மலையகத்தில் நடக்கும் கட்டாய கருத்தடைகள்

கேள்வி: ஒரு குழந்தையுடன் கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளவேண்டுமா, இல்லை வேறு எப்படி?
பதில்: இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதாயின் அவர்களுக்கு தோட்டங்களிலே தொழில்வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக‌ அவர்கள் காட்டாயம் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ள வேண்டும். இன்னும் சிலருக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே குடும்பக்கட்டுபாடு செய்யப்படுகிறது. சிலரை பண ஆசை காட்டியும், சிலரை பயமுறுத்தியும் இணங்க வைக்கிறார்கள். மற்ற பகுதிகளில் விருப்பப்பட்டவர்கள் மட்டுமே செய்து கொள்கிறார்கள். மலையகத்தில் மட்டும் இது கட்டாயப்படுத்தப்படுகிறது. இரண்டாவது கரு உண்டானால் வேலை கிடைக்காது என்ற நிலை, பல மலையகத் தமிழர்களை உடன்படச் செய்கிறது.
கேள்வி: காரணம்?
பதில்: இதுவும் ஒருவித‌ இன சுத்திகரிப்புதான். இதற்கு சிறந்த உதாரணம் இன்று மலையகப் பகுதிகளில் பெரும்பாலான பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு புதிதாக மாணவர்களை சேர்ப்பதற்கு மாணவர்கள் இல்லை.

thanks to http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13775:2011-03-25-11-14-27&catid=5:interviews&Itemid=296

No comments: