேசன்கூறுகையில், தலித் குடும்பங்களை ஒதுக்கி வைத்தது உண்மை என்றால் அதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். இதுபோன்ற தவறுகளுக்கு தூண்டுதலாக இருப்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.http://thatstamil.oneindia.mobi/news/2005/04/27/27233.html
No comments:
Post a Comment