சேதிராயர் - சேதிநாட்டு அரசகுலத்தினர்








தமிழகத்தின் பெருமைவாய்ந்த இன குழுக்களில் முக்குலத்தின் கள்ளர் பெருங்குடி முக்கியமானது ஆகும். சேதிராயர் என்பது கள்ளர்களின் பட்டபெயர்களில் ஒன்றாகும். சென்னை பல்கலைகழகத்தின் தமிழகராதி(Tamil Lexicon University of Madras) சேதிராயர் என்பதற்கு மூன்று பொருள்களை தருகிறது.

[i]சேதிராயர் என்பவர் தமிழகத்தின் நடுநாட்டரசர்.
[ii]திருவிசைப்பா ஆசிரியர்களில் ஒருவரான சிவனடியார்
[iii]கள்ளர்களின் பட்டங்களில் ஓன்று.

தொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கு இடைப்பட்ட பிரதேசத்தை 'நடுநாடு'{சேதிநாடு} என்று அழைத்தனர். சேதிராயர் என்பவர்கள் தமிழ்நாட்டின் நடுநாட்டை ஆண்ட அரசகுலத்தினர் என்பது புலனாகிறது. தொண்டை நாட்டிற்கும்-சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் இம்மாவட்டத்தை 'நடுநாடு' என்றனர். இதற்கு வேறு ஏதும் ஆதாரம் உண்டா ?
உண்டு.

சொல்ஆய்வின் படி சேதிராயர் என்பது சேதி + அரையர் என பிரிபடும்.
சேதி என்பது நாட்டின் பெயர் அரையர் என்பது அரசர் என பொருள்படும்.
ராயர் -> அரையர் -> அரைசர் -> அரசர்
இதன்படி
சேதி + அரசர் -> சேதி நாட்டு அரசர் என நேரடி பொருள் தருகிறது.

சேதிராயர் என பட்டபெயர் தரித்திரிப்போர் சேதி நாட்டு அரச வம்சத்தினர் ஆவார்கள்.
இதற்க்கு மேலும் ஆதாரம் உண்டு.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி தமிழ் பேருரையளராக பணிபுரியும் முனைவர் மு. பழனியப்பன் சில தகவல்களை தருகிறார். அதை கீழே காணலாம். " திரு விசைப்பாவின்
திரு கடைகாப்பு பதிகம்
பாடிய சேதிராயர் " ..........

" ஏறுமாறு எழில் சேதிபர் கோன் தில்லை
நாயனாரை நயந்துரை செய்தன " என்ற அடிகள்
10 ஆம் பாடலில் எடம் பெறுகின்றன.

இங்கு

சேதிராயர் " சேதிபர் கோன் " என விளிக்கப்பட்டுள்ளனர்.
இதன் வழியாக இவர் அரசர் என்பது உறுதிபடுத்தப்படுகிறது.
சேதி என்பது குல பெயர் ஆகும்.

" முதற் குலோத்துங்கன் (1070-1120) காலத்திலும் இராசராசர் சேதிராயர், இராசேந்திர மலையம்மான் என்று பட்டம் தரித்தவர்கள். திருக்கோவிலூர், கிளியூர் ஆகிய நகரங்களை தலைநகரங்களாக கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.

திருக்கோவிலூரில் வாழ்ந்த மெய்பொருள் நாயனாரும் சேதிநாட்டை சார்ந்தவர் என்ற பெரிய புராண குறிப்பு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.பெரியபுராணம் குறிப்பிடும் மெய்ப் பொருள் நாயனார் 'சேதியர்' என்ற பட்டப் பெயருடன் இப்பகுதியை ஆண்டதாக அறிகிறோம். இதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனையரையர் திருநாவலூரில் ஆண்டதாக தெரிகிறது
என முனைவர் மு. பழனியப்பன் குறிப்பிடுவது உறுதியான ஆதாரமாகும்.

ஆனால் வரலாறு என்பது
இலக்கிய ஆதாரத்தை மட்டும் எடுத்து கொள்ளவதில்லை. மேலும் நாணயம், கல்வெட்டு போன்றவற்றையும் துணை கொள்கிறது.
அதன்படி
கல்வெட்டு ஆதாரம் ஏதும் உண்டா? எனில் உண்டு.

(i ) இராசராசன், இராசேந்திரன் முதலான சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் சேதிராயன் என்ற பெயர் காணப்படுகிறது. என நா.மு. வே. நாட்டார் அவர்கள் கள்ளர் சரித்திரத்தில் குறிப்பிடுக்கிறார்.

(ii ) விழுப்புரம் மாவட்டத்தில்
நெய்வனை என்னும் ஊரில் சிவன்கோவிலில் கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் "பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்" என்றும்; இப்பதி "மிலாடு ஆகிய சனாதன வளநாட்டுக் குறுக்கை கூற்றத்துக்கு உட்டபட்ட ஊர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது கல்வெட்டு முதல் குலோத்துங்கன் சோழனின் 48 வது ஆண்டு காலத்திலிருந்து ............................... இராசேந்திர சோழ சேதிராயர் என்பவர் இக்கோவில் நடராசா மூர்த்தியை பிரதிட்டை செய்தார் என்ற குறிப்பு உள்ளது.

மேலும் சில கருத்துக்களை பார்ப்போம்.

போத்தப்பிராயர், காடவராயர், பல்லவர்(பல்லவதரையர்), தொண்டையர், சம்புவரையர், இலடராயர், மலைமான்(சேதிராயர்),
வானகோவைரையர், முனையதரையர், ஓயமானர், முத்தரயர், மழவராயர், பழுவேட்டரையர், இருக்குவேளிர் முதலிய பல்குடி சிற்றசர்கள் சோழர்களுக்கு அடங்கியவர் என்று சில குறிப்புகள் கூறுகின்றது.

ஆனால் இவர்கள் (சேதிராயர்) சூரியகுலத்தினரான சோழர் குலத்தின் கிளை குலத்தினர் ஆவார்கள்.
மேலும்

சர்க்கரை புலவரின் வழித்தோன்றலான திருவாளர், சர்க்கரை ராமசாமி புலவர் அவர்களின் வீட்டில் இருந்ததொரு மிக பழமையான ஏட்டில் ஏழு கூட்ராமும், பதினெட்டு நாடும், ஏழு ராயரும் குரப்பட்டுள்ளது.

ராயர் எழுதுவராவர்: 1 . சேதிராயர் 2 . காலிங்கராயர் 3 . பாணதிரியர் 4 . கொங்குராயர் 5 . விசையராயர் 6 . கனகராயர் 7 . கொடுமளுர்ராயர் என திரு ந. மு. வேங்கடசாமி நாட்டார் கள்ளர் சரித்திரம் 3 ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

நாம் மேலே கண்ட கல்வெட்டு இலக்கிய ஆதாரங்களில் இருந்து சேதிராயர் என்பவர்கள் சேதிநாட்டு அரசகுலத்தினர் என்பதும் அவர்கள் சூரிய குலமான சோழர் குலத்தின் கிளைகுடியினர் என்பதும் தெளிவாகிறது.

அவர்கள் தமிழ்நாட்டில் திருகோவிலூர், மற்றும் கிளியூர் என்ற நகரங்களை தலைநகரமாக கொண்டு நாடு நாடான செதினாட்டை ஆட்சி செய்தனர் என்பதும் அவர்கள் சேதிராயர் மற்றும் மலையமான் என்ற பட்டங்களை தரித்து ஆட்சி செய்தனர் என்பது புலனாகிறது.

புகழ்பெற்ற மன்னனானகடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிகாரியும் சேதிராயர் குலத்தினரே.மலையமான் திருமுடிக்காரி இப்பகுதியை ஆண்டதால் 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் [திருமுனைப்பாடிநாடு; சேதிநாடு; மகதநாடு; சகந்நாதநாடு]அவரவர் காலங்களில் அழைக்கப்பட்டது.
இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன்.
திருக்கோயிலூருக்கு அருகே இருக்கும் பண்டையகால குன்று, கபிலர் குன்று" . சங்க காலத்தில் மலையமான் குல மரபினர் இந்தப் பகுதியை ஆண்டு வந்ததாக இலக்கியங்கள் கூறுகிறது. சங்ககால புலவரான கபிலர் பாரியின் நெருங்கிய நண்பர் ஆவார். பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள் பாரியையும், பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர். தன் பெண்மக்கள் இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை நீத்தார்.

நண்பரின் இழப்பை தாங்கமுடியாத கபிலர் அந்த இருகுழந்தைகளையும் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்படைத்து விட்டு ஒரு குன்றின் மீது உயிர்விட்டதாக திருக்கோயிலூர் வீரட்டானத்தில் உள்ள இராசராசன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது[
சங்க கால கவிஞரான மாற்றோகத்து நப்பசலையார். மலையமான் சோழி ஏனாதி திருக்கண்ணன் என்பவரைப் பாடியிருக்கிறார். இவர் சோழனின் படைத்தலைவனாய் இருந்ததால்தான் 'ஏனதி' பட்டம் கிடைத்தது என்பர்
இராசராச சோழன்ராசராசனின் தாய் வானவன் மலையமான் குலத்தில் தோன்றியவர் கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக் கோயிலில் வைக்கப்பட்டது.

தற்போது சேதிராயர் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும் தஞ்சை மாவட்டத்தில் தென்னம நாட்டிலும் , திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காட்டிலும் மிகுந்து உள்ளனர்.

(கி.மு. 2ஆம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆண்ட சேதியரசன் மகாமேகவாகன காரவேலன், உதயகிரி - கந்தகிரி என்று வழங்கப்படும் மலைப்பகுதியிலுள்ள 'ஹத்தி கும்பா' (ஆனைக் குகை) என்ற குடைவரையில் தன்னுடைய வெற்றிகளைப் பறைசாற்றும் கல்வெட்டினைப் பொறித்து வைத்துள்ளான். தமிழ்நாட்டுக் கூட்டணி எனப் பொருள்படுகின்ற ‘த்ரமிர தேச சங்கதம்' பற்றி இக்கல்வெட்டுதான் குறிப்பிடுகிறது. காரவேலன் அக்கூட்டணியை முறியடித்துப் பாண்டிநாடு வரை சென்று முத்துக் குவியலைக் கவர்ந்து வந்த வீரச்செயல் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. காரவேலன், புராணங்களில் குறிப்பிடப்படும் சேதி அரச வம்சத்தவன் ஆவான். (மகாபாரதத்தில் இடம்பெறும் சிசுபாலன் சேதி வம்சத்தவன்.) இம்மன்னனுக்கும் ‘மலைய கந்த' குடியினர்க்கும் தாய் வழியிலோ, தந்தை வழியிலோ உறவு இருந்திருக்க வேண்டும். சங்ககாலத் தமிழகத்தில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த மலையமான்களைச் சேதிபர் என்றும் மலையமான்களின் ஆட்சிப் பகுதியைச் சேதி மண்டலம் என்றும் குறிப்பிடும் வழக்கம் உண்டு. இம்மரபு சற்றுப் பிற்பட்டதாயினும் இது காரவேலனின் தமிழகப் படையெடுப்புக் காலத்தில் நிகழ்ந்த தொடர்பின் விளைவாகலாம். பாண்டி நாட்டின் மீது காரவேலன் நிகழ்த்திய தாக்குதல் சங்க இலக்கியங்களில் பதிவு பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் திருவிளையாடற் புராணத்தில் மெய்க்காட்டிட்ட படலத்தில், வடபுலத்திலிருந்து படையெடுத்து வந்த சேதிபன் என்கிற கிராதர் கோமானைக் (கிராதர் என்று மலைக் குறவர்களைக் குறிப்பிடுவதுண்டு) கொந்தக வேளாளர் குலத்தைச் சேர்ந்த பாண்டியர் படைத்தலைவன் எதிர்கொள்ள நேர்வது குறிப்பிடப்படுகிறது. இது காரவேலனின் படையெடுப்பு தொடர்பான பதிவே எனத் தோன்றுகிறது----http://www.sishri.org/kurinji.html            )

typed by Kalaivanan -  நர்த்தேவர்
written by mayadevar

No comments: