பாரிவேட்டை

பாரி என்றால் கொட்டு முழக்கத்துடன் செய்யும் இராக்காவலைக் குறிப்பதாக உள்ளது. பாரி வேட்டையிலும் கொட்டு முழக்கத்துடன் இரவில் வேட்டைக்குச் செல்லும் பழக்கமிருக்கிறது.வனவிலங்குகளின் தொல்லைகளிலிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக இரவில் காவலிருக்கும் பண்டைய பழக்கமே பாரி வேட்டையாக நிலவுகிறது. பாரி வேட்டை தற்போது தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் பிரான் மலையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விழாவாக நடைபெறுகிறது. மாசி மாதத்தில் சிவராத்திரிக்கு மறுநாள் பாரி வேட்டைக்குச் செல்வது வழக்கம்.
இவ்வேட்டை வினை கருப்பணசாமி, அய்யனார்சாமி போன்ற வேட்டைக்காரச் சாமிகளின் வழிபாட்டுடன் தொடர்பு டையதாகவும் இருக்கிறது.

விழா நாளன்று வேட்டைக் கொம்பினால் ஒலி எழுப்பப்படும். அப்போது வேட்டைக்குச் செல்வோரெல்லாம் ஒருங்கே கூடிவிடுவர். கலந்து கொள்பவர்கள் பூசைப் பொருட்களையும் சமையல் பொருட்களையும் உடன் கொண்டு வருவர். வேட்டைக்காரசாமியினை வழிபட்ட பின் மலைப் பகுதிக்குச் செல்வர். உடன் கம்பு, ஈட்டி, அரிவாள் போன்ற ஆயுதங்களையும் எடுத்து வருவர். வேட்டைநாயும் உடன் வருவதுண்டு. முதல் வேட்டையில் முயல் சாய்ந்ததாகக்
கொள்ளலாம். அதன் தலையினைத் திருப்பி ஒரு புல்லினை எடுத்து அதன் வாயில் வைப்பர். இப்புல்தான் முயலின் வாழ்வில் கடைசிப் புல் என்பதைச் சுட்டுவதற்காகவே இச்செய்கை மேற்கொள்ளப் படுகிறது.

முயலினை வேட்டையாடியவர் முயலின் காதளவுவைத்துக் தலையினை வெட்டிக் கொடுப்பார். இதற்கு 'தரம்' என்று பெயர். இவ்வாறே வேட்டையாடிய மற்றவற்றிலிருந்தும் தலையை மட்டும் வெட்டி எடுப்பர். முயலின் வயிற்றினைக் கிழித்து, ஈரலை மட்டும் வெளியே எடுத்துக் கம்பியில் கோர்த்துத் தீயில் வாட்டுவர். பின் அதனைப் பூசைப் பொருளாக வைத்து வேட்டைக்காரச் சாமியை வழிபடுவர். வேட்டை கிடைத்தமைக்கு நன்றி சொல்வர். இன்னும் அதிக வேட்டை கிடைக்க வேண்டும் என்று விரும்பி ஈரலைப் பிய்த்து நான்கு திசைகளிலும் நான்கு துண்டுகளை எறிந்து விடுவர்.

வேட்டையாடிய விலங்குகளின் தலைக்கறியினையெல்லாம் ஒன்று சேர்த்து, எடுத்துச் சென்ற சமையல் பொருட்களை வைத்து உணவு தயாரிப்பர். வேட்டையாடிய விலங்குகளின் உடல் கறியைக் கொண்டு வந்து கிராமத்து மக்களுக்கும் பகிர்ந்தளிப்பர். வேட்டையின் போது புலி, சிறுத்தை, கரடி போன்ற கொடிய விலங்கினைக் கொன்றிருந்தால், கிராமத்திற்கு வந்து வண்டியில் அவ்விலங்கினைத் துக்கி நிறுத்தி தாரை, தம்பட்டை முழங்க ஊரெல்லாம் சுற்றி வருவர். தங்கள் வீரத்தினைக் காட்டுவதற்காக இப்படிச் செய்கின்றனர். பழங்காலத்தில் அரசர்கள், குறுநில மன்னர்கள், ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் ஜமீன்தார்கள் பாரி வேட்டையினைத் தலைமையேற்று நடத்தினார்கள்.thanks to  http://www.thamizhstudio.com/naattuppurakkalai_3.htm

பதிவு செய்த நாள் 10/03/2011 09:09:17
உசிலம்பட்டி : வரும் மார்ச் 2 ல் மகாசிவராத்திரி தினம் வருகின்றது. உசிலம்பட்டி பகுதியில் மகாசிவராத்திரியை குலதெய்வ வழிபாட்டுக்கான நாளாக கொண்டாடுகின்றனர். தொழில் காரணமாக வெளியிடங்களுக்கு சென்றவர்கள் இந்த நாளில் தங்கள் குலதெய்வ வழிபாட்டுக்கு வருவதால் மகாசிவராத்திரியன்று பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடுகின்றனர்.
 
குலதெய்வங்களின் உடமைகள் வைக்கப்பட்ட பெட்டிகளை பெட்டி வீடுகளில் இருந்து பூஜாரிகள், கோடாங்கிகள், சாமியாடிகள் கோயில்களுக்கு மேள தாளத்துடன் எடுத்துச்செல்கின்றனர். கோயிலுக்கு கொண்டு சென்று மகாசிவராத்திரி தினத்தில் வழிபாடு நடத்துகின்றனர். தொடர்ந்து பூஜாரிகள் பக்தர்களுக்கு குறிசொல்லும் வைபவமும் அதிகாலையில் நடக்கிறது. வழிபாடு முடிந்தபின் பெட்டிகள் மீண்டும் பெட்டிவீட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

 
மூன்று தினங்கள் விமரிசையாக நடக்கும் இந்த நாட்களில் உசிலம்பட்டி பகுதி மக்கள் வெள்ளத்தில் மிதக்கும். இதற்கான முன்னேற்பாடுகள் தயாராகிவருகின்றன. கருமாத்தூரில் கலியுக சிதம்பர ஈஸ்வரர் கோயிலில் திருவாச்சி மட்டுமே சுவாமியாக வழிபடப்படுகின்றது. தெய்வங்களுக்கு பஞ்சாமிர்தம், பச்சரிசிமாவு, தேங்காய் பழம் வைத்து வழிபடுகின்றனர். காலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதன் பின் பெட்டிகளை எடுத்து அருகில் உள்ள பெருமாள்சுவாமி, விருமப்ப சுவாமி பேச்சியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு வழிபாடுகளுக்கு பின் கிடாவெட்டு நடக்கிறது.

 
கருமாத்தூர் ஒச்சாண்டம்மன் பெயர்விளங்கிய ஆங்காள அய்யர் கோயிலில் பொங்கல், கரும்பு, வாழைப்பழம், தேங்காய், இளநீர் இவற்றுடன் சுக்கு, மிளகு, பச்சரிசி மாவு, சர்க்கரை கலந்து மாவுடன், பயறு ஆகியவை வைத்து வழிபாடு நடத்துகின்றனர். பூஜைகள் நடக்கும் போது பூஜாரிகள் வாய்களில் துணிகளை கட்டிக்கொண்டு பூஜை நடத்துவர். அதிகாலை 3மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கருமாத்தூர் நல்லகுரும்பய்யர் கோயிலில் சுவாமிக்கு விபூதி வெள்ளைநிறத்தில் புத்தாடையும், மரிக்கொழுந்து மட்டுமே சூட்டுகின்றனர். இங்கும் அதிகாலை 3 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. மற்ற கோயில்களைப்போல் அல்லாமல் இந்த கோயிலில் மூன்றாவது நாளான பாரிவேட்டை தினத்தில் மதியம் 3 மணிக்கு கன்னிமார்கள் ஆட்டம் நடக்கிறது. வயதுக்கு வராத பெண்களின் சாமியாட்டம் நடந்து முடிந்தபிறகு தான் திருவிழா நிறைவுக்கு வருகிறது. பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலுக்கு உசிலம்பட்டி கருப்புகோயிலில் இருந்து சுவாமி பெட்டி கொண்டுவரப்படுகின்றது. இரவு முழுவதும் பக்தர்கள் தங்கள் ஆதிவழக்கப்படி புத்தாடைகள், எண்ணெய், மாவு, பயறு, கரும்பு, வாணவேடிக்கை போன்றவற்றுடன் கோயிலுக்கு வருகின்றனர்.

 
அதிகாலை மணியளவில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பெட்டி திரும்பி வரும்போது உசிலம்பட்டியில் பெட்டிகளை வரவேற்று கருப்புகோயிலுக்கு கொண்டு செல்லும் வைபவத்தை பார்க்க பெரும் திரளான கூட்டம் கூடுகிறது. இந்த கோயில்கள் தவிர

உசிலம்பட்டி பகுதியில் எட்டுநாடுகள், 24 உபகிராமங்கள் என அழைக்கப்படும் கிராமங்களில் உள்ள குலதெய்வக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

http://www.sudesi.com/innerpage.php?id=15


No comments: