0 c

ஒட்டுமொத்த உலகமே எதிர்ப்பார்த்திருந்த படம்தான் 2012. இப்போது வெளிவந்து உலகத்தையே கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது.இப்படியொரு பேரழிவு பூமிப் பந்தைப் புரட்டிப்போட்டுவிடுமா? என்ற ஒரு மெல்லிய அச்சத்தைப் படம் பார்ப்பவர் உள்ளத்தில் விதைத்துவிட்டுப் போகிறது 2012.


உலகின் முதன் மாந்தன் தோன்றிய மண் குமரிநாடு. அதுவே தமிழரின் முதலாவது தாய்மண். அங்கு பழந்தமிழர்கள் 49 நாடுகளைக் கட்டியெழுப்பி ஆட்சி செய்தனர். குமரிக்கண்ட மாந்தன் பேசிய மொழிதான் தமிழ்.இறையனார் களவியலுரையிலும் இளம்பூரனார் தொல்காப்பிய உரையிலும் இன்னும் பிற இலக்கியங்களிலும் குமரிக்கண்டம் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. குமரிநாடு பற்றிய வரலாற்றுக் குறிப்புகளுள் ஒன்று இது:-“முதன்முதலில் குளிர்ந்தது உலகின் மேற்பரப்பே. அந்நிலம் தமிழ் நிலமே. அப்பகுதி அப்படி முதல் நிலமாக அமையக்காரணம் உலகின் நடுக்கோட்டிற்கு அணித்தாய் இருந்தமையே. அம்முதல் நிலமே குமரிக்கண்டம். குமரிமைல ஆறுகொண்டு குமரிநாடு என்று பெயரிட்டனர். இதன் வடக்கே குமரியாறு தெற்கே பஃறுளியாறு என்பவற்றின் இடையே கீழ்மேலாக எழுநூறு காவதம் பரப்பாக நீண்டு கிடந்தது. இது நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிக்கப்பெற்றிருந்தது. ஏழ்மதுரை நாட்டுக்குத் தென்பால் இருந்த காரணத்தால் மதுரை ‘தென்மதுரை’ எனப்பட்டது. இதனை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்டவன் ஆழிவடிவம் பலம் நின்ற பாண்டியன் என்ற முதலாம்நிலம் தரு திருவிற்பாண்டியன்....” (தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், தொகுதி2, ஐந்தினைப் பதிப்பகம், சென்னை. 1987.ப.1670.)“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள” என்று குமரிநாட்டைப் பற்றி கூறப்பட்டுள்ள வரிகளுக்கு 2012 படமே சரியான விளக்கவுரையாக எனக்குப் பட்டது. இந்தப் படம் குமரிக்கண்ட வரலாற்றுப் பேரழிவுக்கு நல்ல பாடமாக இருக்கிறது என்பது என் கருத்து.இன்றைய இந்திய பெருநிலப்பரப்புக்குக் கீழே இருந்ததாகச் சொல்லப்படும் குமரிநாடு அல்லது குமரிக்கண்டம் அல்லது கோண்டுவானா அல்லது லெமூரியா கண்டமும் இப்படிதான் மாபெரும் பேரழிவுக்கு உள்ளானதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகின்றனர். அங்கு மூன்று முறை பாரிய கடற்கோள்கள் (சுனாமி) ஏற்பட்டதாகத் தமிழ் இலக்கியம் சான்று சொல்லுகிறது.
மூன்று கடல்கோள்களுள் முதலாவது கடல்கோள் கி.மு. 2387 இல் நிகழ்ந்தது. இரண்டாவது கடல்கோள் கி.மு. 504 இல் நிகழ்ந்தது. மூன்றாவது கடல்கோள் கி.மு. 306 இல் ஏற்பட்டதாக குறிப்புகள் சொல்லுகின்றன. (The Date of Tolkappiyam, Annals of Oriental Research, University of Madras, Vol.XIX part II, 1964, Reprint p. 16-17)நீங்கள் 2012 படத்தைப் பார்த்தவரா? கொஞ்சம் மெனக்கெட்டு குமரிகண்ட வரலாற்றை தேடிப் படியுங்கள். தமிழரின் வரலாறு தெளிவாகத் தெரியும்.நீங்கள் குமரிக்கண்ட வரலாற்றைப் படித்தவரா? அருகிலுள்ள பட அரங்கிற்குச் சென்று 2012 படத்தைப் பாருங்கள். தமிழரின் வரலாறு தெளிவாகப் புரியும்.பழந்தமிழரின் தாயகமாகச் சொல்லப்படும் குமரிக்கண்டம்,பழந்தமிழின் பிறப்பிடமாகக் கருதப்படும் குமரிநாடு,தொன்மை மாந்தனின் தோற்றுவாயாக நம்பப்படும் கோண்டுவானா,குரங்கினத்திலிருந்து மாந்தரினம் பரிணாமம் அடைந்த நிலமாக இருந்து கடலுக்குள் மூழ்கிப்போன லெமூரியா கண்டத்தின் வரலாற்றைத் தமிழர்கள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும்.அதற்குக் கீழ்க்காணும் சில வலைமணைகள் துணையாக இருக்கும்.http://www.tamilcc.org/thamizham/ebooks/5/468/468.pdf
0 c
இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.

ஆ.சிவசுப்பிரமணியன். (மதுரை பாரதி புக் ஹவுஸ்,

'இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்' என்ற தலைப்பில் இக்கட்டுரையாசிரியரின் நூல் . அந்நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கு கட்டுரையாக இடம்பெற்றுள்ளது.) நன்றி : தட்ஸ் தமிழ் நாடாளும் மன்னனுக்குத் தேவையான ஆறு உறுப்புக்களுள் முதலாவதாகப் படையைக் குறிப்பிடுவார் வள்ளுவர். பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்த சீவகசிந்தாமணிக் காப்பியம் படையினால் விளையும் நன்மைகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது. "பொன்னின் ஆகும் பொருபடை யப்படைதன்னில் ஆகுந் தரணி தரணியிற்பின்னை யாம் பெரும்பொருள் அப்பொருள்துன்னுங் காலைத் துன்னாதன இல்லையே "(செய்யுள்: 1923)பொன் இருந்தால் போரிடும் படையைத் திரட்டலாம். படை இருந்தால் ஆட்சி கிடைக்கும். ஆட்சி கிடைத்தால் கிடைக்காதன என்று எவையும் இல்லை என்பது இச்செய்யுளின் பொருளாகும். ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்துவதே மன்னர்களின் குறிக்கோள். இதனால்தான் இடைக்குன்றூர்க்கிழார் என்ற கவிஞர்,"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை" (புறம் 76: 12)என்று பாடியுள்ளார். இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. ஆயினும், மன்னர்கள் அவர்களது படைவீரர்கள் ஆகியோருடன் இது நின்று விடவில்லை. குடிமக்களையும் பாதிக்கும் ஒன்றாகவே போர் அமைந்தது. இதைச் சங்க நூல்கள் சுட்டுகின்றன. பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார் என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,"பகைவர் நாட்டில் தேர் செல்லும் தெருக்களைக் கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய். பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில் குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்". (புறநானூறு 15). இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர் வாழ்த்தும் பொழுது,"வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்நாடுசுடு கமழ்புகை யெறித்தலானே" (புறம் 6)என்று வாழ்த்துகிறார். பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால் எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும் என்பது இதன் பொருளாகும்.சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும் இரவும் கருதாது பகைவரது ஊரைத் தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின் புலம்பலோசையுடன் கொள்ளையிடுதலை விரும்புபவன் என்பதனை,"எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்கொள்ளை மேவலை யாகலின்"என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும் வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக் கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல் அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய பாலை நிலத்திற்கு "செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல" என்ற உவமையைப் பயன்படுத்துகிறார்.பகைவர் நாட்டைத் தீயிட்டு அழிக்கும் கொடுமை மட்டுமல்லாது போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப் பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன. நன்னன் என்ற குறுநில மன்னன் தன்னுடைய பகைவர்களை வென்ற பிறகு அவர்களின் உரிமை மகளிரின் தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின் யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பழையன் என்ற மன்னனை வென்று அவன் மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப் பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான் (பதிற்றுப் பத்து 5ம் பத்து) கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் மூவன் என்பவனைப் போரில் வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித் தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான்.மத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற குறுநில மன்னனின் பற்களைப் பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில் பதித்து வைத்தான். (அகம் 211).இத்தகையக் கொடுமைகள் தமிழ் மன்னர்களுக்கிடையில் நிகழ்ந்துள்ளன என்பதனையும் தமிழ் மக்களின் சொத்துக்களே அழிவுக்கு ஆளாயின என்பதனையும் நினைவிருத்திக் கொள்ளுவது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாகத் தனி மனிதர்களின் நாடு விரிவாக்கும் கொள்கையால் தமிழ்ச் சமுதாயம் அவலத்திற்காளானது. இவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு நடந்த கொடுமைகள் என்றால் பதினொன்றாவது நூற்றாண்டில் படையெடுப்பின்போது நிகழ்ந்த கொடுமைகள் இவற்றை விஞ்சுவதாகவே உள்ளன.ராஜ ராஜ சோழனின் மெய் கீர்த்திகளில் அவனது வெற்றிச் சிறப்புகளில் ஒன்றாக "இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று" என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜ ராஜன் தன் மகன் முதலாம் இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப் பெற்றான்.முதலாம் இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற மேலைச் சளுக்கர் மன்னனுடன் போரிட்டு வென்று இரட்டைபாடியைக் கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன் மேற்கொண்ட பழி செயல்களை சத்தியாசிரையனின் கி.பி. ஆயிரத்தி ஏழாம் ஆண்டு காலத்திய கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 23940).நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள் அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினான்.இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின் ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வழங்கினான். சத்தியாசிரயனின் கல்வெட்டுச் செய்தி குறித்து தமிழ்நாட்டின் இரு பெரும் வரலாற்றுப் பேராசிரியர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.(இண்) பகைவனின் கல்வெட்டில் காணப்படும் பெரும் நாச வேலைகளையும் கற்பழிப்புகளையும் சோழ இளவரசன் ராஜேந்திரன் செய்திருக்கக் கூடுமா? என்ற வினா எழுந்தாலும் . . . (நீலகண்ட சாஸ்திரி 1989: 240).(இண்) பகையரசன் நாட்டிய கல்வெட்டாகையால் இது கூறும் செய்திகளை உண்மையென்று நம்பலாகாது. நீதியிலும், நேர்மையிலும் சிவத்தொண்டிலும் மேம்பட்டிருந்த சோழ மன்னனின் படைகள் இத்தகையக் கொடுமைகளை மக்களுக்கு இழைத்திருக்க முடியாது. (கே.கே. பிள்ளை 1981: 272) இராஜேந்திரன் இத்தகைய செயல்களைச் செய்திருக்கக்கூடுமா? என்று சாஸ்திரியார் ஐயப்பட, கே.கே. பிள்ளையோ அப்படிச் செய்திருக்க முடியாது என்று சான்றிதழ் வழங்கிவிடுகிறார்.இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேட்டின் மெய்கீர்த்திப் பகுதி " . . . யானைகள், குதிரைகள், ரத்தினங்கள், பெண்கள், குடைத் தொகுதிகள்" ஆகியனவற்றை சத்தியாசிரயனிடமிருந்து ராஜராஜன் பறித்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறது (தந்தையாகிய இராஜராஜனால் அனுப்பப்பட்டமையால் இராஜேந்திரனின் வெற்றிச் சிறப்பு இராஜ இராஜனின் வெற்றிச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது).இராஜேந்திரன் பட்டத்திற்கு வந்த பிறகு (1012-1044) நிகழ்த்திய போர்களில் அவன் செயல்பாடு எத்தகையது? என்பதைக் கண்டால் மேற்கூறிய கல்வெட்டுச் செய்திகள் உண்மையா? பொய்யா? என்பது புலனாகும். கி.பி. 1017-18இல் இவன் நடத்திய ஈழப் போரில் ஈழ மன்னனை இவன் வெற்றி கண்டு கைப்பற்றிய பொருள் குறித்து இவன் வெளியிட்ட கரந்தைச் செப்பேடு (செய்யுள் 58-59) பின்வருமாறு குறிப்பிடுகிறது."அவனுடைய நாட்டையும், அவனுடைய முடியையும், அவனுடைய அரச பத்தினியையும், அவளுடைய முடியையும், அவனுடைய மகளையும், மற்றப் பொருட் குவியல்களையும் . . . கைப்பற்றினான். "சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன் காட்டுக்குள் ஓடிப்போனதாகவும், உடன்பாடு செய்து கொள்ளுவதாகச் சொல்லிய சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக் கொண்டு, மேற்கொண்ட செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது."தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றிலிருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண்பட்ட இடங்களிலெல்லாம் பெளத்த சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்" (சாஸ்திரி, 1989: 272). வங்காள தேசத்து மன்னன் மகிபாலனை வென்று யானைகள், பெண்கள், செல்லம் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் (மேலது: 281).முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின் மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற சிங்கள மன்னனை வென்றான். சிங்கள மன்னன் ஓடி ஒளிய அவனது தமக்கையையும், மனைவியையும் சிறை பிடித்ததுடன் அவனது தாயின் மூக்கை அறுத்தான் (ளு11 111; 5056).ராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048இல் நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில மன்னர்களுடன் எண்ணற்ற பெண்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.பூண்டூர் நகர் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கழுதைகள் பூட்டிய ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது. மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது. சோழர் கல்வெட்டுக்கள் கூறும் இச்செய்திகள் மிகைப்படுத்தப்பட்டன என்று கூறும் சாஸ்திரியார் (1989; 346), இத்தகைய செயல்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன என்பதை மறந்துவிடுகிறார். 1894ம் ஆண்டுக்கான கல்வெட்டு ஆண்டறிக்கையில் (எண். 172) ஆகவமல்லன் அனுப்பிய தூதுவர்கள் இருவரில் ஒருவனுக்கு ஐங்குடுமி வைத்து ஆகவல்லமன் என்று பெயரிட்டும் மற்றொரு தூதுவனுக்கு பெண்களுக்கு உரிய ஆடையை உடுக்க வைத்து ஆகமவல்லி என்று பெயரிட்டும் ராஜராஜன் அனுப்பியதாக குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 347).சாளுக்கியர்களின் பழமையான நகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கிருந்த ஒரு தூவாரபாலகர் உருவத்தைக் கொண்டு வந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம் கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில் "ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம் எரித்து கொண்டு வந்த துவார பாலர்" என்று குறிக்கப்பட்டுள்ளது.முதல் குலோத்துங்கச் சோழன் (1070---1120) இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110) வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் மற்றும் செல்வங்களுடன் மகளிரையும் கைப்பற்றி வந்தான். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178- 1218) மதுரையின் மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன் செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள் பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.1. பெண்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.3. பாண்டியனின் கூட மண்டபத்தை (முடி சூட்டும் மண்டபம்) இடித்து கழுதை ஏரைப் பூட்டி உழுதனர். திருவாரூர்த் தலைவனாக இருந்த கங்கை கொண்டான் உத்தம சோழராயனின் படையதிகாரியான கூத்தன் கணபதி என்பவனை "பகைவர்களின் மனைவியர்க்குக் கணவன்" என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE 1913 ப. 97).கி.பி. 1219இல் சோழ நாட்டின் மீது படையெடுத்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 -1238) தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான் (I.P.S; 290, 323) புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள அக்கல்வெட்டின் உரைநடை வடிவம் வருமாறு:கொடுங் கோபமுடைய குதிரைகளையும், யானைகளையும் செலுத்திச் சென்று சோழர்களின் தஞ்சை நகரையும் செந்தழலிட்டுக் கொளுத்தினான். அழகிய குவளை மலர்களும், நீல மலர்களும் தம் அழகை இழக்கும்படி குளங்களையும் ஆறுகளையும் கலக்கினான்.கூடம், மதில், கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள், மாட மாளிகைகள், கருவூலங்கள் ஆகியனவற்றை இடித்துத் தள்ளினான்.தன்னை வந்து அடிபணியாத பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுத கண்ணீர் ஆறாக ஓடும்படிச் செய்தான்.பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான். சோழர் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் சென்று "விஜயாபிஷேகம்" எனனும் சடங்கை இவன் செய்தான். அதன் பொருட்டு சோழ அரசியும், அந்தப்புரத்துப் பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப் பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் (சாஸ்திரி, மேலது, 579).பல்லவ மரபைச் சேர்ந்த கோப்பொருஞ்சிங்கன் என்பவன் வைதீக சமயத்தைச் சேர்ந்தவன். சிறந்த சிவ பக்தன். சிதம்பரம் நடராசர் மீது பெரும்பற்று உடையவன் என்று இவனது வரலாற்றை எழுதிய எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் (1965: 117) குறிப்பிடுகிறார். சைவர்களின் முக்கிய புண்ணியத் தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்குக் கோபுரம் கட்ட தானம் செய்துள்ளான். இதனால் இவனது பட்டப் பெயர் ஒன்றின் பெயரால் "சொக்கசீயன் திருநிலை எழுகோபுரம்" என்று இக்கோபுரம் அழைக்கப்பட்டது. சிதம்பரத்தின் கீழைக் கோபுரத்தை எழுநிலைக் கோபுரமாக உயர்த்திக் கட்டினான். தன் பகை மன்னர்களின் தங்கக் கிரீடங்களை உருக்கி இக்கோபுரத்தின் தங்கக் கலயங்களைச் செய்தான். திருவண்ணாமலை, காஞ்சி ஏகாம்பரநாதன் கோவில், திருவீரட்டாணம், ஜெம்புகேஸ்வரம், மதுரை, காளகஸ்தி ஆகிய சிவத்தலங்களில் திருப்பணிகளும் தானங்களும் செய்தான்."திருப்பதிகளெல்லாம் கும்பிட்டருளி தேவதானங்களும் திருவிடையாட்டங்களும் இறையிவி விட்டருளி திருப்பணியெல்லாம் செய்தருளி" என்று ஆக்கூர் சாசனம் (SI XII; 129) இவனது பக்தி உள்ளத்தைச் சுட்டிக் காட்டும்.இத்தகைய சிவபக்தனான கோப்பெருஞ்சிங்கனுக்குரிய பட்டயங்களுள் "பரராஜ அந்தப்புர பந்திகாரன்" என்பதும் ஒன்று என இவனது ஆற்றூர் சாசனம் கூறும் (SII XII; 120). பிற மன்னர்களின் அந்தப்புரத்தை சிறைபிடிப்பவன் என்பதே இப்பட்டத்தின் பொருளாகும்.தன் பகை நாடான சோழ நாட்டின் மீது படையெடுத்த இக்கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனை சிறை பிடித்தான். கோப்பெருஞ்சிங்கனுடன் போரிட்ட போசல நாட்டு மன்னன் மூன்றாம் ராஜராஜனை சிறை மீட்டான்.இவ்விரு நிகழ்வுகளையும் 'திருவய்ந்திரபுரக் கல்வெட்டு' குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் கோப்பொருஞ்சிங்கன் சோழநாட்டுக் கோவில்களை இடித்தசெயலும் அவனுடன் போரிட்டு வென்ற போசல நாட்டு மன்னன் செய்த கொடுஞ் செயல்களும் இடம் பெற்றுள்ளன. அக்கல்வெட்டு வருமாறு: (கல்வெட்டு வரிகளில் அழுத்தம் எமது) ஸ்வதி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜராஜதேவர்க்குயாண்டு 15 ஆவதின் எதிராம் ஆண்டு பிரதாப சக்கரவர்த்திஹோய்ஸண ஸ்ரீ வீரநரசிம்மதேவன் சோழசக்கரவர்த்தியைக்கோப்பெருஞ்சிங்கன் சேந்தமங்கலத்தில் பிடித்துக்கொடு இருந்து தன் படையை இட்டு ராஜ்யத்தை அழித்துத் தேவாலயங்களும்விஷ்ணு ஸ்தானங்களும் அழிகையிலே இப்படித்தேவன் கேட்டருளி,சோழமண்ல பிரதிஷ்டாசாரியன் என்னும் கீர்த்திநிலை நிறுத்தி அல்லது எக்காளம் ஊதுவதில்லை என்று தோரசமுத்திரத்தினின்றும் எழுந்துவந்து, மகாராஜ்ய நிர்மூலமாடிஇவனையும் இவன் பெண்டு பண்டாரமும் கைக்கொண்டுபாச்சூரிலே விட்டு கோப்பெருஞ்சிங்கன் தேசமும் அழித்துச்சோழச் சக்கரவர்த்தியையும் எழுந்தருளிவித்துக்கொடு என்றுதேவன் திருவுளமாய் ஏவ,விடை கொண்டு எழுந்த ஸ்வஸ்தி ஸ்ரீமான் மகாபிரதானி பிரம விசுவாசி தண்டினகோபன் ஜகதொப்பகண்டன் அப்பண தன்னக்கனும்,சமுத்திரகோபய்ய தன்னக்கனும் கோப்பெருஞ்சிங்கன்இருந்த எள்ளேரியும், கள்ளியூர் மூலையும், சோழகோன்இருந்த தொழுதகையூரும் அஷ்த்து வேந்தன் முதலிகளில்வீரகங்க நாடாள்வான், சீனத்தரையன் ஈழத்து ராஜா பராக்கிரமபாகு உள்ளிட்ட முதலி 4 பேரையும் கொன்று இவர்கள் குதிரையும் கைக்கொண்டு, கொல்லி சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு,பொன்னம்பல தேவனையும் கும்பிட்டு எதுத்துவந்த தொண்டைமாநல்லூர் உள்ளிட்ட தமக்கூர்களும் அழித்து . . . .வெட்டிவித்து திருப்பாதிரிப்பூலியூரிலே வீற்றிருந்து,திருவதிகை திருவெக்கரை உள்ளிட்ட ஊர்களும் அழித்து, வாரணவாசி ஆற்றுக்குத் தெற்கு,சேந்த மங்கலத்துக்கும் கிழக்கு கடலிலே அழியூர்களும், குடிக்கால்களும் சுட்டும் அழித்தும் பெண்டுகளைப் பிடித்தும் கொள்ளை கொண்டும்சேந்தமங்கலத்தே எடுத்து விடப்போகிற அளவிலே கோப்பெருஞ்சிங்கன் குழைந்து சோழ சக்கரவர்த்தியை எழுந்தருளிவிக்கக் கடவதாகதேவனுக்கு விண்ணப்பம் செய்ய, இவர் விட்டு, நமக்கும்ஆள்வரக் காட்டுகையிலே, சோழ சக்கரவர்த்தியைஎழுந்தருளுவித்து கொடு போந்து ராஜ்யத்தே புகவிட்டது " சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டின் மீதும் இலங்கையின் மீதும் படையெடுத்தபோது பகை மன்னர்களின் மகன், மனைவி, தாய் ஆகியோரின் மூக்கை அறுத்ததை ஏற்கனவே கண்டோம். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் (1623-1659) காலத்தில் பகை நாட்டுக் குடிமக்களின் மூக்கை அறுக்கும் பழக்கமாக இது வளர்ச்சியுற்றது.கந்திருவ நரசராஜன் (1638-1659) என்ற மைசூர் மன்னன் திருமலை நாயக்கருடன் போரிட, தன் படையை அனுப்பினான். அப்படை மதுரை நோக்கி வரும்போது வழியிலுள்ள ஊர்களை எல்லாம் கொள்ளையிட்டும், நெருப்பிட்டும் அழித்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி எதிர்பட்டோர் மூக்குகளையெல்லாம் அறுத்தது. அறுபட்ட மூக்குகள் சாக்கு மூட்டைகளில் மைசூருக்குச் சென்றன.நாட்டுத் துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே மூக்கறுத்தல் இருந்தது. மைசூர் மன்னன் எதிரி நாட்டு மக்களுக்கு வழங்கும் தண்டனையாக இதை மாற்றினான். மூக்கறுப்பதற்கென்றே ஓர் இரும்புக் கம்பியை மைசூர்ப்படை வீரர்கள் வைத்திருந்தனர். இக்கருவியின் துணையால் மூக்கையும் மேலுதட்டையும் அறுத்துவிடுவார்கள். அறுத்த மூக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. மீசை உள்ள மேலுதட்டுக்குப் பரிசு அதிகம் (சத்தியநாதய்யர் 1956; 50-52).இதற்குப் பழிவாங்கும் முறையில் தன் தம்பி குமாரமுத்துவின் தலைமையில் ஒரு படையை திருமலை நாயக்கர் மைசூருக்கு அனுப்பினார். மைசூர்ப் படைவீரர்கள் தமிழ்நாட்டில் நிகழ்த்திய மூக்கறுத்தலை மைசூரில் நாயக்கர் படை மேற்கொண்டது. இறுதியில் மைசூர் மன்னனைக் கைது செய்து அவன் மூக்கையும் அறுத்தனர். (மேலது)ஃரையர் என்ற ஆங்கில அறுவை மருத்துவர் 1673க்கும் 1681க்கும் இடைப்பட்ட காலத்தில் மைசூர்ப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். மூக்கறுக்கும் செயல் குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மன்னர் தன் படைவீரர்களுக்கு, பகைவர்களின் மூக்கை அறுக்கும் பயிற்சி கொடுத்துள்ளார். ஒரு கோணிப்பை அளவிலான மூக்குகள் மன்னரின் காலை உணவுக்கு வழங்கப்பட்டன. உயிர்களைக் கொல்வது அவரது சமய நம்பிக்கைக்கு மாறானது என்பதால் அவர் இவ்வாறு செய்கிறாராம் (மேலது). கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சிருங்கேரி மடம் கருநாடகத்தில் உள்ளது. பரசுராமபாகு என்ற மராட்டிய இந்துத் தளபதி கருநாடகத்தின் மீது படையெடுத்தபோது இந்து மடம் என்று சிருங்கேரி மடத்தைக் கொள்ளையடிக்காமல் விட்டுவிடவில்லை.60 லட்சம் பெருமானம் உள்ள அணிகலன்கள் யானை, குதிரை, பல்லக்கு ஆகியவற்றை அங்கிருந்து கொள்ளையடித்தான். சிருங்கேரி மடாதிபதிகள் வணங்கி வந்த சாரதா தேவியின் விக்ரகத்தைப் புரட்டிப் போட்டான்.பல பிராமணக் குருக்களைக் கொன்றான். உயிருக்குப் பயந்து போய் சங்கராச்சாரியார் காஞ்சிலா என்ற இடத்திற்கு ஓடி ஒளிந்தார்.அங்கிருந்தபடியே மைசூரில் இருந்த திப்பு சுல்தானுக்கு உதவி வேண்டி கடிதம் எழுதினார். திப்புவும் சாரதா பீடத்தை மீண்டும் நிறுவ பணமும் தானியங்களும் தந்துதவினான். சாரதா பீடத்தைக் காக்க படைகளையும் அனுப்பினான். இச்செய்திகளை சிருங்கேரி சாரதா மடத்திலுள்ள ஆவணங்களால் அறிகிறோம் (சிவண்ணா, 1999 : 4142). தஞ்சையை ஆண்ட மராத்திய இந்து மன்னன் ஹாஜி (16851712) ராணி மங்கம்மாளின் ஆளுகையில் இருந்த திருச்சி பகுதிக்கு தன் படைகளை அனுப்பிக் கொள்ளையடித்தான்.ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான ஹெட்கேவார் காலமான பிறகு அவரையடுத்து அதன் தலைவராக விளங்கியவர் கோல்வல்கர். ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் ஸ்ரீகுருஜி என்றழைக்கப்படும் அவர் இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்லீம் படையெடுப்பாளர்கள் குறித்து அந்தப் படையெடுப்பாளர்கள் நமது நாட்டுப் பெண்கள் பலரைக் கற்பழித்தனர். நமது கோவில்களையும், யாத்திரைத் தலங்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கியவர்கள். சுகபோகங்களைத் தருவதாக ஆசை காட்டியோ அல்லது வாள்முனையில் மிரட்டியோ பெரும் எண்ணிக்கையினரைத் தமது மதத்திற்கு மாற்றினார்கள். என்று எழுதியுள்ளார் (கோல்வல்கர், 1992 : 8) . ஸ்ரீ குருஜி' குறிப்பிடும் கொடுமைகள் இந்திய நாட்டு வரலாற்றில் புதிய செய்திகளல்ல என்பதை இதுவரை நாம் பார்த்த வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன. இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்த கொடுஞ்செயல்களை சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர். இதனடிப்படையில் சைவமும், வைணவமும் கொள்ளையடித்தல், கோவிலிடித்தல், பெண்களைக் கவர்தல் ஆகிய சமூக விரோதச் செயல்களை வலியுறுத்துகின்றன என்று பொதுப்படையாக கூறிவிட முடியுமா? படையெடுப்பு என்ற பெயரில் கொடூரமான, அநாகரிகமான செயல்களை மேற்கொள்வோர் மதங்கடந்து நிற்பவர்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு வேண்டுவன எல்லாம் தங்கமும், வெள்ளியும், வெண்கலமும்தான். முதலாம் இராஜேந்திரன் தனது வடஇந்தியப் படையெடுப்பின் போது வடஇந்தியாவிலுள்ள மதுரா, என்ற நகரைக் கைப்பற்றினான். இந்நகர்தான் கஜினி முகம்மதுவின் தாக்குதல்களுக்கு அடிக்கடி ஆளான நகரமாகும். இது குறித்து கே.கே. பிள்ளை (1981; 278, 279) பின்வருமாறு அவதானிப்பார்.அந்நகர் அக்காலத்தில் செல்வமும் புகழும் பொதிந்து காணப்பட்டதால் அந்நகரின் மேல் கஜினி முகம்மது பன்முறை தாக்குதல் தொடுத்தான். பன்முறை அதைக் கொள்ளையிட்டான். இவ்வட மதுரையை இராசேந்திரனும் வென்று கைப்பற்றினான். இவ்விரு மன்னரின் போர்களுக்கிடையே ஒரு தொடர்பு காண விழைவதில் வழுவேதுமில்லை. தனது இலங்கைப் படையெடுப்பின்போது இலங்கைக்கு ராஜேந்திரன் நெருப்பூட்டியதை அவனது திருவாலங்காட்சுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. மேலும் ஈழ நாட்டு கிராமங்களை தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்குத் தானமாக ராசேந்திரன் வழங்கினான்.பொலனறுவை என்ற ஊரை, ஜனநாதமங்கலம் என்று பெயர் மாற்றியதுடன் அங்கு சிவன் கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பொருளைக் கவரவும் மன்னர்கள் நிகழ்த்தும் போர்களில் அறநெறிகள் பார்க்கப்படுவதில்லை என்பதே வரலாற்று உண்மை. இவ்வுண்மைக்கு கோரி முகம்மது, கஜினி முகம்மது, மாலிக்கபூர் போன்ற இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மட்டுமின்றி இராஜராஜன், இராஜேந்திரன் என இந்து மன்னர்களும் எடுத்துக்காட்டாக அமைகின்றனர். இதனால்தான் ஜார்ஜ் ஸ்பன்சர் என்பவர் சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பு குறித்து, தாம் எழுதிய கட்டுரைக்கு ‘The Politics of Plunder�, �The Cholas in the 11th Century Ceylon� (அரசியல் கொள்ளை பதினோறாவது நூற்றாண்டு இலங்கையில் சோழர்கள் என்று தலைப்பிட்டுள்ளார். சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பை வீரச்செயல் என்று தமிழர்கள் கருதினால் சோழ மன்னர்கள் நிகழ்த்திய கொள்ளையென்று சிங்களவர் அதைக் கருதுகின்றனர். உணர்ச்சி வயப்படாமல் சிந்தித்தால் அவ்வாறு அவர்கள் கருதுவதில் நியாயம் உள்ளது என்பது புலனாகும். thanks :http://meiyeluthu.blogspot.com/2009/11/blog-post_14.html

இ.எம்.எஸ், எழுதிய இந்திய வரலாறு, என்னும் புத்தகத்தில்

0 c
இந்திய சமூக பொருளாதார அடிப்படைகள் - சில விவாதங்கள்
ரிக் வேதத்தை இயற்றிய ஆரியர்கள் முதல், மொகலாய சக்கரவர்த்திகளின் சரித்திரக் காலம் வரை நிலைத்து நின்றதும், பிரிட்டிஷாரால் தகர்க்கப்பட்டதுமான இந்திய சமூகத்தின் அடிப்படை அமைப்பு என்ன? அதனுடைய விசேஷத் தன்மைகளை நிலைநாட்டவும் வளர்க்கவும் செய்ததில் இந்து, இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் ஆற்றிய பங்கு என்ன? இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னேற்றத்தின் விளைவாக உருவாகிய இந்த பாரதீய சமூகப் பொருளாதார அமைப்பின் அடிப்படையைத் தகர்க்க இறுதியில் பிரிட்டிஷாரால் எப்படி முடிந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள்தான் கீழே தரப்படுகிறது.
1. ஆக்கிரமிப்பாளர்களாக இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் ஆரியர்களல்லாத சமூகத்தவருடன் இணைந்து உருவாக்கிய புதிய உற்பத்தி முறையின் (விவசாயம்) விளைவாக ஆரியர்களல்லாத கோத்திர வர்க்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தகர்ந்தன. இந்த ஆரியர்களல்லாத, ஆரிய சமூகத்தவரும் இணைந்தும் புதிய சமூகங்கள் உருவாகின.
2. கோத்திர வர்க்க அமைப்பின் அறிவினாலும் உற்பத்தி முறை வளர்ச்சியின் காரணமாகவும், சமூகம் முழுவதின் உற்பத்தித் திறன் அதிகரித்தது. இதன் விளைவாக உற்பத்தி ரீதியான பணிகள் விரிவடைந்தன. வெவ்வேறு வேலைகள் செய்கின்ற வெவ்வேறு பகுதியினர் என்கிற நிலையில் வேலைப் பிரிவினைகள் ஏற்பட்டது. அத்துடன் உற்பத்தித் திறன் அதிகரித்ததைத் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் அளவும் அதிகரித்தது. இவையெல்லாம் சேர்ந்து ஆரம்ப வடிவிலுள்ள சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ஒரு உற்பத்தி உறவை (நான்கு வர்ணங்கள்) தோற்றுவித்தது. இது படிப்படியாக உற்பத்தி முறையின் வளர்ச்சிக்கும், உற்பத்தித்திறனின் முன்னேற்றத்திற்கு மேற்ப விரிவடைந்து, மேலும் மேலும் சிக்கலான ஒரு ஜாதி முறையாக மாறியது.
3. புராதன கிரீஸ், ரோம், சில மேற்காசிய நாடுகள் ஆகியவைகளில் உருவான அடிமைமுறை அமைப்புக்கும், இந்தியாவில் உருவான இந்த வர்ண, ஜாதி அமைப்புக்கும் இடையில் அடிப்படையான வேற்றுமைகள் ஒன்றும் இல்லை. அடிமை முறையைப் போலவே வருணா, ஜாதி முறையினுடையவும் முக்கியமான அம்சம் சுரண்டுவோர் சுரண்டப்படுவோரிடையேயுள்ள முரண்பாடுதான். ஒன்றில் அடிமைகள் என்று பகிரங்கமாக அழைக்கப்பட்ட பெரும்பான்மையான மக்கள் சுரண்டலுக்கு இரையாக்கப் படுகிறார்கள், மற்றொன்றில் ஜாதி என்ற திரையைப் பிடித்துக் கொண்டுள்ளார்கள். இந்த வித்தியாசம்தான் உள்ளது.
4. ஆனால், வருண, ஜாதி முறை அமலுக்கு வந்தபோது அதனை நிலைநாட்டவும், நியாயப்படுத்துவதற்குமாக மத நம்பிக்கைகளுடையவும் தத்துவச் சிந்தனைகளுடையவும் ஒரு சிறப்பான கட்டுக்கோப்பு சுரண்டல் அமைப்பைச் சுற்றிலும் கட்டப்பட்டது. இவ்வாறு அடிமை முறையின் வடிவிலுள்ள சுரண்டலினுடையதான மத, தத்துவ சிந்தனை முதலியக் கட்டுக்கோப்புகளிலிருந்து மாறுபட்ட வேறு ஒரு கட்டுக்கோப்பு இந்தியாவில் உருவாகியது. அதுதான் இந்து மதமும், இந்து தத்துவ ஞானமும், இந்துக் கலாச்சாரமும் மற்றுமாகக் காட்சியளித்தது. அதைத்தான் இந்த வகுப்புவாதிகள் “பரிசுத்தமான பாரதீயக் கலாச்சாரம்’’ என்றழைக்கின்றனர்.
5. அடிமைமுறை, வருண ஜாதி முறை ஆகிய இரண்டு சுரண்டல் முறைகள்தான் அமலில் இருந்ததென்றாலும், புராதன வரலாற்றுக் காலகட்டத்தில் இந்தியாவிலும் மேற்காசிய நாடுகளிலும் உற்பத்திக்கு ஒரு பொதுத்தன்மை இருந்தது. பொதுவாகக் கூறினால், இரண்டிலும் உற்பத்தியாளர்கள் உற்பத்திச் செயலில் ஈடுபட்டது சொந்த உபயோகத்திற்காகத்தான், உற்பத்தி செய்யப்படுகிற பொருட்களில் மிகச் சிறிய பகுதி மட்டுமே மற்றவர்களுக்கு விற்கப்பட்டது. அது போலவே சொந்த உபயோகத்திற்குத் தேவைப்பட்ட பொருட்களில் சிறு பகுதி மட்டுமே மற்றவர்களிடமிருந்து வாங்கப்பட்டது. “சரக்கு உற்பத்தி’’ என்றழைக்கப்படுகிற உற்பத்தி முறை இரண்டிலும் பலவீனமாகவே இருந்தது என்று பொருள்.
6. ஆனால், வருண, ஜாதி முறை, சரக்கு உற்பத்தியின் வளர்ச்சியை அடிமை முறையிலுள்ள வளர்ச்சியைவிட நிதானப்படுத்தியது. ஒவ்வொரு கிராமத்திலும் அதனதனுடைய மக்களின் சாதாரண வாழ்க்கைத் தேவைகளுக்கான பொருட்களையெல்லாம் உற்பத்தி செய்வது, அது ஒவ்வொன்றும் உற்பத்தி செய்வதற்கு குறிபிட்ட ஒரு ஜாதியினர் இருப்பது, இந்த அடிப்படையில் சுயதேவைப்பூர்த்தி கிராமங்களும், அவைகளின் பிரிக்க முடியாத பாகமாக ஜாதி முறையும் உருவாகியது, தான் இந்தியாவின் சிறப்பு. இந்த அமைப்பில் கிராமத்தினுடைய உற்பத்திப் பொருளை வெளியே எடுத்துச் சென்று விற்பதோ, கிராமத்தின் தேவைக்கான பொருட்களை வெளியிலிருந்து வாங்குவதற்கான தேவையோ அநேகமாக இல்லையென்று ஆகிவிட்டது.
7. நேர்மாறாக, அடிமை முறையில், அடிமைகளைச் சுரண்டிப் பெறுகின்ற உபரிப் பொருட்களை விற்கவும் அதன் மூலம் கிடைக்கின்ற பணத்தைப் பயன்படுத்தி ஆடம்பர வாழ்க்கை நடத்தக்கூடிய போக்கும் சுரண்டும் வர்க்கத்திற்குண்டு. ஆகவே, சுயதேவை பூர்த்திக் கிராமங்களும் ஜாதி முறைகளும் இருந்து வந்த இந்தியாவைக் காட்டிலும் அதிக சரக்கு பரிவர்த்தனை அடிமை முறை வழக்கிலிருந்த மேற்காசியாவில் நடந்தது. சரக்காக மாற்றக்கூடிய செல்வத்தை ஏராளமாகக் கொள்ளையடிப்பது இந்த நாடுகளின் சுரண்டும் வர்க்கங்களின் தேவையாக இருந்தது. அவர்கள் பெருமளவில் இந்தியாவிற்குள் ஆக்கிரமித்து நுழைந்தனர். அதனைத் தோற்கடிக்க சுயதேவைப் பூர்த்தி கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட இங்குள்ள சுரண்டும் வர்க்கங்களால் முடியவில்லை.
8. ஆனால், ஜாதி முறையினுடைவும், சுயதேவைப் பூர்த்தி கிராமங்களுடையவும் அடிப்படையில் உருவான சமூக அமைப்பின் அடிப்படையைத் தகர்க்க இந்த ஆக்கிரபிப்பாளர்களாலும் முடியவில்லை. முகமது நபிக்குப் பிறகு வளர்ந்து வந்த புதிய இஸ்லாம் மதத்தின் ஆவேசத்தை உட்கொண்டு, முஸ்லிம் அல்லாத மத நம்பிக்கைகளுக்கெதிராக “ஜிஹாத்’’ (போர் முழக்கம்) செய்ய முயற்சித்தவர்களால்கூட ஜாதி முறையையோ சுயதேவைப் பூர்த்தி கிராமங்களையோ அழிக்க முடியவில்லை. இந்துக்களுடையதான பல்வேறு ஜாதிகளுக்கு மேலாக ஒரு “முஸ்லிம் ஜாதி’’ கூட உருவாகவே செய்தது.
9. உற்பத்தி முறையில், சரக்கு உற்பத்தி முன்பிருந்ததைவிடப் பெருக, இந்த ஆக்கிரமிப்புகள் உதவின. ஆனால், அது சமூகம் முழுவதும் பரவவில்லை. சுரண்டும் வர்க்கங்களுடைய அன்றாட உபயோகத்திற்கான ஆடம்பரப் பொருட்களைத்தான் சரக்குகள் என்ற முறையில் அதிகமாக வாங்கத் தொடங்கினர். அதைப் போன்ற உற்பத்தி அதிகரிக்கின்ற அளவுக்கு சுரண்டும் வர்க்கங்கள் அதிக செல்வத்தைக் கொள்ளையடித்து சொந்தமாக்கத் தொடங்கியபோது அவர்கள் சந்தையில் விற்பதும் அதிகரித்தது. இவ்வாறு சுரண்டும் வர்க்கங்களின் மட்டத்தில் சரக்குகளை வாங்குவதும் விற்பதும் அதிகரித்தது. ஆனால், இது சமூகத்தின் மேல் தட்டில் மட்டுமாக ஒதுங்கி நின்றது. அடித்தட்டில் சரக்கு உற்பத்தியும் உபயோகத்திற்காக சந்தையிலிருந்து வாங்குவதும் மிக மிகக் குறைவாகவே இருந்து வந்தது.
10. இவ்வாறு ஒரு சிறுபான்மையோர் மட்டுமான சுரண்டும் வர்க்கங்களைத் தவிர்த்து இந்திய சமூக அமைப்பு, சுய தேவைப் பூர்த்தி கிராமங்களின் அடிப்படையிலேயே இருந்து வந்தது. இதனைத் தகர்க்க முகமது நபியின் காலத்திற்கு முன்போ, பிறகோ மேற்காசியாவிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் யாராலும் முடியவில்லை. இந்த ஆக்கிரமிப்பாளர்களுடையவும் சக்கரவர்த்திகளுடையவும் படைத் தளபதிகளுடையவும், ராணுவ முன்னேற்றங்கள், கிராமப் பகுதிகளில் உற்பத்தி உறவுகளிலோ, அதனுடைய சமுதாய அமைப்பிலோ எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் பயன்படவில்லை என்பது பொருள்.
11. இங்குதான் ஐரோப்பிய வியாபாரிகளின் வருகை முதல் பிரிட்டிஷ் ஆட்சி அமைவது வரை நடைபெற்ற நிகழ்ச்சிகள், பழைய நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபடுவது, ரிக் வேதத்தை இயற்றிய ஆரியர்கள் முதல், மொகலாயச் சக்கரவர்த்திகள் வரையான அன்னியர்களுக்கு மாறாக இந்தப் புதிய பகுதி ஐரோப்பிய வியாபாரிகள் இந்தியாவிற்கு முற்றிலும் “அன்னியமான’’ ஒரு சமூகப் பொருளாதார அமைப்பின் கருவுடன்தான் இங்கு கடந்து வந்தனர். “பாரதீயக் கலாச்சாரத்’’தின் அஸ்திவாரத்திற்கு கிராம சுய தேவைப் பூர்த்திக்கும், ஜாதி முறைக்கும் வேட்டு வைக்கின்ற சரக்கு உற்பத்தி முறையின் ஏஜென்ட்டுகளாகத்தான் இவர்கள் இந்தியாவிற்கு வந்தனர்.
(தோழர் இ.எம்.எஸ், எழுதிய இந்திய வரலாறு, என்னும் புத்தகத்தில் மேற்படி விவரங்களை விரிவாக விளக்கி இருக்கிறார். 13வது அத்தியாயத்தில், ஆரியர் துவங்கி ஆங்கிலேயர் வருகை வரையான வரலாற்றுத் தொகுப்பை 11 அம்சங்களாக சுருக்கி இ.எம்.எஸ் எழுதியிருப்பது, அற்புதமானது. மேலும் இந்தக் கண்ணோட்டத்தில் நிகழ்வுகளைச் சுருக்கமாக விளக்குவதற்கு பயன்படும் என்பதனால், இளைஞர் முழக்கம், மேற்படி பகுதியை மறுபதிப்பு செய்கிறது
thanks to http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1159:2009-11-10-04-42-08&catid=943:09&Itemid=196

மென் நூல்களை கணினியில் பார்வியிட

0 c

Stanza Desktop
மென் நூல்களை கணினியில் பார்வியிடவும் மாற்றவும் (convert)
"Stanza Desktop" உதவுகிறது.

எல்லாவித மென் நூளல் (E-Book) வடிவூட்டங்களையும் (Format) திறப்பதற்கு Stanza உதவுகிறது. இலவசமான இந்த மென்பொருள் Mobipocket, eReader, PalmDOC, FictionBook, OEB 1.2, Open eBook, Adobe Digital Edition மற்றும் Amazon Kindle என்பவற்றை அனுசரிக்கிறது. HTML-, Word- அல்லது PDF போன்றவற்றையும் இது காட்டுகிறது. Export Function மூலம் இதன் வடிவூட்டங்களை விரும்பியவாறு மாற்றியமைக்கலாம்.
திறக்கப்படும் ஒவ்வறு புஸ்தகங்களும் புதிய சன்னலில் (Window) அதற்கே உரிய அமைப்புடன் (Layout) திறக்கப்படுகிறது. எழுத்துரு, நிறம், எழுத்தின் அளவுகளை மிகவும் எழிதாக மாற்றியமைக்கலாம்.
பட்டியலின் (Menu) ஊடாக விரும்பிய அதிகாரத்தை திறக்கலாம்.
வாசிப்பை நிடை நிறுத்தி விட்டு மற்றொரு சமயத்தில் தொடர்ந்து வாசிக்க விரும்பினால், இடை நிறுத்திய இடத்தில் அடையாளக் குறி (Bookmark) வைக்க முடியும்.
இதே பெயருடைய மென்பொருளை உங்கள் iphoneக்கு iphone app ஆகவும் தறவிரக்கம் செய்யலாம்.
E-Book-Reader அனைவருக்குமே பயண்தரும் செயலி (Programme}

thanks to http://yarl.wordpress.com/2009/10/07/மென்-நூல்களை-கணினியில்-ப/

Easy Way to Split and Merge PDF documents


http://sourceforge.net/projects/pdfmerge/
Easy Way to Split and Merge PDF documentsThe book has 10 chapters and each chapters has 10 pages. So If you want to split each chapters into separate files, You can use PdfMerge Application. (This is called Split operation).

Do you want to join more than one PDF files into a single PDF file? (This operation is called Merging) Please download the PdfMerge Application to do both operations for you.PDF Split and Merge tool is implemented using the PdfSharp library and is either GUI or command driven.It is useful for automated document creation.It allows bookmarks from the input pdfs to be imported and flexibly embedded in the destination document
thanks tohttp://www.tamilnenjam.org/2009/05/how-to-split-merge-pdf-files.html

கொற்றவை மலை ஐயன்

1 c
எஸ். இராமச்சந்திரன்
கேரள மாநிலத்தில் பிரபலமான ஐயப்பன் கோயில் அமைந்துள்ள மலை சபரிமலை என வழங்கப்படுகிறது. சபரி என்ற பெயர் கொற்றவையின் பெயர்களுள் ஒன்றாகும். இவள், ‘சபரர்’ எனப்பட்ட பாலை நில எயினர்களின்1 தெய்வமாவாள். இவளை நக்ன சபரி, கொட்டவி, கொட்டாரா என்ற பெயர்களை உடைய துர்க்கையாகவும், மகாபலியின் தாயாகவும் வடமொழிப் புராணங்கள் சித்திரிக்கின்றன.2 மகாபலியைத் துளுமொழி வழங்கிய கன்னட – கேரளப் பகுதி மக்களின் மூதாதையாகக் கருதும் வழக்கமுள்ளது. எனவே, கேரள மாநிலத்திலுள்ள சபரி மலையைக் கொற்றவை மலை எனக் குறிப்பிடுவதில் தவறில்லை எனக் கருதுகிறேன். சபரிமலை ஐயப்பன் வழிபாட்டின் வெகுஜனத் தன்மை பற்றியும் அதன் பெளத்த மூலம் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பள்ளிக்கட்டு, தர்மசாஸ்தா போன்ற வழக்குகளும், “புத்தம் சரணம் கச்சாமி” என்பதையொத்த “சாமியே சரணம் ஐயப்பா” முதலிய சரண கோஷங்களும் சாதி அந்தஸ்து ஏற்றத்தாழ்வுகளைப் பாராட்டாமல் பயண அனுபவ மூப்பு அடிப்படையில் ஒருவரைக் குருசாமியாக ஏற்கும் மரபும் பெளத்தத் தொடர்புகளை வலியுறுத்தும் கூறுகளாக அமைந்துள்ளன என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வழிபாட்டு நெறிகளிலும் வாழ்வியல் முறைகளிலும் வெகுஜனங்களின் பங்கேற்பு மூலமாகவே முடிவுகள் எடுக்கப்படும் பழங்குடிச் சமூகக் குடியரசு நெறிமுறைகளின் அடிப்படையில் தோன்றிய பெளத்த சங்கத்தின் தன்மைகளை ஜீரணித்து வளர்ந்ததே சபரிமலை ஐயப்பன் வழிபாட்டு மரபு என்பதை இவ்வழக்கங்கள் உணர்த்துகின்றன. கேரள மாநிலத்தைப் பொருத்தவரை, பெளத்த சமய மரபுகள் வைதிக இந்து சமய வழிபாட்டு நெறிகளுக்குள் ஈர்த்துத் தன்மயமாக்கிக் கொள்ளப்பட்ட நடைமுறை கி.பி. 12-13ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. தென்கேரளப் பகுதியைச் சேர்ந்த வேணாட்டு ஆய் மன்னர்களின் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையத்துச் சாசனம் பெளத்த சமயத் தொடர்புடையதாகும்.3 இச்செப்பேடு, “சுத்தோதனன் மகனான புத்த பகவான் மூன்று உலகங்களையும் குறைவின்றிக் காப்பாற்றுவாராக” என்றும், “பெளத்த தர்மம், பெளத்த சங்கம் என்பவை பூமிதேவியின் கண்களாகத் திகழ்க” என்றும், “அமுதைப் பொழியும் நிலவொளிக்கு ஒப்பான அவலோகித போதிசத்வரின் கருணைப் பார்வை குறைவற்ற செல்வத்தை அருளட்டும்” என்றும் துதிக்கிறது. இச்செப்பேடு திருமூலபாதத்து படாரர் எனப்பட்ட இறைவனுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையைப் பதிவுசெய்துள்ளது. திருமூல பாதத்து படாரர் என்பது ஸ்ரீமூலவாஸம் என்ற தலத்தில் எழுந்தருளியிருந்த, லோகநாதர் என அழைக்கப்பட்ட போதிசத்வ அவலோகிதேஸ்வரரைக் குறிக்கும். சுத்தோதனனுக்கும் மாயாதேவிக்கும் பிறந்த கெளதம சித்தார்த்தர் என்பவர் மானுஷி புத்தர் (புத்தரின் மனித வடிவம்) ஆவார் என்றும், அவலோகிதர் என்பது அவருடைய போதிசத்வ வடிவம் ஆகுமென்றும் அமிதாபர் என்பது அவருடைய தியானி புத்தர் வடிவம் ஆகுமென்றும் புத்த சமயத்தவர் கருதுகின்றனர். கி.பி. 10-11ஆம் நூற்றாண்டுகளில் சோழப் பேரரசின் விரிவாக்கம் நிகழ்ந்தது. பாண்டிய நாடு சோழ அரசின் அங்கமாக ஆக்கப்பட்டது. குறுகிய காலத்திற்குச் சேரநாடும் சோழர்களின் ஆளுகையின்கீழ் வந்தது. சோழர்கள், சேர, சோழ, பாண்டிய நாடுகளின் அதிபதி என்று பொருள்படும் வகையில் ‘மும்முடிச் சோழன்’ எனப் பட்டம் சூடினர். ஆயினும், சேரநாட்டுப் பெருமாக்கோதை மன்னர்கள் ஆட்சிதான் வீழ்ச்சியடைந்ததே தவிரச் சேர நாடு முழுமையாகச் சோழப் பேரரசுக்குள் அடங்கிவிடவில்லை. இக்காலகட்டத்தை “நூறாண்டு போர்க் காலம்” எனக் கேரள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். இப்போரின் விளைவாகச் சேர நாட்டின் ஆட்சியமைப்பிலும் சமூக அமைப்பிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. கி.பி. 12-13ஆம் நூற்றாண்டுகளில் பெருமாக்கோதை மன்னர்களின் ஆட்சி முழுமையாக வீழ்ச்சியடைந்தது. அவ்வீழ்ச்சி கி.பி. 14ஆம் நூற்றாண்டில் கண்ணனூர்க் கோலாதிரி (கோலத் திருப்பாதம்), பெருந்தலமன்ற வள்ளுவக் கோனாத்திரி (வள்ளுவக் கோன் திருப்பாதம்), கோழிக்கோடு சாமூதிரி (சாமிதிருப்பாதம்), ஆற்றிங்கல் வேணாட்டுத் திருவடி போன்ற சிற்றரசர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது. இச்சிற்றரசர்களின் பட்டப் பெயர்கள் திருப்பாதம் அல்லது திருவடி என்று அமைந்திருப்பது பெளத்த மரபின் தொடர்ச்சியையே காட்டும். மிகப் பழமையான ஹீனயான பெளத்தத்தில் புத்தருடைய திருவடிகளைக் குறிக்கின்ற பாத பீடிகையே வழிபடப்பெற்றது. இந்து சமயத்தில் நிலவுகிற ஸ்ரீபாத வழிபாடு என்பது ஹீனயான பெளத்த மரபினை மூலமாகக் கொண்டதே ஆகும். கடவுளையும் கடவுளர் என அழைக்கப்பட்ட முனிவர்களையும் அடிகள் எனக் குறிப்பிடும் வழக்கம் இம்மரபின் தொடர்ச்சியே. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் என்று குறிப்பிடப்படுவது நாம் அறிந்ததே. இன்றும் வடகேரளப் பகுதியில் துளு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பிராம்மணர்களிடையே இப்பொருளுடைய அடிகா என்ற குடும்பப்பெயர் வழக்கிலுள்ளது. இதுபோன்றே நம்பிதிருப்பாதம் (இன்றைய வழக்கில் நம்பூதிரிபாத்) என்ற பட்டப் பெயர் கொண்ட பிராம்மணர்கள் கேரளச் சமூக அமைப்பில் முதன்மையான ஆதிக்க சக்தியாக உருவெடுத்தனர். இத்தகைய நிகழ்வுகளின் விளைவாகச் சேரநாடு கேரள ராஜ்ஜியமாகவும், பரசுராம க்ஷேத்திரமாகவும் மாறுகிற சூழல் உருவாயிற்று. பெளத்த சமயத்தின் நிர்வாக அமைப்பு, வெறும் கூடாக மட்டுமே நீடித்தது. இதனையடுத்து, கி.பி. 14ஆம் நூற்றாண்டில் மதுரைப் பாண்டிய அரசினை வீழ்த்தி உருவான மதுரை சுல்தானிய அரசாட்சி, கர்நாடக மாநிலம் வரை வியாபித்த டில்லி, பாமினி சுல்தான்களின் ஆட்சி ஆகியவற்றின் தாக்கத்தால் கேரளக் கடற்கரை இஸ்லாமிய மரக்கல நாயர்களின் ஆதிக்கத்தின்கீழ் வந்தது. இவற்றின் ஒட்டுமொத்த விளைவாகக் கேரளக் கடற்கரையிலும், தமிழகத்தின் நாகப்பட்டினம், இராமேஸ்வரம் போன்ற சில கடற்கரை நகரங்களிலும் ஓரளவு உயிர்ப்புடன் இருந்த பெளத்த சமயத்தின் இறுதிமூச்சும் நின்றுபோனது. பெளத்த சமயம் அது தோன்றிய இடமாகிய இந்திய நாட்டிலேயே பின்பற்றுவாரின்றி மறைந்துபோனது. இந்நிகழ்வுப் போக்கின் விளைவாகவே சபரிமலை ஐயப்பன் முற்றிலும் இந்து சமய வழிபாட்டு முறையில் வழிபடப்பெறும் தெய்வமாக மாறிப்போனார். இஸ்லாமியர்களுடனான இணக்கத்தை வெளிப்படுத்தும் வண்ணம் சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் வாவர் (பாபர்) சமாதி வழிபாட்டுக்கும் இடமளிக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பனைப் பற்றிய இத்தகைய ஆய்வு முடிவுகள் அறிஞர்களால் பரவலாக விவாதிக்கப்பட்டுள்ளன.4 ஆனால், சபரிமலை ஐயப்பனின் பழங்குடி மூலத்தைப்பற்றி ஆழமான ஆய்வு ஏதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஐயப்பன் வன்புலி வாகனனாக இன்றுவரை வழிபடப்படுவது, ராமாயணத்தில் இடம்பெறும் சபரி என்ற வேடர் குலப் பெண் அப்பகுதியில் வாழ்ந்ததாகவும் வன வாசத்தின்போது ராமன் அவளைச் சந்தித்ததாகவும் பம்பை திரிவேணி சங்கமத்தில் ராமன் தன் தந்தை தசரதனுக்குரிய சிராத்தச் சடங்குகளைச் செய்ததாகவும் நிலவுகின்ற நம்பிக்கை, போன்றவற்றின் அடிப்படையில் இம்மலை சபரர் என அழைக்கப்பட்ட எயினர்களின் வாழ்விடமாகவே முற்காலத்தில் இருந்துள்ளது என்று முடிவு செய்வது எளிது. ஆயினும், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. சபரர் என்ற பழங்குடிகள் பற்றி இந்தியப் புராணங்களில் இடம்பெற்றுள்ள விவரங்களை ஆராய்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை முறை குறிஞ்சி நிலப் பூர்வகுடிகளான குறவர்களைப் போன்று தினை முதலான மலைப்பயிர் விவசாயம் சார்ந்ததன்று எனத் தெரியவருகிறது. குன்றக் குறவர்கள் வடமொழிப் புராணங்களில் கிராதர் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.5 முற்றிலும் வேட்டையும் ஆனிரை கவர்தலுமே சபரர்களுடைய வாழ்க்கை முறை. காட்டு எருமைகள், மலை ஆடுகள் போன்றவற்றை வேட்டையாடி உண்டு வாழ்ந்தவர்கள் சபரர் ஆவர். பிற்காலத் தமிழிலக்கியங்கள் கள்ளர் - மறவர் குலத்தவரைச் சபரர் என்றே குறிப்பிடுகின்றன. கள்ளர் - மறவர்களுடைய வழிபடு கடவுளான கொற்றவை ஆனிரை கவரும் வெட்சிப் போர்த் தெய்வமாகும். சபரர் குலத்தவர்களின் வழிபாட்டு எச்சங்களாகச் சபரிமலைப் பெருவழிப் பாதையில் அமைந்துள்ள எருமைகொல்லி (எருமேலி), காளைகட்டி போன்ற ஊர்ப் பெயர்களையும், மஹிஷி என்ற எருமை வடிவப் பெண் தெய்வத்தை ஐயப்பன் கொல்வது, மஹிஷியைப் புதைத்த இடமாகிய கல்லிடு குன்றில் பக்தர்கள் இன்றும் கற்களை இடுவது போன்ற வழக்கங்களையும் குறிப்பிடலாம். ‘உவலிடுபதுக்கை’ என்றும் “மறவர்களின் அம்புபட்டு வீழ்ந்தோரின் வம்பப்பதுக்கை” என்றும் சங்க இலக்கியங்கள் இவ்வழக்கத்தைக் குறிப்பிடுகின்றன. சபரர்களைப் பழங்கற்காலத்தின் இறுதிப் பகுதியைச் சார்ந்த குடியினராகவே தொல்லியலாளர்கள் அடையாளம் காண்பர்.

கொற்றவையின் ஆயுதமாகப் பிற்காலச் சிற்பங்களில் சித்திரிக்கப்படும் சக்கரத்தின் பூர்வ வடிவம் பழங்கற்கால வேட்டைக் கருவியாகிய வட்டு (disc) ஆகும். பழங்கற்காலப் பண்பாட்டு நிலைச் சமூகத்தவர் ஆப்பிரிக்க நிக்ராய்டு இனக் கூறுகளைக் கொண்டவர்களாவர். இவர்கள், தொல்பழங்காலத்திலேயே குன்றக் குறவர் போன்ற பிற பழங்குடிகளைச் சேர்ந்த மகளிரைச் சிறையெடுத்து மணம்புரிந்ததன் மூலம் குறவர் குலத்தவரின் மானிடவியல் பண்பாட்டுக் கூறுகள் சிலவற்றை உள்வாங்கியிருக்கக்கூடும். கொற்றவை வழிபாட்டுச் சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி நிலையைப் பிரதிநிதித்துவம் செய்தவர்கள் இடப்பெயர்வு விவசாய வாழ்நிலையைச் சார்ந்தவர்கள் ஆவர்.

இச்சமூகத்தவரைப் புதிய கற்காலக் குடியினர் என நாம் அடையாளம் காணமுடியும். புதிய கற்காலக் குடியினரின் வழிபடு தெய்வமாக அல்லது வேட்டையின்போதும் போர்களின்போதும் வழிநடத்துகிற தளபதியாகச் சங்க காலக் கூற்றுத் தெய்வத்தை நாம் அடையாளம் காணமுடியும். கூற்று என்ற சொல் பொதுப்பாலில் அமைந்திருப்பினும் இத்தெய்வத்தைக் கொற்றவையின் ஆண் வடிவமாகவே அடையாளம் காணமுடிகிறது. இத்தெய்வம் விரும்பிச் சூடும் மலர் கொன்றை ஆகும். கூற்று என்ற இத்தெய்வம் புலித்தோலை ஆடையாக உடுத்த தெய்வம் என்று கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப்பாடல் (“கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவல் புரள”) கூறுகின்றது. சைவ சமயம் பல்வேறு சமூகங்களின் வழிபாட்டு அம்சங்களையும் பொருத்தமாக உள்ளடக்கிச் சிவனென்ற பெருந்தெய்வமாக வடிவமைத்தபோது கூற்று என்ற இத்தெய்வம் காரி என்ற பெயரிலும், பைரவர் என்ற பெயரிலும் போற்றப்படும் சிவமூர்த்தமாகச் சித்திரிக்கப்பட்டது. கன்னட வீரசைவ நெறியின் தலைமைத் தெய்வமாகிய வீரபத்திரர் பைரவக் கடவுளின் வடிவமே ஆவார். அடிப்படையில் இத்தெய்வம் முல்லை நில வேட்டுவர்களின் தெய்வமாகும்.

முல்லை நிற வேட்டுவர்கள் கருத்த நிறமுடைய முன்னிலை ஆஸ்திரலாய்டுப் பழங்குடிகள் என அடையாளம் காண இயலும். சபரிமலையில் வன்புலி வாகனனாகக் காட்சியளிக்கும் ஐயன், பெளத்த சமயத்தவரின் தர்மசாஸ்தாவாக உருவெடுக்கும் முன்னர், கூற்றுத் தெய்வத்தின் தன்மைகள் கொண்ட காரியாகவே இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம். காரி என்ற பெயர் சாத்தனுக்கும் உரியதென்றும் தமிழ் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. பைரவரைச் சிவபெருமானின் பிள்ளை எனப் பெரியபுராணம் குறிப்பிடுவது போன்றே சிவபிரான், “சாத்தனை மகனா வைத்தார்” என அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். இத்தகைய ஒப்புமைகள் காணப்பட்டாலும், ஐயனார் அல்லது ஐயப்பன் என்ற பெயர் தகப்பனைக் குறிக்குமே தவிரப் பிள்ளையைக் குறிக்காது. கூற்று வழிபாடு என்பது பைரவ வடிவம், யமன் என்ற தென்புலக் காவல்காரன் வடிவம் ஆகியவற்றோடுதான் நெருக்கமுடையதாகும். யமன் என்பது இறந்து, மீண்டும் பிறக்கும் தன்மையின் உருவகமே. ஆனால், ஐயன் (பித்ரு) என்பதோ சிவபதம் என்றும், சாயுஜ்யம் என்றும் பிற்காலச் சைவ சித்தாந்தத்தில் குறிப்பிடப்படுவது போன்று, மீண்டும் பிறவாத உலகுக்குச் சென்றுவிட்ட தென்புலத் தலைவன் வடிவமாகும். தென்புலத் தெய்வம் என்பது netherworld எனக்குறிப்பிடப்பட்ட நெய்தல் உலகின் தலைவனாகிய வருணனையே குறிக்கும்.

இன்றைய நிலையில் சபரிமலைப் பயணத்திலோ, ஐயப்பன் வழிபாட்டிலோ பருவ வயதடைந்த பெண்டிர் அனுமதிக்கப்படாமல் இருப்பது ஆராயத்தக்கதாகும். இது ஒரு பழங்குடி நம்பிக்கையாகவே தோன்றுகிறது. குஹ்யகர்கள் எனப்படும் குள்ள வடிவக் குலக்குழுவினர் குருதியின் மணத்தை விரும்பி வருவரென்றும், அவர்களின் தலைவனாகிய குகன் (முருகன்) மாதவிடாய்க் காலத்துப் பெண்டிரை ஈர்த்து அவர்களை மனநோய்க்கு ஆளாக்கிவிடுவான் என்றும் பழங்குடி மக்கள் அஞ்சினர். புறநானூற்றில் (பா. 299) அணங்குடை முருகன் கோட்டத்தில் கலம்தொடா மகளிர் (உணவு சமைக்கும் கலங்களைத் தொடுவதற்கு அனுமதிக்கப்படாத மாதவிடாய்க் காலப் பெண்டிர்) புகுந்தால் சுருண்டு விழுந்துவிடுவர் என்ற குறிப்பு காணப்படுகிறது. இது மேற்குறித்த குஹ்யகர்கள் தொடர்பான நம்பிக்கையின் பதிவே எனலாம். குறிஞ்சி நிலத்தில் அமைந்துள்ள சபரிமலைச் சாத்தன் கோயிலுக்கு நீண்ட நெடும் மலைப்பாதை வழியாக மகளிர் பயணம் செய்கின்ற அவசியம் நேரும்பட்சத்தில் அவர்களுக்கு மாதவிடாய்க் காலம் வந்துவிட்டால் ஐயப்பனின் வாகனமான புலியினாலேயே ஊறு நேர்ந்துவிடலாம் என்ற அச்சமும் இத்தடைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். எவ்வாறாயினும், இந்நம்பிக்கை சபரர்களிடையே நிலவிய நம்பிக்கை எனக் கொள்வதைவிட, குறிஞ்சி நிலக் குடிகளான குறவர்களிடையிலும், முல்லை நில வேட்டுவர்களிடையிலும் நிலவிய நம்பிக்கையாகவே நாம் கருதலாம்.6 மலபார்ப் பகுதியிலுள்ள வயநாடு வட்டத்தில் அமைந்துள்ள எடக்கல் மலையில் கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் ”பல்புலி தாத்தகாரி” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.7 இக்கல்வெட்டு உள்ள குகையினை அப்பகுதிப் பழங்குடியினர் மிகவும் புனிதமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர் என்ற செய்தியும் அறிஞர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இடம்பெறுகிற தாத்தகாரி என்பதற்கு மூதாதையாகிய ஐயனார் என்று பொருள்கொள்ள வாய்ப்புள்ளது. பல்புலி என்பது பல புலிகளை வசப்படுத்தியவன் என்ற நேர்ப்பொருளும் புலிவாகனன் என்ற குறிப்புப் பொருளும் கொண்ட அடைமொழியாக இருக்கலாம்.

எனவே, தென் கன்னடத்தைச் சேர்ந்த, முல்லை நில வேட்டுவர்களின் தெய்வமாகிய வைரவர், யக்ஷர் குலக் கலப்பில் தோன்றிய, குறிஞ்சிக் கிழவனாகிய முருகன், யக்ஷர் தலைவனாகிய குபேரன் ஆகியோரின் தன்மைகளை உள்ளடக்கிய தாத்தகாரியைக் குறிக்கின்ற கல்வெட்டாக இதனைக் கருதலாம். ஐயப்பன் வழிபாட்டில் நீடித்து வருகின்ற மூதாதையர் வழிபாட்டுக்கூறுகளை இன்றும் நாம் எளிதில் அடையாளம் காணமுடியும். மழைக் காலத்தையடுத்து வருகிற சரத் காலம் (மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்கள்) மூதாதையர் வழிபாட்டிற்குரிய காலமாகும். குறிப்பாகப் பாரசிக ஜொராஸ்ட்ரிய சமயத்தில் மாசி மாதத்திற்குச் சமமாக வருகின்ற பிர்தெளஸ் மாதம் மூதாதையர் வழிபாட்டு மாதமாகக் கருதப்படுகிறது சைவ சமயத்தில் தை மாத அமாவாசையும், மாசி மாதத் தேய்பிறை சதுர்தசியும் (மகா சிவராத்திரி) முன்னோர் வழிபாட்டுக்குரிய நாள்களாகும். பாரசிக ஜொராஸ்ட்ரிய சமயம் சார்ந்த மரணச் சடங்குகளில் உறவினர்கள் கூடி சக்தித் என்ற பெயரில் விருந்துண்பது ஓர் அம்சமாக இடம்பெறும்.8 இறந்தவர் ஆவி வடிவில் வந்து உண்பதற்காக ஓர் இருக்கையும் உணவும் அவருக்கென்று ஒதுக்கிவைக்கப்படும். சபரிமலை யாத்திரையின்போது ஐயப்ப சத்யா என்ற பெயரில் பம்பை நதிக்கரையில் பித்ரு தர்ப்பணத்துடன் விருந்து படைப்பது ஐயப்ப பக்தர்களிடையே இன்றும் நடைமுறையில் உள்ளது. ஐயப்பனும் பக்தர்களுடன் சேர்ந்து உணவருந்துவதாகக் கருதப்படும். சத்யா என்பதும் சக்தித் என்ற பாரசிக மரபும் ஒன்றே என்பதில் ஐயமில்லை. முன்னோர் வழிபாட்டு மரபுகளோடு இத்தலத்துக்கு உள்ள தொடர்பினை உள்ளடக்கும் வகையிலும், இராமாயணக் கதையுடன் இந்திய நாட்டு வழிபாட்டுத் தலங்களைத் தொடர்புபடுத்தும் மனப்பாங்கின் வெளிப்பாடாகவும், ராமன் தசரதனுக்குரிய சிராத்தச் சடங்கினை இங்கு நிறைவேற்றியதாகக் கதை புனையப்பட்டிருக்க வேண்டும்.

பாரசிக ஜொராஸ்ட்ரிய மதத்தின் ஒரு பிரிவாகிய மாகி (magi) என்பது இன்றும் கேரள நாட்டில் மந்திரவாதிகளைக் குறிக்கின்ற பெயராக வழக்கில் உள்ளது மாகி என்ற சொல்லிலிருந்துதான் magic என்ற சொல் தோன்றியுள்ளது. முதன்முதலில் இறந்து, மரணம் என்பது இத்தகையது என மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் உணர்த்திய வழிகாட்டி யமன் ஆவான். (இது அமாவாசைப் பட்சத்து நிலவைக் குறிக்கும்.) யமன், பாரசீக சமய வழக்கில் ‘யிமா’ எனப்படுவான். மரணச் சடங்கைக் குறிப்பிடுவதற்குப் பயன்பட்ட சங்கத் தமிழ்ச் சொல்லாகிய ‘ஈமம்’ என்பது யிமா என்ற சொல்லுடன் நெருக்கம் உடையதாகத் தெரிகிறது. முதுமக்கள் தாழி என்பது ஈமத் தாழி எனப் புறநானூற்றில் (பா. 256:5) குறிப்பிடப்படுகிறது. தாழிகளில் உடலை அடக்கம் செய்யும் மரபு என்பது பாரசீகச் சமய மரபுகளுடன் ஒப்புமையுடையதாகும். ஐயனார் வழிபாடு என்பதே வேத கால வருணன் வழிபாட்டுடனும் ஜொராஸ்ட்ரிய சமய அஹுரமஸ்தா வழிபாட்டுடனும் மிக நெருங்கிய உறவுடைய வழிபாடாகும். அஹுரமஸ்தா என்ற சொல் அசுரர் தலைவன் எனப் பொருள்படும். அதாவது, சுரா பானம் அருந்தாத, பிரபஞ்ச ஒழுங்கைக் காக்கும் தலைவன் என பாரசீகத்தின் கிளை மொழியாகிய குஜராத்திப் பார்சி மொழியில் வருணன் குறிப்பிடப்பட்டான். ‘பாசண்டம்’ என்ற பெயருடையது. பாசண்டம் என்ற சொல், வைதிக மரபுக்கு மாறானது என்ற பொருளில் இந்திய மொழிகளில் வழங்கிற்று. ஐயனாரைத் தொண்ணூற்றறு வகைப் பாசண்டச் சாத்தன் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தொண்ணூற்று வகைப்பட்ட அவைதிகத் தத்துவ மரபுகளுக்கும் தலைவன் என்பது இதற்குப் பொருள். ஜொராஸ்ட்ரிய சமயத்தின் தலைமைத் தெய்வமாகிய அஹுரமஸ்தாவின் மகன் ஆதர் எனப்பட்ட நெறிப்பட்ட நெருப்புக் கடவுள் ஆவான். ஆதர் வழிபாட்டுப் பூசாரி ‘அத்ரவன்’ எனப்பட்டான். இது, அதர்வண வேதம் என்ற பெயரில் இடம்பெறும் ‘அதர்வண’ என்ற சொல்லுடன் தொடர்புடையதாகும். இச்சொல் பாசண்ட மொழியில் ‘அத்ரணன்’ என வழங்கிற்று. கர்நாடகக் கடற்கரைப் பகுதியாகிய துளு மொழி வழங்குகின்ற பகுதியில் அதர்வண வேதத்துடன் தொடர்புடைய அத்ருணோ என்ற சொல் பில்லி சூனியம் வைப்பவன், ஏமாற்றுக்காரன் என்ற பொருளில் வழங்குகிறது. அதர்வண வேத சடங்குகள் மாகி மந்திரவாத வழக்குகள் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்திருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. எனவே, துளு மொழி பேசிய மக்கள் தொகுதியின் குடியேற்றத்துடன் உடன் நிகழ்ச்சியாக இத்தகைய வழிபாட்டு நெறிகள் சபரிமலை ஐயப்ப வழிபாட்டில் ஊடுருவி இருக்கலாம். அடிக்குறிப்புகள் 1. சபரர், புளிந்தர், புளிஞர் என்ற சொற்கள் எயினர்களைக் குறிக்கும். (பெருங்கதை உஞ்சைக்காண்டம் : 55 ; மகாவம்சம் VII : 68.) திவாகர நிகண்டு இவர்களைப் பாலை நிலக் குடிகளாகக் குறிப்பிடுகிறது. (கம்ப ராமாயணம், வாலி வதைப்படலம், பா. 124.) 2. கிருஷ்ண – வாணாசுர யுத்தம் தொடர்பான கதைக் குறிப்புகளில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீமத்பாகவதம் 10:63:20-21. p. 164, The Students Sanskrit English Dictionary, Vaman Shivram Apte, Motilal Banarsidass, New Delhi, 1969. 3. கோக்கருநந்தடக்கனின் பாலியத்துச் சாசனம், பக். அ24-அ34, பாண்டியர் செப்பேடுகள் பத்து, பதிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600113, 1999. 4. கண்ணகி கோயில் எனக் கருதப்படும் (சுருளிமலை) திருப்பூரணமலை படாரியார் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கி.பி. 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் பூர்ணியாற்றுச் சாத்தன், பெரியாற்றுச் சாத்தன் என்ற இரு சாத்தன் கோயில்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றுள் ஒன்று, சபரிமலை பொன்னம்பலமேட்டிலிருந்து கி.பி. 14ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர் ஆதிக்கத்தின்போது அழிந்துபோன கோயிலாக இருக்கலாம் என்றும், அதன் பின்னரே இப்போதைய இடத்தில் ஐயப்பன் கோயில் உருவாகியிருக்க வேண்டுமென்றும் கருதப்படுகின்றன. பார்க்க: திரு. கோவிந்தசாமி அவர்கள் கட்டுரை, கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பொன்விழா மலர், திருவனந்தபுரம். 5. வடமொழி இலக்கியங்களில் பல இடங்களில் சபரர், கிராதர், நிஷாதர் போன்ற சொற்கள் வேறுபாடின்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது உண்மையே. எனினும், குன்றக் குறவர்களே கிராதர் என்ற பெயருக்கு உரியவர்களாவர். கிராதர் என்ற சொல் மலையெனப் பொருள்படும் கிரி என்ற சொல்லுடன் தொடர்புடையதாகும். கிராதர் என்ற சமஸ்கிருத வழக்கு, பிராகிருதத்தில் சிலாதர் என்றும் சங்கத் தமிழில் சிலதா என்றும் வழங்கிற்று. மலையைக் குறிக்கும் பிற சொற்களான சிலா, கிலா, சைலம், கைலம், கல் முதலான சொற்கள் சிலதருடன் தொடர்புடையவை. 6. வெகுஜன ஊடகங்களால் - குறிப்பாகத் தொலைக்காட்சி விவாதங்களில் - அறிவுஜீவிகளாக முன்னிறுத்தப்படும் சில ‘மாடம்பிகள்’, பழங்குடிகளின் இத்தகைய நம்பிக்கைகள் பற்றிய அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல், இந்நம்பிக்கையை வைதிக இந்து சமயத்துக்கு மட்டுமே உரியதாககச் சொல்லி, இவ்வழக்கத்தை வஹாபிய இஸ்லாம் போன்ற அரபு இனவாத - ஆபிரகாமிய அடிப்படைவாதங்கள் வலியுறுத்தும் பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பிரச்சாரம் செய்வது ஓர் அண்மைக் காலப் போக்காக உருவாகியுள்ளது. 7. ஐராவதம் மகாதேவன் தலைமையில் அமைந்த குழுவினரால் 1998ஆம் ஆண்டு இக்கல்வெட்டு கண்டறியப்பட்டு வாசிக்கப்பட்டது. ”பல்புலி தாத்தகாரி” என வாசிக்கப்பட்டுள்ளது. p. 476, Early Tamil Epigraphy, I. Mahadevan, Cre-A, Chennai, 2003. 8. The Zend-Avesta, F. Max Muller, Motilal Banarsidass, New Delhi. (நன்றி: தமிழினி, பிப்ரவரி 2009) sr@sishri.org

வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள்

4 c
வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள்
ப்ரவாஹன் (nadar)
சதுரகிரி வேள் அவர்கள், நெல்லை நெடுமாறனும் அ. கணேசனும் சேர்ந்து எழுதியுள்ள 'அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை' என்பது குறித்த தனது கருத்துக்களை கடித வாயிலாகத் தெரியப்படுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நால்வருணம் இல்லை என்று வரிந்து கட்டிக் கொண்டு மற்றோர் கடிதத்தையும் எழுதியுள்ளார் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=80608046&format=html).
நால்வர்ணம் குறித்து தமிழகத்தில் வேளாளர்களின் நிலைப்பாடு எப்படிப்பட்டது என்பதை வே. கனகசபைப்பிள்ளை, '1800 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகம்' என்ற நூலில் துலக்கமாகக் காட்டுகிறார். தொல்காப்பியம் கூறும் நால்வருண இலக்கணம் குறித்து அவர் கூறுகையில் "இதுதான் தமிழர்களை தங்கள் சாதி அமைப்புக்குள் கொண்டுவர பிராமணர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், தமிழகத்தில் க்ஷத்ரிய, வைசிய, சூத்திர சாதிகள் இல்லாததனால் அவர்களால் வெற்றியடைய முடியவில்லை. மேலும் இதுநாள் வரையிலும் தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்கிற ஒரு படையாச்சி அல்லது வைசியர் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டில் வெள்ளாளர்கள் உணவருந்தவோ தண்ணீர் குடிக்கவோ மாட்டார்கள்” என்கிறார். இதன் பொருள் நால்வர்ணம் இருக்கவேண்டும், அதை நாங்கள் திட்டவட்டமாகக் கடைப்பிடிப்போம். ஆனால் நால்வர்ணத்தைப் புகுத்தியதாகப் பழியை மட்டும் பிராமணர் மீது போடுவோம் என்பதுதான். இத்தகைய முரண்பாடு தமிழக வேளாளர் சமூக அறிஞர்களின் மனோநிலையில் இயல்பாகவே அமைந்திருக்கிறது என்று கருதுகிறேன். சதுரகிரி வேளின் நிலைப்பாடும் கனகசபைப் பிள்ளையின் நிலைப்பாட்டைப் பின்பற்றியுள்ளதுதான்.
தங்களுக்குச் சாதகமானவற்றின் மீது மட்டும் கருத்துக்களைக் கூறிவிட்டு முரணாக இருப்பதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது அல்லது அத்தகைய உண்மைகளுக்கே (விளக்கங்களுக்கு அல்ல) உள்நோக்கம் கற்பிப்பது என்பதைத் தொடர்ந்து இத்தகைய ஆதிக்க சக்திகள் செய்துவருகின்றனர்.
முதல் கடிதத்தில் வேளாளர்கள் பிள்ளை என்ற பட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று சதுரகிரி கூறியிருப்பது சரியே. அதை அவர்கள் கைப்பற்றிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அது அவர்களுக்கு மட்டுமே உரியது. தங்களை மூவேந்தர்கள் என்றும் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர் என்றும் அவர்கள் கோரிக்கொள்ள விரும்புவதற்கு முரண்பாடாக இந்த பிள்ளைப் பட்டம் இருக்கிறது என்பதைக்கூட விளங்கிக் கொள்ள முடியாத அளவிற்குத் தங்களுக்குக் கிடைத்துள்ள அரசியல் ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் மனோநிலை வேளாளர்களிடம் ஊறியிருக்கிறது. அரசரின் சட்டபூர்வமான ஆண் வாரிசுகள் தங்களை இளவரசன் அல்லது இளங்கோ என்றே கூறிக் கொள்வர்.
தமிழக மூவேந்தர்கள் சூரிய-சந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் கிடைத்துள்ள அனைத்து கல்வெட்டுகளும் பிற ஆவணங்களும் இதை உறுதி செய்கின்றன. ஆனால் வேளாளர்களோ கங்கை குலத்தவர்கள் அல்லது நதிக்குலத்தவர்கள். இந்த நதிக் குலத்தவர்கள் தங்களை வேளிர் என்றும் மூவேந்தர்கள் என்றும் கூறிக்கொள்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? எந்த இடத்திலாவது மூவேந்தர்கள் தங்களை நதிக்குலத்தவர்களாக, கங்கை குலத்தவர்களாக கூறிக்கொண்டது உண்டா? அதுபோலவே வேளிர் என்போர் யது குலத்தவர் ஆவர். மேலும், சூத்திர வருணத்தவர் ஆன வேளாளர்களுடன் சூரிய-சந்திர குல க்ஷத்ரியர்களான மூவேந்தர்கள் மண உறவு வைத்திருந்தனர் என்று கூறுவது 13-14 ஆம் நூற்றாண்டைய உரையாசிரியர்கள் சங்ககால இலக்கிய வரிகள் மீது தங்கள் சமகால நிலவரத்தைச் சார்த்தி எழுதிய ஒன்றே தவிர வேறில்லை.
சங்க காலந்தொட்டு வேளாளர்களின் கடமைகள் அல்லது தொழில்கள் என்ன? இலக்கியங்களும் நிகண்டுகளும் சொல்கின்றபடி, வேளாளர்களின் முக்கிய கடமை மூன்று மேல் வருணத்தார்க்கும் ஏவல் செய்வது. மூவேந்தர்கள் மணவுறவு வைத்திருந்தனர் என்று கூறுவது ஆதாரமற்றது. மாறாக, எம் குலப்பெண்களை மூவேந்தர்கள் எம்மை இழிவு படுத்தினர் என்ற கோபத்தினால்தான் களப்பிர அரசர்கள் மூவேந்தர்களை சிறை செய்து தங்களைப் புகழ்ந்து பாடச் செய்ததற்குக் காரணம் என்று கூறினால் அது நியாயமாக இருந்திருக்கும். அரித்துவாரமங்கலம் பட்டயத்தை மேற்கோள் காட்டி நெல்லை நெடுமாறன், அ. கணேசன் ஆகியோர் கூறுவது தர்க்கபூர்வமாகவே உள்ளது.
மேலும், வேளாண்மை என்பதன் பொருள் என்ன? சங்க காலம் முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையுள்ள பல்வேறு நூல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள வேளாண்மை என்ற சொல்லுக்கு உபகாரம் என்றே பொருள். உழவுத் தொழிலைப் போற்றுகின்ற திருக்குறளிலும் கூட வேளாண்மை என்ற சொல் உபகாரம் என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிகண்டு நூல்கள் முக்கியமான வரலாற்று ஆவணங்களாகும். 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் முதலில் வந்த நிகண்டு ஆகும். அதன் பின்னர் இயற்றப்பட்ட பிங்கலந்தை, சூளாமணி, வடமலை நிகண்டு, பாரதி தீபம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டு வீரமாமுனிவரின் சதுரகராதி உட்பட அனைத்து நிகண்டுகளிலும் வேளாண்மை என்ற சொல்லுக்கு உபகாரம், மெய் உபசாரம் என்றே பொருள் கூறப்பட்டுள்ளதே தவிர விவசாயம் என்றல்ல. வேளாளர்களை வேளிர்களுடன் தொடர்புபடுத்துவதைவிட வேளத்துடன் தொடர்புபடுத்துவது பொருத்தமாகத் தெரிகிறது.
வேளாண்மை என்பதற்கு விவசாயம் என்று பொருள் கொண்டு அதனடியாக நிலக்கிழார்கள் என்றும் எனவே வேளாளர்தான் வேளிர் (குறுநில மன்னர்) என்று சதுரகிரியைப் போன்றவர்கள் கோருகின்றனர். வேளாளர்கள் உழுதுண்போர், உழுவித்துண்போர் என்பதாகப் பிற்காலத்தில் பிரிக்கப்பட்டுள்ளனர் என்பதும் ஒரு வரலாற்று உண்மை. இதில் உழுவித்துண்போர் என்பவர்கள் நிலத்தின் உரிமையாளர்கள் அல்ல. மாறாக, அவர்கள் காராளர் என்ற தகுதி உடையோர் மட்டுமே. இந்தக் காராளர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், ஐரோப்பிய நிலப்பிரபுத்துவத்தில் செய்வது போலவே, தங்கள் பகுதிக்கு நிலத்தின் உரிமையாளரான வேந்தர் அல்லது நிலப்பிரபு அல்லது ஆட்சியாளர் வருகை புரிகையில் அவர்க்குத் தேவையான அனைத்து உபசாரங்களையும் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நால்வருணம் இல்லையென்று பல வரலாற்று ஆசிரியர்கள் வலிந்து கூறிவருகின்றனர். ஆனால் புறநானுற்றுப் பாடல் குறிப்பிடுகின்ற, வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் ... என்பதில் தொடங்கி தொல்காப்பியம் நான்கு வர்ணங்களையும் அவர்களின் கடமைகள் மற்றும் உரிமைகளையும் வரையறுத்துள்ளது. தொடர்ந்து வந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, பிற நீதி நூல்கள் என்று தொடர்ச்சியாக நால்வர்ணங்கள் குறித்த குறிப்பில்லாத நூல்களைக் காட்ட முடியுமா? வேளாளர்களை சதுர்த்தர் என்று குறிப்பிடாத நிகண்டுகளையாவது காட்டமுடியுமா? மேலும் நால்வர்ண இலக்கணத்திற்கு மாறாக தமிழக வரலாற்றில் நிகழ்ந்தவை எவையெவை என சதுரகிரி வேள் அவர்கள் பட்டியல் இடட்டும். நால்வர்ண இலக்கணத்தை ஒட்டி நிகழ்ந்தவைகள் எவையெவை என நான் பட்டியல் இடுகிறேன். எது அதிகம் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.
தமிழகத்தில் நான்கு வர்ணங்கள் இருக்கிறது என்பதை நன்கு அறிந்து கொண்ட வேதாசலம் பிள்ளை (மறைமலை அடிகள்) அவர்கள் அதைச் சரிக்கட்டுவதற்காக என்ன பாடுபடுகிறார் பாருங்கள். வர்ணத்தையே நாங்கள்தான் உருவாக்கினோம் என்று கூறிவிட்டார். சாதியையும் நாங்களே உருவாக்கினோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். வேளாளர் நாகரிகம் என்ற தனது நூலில், "தமிழகத்தில் முதன்முதல் உழவுத் தொழிலைக் காணும் நுண்ணறிவும், அதனாற் கொலைபுலை தவிர்த்த அறவொழுக்கமும், அதனாற் பெற்ற நாகரீகமும் உடைய தமிழ் மக்கள் எல்லாரினுஞ் சிறந்து விளங்கித் தம்மினின்று அந்தணர், அரசர் எனும் உயர்ந்த வகுப்பினர் இருவரையும் அமைத்து வைத்து, அறவொழுக்கத்தின் வழுவிய ஏனைத் தமிழ் மக்களெல்லாந் தமக்குந் தமதுழவுக்கும் உதவியாம்படி பதிணென் டொழில்களைச் செய்யுமாறு அவர்களை அவற்றின் கண் நிலைபெறுத்தித் தமிழ் நாகரிகத்தைப் பண்டு தொட்டு வளர்த்துவரலாயினர்” என்பார். அப்பதிணென் வகுப்பினர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் ஆகியன. இச் சாதிகளை பலபட்டடைச் சாதிகள் என்றும் அவர் கூறுகிறார். இவர் குறிப்பிடுகின்ற சாதிகள் சங்க இலக்கியத்தில் உயர்ந்தவையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
"துடியன். பாணன். பறையன். கடம்பன் இந்நான்கல்லது குடியுமிலவே” என்கிறது புறநானூறு. ஆனால், வேளாளர்களோ பிற்காலத்தில் கரணம் அமைந்த பிறகுதான் குடியானார்கள் என்பதை தொல்காப்பியம் தெளிவுற எடுத்துரைக்கின்றது. சங்க காலத்தில் பறையர்களில் ஒரு பிரிவான அறிவர்கள் அந்தணப் பிரிவில் இருந்துள்ளனர். ("பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே” - தொல்) குயவர் எனப்படும் மட்பாண்டக் கைவினைஞர்களை சங்க இலக்கியம் 'வேட்கோவர்’ என்று குறிப்பிடுகிறது. வேட்கோவர் என்போர் வேள்வி செய்யக்கூடிய தகுதியுடையோர். சங்க இலக்கியங்களின்படி கண்மாளர்கள் சூத்திரர் அல்ல. விஸ்வகர்மா என தங்களைக் கூறிக்கொள்ளுகிற இவர்கள், தாங்களே உண்மையான அந்தணர் என்பதை நிரூபிப்பதற்காக மிகவும் பிற்காலத்திலும் கூட நீதிமன்றம் சென்று வழக்காடிய வரலாறு உண்டு. அதுதான் புகழ்பெற்ற 'சித்தூர் ஜில்லா அதாலத்’ எனப்படுகிறது. மேலும் தாங்களே சோழ அரசர்களின் குலகுருக்கள் என கம்மாளர்கள் தொடர்ந்து கோரிவந்துள்ளனர். இந்த இடத்தில் மரபாக இருந்து வருகின்ற சில சமூக மோதல்களை நாம் கவனத்தில் கொள்வது ஆர்வத்திற்குரியது. அதாவது தமிழ்ச் சமூகத்தில் கம்மாளர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையிலான இந்த மோதல் மட்டுமின்றி, பார்ப்பனர்களுக்கும் பறையர்களுக்கும் இடையில் தாங்களே உண்மையான அந்தணர்கள் என்கிற சண்டை தொடர்ந்து இருந்துவந்துள்ளது. அதுபோலவே பறையர்களுக்கும் கம்மாளர்களுக்கும் இடையிலும் சண்டை இருந்துவந்துள்ளது. நாவிதர் மற்றும் மருத்துவர் எனப்படுகின்ற சாதியினர், அம்பட்டர் என்ற பெயரில் அந்தணப் பிரிவில் இருந்துள்ளனர். இன்றைக்கும் வைணவக் கோயில்களின் பூசாரிகள் 'பட்டர்’ என்றே அழைக்கப்படுகின்றனர். அமாத்தியரான அம்பட்டர்கள் குறித்து தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், "அமாத்திய நிலையும் சேனாபதி நிலையும் பெற்ற அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் வரைவில் வென்றவாறு” என்கிறார்.
இவை இங்ஙனமிருக்க வேளாளர்களை நான்காம் பிரிவினராக சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. "மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே” என்கிறது தொல்காப்பியம். இதன்பொருள், மணவினைச் சடங்குகள் இன்றி இருந்த நான்காம் வர்ணத்தவரான வேளாளர்களுக்கு மணவினைச் சடங்குகள் பின்னர் ஏற்படுத்தப்பட்டன என்பதாகும். மனுதர்மத்தில் சூத்திரர்களுக்கு திருமணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதை இத்துடன் ஒப்பிட்டுக் காணலாம். இவ்வாறு வேளாளர்களுக்கு மணவினைச் சடங்கு ஏற்படுத்தப்பட்டு இறுக்கமான குடும்ப அமைப்புக்குள் அவர்கள் கொண்டுவரப்பட்டதால் அவர்களும் குடி என்ற நிலைக்கு உயர்ந்தனர். இவ்வாறு குடி என்கிற நிலைக்கு மிகவும் பிற்காலத்தில் வந்ததாலேயே, உழுதுண்போரான வேளாளர்களை அடியற்றி உழவர்களை 'குடியானவன்’ என்று சொல்லுகின்ற வழக்கு நிலைபெற்றது.
வேளாளர்கள் காராளர்களாகி, களப்பிரர் ஆட்சிக்குப் பின்னர் நிலவுடைமையாளர்களாக ஆகிவிட்ட பின்னரும், வேளாளர் குலத்தில் உதித்து சோழ அரசனின் அமைச்சராக இருந்த சேக்கிழார், "நீடு சூத்திர நற் குலஞ்செய் தவத்தினால்” (இளையான்குடி நாயனார் புராணம்-1) எனவும் "தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல” (வாயிலார் நாயனார் புராணம்-6) எனவும் சூத்திரராகவே குறிப்பிட்டுள்ளார். வேளாளர்கள் எழுச்சி பெற்றுவிட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தொகுக்கப்பட்ட நிகண்டுகள் வேளாளரை, 'சதுர்த்தர்’ என்று குறிப்பிடுகின்றன. சேந்தன் திவாகரம், வேளாளர் அறு தொழிலில், 'இருபிறப்பாளர்க் கேவல் செயல்’ என்கிறது. வேளாளர் பத்துவகைத் தொழிலில் 'ஆணைவழி நிற்றல்’ என்றுரைக்கிறது. அடுத்து வந்த பிங்கலந்தை நிகண்டு, வேளாளர் பத்துவகைத் தொழிலில் 'ஆணை வழி நிற்றல்' என்கிறது. மிகவும் பிற்காலத்தில் தொகுக்கப்பட்ட வீரமாமுனிவரின் சதுரகராதி, சூத்திரர் தொழில், 'மூவர்க்கேவல் செயல்’ என்கிறது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புறப்பொருள் வெண்பாமாலை வேளாண் வாகையில் 'மூவர்க்கு ஏவல்’ வேளாளரின் கடமையென்கிறது. தொல்காப்பியம் 'வேளாண் பெருநெறி’ என்று குறிப்பிடுவதன் பொருள் விருந்தோம்பல். 19 ஆம் நூற்றாண்டில் நெல்சன் என்ற ஆங்கிலேயர் தொகுத்த Madura Manual என்ற நூலில் இது பற்றிய விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.
வேதாசலம் பிள்ளை, கனகசபை பிள்ளை போன்ற வேளாளர் சமூக அறிஞர்களின் நிலைப்பாடு, புலிக்கு பயந்தவனெல்லாம் என் மீது படுத்துக்கொள்ளுங்கள் என்று கூப்பாடு போட்டவனின் கதைதான். மேலே படுத்தவனையெல்லாம் புலி அடித்துவிட்டது. ஆனால், அடியில் படுத்துக்கொண்டவன் தந்திரமாகத் தப்பித்துவிட்டான் என்பது கதை. அதைப்போல, வெள்ளாளர்கள் தாங்கள் சூத்திரர் என்பதை மறைப்பதற்காக, அக்னி குல க்ஷத்ரியர்களான வன்னியர்களையும், சங்க காலத்தில் அந்தணருக்குச் சமமாக இருந்த பறையர்களையும், கம்மாளர்களையும், வேட்கோவர்களான குயவர்களையும், செல்வச் செழிப்பில் இருந்த வைசியர்களான செட்டியார்களையும் இன்னும் சில சாதியினரையும் சூத்திரர் ஆக்கிவிட்டனர். இதற்காக தமிழகத்தில் பார்ப்பனர் சூத்திரர் என்ற இரண்டே பிரிவுகள்தான் என்று மீண்டும் மீண்டும் கோயபல்ஸ் பாணியில் எழுதி நிலைநாட்டியிருக்கின்றனர். இப்போது அந்த அடித்தளம் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற அச்சத்தில்தான் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றனர்.
போரில் ஈடுபடுவதனால் அல்லது அரசாட்சிக்கு வந்துவிடுவதால் மட்டும் க்ஷத்ரிய அந்தஸ்து கிடைத்து விடாது. மன்னர் கொடுப்பாராயின் இடையிரு வகையோருக்கும் படையும் ஆயுதமும் வழங்கப்படும் என்பது தொல்காப்பியம் குறிப்பிடும் மரபு. இருப்பினும் அவர்கள் வைசியர்களாகவும் சூத்திரர்களாகவுமே இருப்பார்களேயன்றி க்ஷத்ரியர் ஆகிவிடமுடியாது. அரசன்தான் அனைத்தையும் முடிவு செய்பவன் என்பதையும், பார்ப்பனர்கள் அல்ல என்பதையும் வள்ளுவர் தெளிவாக எடுத்துரைக்கிறார். "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் /நின்றது மன்னவன் கோல்” என்பது குறள். இதன் பொருளை உணர்ந்தால், சமூகத்தின் நன்மைகளுக்கு மட்டுமல்ல தீமைகளுக்கும் க்ஷத்ரியர்கள் பொறுப்பேற்க வேண்டிய கடமை உண்டு.
இது தொடர்பாக இன்னும் எத்தனையோ விசயங்களை எடுத்து வைக்கமுடியும் என்றாலும் தற்போது எனக்கிருக்கின்ற பல்வேறு பணிகளுக்கிடையில் ஒழுங்கற்றமுறையில் இதை முன்வைப்பதற்காக வாசகர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

பிற்குறிப்பு: எந்த சாதியினர் மூவேந்தர் என்பது குறித்து எனக்கு எவ்வித கவலையும் கிடையாது. ஆனால் வரலாற்று உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்கிற ஒரே விருப்பம் உடையவன் என்கிற முறையில் ஒரு பொய்மையைத் தகர்ப்பதற்கான எனது சிறு முயற்சியே இக்கடிதம்.
pravaahan@yahoo.co.in
Copyright:thinnai.com 

மூவேந்தரும் முக்குலத்தோரும் - சில விளக்கங்கள்

6 c
S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்

நா.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு என்னார் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். வேங்கடசாமி நாட்டாரின் நூல் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறதே தவிர துல்லியமான இலக்கிய, கல்வெட்டு, செப்புப் பட்டய ஆதாரங்களைக் கொண்டு எழுதப்படவில்லை.

கள்ளர் சமூகத்தவரிடையே வழக்கத்திலுள்ள 348 பட்டங்களை வேங்கடசாமி நாட்டார் இந்நூலில் பட்டியலிட்டுள்ளார். ஆனால், இப்பட்டங்கள் எந்தக் காலகட்டத்திலிருந்து கள்ளர் சமூகத்தவர் மத்தியில் வழங்கி வருகின்றன என்பதையோ, இவையெல்லாம் தந்தை வழிப் பட்டங்கள்தாமா என்பது பற்றியோ அவர் குறிப்பிடவில்லை.

வன்னியர் போன்ற மற்ற பல சமூகத்தவர்களுக்கும் இவற்றைப் போன்ற அச்சு அசலான பட்டங்கள் உள்ளன.

கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் கள்ளர் சமூகத்தவர்கள் மத்தியில் இத்தகைய பட்டங்கள் பயன்படுத்தப்படத் தொடங்கின என விஜய நகர வரலாறு குறித்த தமது நூலில் பர்டன் ஸ்டெயின் (Burton Stein) குறிப்பிட்டுள்ளார்.

நா.மு. வேங்கடசாமி நாட்டார் தம்முடைய நூலில் சில பட்டப் பெயர்களை அவரது தம்பியர் தொகுத்துத் தந்தபடி அப்படியே வெளியிட்டுள்ளார். உதாரணமாக, அண்ணூத்திப்பிரியர் என்ற பட்டத்தை ஏழாவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது ஐந்நூற்றுப்புரையர் என்பதன் திரிபாகும். இதே பட்டம், செம்பிநாட்டு மறவர்களிடமும் உள்ளது. ஐந்நூற்றுவர் எனப்பட்ட வணிகர்களுக்கு ஒரு காலகட்டத்தில் அவர்களுடைய பணிமக்களாக காவல் பணி புரிந்தமையால் இப்பட்டம் கிடைத்துள்ளது. 38ஆவதாக வருகின்ற ஈழத்தரையர் என்ற பட்டமுடையவர்கள் கல்லணைத் தோகூரில் வாழ்கிறார்கள். கரிகாலனால் ஈழநாட்டிலிருந்து போர்க் கைதிகளாகக் கொண்டுவரப்பட்டு கல்லணை கட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் வம்சத்தவர்கள் இவர்கள் என்பதே சரித்திரத்திற்குப் பொருந்தி வருகிறது.

சமூக வரலாற்று ஆய்வு என்பதே மலைக்க வைக்கின்ற தகவல் குவியல்களிலிருந்து சரியான தகவல்களைத் தேர்ந்தெடுத்து சரியான விதத்தில் பொருத்தி அர்த்தமுள்ள ஒரு வடிவத்தை உருவாக்குவதுதான். ஒவ்வொரு சாதிக்கும் வரலாற்றில் ஓர் இடமுண்டு. அந்த இடம் உயர்வானதா அல்லது தாழ்வானதா என்பது நம்முடைய இன்றைய மதிப்பீடுகளின்படி நாமாகக் கற்பனை செய்துகொள்வதே தவிர நிரந்தரமான ஒன்றல்ல. நேற்று உயர்வாக இருந்தது இன்று தாழ்வாகக் கருதப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தமிழ்ச் சமூக வரலாற்று ஆய்வைப் பொருத்தவரை அரசர் குலம் என்ற ஒன்று இருந்திருக்கிறதா - இருந்திருந்தால் அது இன்றைக்கு காற்றில் கரைந்து போய்விட்டதா அல்லது அதன் எச்சங்கள் எந்தச் சாதியினரிடமாவது காணப்படுகின்றதா என்பதுதான் முக்கியமான கேள்வி.


கள்ளர், மறவர், அகம்படியர் என்ற முக்குலத்தோரை எடுத்துக்கொண்டால், தமிழகத்தின் மிகப் பழமையான போர்க்குடிகளில் இவர்களும் அடங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மறத்தன்மை என்பது மிகவும் உயர்வான ஒன்றாக வரலாற்றில் போற்றப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் மறவர் என்றே இந்தச் சமூகத்தில் ஒரு பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இவர்கள் முவேந்தர்கள் வம்சத்தவரா என்பது முதன்மையான கேள்விக்குரிய ஒன்றாகும். இந்தியப் புராணங்களில் முக்கியமான ஓர் அசுர குல வேந்தன் மகாபலி ஆவான். சோபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு மகாபலி மன்னன் ஆண்டதாகக் கருதப்படுகிறான். தக்காண பீடபூமி பகுதியில் இவ்வூர் இருந்ததாகக் கருதப்படுகிறது. இங்கிருந்து துளு மொழி வழங்கிய கர்நாடகக் கடற்கரைப் பகுதி வரை ஆண்டதாகவும், வாமன அவதாரம் எடுத்து, விஷ்ணு இம்மன்னனை பாதாள உலகிற்கு அனுப்பியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. இன்றும் கேரளத்தில் வாழும் அகம்படியர் சமூகத்தவராகிய நாயர்கள் தங்கள் குல முதல்வனாகிய மகாபலி பாதாள உலகத்துக்கு அனுப்பப்பட்ட நாளாகிய ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளை விழாவாகக் கொண்டாடுகின்றனர். அன்றைக்கு ஒருநாள் மட்டும் மகாபலி தமது நாட்டைப் பார்வையிட்டுவிட்டு மீண்டும் பாதாள உலகம் சென்றுவிடுவதாக கருதப்படுகிறது. இந்த ஓண நாளை 'வாமன ஜெயந்தி' என்று இந்து மதப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாவலி வாணாதிராயர்களுடைய கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் இவர்கள் தங்களை 'ராஜகுல சர்ப்ப கெருடன்' என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்கள். ராஜகுலமாகிய மூவேந்தர் குலத்துக்கு எதிரிகள் என்பதுதான் இதன் பொருள்.

அகம்படியர் என்றால் சங்க கால இலக்கியங்களில் எயினர்-கள்வர் என்ற பெயரிலும், வட இந்தியப் புராணங்களில் சபரர் என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகின்ற பாலை நிலக் குடிகளின் வம்சத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு அரச வம்சத்தவ ஆணிடம் பிறந்ததவர்கள் என்று பொருள்.

ஆனாலும் இவர்கள் தாய்வழி அடையாளத்தையே முதன்மையான அடையாளமாகக் கொண்டிருந்ததால் பாலை நில குடிகளாகிய எயினர்-கள்வர் சமூகத்தவருடன் இணைந்து முக்குலத்தோராக தமிழ்நாட்டைப் பொருத்தவரை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். தமிழ்நாட்டிலும் கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து 15-16ஆம் நூற்றாண்டு வரை வெவ்வேறு பகுதிகளில் 'மகாபலி வாணாதிராயர்கள்' என்ற சிற்றரச வம்சத்தவர் ஆண்டுள்ளனர். இவர்கள் தம்மை மறவர் என்றும், வெட்டுமாவலி அகம்படியர் என்றும் கூறிக்கொண்டுள்ளனர் (ஆதாரம்: கணக்கன் கூட்டத்தார் பட்டயம், பக்கம் 233-243, கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், பதிப்பாசிரியர்: செ. இராசு, தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1991).

இந்திய வரலாற்றில் மகாபலி சக்கரவர்த்தி மறைக்கமுடியாத ஒரு வரலாற்றுப் பாத்திரமாவார். பாரத நாடு என்ற பெயரையே 'மகாபலி தேசம்' என்றுதான் சொல்ல வேண்டும் என்ற கோரிக்கைகூட ஒரு காலகட்டத்தில் எழுந்ததுண்டு. மகாபலியிடமிருந்து, வாமன அவதாரமெடுத்து விஷ்ணு நாட்டைப் பற்றிக் கொண்டார் என்ற கதையின் பின்னணி சுவையானது. மகாபலி 99 அஸ்வமேத யாகங்கள் செய்து முடித்து விட்டான். 100ஆவது அஸ்வமேதம் செய்து முடித்துவிட்டால் இந்திர பதவியை அடைந்து விடுவான். எனவே, மகாபலியின் இந்த முயற்சிக்கு இடையூறு விளைவிக்கத் திட்டமிட்ட இந்திரன் விஷ்ணுவைத் தூண்டிவிட்டு நினைத்ததைச் சாதித்துக் கொண்டான் என்பதே புராணம். இந்திர பதவியை மயிரிழையில் தப்ப விட்டுவிட்டாலும்கூட மகாபலி வம்சத்தவர்கள் பலீந்திரன் வம்சத்தவர்கள் என்றே தங்களைக் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.


இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றுக் காலத்தில் இந்தியாவை ஆண்ட மன்னர்கள் (அயோத்தியை ஆண்ட ராமன் வம்சத்தவரும், குரு§க்ஷத்திரத்தை ஆண்ட பாண்டவ கெளரவ வம்சத்தவர் உள்ளிட்ட மன்னர்களும்) சூரிய, சந்திர குலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டைப் பொருத்தவரை சோழர்கள் சூரிய குலத்தவர்கள். பாண்டியர்கள் சந்திர குலத்தவர்கள். சேரர்களும் சந்திர குலத்தின் கிளைக் குலத்தவரே. சேரர்களில் உதியன் சேரலாதன் மகாபாரதப் போரில் இறந்த சந்திர குல வீரர்களைத் தனது முன்னோராகக் கருதினான் என்று சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். சங்க காலத்தில் காஞ்சி நகரையாண்ட தொண்டைமான் இளந்திரையன் விஷ்ணு அல்லது கண்ணனுடைய பிறங்கடை மரபைச் சேர்ந்தவன் என்று பெரும்பாணாற்றுப்படையால் தெரிய வருகிறது. இவர்களைத் தவிர வரலாற்றில் பரமார மன்னர்கள் போன்றவர்களும், செளகான் போன்ற ராஜபுத்திர குலத்தைச் சேர்ந்தவர்களும் அக்கினி குல க்ஷத்திரியர்களாகத் தங்களைக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

ஆனால், கள்ளர் குலத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை தொண்டைமான் வம்சத்தவர்கள் தங்கள் பட்டயங்களில் இந்திர குலத்தவர் என்றே குறிப்பிட்டுக் கொள்கின்றனர். சேதுபதி மன்னர்களோ காஸ்யப ரிஷிக்கு திதி என்பவள் வயிற்றில் பிறந்த தைத்யர்கள் (அசுரர்கள்) வம்சத்தவர் என்றே தங்களைக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர். (காஸ்யப ரிஷிக்கு அதிதி என்பவள் வயிற்றில் பிறந்தவர்கள் ஆதித்யர்கள். சோழர்கள் ஆதித்ய குலத்தவர்கள் ஆவர்.)


தமிழ்நாட்டுச் சமூக வரலாற்றில் அரச குலம், அதாவது க்ஷத்திரிய வர்ணம் என்பது ஆண் வழி வாரிசுரிமையை அடிப்படையாகக் கொண்ட சந்திர, சூரிய குலங்களாகும். மூவேந்தர்கள் இந்த அடிப்படையில் க்ஷத்திரிய வர்ணத்தவராவர். சரித்திர காலத்தில் மூவேந்தர்கள் வம்சத்தில் எந்தப் பெண்ணரசியும் ஆட்சி புரிந்ததாகவோ, வாளெடுத்துப் போர் புரிந்ததாகவோ சரித்திரம் இல்லை.

கள்ளர், மறவர் குலத்தவர்களில் அண்மைக் காலத்தில்கூட ராணி வேலு நாச்சியார், மங்களேஸ்வரி நாச்சியார் போன்றவர்கள் ஆட்சி புரிந்ததாகச் சரித்திரம் உண்டு. மங்களேஸ்வரி நாச்சியார் ரிபல் சேதுபதி என்ற முத்துராமலிங்க சேதுபதியின் சகோதரி ஆவார். இவர் 18ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் ஆங்கிலேயக் கம்பெனி ஆட்சியாளர்களிடம் விண்ணப்பித்துத் தம் தம்பி மீது வழக்குத் தொடர்ந்து பதவியைப் பெற்றவராவார். இவருடைய தாயார் முத்துத் திருவாயி நாச்சியாருக்கு முதல் கணவரிடம் பிறந்தவர் தாம் (மங்களேஸ்வரி நாச்சியார்) என்றும், இரண்டாவது கணவருக்குப் பிறந்தவரே முத்துராமலிங்க சேதுபதி என்றும் அ·பிடவிட் பத்திரத்தில் இவர் குறிப்பிட்டுள்ளார். (ஆதாரம்: பக்கம் 152, விடுதலைப் போரில் சேதுபதி மன்னர், எஸ்.எம். கமால், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1987). இத்தகைய திருமண உறவுமுறை செம்பி நாட்டு மறவர் சமூகத்தவரால் ஏற்கப்பட்டிருந்ததால்தான் மங்களேஸ்வரி நாச்சியார் சட்டப்படி அரசுரிமையை அடைந்தார். இது அசுர குல மரபு என்ற அடிப்படையில்தான் இவர்களை தைத்யர் அல்லது தானவர் குலத்தவர்களாகவே தங்களைக் குறிப்பிட்டுக் கொண்டுள்ளனர்.


திரு. என்னார் சார்ந்துள்ள சமூகத்தை எந்த விதத்திலும் குறைகூறிப் பேசுவது எங்கள் நோக்கமல்ல. இக்கட்டுரையில் நாங்கள் முன்னரே குறிப்பிட்டுள்ளது போல, ஒரு காலத்தில் உயர்வாகக் கருதப்படுகின்ற கருத்துகள் வேறு காலத்தில் தாழ்வானதாகக் கருதப்படுவது இயல்பு. கணவனை இழந்த பெண்டிர் உடன்கட்டை ஏறுவது ஒரு காலத்தில் உயர்வானதாகக் கருதப்பட்டது. அப்படி உடன்கட்டை ஏறியவர்கள் தெய்வமாகவே கருதப்பட்டார்கள். இன்றைய சமூக அமைப்பு இவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. அத்தகைய செயல்களைப் பெண்ணடிமைத்தனத்தின் சின்னங்களாக பார்க்கின்றது. எனவே, வரலாற்றை அடிப்படையாக வைத்து உயர்வு தாழ்வு கற்பிப்பது எங்கள் நோக்கமல்ல. வரலாற்றில் யார் யாருக்கு எந்தெந்தப் பாத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன என்பதைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

nellai.nedumaran@gmail.com
Copyright:thinnai.com 


thank u http://www.thinnai.com/?module=displaystory&story_id=20608257&format=html

மூவேந்தர்கள் முக்குலத்தோரே

7 c
Thursday August 17, 2006
வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள் என்ற தலைப்பில் ப்ரவாஹன் எழுதியதற்கு

என்னால் முடிந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளேன்
. தெளிவாக கொடுக்க வில்லை என்றாலும் குறிப்புகளால் கொடுத்துள்ளேன் சந்தேகம் வந்தால் எனது மின்னஞ்சல் கொடுக்கவும்

மூவேந்தர்கள் முக்குலத்தோரே சோழன் கள்ளர், பாண்டியன் மறவர்
, சேரன் அகம்படியர்.இங்கே சோழன் கள்ளர் என்பதற்கான ஆதாரங்கள் தொண்டைமான் என்பவர் கள்ளர்
, பல்லவராயன் என்பவர் கள்ளர் , திருமங்கையாழ்வார் என்வரும் கள்ளர்
,
1.விசயாலய சோழன் (850 – 880 , 836 – 870 )
இவனது தந்தை யார்என்று தெரியவில்லை முத்தரையரை வென்று தஞ்சையில் சோழர் ஆட்சியை அமைத்தவன் இவனே

2.ஆதித்த சோழன் த/பெ. விசயாலய சோழன் 871-907

3.1ம் பராந்தக சோழன் த/பெ. ஆதித்த சோழன்907-955

மதுரையும், ஈளமும் கொண்ட கோப்பரகேசரி என்ற பட்டம் பெற்றவன் சோழ பேரரசக்கு அஸ்திவாரம் அமைத்தவன் . தில்லைச் சிற்றம்பலத்துக்கு பொன் கூறை வேய்ந்தவன், சோழ சிகாமணி, சூரசிகாமணி , வீர நாராயணன் என்னும் சிறப்புப் பெயரைம் பெற்றவன். இவன் பெயரில் தான் வீராணம் ஏறியுள்ளது. இவனுக்கு 11 மனைவியர் 5 மகன்கள் 1. இராஜாதித்தன், 2. கண்டராதித்தன்,3.அரிகுலகேசரி, 4. உத்தமசீலி,5. அரிந்திகை (எ) அரிஞ்சயன்.

4.கண்டராதித்த சோழன் த/பெ. 1ம் பராந்தக சோழன் இரண்டாவது மகன் 950-957
மழவரையர் குலப்புதல்வி செம்பியன் மாதேவி சிவஞா செல்வரான கண்டராதித்தரின் மனைவி இவள் மகன் தான் மதுராந்தக தேவன் ( சிறிய பளுவேட்டரையரின் மருகன்)

5.அரிஞ்சயன் த/பெ. 1ம் பராந்தகனின் 3வத மகன் 956-957
இவர் மனைவி வைதும்பராயர் குலப் புதல்வி ராணி கல்யாணி சுந்தரச் சோழரின் தாய் இன்னொரு மனைவி சேரமான் மகள் பராந்தகன் தேவி

6.2ம் பராந்தகன் (சுந்தரச் சோழன்)த/பெ. அரிஞ்சயன் 957-970
பத்தாண்டுகள் அரசாண்ட அவனுக்கு பாரிச நோய் தாக்கியது மூத்தமகன் ஆதித்த கரிகாலன் வடக்கே காஞ்சியில் அரச பிரதிநிதியாக மாதண்ட நாயகன்(பிரதம சேனாதிபதி) கடைசிபுதல்வன் அருள்மொழிவர்மன் (பிற்காலத்தில் ராஜராஜன்) இலங்கைத்தீவில் போர்புரிந்து கொண்டிருந்தான் இருவருக்கும் நடுவில் குந்தவை தேவி பிறந்தவர்

7.உத்தமசோழன் (மதுராந்தகன்)த/பெ. கண்டராதித்த சோழன் 973-985
கண்டராதித்த சோழனின் மனைவியும் உத்தமசோழனின் தாயும் ஆன செம்பியன் மாதேவி இவரிடம் தான் ராஜராஜன் வளர்ந்தார்

8.1ம் ராஜராஜன் த/பெ. 2ம் பராந்தகன் 985-1014(தஞ்சைக் கோயிலை கட்டியவன்)
தமக்கை குந்தவை நாச்சி ராசராசனின் பட்டத்தரசி உலகமாதேவியும் இல்லத்தரசி வானதி தேவியும் . இளங்குழவிகளாகிய ராசேந்திரன், குந்தவை

9.1ம் ராஜேந்திரன் த/பெ. 1ம் ராஜராஜ ன் 1012-1044

10.1ம் ராஜாதிராஜன் த/பெ. 1ம் ராஜேந்திரன் மூத்தமகன் 1018-1054
11.ராஜேந்திர சோழதேவன் த/பெ. 1ம் ராஜேந்திரனின் 2வது மகன் 1051-1063
12.வீரராஜேந்திர சோழன் (மேல்கொண்டான்) த/பெ. ராஜேந்திர சோழதேவன் 1063-1070

13.ஆதிராஜேந்திர சோழன் த/பெ. வீரராஜேந்திர சோழன் 1067-1070
14.1ம் குலோத்துங்க சோழன் Җ ராஜேந்திர சோழன் மகளின் மகன் 1070-1120 (மேல் கொண்டான்)
சந்திர குலத்துதித்த சாளுக்கிய அரசனாகிய இராசாராசனுக்கு மனைவியும் சூரிய குலத்து அரசனாகிய முதல் இராசேந்திர சோழன் என்னும் கங்கைகொண்ட சோழனுடைய மகளும் ஆன திருமகள் போன்ற அம்மங்கா தேவியின் மகனாவான் இவன் இவனை இவனது பாட்டி பார்த்தாள் அரசர்களுக்கு எல்லாம் அரசனாகு விளங்கும் தகுதியை அறிந்தாள் ;'என் மகள் பயிற்றுப் பிள்ளையாகிய இவன். எமக்குச் சுவீகார புத்திரனாகிச் சூரிய குலத்தை வளர்த்து விளக்க வல்லவன் ஆவான்' என்று கூறி அவனைச் சுவீகாரம் கொண்டாள்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி. , கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி.
(இவனது காலத்தில் தான் துவாகுடி பெரியகுளத்தில் உள்ள நாட்டுக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது சிவன்கோவிலும் இவனது காலத்தில் தான் கட்டப்பட்டது இவன் மேல்கொண்டான் இவனது படைதளபதி கருணாகரத்தொண்டைமான்)
15.விக்ரமசோழன் த/பெ. 1ம் குலோத்துங்க சோழன் 1118-1135

16.2ம் குலோத்துங்க சோழன் த/பெ. விக்ரமசோழன்1133-1150

சேக்கிழார்: இவர் சங்கநூற் பயிற்சியுடையவர். 63 நாயன்மார்களது வாழ்க்கை வரலாற்றைக் கூறும் 'பெரியபுராணம்' (திருத்தொண்டர் புராணம்)என்னும் நூலை இயற்றியவர். இவ்வாறு தலைப்பட்டிருந்ததனால் இப்புராணம் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட ஒரு காப்பியம் எனச் சிலர் கூறுவர். இவர் இரண்டாம் குலோத்துங்கனுக்கு அமைச்சராய் விளங்கியவர். அப்போது இவருடைய இயற்பெயர் 'அருண் மொழித்தேவர்'

17.2ம் ராஜராஜ சோழன் த/பெ. 2ம் குலோத்துங்க சோழன் 1146-1163
18.2ம் ராஜேந்திர சோழன் Җ 2ம் ராஜராஜனின் மைத்துனன் 1163-1178
19.3ம் குலோத்துங்கள் த/பெ. 2ம் ராஜராஜ சோழன் 1178-1218 (மேல்கொண்டான்)
20.3ம் ராஜராஜசோழன் த/பெ. 3ம் குலோத்துங்கள் 1216-1256
21.4ம் ராஜேந்திரசோழன்
த/பெ.3 ம் ராஜராஜசோழன்

1246-1279 மூன்று மன்னர்கள் கள்ளர் அதுவும் மேல்கொண்டார் என காட்டப்பட்டது மற்றவர்கள் அவர்களது முன்னோர் வாரிசுகளாவர் இதில் முதலாம் குலோத்துங்கள் மட்டும் ராஜேந்திர சோழனின் மகள் வயிற்றுப் பிள்ளை

. அவனை அவனது பாட்டி தத்து எடுத்துக் கொண்டதால் அவனும் மேற்கொண்டான் மழவரையர்

கள்ளர்களின் பட்டபெயர்களில் ஒன்று.

இப்பொழுது பெரிய மனிதர்களாகவோ, பெரிய மனிதர்களின் வழியினராகவோ கள்ளர்கள் பெருந்தொகையினராய் இருந்து வரும் காவிரி நாடே சோழர்கள் வழி வழியிருந்து ஆட்சி புரிந்த நாடு என்பதை முதலில் நினைவிற் கொள்ளவேண்டும்.

சோழர்கள் சோணாடேயன்றி வேறு நாடுகளையும் ஓரொருகாலத்தில் வென்று ஆண்டிருக்கின்றனர். சோழரிற் சிலர்க்கு 'கோனேரிமேல் கொண்டான்' என்னும் பட்டம் வழங்கியிருக்கிறது, இப்பெயர் தரித்திருந்தோரும் , கொங்கு நாட்டையும் ஆட்சி புரிந்தோருமான மூன்றாம் குரோத்துங்க சோழனும், வீர சோழனும் முறையே வெங்கால நாட்டுக் கம்மாளர்க்கச் செய்திருக்கும் தீர்ப்பு ஒன்றும், கருவூர்க் கோயிற் பணியாளர்க்கு இறையிலி நிலம் விட்டிருப்பதைக் குறிப்பது ஒன்றுமாக இரண்டு கல்வெட்டுக்கள் கருவூர் பசுபதீச்சுரர் கோயிலில் வெட்டப்பட்டுள்ளன. அவை பின் வருவன:

"திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீகோனேரிமேல் கொண்டான் வெங்கால நாட்டுக் கண்மாளர்க்கு 15-வது ஆடி மாதம் முதல் தங்களுக்கு நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி, பேரிகை உள்ளிட்டவும் கொட்டுவித்துக் கொள்ளவும், தாங்கள் புறப்படவேண்டும் இடங்களுக்குப் பாதரஷை சேர்த்துக் கொள்ளவும், தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக்கொள்ளவும் சொன்னோம். இப்படிக்கு இவிவோலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்லத் தக்கதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலும், செம்பிலும் வெட்டிக் கொள்க. இவை விழுப்பாதராயன் எழுத்து."

ஆனால் மறைமலையடிகளோ மூன்றாம் குலோத்துங்கனை வேளாளர் என்றே சொல்கிறார்

அது தவறு அவர் கள்ளரே
இந்த வேளாளர் எப்படி வந்தார்கள் :-

"பாண்டி நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் இடையிலுள்ள பகுதி பன்றி நாடு எனப்பட்டது. இந்நாட்டில் முதலில் இருந்தவர் வேடுவர். பின் குறும்பர் வந்தனர். அவர்க்குப்பின் வெள்ளாளர் வந்தனர். பன்றி நாட்டின் ஒரு பகுதி பாண்டியர் ஆட்சியின் கீழும், மற்றெரு பகுதி சோழர் ஆட்சியின் கீழும் இருந்தன. காராள வெள்ளாளர் கி.பி. முதல் நூற்றாண்டின் முன்பே சோழ தேயத்திற்கு குடியேறி விட்டனர். அவர்கள் தங்கள் உழவு தொழிலால் ஏற்பாரது வறுமையைப் போக்கி, அரசற்குப் பொருள் பெருக்கினார்கள். மூவேந்தருக்குட்பட்டுச் செல்வர்களாய் இருந்திருக்கின்றனர். சேர சோழ பாண்டியர்கள் வெள்ளாள குலத்தவரென்று கானகசபைப்பிள்ளை யவர்கள் கூறுவது தவறு. ஆதொண்டைச் சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து வெள்ளாளர்களைச் சோணாட்டல் குடியேற்றினர் என்றும், பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கீழ்க் காஞ்சியிலிருந்து நாற்பத்தொண்ணாயிரம் வேளாண்குடிகளைப் பாண்டி நாட்டிற் குடியேற்றினர் என்றும் தெக்கத்தூர், சுப்பிரமணியவேளார் என்பாரிடம் உள்ள ஒரு ஒலைச்சுவடியில் குறித்திருக்தகிறது. குறும்பரைத் துரத்தியடித்து வெள்ளாளர் தங்களை நிலத்தலைவராகச் செய்துகொண்டிருக்க வெண்டும். வெள்ளாளரைப் பற்றிய சாசனங்களெல்லாம் அவர்களை 'நிலத்தரசு' என்றே குறிப்பிடுகின்றன. சோழ பாண்டியரைப்போல் முடியரசாக இல்லாமை பற்றியே நிலத்தரசு என்று குறிப்பிட்டடிருக்கவேண்டும். நெடுங்காலம் வெள்ளாளர் நலத்திலும் பலத்திலும் மிக்கு வாழ்ந்தனர். அதன் பின், கோனாடானது சம்மதிராயர் கடம்பராயர், மாளுவராயர், கொங்குராயர், கலிங்கராயர், அச்சுதராயர், குமதராயர் என்ற தலைவர்களிடம் கீழ்ப்பட்டிருந்தது.


நான் தெளிவாக எழுத வில்லை யென்றாலும் தங்களது சந்தேகங்களை எனத தளத்தில் பண்டித நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் கள்ளர் சரித்திரத்தில் பாருங்கள்.
http://ennar.blogspot.com/2006/03/1.html
--
தங்களது
என்னார்
www.ennar.blogspot.com
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20608257&format=html

டாலரின் சுழற்சிக் கதை.

0 c
டாலரின் சுழற்சிக் கதை.
கேள்விகள்

"1.அமெரிக்க அரசு இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து வெளிவிடுகிறதே,இதற்கு எதுவும் வரைமுறை (அ)கட்டுப்பாடு இல்லையா?

2.இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து புழக்கத்தில் விட்டும் டாலர் மதிப்பு 48.25 யாக இருப்பது எப்படி? 2007ல் இதன் மதிப்பு 38 ரூபாய் தானே இருந்தது.

3.இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து புழக்கத்தில் விடுவதால் டாலர் மதிப்பு குறையும் என்று கூறிகிறார்கள் ஆனால் அவ்ர்கள் டாலரை மற்ற நாட்டு பங்குசந்தைலும், மற்ற நாட்டு பொருட்களை வாங்கி குவித்தால் டாலர் மதிப்பு எப்படி குறையும்? இது மற்ற நாட்டு பொருளாதாரத்தை பாதிக்காதா ? "

இந்த கேள்விகளுக்கு சற்று விளக்கமாக பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

உதாரணத்திற்கு சீனாவை எடுத்துக் கொள்வோம். சீனா ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்கிறது. அந்த பொருட்களில், உள்ளூர் உபயோகம் போக மீதியை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. அந்த பொருட்களுக்கு ஈடாக அமெரிக்கா ஏராளமான டாலர் பணத்தை தருகிறது.

இங்கு ஒரு விஷயத்தை கருத்தில் கொள்ளவும். ஒரு நாட்டின் கரன்சி வேறு ஒரு நாட்டில் ஒருபோதும் செல்லுபடி ஆகாது. (கரன்சி மாற்றுபவர்களும் இறுதியாக அந்த கரன்சியை அச்சடித்த நாட்டுக்குத்தான் அனுப்பி வைப்பார்கள்) எனவே அமெரிக்காவிடம் இருந்து பெற்ற கரன்சியினால் சீனாவிற்கு உள்நாட்டில் உபயோகம் ஏதும் இல்லை.

எனவே ஏற்றுமதி மூலம் தான் பெற்ற டாலர் பணத்தை சீனா மீண்டும் அமெரிக்க நாட்டிலேயே முதலீடு செய்கிறது. (வேறென்ன செய்ய முடியும்?) சீனா முதலீடு செய்ய ஏதுவாக அமெரிக்கா பல கடன் பத்திரங்களை அச்சடிக்கிறது. (அவ்வாறு கடன் மூலம் பெற்ற பணத்தைத்தான் அமெரிக்கா தன் இறக்குமதிக்கு ஈடாக கொடுக்கிறது) தான் பெற்ற கடனுக்கு வட்டியாகவும் (மிகவும் குறைவு) டாலர் பணத்தை சீனாவிற்கு அமெரிக்கா அளிக்கிறது. அந்த பணத்தையும் சீனா அமெரிக்காவிலேயே மீண்டும் முதலீடு செய்கிறது. இப்படி அமெரிக்காவில் இருந்து உருவாக்கப் படும் டாலர் பணம் அமெரிக்காவில்தான் இறுதியில் தஞ்சமடைகிறது.

ஒருவேளை, சீனா தான் பெற்ற டாலர் பணத்தை, தனது சொந்த இறக்குமதி தேவைக்காக இந்தியா போன்ற இன்னொரு நாட்டிடம் வழங்கலாம். ஆனால் அந்த பணமும் அங்கு சுற்றி இங்கு சுற்றி இறுதியில் சென்றடைவது அமெரிக்காவில்தான்.




இந்த டாலர் சுழற்சி முறையில், சில சமயங்களில் அமெரிக்க அரசாங்கம் ஏராளமான கடனை வாங்கி வட்டி கட்ட முடியாமல் நிதிப் பற்றாக்குறையில் தடுமாறும் போது, அந்நாட்டின் மத்திய வங்கி புதிய நோட்டுக்களை உருவாக்குகிறது. அந்த பணம் மீண்டும் உலகம் சுற்ற ஆரம்பிக்கிறது.

இப்படி ஏராளமான டாலர் பணம் புழக்கத்தில் வரும் போது டாலர் மதிப்பு சர்வதேச சந்தையில் குறைந்து விடுகிறது. மற்ற நாணயங்களின் மதிப்பு உயர்கிறது.

அதே சமயத்தில், மற்ற நாடுகளும் இதே போன்ற ஒரு பாணியை (Monetization of Fiscal Deficit), சிறிய அளவில், பின் பற்றுவதால், டாலர் மதிப்பு மிகவும் பெரிய அளவில் குறைந்து போவதில்லை. குறிப்பாக இந்தியாவில் கூட (அரசு கடனை சந்தையில் இருந்து வாங்குவதன் மூலம்)ஏராளமான புதிய பணம் மத்திய வங்கியினால் உருவாக்கப் படுகிறது.

இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் அந்நிய செலவாணி (குறிப்பாக டாலர்) கையிருப்பு பெரிய அளவில் உள்ளன. இந்த பணம் பெரும்பாலும் மிகக் குறைந்த வட்டிக்கு அமெரிக்காவிலேயே முதலீடு செய்யப் படுகின்றன. இந்த முதலீட்டினால் ஏராளமான நஷ்டத்தையும் (வட்டி குறைவு மற்றும் நாளுக்கு நாள் டாலர் மதிப்பு குறையும் அபாயம்) சந்திக்கின்றன.

தனது அந்நிய செலவாணி கையிருப்பை டாலரிலிருந்து யூரோ நாணயத்திற்கு மாற்றியதாலேயே சதாம் ஹுசைன் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளானார் என்று சொல்லப் படுகிறது. இப்போது சீனா தனது கையிருப்பை யூரோ நாணயத்திற்கு மாற்றி வருகிறது. டாலருக்கு மாற்றாக ஒரு புதிய உலக கரன்சியை உருவாக்க வேண்டும் என்றும் கூட சீனா சொல்லி வருகிறது. சீனாவும் ஒரு வல்லரசு என்பதால் அமெரிக்கா ராஜரீக நிர்பந்தங்களை மட்டும் ஏற்படுத்தி வருகிறது.
இந்தியா போன்ற நாடுகளின் கரன்சிகள், பொதுவாக, மற்ற நாடுகளால் அங்கீகரிக்கப் படுவதில்லை. எனவே தமது இறக்குமதி தேவைக்கும் வெளிநாட்டுக் கடன்/வட்டி திருப்பி செல்வதற்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு டாலர் உதவி தேவைப் படுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை டாலர் என்பது வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு உதவும் ஒரு முக்கிய சாதனம் (vehicle) ஆகும். இந்த சாதனத்தின் சந்தை விலை, தேவை மற்றும் வழங்குதல் (Demand and Supply) ஆகிய சந்தை விதிகளின் அடிப்படையில் மாறுபடுகிறது. (ஆனால் முழுக்க முழுக்க என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ரூபாய் நாணய மாற்று வீதம் (Capital Account Convertiblity) முழுமையானதல்ல) கடந்த இரண்டு வருடங்களில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் (FIIs) தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற்றதாலேயும், இந்தியாவின் ஏற்றுமதியை விட இறக்குமதி மிகவும் அதிகமாக இருப்பதாலேயும் சந்தையில் டாலர் தேவை அதிகமாக ரூபாய் மதிப்பு குறைந்து போனது.

என்னுடைய கற்பனையில் மேற்சொன்ன டாலர் சுழற்சி முறை எப்படி இருக்கிறது தெரியுமா?

ஒரு நாட்டில் ஒரு "கொழுத்த" பணக்காரன் இருந்தான். அவனுக்கு சாப்பிடுவதை தவிர வேறு வேலையில்லை. அவனிடம் இருந்த காகிதத்தில் இவ்வளவு காசு என்று எழுதி அவனுக்கு சேவை செய்தவர்களுக்கெல்லாம் கொடுத்து வந்தான். அந்த காசு ஊர் முழுக்க செல்லுபடியானது.

அந்த ஊரின் பொருளாதாரமே அவனை நம்பித்தான் இருந்தது.

உழவன் அவனுக்கு சாப்பிட உணவளித்தான். நெசவாளி உடையளித்தான். ஒருவன் அவன் வீட்டில் வேலை செய்தான். ஒருவன் அவனுக்கு வைத்தியம் பார்த்தான். ஒருவன் அவனிடம் கடன் வாங்கினான். இன்னுமொருவன் அவனுக்கு கடன் கொடுத்தான்.

மேற்சொன்ன கணக்கு வழக்குகளை இன்னுமொருவன் சரி பார்த்தான்.

இன்னுமொருவன் அந்த காகிதத்தை (காசு என்று எழுதப் பட்ட அந்த காகிதத்தை சம்பளமாக வாங்கிக் கொண்டு) தயாரித்துக் கொடுத்தான்.

மேற்சொன்ன அனைவருமே தமது எதிர்காலம் அந்த "கொழுத்தவனை" நம்பித்தான் இருக்கிறது என்று நம்பியிருந்தனர். அவனுக்கு மட்டும்தான் தெரியும் அவனுடைய எதிர்காலம் மற்றவர்களின் ஒற்றுமையின்மையிலும் முட்டாள்தனத்திலும்தான் உள்ளது என்று.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பேராதிக்கம் உலக நாடுகளை ஒவ்வொரு வகையில் சுரண்டித்தான் வந்திருக்கிறது. தற்போதைய காலகட்டம் அமெரிக்காவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் பேராதிக்கத்திற்கு டாலர் ஒரு மிகப் பெரிய ஆயுதமாகவே அமைந்திருக்கிறது.

thanks to http://sandhainilavaram.blogspot.com/2009/07/blog-post_29.html

பண்டுக் கலவரம்

0 c
உசிலம்பட்டி கவணம்பட்டி பண்டுக் கலவரம்

இந்தப்பகுதியில் வாழும் பிரமலைக் கள்ளர்களின் சமூக வரலாற்றைப் பார்க்கும் பொழுது எட்டுநாடு, இருபத்தியெட்டு உபகிராமம் என்ற கள்ள நாட்டுப் பகுதியில் கள்ளர்களுக்கும் தலித்துக்களுக்கும் இடையில் ஒரு மேம்பட்ட சமூக உறவு இருந்துள்ளதற்கான அடையாளங்களை நம்மால் பார்க்க முடிகிறது.

கள்ள நாட்டுப்பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் கள்ளர்கள் மற்றும் தலித்துக்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் உமைகள் அவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எட்டு நாட்டில் ஒரு நாடான கொக்குளத்தில் ஆதி தொட்டு இன்று வரை ஒரு தலித்தான் பூசாரியாக இருக்கின்றார். அவரிடம் தான் கொக்குளம் ஆறு ஊரைச் சேர்ந்தவர்களும், வாக்கு கேட்டு, திருநீறு வாங்கி பூசிக் கொண்டிருக்கின்றனர்.

கருமாத்தூர் கடசா நல்லகுரும்பன் கோயில் அய்யம் பிடுக்கி ஒரு தலித். மீனாட்சிபட்டி மதீச்சிய கருப்பு கோயில் பூசாரி தலித். வகூரணி பள்ளக்கருப்புப் கோயில் கொப்புற பூசாயும், கிடாவெட்டியும் கள்ளர்கள், கோடாங்கியும் உள் பூசாரியும் தலித்கள், இது தலித்தும் கள்ளரும் இணைந்து கும்பிடும் கோயில். கள்ளபட்டி வெண்டி கருப்புக்கோயில் பூசாரி தலித், கோடங்கி கள்ளர். புத்தூர் பூங்கொடி ஐய்யனார் கோயில் ஐய்யனார் தலித் மற்றும் கள்ளர்களின் குலதெய்வமாகும்.

எனவே இருவரும் பங்காளிகள் என்று இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே போல் உசிலம்பட்டி கள்ளர்கள் மத்தியில் பஞ்சாயத்து செய்யவும், சத்தியம் செய்யவும் முக்கியக் கோயிலாக இருப்பது வடுகபட்டி போயன் கருப்பு கோயில். இது தலித்துகளின் கோயில். தலித் தான் பூசாரி. உடமையற்றவர்களாகிய இரண்டு சமூகத்திற்கும் இடையில் கடந்த காலத்தில் நிலவிய பண்பாட்டு ஒற்றுமையின் அடையாளங்களே இவைகள்.

கள்ளர்கள் விவசாயப் பிரிவினர் அல்லர், காவல் மற்றும் களவு தொழினை செய்து வந்தவர்கள். சமவெளிப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் என்றே இவர்கள் வரையறுக்கப்படுகிறார்கள். கடந்த இரு நூற்றாண்டாக பரவி வந்த இந்துமயமாக்கலுக்கு உட்படாத இனக்குழுவாக இவர்கள் இருந்து வந்துள்ளதை மதுரையின் வரலாற்றை எழுதிய என்.கெச்.நெல்சன் போன்றவர்களும் மற்ற பல ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.

இதுமட்டுமல்ல இஸ்லாமியர்களின் பழக்கவழக்கங்களின் தாக்கம் அதிகமுள்ள ஒரு இனக்குழுவாகவும் இதுவுள்ளது. இஸ்லாமியர்களுக்கே உரிய ஒரு பழக்கமான சுன்னத் செய்யும் பழக்கம். இப்பொழுது வரை கள்ளர் இனத்தில் நடைமுறையில் உள்ளது. திருமணத்தின் பொழுது மாப்பிள்ளையை குதிரையின் மீது அமர வைத்து முகத்தை மூடி அழைத்துவரும் பழக்கம் சமீபகாலம் வரை இருந்து வந்துள்ளதை அறிய முடிகிறது. இஸ்லாமியப் பெண்களைப் போலவே காதில் கொப்பு, குருத்தட்டு, முருக்குச்சி, கழுத்தில் தாக்குப் பதில் கருப்புபாசி (பொட்டுமணி) ஆகியவற்றை கள்ளர் இனப் பெண்கள் அணிகின்றனர்.

இதுமட்டுமின்றி பெண்ணுரிமைப் பார்வையில் முற்போக்கான பண்புகளை இந்த இனக்குழு இன்று வரை கொண்டுள்ளது. விவகாரத்து பெறும் உரிமை பெண்களுக்கு உண்டு, எந்தப் பெண்ணும் விவகாரத்துப் பெற்றுக் கொள்ளலாம், அதற்கான வழிமுறைகள் மிக எளியது. அதுமட்டுமின்றி விவகாரத்திற்கான நஷ்ட ஈடும் உண்டு என்று, கள்ள நாட்டு சட்டங்களில் இருந்தும், பழக்க வழக்கங்களில் இருந்தும் அறிய முடிகிறது.

இதுமட்டுமின்றி, விவகாரத்து செய்து கொண்டவர்கள் மற்றும் விதவைகள் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை கொண்டவர்கள். இவ்வாறாக இந்து மதத்தின் சாயல்கள் பெரிய அளவு விழுந்து விடாத ஒரு இனக்குழுவாக போன நூற்றாண்டு வரை பிரமலைக் கள்ளர் இனக்குழு இருந்து வந்துள்ளது.

இந்தக் காரணங்களால் தான் இந்தப்பகுதியில் சுமார் 130 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்ற கத்தோக கிருத்துவமதமானது தனது தேவாலயத்தில் ஒரு கிறித்துவ ஆணோ, பெண்ணோ, பிரமலைக் கள்ளர் இனத்தைச் சார்ந்த ஒரு ஆணையோ, பெண்ணையோ, திருமணம் முடித்துக் கொள்ள எந்த தடையும் விதிக்காமல் அனுமதி அளித்தது. அது இன்றுவரை நடைமுறையில் உள்ளது.

பிரிட்டிஸ் அரசு 19ஆம் நூற்றாண்டில் தனது நவீன காவல் கொள்கையை அறிமுகப்படுத்திய பொழுது ஏற்கனவே காவல் பணியில் இருந்த கள்ளர்களுக்கு எதிரான செயல்பாடாக அது அமைந்தது. கிராம காவல், குடிக்காவலை சட்ட விரோதமென அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, மாற்று ஏற்பாடு ஏதுவுமில்லாமல் கள்ளர்கள் நிர்கதியாக்கப்பட்டனர்.

இந்நிலையில் மறைமுகமாக காவல் மற்றும் துப்புக்கூ முறை உருவானது. இதனை தடுக்க நெடுங்காலம் வரை பிட்டிஸாரால் முடியவில்லை. எனவே கள்ளர்களுக்கு எதிராக பிற விவசாய சாதியினை மோத விடுவதில் அரசு முக்கிய பங்காற்றியது. இதன் விளைவு தான் 1895ல் திண்டுக்கல் பகுதியில் நடந்த பண்டுக் கலவரம். பிரிட்டிஸாரின் ஆட்சி காலத்தில் மிக நீண்ட காலம் நடைபெற்ற கலவரம் இது. அதற்கு காரணம் அரசின் மறைமுக ஆதரவு இந்த கலவரத்தை நடத்தியவர்களுக்கு இருந்தது. இதன் மூலம் திண்டுக்கல் சமவெளிப் பகுதி முழுவதிலும் கள்ளர்கள் தங்களின் காவலை இழக்க நேட்டது. இந்த கொள்கையின் தொடர்ச்சிதான் 1914ல் கொண்டு வரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டம்.

ஒரு குறிப்பிட்ட இனத்தில் பிறந்தாலே அவன் குற்றவாளியாகத்தான் இருப்பான் என்ற கொடூரமான சட்டம். 12 வயது முதல் அவன் அரசின் குற்றவாளி பட்டியல் ஏற்றப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டவனாக இருப்பான். கட்டாயக் காவல் முகாம்களில் குடியேற்றப்படுவான். தேயிலை எஸ்டேட்டுகளுக்கு அனுப்பப்படுவான். கட்டாய இராணுவப் பணிகளுக்கு அனுப்பப்படுவான். எந்த நிமிடமும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவான்.

இந்தியாவெங்கும் இந்த கொடூரமா ன அடக்குமுறைச்சட்டத்தில் சுமார் தொண்ணூறாயிரம் பேர் பதியப்பட்டார்கள் என்றால் அதில் பிரமலைக்கள்ளர்கள் மட்டும் முப்பத்தி ஐயாயிரம் பேர் ஆவர்.

அப்படி என்றால் இந்த அடக்குமுறையின் கொடுமை இந்தப்பகுதியில் எவ்வளவு இருந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்தக் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக ஜார்ஜ் ஜோசப், சுப்புராயன், ஜானகி அம்மாள், பி.இராமமூர்த்தி, ஜீவானந்தம் போன்றவர்கள் பாடுபட்டார்கள். ஆனால் இதில் முத்துராமலிங்கத் தேவர் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் தொடர்ச்சியாக இதில் கவனம் செலுத்தி பிட்டிஸாருக்கு எதிரான இயக்கங்களை நடத்தினார்.

நாட்டு விடுதலைக்குப்பின் , குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டபின் அவர் அரசியல் கட்சியான பார்வர்டு பிளாக்கை இந்த இனமக்கள் முழுமையாக தழுவினார். குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக திராவிட இயக்கம் எதையும் செய்யவில்லை. இந்த சட்டத்திற்கு எதிரான சில நடவடிக்கைகளை இடதுசாரி இயக்கம் செய்த போதிலும் அதில் தொடர் கவனம் செலுத்தவில்லை.

துவக்கத்தில் காங்கிரஸ் கட்சி சட்டத்தை எதிர்த்துப் போராடினாலும் 1939ல் ராஜாஜி மந்திரி சபை அமைந்தபின் இச்சட்டத்தை நீக்க முடியாது என்று காங்கிரஸ் வெளிப்படையாக சொன்னபின் இந்த பகுதிக்குள் அந்த இயக்கத்தால் நுழையவே முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் தேசிய இயக்கத்தின் தாக்கமோ, இடதுசாரி இயக்கத்தின் தாக்கமோ, திராவிட இயக்கத்தின் தாக்கமோ இல்லாத பகுதியாக இதுமாறியது. இந்தக் குறிப்பிட்ட இனமக்கள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்குள் இருக்கும் நிலை உருவானது. ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் இருக்குமோ, அந்த வடிவத்தில் தான் அதற்கு எதிரான நடவடிக்கைகளும் அமையும். எனவே தான் ஒரு குறிப்பிட்ட சாதியின் மீது பயன்படுத்தப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக அந்த குறிப்பிட்ட சாதியின் அடிப்படையிலான ஒற்றுமை உருவானது.

இந்த ஒற்றமையானது, சட்டம் வாபஸ் பெற்றபின், அச்சட்டத்திற்கு எதிராகப் போராடிய அரசியல் கட்சியின் அடித்தளமாக மாறியது. அந்த அரசியல் கட்சியானது 1950களுக்குப் பின் மேற்கொண்ட சாதிய பகைமையின் அடிப்படையிலான செயல்பாடு. இந்தப்பகுதியில் சாதீய மனோபாவத்தை, பெருமிதத்தை, வெறியை விஷம் போல ஏற்ற வாய்ப்பாக அமைந்தது.

அப்படி ஏற்றப்பட்டதன் முற்றிய வடிவங்கள் தான் இன்று நாம் காணுகிற பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம். இதற்கான பொருளியல் காரணிகள் மிக முக்கியமானவை. குறிப்பாக 1950களில் கட்டப்பட்ட வைகை அணையால் இந்த பகுதியில் புதிய விவசாய நிலங்கள் உருவாக்கப்பட்டது. இதனால் செல்லப்பட்டி ஒன்றியத்தில் கணிசமான பிரமலைக் கள்ளர்கள் சிறு விவசாயிகளாக மாறினர். நிரந்தர வருமானம், தொழில் என்று எதுவும் இல்லாத ஒரு வாழ்க்கை முறைமாறி உடமையாளர்களாக பரிமாணம் அடைந்தனர். அதுவரை விவசாயத் தொழிலை பார்த்திராத ஒரு சமூகம், அரசால் விவசாயத்திற்குள் புகுத்தி விடும் பொழுது இரண்டு விளைவுகள் ஏற்பட்டன. இதனை மேலூர் கள்ளர்களின் வாழ்விலும் பார்க்க முடிகிறது, உசிலம்பட்டிப் பிரமலைக் கள்ளர்களின் வாழ்விம் பார்க்க முடிகிறது. அதுவரை அரசுக்கு வரிகட்டாத, சட்ட ஒழுங்கைக் கடைபிடிக்காத, நில அளவைக்குக் கூட அனுமதி அளிக்காத பகுதியாக இருந்த மேலூரில் பெரியார் அணை கட்டப்பட்ட தண்ணீர் வந்தவுடன், ஒவ்வொரு ஊராக அரசுக்கு கட்டுப்படுவோம், சட்ட ஒழுங்கை மதிப்போம் வரிகட்டுவோம், என்று எழுதி வாங்கி தண்ணீர் கொடுத்தது பிரிட்டிஸ் அரசு. இதன் விளைவாக பத்தே ஆண்டுகளில் விவசாய சாதியினராக மேலூர் கள்ளர்கள் மாறினர்.

போலீஸ்துறை சாதிக்காததை பொதுப்பணித்துறை சாதித்தது என பிரிட்டிசார் புகழ்ந்தனர். இதனால் தான் குற்றப்பரம்பரை சட்டம் இங்கு அமுல்படுத்தப்படவில்லை. இது இரண்டு விளைவுகளை உருவாக்கியது. ஒன்று நில உடமையாளனாக மாறி அதை காப்பாற்ற அரசின் மேலதிகாரத்தை ஏற்று முறையாக வரி செலுத்தி சட்ட ஒழுங்கிற்கு கட்டுப்பட்டது. இரண்டு, உடமையாளராக மாறியவுடன் தான் சமூகத்தின் மேல் சாதி என்ற மனோநிலையும், பெருமிதமும் தனக்கு கீழ் உள்ளவர்களின் மீதான கட்டுப்பாடற்ற தீண்டாமையை நிலை நிறுத்துவது. இதற்கான உதாரணங்கள் தான். அம்பேத்கார் நடத்திய பத்திரிக்கையில் 1940 களில் மேலூர் பகுதி பற்றி வந்த எண்ணற்ற கடிதங்கள் முதல் மேலவளவு வரை. இதே அனுபவம் தான் 1950களுக்குப்பின் இன்றுவரை உசிலம்பட்டி பகுதியில் ஏற்பட்டுள்ளது. '''

உடமையற்ற வர்க்கமாக இருந்தபொழுது கள்ளர்களுக்கும், தலித்துக்களுக்கும் இடையில் நிலவிய சமூக உறவுகள், கள்ளர் சமூகம் உடமைவர்க்கமாக மாறியபின் தலைகீழானது. கடந்த காலங்களில் நடந்துள்ள இந்த சமூக அரசியல், பொருளியல் காரணங்கள் இந்தப்பகுதியில் சாதீயக் கருத்துக்கள் கெட்டிப்படவும் விஷம் போல் உச்சத்திற்கு ஏறவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் கொடூரத்தை த்தான் இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

thanks to http://www.lankahermes.com/2005_07_01_archive.html