விருமாண்டி, மாயாண்டி, பேயாண்டி

விருமாண்டி, மாயாண்டி, பேயாண்டி

முன்னாள் மதுரை மாவட்டத்தினைச் சேர்ந்த உசிலம்பட்டி தற்போது புதியதான தேனி மாவட்டத்தில்
>அமைந்துள்ளது. உசிலம்பட்டியும் அதன் அருகாமை ஊரினில் 'பிரமலைக் கள்ளர்', என்று அழைக்கப்படும் அன்பர்கள்
>வாழ்கின்றனர். மிகவும் பின்தங்கியவர்களாக க்கணக்கிடப்பட்டதுடன் குற்றவியல் இயல்புடையவர்களாக ஆதி
>நாளில் கருதப்பட்டு காவற்துறையின் நேரடி கவனத்தில் அவர்களை கண்காணித்துஅவர்களுக்கு தக்க பொருளாதார
>மற்றும் கல்வி உதவிகள் செவ்வனே செய்து, பிறிதொரு நன்னாளில் குற்றப்பரம்பரை பட்டியலினின்றும் நீக்கி
>(denotified tribes) சீர் மரபினர்)என்ற ஒரு பட்டியலில் அவர்களைச் சேர்த்து காவற்துறையின்
>பொருப்பினின்றும் நீக்கப்பட்டு வருவாய்த்துறையின் கீழ் 'கள்ளர் சீரமைப்பு துறையின் 'தனித் துணை
கலெக்டர்
>(கள்ளர் சீரமைப்பு ) என்ற ஒரு அலுவலரின் பராமரிப்பில் வந்தனர்.

>இன்னாட்களில் அந்த சீர்மரபினைச் சேர்ந்தவர்கள் பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் சட்ட
>ஆலோசகர்களாகவும் சிலர் இந்திய ஆட்சிப்பணியிலும்(I A S) உள்ளனர்.

>

> அவர்கள் முக்குலத்தோர் என்றும் அழைக்கப்படுவதுண்டு. அதாவது மூன்று கோயில் தெய்வங்களை வணங்குபவர்கள்.
>அவர்கள் வணங்கும் தெய்வங்கள் முறையே விருமாண்டி, மாயாண்டி, பேயாண்டி ஆகியோர். அந்த
>தெய்வத்திருநாமத்தின் பெயரால் அவர்களின் குலம் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

>

> வழிபாடியற்றி விழா எடுப்பதில் நான்முந்தி நீமுந்தி என உறுதியோடு செயற்படுவது அவர்கள் இயல்பு

>அறங்காவற் குழுவின் நியமங்களை மீறிவன்முறைகூட நிகழ்வதுண்டு. கோயில் விழாக்களுக்கு குழுக்களுக்குள்
>வேற்றுமை தோன்றி பல விதமான வழக்குகள் கூட உயர் நீதிமன்றம்வரை சென்று அங்கு நிலுவையில் உள்ளன.

>

> நான் அங்கு அவர்களுடன் கலந்து பழகி இருக்கிறேன். அங்கு கோயில்களில் உட்சென்று
>வழிபாடியற்றுகையில் பல புதிய முறைகளைப் பற்றி அரியலானேன். அருள்மிகு விருமாண்டி நான்கு சிரசுகளுடன்

>குதிரை மீதேறி அமர்ந்துள்ளார். பிரம்மாவின் மருவுபெயரே விருமாண்டி.

>

> அதே போல் மாயங்கள் செய்யும் மாயாண்டி கோயிலில் புல்லாங்குழலுடன் நின்றதிருக்கோ லத்தில்
>உள்ளார். அங்கு மருக்கொழுந்து (பசுமையான வண்ணத்தில் குளிர் மையான மணத்துடன் இருக்கும் இலை; மருள் என்றும்
>கிராமத்தில் அழைப்பர்.) மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப் படுகிறது. இதர மலர்கள் உள்ளே
>கொண்டுவருவதற்குத் தடையுண்டு.

>

> பேயாண்டி என்பவர் காடுடைய சுடலைப் பொடிபூசிய சிவன். மும்மூர்த்திகளும்நாமம் மருவி வேறு
>பெயர்பெற்றுள்ளனர்.

>

> கிராமங்களில் பெரிய மரங்களுக்கு அடியினில் , முன்கால்களைத் தூக்கி குள்ளமான இரு அசுரர்கள் மீது
>வைத்துக் கொண்டிருக்கும் குதிரைமேல் அமர்ந்திருக்கும் பெரிய உருவில் கருப்பசாமி சிலை வடிவங்களாக
அழகிய
>வண்ணப் பூச்சுகளுடன் ஆங்காங்கே காணப்படுகின்றனர்.

>

> நீங்கள் சொல்வது போல மூணுசாமி முனிசாமி ஆனதாக நான் கேள்வியுறவில்லை. முனீஸ்வரன் என்று
>வழங்கும் (தர்ம முனீஸ்வரரும்) முனிஸ்வாமியில் அடங்கியுள்ளதாகக் கூறுவர்.கண்ணப்ப நாயனார் போன்ற
இறையன்பு
>உடையவர்கள். தன்னலம் கருதாது உழைக்கும் பெருமக்கள். பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைகளும்

>மகாத்மா காந்தி சிலைகளும் இல்லாத சிற்றூர்களே அங்கு கிடையாது. ஆசாரம் அனுஷ்டானம் என்பதற்கு அங்கே
>முக்கியத்துவம் அளிப்பதில்லை. கோயில் கொடை என்றால் காது செவிடுபட திரைப்படப்பாடல்கள் உச்ச
>நிலையில் ஊரை இரண்டாக்கும். போகும்பேரூந்துகள் கொடையின் காரணமாக கிராமத்தின் ஊடே
நேரத்திற்கு
>செல்லமுடியாமல் தவிப்பதைக் காணமுடியும்.

>"செட்டி கெட்டால் பட்டுடுப்பான்" என்ற ஒரு முதுமொழி உண்டு. திவாலாகும் நிலையினை ஒரு வணிகர் அடைய
>நேரிட்டு அவதியுற நேரும்போது அவர் பட்டணிந்து செல்வார். அதை சாடையால் புரிந்துகொண்ட சமூகப்
>பெரியவர் குழுவினைக் கூட்டி அந்த வணிகரின் அசையும் -அசையாச் சொத்துகள் அவரது வரவு செலவு நிகர
>லாபம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஊர் சமூகப் பொது நிர்வாக நிதியிலிருந்து குறைந்தவட்டிக்குக் கடன்
>உதவி செய்து கைதூக்கிவிடும் உன்னத ஒற்றுமையின் தனி ரகசியம் அது..

>அதைப் போல சீர்மரபினர்கள் தன்னுடைய குழந்தைக்கு பேர் சூட்டுதல், (காது குழந்தைக்கு குத்தி) அணி
>அணிவித்தல் நிகழ்த்தும் போது உறவினர்கள் அரச பரம்பரையினர் போல் சீர் வரிசைகள் மேள தாளத்துடன்
>கொண்டுவருவர். தெருவினை அடைத்து உறவினர் அனைவரும் வந்து 'மொய் ' எழுதவேண்டும். வந்த
சீர்வரிசைகள்
>துல்லியமாக ஏற்ற தாழ்வின்றி கணக்கில் எழுதப்பட்டு அவரவர் வீட்டு விசேடங்களுக்கு குறைந்தபட்சம் அதே
>அளவிற்காவது பயனீட்டாளி திரும்பச்செய்யவேண்டும் என்பது எழுதாத சட்டம். அன்புடன்

>வெ. சுப்பிரமணியன்.
thanks to http://www.treasurehouseofagathiyar.net/29000/29073.htm

No comments: