காமராஜரின் இராஜதந்திரம்

அந்த கதைய இப்பவுள்ள சந்ததிங்க கேக்க வேணும்!
நன்றி http://www.dinamalar.com/News_Detail.asp?Id=211561
முத்துராமலிங்கத் தேவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார். தென் மாவட்டங்களில் தன் கட்சி வேட்பாளர்களை நிறுத்துவதுடன், தானும் தேர்தலில் நேரடியாகக் களம் இறங்கி, வெற்றி பெறுவார். அப்போதெல்லாம் ஒரே நேரத்தில், லோக்சபாவுக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடக்கும்.
அருப்புக்கோட்டை லோக்சபா தொகுதிக்கும், சட்டசபைத் தொகுதிக்கும் தேவர், வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு எதிராக, காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தியது. தன் தொகுதியில் எப்போதுமே தேவர் பிரசாரம் செய்ய மாட்டார். அவர் போட்டியிட்டால், மக்களே அமோகமாக அவரை வெற்றி பெற வைத்து விடுவர். இரண்டிலும் வெற்றி பெற்று, ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்வது, தேவரின் வழக்கம்; அவரது வாழ்நாளில், அவர் தோல்வியை சந்தித்ததே இல்லை. இன்னும் சொல்வதானால், அவருடைய பகுதியில் வேறு கட்சியினர் கூட்டம் போடுவதே பெரிய விஷயம்.

அப்போது, காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், கோவை மாவட்ட காங்கிரஸ் செயலராக இருந்த, கோவை ராமநாதபுரம் தியாகி சண்முகத்தேவரை அழைத்து, "தேவரே... நீங்க அருப்புக்கோட்டைக்குப் போய், கூட்டம் போட்டு நம்ம வேட்பாளருக்கு பிரசாரம் செய்யணும்' என்றார்.

சண்முகத்தேவர் தயங்கியபடி, "தலைவரே, உங்களுக்கே தெரியும், அங்க வேற கட்சிக்காரங்க கூட்டம் போட முடியாது' எனக் கூற, கோபமான காமராஜர், "நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது; அங்க ஒரு கூட்டம் போட்டு, காங்கிரசுக்கு ஓட்டு கேட்கணும்' என்றார். யோசித்துப் பார்த்த சண்முகத்தேவர், ஒரு முடிவுக்கு வந்தார்.

நேராக, பசும்பொன் கிராமத்துக்குச் சென்று, முத்துராமலிங்கத் தேவரை சந்தித்தார். "ஐயா! எனக்கு ஒரு உதவி செய்யணும்' என்று கேட்க, "கேளுங்கய்யா' என்றார் தேவர். "உங்க ஊர்ல ஒரு கூட்டம் போடணுங்கிறது எங்க தலைவரோட உத்தரவு. உங்க அனுமதியில்லாம இங்க யாரும் கூட்டம் போட முடியாதுன்னு எனக்குத் தெரியும். அதனால, ஒரே ஒரு நாள் மேடை போட்டு, காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுக் கேட்க என்னை அனுமதிக்கணும்' என்றார்.

அத்துடன், "கூட்டம் முடிஞ்சு, மதுரைக்குப் போகும் வரை எனக்கு பாதுகாப்பு கொடுக்கணும்' என்ற கோரிக்கையையும் வைத்தார்.

கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக, தனக்கு எதிராக பிரசாரம் செய்வதற்கு மேடை அமைத்துக் கொடுத்து, சண்முகத்தேவரை பேசவும் ஏற்பாடு செய்தார் தேவர். சொன்னபடியே, அவருக்கு வண்டியையும் ஏற்பாடு செய்து, மதுரை வரை பத்திரமாக கொண்டு சேர்த்தார். அந்த தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் அமோக வெற்றி பெற்றார்.

No comments: