திருமலை பின்னத்தேவன் செப்பேடு

பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து மதுரையின் அதிகார மையத்திற்கும், கோட்டையைச் சுற்றியிருந்த கீழ் மற்றும் மேல்நாட்டு கள்ளர்களுக்குமான உறவு குறித்து விரிவான ஆய்வுகள் வந்துள்ளன. அந்த ஆய்வுகள் பல உண்மைகளை நமக்குக் காட்டுகின்றன.

உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன். திருமலை பின்னத்தேவன் செப்பேடு_திருமலை மன்னன் பின்னத்தேவனுக்கு கொடுத்தது, அதில் பின்னத்-தேவனுக்கு இரண்டு ஊர். பிள்ளை பெற்றால் சூட்டுவதற்கு இரண்டு பெயர், கும்பிடுவதற்கு இரண்டு சாமீ, கள்ளநாட்டில் நீதிபரிபாலனம் செய்யும் உரிமை என எல்லாம் கொடுத்து, வருடத்திற்கு அறுபது பொன்முடிப்பும் அரண்மனையிலிருந்து கொடுக்கப்-படுவதாக சொல்லப்படுகிறது. குமரி முனையிலிருந்து சத்தியமங்கலம் வரையிலான நிலப்பரப்பை ஆண்ட ஓர் அரசு, எழுபத்திரண்டு பாளையங்களை உருவாக்கி வரி வசூல் செய்து ஆட்சி நடத்திய ஓர் அரசு. அரண்மனைக்கு சில மைல் தொலைவில் இருந்த கள்ளநாட்டிலிருந்து எந்த வரியும் வசூல் செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்ல. அறுபது பொன்முடி அரண்மனையிலிருந்து கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது.

இது மைய அரசுக்கும் ஸ்தல அமைப்புக்கும் இருந்த உறவைக்காட்டுகிறது. கள்ளர்களை ஒடுக்க பல முயற்சி செய்த திருமலை மன்னன் தன் ஆயுளின் கடைசிக்காலத்தில் அதாவது மரணிப்பதற்கு நான்காண்டுகளுக்கு முன்புதான் (1665) இத்தகைய ஒரு சமரசத்திட்டத்திற்கு வந்துள்ளான் என்பதை அறியமுடிகிறது.

மைய அரசு ஸ்தல அமைப்புடன் செய்துகொண்ட சமரச திட்டமே இச் செப்பேடு. இச் செப்பேடு ஏன் பின்னத்தேவனுக்கு அளிக்கப்படுகிறது

thanks to http://www.keetru.com/puthakam/may09/su_venkatesan.php

No comments: