மூவேந்தர்கள் முக்குலத்தோரே

Thursday August 17, 2006
வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள் என்ற தலைப்பில் ப்ரவாஹன் எழுதியதற்கு

என்னால் முடிந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளேன்
. தெளிவாக கொடுக்க வில்லை என்றாலும் குறிப்புகளால் கொடுத்துள்ளேன் சந்தேகம் வந்தால் எனது மின்னஞ்சல் கொடுக்கவும்

மூவேந்தர்கள் முக்குலத்தோரே சோழன் கள்ளர், பாண்டியன் மறவர்
, சேரன் அகம்படியர்.இங்கே சோழன் கள்ளர் என்பதற்கான ஆதாரங்கள் தொண்டைமான் என்பவர் கள்ளர்
, பல்லவராயன் என்பவர் கள்ளர் , திருமங்கையாழ்வார் என்வரும் கள்ளர்
,
1.விசயாலய சோழன் (850 – 880 , 836 – 870 )
இவனது தந்தை யார்என்று தெரியவில்லை முத்தரையரை வென்று தஞ்சையில் சோழர் ஆட்சியை அமைத்தவன் இவனே

2.ஆதித்த சோழன் த/பெ. விசயாலய சோழன் 871-907

3.1ம் பராந்தக சோழன் த/பெ. ஆதித்த சோழன்907-955

மதுரையும், ஈளமும் கொண்ட கோப்பரகேசரி என்ற பட்டம் பெற்றவன் சோழ பேரரசக்கு அஸ்திவாரம் அமைத்தவன் . தில்லைச் சிற்றம்பலத்துக்கு பொன் கூறை வேய்ந்தவன், சோழ சிகாமணி, சூரசிகாமணி , வீர நாராயணன் என்னும் சிறப்புப் பெயரைம் பெற்றவன். இவன் பெயரில் தான் வீராணம் ஏறியுள்ளது. இவனுக்கு 11 மனைவியர் 5 மகன்கள் 1. இராஜாதித்தன், 2. கண்டராதித்தன்,3.அரிகுலகேசரி, 4. உத்தமசீலி,5. அரிந்திகை (எ) அரிஞ்சயன்.

4.கண்டராதித்த சோழன் த/பெ. 1ம் பராந்தக சோழன் இரண்டாவது மகன் 950-957
மழவரையர் குலப்புதல்வி செம்பியன் மாதேவி சிவஞா செல்வரான கண்டராதித்தரின் மனைவி இவள் மகன் தான் மதுராந்தக தேவன் ( சிறிய பளுவேட்டரையரின் மருகன்)

5.அரிஞ்சயன் த/பெ. 1ம் பராந்தகனின் 3வத மகன் 956-957
இவர் மனைவி வைதும்பராயர் குலப் புதல்வி ராணி கல்யாணி சுந்தரச் சோழரின் தாய் இன்னொரு மனைவி சேரமான் மகள் பராந்தகன் தேவி

6.2ம் பராந்தகன் (சுந்தரச் சோழன்)த/பெ. அரிஞ்சயன் 957-970
பத்தாண்டுகள் அரசாண்ட அவனுக்கு பாரிச நோய் தாக்கியது மூத்தமகன் ஆதித்த கரிகாலன் வடக்கே காஞ்சியில் அரச பிரதிநிதியாக மாதண்ட நாயகன்(பிரதம சேனாதிபதி) கடைசிபுதல்வன் அருள்மொழிவர்மன் (பிற்காலத்தில் ராஜராஜன்) இலங்கைத்தீவில் போர்புரிந்து கொண்டிருந்தான் இருவருக்கும் நடுவில் குந்தவை தேவி பிறந்தவர்

7.உத்தமசோழன் (மதுராந்தகன்)த/பெ. கண்டராதித்த சோழன் 973-985
கண்டராதித்த சோழனின் மனைவியும் உத்தமசோழனின் தாயும் ஆன செம்பியன் மாதேவி இவரிடம் தான் ராஜராஜன் வளர்ந்தார்

8.1ம் ராஜராஜன் த/பெ. 2ம் பராந்தகன் 985-1014(தஞ்சைக் கோயிலை கட்டியவன்)
தமக்கை குந்தவை நாச்சி ராசராசனின் பட்டத்தரசி உலகமாதேவியும் இல்லத்தரசி வானதி தேவியும் . இளங்குழவிகளாகிய ராசேந்திரன், குந்தவை

9.1ம் ராஜேந்திரன் த/பெ. 1ம் ராஜராஜ ன் 1012-1044

10.1ம் ராஜாதிராஜன் த/பெ. 1ம் ராஜேந்திரன் மூத்தமகன் 1018-1054
11.ராஜேந்திர சோழதேவன் த/பெ. 1ம் ராஜேந்திரனின் 2வது மகன் 1051-1063
12.வீரராஜேந்திர சோழன் (மேல்கொண்டான்) த/பெ. ராஜேந்திர சோழதேவன் 1063-1070

13.ஆதிராஜேந்திர சோழன் த/பெ. வீரராஜேந்திர சோழன் 1067-1070
14.1ம் குலோத்துங்க சோழன் Җ ராஜேந்திர சோழன் மகளின் மகன் 1070-1120 (மேல் கொண்டான்)
சந்திர குலத்துதித்த சாளுக்கிய அரசனாகிய இராசாராசனுக்கு மனைவியும் சூரிய குலத்து அரசனாகிய முதல் இராசேந்திர சோழன் என்னும் கங்கைகொண்ட சோழனுடைய மகளும் ஆன திருமகள் போன்ற அம்மங்கா தேவியின் மகனாவான் இவன் இவனை இவனது பாட்டி பார்த்தாள் அரசர்களுக்கு எல்லாம் அரசனாகு விளங்கும் தகுதியை அறிந்தாள் ;'என் மகள் பயிற்றுப் பிள்ளையாகிய இவன். எமக்குச் சுவீகார புத்திரனாகிச் சூரிய குலத்தை வளர்த்து விளக்க வல்லவன் ஆவான்' என்று கூறி அவனைச் சுவீகாரம் கொண்டாள்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி. , கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி.
(இவனது காலத்தில் தான் துவாகுடி பெரியகுளத்தில் உள்ள நாட்டுக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது சிவன்கோவிலும் இவனது காலத்தில் தான் கட்டப்பட்டது இவன் மேல்கொண்டான் இவனது படைதளபதி கருணாகரத்தொண்டைமான்)
15.விக்ரமசோழன் த/பெ. 1ம் குலோத்துங்க சோழன் 1118-1135

16.2ம் குலோத்துங்க சோழன் த/பெ. விக்ரமசோழன்1133-1150

சேக்கிழார்: இவர் சங்கநூற் பயிற்சியுடையவர். 63 நாயன்மார்களது வாழ்க்கை வரலாற்றைக் கூறும் 'பெரியபுராணம்' (திருத்தொண்டர் புராணம்)என்னும் நூலை இயற்றியவர். இவ்வாறு தலைப்பட்டிருந்ததனால் இப்புராணம் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட ஒரு காப்பியம் எனச் சிலர் கூறுவர். இவர் இரண்டாம் குலோத்துங்கனுக்கு அமைச்சராய் விளங்கியவர். அப்போது இவருடைய இயற்பெயர் 'அருண் மொழித்தேவர்'

17.2ம் ராஜராஜ சோழன் த/பெ. 2ம் குலோத்துங்க சோழன் 1146-1163
18.2ம் ராஜேந்திர சோழன் Җ 2ம் ராஜராஜனின் மைத்துனன் 1163-1178
19.3ம் குலோத்துங்கள் த/பெ. 2ம் ராஜராஜ சோழன் 1178-1218 (மேல்கொண்டான்)
20.3ம் ராஜராஜசோழன் த/பெ. 3ம் குலோத்துங்கள் 1216-1256
21.4ம் ராஜேந்திரசோழன்
த/பெ.3 ம் ராஜராஜசோழன்

1246-1279 மூன்று மன்னர்கள் கள்ளர் அதுவும் மேல்கொண்டார் என காட்டப்பட்டது மற்றவர்கள் அவர்களது முன்னோர் வாரிசுகளாவர் இதில் முதலாம் குலோத்துங்கள் மட்டும் ராஜேந்திர சோழனின் மகள் வயிற்றுப் பிள்ளை

. அவனை அவனது பாட்டி தத்து எடுத்துக் கொண்டதால் அவனும் மேற்கொண்டான் மழவரையர்

கள்ளர்களின் பட்டபெயர்களில் ஒன்று.

இப்பொழுது பெரிய மனிதர்களாகவோ, பெரிய மனிதர்களின் வழியினராகவோ கள்ளர்கள் பெருந்தொகையினராய் இருந்து வரும் காவிரி நாடே சோழர்கள் வழி வழியிருந்து ஆட்சி புரிந்த நாடு என்பதை முதலில் நினைவிற் கொள்ளவேண்டும்.

சோழர்கள் சோணாடேயன்றி வேறு நாடுகளையும் ஓரொருகாலத்தில் வென்று ஆண்டிருக்கின்றனர். சோழரிற் சிலர்க்கு 'கோனேரிமேல் கொண்டான்' என்னும் பட்டம் வழங்கியிருக்கிறது, இப்பெயர் தரித்திருந்தோரும் , கொங்கு நாட்டையும் ஆட்சி புரிந்தோருமான மூன்றாம் குரோத்துங்க சோழனும், வீர சோழனும் முறையே வெங்கால நாட்டுக் கம்மாளர்க்கச் செய்திருக்கும் தீர்ப்பு ஒன்றும், கருவூர்க் கோயிற் பணியாளர்க்கு இறையிலி நிலம் விட்டிருப்பதைக் குறிப்பது ஒன்றுமாக இரண்டு கல்வெட்டுக்கள் கருவூர் பசுபதீச்சுரர் கோயிலில் வெட்டப்பட்டுள்ளன. அவை பின் வருவன:

"திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீகோனேரிமேல் கொண்டான் வெங்கால நாட்டுக் கண்மாளர்க்கு 15-வது ஆடி மாதம் முதல் தங்களுக்கு நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி, பேரிகை உள்ளிட்டவும் கொட்டுவித்துக் கொள்ளவும், தாங்கள் புறப்படவேண்டும் இடங்களுக்குப் பாதரஷை சேர்த்துக் கொள்ளவும், தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக்கொள்ளவும் சொன்னோம். இப்படிக்கு இவிவோலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்லத் தக்கதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலும், செம்பிலும் வெட்டிக் கொள்க. இவை விழுப்பாதராயன் எழுத்து."

ஆனால் மறைமலையடிகளோ மூன்றாம் குலோத்துங்கனை வேளாளர் என்றே சொல்கிறார்

அது தவறு அவர் கள்ளரே
இந்த வேளாளர் எப்படி வந்தார்கள் :-

"பாண்டி நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் இடையிலுள்ள பகுதி பன்றி நாடு எனப்பட்டது. இந்நாட்டில் முதலில் இருந்தவர் வேடுவர். பின் குறும்பர் வந்தனர். அவர்க்குப்பின் வெள்ளாளர் வந்தனர். பன்றி நாட்டின் ஒரு பகுதி பாண்டியர் ஆட்சியின் கீழும், மற்றெரு பகுதி சோழர் ஆட்சியின் கீழும் இருந்தன. காராள வெள்ளாளர் கி.பி. முதல் நூற்றாண்டின் முன்பே சோழ தேயத்திற்கு குடியேறி விட்டனர். அவர்கள் தங்கள் உழவு தொழிலால் ஏற்பாரது வறுமையைப் போக்கி, அரசற்குப் பொருள் பெருக்கினார்கள். மூவேந்தருக்குட்பட்டுச் செல்வர்களாய் இருந்திருக்கின்றனர். சேர சோழ பாண்டியர்கள் வெள்ளாள குலத்தவரென்று கானகசபைப்பிள்ளை யவர்கள் கூறுவது தவறு. ஆதொண்டைச் சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து வெள்ளாளர்களைச் சோணாட்டல் குடியேற்றினர் என்றும், பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கீழ்க் காஞ்சியிலிருந்து நாற்பத்தொண்ணாயிரம் வேளாண்குடிகளைப் பாண்டி நாட்டிற் குடியேற்றினர் என்றும் தெக்கத்தூர், சுப்பிரமணியவேளார் என்பாரிடம் உள்ள ஒரு ஒலைச்சுவடியில் குறித்திருக்தகிறது. குறும்பரைத் துரத்தியடித்து வெள்ளாளர் தங்களை நிலத்தலைவராகச் செய்துகொண்டிருக்க வெண்டும். வெள்ளாளரைப் பற்றிய சாசனங்களெல்லாம் அவர்களை 'நிலத்தரசு' என்றே குறிப்பிடுகின்றன. சோழ பாண்டியரைப்போல் முடியரசாக இல்லாமை பற்றியே நிலத்தரசு என்று குறிப்பிட்டடிருக்கவேண்டும். நெடுங்காலம் வெள்ளாளர் நலத்திலும் பலத்திலும் மிக்கு வாழ்ந்தனர். அதன் பின், கோனாடானது சம்மதிராயர் கடம்பராயர், மாளுவராயர், கொங்குராயர், கலிங்கராயர், அச்சுதராயர், குமதராயர் என்ற தலைவர்களிடம் கீழ்ப்பட்டிருந்தது.


நான் தெளிவாக எழுத வில்லை யென்றாலும் தங்களது சந்தேகங்களை எனத தளத்தில் பண்டித நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் கள்ளர் சரித்திரத்தில் பாருங்கள்.
http://ennar.blogspot.com/2006/03/1.html
--
தங்களது
என்னார்
www.ennar.blogspot.com
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20608257&format=html

7 comments:

Several tips said...

சிறந்த விளக்கங்கள்

VILMEENKODI said...

இந்திய துணைக்கண்டத்தின் அசுர-திராவிட ஆரம்பம்

பண்டைய வட இந்தியாவில் திராவிட ஆட்சி

பல திராவிட இராச்சியங்கள் வட இந்தியாவிலும் பண்டைய காலங்களில் இருந்தன. பண்டைய இலக்கியங்களில், திராவிட ஆட்சியாளர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய இந்தியாவில், தானவர், தைத்யர், பாணர், மீனா மற்றும் வில்லவர் ராஜ்யங்கள் இருந்தன. கங்கை நதியின் வடக்குப் பகுதியில் மட்டுமே ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திராவிட வேர்களைக் கொண்ட பல பாணாசுரர்கள் வட இந்தியாவை ஆண்டனர்.

திராவிட வில்லவர்-பாணர் வம்சங்கள்
1. தானவர் தைத்யர்
2. பாண மீனா வம்சங்கள்.
3. வில்லவர் - மீனவர் வம்சங்கள்

தானவரும் வில்லவரும் பாணரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் மகாபலி பட்டம் பெற்ற அரசர்களால் ஆளப்பட்டவர்கள்.

தானவர் மற்றும் தைத்யர்

இந்தியாவின் ஆரம்பகால இலக்கியங்களில் தானவா மற்றும் தைத்யா என்று அழைக்கப்படும் இரட்டை பழங்குடியினரும், சிந்து பகுதியில் அவர்களின் மன்னரான மகாபலியும் குறிப்பிடப்பட்டனர். தனு என்பது வில் என்று பொருள். தானவா குலங்கள் திராவிட வில்லவர் - பாண மக்கள் ஆயிருக்கலாம். வில்லவர் மற்றும் பாண மக்களும் மஹாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகசிபு மன்னர் மகாபலியின் மூதாதையர் ஆவார்.

தானவர் , தைத்யர், பாணர் அனைவரையும் அசுரர்கள் என்று அழைத்தனர். திராவிடர்களும் அசுரர்களும் ஒரே குல மக்களாக இருக்கலாம்.

சிந்து சமவெளியில் தானவர்(கிமு 1800)

சிந்து மன்னர் விரித்ரா (விருத்திரர்)

விரித்ரா ஒரு ஆரம்பகால தானவா மன்னர், அவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை ஆட்சி செய்திருக்கலாம்.

நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த சிந்து நதியின் கிளைகளில் பாம்புகளின் வடிவத்தை ஒத்த பல கல் அணைகளை விரித்ரா கட்டியிருக்கலாம். சிந்து பகுதியில் விரித்ராவுக்கு 99 கோட்டைகள் இருந்தன.

ரிக் வேதத்தின்படி, விரித்ரா இந்திரனால் கொல்லப்படும் வரை உலகின் அனைத்து நீரையும் சிறைபிடித்தான். விரித்ராவின் 99 கோட்டைகளையும் இந்திரன் அழித்தான்.

விரித்ரன் போரின் போது இந்திரனின் இரண்டு தாடைகளை உடைத்தார், ஆனால் பின்னர் இந்திரனால் வீசப்பட்டார், வீழ்ச்சியடைந்தபோது, ​​ஏற்கனவே சிதைந்துபோன கோட்டைகளை நசுக்கினார்.

இந்த சாதனை காரணம், இந்திரன் "விரித்ரஹான்" அதாவது விரித்ராவின் கொலைகாரன் என்று அறியப்பட்டார்.

இந்திரனின் சகோதரர் உபேந்திரா

இந்திரனின் சகோதரன் உபேந்திரனை விருத்திரனை தாக்க இந்திரன் கட்டளையிட்டான். உபேந்திரா விருத்திராவை தாக்கி கொன்றார். உபேந்திரா விஷ்ணு என்றும் கோபா என்றும் அழைக்கப்பட்டார். கோபா என்றால் கால்நடைகளின் பாதுகாவலர் அல்லது மேய்ப்பவர் என்று பொருள்.

விரித்ராவின் தாய் தனு

விரித்ராவின் தாய் தனு அசுரரின் தானவா இனத்தின் தாயாகவும் இருந்தவர், பின்னர் இந்திரனால் அவரது இடியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.

மூன்று தேவர்கள், வருணன், சோமன் மற்றும் அக்னி ஆகியோர் வ்ரித்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு உதவுமாறு இந்திரனால் வற்புறுத்தப்பட்டனர். அதேசமயம் அதற்கு முன்பு அவர்கள் விரித்ராவின் பக்கத்தில் இருந்தபோது விரித்ராவை தந்தையே என்று அழைத்து வந்தனர்.

சிந்து மன்னர் வாளா

விரித்ராவின் சகோதரரான வாளா அணை கட்டி தடுப்பவரான விரித்ராவுக்கு இணையாக அணை கட்டிய போது நதிகளை விடுவிப்பதற்காக இந்திரனால் கொல்லப்பட்ட ஒரு கல் பாம்பு (அணைக்கட்டு) உண்டாக்கியவர்.

ரிக் வேதம் 2.12.3 இந்திரன் டிராகனைக்(அணைக்கட்டு) கொன்றது, ஏழு நதிகளை(சப்த சிந்து நதிகள்) விடுவித்தது, மற்றும் வாளாவின் குகையில் இருந்து கின்களை (பசுக்களை) வெளியேற்றியது.

VILMEENKODI said...

அசுர திராவிட துடக்கம்

சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு

சிந்து சமவெளியில் சிந்து நதியி்ன் ஏழு துணை நதிகளிலும் பாம்புகளின் வடிவத்தில் விரிவான அணைகள் கட்டப்பட்டிருந்தது. சிந்து சமவெளி ஒரு விவசாய நாடாக இருந்ததால் அசுர- தானவா மன்னர் விருத்திரர் பல அணைகளைக் கட்டினார். ஆரியர்கள் பெரும்பாலும் ஆயர்களாதலால் ஆறுகள் தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை . ஆரியர்களின் மன்னனான இந்திரன், அசுர மன்னன் விருத்திரருடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். இந்திரன் விரித்ரன் கட்டிய அனைத்து அணைகளையும், விரித்ரனுடைய 99 கோட்டைகளையும் அழித்தார்.

விரித்ராவுக்குப் பிறகு அவரது சகோதரர் வாளா சிந்து பள்ளத்தாக்கின் மன்னரானார். மீண்டும் வாளா அனைத்து கிளை நதிகளிலும் அணைகள் கட்டினார். வாளா ஆரியர்களின் கால்நடைகளையும் கைப்பற்றி ஒரு குகையில் அடைத்தார். இந்திரன் வாளா மன்னரையும் கொன்றார். வாளா மன்னர் கட்டிய நீண்ட கல்பாம்பு போல காணப்பட்ட அணைகளையும் இந்திரன் தகர்த்தார். இந்திரன் அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் குகையிலிருந்து விடுவித்தார். அணைகள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பாசனம் மற்றும் வேளாண்மை தோல்வியடைந்தது. இறுதியில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் முடிவுக்கு வந்தது.


பிராஹுய்

பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மெஹர்கரில், ஹரப்பா-சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம் (கிமு 7000 முதல் சி. 2500 கிமு வரை) இருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இன்றும் பிராஹுய் என்ற வட திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.

VILMEENKODI said...

அசுர திராவிட துடக்கம்

தைத்யர் மற்றும் தானவர் குலங்களின் கிளர்ச்சி

தைத்ய குலத்தின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார். தைத்ய மன்னர் மகாபலியின் தலைமையில் தானவர்கள் தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) எதிராக கிளர்ச்சி செய்தனர்.

மகாபலியைக் கொன்ற உபேந்திரா

மகாபலி திராவிட தானவ மற்றும் தைத்திய பழங்குடியினரின் நீதியும் கருணையும் கொண்ட மன்னன் ஆவார்.
இந்திரனின் சகோதரனான உபேந்திரா, பிராமணனாக மாறுவேடமிட்டு மகாபலியிடம் சென்று அவனைக் கொன்று வெற்றி பெற்றார். இது உபேந்திராவை ஆரியர்களிடையே பிரபலமாக்கியது. ஆரம்பகால வேத காலத்தில் கிமு 1500 மற்றும் கிமு 500 க்கு இடைப்பட்ட காலத்தில் உபேந்திரா விஷ்ணு எனப்படும் சிறு தெய்வமாக வணங்கப்பட்டார். கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான வேத காலத்தின் பிற்பகுதியில், ஆரிய இனத்தின் முக்கிய கடவுளாகவும் பாதுகாவலராகவும் இருந்த மகாவிஷ்ணுவாக உபேந்திரா அடையாளம் காணப்பட்டார்.


சத்திய யுகத்தின் போது தேவர்கள் (ஆரியர்கள்) தானவர்களை சொர்க்கத்திலிருந்து (வட இந்தியாவிலிருந்து) நாடுகடத்தினர்.

நாடுகடத்தப்பட்ட பின்னர், தானவர்கள் விந்திய மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தானவா என்றால் தனு உள்ளவர்கள் அதாவது வில் உள்ளவர்கள், வில்லவர். பாணா மற்றும் அவர்களது கிளைக்குலங்களான தைத்யா மற்றும் தானவா ஆகியோர் அசுரர்களாக கருதப்பட்டனர். திராவிட வில்லவர், மீனவர் மற்றும் அசுர பாணா, மீனா குலங்கள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர்.

தானவா மல்யுத்த வீரர்கள்

கம்ச மன்னரின் உத்தரவின்படி, அக்ரூரா என்ற யாதவ மூப்பர் கிருஷ்ணர் மற்றும் பலராமரை,மதுராவில் நடந்த ஒரு தனுஷ் யாகம் மற்றும் நட்பு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருந்தார். பயங்கரமான தானவா மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா ஆகியோர் இளம் கிருஷ்ணர் மற்றும் பலராமனால் கொல்லப்பட்டனர்.

புத்தமதத்தில் தானவர்

புத்தமதத்தில் அவர்கள் வில் தரிக்கும் தானவேகச அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் ஆவர். அவர்கள் பல திராவிட நாடுகளை உண்டாக்கினர். தென்னிந்தியாவில் பல பாண்டியன் ராஜ்யங்கள் வில்லவர்-மீனவர் குலங்களால் நிறுவப்பட்டன.

வட இந்தியாவில் வில்லவர் தொடர்புடைய பாணா-மீனா வம்சங்கள் மகாபலி என்று அழைக்கப்படும் மன்னர்களால் ஆளப்பட்ட ஏராளமான பாணப்பாண்டியன் ராஜ்யங்களை நிறுவினர்.

மகாபலி வம்சம்

வில்லவர் மற்றும் பாணர்கள் இருவரும் அசுர மன்னர் மகாபலி மற்றும் அவருடைய மூதாதையரான ஹிரண்யகசிபு ஆகியோருடைய வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறினர். தென்னிந்திய பாண மற்றும் பாண்டியன் மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தி வந்தனர். ஹிரண்யகசிபுவின் பண்டைய தலைநகரம் இரணியல் (ஹிரண்ய சிம்ஹ நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.

கன்னியாகுமரி புராணத்தில் பாணாசுரன்

பாணாசுரன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பொதுவான கடவுளான பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார். முழு பிரபஞ்சத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் கொல்லப்படமாட்டார் என்ற அழியாத வரத்தை பாணாசுரன் பெற்றார். திருமணமாகாத பெண் அல்லது குழந்தையால் மட்டுமே பாணாசுரனை கொல்ல முடியும். கன்னியாகுமரி பராசக்தியின் அவதாரமாக பிறந்தார். பாணாசுரன் கன்னியாகுமரியை கடத்த முயன்றார் ஆனால் கன்னியாகுமரி தேவியால் கொல்லப்பட்டார்.

சீதையின் சுயம்வரத்தில் பாணாசுரன்

பாணாசுரன் மற்றும் ராவணன் இருவரும் சீதா தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இராவணனும் பாணாசுரனும் வில்லைப் பார்த்தவுடன் அமைதியாக நழுவி விட்டனர்.

மகாபாரத காலத்தில் பாணாசுரன்

பாணாசுரனின் மகள் உஷா பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவு கண்டார். உஷாவின் தோழி சித்ரலேகா, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலம், கிருஷ்ணரின் அரண்மனையில் இருந்து அனிருத்தனை கடத்தி, உஷாவிடம் கொண்டு வந்தார். அனிருத்தன் உஷாவை விரும்பினார் ஆனால் பாணாசுரன் அவனை சிறையில் அடைத்தார். இது பகவான் கிருஷ்ணர் பலராமன் மற்றும் பிரத்யும்ன னுடன் ஒரு போருக்கு வழிவகுத்தது, பாணாசுரன் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு உஷாவுடன் அனிருத்தனுக்கு திருமணம் நடந்தது.

ஆந்திராவில் ஒரு பாண இராச்சியம் இருந்தது, இது விஜயநகர நாயக்கர்கள் உட்பட பலிஜாக்களின் பல ஆளும் வம்சங்களை உருவாக்கியது. மன்னன் மகாபலியில் தோன்றியதால் அவர்கள் பலிஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பலிஜாக்கள் பாணாஜிகா அல்லது வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
வாணாதி ராயர், வன்னியர்,வானரர் மற்றும் வாணர் ஆகியவையும் தெலுங்கு பாணர்களின் பாண வம்ச பட்டங்கள் ஆகும்.

VILMEENKODI said...

அசுர திராவிட துடக்கம்

வாணர்

பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் மேலும் வானரர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.

கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்

கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.

கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.


பாண்பூர்

வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

மகாபலி

மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.


மீனா வம்சம்

இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

பாணா மீனா குலங்கள்

வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

திராவிட பாரம்பரியம்

உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

VILMEENKODI said...

அசுர திராவிட துடக்கம்

வில்லவர் மீனவர்

தமிழ் வில்லவர் மற்றும் அதன் துணைக்குழுக்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் என்று அழைக்கப்பட்ட அவர்களின் கடலில் செல்லும் உறவினர்கள், இவர்கள் அனைவரும் பண்டைய பாண்டியன் இராச்சியத்தை நிறுவியவர்கள் ஆவர். பண்டைய பாண்டியன் மன்னர்கள் தங்கள் துணைக்குலங்களால் அறியப்பட்டனர் எ.கா. மலையர் குலம்-மலயத்வஜ பாண்டியன். வில்லவர் குலம்-சாரங்கத்வஜ பாண்டியன் மீனவர் குலம்-மீனவ பாண்டியன்போன்றவர்கள்.

வில்லவர் குலங்களின் இணைப்பு

பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் மீனவர் குலங்களுடன் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

பாண்டிய ராஜ்ஜியத்தின் பூர்வீகம்

பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆரம்பம் குமரிக்கண்டத்தில் வரலாற்றுக்கு முந்தையது. தலைநகரங்கள் தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரை.

காலவரிசை

1. முதல் பாண்டிய இராச்சியத்தின் அடித்தளம் (கிமு 9990)
2. முதல் பிரளயம் (கிமு 5550)
3. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யம்
4. இரண்டாம் பிரளயம் (கிமு 1850)
5. மூன்றாவது பாண்டிய சாம்ராஜ்யம்
6. சங்க யுகத்தின் முடிவு (கி.பி. 1)


பாண்டியன் ராஜ்யத்தின் பிரிவு

பண்டைய பாண்டிய இராச்சியம் தமிழத்தில் சேர, சோழர் மற்றும் பாண்டியன் ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது.

வில்லவர் ராஜ்யங்களின் முடிவு.

கி.பி 1120 இல் அரேபியர்களின் உதவியுடன் கேரளாவைத் தாக்கிய துளு-நாயர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர வம்சம் கொடுங்கலூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கி.பி 1310 இல் மாலிக் கஃபூரின் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீதுள்ள தாக்குதல் மற்றும் தோல்விக்குப் பிறகு, வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் துளு-நேபாள ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி 1335 க்குப் பிறகு கேரளாவில் அஹிச்சத்திரம்-நேபாளத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

தமிழ்நாட்டை தெலுங்கு பலிஜாக்கள் மற்றும் வாணாதிராயர்கள் ஆக்கிரமித்தனர். வாணாதிராயர்கள் தமிழ்நாட்டின் கங்கை நாகர்களின் தலைவர்கள் ஆனார்கள். கி.பி 1377 க்குப் பிறகு கேரளாவும் தமிழகமும் பாண மன்னர்களால் ஆளப்பட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு வடுக நாகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

தெற்கே வில்லவர் குடியேற்றம்
கேரளா
1. கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு இடம்பெயர்வு (கி.பி 1102)
2. கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்வு (கி.பி 1335)

தமிழ்நாடு
1. தஞ்சாவூரில் இருந்து களக்காட்டுக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
2. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
3. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்திற்கு இடம்பெயர்வு (கி.பி. 1377 முதல் கி.பி .1640 வரை)

வட இந்தியாவில் வில்லவர்
வில்லவர் குலங்கள்
1. வில்லவர் = பில்
2. மலையர் = மலேய, மலய
3. வானவர் = பாணா
4. மீனவர் = மீனா

வில்லவர் பட்டங்கள் மற்றும் பாணரின் பட்டங்கள் வில்லவர் = பில், பில்லவா, சாரங்கா, தானவா
மலையர் = மலெயா, மலயா, மெர், மேரு, மெகர்
வானவர் = பாணா, வானாதிராயர்
மீனவர் = மீனா, மத்ஸ்யா
நாடாள்வார் = நாடாவா, நாடாவரு, நாடாவரா.
நாடார் = நாடோர், தோற்கே நாடோர், உப நாடோர், நாடாலா, நாடார்வால்
பணிக்கர் = பணிக்கா
சாணார்=சண்ணார், சாணான், சாண்டார்
சான்றார் = சான்றாரா, சான்தா
பாண்டியன் = பாண்ட்யா
மாவேலி = மகாபலி

முடிவுரை

வில்லவர்-நாடார் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட வில்லவர் மற்றும் பாண குலங்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி ஆட்சியாளர்களைச் சேர்ந்தவை. டெல்லி படையெடுப்பைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலைதான் வில்லவரின் வீழ்ச்சிக்குக் காரணம். மற்றொரு காரணம் வில்லவர் மற்றும் பணிக்கர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியது.


__________________________________________

VILMEENKODI said...

சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆரிய மற்றும் நாக குலத்திலிருந்து வந்தவர்கள் என்ற தவறான கூற்று


ஆரிய மற்றும் நாக குலங்கள் சேர சோழ பாண்டியர்களாக வேடம் போடுகிறார்கள்.
கேரளாவில் ஒருபோதும் தமிழ் பேசாத நம்பூதிரிகள் பந்தளம் பாண்டியர்களாக நடிக்கிறார்கள். பாண்டியர்கள் தங்கள் பார்கவகுலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்பூதிரிகள் கூறுகின்றனர். பார்கவகுலம் பரசுராமரால் நிறுவப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆரிய-நாக இந்திரனின் குலத்திலிருந்து வந்த பல்வேறு நாக குலங்கள் திராவிட சேர சோழ பாண்டிய மன்னர்களாக வேடம் போடுகிறார்கள். சேர சோழ பாண்டியன் போன்ற திராவிட வில்லவர் மன்னர்களின் மூதாதையர் இந்திரன் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்திரன் மற்றும் நாகர்கள் திராவிட வில்லவர் மீனவர் மக்களுக்கு எதிரிகளாக இருந்தனர். நாகர்கள் முற்றிலும் வேறுபட்ட வட இந்திய இனமாகும்.

சோழர்களும் கேரளாவின் நம்பூதிரி பாண்டியர்களைப் போலவே பார்கவ குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நாகர்கள் கூறுகின்றனர். சேர சோழ பாண்டிய வம்சங்கள் ஆரிய பிராமண நம்பூதிரிகளுடனோ அல்லது கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வெள்ளாளர் போன்ற நாகர்களுடனோ தொடர்பு உன்னவர்கள் இல்லை.

சேர சோழ பாண்டிய வம்சங்கள் திராவிடர்களான வில்லவர்-நாடாழ்வார் குலங்களிடமிருந்து வந்தவை. மீனவர் மற்றும் இயக்கர் குலங்களால் ஆதரிக்கப்பட்டனர். வில்லவர் பிரபுத்துவம் நாடாள்வார் அல்லது நாடார் குலங்கள் என்று அழைக்கப்பட்டது. வானவர் குலத்தினர் சோழர்களாகவும், வில்லவர்-மீனவர் குலங்கள் பாண்டியர்களாகவும், வில்லவர் குலங்கள் சேரர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.


________________________________________